'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Thursday, December 29, 2011
தூங்கியது நீ மட்டுமல்ல....
தூங்கியது நீ மட்டுமல்ல....
நமது எதிர்கால இந்தியாவும்தான்.
முடங்கியது நீ மட்டுமல்ல....
இளைஞர்களின் எதிர்கால கனவும்தான்.
வாங்கியது லஞ்சமுமல்ல....
ஏழைகளின் வியர்வை துளிகள்தான்.
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
நறுக்கென்று ஒரு அழகிய செய்தி கவிதையில்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
திரு கவிதை வீதி சுந்தர்!
//நறுக்கென்று ஒரு அழகிய செய்தி கவிதையில்..
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..//
உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புது ஆண்டிலாவது அரசு அலுவலகங்கள் உரிய கடமையை செய்ய முன் வரட்டும்.
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சகோதரர் சுவனப்பிரியன்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
மிக மிக அருமையான, நாலே வரிகளில் நச்சென ஒரு பதிவு...ஜசாக்கல்லாஹ் க்ஹைர்...
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
என்ன செய்ய?
வஅலைக்கும் சலாம்! சகோ ஆஷிக்!
//மிக மிக அருமையான, நாலே வரிகளில் நச்சென ஒரு பதிவு...ஜசாக்கல்லாஹ் க்ஹைர்...//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
திரு கருணாகரசு!
//என்ன செய்ய?//
லஞ்சம் அவர்கள் வாங்குவதில் நமக்கும் பங்குண்டு. நம்முடைய அவசரம். நமமுடைய பொய்யான தகவல். இது இரண்டை வைத்தே அவர்கள் நம்மை லஞ்சம் கேட்டு மிரட்டுகின்றனர். இனி ஒரு காலும் லஞ்சம் கொடுத்து காரியத்தை சாதித்துக் கொள்ள மாட்டேன் என்று முடிவெடுத்து விடடால் லஞசம் தானாக அகன்று விடும். இதுதான் நாம் செய்ய வேண்டியது.
//சுட்டியை சொடுக்கி படியுங்கள்//
வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி வாஞ்சூர் அண்ணன்!
அஸ்ஸலாமு அலைக்கும்,
கலக்கல் கவிதை!
ஆனால் விழித்துக்கொள்வார்களா?
வஅலைக்கும் சலாம் சகோ ஜபருல்லாஹ்!
//கலக்கல் கவிதை!
ஆனால் விழித்துக்கொள்வார்களா?//
நம்பிக்கையில்தானே வாழ்க்கை ஓடுகிறது. இதை படிக்கும் ஒன்றிரண்டு அரசு அலுவலர்களாவது திருந்தினால் நல்லது.
புது வருடத்தில் இருந்தாவது அவர்கள் தொடங்கட்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
உங்களுக்கு ஜீவனத்திற்காக என்று கொடுக்கப்படும் கூலிகளும் உங்கள் மீதுள்ள கருணையினால் என்று நினைத்து விடாதீர்கள். இந்த ஆகாரமும் இல்லாமல் மடிந்து போவீர்களேயானால் நாளைக்கு மேல் ஜாதிக்காரர்களுக்கும் முதலாளிமார்களுக்கும் வேலை செய்ய ஆள் இல்லாமல் போகுமே என்கின்ற சுயநல கருணை கொண்டுதான் மாடு வளர்க்கிறவன் தீனி போடாவிட்டால் பால் கறக்காதே. பாடுபடாதே என்று கருதி அதற்கு தீனிபோடுவது போல் உங்களுக்கும் ஜீவனத்திற்கும் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலை மாறவேண்டு மென்பதில் தான் உங்களுடைய முக்கிய வேலையாக இருக்க வேண்டுமே யொழிய சும்மா பறையர் பட்டம் போனால் போதும், கிறாதியை எடுத்து விட்டால் போதும், கோயிலுக்குள் நுழைய விட்டால் போதும் என்றெல்லாம் கருதுவதில் பிரயோசனமில்லை.
- பெரியார், ['குடிஅரசு' - 07.05.1933]
Post a Comment