Followers

Saturday, December 17, 2011

கும்பகோணததில் ஆரிய திராவிடம்....

ஒரு வேலையாக கும்பகோணம் சென்று செல்வம் தியேட்டர் ஸ்டாப்பில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். வந்த வேலை சீக்கிரமே முடிந்தது. சரி ஊருக்கு செல்லலாம் என்று பஸ் ஏற வந்தால் 'நித்யஸ்ரீ பாடுகிறார்' என்ற ஒரு போர்டை பார்த்தேன். உள்ளே கச்சேரியும் ஆரம்பமாகி இருந்தது. 'கண்ணோடு காண்பதெல்லாம்....' 'சௌக்கியமா?...' பாடல்களை எல்லாம் கேட்டதால் நாமும் சென்று கேட்போமே என்று அரங்கத்தினுள் சென்றேன். இலவசம் என்று நினைத்தேன். ஆனால் 100 ரூபாய் டிக்கெட்டை என்னிடம் கட்டி விட்டார்கள். வேறு வழி இல்லாமல் உள்ளே சென்று உட்கார்ந்தேன்.



நித்யஸ்ரீ தெலுங்கு கீர்த்தனைகள் சிலவற்றை மிகவும் சுவாரஸ்யமாக பாடிக் கொண்டிருந்தார். அந்த அரங்கத்தில் இருந்த அனைவருமே ரொம்பவும் ரகித்து பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தனர். 'தலையை ஆட்டும் புரியாத கூட்டம்...' என்ற வைரமுத்துவின் வரிகள்தான் எனக்கு ஞாபகம் வந்தது. அங்கு அமர்ந்திருந்த ரசிக கூட்டததை ஒரு தரம் நோட்டம் விட்டேன். எங்கும் மடிசார் மாமிகள் குடும்ப சகிதம் வந்திருந்தனர். அரஙகு நிரம்பி இருந்தது. அந்த கூட்டத்தில் நான் ஒருவன் மட்டுமே முஸ்லிம் என்று நினைக்கிறேன். போய் விடலாமா என்று எழுந்தபோது 100 ரூபாய் ஞாபகம் வரவே இரண்டு மூன்று பாடல்களை கேட்டு விட்டு செல்வோம் என்று திரும்பவும் உட்கார்ந்து விட்டேன். பிராமண குடும்பங்களை தவிர வேறு யாரும் அங்கு இல்லை என்பதையும் பிறகு தெரிந்து கொண்டேன்.

அங்கு நான் அமர்ந்திருந்த சூழல் என்னை அது தமிழகம் என்றே நினைக்கச் சொல்லவில்லை. அந்த அளவு உடை நிறம் பேச்சு ஜாடை என்று அனைத்திலுமே வேறுபட்ட கோணத்தையே பார்த்தேன். அங்கொன்றும் இங்கொன்றும் ஒரு சிலரை பார்ப்பதற்கும் ஒட்டு மொத்தமாக சில ஆயிரம் பேர்களை ஓரிடத்தில் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா?

ஏன் இத்தனை காலம் ஆகியும் ஆரிய திராவிட பிரச்னை ஓயவில்லை என்பதை அங்கு கண்டு கொண்டேன். ஆரியர்கள் வெளி நாட்டிலிருந்து தமிழகம் வந்து 2000 வருடங்களுக்கு மேலாகியும் உள்ளூர் மக்களோடு திருமண உறவு வைத்துக் கொள்ளாததனால் ஒரே மதத்தைப் பின் பற்றும் இவர்களிடையே இன்று வரை பிளவு இருந்தே வருகிறது. அன்னிய மதம் என்று இவர்களால் சொல்லப்படும் இஸ்லாமியர்கள் இந்த திராவிடர்களோடு பெண் கொடுத்து பெண் எடுத்து இந்த மண்ணின் மைந்தர்களாக மாறி விட்டனர். இந்த தமிழகம் இஸ்லாத்தையும் தனது மார்க்கமாக சுவீகரித்துக் கொண்டது. இன்று வரை யாரும் இஸ்லாமியர்களைப் பார்த்து'நீ அந்நிய தேசத்துக் காரன்' என்று சொன்னதில்லை. இநதுத்வாவாதிகள் கூட 'முஸ்லிம்களை தாய் மதம் திரும்ப வைக்க வேண்டும்' என்ற கோரிக்கையைத்தான் வைக்கிறார்கள். இவர்களும் முஸ்லிம்களை அந்நியர்கள் என்று பார்ப்பதில்லை.

ஆனால் ஆரியர்களை 3000 வருடங்கள் கடந்த பின்பும் ஒரே மதத்தைப் பின்பற்றியும், ஒரே மொழியையும் பேசும் திராவிடர்கள் இன்றும் இவர்களை அந்நியப் படுத்தியே பேசுகின்றனர். இதற்கு ஆரியர்கள் தங்களை மேன்மக்களாக கருதியதும், திராவிடர்களை தீண்டத்தகாதவர்களாக ஆக்கியதும் காரணமாக இருக்கலாம்.

என்னோடு அலுவலகத்தில் ஒன்றாக வேலை செயயும் எகிப்தியரை சில நேரங்களில் நோட்டம் விடுவது உண்டு. தாங்களே சிறந்த அறிவாளி என்றும் மிகச் சிறந்த நாகரிகத்துக்கு சொந்தக்காரர்கள் என்றும் அவ்வப்போது சொல்லிக் கொள்வான். இவர்கள் இஸரவேலர்களின் வழிவந்தவர்கள்.

'இஸராயீலின் மக்களே! உங்களுக்கு நான் வழங்கிய அருட்கொடையையும் உலக மக்கள் அனைவரையும் விட உங்களை நான் மேன்மைபடுத்தியிருந்ததையும் எணணிப் பாருங்கள்.'
-குர்ஆன் 2:47

இஸ்ரவேலர்களுக்கு வழங்கிய ஆட்சி, அதிகாரம், பொருள் வசதி போன்ற சிறப்புகளையே இறைவன் இங்கு குறிப்பிடுகிறான். ஆனால் இவர்களோ பிறப்பிலேயே தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்று பின்னாளில் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள. இந்த எண்ணம் இன்றைய நம் நாட்டு பிராமணர்களிடமும் இருந்து வருவதை இன்றும் நாம் காணலாம். எகிப்தியர்களின் நடை உடை பாவனை அனைத்தும் நம் நாட்டு பிராமணர்களை ஒத்தே இருக்கும். யூதர்களின் ஒரு பிரிவே ஆரியர்கள் என்றும் அதில் ஒரு பிரிவே நம் நாட்டு பிராமணர்கள என்றும் ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. இன்று வரை இந்துத்வாவாதிகள் இஸ்ரேலோடு நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதையும் நான் இங்கு பார்க்கலாம்.

