Followers

Friday, December 30, 2011

சசிகலாவின் ஹோமமும் சவுதி அரேபியாவின் தண்டனையும்!

திருச்சி: ஸ்ரீரங்கத்தில் சசிகலா கோஷ்டியினர் சனிப் பெயர்ச்சியன்று ஹோமம் நடத்திய விவகாரம் குறித்து, இந்து சமய அறநிலையத் துறை கமிஷனருக்கு, ஸ்ரீரங்கம் கோவில் இணை கமிஷனர் விளக்க அறிக்கை அனுப்பியுள்ளார்.
ஜெ.,வுக்கு நல்லதா? ஸ்ரீரங்கம் கோவிலில் சசிகலா சார்பில் செய்யப்பட்ட ஹோமம், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நல்லதா, கெட்டதா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இதுகுறித்து உளவுத்துறையினர் விசாரித்தபோது, 10 லட்ச ரூபாய் செலவில் ஹோமம் செய்யப்பட்டதும், பட்டர்களுடன் சேர்ந்து டி.வி.மகாதேவன், "சத்ரு சம்ஹார நாசனம்... நாசையா... நாசையா' என்று எதிரிகளை அழிக்கும் மந்திரங்களை வாய்விட்டு கூறியதாகவும் தெரியவந்துள்ளது. ஹோமத்தை ஏற்பாடு செய்த சுந்தர்பட்டரோ, "ஹோமம் நடந்தது தெரியாது' என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதால், ஸ்ரீரங்கத்தில் நடந்தது சுதர்சன ஹோமம் தானா என, உளவுத்துறையினர் குழம்பி போயுள்ளனர்.

-தினமலர் செய்தி

ஒரு நாட்டின் முதலமைச்சரின் முன்னாள் நெருங்கிய தோழி தனது வீழ்ச்சிக்கு காரணமானவர்களை ஹோமம் வளர்த்து பழி தீர்க்கிறார். கண்டிப்பாக அவரது ஹோமத்தில் நரேந்திர மோடியின் பெயரும் நம் ஊர் சோ ராமசாமியின் பெயரும் வந்திருக்கும். :-) ஹோமத்தினால் இனி என்ன நடக்குமோ என்று முடியில்லாத தனது தலையை கவலையோடு தடவிக் கொண்டிருப்பார் சோ.
இது போன்ற மூடப் பழக்கங்களை பத்திரிக்கைகள் கண்டிக்க வேண்டாமா? பில்லி சூன்யத்தில் அதீத நம்பிக்கை உடைய ஒருவர்தான் இத்தனை காலம் முதல்வரின் உடன்பிறவா சகோதரியாக இருந்துள்ளார். ஒரு வகையில் இவர் போயஸ் தோட்டத்தை விட்டு போனது நல்லதுதான். ஆனால் அதற்கு மாற்றாக அவரது இடததுக்கு சோ ராமசாமியின் மகன் வந்துள்ளதாக செய்தி வருகிறது. தலைவலி போய் திருகு வலி வந்த கதைதான். நம் முதல்வருக்கு சொந்தமாக சிந்திக்க தெரியாதா? ஆலோசனை வழங்க யாராவது ஒருவர் இருந்தேதான் ஆக வேண்டுமா? 'நாசையா...நாசையா' என்று கூறி ஹோமம் வளர்த்தால் எதிரிகள் அழிந்து விடுவார்களாம். அதுவும் ஸ்ரீரங்கம் கோவிலில் வைத்து நடத்தப்படுகிறது.



இந்த காலத்திலும் இதிலெல்லாம எப்படி நம்பிக்கை வைக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஹோமத்தினால் ஒருவருக்கு தீங்கு வரவழைக்க முடியும் என்றால் கருணாநிதி ஜெயலலிதாவுக்கு செய்திருக்க மாட்டாரா? அல்லது ஜெயலலிதாதான் கருணாநிதிக்கு செய்திருக்க முடியாதா? தமிழகத்தில் எத்தனை குடும்பங்கள் மாந்திரீக நம்பிக்கையால் நிரந்தரமாக பிரிந்துள்ளது என்பதை பட்டியலே இட முடியும். சாதி, இன, மத வேறுபாடு இல்லாமல் அதிகமான குடும்பங்கள் மாந்திரீக நம்பிக்கையினால் சீரழிந்து வருகின்றன. இதை சட்டம் போட்டு கடுமையாக தடுக்க வேண்டிய அரசு வேடிக்கை பார்க்கலாமா?

