குர்ஆனில் கற்பனையை கலந்த சூஃபி பீர்அப்பா!
அரபுமூலம்- குரானின் சூரத்துல் இக்லாஸ்
குல்ஹுவல்லாஹ் அஹது அல்லஹுஸ் ஸமது
லம் யலிது வலம் யூலது
வலம் ய்க்குன்லஹ் குபுவன் அஹது
-குர்ஆன் 112:1,2,3,4
இதன் நேரடி தமிழ் பெயர்ப்பு
இறைவன் ஒருவன் எனக் கூறுவீராக.
இறைவன் தேவையற்றவன்
யாரையும் அவன் பெறவுமில்லை
யாருக்கும் அவன் பிறக்கவும் இல்லை.
அவனுக்கு நிகராக யாருமில்லை.
இந்த மொழி பெயர்ப்பை புரிந்து கொள்வதில் எவருக்கும் எந்த சிரமும் இருக்காது. இறைவன் ஒருவன்தான் இருக்க முடியும் என்பதை இவ்வளவு ரத்தின சுருக்கமாக எந்த மனிதனாலும் சொல்ல முடியாத அழகிய வார்ததைகளை போட்டு இறைவன் மனிதர்களுக்கு உபதேசிக்கிறான்.
மாற்று மதத்தை சேர்ந்த ஒருவர் கூட இந்த வசனத்தை எவரது உதவியுமின்றி இலகுவாக புரிந்து கொள்ள முடியும். இதை விட சிரமமான மொழியில் உயர்ந்த நடையில் கற்றவர்களுக்கு மட்டுமே புரியக் கூடிய வகையில் இறைவனால் கொடுக்க முடியும். ஆனால் அதனால் என்ன பயன்? பாமர மக்களுக்கு விளங்காது போய் விடும். அதன் விளக்கத்தை நாடி புரோகிதர்களிடம் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். அந்த புரோகிதரும் தனது கற்பனையை கலந்து கண் காது மூக்கெல்லாம் வைத்து இறைவன் சொல்லாததை எல்லாம் அந்த பாமரனின தலையில் ஏற்றி விடுவார். இந்து மதங்களில் அதுதான் நடந்து வருகிறது.
'நீங்கள் விளங்குவதற்காக இவ்வாறு இறைவன் தனது வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான்.'
-குர்ஆன் 2:242
இங்கு இறைவன் சாமான்யனும் விளங்கிக் கொள்வதற்காக தனது வசனங்களை தெளிவுபடுத்துவதாக சொல்கிறான். ஒரு சில வசனங்களை வரலாறு தெரிந்தால்தான் புரிந்து கொள்ள முடியும். அது போன்ற வசனங்களை முகமது நபியின் விளக்கவுரையை படித்து நாம் தெளிவு பெறலாம். ஒரு சில இடங்களில் மாத்திரமே இவ்வாறு சற்று சிரமமான வசனங்கள் வரும். பெரும்பான்மையான வசனங்கள் பலரும் புரிந்து கொள்ளும் வகையிலேயே இறைவன் இலகுவாக தநதிருக்கிறான்.
இனி ஹெச்.ஜி ரசூல் போன்ற சூஃபி இசத்தை ஆதரிக்கக் கூடிய பீர் அப்பா என்ற புலவரின் விஷயத்துக்கு வருவோம். பீர்அப்பா என்ற புலவரைப் பொறுத்தவரையில் நல்ல தமிழ் அறிஞர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்து மத வேதங்களை எல்லாம் நன்றாக தெரிந்து வைத்துள்ளார். புலவர்களை பொறுத்த வரையில் எதை எழுதினாலும் அதில் சில கற்பனைகளை கலந்து விடுவது தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கம். எனவே தான் 'கவிதைக்கு பொய் அழகு' என்று கவிஞர்களும் பாடுகின்றனர்.
இனி நான் மேலே சுட்டிய குர்ஆனின் 112 ஆவது அத்தியாயத்தை பீர் அப்பா எவ்வாறு மொழி பெயர்க்கிறார் என்று பார்ப்போம்.
தந்தையிலி தாரமிலி தானவனும் நீயே
தன்மை கொடெவர்க்குமொரு தாபரமும் நீயே..