ஆரியர்களின் வருகைக்கு முன்பு நமது தமிழகத்தில் ஏக இறைவனையே வணங்கி வந்திருக்கின்றனர். சில கிராமங்களில் 'ஒப்பிலியப்பன்' என்று இறைவனை அழைக்கும் பழக்கம் இன்றும் உள்ளது. ஒப்புவமை இல்லாதவன் இறைவன் என்ற சொல்லே ஒப்பிலியப்பனாக மருவியுள்ளது. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற திருமூலர் மந்திரமும் ஏக இறைவனை பறைசாற்றுகிறது. சிவன் என்பதும் ஓரிறையே குறிப்பதாகவும் ஆரியர் வருகைக்கு பிறகே சிவனுக்கு உருவமும் சிவலிங்கமும் உண்டானதாக படிக்கிறோம். உருவம், அருவம், அருவுருவம் என்று நம் முன்னோர்கள் இறைவனை பலவாறாக உருவகப்படுத்தியிருந்திருக்கின்றனர்.

அடுத்து நெருப்பை கடவுளாக வணங்கும் பழக்கமும் தமிழர்களாகிய நமது முன்னோர்களிடம் இல்லை. ரிக் வேதத்தில் 'அக்னி' என்ற கடவுள் பல இடங்களில் கூறப்படுகிறது. இப்படி நெருப்பை வணங்குபவர்கள் ஈரானிலும், ஆர்மீனியாவிலும் அதை ஒட்டிய பகுதிகளிலும் இருந்ததாக அகழ்வாராய்ச்சிகள் கூறுகின்றன. ஆரியர்களின் பூர்வீகம் இந்த நாடுகளாக இருந்திருக்கலாம்.




ரஷ்யாவில் பனி படர்ந்த தெற்கு சைபீரிய பகுதியில் 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆரிய நகரம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கஜகிஸ்தான் எல்லையை ஒட்டிய இந்தப் பகுதியில் இந்த நகரம் ஆரிய இனத்தினரால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. ஐரோப்பாவில் மேற் கத்திய நாகரிகப் பரவலின் ஆரம்ப காலத்தில் இந்த நகரம் உருவாகியிருக்கலாம் என்று தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

எகிப்தில் பிரமிடுகள் கட்டப்பட்ட காலத்துக்கு சற்று பிந்தைய கால கட்டத்தில் இந்த நகரம் உருவாகியிருக்கலாம். பி. பி. சி. தொலைக்காட்சியில் தொடரை வழங்கி வரும் பெத்தனி இது குறித்துக் கூறுகையில், இந்த நாகரிகம் கிரேக்க நாகரிகத்துக்கு போட்டியானதாக இருந்திருக்கலாம். இந்த நகரில் மட்டும் சுமார் 2,000 பேர் வரை வசித்திருக்கலாம் என்றார். இந்த நகர கண்டு பிடிப்பு குறித்து பெத்தனி கூறுகையில், பண்டைய பல இந்திய வேதங்களிலும் குதிரைகளைப் பலி கொடுப்பது குறித்தும், இறந்த தலைவனின் உடலுடன் அவனது குதிரையும் கொன்று புதைக்கப்பட்ட விவரங்களும் உள்ளன. இங்கு கிடைத்துள்ள ஆதாரங்களுக்கும் அந்த வேதங்களுக்கும் அதிக ஒற்றுமை உள்ளது என்றார். இவர் லண்டனின் கிங்க்ஸ் கல்லூரியில் வரலாற்றுத்துறை ‘விசிட்டிங்’ பேராசிரியையாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



பிராமண குடும்பத்தோடு எனக்கு சின்ன வயதிலிருந்தே தொடர்பு உண்டு. எனது தாத்தாவின் நண்பர் ஓய்வு பெற்ற பிராமண ஆசிரியர். எனக்கு டியுசன் எடுக்க அந்த ஆசிரியர் ஒத்துக் கொண்டார். தினமும் 5 மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை அந்த ஆசிரியரின் வீட்டில்தான் எனக்கு பாடம். இது கிட்ட்ததட்ட நான் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்பு படிக்கும் வரை தொடர்ந்தது. அந்த ஆசிரியரின் மனைவிக்கு மூன்று பெண் குழந்தைகள். ஆண் குழந்தை கிடையாது. எனவே என்னிடம் அவர் மிகவும் பாசமாக நடந்து கொள்வார். வீட்டில் செய்யும் பலகாரங்கள் எல்லாம் எனக்கும் வந்து விடும். எனது தாத்தா கொடுக்கும் டியூஷன் பீஸை ஓசியில் பலகாரங்கள் தின்றே சரி கட்டியிருப்பேன் என்று நினைக்கிறேன்.

நவராத்திரி அன்று அவர்கள் வீட்டில் கொலு வைப்பார்கள். என் வயதையொத்த எனது ஆசிரியரின் இளைய மகளும் நானும் சேர்ந்து கொலு பொம்மைகளை எல்லாம் துடைத்து அழகாக அடுக்கி வைப்போம். கொலுவுக்கு வரும் அவரது உறவினர்கள் என்னிடம் 'அம்பி உன் பேர் என்னப்பா?' என்று கேட்பர். இஸ்லாமிய பெயரை கேட்டவுடன் முகத்தை சுளித்துக் கொண்டு போன ஒரு சில மாமிகளும் உண்டு. கொலுவில் உள்ள ஒரு பொம்மை அழகாக தோன்றவே ஒன்றை ஆசிரியரிடம் கேட்டேன். அவரும் தந்தார். எனது வீட்டிற்கு சென்று எனது தாயாரிடம் பெருமையாக அதைக் காண்பித்தேன். உடன் எனது தாயின் முகம் சிவந்தது. 'இது போன்ற பொம்மைகளை எல்லாம் நாம் வைத்துக் கொள்ளக் கூடாது. அவர்களிடமே திரும்ப கொடுத்து விடு' என்று கண்டிப்புடன் கூறி விட்டார். அந்த வயதில் 'ஏன் இவ்வளவு கோபப்பட்டார்' என்ற விபரம் எனக்கு அப்போது விளங்கவில்லை.

சரி..இனி அரங்குக்கு வருவோம். புரியாத பாஷையில் பாடிக் கொண்டிருக்கிறாரே என்று எழும்ப எத்தணித்தபோது தமிழ் பாடல்களை பாடத் துவங்கினார் நித்யஸ்ரீ. திரும்பவும் உட்கார்ந்தேன். சில பாடல்களை கேட்டு விட்டு நேரமானதால் அரங்கை விட்டு திரும்பவும் தமிழ் நாட்டுக்குள் நுழைந்தேன். :-)




34 comments:

Anonymous said...

உங்கள் மதம் வரைக்கும் எழுது!அடுத்தவன் மதத்தை பற்றி எழுத உனக்கு உரிமையில்லை!இது அனாகரீர்கம் இல்லையா?உங்கள் மதத்தை எவனாவது விமர்சாம் பண்ணா அவனி அடிப்பது!ஆனால் நீங்கள் அடுத்தவன் மதத்தை விமர்சனம் பனலாமா?மிகவும் எண்கள் மனம் வேதனை படுகிறது!அடுத்தவன் மனத்தை புன்படுத்துவோர் எத்தகைய மனிதர்கள்?