இஸ்லாம் இதனை வன்மையாக கண்டிக்கிறது.

'நம்பிக்கைக் கொண்டோரே! மது, சூதாட்டம், பலிலீடங்கள், குறி கேட்பதற்கான அம்புகள் ஆகியவை அருவருப்பானதும் ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். வெற்றி பெறுவீர்கள்'
-குர்ஆன் 5:90

சவுதி அரேபியாவில் இத்தகைய ஏமாற்று பேர்வழிகளை மிகக் கடுமையாக தண்டிக்கின்றனர். இங்கு ஜோசியம் பார்ப்பது, கைரேகை பார்ப்பது, பேயோட்டுவது, பில்லி சூன்யம் வைப்பது என்ற அனைத்து மூட நம்பிக்கைகளையும் பரப்புவோரை சவுதி அரசு மிகக் கடுமையாக தண்டிக்கிறது. சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நம் ஊர் மாலை மலர் செய்தியாக வெளியிட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் வடக்கு ஜாவ்ப் மாகாணத்தை சேர்ந்த பெண் அமீனாபிந்த் அப்துல்கலாம் நாசர். இவர் பில்லிசூனியம் மற்றும் மாந்திரீகம் செய்து வந்தார். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. சவுதிஅரேபியாவில் மாந்திரீகத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
எனவே, இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அமீனா மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட அமீனாவின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டார். அதை தொடர்ந்து நேற்று அவர் தலை துண்டிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

-மாலை மலர்
13-12-2011
இந்த குற்றத்துக்கு மரண தண்டனையா? இது அநியாயம் என்று ஒரு சிலர் நினைக்கலாம். இது போன்ற குறி சொல்பவர்களாலும், பில்லி சூன்யம் வைப்பவர்களாலும் பிரிந்த குடும்பங்களையும் அதனால் எழுந்த சண்டைகளையும் ஒப்பிடும் போது இந்த இழப்பு நமக்கு பெரிதல்ல.

இது போன்ற ஒரு சட்டத்தை நம் நாட்டில் இயற்றினால் மறு நாளே தர்ஹாக்களில் வயிறு வளர்க்கும் போலி முல்லாக்களும், பிரேமானந்தா முதல் நித்தியானநதா வரை ஆசிரமங்களை மூடி விட்டு வேறு தொழில் பார்க்க சென்று விடுவர். பல குடும்பங்களின் வாழ்வும் சிறக்கும்.

இது போன்ற போலி ஆன்மீகம் எங்கும் வியாபித்திருப்பதற்கு மூல காரணமே இறைவனைப் பற்றிய சரியான புரிதல் இல்லாததே! ஒரே இறைவன் என்று சொல்லும் முஸ்லிம்களில் பலர் தர்ஹாக்களில் சென்று காணிக்கை செலுத்தி நேரத்தையும் காலததையும் வீணாக்குகிறார்கள். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற நம் முன்னோர்களின் வழக்கு ஒழிந்து நம் நாட்டில் ஊருக்கு ஒரு கடவுள். கிருத்தவத்திலும் ஏக இறைவனை விடுத்து முககடவுள் கொள்கை.

வெட்ட வெளிக்குள்ளே விளங்கும் சதாசிவத்தைக்
கிட்டவரத் தேடிக் கிருபை செய்வது எக்காலம்? -
என்று நமது முன்னோர்கள் இலக்கியத்தில் எழுதி வைத்துள்ளனர். அவன் நம் கிட்டே வருவதற்கு பதில் நாம் அவனைத் தேடி பயணிக்க வேண்டும். அதுதான் முறையும் கூட....