மைந்தரிலி அன்னையிலி மன்னவனும் நீயே
மண்ணிலடியார்க் கிரணம் வழங்குவது நீயே..
….
தன்னையன்றி தனக்கு நிகர் தானிலியும் நீயே
தண்மை கொடெனக்கு உணவு தருபவனும் நீயே….
…..
அல்லா ஒருவனென்றும் அஹமதவன் தூதரென்றும்
சொல்லால் உவந்து தொழுதிரந்தால்…
இதைப் படிக்கும் ஒரு பாமரன் அதில் உள்ள சந்த நயத்தையும் வார்த்தைகளின் ஆளுமையையும் பார்த்து பிரமிப்பான். ஆனால் இறைவன் என்ன சொல்ல வருகிறான். இந்த வசனத்தால் நமக்கு என்ன நன்மை என்பதை எவரும் கருத்தில் கொள்ள மாட்டார். மற்றொரு சூ.பி ஆதரவாளரான ஏ.ஆர்,ரஹ்மானிடம் கொடுத்தால் அருமையாக மெட்டு போட்டு பாடலை பிரபல்யம் ஆக்கி விடுவார். இதுதான் நடக்கும்.
“இறைவன் ஒருவன் எனக் கூறுவீராக.” எனற மொழி பெயர்ப்புக்கும் ‘’தந்தையிலி தாரமிலி தானவனும் நீயே’’ என்ற புலவரின் பாட்டுக்கும் எவ்வளவு வித்தியாசம் என்று பாருங்கள். அவர் வரிக்கு வரி மொழி பெயர்க்காமல் முதல் வசனத்தை இரண்டாம் வசனமாகவும் இரண்டாம் வசனத்தை முதலிலும் போட்டு தனக்கென்று ஒரு தனி பாணியை வகுத்துக் கொண்டு மொழி பெயர்க்கிறார். நல்ல வேளையாக குர்ஆனின் அரபி மூலத்தை இன்று வரை மொழி பெயர்ப்புகளில் சேர்த்தே எழுதுவதால் குழப்பத்திலிருந்து தப்பித்தோம். மூல மொழியை கைவிட்டதால் இன்று இந்து மத வேதங்களும் கிறித்தவ வேதங்களும் எந்த அளவு அதன் உண்மையை இழந்து நிற்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
புலவருக்கு மொழி ஆற்றல் இருக்கிறது என்றால் அதை வேறு ஏதாவது அரபி இலக்கியத்தை மொழி பெயர்த்து தனது திறமையை காட்டியிருக்கலாம். அதை விடுத்து குர்ஆனில் கை வைப்பதை உலகில் உள்ள எந்த முஸ்லிமும் ஒத்துக் கொள்ள மாட்டான். அவர் காலத்தில் ஏதோ அவரை அறியாமலேயே இந்த தவறை செய்து விட்டதாக வைத்துக் கொளவோம். 300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மொழி பெயர்ப்புகள் வரவில்லை. எனவே அந்த காலத்துக்கு ஓ.கே. ஆனால் இன்று இணைய வசதி மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ் ஆங்கில மொழி பெயர்ப்புகள் என்று மிகவும் எளிமைபடுத்தப்பட்டு நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. எனக்கு அதெல்லாம் வேண்டாம். பீர்அப்பா கவிதை நடையில் எழுதிய 'ஞானப் புகழ்ச்சி' ஒன்றே போதும் என்று அடம் பிடிக்கும் ஹெச்.ஜி.ரசூல் போன்றவர்களை என்ன செய்வது? இறைவனிடம் பிரார்த்திக்கத்தான் முடியும்.
மேலும் ஹெச்.ஜி.ரசூல் சொல்கிறார்...