Anonymous said...

தன மதத்தை பற்றி ஒழுங்கா தெரியாவனே அடுத்த மதத்தை இழிவு செய்வான்!அதைதன் நீயும் செய்யுற!

Anonymous said...

திராவிடம் என்பதே ஓர் மாயை!இப்போ கேரளா காரனும் ட்ராவிடந்தான் தமிழனும் ட்ராவிடன்ர்தான்!ஆக எந்த திராவிடனை உயர்த்த பெரியார் சொறியார் பாடுபர்றான்?

Anonymous said...

ஆரிய திராவிடம் என்பது கட்டுக்கதை என்று நிரூபிக்கப் பட்டு பல நாள்களாகி விட்டது.இந்தியர் அனைவரும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள்.இனியும் இந்து சமுதாயத்தை பிரித்தாளும் சூழ்ச்சி இனி நடக்காது. வெள்ளையன் கட்டி விட்ட கதைகள் வெளுத்து விட்டது.ஆரிய திராவிடம் என்பது பொய் என்பதற்கு இங்கே உள்ள கட்டுரைகளை படித்தாவது தெரிந்து கொள்ளுங்கள.
http://www.hinduwisdom.info/Articles3.htm
http://www.dnaindia.com/india/report_new-research-debunks-aryan-invasion-theory_1623744
http://www.stephen-knapp.com/death_of_the_aryan_invasion_theory.htm

tamilan

suvanappiriyan said...

அனானி!

//ஆனால் நீங்கள் அடுத்தவன் மதத்தை விமர்சனம் பனலாமா?மிகவும் எண்கள் மனம் வேதனை படுகிறது!//

இதை விட அதிகமாக இஸ்லாத்தை பற்றி இதே இணையத்தில் பதிவுகள் வந்துள்ளன. நானாவது நமது வரலாறு சொல்வதை பதிவிட்டிருக்கிறேன். ஆனால் இஸ்லாத்தைப் பற்றி தவறான தகவல்கள் பல அதற்கு முன் பரப்பப் பட்டுள்ளது. அபபோது அதற்கு நாங்கள் நாகரிகமான முறையில் பதில் கொடுத்தோமா இல்லையா? அதே போல் இதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். ஆரியர்கள் இந்தியர்கள்தான் என்பதற்கு நீங்கள் ஆதாரத்தை வேதத்திலிருந்தோ தொல்பொருள் ஆய்விலிருந்தோ கிடைத்தால் தெரிவியுஙகள். அதை வெளியிட்டு விடுகிறேன்.

//அடுத்தவன் மனத்தை புன்படுத்துவோர் எத்தகைய மனிதர்கள்?//

இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் நானும் எனது முதாதையர்களும் இதே இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள்தானே! எனது பூர்வீக மதத்தைப் பற்றி நான் ஆராயக் கூடாதா? இதில் புண்படுத்துதல் எங்கிருந்து வருகிறது?

suvanappiriyan said...

அனானி!

//வெள்ளையன் கட்டி விட்ட கதைகள் வெளுத்து விட்டது.//

வெள்ளையன் பொய்களை சொல்ல என்ன அவசியம் வந்தது? இதில் அவனுக்கு என்ன லாபம்.

கொடுக்கும் ஆதாரங்கள் அனைத்தும் இந்து மத வேதங்களிலிருந்தே! தொல்பொருள் ஆய்வுகளும் ஆரிய நாகரிகத்தை விவரிக்கிறதா இல்லையா? அதோடு நம் ஊர் பிராமணர்களுக்கும் மற்ற சாதி இந்துக்களுக்கும் மொழியில் நிறத்தில் முக சாடையில் வித்தியாசம் இருக்கிறதா இல்லையா? இதைத்தானே ஆய்வுகளும் சொல்கிறது?

king of kumari said...

//வேறொரு ஹதீதில் மறுமையில் பலரது முன்னிலையில் ஒரு மனிதனைப் பார்த்து இறைவன் 'நான் பசியோடு உன் வீட்டிற்கு வந்த போது நீ எனக்கு உணவு தரவில்லையே' என்று கேட்பானாம். அதற்கு அந்த மனிதன் 'இறைவா! நீயோ உலகையே கட்டி ஆள்பவன். உனக்கு பசியா?' என்று ஆச்சரியம் பொங்க அந்த மனிதன் கேட்பானாம். அதற்கு இறைவன் 'இந்த நாளில் இந்த நேரத்தில் ஒரு ஏழை உன் வீட்டின் படியேறி உன்னிடம் உணவு கேட்கவில்லையா? நீ தர மறுத்தாயல்லவா?' என்று கேட்பானாம். அப்பொழுதுதான் அந்த மனிதனுக்கு தான் செய்த தவறு ஞாபகத்தக்கு வரும். இது புகாரியில் வரக் கூடிய மிகப் பெரிய ஹதீது.//

நூல்: ஹதீஸ் முஸ்லிம் 5021
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்), ஆதமின் மகனே! நான் நோயுற்றிருந்த போது என்னை உடல் நலம் விசாரிக்க நீ வரவில்லையே (ஏன்)? என்று கேட்பான். அதற்கு மனிதன், என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல் நலம் விசாரிப்பேன்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், உனக்குத் தெரியுமா? என் அடியானான இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்த போது அவனிடம் சென்று நீ நலம்விசாரிக்கவில்லை. தெரிந்து கொள்! அவனை உடல் நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய் என்று கூறுவான்.

மேலும் அல்லாஹ், ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால், நீ எனக்கு உணவளிக்கவில்லை என்பான். அதற்கு மனிதன், என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், உனக்குத்தெரியுமா? உன்னிடம் என் அடியானான இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால், அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்து கொள்! அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய் என்று கூறுவான்.

மேலும் ஆதமின் மகனே! நான் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டேன். ஆனால், எனக்கு நீ தண்ணீர் தரவில்லை என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு மனிதன், என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், என் அடியானான இன்ன மனிதன் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். ஆனால், அவனுக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை. தெரிந்து கொள்! அவனுக்குக் குடிப்பதற்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய் என்று கூறுவான்.