கோளில் பொறியில் குணமிலவே என்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
-குறள் 1:9

இறைவனின் திருவடிகளை வணங்காத தலைகள் பயனற்றவை. மனித உடலில் தலையே யாவற்றிலும் சிறந்த உறுப்பு. இந்த சிறப்பு வாய்ந்த தலைப் பகுதியை வேறு எவருக்காகவும் தாழ்த்தக் கூடாது என்பது இக்குறள் மூலம் வள்ளுவர் சொல்ல வரும் கருத்தாகும்.

ஆனால் இதற்கு நேர்மாற்றமாக கருணாநிதி காலிலும் ஜெயலலிதா காலில் சாஷ்டாங்கமாக விழுந்து தொலைக்கும் உடன் பிறபபுகளை பார்த்தால் வள்ளுவர் மனம் எவ்வளவு சிரமப்படும்.

-------------------------------------------------------------------

தொழில் அதிபரும், பாரதிய வித்யாபவன் முன்னாள் தலைவருமான, மறைந்த எஸ்.வி.நரசிம்மன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில், வேதியியல் கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் பேசியதாவது: இன்றைய நவீன அறிவியலுக்கு, ஐரோப்பாவில், 1600ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட ராயல் சொசைட்டி தான் அடிப்படை. முந்தைய நம்பிக்கைகளிலிருந்து மாறுபட்டு, கோபர் நிகோஸ், கலிலியோ போன்ற விஞ்ஞானிகள், சூரியன் மற்றும் கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்து அறிவித்தனர்.
அறிவியல் பல்வேறு காலக்கட்டங்களை கடந்து, காலமாற்றத்துக்கு ஏற்ப தன்னை தானே சரி செய்து கொண்டு வளர்ந்து வந்துள்ளது. பரிசோதனைகளின் அடிப்படையில் நிரூபிக்கப்படும் நம்பிக்கைகள், சிந்தனைகளே அறிவியல். இவை, உண்மைகளின் அடிப்படையில் சொல்லப்படுபவை.
அறிவியலில் கூட ஒரு காலக்கட்டத்தில் சரி என கருதப்படும் விஷயம்; மற்றொரு காலத்தில் தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. பல அறிவியல் முடிவுகள், நம்பிக்கைகள் தவறானவை என, அறிவியல் பரிசோதனைகள் மூலம் மறுக்கப்பட்டுள்ளது. லிமஸ் பாலிங் என்ற விஞ்ஞானி, வைட்டமின் சி அதிக அளவு எடுத்துக் கொண்டால், உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்; புற்றுநோயை குணப்படுத்தும் என நம்பினார். ஆனால், வைட்டமின் சி புற்றுநோயை குணப்படுத்தாது என, பின்னர் நிரூபிக்கப்பட்டு விட்டது. இதுபோன்ற பல அறிவியல் முடிவுகள் பின்னாளில் தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஜோதிடம் அறிவியல் பூர்வமானது அல்ல. கோள்கள், நட்சத்திரங்கள் நமது தலைவிதியை நிர்ணயிக்க கூடியவை அல்ல. நவீன விஞ்ஞானம் மருத்துவத்துடன் கைகோர்த்ததால் தான், மனிதனின் சராசரி ஆயுள் காலம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. மருத்துவத்திலும் அறிவியல் பூர்வமான விஷயங்களை மட்டுமே நம்ப வேண்டும். ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாதவற்றை நம்பக் கூடாது.
சுற்றியிருக்கும் உலகத்தை நம்பிக்கையின் அடிப்படையில் பார்க்காமல் அறிவியல் பூர்வமாக பார்க்க வேண்டும். பலமுறை பரிசோதிக்கப்பட்ட விஷயங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும். அறிவியல் பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளால் பெரியம்மை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத நம்பிக்கையின் அடிப்படையிலான மருத்துவ முறைகளை ஏற்றுக் கொள்ள கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர்
-30-12-2011

--------------------------------------------------------------------------------


'தானே' புயலால் அவதியுற்று பல இன்னல்களுக்கு உள்ளாகியிருப்போரின் சிரமம் குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பவும் அனைவருக்கும் பிறக்கப் போகும் புததாண்டு சீரும் சிறப்புமாக அமையவும் அந்த ஏக இறையை பிரார்த்திக்கிறேன்.


12 comments:

Anonymous said...