//பீர்முகமது அப்பா எழுதிய பாடல்களின் எண்ணிக்கை பதினெண்ணாயிரம். இன்று நமக்கு கைவசம் கிடைக்கும் பாடல்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஏழாயிரத்தை எட்டும்.வெண்பா,விருத்தம் என பல்வகை பாவடிவில் ஏறத்தாழ நாற்பத்தி எட்டாயிரத்துக்கும் (48000) மேற்பட்ட வரிகளில் பீர்முகமது அப்பா ஞானக் கவிதைகளை எழுதியிருக்கிறார்கள்.//
சூரத்துல் இக்லாஸ் (உளத் தூய்மை) என்ற 112 வது அத்தியாயத்திலேயே இத்தனை குளறுபடிகளை இந்த கவிஞர் செய்து வைத்திருக்கிறார். இன்னும் மற்ற பாடல்களை எல்லாம் படித்தால் இன்னும் என்னென்ன கூத்துகள் அரங்கேறியிருக்குமோ இறைவனே அறிவான்.
சரி.. இஸ்லாத்தில் கவிதை இயற்றுவது தடை செய்யப்பட்டதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். அந்த கவிதைகள் குர்ஆனோடு கலக்காமலும் மிகைப்படுத்தல் இல்லாமலும் பொய் கலக்காமலும் இருக்க வேண்டும். அன்றைய அரபுகள் கவிதை இயற்றுவதில் மிகவும் சிறந்து விளங்கினார்கள். முகமது நபி காலத்திலேயே அவரது தோழர்கள் கவிதைகளை பாடியிருக்கிறார்கள். புகாரியில் வரக் கூடிய ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் சிலவற்றை பார்ப்போம்.
1009. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்தபோது அவர்களின் முகத்தை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்கள் கீழே இறங்குவதற்குள் ஒவ்வொரு கூரையிலிருந்தும் தண்ணீர் வழிந்தோடியது.
'இவர் வெண்மை நிறத்தவர். இவரால் மழை வேண்டப்படும். இவர் அனாதைகளுக்குப் புகலிடமாகவும் விதவைகளுக்குக் காவலராகவும் திகழ்கிறார்' என்ற அபூ தாலிபின் கவிதையை அப்பொழுது நான் நினைத்துக் கொள்வேன்.
Volume :1 Book :15
1155. ஹைஸம் இப்னு அபீ ஸினான் அறிவித்தார்.
அபூ ஹுரைரா(ரலி) தம் உரையின்போது நபி(ஸல்) அவர்கள் பற்றி அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) இயற்றிய பின்வரும் கவிதையை எடுத்துக் கூறினார்கள்.
'எங்களிடம் இறைத்தூதர் இருக்கிறார்கள். ஃபஜ்ரு நேரம் வந்ததும் அவனுடைய வேதத்தை அவர்கள் ஓதுகிறார்கள். நாங்கள் வழிகேட்டில் இருந்த பின் எங்களுக்கு அவர்கள் நேர்வழி காட்டினார்கள். அவர்கள் கூறியது நடந்தேறும் என்று எங்கள் உள்ளங்கள் உறுதியாக நம்புகின்றன. இணை வைப்பவர்கள் படுக்கையில் அழுந்திக் கிடக்கும்போது அவர்கள் படுக்கையிலிருந்து எழுந்து தொழுவார்கள்.
Volume :1 Book :19
3926. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்தபோது அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கும் பிலால்(ரலி) அவர்களுக்கும் காய்ச்சல் கண்டிருந்தது. அவ்விருவரிடமும் நான் சென்று, 'என் தந்தையே! எப்படியிருக்கிறீர்கள்? பிலால் அவர்களே! எப்படியிருக்கிறீர்கள்" என்று கேட்டேன். அபூ பக்ர் அவர்களுக்கு காய்ச்சல் ஏற்படும்போது அவர்கள் பின் வரும் கவிதையைக் கூறுவார்கள்:
காலை
வாழ்த்துக் கூறப்பெற்ற
நிலையில்
ஒவ்வொரு மனிதனும்
தம் குடும்பத்தாரோடு
காலைப் பொழுதை அடைகிறான்....
(ஆனால்,)
மரணம் - அவன் செருப்பு வாரை விட
மிக அருகில் இருக்கிறது
(என்பது -
அவனுக்குத் தெரிவதில்லை)
பிலால்(ரலி) காய்ச்சல் நீங்கியதும் வேதனைக்குரல் எழுப்பி,
'இத்கிர்' (நறுமணப்) புல்லும்
'ஜலீல்' (கூரைப்) புல்லும்
என்னைச் சூழ்ந்திருக்க..