நூல் : பைபிள்
மத்தேயு : அதிகாரம் 25
31 ' வானதூதர் அனைவரும் புடை சூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார்

.41 பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ' சபிக்கப் பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள்.42 ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை.43 நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை ' என்பார்.44 அதற்கு அவர்கள், ' ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்? ' எனக் கேட்பார்கள்.45 அப்பொழுது அவர், ' மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' எனப் பதிலளிப்பார்

திரு சுவனப்ரியன் அவர்களே, கீழே சொன்ன பைபிள் வசனத்திற்கும், மேலே உள்ள ஹதீசிற்கும் என்ன வேறுபாடு. ஒரே கடவுளின் வார்த்தை என்பதால் ஒற்றுமை இருக்கலாம் என்று நீங்கள் சொன்னால், இது குரான் வசனம் அல்ல ஹதீஸ் வசனம், முகமது அவர்கள் இந்த ஹதீஸை கூறுகிறார். வார்த்தைகளில் தான் சிறிது வேற்றுமை இருக்கிறதே தவிர, கருத்து எல்லாம் ஒன்றுதான். குரான் வசனத்தில் ஒற்றுமை இருக்கலாம் ஹதீஸிலும் ஒற்றுமை இருக்குமா

suvanappiriyan said...

கிங் ஆப் குமரி!

//வார்த்தைகளில் தான் சிறிது வேற்றுமை இருக்கிறதே தவிர, கருத்து எல்லாம் ஒன்றுதான். குரான் வசனத்தில் ஒற்றுமை இருக்கலாம் ஹதீஸிலும் ஒற்றுமை இருக்குமா//

'அவன்(இறைவன்) மறைவானதை அறிபவன். தனது மறைவான விஷயங்களை அவன் பொருந்திக் கொண்ட தூதரைத் தவிர யாருக்கும் வெளிப்படுத்த மாட்டான்.'
-குர்ஆன் 72:26

இந்த வசனத்தில் குர்ஆன் அல்லாத மறைவான விஷயங்களை தனது தூதருக்கு வெளிப்படுத்திக் காட்டுவதாக இறைவன் கூறுகிறான். இது ஏசு நாதருக்கும் பொருந்தும். சொர்க்கம் நரகம் அங்கு நடக்கும் விசாரணை அனைத்தையும் கனவிலோ அல்லது வேறு எந்த வகையிலோ தூதருக்கு இறைவனால் காட்டப்படும். அதைத்தான் முகமது நபி தனது தோழர்களுக்கு அறிவுரையாக வழங்குகிறார். நீங்கள் சொன்னவுடன்தான் பைபிளில் இப்படி ஒரு வசனம் இருப்பதே எனக்குத் தெரியும். குர்ஆனில் இல்லாத பைபிளில் மட்டும் இருக்கக் கூடிய ஒரு வசனத்தை எழுதப் படிக்கத் தெரியாத முகமது நபியால் எவ்வாறு சொல்ல முடிந்தது?

நீங்கள் குறிப்பிடும் இந்த நிகழ்வு முகமது நபி இறைத் தூதர்தான் என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது.

இறைச் செய்தி வரும்போது உடனுக்குடன் முகமது நபியின் தோழர்கள் தோல்களிலோ எலும்புகளிலோ குறித்து வைத்துக் கொள்வார்கள். தன்னுடைய பேச்சையும் குர்ஆன் வசனங்களையும் ஒன்றாக்கக் கூடாது என்று தனது தோழர்களுக்கு கட்டளையையும் முகமது நபி இட்டிருந்தார். ஏனெனில் இதற்கு முன்னால் வந்த வேதங்களில் தூதர்களின் உபதேசமும் பின் பற்றியவர்களின் விளக்கவுரையும் சேர்ந்ததினால் வந்த குழப்பத்தை நேரிடையாக பார்த்ததினாலேயே இத்தகைய கட்டுப்பாடுகளை முகமது நபி விதித்தார். அது இன்று வரை கடைபிடிக்கப்படுகிறது.

suvanappiriyan said...

தமிழ்நாட்டில் தலித்களின் இன்றைய நிலையை இந்த பதிவில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.

சார்வாகன் said...

ஸலாம் நண்பர் சுவனப்பிரியன்
இந்த வாக்கியத்தில் பொருள் குற்றம் இருப்பதாக் நினைக்கிறேன்.
/அன்னிய மதம் என்று இவர்களால் சொல்லப்படும் இஸ்லாமியர்கள் இந்த திராவிடர்களோடு பெண் கொடுத்து பெண் எடுத்து இந்த மண்ணின் மைந்தர்களாக மாறி விட்டனர். /
இது இஸ்லாமியர்கள் வேறு பூர்வீக மக்கள் வேறு என்ற பொருளில் வருகிறது.இஸ்லாமியர்களில் 95% இந்த மண்ணின் பூர்வீக மக்கள்(மதம் மாறியவர்கள்). மீதி 5% கூட இனக்கலப்பு தவிர்க்க முடியாததாகவே இருக்கும்.இருந்தாலும் இப்போதைய சூழலில் பிற மதங்கள் போல் இஸ்லாமிய இனக்குழுக்கள் தங்களுக்கிடையே மட்டுமே திருமண உறவு(99%) கொள்கின்றனர்.

இந்த ஆரிய திராவிடம் பற்றி கொஞ்சம் தேடி படித்து வருவதால் அது பற்றி ஒன்றும் சொவதற்கு இல்லை.நித்யஸ்ரீ பாடல்கள் அருமை.தமிழிசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படவேண்டும் என்ற குரலும் தமிழகத்தில் ஒலிப்பது நீங்கள் அறிந்ததே.சில பாடகர்கள் தமிழில் மட்டும் பாடுபவர்கள் உணடு

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88

/என்னோடு அலுவலகத்தில் ஒன்றாக வேலை செயயும் எகிப்தியரை சில நேரங்களில் நோட்டம் விடுவது உண்டு. தாங்களே சிறந்த அறிவாளி என்றும் மிகச் சிறந்த நாகரிகத்துக்கு சொந்தக்காரர்கள் என்றும் அவ்வப்போது சொல்லிக் கொள்வான். இவர்கள் இஸரவேலர்களின் வழிவந்தவர்கள்./

இதிலும் ஒரு சிறிய மாற்றம் இஸ்ரவேலர்கள்தான் எகிப்திய வம்சாவழியினர்.
மூஸா(மோஸஸ்) கதை கூட ஆய்வுகளின் படி உறுதிப்படாத ஒன்று எனினும் அவர்(அல்லது எவ்ரோ) தலைமையின் எகிப்து மக்களின் ஒரு பிரிவினர் பாலஸ்தீனம் வந்ததாக்வே அகழ்வாய்வுகள் கூறுகின்றன‌. மதம் கலாச்சாரம் மாறியதால் யூதர்கள் என அழைக்கப்பட்டனர்.
(cond)

சார்வாகன் said...

/இப்படி நெருப்பை வணங்குபவர்கள் ஈரானிலும், ஆர்மீனியாவிலும் அதை ஒட்டிய பகுதிகளிலும் இருந்ததாக அகழ்வாராய்ச்சிகள் கூறுகின்றன. ஆரியர்களின் பூர்வீகம் இந்த நாடுகளாக இருந்திருக்கலாம்./

நெருப்பு வணக்கம் இன்றும் வழக்கத்தில் இருக்கும் ஜொராஸ்ட்ரிய‌(பார்ஸீக்க‌ள்) இன்றும் இரான்[20,000], உட்பட்ட பல நாடுகளில் வாழ்கின்றனர். இந்தியாவில் மட்டும் ஒரு இலட்சம் பேர் இருக்கலாம்.டாட்டா குடும்பம் உட்பட பலர் குறிப்பிடத் தக்கவர்கள்.

http://en.wikipedia.org/wiki/Zoroastrians_in_Iran
http://en.wikipedia.org/wiki/Parsi_people

suvanappiriyan said...