காலத்தையும், பொருளையும், அறிவையும், தன்னம்பிக்கையையும் பலி வாங்கும் ஜோதிடத்தை ஒரு மக்கள் நல அரசு தடை செய்ய வேண்டாமா?

அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று வெறும் ஏட்டில் (அரசமைப்புச் சட்டத்தில்) எழுதி வைத்து விட்டால் மட்டும் போதுமா? அதனைச் செயல்படுத்த வேண்டாமா? அறிவியலுக்கு விரோதமானவற்றை வேரோடு வெட்டி எறிய வேண்டாமா?
ஆட்சியில் இருப்பவர்களே மூடநம்பிக்கைவாதிகளாகவும், மண்சோறு தின்பவர்களாகவும், யாகம் நடத்துபவர்களாகவும் இருந்தால் இவற்றை எதிர்பார்க்க முடியாதுதான்
------------------------------ "விடுதலை” தலையங்கம் 31-12-2011

suvanappiriyan said...

நாளை புத்தாண்டு பிறக்கிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போதும் வழக்கத்தைவிட அதிகமாக மது விற்பனை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது ரூ.200 கோடிக்கு மது விற்பனை என்ற இலக்கை டாஸ்மாக் நிர்ணயித்துள்ளது. அதாவது 31 மற்றும் 1ம் தேதிகளில் விற்பனை இலக்கு ரூ.200 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்காக எல்லா கடைகளிலும்
எல்லாவிதமான பிராண்ட் மது வகைகளும் கிடைக்கும் வகையில் அந்தந்த மாவட்ட குடோன்களில் இருந்து சரக்குகளை கொண்டு சென்று இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இரவோடு இரவாக லோடுகளை அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Dinakaran 31-12-2011

சார்வாகன் said...

ஸலாம்
[புத்தாண்டு வாழ்த்துகள்.இப்படி வாழ்த்து தெரிவிப்பது சரியில்லை என்றால் வாழ்த்து உங்கள் தளம் படிக்கும் வாழ்த்துகளை ஏற்றுக் கொள்வோருக்கு ]

மந்திரம் மாந்திரீகம் என்ற பெயரில் யாரும் யாருக்கு கெடுதல் செய்ய முடியாது என்று கருத்திட்டீர்கள்.நன்று.

1.சவுதியில் ஒரு மாந்திரீகம் செய்வதாக ஒரு பெண்ணுக்கு தலை வெட்டப் பட்டது என்பது அப்படி செய்ய முடியும் என சவுதி அரசு நம்புவதை காட்டுகிறதா?

2.இப்படி எதுவும் செய்ய முடியாது என்றாலும் மூட நம்பிக்கை மக்களிடம் பரப்புவதால்தான் தண்டனை அளிக்கப் பட்டதா?

3.முடிந்தால் இத்தண்டனை குறித்த சவுதி அரசு சட்ட வரையறை குறித்த சுட்டி அளிக்க இயலுமா?

4.சவுதி அரசு மதத்திற்கு ஒவ்வாத செயலை செய்ததால் இப்படி தண்டனை அளித்தது என்று பொதுவாக எடுத்தால் இதே போல் பிற மதத்தவரும் செய்ய ஆரம்பித்தால் என்ன ஆகும்?

ஒரு குழுவின் நம்பிக்கை பிற குழுவிற்கு மூட நம்பிக்கையாக தோன்றுவது வியப்பில்லை.

அப்பெண்ணுக்கு தேவை மனோ தத்துவ சிகிச்சை மட்டுமே.மரண தண்டனை அல்ல.


இம்மாதிரி மனித விரோத தண்டனை சட்டங்கள்தான் சவுதி&நடவ்டிக்கைகளை விமர்சிக்க ஏதுவாகிறது.
நன்றி

suvanappiriyan said...

சலாம் சகோ சார்வாகன்!

//[புத்தாண்டு வாழ்த்துகள்.இப்படி வாழ்த்து தெரிவிப்பது சரியில்லை என்றால் வாழ்த்து உங்கள் தளம் படிக்கும் வாழ்த்துகளை ஏற்றுக் கொள்வோருக்கு ]//

36:40. சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.