(மக்காவின்) பள்ளத்தாக்கில்
ஓர் இராப் பொழுதையேனும்
நான் கழிப்பேனா?...
'மஜின்னா' எனும்
(மக்காவின் இனிப்புச்சுனை) நீரை
ஒரு நாள் ஒரு பொழுதாவது
நான் பருகுவேனா...?
(மக்கா நகரின்)
ஷாமா, தஃபீல் மலைகள்
(இனி எப்போதாவது)
எனக்குத் தென்படுமா?...
என்ற கவிதையைக் கூறுவார்கள்.
உடனே, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, (அவர்களின் நிலையைத்) தெரிவித்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! நாங்கள் மக்காவை நேசித்தது போல் அல்லது அதை விட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்கு! மேலும் இவ்வூரை ஆரோக்கியமானதாகவும் ஆக்கு! எங்களுடைய (அளவைகளான) 'ஸாவு', 'முத்து' முதலியவற்றில் (எங்கள் உணவில்) எங்களுக்கு நீ அருள் வளத்தை வழங்கு! இங்குள்ள காய்ச்சலை இடம் பெயரச் செய்து அதை 'ஜுஹ்ஃபா' என்னுமிடத்தில் (குடி) அமர்த்திவிடு" என்று பிரார்த்திதார்கள்.
Volume :4 Book :63
7 comments:
திரு கலை!
//முஸ்லிம்கள் அவர்களுடைய கடவுளை ரெயில்வே ஸ்டேஷன், கடற்கரை, மைதானங்கள், சாலைகளில் கூடக் கும்பிடுவதை தொலைக் காட்சியில் காண்பிக்கிறார்களே?//
தொழுகை நேரம் வந்து விட்டால் நாம் எங்கிருக்கிறோமோ அங்கேயே தொழுது கொள்ளலாம். அந்த தொழுகை கூட ஏக இறைவனாம் இறைவனை நினைத்துதான். அந்த இறைவன் ஒரு நாளைக்கு ஐந்து வேளை தொழ வேண்டும் என்ற கட்டளையிட்டதால்தான்.
ஆனால் தர்ஹாவில் சென்று வணங்குவது ஏக இறைவனை அல்ல. அங்கு அடங்கியிருக்கும் நபர் இறக்கவில்லை. இன்னும் உயிரோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையில் அங்கு சென்று பிரார்த்திக்கின்றனர். இதைத்தான் இஸ்லாம் கடுமையாக தடுக்கிறது.
//அல்லாவை கடவுள் இறைவன் போன்ற வார்த்தைகளால் குறிப்பிடலாமா? இஸ்லாம் இதை அனுமதிக்கிறதா?//
'அல்லாஹ்' என்று அழையுங்கள் 'ரஹ்மான்' என்று அழையுங்கள். நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன.
-குர்ஆன் 17:110
எனவே ஏக இறைவனை அல்லாஹ், இறைவன், கடவுள், ரப், தேவன் என்று எந்த பெயரிலும் அழைக்கலாம். ஆனால் அது ஏக இறைவனாக இருக்க வேண்டும்.
//அரபு மொழி அறியாத முஸ்லிம்கள் முஸ்லிம்களா இல்லையா? அவர்களின் சொந்த மொழியில் கடவுளைக் கும்பிட்டால் தப்பா?//
உலக ஒற்றுமைக்கு ஒரு மொழி அவசியப்படுகிறது. உலகில் எந்த நாட்டுக்கு சென்றாலும கூட்டுத் தொழுகையில் ஒரு முஸ்லிம் கலந்து கொள்ள முடியும். நம் நாட்டில் கூட தேசிய கீதமாக ஜனகனமன வை வைத்திருக்கிறோம். இந்தியர்களுக்குள் ஒரு ஒற்றுமையை கொண்டு வருவதற்காக. வங்காள மொழியில் அந்த பாடல் இருப்பதால் தமிழும், உருதும் தரம் தாழ்ந்த மொழி என்று சொல்கிறோமா? அதே அளவு கோலை இங்கும் வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து கூட்டுத் தொழுகை முடிந்து இறைவனிடம் பிராரத்தனை செய்தல் அவரவர் சொந்த மொழியிலே தான் இருக்கும். ஏனெனில் படைத்த இறைவனுக்கு உலகில் உள்ள மொழிகள் எல்லாம் தெரியும் என்பதால் தங்களது தாய் மொழியிலேயே பிரார்த்திக்க சொல்லி முகமது நபியின் கட்டளை இருக்கிறது.