சலாம் நண்பர் சார்வாகன்!

//மீதி 5% கூட இனக்கலப்பு தவிர்க்க முடியாததாகவே இருக்கும்.இருந்தாலும் இப்போதைய சூழலில் பிற மதங்கள் போல் இஸ்லாமிய இனக்குழுக்கள் தங்களுக்கிடையே மட்டுமே திருமண உறவு(99%) கொள்கின்றனர்.//

உண்மைதான். கடற்கரை ஓரம் உள்ள 5 சதவீத இஸ்லாமியரே அரேபிய வழி வந்தவர்களாக இருக்கலாம். மற்ற அனைவருமே இஸ்லாமிய மதத்துக்கு மாறியவர்களே! மற்றபடி இஸ்லாமியர்களையே திருமணம் முடிக்க இஸ்லாம் கட்டளையிடுகிறது. அப்பொழுதுதான் வாரிசுகள் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் சிக்கல் இருக்காது. திருமணம் என்பதே சந்தோஷமாக இருப்பதற்கு. ஒத்த இறைக் கருத்து உடையவர்களாலேயே பிரச்னையில்லாமல் வாழ்க்கையை ஓட்ட முடியும்.

//இதிலும் ஒரு சிறிய மாற்றம் இஸ்ரவேலர்கள்தான் எகிப்திய வம்சாவழியினர்.//

இதை நான் மறுக்கவில்லையே! நபி மூசா(மோசே)வின் வரலாறு முழுவதும் எகிப்தில் நடந்ததாக குர்ஆனும் கூறுகிறது. முசாவை நபியாக பெற்றவர்கள்தான் இன்றைய யூதர்கள்.

//மூஸா(மோஸஸ்) கதை கூட ஆய்வுகளின் படி உறுதிப்படாத ஒன்று எனினும் அவர்(அல்லது எவ்ரோ) தலைமையின் எகிப்து மக்களின் ஒரு பிரிவினர் பாலஸ்தீனம் வந்ததாக்வே அகழ்வாய்வுகள் கூறுகின்றன‌. மதம் கலாச்சாரம் மாறியதால் யூதர்கள் என அழைக்கப்பட்டனர்.//

மூசா பிர்அவுன் என்ற கொடுங்கோல் அரசனால் துரத்தப்படும் போது கடல் பிளக்கிறது.( ) அந்த கடல் முசாவுக்கு வழி விட்டு மறுகரையான சவுதியை அடைகின்றனர். அந்த கடலில் பிர்அவுன் மூழ்கடிக்கப்படுகிறான். அவனது உடல் இன்றும எகிப்திய அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. 'உலக மக்களுக்கு அத்தாட்சியாக அவனது உடலை பாதுகாப்பேன்' என்ற குர்ஆனின் வார்த்தை இங்கு மெய்ப்பிக்கப்படுகிறது.

சவுதியை அடைந்த மூசாவும் அவரது கூட்டமும் தாகத்தால் தவிக்கும் போது தண்ணீருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார். இறைவன் அவரது கைத் தடியால் மலைகளில் அடிக்கச் சொல்கிறான். அங்கிரந்து தண்ணீர் பீறிட்டுக் கிளம்புகிறது. அதை அந்த மக்கள் பருகுகின்றனர். அந்த நீரூற்றில் இருந்து இன்றும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த இடத்தை நானும் நண்பர்களும் சென்று பார்த்தோம்.

கடலுக்கு அருகிலேயே அதுவும் மலைப்பாங்கான இடத்தில் சுவையான தண்ணீர் இன்றும் வருகிறது. நானும் அந்த நீரை பருகினேன். மக்கள் அதை புனிதத்தலமாக கருதிவிடுவர் என்பதால் அதிகம் பிரபல்யப்படுத்தவில்லை. அப்படி இருந்தும் நான் போன போது 50 அல்லது 60 குடும்பங்கள் குடும்பம் சகிதமாக வந்திருந்தனர்.

அங்கிருந்து 400 கிலோ மீட்டருக்கு பக்கத்தில் அல் ஊலா என்ற இடத்தில் நபி சாலிஹ் வாழ்ந்த ஊரும் அவரை பின்பற்றிய மக்கள் வாழ்ந்த கிராமமும் இன்றும இருக்கிறது. இவை எல்லாம் 3000 வருடங்கள் முன்பு வாழ்ந்த மக்களைப் பற்றி பேசுகிறோம். நம்மை விட வசதியாக மலைகளை குடைந்து பெரும் பெரும் மாளிகைகளை அமைத்திருக்கின்றனர். எனது பதிவில் ஸ்லைட் ஷோவாக அதுதான் ஓடுகிறது. சவுதி அரசு அந்த இடங்களை எல்லாம் இன்றும் பாதுகாத்து வருகிறது. மூன்று மணி நேரம் அந்த கிராமத்தை சுற்றிப் பார்த்தேன்.

suvanappiriyan said...

திரு சார்வாகன்!

//நெருப்பு வணக்கம் இன்றும் வழக்கத்தில் இருக்கும் ஜொராஸ்ட்ரிய‌(பார்ஸீக்க‌ள்) இன்றும் இரான்[20,000], உட்பட்ட பல நாடுகளில் வாழ்கின்றனர். இந்தியாவில் மட்டும் ஒரு இலட்சம் பேர் இருக்கலாம்.டாட்டா குடும்பம் உட்பட பலர் குறிப்பிடத் தக்கவர்கள்.//

உண்மைதான்! இவர்களைப் பற்றி நபி மொழிகளிலும் பல இடங்களில் காண முடிகிறது. அறிவிலும் நாகரிகத்திலும் அன்றே மிகச் சிறந்து வாழ்ந்திருக்கிறார்கள். இன்றும் கூட ஈரான் அறிவியல் முன்னேற்றத்தில் ஐரோப்பியர்களோடு போட்டி போடுவதை பார்க்கலாம். தாமஸ் ஆல்வா எடிசன் மின்சாரத்தை கண்டுபிடிக்கும் முன்பே இவர்கள் பேட்டரி மூலம் விளக்குகளை எரிய விட்டதை ஒரு காணொளியில் பார்த்தேன்.

சார்வாகன் said...

