'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Friday, December 23, 2011
ஆட்டத்தை நிறுத்தினால் என்ன குடியா மூழ்கிவிடும்?
'ஃப்ளாஸ் மோப்' என்று கூறி ஆட்டமாம் பாட்டாம்
அதுவும் கல்கத்தாவிலாம்!
இவர்கள் போடும் ஆட்டத்தில் வீழ்வது
இந்த இளைஞர்கள் மட்டும் அல்ல
நம் நாட்டு கலாச்சாரமும்தான்! அதோடு
பாதிக்கப்பட்ட மக்களின் உள்ளமும்தான்!
ஒருவாரம் முன்புதான் இங்கு கள்ளசாராயத்தால் வீழ்ந்த
உயிர்கள் இருநூறுக்கு மேல்!
இரு வாரம் முன்பு மருத்துவமனையின் அலட்சியத்தால் வீழ்ந்த
உயிர்கள் நூற்றுக்கு மேல்!
அந்த மக்களை இழந்த சொந்தங்களின் வாழ்வோ விடிகிறது
தினமும் கண்ணீரில்!
அந்த மக்களின் சொந்தங்களைப் பார்த்து நாலு ஆறுதல்
வார்த்தைகள் கூட கூற வேண்டாம்!
அந்த மக்களின் இழப்புக்கு நஷ்ட ஈடு கேட்டு அரசிடம்
போராடக் கூட வேண்டாம்!
இது போன்ற கூத்துக்களை சற்றைக்காவது நிறுத்தினால் என்ன?
குடியா மூழ்கி விடும்!
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
super falsh mob dance.You have done a great job by making it popular .Thanks for sharing.keep it up.Next u share katrina kaif's agnee path dance.
அனானி!
நடக்கும் தவறை சுட்டிக் காட்டுவதே பதிவின் நோக்கம். இந்த நடனத்தில் ஆபாசமோ ஆடை குறைப்போ நடந்திருந்தால் இதை வெளியிட்டிருக்க மாட்டேன். இவ்வளவு சோகங்கள் சமீபத்தில் நடந்திருக்க எப்படி இவர்களால் சந்தோஷமாக ஆட முடிகிறது என்பதை எடுத்துக் காட்டுவதே எனது நோக்கம்.
இதையும் இந்த ஆட்டத்துக்கு பாபுலாரிட்டி என்று எடுத்துக் கொள்வது உங்களின் சிறுமையையே காட்டுகிறது.
//….However, the hunger strikes will mark this year’s Christmas in the towns and villages in the 50-km stretch between Mullaperiyar and Idukki that might get obliterated if the old dam breaks. Reports indicate that a minimum of 50 centres on this stretch will witness fasts on the Christmas day apart from those in other parts of the State…..//
http://dailypioneer.com/nation/30026-no-christmas-celebrations-for-keralas-dam-hit-.html
இது தான் கேரளா! இதுதான் இவர்களின் வெற்றியின் ரகசியம்.
அது அவர்கள் இஷ்டம்!இது இசுலாமிய சர்வாதிகார நாடில்லை!ஜனநாயகக நாடு!உங்களின் கருத்துக்கும் பப்புக்குள் பொய் பெண்களை அடிக்கும் காவி கும்பலுக்கும் ஒரு வேறுபாடும் இல்லை!
பஃப்க்குள் சென்று பெண்களுக்கு அடிப்பது தவறென்றால் பஃப்க்கு சென்றதும் தவறுதான்.
இஸ்லாமியத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் முடிச்சுப்போடுவதற்கு இங்கே என்ன தேவை வந்துவிட்டது?பதிவில் ஜனநாயகத்தையோ சர்வாதிகாரத்தையோ பற்றிப்பேசவில்லையே?
மனிதாபிமானத்தையும் நம் பண்பாட்டையும் பற்றியல்லவா பேசப்பட்டிருக்கிறது?
இங்கு வந்து வீணாக இஸ்லாமின் மீது சர்வாதிகாரச் சேறு பூசவேண்டிய தேவை என்ன?
பஃப் க்குள் போய் பெண்களை அடிப்பது தவறென்றால்... பஃப்க்கு போவது மட்டும் பெரிய பண்பாடா?
ஜனநாயகத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
சரி,
ஜனநாயக நாட்டில் என்னவேண்டுமானாலும் செய்வோமென்றுவிட்டு பஃப்,க்ளப்,.. என்று ஆடிக்கொண்டு திரிகிறீர்களா? அதுதான் பண்பாடா?அதற்குப்பெயர்தான் ஜனநாயகமா? ஜனநாயகத்தைப்பற்றிப் பேசவேண்டிய தேவையே இல்லாத ஓரிடத்தில் வந்து வீண்பேச்சுப்பேசிக்கொண்டிருக்கிறீரே?
புதிய மதம் ஒன்றை உருவாக்குவது எப்படி?
//புதிய மதம் ஒன்றை உருவாக்குவது எப்படி?//
உலகில் இருக்கும் மதங்களினால் உண்டான வெட்டு குத்துகள் போதவில்லையா? மேலும் ஒரு மதமா வேண்டும்.
புராதன இந்து மார்க்கத்தை இந்து மதமாக்கியதால் சூத்திரனும் மேட்டுக்குடியும் மனிதர்களால் உண்டாக்கப்பட்டது. அதே போல் யூத கிறித்தவ மார்க்கங்கள் மதங்களாக பரிணமித்ததால் கத்தோலிக்க பிராட்டஸ்டன் உருவாகி இந்து மதத்தின் பிரிவாக மாறிவிட்டது. ஜொராஸ்ட்ரிய மார்க்கமும், புத்த மார்க்கமும் மதமாக பரிணமித்து இந்து மதத்தின் பிரிவுகளாக மாறி விட்டது. இஸலாமிய மார்க்கமும் ஒரு மதமாக மாற்றிய பொழுது ஷியா என்ற பிரிவு உண்டானது. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதால் இன்றளவும் இஸ்லாம் இறைவன் அருளியவாறே மார்க்கத்தை பின்பற்றக் கூடிய பெரும்பான்மையோர் வாழ்ந்து வருகின்றனர்.
அனைத்து மார்க்கங்களின் மூலர் ஒருவரே என்ற முடிவுக்கு வந்து விட்டால் பிரச்னைகள் தானாக அகன்று விடும். எனவே இனி புதிதான ஒரு மார்க்கத்துக்கோ மதத்துக்கோ அவசியம் இல்லை.
ஒன்றே குலம்: ஒருவனே தேவன்.
திரு கேதரன்!
//மனிதாபிமானத்தையும் நம் பண்பாட்டையும் பற்றியல்லவா பேசப்பட்டிருக்கிறது?
இங்கு வந்து வீணாக இஸ்லாமின் மீது சர்வாதிகாரச் சேறு பூசவேண்டிய தேவை என்ன?//
சிறந்த பதிலை தந்திருக்கிறீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
Post a Comment