//ஒரே கடவுள் என்பதற்கும, பல கடவுள்கள் என்பதற்கும் என்ன வித்தியாசம்? பல கடவுள்கள் இருப்பது தான் தர்க்க ரீதியாக சரியானது. ஒரே கடவுள் எப்படி இவ்வளவு பிரமாண்டமான பிரபஞ்சத்தை படித்து காத்து அழிக்க முடியும்?//
'மனிதர்களே! உங்களையும் உங்களுக்கு முன் சென்றோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள்.'
-குர்ஆன் 2:21
மனிதனுக்கு முன்னரும் பின்னரும் தொடர்ந்து வரும் வானவர்கள் உள்ளனர். இறைவனின் கட்டளைப்படி அவனை காப்பாற்றுகின்றனர்.
-குர்ஆன் 13:11
இறைவனே உயிர்ப்பிக்கிறான்: மரணிக்கச் செய்கிறான்.
-குர்ஆன் 3:156
படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று வேளையையும் ஒருவன்தான் செய்ய முடியும். பலர் இருந்தால் அங்கு சண்டையில்தான் முடியும். இந்து மத கடவுள்களுக்குள் சண்டை பிரபல்யமாக சொல்லப்படுமே! அதே போல் சில காரியங்களை செய்ய இறைவன் சில மலக்குகளை (தேவர்களை) ஏற்படுத்தியுள்ளான். அவர்கள் இறை கட்டளைக்கு மாறாது தங்களின் வேலைகளை செய்து வருவர் என்று வேதம் கூறுகிறது.
வாசகர்களின் கனிவான பார்வைக்கு !
சுட்டியை சொடுக்கி படியுங்கள்.
******
80 களின் இறுதியில் ஹிந்துக்களுக்கு அநீதி!! ஹிந்துஸ்தானத்திற்கு ஆபத்து!! என்ற நூலில் ஹிந்து முன்னணி தலைவன் ராம. கோபாலய்யர் வெளியிட்டு உள்ள புளுகுகளுக்கு ஷஹீத் பழனி பாபா அவர்கள் வெளியிட்ட மறுப்புரையின் தொகுப்பு. *********
Assalamu Alaikum brother,
Could you please share your email address? I would like to share few information personally .
Thanks,
Shahul
வஅலைக்கும் சலாம்! சகோ சா!
//Could you please share your email address? I would like to share few information personally .//
என்னுடைய ஈமெயில் ஐடி nazeer65@gmail.com
தொடர்புக்கும் கருத்துக்கும் நன்றி!
//வாசகர்களின் கனிவான பார்வைக்கு !
சுட்டியை சொடுக்கி படியுங்கள்.//
வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி வாஞ்சூர் பாய்.
திரு கலை!
// அன்புள்ள சுவனப்பிரியன்
இறைவனுக்கு உதவி செய்வது ஏழைகளுக்கு உதவி செய்வது என்றால் இறைவனையும் ஏழையையும் ஒப்பு வைப்பதாக ஆகாதா? ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன் என்று சொன்னவர்கள் இந்த வசனத்திலிருந்து தான் தங்கள் கோஷங்களைப் பெற்றார்களா?//
யாரும் ஏழையை வணங்குவதில்லையே! மனிதன் தனக்கு மேல் உள்ள அந்தஸ்தில் உள்ளவர்களைத்தான் வணங்க முயற்ச்சிப்பான். ஒருவனிடம் கையேந்தம் நிலையில் உள்ள ஒருவனை யாரும் வணங்க முற்படமாட்டார்கள்.
