Followers

Wednesday, December 14, 2011

இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா? -பு(து)த்தகம்



இரண்டாம் திருமணம் செய்து நீதிமன்றங்களால் தண்டிக்கப்படாதவர்கள்

இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டாம் திருமணம் செய்த போது முதல் மனைவிகள் பல சந்தர்ப்பங்களில் நீதிமன்றங்களின் கதவைத் தட்டியுள்ளனர். நீதி மன்றங்கள் இரண்டாம் திருமணம் செய்து கொண்டவரைத் தண்டிக்க மறுத்து விட்டதையும் நாம் காண முடிகின்றது.

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த, இந்து மதத்தைச் சேர்ந்த பாவ்ராவ் சங்கர் லோகாண்டே முதல் மனைவி இருக்க இரண்டாம் திருமணம் செய்தார். முதல் மனைவி இதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். கீழ்நிலை நீதிமன்றங்களும், உயர் நீதிமன்றமும் அவரைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தன. ஆனால் பாவ்ராவ் சங்கர் லோகாண்டே உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த போது இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் விடுபட்டதால் இரண்டாவதாக நடந்தது திருமணமே இல்லை. எனவே பாவ்ராவ் சங்கர் இரண்டாம் திருமணம் செய்யவில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. (பாவ்ராவ் சங்கர் லோகாண்டே எதிர் மராட்டிய அரசு ஆஒத 1965 நஈ 1566)

சுரேஷ் சந்திர கோஷ் என்பவர் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாம் திருமணம் செய்தார். அவரது மனைவி பிரியா பாலா கோஷ் அவருக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கிலும் உச்சநீதிமன்றம் இரண்டாம் திருமணம் செய்த சுரேஷ் சந்திர கோஷைத் தண்டிக்கவில்லை. இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் நடந்தது நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி சுரேஷைத் தண்டிக்க மறுத்து விட்டது. (பிரியா பாலா கோஷ் எதிர் சுரேஷ் சந்திர கோஷ் AIR 1971 sc 1153)

ஆந்திராவைச் சேர்ந்த எல்.வெங்கடரெட்டி என்பவர் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்தார். முதல் மனைவி லிங்காரி ஒப்புல்லம்மா கணவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கிலும் உச்சநீதிமன்றம் வெங்கடரெட்டியைத் தண்டிக்கவில்லை. இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் செய்யப்படாததே காரணம். (லிங்காரி ஒப்புல்லம்மா எதிர் எல்.வெங்கடரெட்டி மற்றும் சிலர் AIR 1979 sc 848)

காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பங்காரி என்பவர் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாம் திருமணம் செய்தார். இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் விடுபட்டதால் அது திருமணமே அல்ல. இரண்டாம் மனைவி அவரது வைப்பாட்டி தான். வைப்பாட்டி வைத்துக் கொள்வதைத் தண்டிக்க சட்டத்தில் இடமில்லை என்று காஷ்மீர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. (பங்காரி எதிர் ஜம்மு கஷ்மீர் மாநில அரசு AIR 1965 jk105) இப்படி ஏராளமான வழக்குகளில் நாட்டின் உச்சநீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் தீர்ப்பளித்துள்ளன.




பலதார மணத்தைத் தடுப்பதால் ஏற்படும் தீய விளைவுகள்

ஆண்களில் அதிகமானோர் ஒரு மனைவியுடனேயே காலம் முழுவதும் வாழ்பவர்களாக உள்ளனர் என்றாலும் கனிசமான ஆண்கள் சட்டத்தின் ஓட்டைகளுக்குள் புகுந்து இரண்டாம் திருமணம், மூன்றாம் திருமணம் செய்கின்றனர். மற்றும் சிலர் வைப்பாட்டி வைத்துக் கொண்டு முதல் மனைவிக்குத் துரோகம் செய்பவர்களாக உள்ளனர். வேறு சிலர் அவ்வப்போது விபச்சாரிகளிடமும், அறிமுகமான பெண்களிடமும் தகாத உறவு வைப்பவர்களாக உள்ளனர்.

இவர்களைத் தடுத்து நிறுத்த எந்தச் சட்டமும் இல்லை. இத்தகையோரால் ஏற்படும் மோசமான பாதிப்புகளையும், தீய விளைவுகளையும் அறிந்தால் தவறான வழியில் செல்லும் நிலையில் உள்ளவர்களுக்குப் பலதார மணத்தை அனுமதிப்பதைக் குறை கூற மாட்டார்கள்.
மலேசிய இந்து மக்கள் போர்க்கொடி
இதனால் ஏற்படும் தீய விளைவுகளை மலேசிய இந்து இயக்கங்களின் தீர்மானத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

முஸ்லிம்களைத் தவிர மற்றவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணக்கக் கூடாது என்ற சட்டம் நமது நாட்டைப் போலவே மலேசியாவிலும் உள்ளது.
அங்கே முஸ்லிமல்லாதவர்கள் தமக்கும் பலதார அனுமதி வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

திருமணம் ஆகாமல் பல பெண்கள் கர்ப்பமடைவதாகவும், அவர்கள் கைவிடப்படுவதாகவும், தகப்பனில்லாத குழந்தைகள் தாறுமாறாக அதிகரித்து விட்டதாகவும் கருதும் மலேசிய நாட்டு இந்துக்கள் இதைத் தவிர்க்க ஒரே வழி பலதார மணம் மட்டுமே என்ற உண்மையை உணர ஆரம்பித்துள்ளனர்.