20:130. ஆகவே (நபியே!) அவர்கள் சொல்வதை(யெல்லாம்) நீர் பொறுத்துக் கொள்வீராக; இன்னும் சூரியன் உதிப்பதற்கு முன்னும், அது அடைவதற்கு முன்னும், இரவின் நேரங்களிலும் உம்முடைய இறைவனின் புகழைத் துதித்துத் தொழுவீராக; மேலும் இன்னும் பகலின் (இரு) முனைகளிலும் இவ்வாறே துதி செய்து தொழுவீராக; இதனால் (நன்மைகளடைந்து) நீர் திருப்தி பெறலாம்.

சூரியனும் சந்திரனும் மனிதர்கள் காலத்தை அறிந்து கொள்வதற்காக படைக்கப் பட்டதாக பல இடங்களில் இறைவன் கூறுகிறான். எனவே சூரிய ஆண்டோ சந்திர ஆண்டோ பிறக்கும் போது வாழ்த்து சொல்லிக் கொள்வதில் தவறிருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால் அந்த வாழ்த்தோடு சேர்த்து வணக்கங்களும் சேர்ந்து கொண்டால் அதைத்தான் இஸ்லாம் தடுக்கிறது. ஒருவரையொருவர் 'நன்றாக இருங்கள்' என்று வாழ்த்திக் கொளவதில் எந்த தவறும் இல்லை.

1.சவுதியில் ஒரு மாந்திரீகம் செய்வதாக ஒரு பெண்ணுக்கு தலை வெட்டப் பட்டது என்பது அப்படி செய்ய முடியும் என சவுதி அரசு நம்புவதை காட்டுகிறதா?
இல்லை. இது போன்ற தவறை தொடர்ந்து அனுமதித்தால் பல குடும்பங்களில் சிக்கல்கள் சந்தேகத்தால் தோற்றுவிக்கப்படும். இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்ற நோக்கிலேயே செய்யப்படுகிறது.

2.இப்படி எதுவும் செய்ய முடியாது என்றாலும் மூட நம்பிக்கை மக்களிடம் பரப்புவதால்தான் தண்டனை அளிக்கப் பட்டதா?

அதோடு அந்த பெண் வேறு ஏதும் குற்றங்கள் செய்திருந்தாரா என்பது தெரியவில்லை. மாலை மலரின் செய்தியின் அடிப்படையிலேயே அந்த செய்தியை வெளியிட்டேன்.

3.முடிந்தால் இத்தண்டனை குறித்த சவுதி அரசு சட்ட வரையறை குறித்த சுட்டி அளிக்க இயலுமா?

கிடைத்தால் பகிருகிறேன்.

4.சவுதி அரசு மதத்திற்கு ஒவ்வாத செயலை செய்ததால் இப்படி தண்டனை அளித்தது என்று பொதுவாக எடுத்தால் இதே போல் பிற மதத்தவரும் செய்ய ஆரம்பித்தால் என்ன ஆகும்?

அந்த பெண்ணும் இஸ்லாமிய மதத்தை சார்ந்தவர். எனவே இஸ்லாமிய ஷரியாவின் படி தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஏனெனில் சூன்யம் என்பது இறைவனால் மாத்திரமே செய்ய முடிகிற ஒரு காரியத்தை தன்னாலும் செய்ய முடியும் என்று பாமர மக்களை ஏமாற்றுவது மிகக் கடுமையான குற்றமாக இஸ்லாம் கருதுகிறது.

//அப்பெண்ணுக்கு தேவை மனோ தத்துவ சிகிச்சை மட்டுமே.மரண தண்டனை அல்ல.//

நம் ஊரில் எத்தனை பேருக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தியிருக்கோம். மக்களை ஏமாற்றி பணம் பறிப்பவர்களுக்கு மனநல பயிற்சி கொடுத்து நம் வழிக்கு கொண்டு வர முடியுமா?