ஸலாம் சுவனப்பிரியன்

/மூசா பிர்அவுன் என்ற கொடுங்கோல் அரசனால் துரத்தப்படும் போது கடல் பிளக்கிறது.( ) அந்த கடல் முசாவுக்கு வழி விட்டு மறுகரையான சவுதியை அடைகின்றனர். அந்த கடலில் பிர்அவுன் மூழ்கடிக்கப்படுகிறான். அவனது உடல் இன்றும எகிப்திய அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. 'உலக மக்களுக்கு அத்தாட்சியாக அவனது உடலை பாதுகாப்பேன்' என்ற குர்ஆனின் வார்த்தை இங்கு மெய்ப்பிக்கப்படுகிறது./

இது குறித்து ஏற்கெனவே நிறைய பேசி இருக்கிறோம் என்று நினைக்கிறேன்.இப்போது நம்பிக்கை சார்ந்த விஷயங்களை பற்றி விவாதிப்பதை தவிர்க்கிறேன். மத(த்தில்) அறிவியல், பரிணாமம் பற்றி மட்டும் அவசியமெனில் எழுதுவேன்.நான் சேகரித்த சில யூதர்கள் பற்றிய சில தகவல்களை மட்டும் பகிர்கிறேன்
_____________
யூதர்கள் இஸ்ரேல் அமைந்ததில் இருந்தே தங்களை ஒரு இனமாக் காட்டுவதற்கு பல் முயற்சிகள் செய்தனர்.டி.என். ஏ. மூலம் செய்த ஆய்வுகளில் அவர்கள் ஒரு இனமாக இல்லை.
http://www.nature.com/news/2010/100603/full/news.2010.277.html

அவர்கள் எந்தெந்த நாடுகளில் இருந்து வந்தார்களோ அந்த இன மக்களின் ஜீன்களோடே அதிக தொடர்பு இருந்தது.அதே சமயம் இஸ்ரேலில் வாழ்ந்த யூதர்களின் ஜீன்கள் பாலஸ்தீனர்க்ளுடன் அதிக தொடர்பு இருந்தது.
அதாவது வெளிநாடுகளில் இருந்து இபோது இஸ்ரேலுக்கு வந்த‌வர்கள்(90%) பிற இன் யூத மதம் மாறிய அல்லது கலப்பின மக்கள்.உண்மையான‌ யூதர்கள் இஸ்ரேலில் வாழ்ந்தவர்களும்(10%) பாலஸ்தீனர்கள் மட்டுமே!!!!!!!!!. பாலஸ்தீனர்கள் மதம் மாறியதால் யூத அடையாளத்தை மறந்து விட்டனர்
http://en.wikipedia.org/wiki/Genetic_studies_on_Jews

2.இது இப்படி ஆனதால் அல் அக்ஸா மசூதியின் அருகில் பல அகழ்வாய்வுகள் நடத்தினர். அல் அக்ஸா சுலைமான்[சாலமன்] கட்டிய ஆலயத்தை இடித்து கட்டியது என்பதை நிரூபித்து வரலாற்று ஆதாரமாக காட்ட எண்ணினர். கிடைத்த கல்வெட்டுகள் ஹீப்ரு மொழியில் இல்லாமல் எகிப்திய மொழியில் இருந்தன.ஆகவே இதுவ்ம் தோல்வியில் முடிந்தது.
http://www.imemc.org/article/61110

நண்பர் கலையரசன் இது குறித்த பல தகவல்கள் இப்பதிவில் அளித்துள்ளார்.

http://kalaiy.blogspot.com/2008/11/blog-post_28.html
நன்றி

dondu(#11168674346665545885) said...

//சரி ஊருக்கு செல்லலாம் என்று பஸ் ஏற வந்தால் 'நித்யஸ்ரீ பாடுகிறார்' என்ற ஒரு போர்டை பார்த்தேன். உள்ளே கச்சேரியும் ஆரம்பமாகி இருந்தது. 'கண்ணோடு காண்பதெல்லாம்....' 'சௌக்கியமா?...' பாடல்களை எல்லாம் கேட்டதால் நாமும் சென்று கேட்போமே என்று அரங்கத்தினுள் சென்றேன். இலவசம் என்று நினைத்தேன். ஆனால் 100 ரூபாய் டிக்கெட்டை என்னிடம் கட்டி விட்டார்கள். வேறு வழி இல்லாமல் உள்ளே சென்று உட்கார்ந்தேன். //
உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? கச்சேரி இலவசம் இல்லை என்றதுமே நடையைக் கட்டுவதுதானே. பணம்தருவானேன். பிறகு பொறுமுவானேன்

//தலையை ஆட்டும் புரியாத கூட்டம்...' என்ற வைரமுத்துவின் வரிகள்தான் எனக்கு ஞாபகம் வந்தது.//
புரியாத கூட்டம் அந்த மாமிகள் இல்லை. உங்க்ளைப் போன்றவர்கள்தான் அதில் வருகிறீர்கள். கர்நாடக இசை ரசனை எல்லாருக்கும் கிடைத்து விடாது. அதற்கு புண்ணீயம் செய்திருக்க வேண்டும்.

உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ கர்நாடக இசையை தூக்கி நிறுத்துவது பிராமணர்களே. அக்கச்சேரிக்கு போய் அதனையும் பிராமணர்கள் என புலம்புவது விசித்திரமாக உள்ளது.

சமீபத்தில் எழுபதுகளில் “தயாரே மதீனா” என்ற இசுலாமிய பக்திப் படம் வந்தது. மிட்லண்டில். அச்சமயம் என் தங்கை என்னிடம் ஆச்சரியத்துடன் கூறினாள், “சென்னையில் இவ்வளவு முசல்மான்களா” என.

அது போலத்தான் இப்போது நீங்கள் குறிப்பது உள்ளது.

எனது பூர்வ பந்தமாகிய யூத்ர்கள் பற்றி பிறகு பின்னூட்டம் இடுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

suvanappiriyan said...

இந்த கட்டுரைக்கு சில ஆதாரமான செய்திகள் இந்த பதிவிலும் கிடைக்கிறது. படித்துப் பாருங்கள்.

suvanappiriyan said...

இந்த கட்டுரைக்கு மேலும் சில ஆதாரமான செய்திகள் இந்த பதிவிலும் கிடைக்கிறது. படித்துப் பாருங்கள்.

suvanappiriyan said...

வாங்க டோண்டு சார்! சௌக்கியமா?

//உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? கச்சேரி இலவசம் இல்லை என்றதுமே நடையைக் கட்டுவதுதானே. பணம்தருவானேன். பிறகு பொறுமுவானேன்//

மனது ஒன்றை விரும்பி விட்டால் செலவை பற்றி பிறகுதானே யோசிப்பொம்......

//புரியாத கூட்டம் அந்த மாமிகள் இல்லை. உங்க்ளைப் போன்றவர்கள்தான் அதில் வருகிறீர்கள். கர்நாடக இசை ரசனை எல்லாருக்கும் கிடைத்து விடாது. அதற்கு புண்ணீயம் செய்திருக்க வேண்டும்.//

அந்த புரியாத கூட்டத்தில் நானும் ஒருவனே! எல்லோருமே புரிந்து கொண்டுதான் தலையாட்டுகிறார்கள் என்பது கொஞ்சம் ஓவர். ஏனெனில் என்னோடு படித்த பிராமணர்களில் பல பேருக்கு வடமொழி தெரியாது.