மனைவிக்குச் செய்யும் துரோகம் என்ற அடிப்படையில் பலதார மணத்துக்குத் தடை போடப்பட்டாலும் எதைத் துரோகம் என்று கருதுகிறார்களோ அதைத் தடுக்க முடியவில்லை.

மலேசியாவில் உள்ள பி.பி..பி கட்சி தனது இளைஞர் அணி மாநாட்டை நடத்தியது. அந்த மாநாட்டில் பி.பி.பியின் இளைஞர் அணித் தலைவர் முருகையா பின்வருமாறு பிரகடனம் செய்தார்.

'சமுதாயத்தில் திருமணம் புரிந்த பல ஆடவர்கள் மற்ற பெண்களுடன் வைத்துக் கொள்ளும் உறவின் மூலம் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குரியதாக இருக்கிறது. இந்தப் பெண்களின் பிரச்சினைகள், சிக்கல்களைக் கருதி முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இருதார அனுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும்' என்பது தான் அவரது முழக்கம்.

இவரது கருத்துக்கு மலேசியாவில் உள்ள சில பெண்கள் அமைப்புகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.

ஆனாலும் இந்த எதிர்ப்புகளால் முருகையா தனது கருத்தை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை.

'நான் சொன்ன கருத்தும் ஒரு வகையில் பெண்ணுரிமை சம்மந்தப்பட்டது தான். எனது கருத்தை இந்த மகளிர் பிரிவுகள் தவறாக அர்த்தம் கொண்டு விட்டன. எனது கருத்துக்கு இவர்கள் தெரிவிக்கும் ஆட்சேபமானது இரண்டாவது மனைவிகள் பலரின் உரிமைகளை இவர்களே மறுதலிக்கிறார்கள் என்றே அர்த்தமாகிறது. பி.பி.பி இளைஞர் உச்ச மன்றத்தில் எல்லோரும் கூடிப் பேசியே இந்தக் கருத்தை நான் வலியுறுத்தினேன். இது எனது சொந்தக் கருத்து மட்டுமல்ல. இரண்டு பெண்டாட்டிகளை வைத்துக் கொள்ளுங்கள் என்று யாரையும் நாங்கள் ஊக்குவிக்கவில்லை. இருதார அனுமதியை அரசாங்கம் தந்தால் அது முஸ்லிமல்லாதாரிடையே நிலவும் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டும் என்பதே எனது வாதம். தன்னால் பாதிக்கப்பட்ட இரண்டாவது பெண்ணுக்கும் ஒரு ஆண் பொறுப்புள்ளவனாக இருக்கச் செய்யும்' என்று தனது கருத்தை முருகையா ஆணித்தரமாகக் குறிப்பிடுகிறார்.

பினாங்கு மாநில பி.பி.பி மகளிர் அணித் தலைவர் எலிசபெத் ஸ்டெனிஸ் லாவ்ஸ் என்பவர் முக்கியமானவர்.

மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கு இருதார அனுமதியை வழங்கலாம். என் கணவரே இன்னொரு மனைவியை மணக்க நானே அனுமதிப்பேன். இருவரையும் வைத்துக் காப்பாற்றுவதாக உறுதியளித்தால் நானே என் கணவருக்கு அனுமதியளிப்பேன் இது ஒன்றும் பாவம் அல்ல. என் கருத்தைப் பல பெண்கள் ஆமோதிப்பார்கள்.

ஒரு கணவர் இரண்டாவது பெண்ணுடன் வைக்கும் தொடர்பின் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்தே பி.பி.பி இளைஞரணி தனது கருத்தை வலியுறுத்தியது. அதனை நானும் ஆதரிக்கிறேன்.

இந்தக் குழந்தைகள் தகப்பன் இல்லாக் குழந்தைகள் என்று அநியாயமாக முத்திரை குத்தப்படுகின்றனர்.

இருதார விஷயத்தில் பெண்கள் கனவுலகில் ஒளிந்து கொண்டிருக்கும் போக்கைக் கைவிட்டு வெளியே வர வேண்டும். நடைமுறை உலகுக்கு அவர்கள் திரும்ப வேண்டும்.என்றெல்லாம் இவர் தனது ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர்.

தகப்பனில்லாத இளைஞர்கள் அதிகளவில் உருவாகியுள்ளதால் இளைஞர்களிடையே இந்தக் கருத்து வேகமாகப் பரவி வருகிறது.

மலேசியாவில் முஸ்லிமல்லாத சமுதாயத்தின் நிலையைப் பற்றி தேசியப் பதிவு இலாகா பின்வருமாறு அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாட்டில் திருமணம் ஆகாமல் பெண்கள், குழந்தைகள் பெறும் சம்பவங்கள் கவலைக்குரிய கட்டத்தை அடைந்துள்ளது. இவர்களில் அதிகமானோர் கல்லூரிப் பெண்கள். 17 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இதில் அதிகமாக இருக்கிறார்கள் என்று தேசிய பதிவு இலாகா இயக்குனர் டத்தோ அஜிகான் கூறுகிறார். ஆதாரம்: 5-1-2002 தேதியிட்ட மலேசியா நண்பன் நாளிதழ்.

இரண்டாம் தாரமாகவாவது மணந்து கொண்டு சட்டப்பூர்வ உரிமை தந்தால் மட்டுமே முஸ்லிம் பெண்கள் தங்களை ஆண்களிடம் ஒப்படைக்கிறார்கள்.