வணக்கம் என்பது இறைவன் ஒருவனுக்குத்தான் என்பதில் இறைவனோ குர்ஆனோ முகமது நபியோ எந்த இடத்திலும் மாற்றுக் கருத்து கொள்ளவில்லை. இறைவன் பெயரை சொன்னால்தான் மனிதன் ஏழைகளுக்கு உதவுவதில் தயக்கம் காட்ட மாட்டான். 'ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்' என்ற வார்த்தை வந்தது குர்ஆனின் வசனங்களை வைத்தே வந்திருக்கும் என்பது எனது எண்ணம்.
//இன்னொரு சந்தேகம். இறைவனின் புத்தகம் என்று குறிப்பிடும் குர்ஆனில் “கடவுள் அன்பானவர்” “கடவுள் ஞானமிக்கவன்” என்று படர்க்கையிலும், “நீ அருள் மிக்கவன்” என்று முன்னிலையிலும் சொல்லப் பட்டிருக்கிறதே தவிர, நான் கடவுள் என் கட்டளைகள் என்று எதுவுமே சொல்லப் படவில்லையே. இருந்தும் எப்படி இதைக் கடவுளின் வாசகங்கள் என்று சிலர் நம்புகிறார்கள்? பகவத் கீதையில் “நானே மரம் செடி கோடி” ” அதர்மம் உண்டாகும்போது தர்மத்தை நிலைநாட்ட நான் வருவேன்” என்று தன்மையில் கடவுளின் வாசகங்கள் சொல்லப் பட்டிருக்கிறதே.//
வீட்டில் தந்தை தனது பேச்சை கேட்காத மகனைப் பார்த்து 'உனக்கு திமிர் அதிகமாகி விட்டது' என்று முன்னிலையாகப் பேசிக் கொண்டே 'இவனை வீட்டை விட்டு வெளியேற்றினால்தான் நிம்மதி' என்று திடீரென்று படர்க்கைக்கு மாறி விடுவார்.
அதேபோல் 'இது என் வீடு' என்று கூற வேண்டிய இடத்தில் 'இது நம்ம வீடு' என்று கூறுகிறோம். மேலும் சொந்த மகனை மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தும் போது 'நம்ம பையன்' என்று வழக்கத்தில் கூறி விடுகின்றோம். இதை யாரும் நேரிடையான பொருளில் புரிந்து கொள்வதில்லை. இது போல்தான் குர்ஆனில் பல இடங்களில் 'நாம்' நம்மை' 'நம்மிடம்' என்பன போன்ற சொற்களை இறைவன் பயன்படுத்துகிறான்.
ஆனால் இது போன்ற வித்தியாசங்களை எழுத்தில் பயன்படுத்த மாட்டோம். குர்ஆனைப் பொருத்த வரையில் அது எழுத்து வடிவில் ஒரு புத்தகமாக அருளப்படவில்லை. மக்களை நோக்கிப் பேசும் ஒலி வடிவமாகவே அருளப்பட்டது. எனவே தான் திருக்குர்ஆனில் பல இடங்களில் நீங்கள் சொல்வது போன்ற முறை பின்பற்றப்பட்டிருக்கும்.
கீழே வரக் கூடிய சில வசனங்கள் இறைவன் தன்னை 'நான்' என்றே தன்மையில் கூறிக் கொளகிறான். இது போன்ற இன்னும் பல வசனங்களும் உண்டு.
2:41. இன்னும் நான் இறக்கிய(வேதத்)தை நம்புங்கள்; இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது; நீங்கள் அதை (ஏற்க) மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக வேண்டாம். மேலும் என் திரு வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்; இன்னும் எனக்கே நீங்கள் அஞ்சி(ஒழுகி) வருவீர்களாக.
2:30. (நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” என்று கூறியபோது, அவர்கள் “(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்” எனக் கூறினான்.
2:47. இஸ்ராயீல் மக்களே! (முன்னர்) நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட் கொடையையும், உலகோர் யாவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூறுங்கள்.
2:160. எவர்கள் பாவமன்னிப்புத் தேடி(தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்.) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும் கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன்.
2:186. (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.
மேலும் பீர் அப்பாவின் மகிமைகள் அறிய
http://puthu.thinnai.com/?p=6639#comment-2343
Post a Comment