//எனது பூர்வ பந்தமாகிய யூத்ர்கள் பற்றி பிறகு பின்னூட்டம் இடுகிறேன்.//

இத...இத இந்த பதிவில் எழுதியதற்குத்தான் பல அனானிகள் என்னை திட்டி 10க்கு மேல் பின்னூட்டம் இட்டிருந்தனர். அநாகரிகமாக வந்த அந்த பின்னூட்டங்களை மட்டுறுத்தி விட்டேன். இப்பொழுது பிராமணராகிய நீங்களே அதைப் பற்றி சொல்கிறேன் என்று சொல்வதால் நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சார்வாகன்!

//அல் அக்ஸா சுலைமான்[சாலமன்] கட்டிய ஆலயத்தை இடித்து கட்டியது என்பதை நிரூபித்து வரலாற்று ஆதாரமாக காட்ட எண்ணினர். கிடைத்த கல்வெட்டுகள் ஹீப்ரு மொழியில் இல்லாமல் எகிப்திய மொழியில் இருந்தன.ஆகவே இதுவ்ம் தோல்வியில் முடிந்தது.//

பல தகவல்களை தந்திருக்கிறீர்கள். தொடர்ந்திருங்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

dondu(#11168674346665545885) said...

//எகிப்தியர்களின் நடை உடை பாவனை அனைத்தும் நம் நாட்டு பிராமணர்களை ஒத்தே இருக்கும்.//
அந்த எகிப்தியர்கள் யூதர்களா முசல்மான்களா? நிற்க.

வலைப்பதிவர்கள் பலர் நான் ஏன் இஸ்ரேலை இவ்வளவுத் தீவிரமாக ஆதரிக்கிறேன் என்பதற்குத் தங்கள் மனதுக்குத் தோன்றியக் காரணங்களை எழுதியுள்ளனர். அது அவர்தம் சுதந்திரம். நான் உலக விஷயங்களில் அக்கறை எடுத்துக் கொண்டுப் பத்திரிகைகள் படிக்கும் காலத்திலிருந்தே இஸ்ரவேலர்கள் என்னைக் கவர்ந்தனர்.

கடைசி பிரெஞ்சு பரீட்சையில் (Diplome superieur) ஜெரூசலத்தைப் பற்றி நான் எழுதிய கட்டுரை முழுக்க முழுக்க இஸ்ரேலிய ஆதரவுடையது. நான் அதை எழுதிக் கொண்டிருந்த போது என் ஆசிரியர் (ஒரு பிரெஞ்சுக்காரர்) என் பின்னால் நின்ற வண்ணம் அதைப் படித்திருக்கிறார். பிறகு என்னிடம் அதை பற்றிப் பேசும்போது, அக்கட்டுரைக்கு பூஜ்யம் மதிப்பெண்கள் கொடுக்கப்படும் அல்லது கிட்டத்தட்ட 100 மதிப்பெண்கள் கொடுக்கப்படும் என்றார். பிரான்ஸில் பேப்பர் திருத்துபவரின் மனநிலையை பொருத்தது என்றும் கூறினார். நான் அதற்காகக் கவலைப்படவில்லை. தோல்வியடைந்தால் இஸ்ரேலுக்காக என்னால் ஏதோ செய்ய முடிந்தது என மக்ழ்ச்சி கொள்வேன் எனக் கூறினேன். அப்பரீட்சையில் நான்காவது ரேங்கில் (Tres honorable) தேர்வடைந்தது வேறு விஷயம்.

ஜெர்மன் பரீட்சை ஒன்றில் ஓரல் தேர்வு நடந்தது. மேக்ஸ் ஃப்ரிஷ் எழுதிய அண்டோரா என்ற நாடகத்தைப் பற்றிக் கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் வழக்கத்துக்கும் மேல் தீவிரமான என்னுடைய யூத ஆதரவு நிலையைக் கண்ட ஜெர்மன் ஆசிரியர் திகைப்படைந்தார். அவர் என்னிடம் "நீங்கள் இவ்வாறு இருப்பதற்குக் காரணம் நீங்கள் நம்பும் முந்தையப் பிறவி காரணமாக இருக்குமோ? அதாவது 1946-ல் பிறந்த நீங்கள் ஒரு வேளை யூதராக இருந்துக் கொல்லப்பட்டவரா?" என்றுக் கேட்டார். அதற்கு நான் "தெரியாது ஐயா, ஒரு வேளை நாஜியாக அப்பிறவியில் இருந்து இப்போது பிராயச்சித்தம் தேடுகிறேனோ என்னவோ" என்றேன். இப்போதும் தெரியவில்லை. நான் அதிகம் நேசிக்கும் நாடு இஸ்ரேல். அதை விட அதிகமாக நேசிக்கும் நாடு என் தாயகம் இந்தியா மட்டுமே. நான் அமெரிக்க ஆதரவாளனாகவும் இருப்பதற்குக் காரணம் அவர்கள் இஸ்ரேல் ஆதரவு நிலையே.

அறுபதுகளின் ஆரம்பத்தில் ஐஷ்மேனை அர்ஜன்டைனாவிலிருந்து சிறையெடுத்து வந்தனர் இஸ்ரவேலர்கள். பென் குரியன் இதை அவர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்தப் போது உறுப்பினர்கள் மேஜைகளைத் தாட்டித் தங்கள் களிப்பை வெளிப்படுத்தினர்.

அது சம்பந்தப்பட்டச் செய்திகளை நான் தினமும் கவனமாகப் படித்தேன். எனக்கு முதலில் தோன்றிய எண்ணம் என்னவென்றால் பேசாமல் அவனைப் போட்டுத் தள்ளியிருந்தால் பணம் மிச்சமாக இருந்திருக்குமே என்பதுதான். ஆனால் இஸ்ரவேலர்கள் வேறு மாதிரி நினைத்தனர். அவன் மேல் வழக்குத் தொடுத்தனர். அவனுக்காக வக்கீலும் வைத்துக் கொடுத்தனர். அவரும் தர்ம வக்கீல் போலன்றி அவனுக்காக உண்மையுடன் வாதாடினார். விவரங்கள் வெளி வரத் தொடங்கின. அப்போதுதான் நிலைமையின் தீவிரம் புரிந்தது. நாஜிகள் எவ்வளவு கீழ்த்தரமானவர்கள் என்றுப் புரிந்தது.