முஸ்லிமல்லாத பெண்களோ ஆசை வார்த்தை காட்டப்பட்டு ஏமாற்றப்படுகின்றனர். குழந்தை பெற்ற பின் நிராதரவாக விடப்படுகின்றனர்.

இவர்களின் எண்ணிக்கை எல்லை கடந்து விட்ட நிலையில் தான் மலேசிய இந்து இளைஞர்கள் மத்தியில் முருகையாவின் கருத்துக்கு அமோக வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விபரங்களிலிருந்து பலதாரமணம் என்பது அனைத்து சமுதாயத்திலும் தவிர்க்க முடியாததாகவே உள்ளதை அறிந்து கொள்ளலாம்.

பலதார மணத்தை அனுமதிப்பதற்கான காரணங்கள் பலதார மணத்தை எந்தச் சட்டத்தினாலும் தடுக்க முடியவில்லை. அப்படியே தடுத்தாலும் சின்ன வீட்டையும், விபச்சாரத்தையும் தடுக்க முடியவில்லை என்பதால் மட்டும் இஸ்லாம் பலதார மணத்தை அனுமதிக்கவில்லை. மாறாக பலதார மணத்தை இஸ்லாம் அனுமதித்திருப்பதற்கு இன்னும் பல காரணங்களும், நியாயங்களும் உள்ளன.


-பி.ஜெய்னுல்லாபுதீன்.

13 comments:

suvanappiriyan said...

தங்கமணி!

//கலை,
அருமையான பதில்.
மலக்குகள் ஒருவருக்கொருவர் சண்டை போடாமல் வேலை செய்யும் போது கடவுள்கள் ஏன் ஒருவருக்கொருவர் சண்டை போடாமல் வேலை செய்யமுடியாது?//

மலக்குகள்(வானவர்கள்) இறைவனை முந்திப் பேச மாட்டார்கள். இறைவனின் கட்டளைப்படியே செயல்படுவார்கள்.
-குர்ஆன் 21;27

தமக்கு மேலே இருக்கும் தமது இறைவனை வானவர்கள் அஞ்சுகின்றனர். கட்டளையிட்டதை செய்கின்றனர்.
-குர்ஆன் 16:50

இங்கு இறைவன் வானவர்கள் தனது கட்டளையை செயல்படுத்தபவர்கள் என்று கூறுகிறான். மனிதர்களைப் போல் சிந்தித்து செயல்படும் அறிவு வானவர்களுக்கு கிடையாது. இறைவன் எந்த கட்டளையை இடுகிறானோ அதை மறு பேச்சு பேசாது செயல்படுத்துபவர்களே வானவர்கள்.

எனவே வானவர்களுக்குள் அதாவது தேவர்களுக்குள் சண்டை சச்சரவு வர வாய்ப்பே இல்லை. அனைத்து வானவர்களும் ஏக இறைவனின கட்டளைக்கு பணிபவர்கள. ஆனால் இறைவன் பலவாறாக இருந்தால் யார் யாருடைய பேச்சைக் கேட்பது? ஒரு மாநிலத்துக்கு இரண்ட அதிகார மையங்கள் இருந்தால் நிர்வாகம் சரியாக செயல்படுமா?

கலை!

//அவரவர் வேலையை அந்தந்த கடவுள் பார்த்துக் கொண்டால் ஏன் சண்டை வருகிறது?//

அழிக்கும் தொழிலை செய்யும் கடவுள் ஒரு மனிதனை இன்று இறப்புக்கு உள்ளாக்க வேண்டும் என்று நினைக்கிறான். காக்கும் தொழிலை செய்யும் கடவுள் அவனுக்கு இன்னும் 10 ஆண்டுகள் பூமியில் வாழட்டும் என்று பிரியப்பட்டால் யாருடைய கட்டளை இங்கு பினபற்றப்படும்? குழப்பம் வராதா? அடுத்து பல கடவுளுக்கு இந்து மத வேதங்களிலிருந்து ஆதாரத்தை கேட்டேன் இதுவரை தரவில்லையே!

suvanappiriyan said...

பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே கள்ளத்தொடர்பை தட்டிக் கேட்டதால், ஆத்திரமடைந்து கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி, கள்ளக் காதலன் ஆகிய இருவரையும், போலீஸார் கைது செய்தனர்.

பெத்தநாயக்கன்பாளையம் அருகே புத்திரகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பாண்டியன் (32). அவருக்கு, மனைவி வெண்ணிலா (27), மகள்கள் பிரியா (11), கலைவாணி (9), தர்ஷினி (3) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் காலை 10 மணியளவில், புத்திரகவுண்டன்பாளையம் வாரச்சந்தை அருகில் உள்ள நீரோடையில், ரத்தக் காயங்களுடன், பாண்டியன் இறந்து கிடந்தார். தகவலறிந்த ஏத்தாப்பூர் இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணன் தலைமையிலான போலீஸார், பாண்டியனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பாண்டியனின் மனைவி வெண்ணிலாவுக்கும், உறவினர் பாலா (எ) பாலமுருகனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இருவரும் தனிமையில் இருப்பதை நேரில் பார்த்த பாண்டியன், மனைவியை தட்டிக் கேட்டுள்ளார். அதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அதையடுத்து, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்ய மனைவி திட்டமிட்டுள்ளார். பின், கள்ளக்காதலன் பாலமுருகனுடன் சென்று, பாண்டியன் மீது கல்லை போட்டு கொடூரமான முறையில் கொலை செய்து, ஓடையில் வீசியது தெரியவந்தது.