நித்தியானந்தாவை எடுத்துக் கொள்ளுங்கள். கையும் களவுமாக பிடிபட்டும் இன்றும் ஒரு பெரும் கூட்டத்துக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறாரே! இது போன்று கொலை கேசிலும் மாட்டி பெண்களிடம் தவறாகவும் நடந்து கொண்டவர்கள் இன்றும் அருளாசி கொடுத்துக் கொண்டுதானே உள்ளனர். இது போன்ற ஒரு ஏமாற்று வேலை படிக்காத பாமர முஸ்லிமிடம் கூட செல்லுபடியாகுமா? என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்.

எந்த தவறு செய்தாலும் சட்டத்தின் ஓட்டையிலிருந்து தப்பித்து வந்து விடலாம் என்ற தைரியம்தான் இன்றும் சிரித்துக் கொண்டே பத்திரிக்கைகளுக்கு போஸ் கொடுக்க நித்தியானந்தாவால் முடிகிறது.

Anonymous said...

http://criticalppp.com/archives/78538

mubarak kuwait said...

பர்மாவில் நடக்கும் முஸ்லிம் படுகொலைகளை பற்றி ஒரு பதிவு எழுதும்படி அன்புடன் கேட்டுகொள்கிறேன், அங்கே நடக்கும் முஸ்லிம் படுகொலைகளை பற்றி எந்த ஊடகமும் வாய் திறக்கவில்லை

mubarak kuwait said...

பர்மாவில் நடக்கும் முஸ்லிம் படுகொலைகளை பற்றி ஒரு பதிவு எழுதும்படி அன்புடன் கேட்டுகொள்கிறேன், அங்கே நடக்கும் முஸ்லிம் படுகொலைகளை பற்றி எந்த ஊடகமும் வாய் திறக்கவில்லை

indrayavanam.blogspot.com said...

வித்தியாசமான பதிவுகளை எழுதி கலக்கும் நண்பரே,வாழ்த்துக்கள் இன்றையவானம் அ.தமிழ்ச்செல்வன்

Unknown said...

அருமை சகோ நீங்களும் எங்கபக்கம் வந்து போகலாமே

அருள் said...

இளம்பெண் வலைப்பதிவர் சுடப்பட்டமைக்கு இஸ்லாம் காரணமா?

http://arulgreen.blogspot.com/2012/10/malala-yousafzai-islam.html

kk said...

.சவுதியில் ஒரு மாந்திரீகம் செய்வதாக ஒரு பெண்ணுக்கு தலை வெட்டப் பட்டது என்பது அப்படி செய்ய முடியும் என சவுதி அரசு நம்புவதை காட்டுகிறதா?
இல்லை. இது போன்ற தவறை தொடர்ந்து அனுமதித்தால் பல குடும்பங்களில் சிக்கல்கள் சந்தேகத்தால் தோற்றுவிக்கப்படும். இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்ற நோக்கிலேயே செய்யப்படுகிறது.


அப்படி என்றால் அக்கொலையை நீங்கள் ஆதரிக்கின்றீர்கள் அப்படித்தானே?

A.Anburaj Anantha said...

பர்மாவில் நடக்கும் முஸ்லிம் படுகொலைகளை பற்றி ஒரு பதிவு எழுதும்படி அன்புடன் கேட்டுகொள்கிறேன், அங்கே நடக்கும் முஸ்லிம் படுகொலைகளை பற்றி எந்த ஊடகமும் வாய் திறக்கவில்லை
என்று முபாரக் கேள்வி எழுப்புகின்றாா்.
ஈராக் சிாியாவில் எஸ்டி என்ற சிறுபான்மை முஸ்லீம் அல்லாத இன மக்கள் இசுலாமிய இயக்கத்தவா்களின் கொடுமைக்கும் படுகொலைக்கு அளாகி அவதிப்பட்டு வருகின்றாா்களே அது குறித்தும் எழுதக் கேளுங்கள் முபாரக் அவா்களே

குரான் சொல்லியபடி அப்பாவி எஸ்டி பெண்களை பலவந்தமாக கைபற்றி செக்ஸஅடிமைகளாக வைத்திருக்கும் கொடுமைகள் குறித்தும் எழுதலாம்
பங“கதாதேஷயில் இந்துக்கள் படும் அவலங்கள் குறித்தும் எழுதலாம்
பாக்கிஸ்தானில் சிறுபான்மை இந்து கிறிஸ்தவ சீக்கியா்களின் வா