ஏத்தாப்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, வெண்ணிலா, கள்ளக் காதலன் பாலமுருகன் (30) இருவரையும் கைது செய்தனர். பின், ஆத்தூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.


பத்திரிக்கை செய்தி
13-12-2011

விவாகரத்து சடடம் கடினமாகும் போது சமூகத்தில் இது போன்ற மோசமான நிகழ்வுகளை நாம் சந்திக்க நேரிடுகிறது.

suvanappiriyan said...

திரு தருமி!

//blogger ல ஒரு இடம் கிடைத்துட்டா நீங்க என்ன பெரிய ஆலா? கேல்வி கேட்க மட்டும்தான் தெரியும்னா உனக்கெல்லாம் எதுக்குடா blogger?நீ இஸ்லாத்தப் பற்றி கெட்ட கேல்வியை எல்லாம் என்கிட்ட கேலுடா..ஆனா ஒன்று மற்றவன் சொன்னத டப்பிங் பன்னாம நீயாகவே யோசித்து, இஸ்லாத்தில் உள்ள தவருகளை கேலுடா..//


//அழகுத் தமிழிலும், பண்பிலும் மேலோங்கிய இம்மடல் ரியாஸ் என்ற பெருந்தகையிடமிருந்து எனக்கு வந்துள்ளது. ("S. Riyas" முகவரி: riyaamail@gmail.com)

தமிழ் வாழ்க .. அவரது மார்க்கமும்..!//

வாக்கியங்களை எந்த தவறும் இல்லாமல் உபயோகப்படுத்திய இந்த நபர் லகரத்திலும் னகரத்திலும் வேண்டுமென்றே தவறுகளை செய்துள்ளதை நீங்கள் அறியவில்லையா? எப்படி இப்னு ஷகீர் என்ற பெயரில் ஒளிந்து கொண்டு ஒரு பிரபல பதிவர் விளையாடுகிறாரோ அது போன்ற விளையாட்டுத்தான் இதுவும். இந்த மெயிலை பார்த்து நீங்கள் இஸ்லாத்தின் மீதும இஸ்லாமியர்கள் மீதும் மேலும் கோபமடைந்து வரிசையாக பதிவுகளை எழுதித் தள்ள வேண்டும் என்பது அந்த அறிவாளியின் நினைப்பு. பாவம் இப்னு……. வேறு ஏதாவது முயற்சி பண்ணவும்.

suvanappiriyan said...

தங்கமணி!

//அல்லாஹ் எல்லாம் வல்ல அல்லாஹ்வாகக்கூட குரானில் தெரிவதில்லை. மனிதர்களிடம் உதவி கேட்கும், உதவியை பெறும் கடவுளாகத்தான் தெரிகிறார்.
//47:7. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான்.//

இறைவனுக்கு உதவி செய்தல் என்றால் என்ன? ஏழைகளுக்கு உதவி செய்தல்.

2:83. இன்னும்(நினைவு கூறுங்கள்;) நாம் (யஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில், “அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது;(உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்; மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள்; ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்” என்று உறுதிமொழியை வாங்கினோம். ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள், இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள்.


2:177. புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்).

குர்ஆனின் மேற்கண்ட வசனமே உங்கள் கேள்விக்கு அழகாக விடையளிக்கிறது. ஒருவன் முகத்தை கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ தொழுது கொண்டு ஏழைகளையும் பந்துக்களையும் வெறுத்தானாகில் அவனுக்கு தொழுகையினால் ஒரு பலனும் இல்லை என்கிறான் இறைவன்.

//ஆதாரம் கொடுத்தால் ஒப்புகொண்டுவிடுவீர்களா? அது பார்ப்பனர்கள் வேதத்தில் கை வைத்து மாற்றிவிட்டார்கள் என்றுதானே வழக்கமாக சொல்வீர்கள்?
போய் நீங்களாக படித்து உணர்ந்து கொள்ளுங்கள்.//

பார்த்தீர்களா? பதில் இல்லை என்பது உங்கள் பின்னூட்டத்திலிருந்து தெரிகிறது. வேதத்தில் அப்படி ஒரு கருத்து இல்லை என்பதற்காகத்தானே இந்துவான உங்களிடம் கேட்கிறேன். ஒன்று ஆதாரத்தை தர வேண்டும். இல்லை என்றால் நம் முன்னோர்களின் கொள்கைபடி 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற திரு மூலர் மந்திரத்தின் படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். சரியா....

suvanappiriyan said...

தருமி!

//முகத்தில் சிறிது கரி.
ம்ம் ..ம்.. துடைத்துக் கொள்ளுங்கள்.//

கரியை நீங்கள் அல்லவா துடைத்துக் கொள்ள வேண்டும். அந்த தளத்தில் சென்று பார்த்தேன். தமிழில் அவர் எழுத்தில் இலக்கண பிழையை நான் பார்க்கவில்லை. எனவே இது வேறு ஒருவரின் வேலையாகவே இருக்க வேணடும். அவருக்கும் இதை விளக்கி இந்த பிரச்னையின் உண்மை நிலையை விளக்குமாறு மெயில் அனுப்பியுள்ளேன். இந்த காரியத்தை அவர் உண்மையிலேயே செய்திருந்தால் அது இஸ்லாமிய வழி முறை அல்ல என்று விளக்கி கடிதம் எழுதியுள்ளேன். என்ன பதில் வருகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

suvanappiriyan said...

தங்கமணி!

//நீங்கள் குறிப்பிட்ட வசனங்களில் எந்த இடத்தில் இவைதான் அல்லாஹ்வுக்கு நீங்கள் செய்யும் உதவி என்று இருக்கிறது? நீங்களாக அல்லாஹ்வின் வசனங்களுக்கு அதில் இல்லாததை எல்லாம் எழுதலாமா?//

சரி.. இன்னும் விளக்கமாகவே சொல்கிறேன். நோன்பு என்ற ஒரு செயல் இறைவனுக்காக கட்டாயமாக முஸ்லிம்கள் கடைபிடிக்க வேண்டிய ஒரு கடமை. அதனை உடல்நிலையினாலோ மற்ற காரணங்களினாலோ ஒருவர் விட்டு விடுகிறார். அதற்கு பரிகாரமாக இறைவன் என்ன கூறுகிறான் என்று பாருங்கள்.

'நம்பிக்கைக் கொண்டோரே! நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. உங்களில் நோயாளியாகவோ பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அதற்குச் சக்தி உள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரம். நன்மைகளை மேலதிகமாகச் செய்வோருக்கு அது நல்லது.'

-குர்ஆன் 2:183,184

இங்கு குறிப்பிட்ட நாட்களில் நோன்பை விட்டவருக்கு பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்கும்படி இறைவன் கட்டளையிடுகிறான். இதே போல் பல இடங்களில் தவறு இழைத்ததற்கு பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்கும்படி இறைவன் கட்டளையிடுகிறான்.

வேறொரு ஹதீதில் மறுமையில் பலரது முன்னிலையில் ஒரு மனிதனைப் பார்த்து இறைவன் 'நான் பசியோடு உன் வீட்டிற்கு வந்த போது நீ எனக்கு உணவு தரவில்லையே' என்று கேட்பானாம். அதற்கு அந்த மனிதன் 'இறைவா! நீயோ உலகையே கட்டி ஆள்பவன். உனக்கு பசியா?' என்று ஆச்சரியம் பொங்க அந்த மனிதன் கேட்பானாம். அதற்கு இறைவன் 'இந்த நாளில் இந்த நேரத்தில் ஒரு ஏழை உன் வீட்டின் படியேறி உன்னிடம் உணவு கேட்கவில்லையா? நீ தர மறுத்தாயல்லவா?' என்று கேட்பானாம். அப்பொழுதுதான் அந்த மனிதனுக்கு தான் செய்த தவறு ஞாபகத்தக்கு வரும். இது புகாரியில் வரக் கூடிய மிகப் பெரிய ஹதீது.

இந்த குர்ஆன் வசனமும் ஹதீதும் ஏழைக்கு செய்யும் உதவிகளே இறைவனுக்கு செய்யும் உதவிகளாக காட்டப்படுகிறது. எனவேதான் மற்ற சமூகங்களைக் காட்டிலும் இஸ்லாமியர்களிடத்தில் ஈகை குணம் அதிகமாக இருக்கும. இஸ்லாம் ஈகையை கட்டாய கடமையாக்கியதும் ஏழைகளைக் கருத்தில் கொண்டே.

suvanappiriyan said...

திரு கலை!

// அன்புள்ள சுவனப்பிரியன்
இறைவனுக்கு உதவி செய்வது ஏழைகளுக்கு உதவி செய்வது என்றால் இறைவனையும் ஏழையையும் ஒப்பு வைப்பதாக ஆகாதா? ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன் என்று சொன்னவர்கள் இந்த வசனத்திலிருந்து தான் தங்கள் கோஷங்களைப் பெற்றார்களா?//

யாரும் ஏழையை வணங்குவதில்லையே! மனிதன் தனக்கு மேல் உள்ள அந்தஸ்தில் உள்ளவர்களைத்தான் வணங்க முயற்ச்சிப்பான். ஒருவனிடம் கையேந்தம் நிலையில் உள்ள ஒருவனை யாரும் வணங்க முற்படமாட்டார்கள்.

வணக்கம் என்பது இறைவன் ஒருவனுக்குத்தான் என்பதில் இறைவனோ குர்ஆனோ முகமது நபியோ எந்த இடத்திலும் மாற்றுக் கருத்து கொள்ளவில்லை. இறைவன் பெயரை சொன்னால்தான் மனிதன் ஏழைகளுக்கு உதவுவதில் தயக்கம் காட்ட மாட்டான். 'ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்' என்ற வார்த்தை வந்தது குர்ஆனின் வசனங்களை வைத்தே வந்திருக்கும் என்பது எனது எண்ணம்.

//இன்னொரு சந்தேகம். இறைவனின் புத்தகம் என்று குறிப்பிடும் குர்ஆனில் “கடவுள் அன்பானவர்” “கடவுள் ஞானமிக்கவன்” என்று படர்க்கையிலும், “நீ அருள் மிக்கவன்” என்று முன்னிலையிலும் சொல்லப் பட்டிருக்கிறதே தவிர, நான் கடவுள் என் கட்டளைகள் என்று எதுவுமே சொல்லப் படவில்லையே. இருந்தும் எப்படி இதைக் கடவுளின் வாசகங்கள் என்று சிலர் நம்புகிறார்கள்? பகவத் கீதையில் “நானே மரம் செடி கோடி” ” அதர்மம் உண்டாகும்போது தர்மத்தை நிலைநாட்ட நான் வருவேன்” என்று தன்மையில் கடவுளின் வாசகங்கள் சொல்லப் பட்டிருக்கிறதே.//

வீட்டில் தந்தை தனது பேச்சை கேட்காத மகனைப் பார்த்து 'உனக்கு திமிர் அதிகமாகி விட்டது' என்று முன்னிலையாகப் பேசிக் கொண்டே 'இவனை வீட்டை விட்டு வெளியேற்றினால்தான் நிம்மதி' என்று திடீரென்று படர்க்கைக்கு மாறி விடுவார்.

அதேபோல் 'இது என் வீடு' என்று கூற வேண்டிய இடத்தில் 'இது நம்ம வீடு' என்று கூறுகிறோம். மேலும் சொந்த மகனை மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தும் போது 'நம்ம பையன்' என்று வழக்கத்தில் கூறி விடுகின்றோம். இதை யாரும் நேரிடையான பொருளில் புரிந்து கொள்வதில்லை. இது போல்தான் குர்ஆனில் பல இடங்களில் 'நாம்' நம்மை' 'நம்மிடம்' என்பன போன்ற சொற்களை இறைவன் பயன்படுத்துகிறான்.

ஆனால் இது போன்ற வித்தியாசங்களை எழுத்தில் பயன்படுத்த மாட்டோம். குர்ஆனைப் பொருத்த வரையில் அது எழுத்து வடிவில் ஒரு புத்தகமாக அருளப்படவில்லை. மக்களை நோக்கிப் பேசும் ஒலி வடிவமாகவே அருளப்பட்டது. எனவே தான் திருக்குர்ஆனில் பல இடங்களில் நீங்கள் சொல்வது போன்ற முறை பின்பற்றப்பட்டிருக்கும்.

கீழே வரக் கூடிய சில வசனங்கள் இறைவன் தன்னை 'நான்' என்றே தன்மையில் கூறிக் கொளகிறான். இது போன்ற இன்னும் பல வசனங்களும் உண்டு.

2:41. இன்னும் நான் இறக்கிய(வேதத்)தை நம்புங்கள்; இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது; நீங்கள் அதை (ஏற்க) மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக வேண்டாம். மேலும் என் திரு வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்; இன்னும் எனக்கே நீங்கள் அஞ்சி(ஒழுகி) வருவீர்களாக.

2:30. (நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” என்று கூறியபோது, அவர்கள் “(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்” எனக் கூறினான்.

2:47. இஸ்ராயீல் மக்களே! (முன்னர்) நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட் கொடையையும், உலகோர் யாவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூறுங்கள்.


2:160. எவர்கள் பாவமன்னிப்புத் தேடி(தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்.) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும் கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன்.


2:186. (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.

suvanappiriyan said...

சுப்ரமணியம் சுவாமியின் கருத்தை இந்துக்களில் உள்ள பெரும்பான்மையரான பிராமணர் அல்லாதோரே முதலில் எதிர்ப்பர். வந்தே மாதரம், பொது சிவில் சட்டம், வாக்குரிமை பறிப்பு போன்ற இந்துத்வாவின் செத்துப் போன கொள்கைகளை இந்த அரசியல் கோமாளி மறு பிரவேசம் செய்கிறார். இததனை நாள் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் வேலை செய்ததே பெரிய ஆச்சரியம். அந்த பல்கலைகழகம் சிறந்த முடிவையே எடுத்துள்ளது.

//ஹிந்துக்களும், ஹிந்து அல்லாதோரும் தாங்கள் இந்துப் பாரம்பரியத்தை சேர்ந்தவர் என்பதை ஒப்புக் கொண்ட பின்பே வாக்களிக்க அனுமதித்தல்//

ஹா...ஹா...இதற்கு வீரமணியும் கலைஞரும் மற்றும் கோடான கோடி திராவிடர்களும் என்ன பதிலை தருவார்கள் என்பது கட்டுரையாளருக்கு நன்றாக தெரியும். எனவே நான் விளக்க வேண்டியதில்லை.

ஒரு அரசியல் கோமாளியின் பிதற்றலுக்கு இவ்வளவு முக்கியத்துவமா?

king of kumari said...

//வேறொரு ஹதீதில் மறுமையில் பலரது முன்னிலையில் ஒரு மனிதனைப் பார்த்து இறைவன் 'நான் பசியோடு உன் வீட்டிற்கு வந்த போது நீ எனக்கு உணவு தரவில்லையே' என்று கேட்பானாம். அதற்கு அந்த மனிதன் 'இறைவா! நீயோ உலகையே கட்டி ஆள்பவன். உனக்கு பசியா?' என்று ஆச்சரியம் பொங்க அந்த மனிதன் கேட்பானாம். அதற்கு இறைவன் 'இந்த நாளில் இந்த நேரத்தில் ஒரு ஏழை உன் வீட்டின் படியேறி உன்னிடம் உணவு கேட்கவில்லையா? நீ தர மறுத்தாயல்லவா?' என்று கேட்பானாம். அப்பொழுதுதான் அந்த மனிதனுக்கு தான் செய்த தவறு ஞாபகத்தக்கு வரும். இது புகாரியில் வரக் கூடிய மிகப் பெரிய ஹதீது.//

நூல்: ஹதீஸ் முஸ்லிம் 5021
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்), ஆதமின் மகனே! நான் நோயுற்றிருந்த போது என்னை உடல் நலம் விசாரிக்க நீ வரவில்லையே (ஏன்)? என்று கேட்பான். அதற்கு மனிதன், என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல் நலம் விசாரிப்பேன்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், உனக்குத் தெரியுமா? என் அடியானான இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்த போது அவனிடம் சென்று நீ நலம்விசாரிக்கவில்லை. தெரிந்து கொள்! அவனை உடல் நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய் என்று கூறுவான்.

மேலும் அல்லாஹ், ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால், நீ எனக்கு உணவளிக்கவில்லை என்பான். அதற்கு மனிதன், என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், உனக்குத்தெரியுமா? உன்னிடம் என் அடியானான இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால், அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்து கொள்! அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய் என்று கூறுவான்.

மேலும் ஆதமின் மகனே! நான் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டேன். ஆனால், எனக்கு நீ தண்ணீர் தரவில்லை என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு மனிதன், என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், என் அடியானான இன்ன மனிதன் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். ஆனால், அவனுக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை. தெரிந்து கொள்! அவனுக்குக் குடிப்பதற்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய் என்று கூறுவான்.

நூல் : பைபிள்
மத்தேயு : அதிகாரம் 25
31 ' வானதூதர் அனைவரும் புடை சூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார்

.41 பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ' சபிக்கப் பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள்.42 ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை.43 நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை ' என்பார்.44 அதற்கு அவர்கள், ' ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்? ' எனக் கேட்பார்கள்.45 அப்பொழுது அவர், ' மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' எனப் பதிலளிப்பார்

திரு சுவனப்ரியன் அவர்களே, கீழே சொன்ன பைபிள் வசனத்திற்கும், மேலே உள்ள ஹதீசிற்கும் என்ன வேறுபாடு. ஒரே கடவுளின் வார்த்தை என்பதால் ஒற்றுமை இருக்கலாம் என்று நீங்கள் சொன்னால், இது குரான் வசனம் அல்ல ஹதீஸ் வசனம், முகமது அவர்கள் இந்த ஹதீஸை கூறுகிறார். வார்த்தைகளில் தான் சிறிது வேற்றுமை இருக்கிறதே தவிர, கருத்து எல்லாம் ஒன்றுதான். குரான் வசனத்தில் ஒற்றுமை இருக்கலாம் ஹதீஸிலும் ஒற்றுமை இருக்குமா

suvanappiriyan said...

கிங் ஆப் குமரி!

//வார்த்தைகளில் தான் சிறிது வேற்றுமை இருக்கிறதே தவிர, கருத்து எல்லாம் ஒன்றுதான். குரான் வசனத்தில் ஒற்றுமை இருக்கலாம் ஹதீஸிலும் ஒற்றுமை இருக்குமா//

'அவன்(இறைவன்) மறைவானதை அறிபவன். தனது மறைவான விஷயங்களை அவன் பொருந்திக் கொண்ட தூதரைத் தவிர யாருக்கும் வெளிப்படுத்த மாட்டான்.'
-குர்ஆன் 72:26

இந்த வசனத்தில் குர்ஆன் அல்லாத மறைவான விஷயங்களை தனது தூதருக்கு வெளிப்படுத்திக் காட்டுவதாக இறைவன் கூறுகிறான். இது ஏசு நாதருக்கும் பொருந்தும். சொர்க்கம் நரகம் அங்கு நடக்கும் விசாரணை அனைத்தையும் கனவிலோ அல்லது வேறு எந்த வகையிலோ தூதருக்கு இறைவனால் காட்டப்படும். அதைத்தான் முகமது நபி தனது தோழர்களுக்கு அறிவுரையாக வழங்குகிறார். நீங்கள் சொன்னவுடன்தான் பைபிளில் இப்படி ஒரு வசனம் இருப்பதே எனக்குத் தெரியும். குர்ஆனில் இல்லாத பைபிளில் மட்டும் இருக்கக் கூடிய ஒரு வசனத்தை எழுதப் படிக்கத் தெரியாத முகமது நபியால் எவ்வாறு சொல்ல முடிந்தது?

நீங்கள் குறிப்பிடும் இந்த நிகழ்வு முகமது நபி இறைத் தூதர்தான் என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது.

இறைச் செய்தி வரும்போது உடனுக்குடன் முகமது நபியின் தோழர்கள் தோல்களிலோ எலும்புகளிலோ குறித்து வைத்துக் கொள்வார்கள். தன்னுடைய பேச்சையும் குர்ஆன் வசனங்களையும் ஒன்றாக்கக் கூடாது என்று தனது தோழர்களுக்கு கட்டளையையும் முகமது நபி இட்டிருந்தார். ஏனெனில் இதற்கு முன்னால் வந்த வேதங்களில் தூதர்களின் உபதேசமும் பின் பற்றியவர்களின் விளக்கவுரையும் சேர்ந்ததினால் வந்த குழப்பத்தை நேரிடையாக பார்த்ததினாலேயே இத்தகைய கட்டுப்பாடுகளை முகமது நபி விதித்தார். அது இன்று வரை கடைபிடிக்கப்படுகிறது.

நன்னயம் said...

"மலேசியாவில் முஸ்லிமல்லாத சமுதாயத்தின் நிலையைப் பற்றி தேசியப் பதிவு இலாகா பின்வருமாறு அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாட்டில் திருமணம் ஆகாமல் பெண்கள், குழந்தைகள் பெறும் சம்பவங்கள் கவலைக்குரிய கட்டத்தை அடைந்துள்ளது. இவர்களில் அதிகமானோர் கல்லூரிப் பெண்கள். 17 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இதில் அதிகமாக இருக்கிறார்கள் என்று தேசிய பதிவு இலாகா இயக்குனர் டத்தோ அஜிகான் கூறுகிறார். ஆதாரம்: 5-1-2002 தேதியிட்ட மலேசியா நண்பன் நாளிதழ்.

இரண்டாம் தாரமாகவாவது மணந்து கொண்டு சட்டப்பூர்வ உரிமை தந்தால் மட்டுமே முஸ்லிம் பெண்கள் தங்களை ஆண்களிடம் ஒப்படைக்கிறார்கள். http://suvanappiriyan.blogspot.com/2011/12/blog-post_14.html

முஸ்லிமல்லாத பெண்களோ ஆசை வார்த்தை காட்டப்பட்டு ஏமாற்றப்படுகின்றனர். குழந்தை பெற்ற பின் நிராதரவாக விடப்படுகின்றனர்." இந்த பொன் மொழிகளை உதிர்த்தவர் திரு சுவன பிரியன். அவரது கருத்து படி முஸ்லிம் பெண்கள் படி தாண்டா பத்தினிகள் முஸ்லிம் அல்லாத இந்திய பெண்கள் XXXX. இது அவரது கருத்து. எனக்கு படியிலும், தாண்டுவதிலும் நம்பிக்கை இல்லை. அதை விடுவோம். ஆனால் சுவன பிரியன் கூறியதற்கு மாறாக நிலவரம் மலேசியாவில் காணப்படுகிறது.
Bear in mind that on average, there is an illegitimate Malay child being born every half an hour in Malaysia last year. This statistic is according to a Berita Harian report dated March 21, 2010 which said 17,303 Malay children were born out of wedlock in 2009 and given birth certificates.
http://suarakeadilanmalaysia.wordpress.com/2012/06/16/there-is-an-illegitimate-malay-child-being-born-every-half-an-hour-in-malaysia/

மேலும் அறிய
http://www.e-mfp.org/2012v7n1/pregnant-adolescents.html
http://www.themalaysianinsider.com/malaysia/article/sex-abstinence-campaign-is-not-oppressive-selangor-mb-says
http://www.google.com.my/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=55&cad=rja&ved=0CEAQFjAEODI&url=http%3A%2F%2Fwww.moh.gov.my%2Fattachments%2F2112&ei=s_lJUJnbBs_yrQfblIDYAQ&usg=AFQjCNH5osc9Nh7cT1QOJKeA5DZ-aDt-Ww&sig2=e4d90jYVaPCQZHZE8OFuLw

தற்போது மலேசியாவில் திருமனத்திட்க்கு முன்பதான உடலுறவு ஒரு சாதா விடயமாகி வருகிறது. மத வேறு பாடு கிடையாது. நோன்பு காலத்தில் மட்டும் செலங்கோர் மாவட்டத்தில் மட்டும் ஒரே நாளில் 52 மலாய் ஜோடிகளை போலீஸ் கைது செய்தது. இனிமேல் சு.பி அவர்கள் இஸ்லாம் பற்றி புரிந்து கொள்ளாதவர்கள் என்று சாக்கு போக்கு கோரலாம்.

A.Anburaj Anantha said...

2:47. இஸ்ராயீல் மக்களே! (முன்னர்) நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட் கொடையையும், உலகோர் யாவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூறுங்கள்.

யுதா்களுக்கு இப்படி வரத்தை அள்ளிக் கொடுத்ததற்கு என்ன காரணம் ? பிற சாதி மக்களுக்கு அள்ளிக் கொடுக்காததற்கு என்ன காரணம் பிற இன மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக பாவிகளா ? யுதா்கள் அனைவரும் புனிதா்களா ?

இது ஒரு பைத்தியக்காரத்தனமான உளரல்.விளக்க முடியுமா

A.Anburaj Anantha said...


மனிதன் சுய கட்டுப்பாட்டை இழந்து வருகின்றான் அதுதான் உண்மை. இதில் மத வேறுபாடு இல்லை. பிற ஆடவரா்களுக்கு பயந்து தன் மனைவி மகள் போன்றவா்களின் அழகில் பிற ஆண்கள் மயங்கி அவா்களை கைப்பற்ற முயற்றிக்கக் கூடும் என்று கருதியே இசுலாமிய காிமத் பண்பாடு கருதியே பெண்களுக்கு முக்காடை அரேபயிா்கள் விதித்தனா்.ஆனால் நாம் ஒன்ற மறந்து விட்டோம். அழகிய கம்பிரமான பணம் படைத்த ஆண்களைப்பாா்க்கும் முக்காடு போட்ட பெண்கள் மனதிலும் ஆசைகள் வரக் கூடும்தான் அதற்கு ஆண்களுக்கும் முக்காடு போட வேண்டுமே ?
இன்றுபெண்கள் வெளியே சா்வசாதாரணமாக அலைகின்றாா்கள். எனவேபாலியில் தவறுகள் சற்று அதிகமாகி உள்ளது.
சிறை காக்கும் எவன்ன செய்யும்.ஆண்கள் பெண்கள் நிறை காப்பதே காப்பு என்பது திருவள்ளுவாின் அமுக மொழி அதுமட்டும் உண்மை.