அறுபது லட்சம் பேரை கொலை செய்வது என்பது இது வரை சரித்திரத்தில் நடக்காதது. அதை செய்ய இந்த மனிதன் அரசு எந்திரத்தைப் பயன் படுத்தியிருக்கிறான். இரண்டாம் உலக யுத்தத்தின்போது எல்லாத் தளவாடங்களும் பற்றக்குறையில் இருக்க, யூதர்களை சித்திரவதை முகாம்களுக்கு அழைத்துச் செல்லும் வேலைக்கு முன்னுரிமை கொடுக்கப் பட்டது.

வழக்கு நடந்தக் காலத்தில் ஜெர்மனியிலும் சரி, இஸ்ரேலிலும் சரி தலைமுறை விரிசல்கள் அதிகமாயின. "நீங்கள் இவ்வளவுக் கொடூரமானவர்களா" என்று ஜெர்மானிய இளைய சமுதாயம் பெற்றோர்களைப் பார்த்துக் கேட்டனர். அவர்கள் அவமானத்தில் தலை குனிந்தனர். "நீங்கள் இவ்வளவு முட்டாள்தனமாக நடந்து நம்மவர்களில் அறுபது லட்சம் பேரை பலி கொடுத்தீர்களா" என்று இஸ்ரேலிய இளைய சமுதாயம் சீறலுடன் கேட்க, அவர்தம் பெற்றோர்கள் அவமானத்தால் தலை குனிந்தனர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

1967 யுத்தத்தின் போது அரபு தேசங்கள் தாங்கள் யூதர்களை எப்படியெல்லாம் அழிக்கப் போகிறோம் என்றுக் கூறியதை இஸ்ரவேலர்கள் யாரும் வெற்று மிரட்டலாக எடுத்துக் கொள்ளவில்லை. தங்கள் எதிரிகளை ஓட ஓட விரட்டினர்.

அதுதான் இன்னும் தொடர்கிறது. இசுலாமியர் தரும் பயமுறுத்தல்களை சீரியசாக எடுத்துக் கொள்வது இஸ்ரேலைப் பொருத்தவரை காலத்தின் கட்டாயமே.

இசுலாமியர்கள் இன்னொன்றையும் சௌகரியமாக மறைக்கின்றனர். அதாவது பாலஸ்தீனியருக்கு அளிக்கப்பட்ட நாட்டை அவர்கள் அனுபவிக்க முடியாத வண்ணம் செய்தவர்கள் சக இஸ்லாமியரான எகிப்தியர்கள் மற்றும் ஜோர்டானியரே.

இப்படித்தான் 1948-ல் முறையான ஐ.நா. வாக்கெடுப்பில் பாலஸ்தீனப் பிரிவினை ஏற்பட்டது. அன்றிலிருந்து யுத்தம்தான். அப்போதுதான் பிறந்தக் குழந்தையை கழுத்தை நெறித்துக் கொல்ல சுற்றியிருந்த அரபு நாடுகள் தாக்கின. அதையும் எதிர்க்கொண்டது இஸ்ரேல். அந்த யுத்தத்தில் யூதர்களை ஒட்டு மொத்தமாகக் கொல்ல ஏதுவாக பாலஸ்தீனர்களை தங்கள் வீடுகளைக் காலி செய்து விலகிப் போகுமாறுக் கூறினர் அரபு நாட்டவர்கள். அவ்வாறு சென்றவர்கள்தான் பாலஸ்தீன அகதிகள். தங்கள் போராட்டத்தைத் தாங்களே நடத்திக் கொள்ளாமல் மற்றவர்கள் தோளில் சவாரி செய்த சோம்பேறி பாலஸ்தீனியர்கள் அந்த வழக்கத்தை விடவே இல்லை. அதுதான் அவர்கள் பிரச்சினை.

யூதர்களுக்கும் அவர்களை இவ்வளவு ஆண்டுகளாகத் துன்புறுத்தி வந்திருப்பவர்களுக்கும் எதில் கருத்து வேறுபாடு? மற்றவர்கள் யூதர்கள் இறக்க வேண்டுமென்று விரும்புகின்றனர். அவர்கள் அவ்வாறு இறக்க விரும்பவில்லை.

ஜூலை 31, 1971. ஜோர்டான் நதியின் இக்கரையில் காவல் காத்துக் கொண்டிருந்த இஸ்ரவேலர்களுக்குத் தங்கள் கண்களை நம்பவே இயலவில்லை. என்ன நடந்தது? ஜோர்டான் பக்கக் கரையிலிருந்து சிலரை ஜோர்டான் படையினரைத் துரத்தி வந்தனர். யார் அந்தச் சிலர்? அவர்கள் பாலஸ்தீனியத் தீவிரவாதிகள். துரத்தப்பட்டவர்கள் நேராக ஜோர்டான் நதிக் கரையில் குதித்து இஸ்ரேல் தரப்பை நோக்கி நீந்த ஆரம்பித்தனர். இக்கரைக்கு வந்து இஸ்ரவேலர்களிடம் தஞ்சம் புகுந்தனர். பிறகு பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளிக்கும் போது அவர்கள் கூறினார்கள்: "இஸ்ரவேலர்கள் எங்களைக் கைதுதான் செய்வார்கள். ஆனால் ஜோர்தானியர்கள் கொன்று விடுவார்கள்" இந்த விஷ்யத்தில் பாலஸ்தீனியத் தலைமை மிகவும் அவமானப்பட்டது. இந்தச் செய்தி இங்கும் சகவலைப்பதிவாளர்கள் பலருக்குப் புதிதாக இருக்கும்.

வழக்கழிந்து போன ஹீப்ரூ மொழியை பேச்சு மொழியாக்கியது, ஆறு நாட்கள் யுத்தம், யோம் கிப்பூர் யுத்தம் ஆகிய நிகழ்வுகள் பைபிளின் பழைய ஏற்பாட்டில் வர்ணிக்கபடும் நிகழ்வுகளுக்கு சற்றும் குறைந்தவையல்ல. அரசன் தாவூது, அரசன் சுலைமான் ஆகியோருக்கு பென் குரியன், கோல்டா மையர் ஆகியோர்கள் எந்த விஷயத்திலும் குறைந்தவர்கள் அல்லர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பாலஸ்தீனிய பிரச்சினையில் நாம் கவனமாக இருக்க வேண்டும். வர்ஜா வர்ஜமின்றி அவர்களுக்கு ஆதரவு தருவது இந்தியாவின் நலத்துக்கு உகந்ததல்ல.

அவ்வாறு செய்யும் நம்மை அவர்களும் சரி இசுலாமியரும் சரி இளப்பமாகவே நடத்துகின்றனர். ஆவர்கள் ஆதரவு சக இசுலாமிய நாடான பாலஸ்தீனத்துக்கே. நமக்கு ஏன் பிடுங்கிக் கொள்ள வேண்டும் அவர்களுக்கு ஆதரவு அளிக்க?

சோம்பேறி பசங்கள் பாலஸ்தீனியர் என்பதே நிஜம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//அந்த புரியாத கூட்டத்தில் நானும் ஒருவனே! எல்லோருமே புரிந்து கொண்டுதான் தலையாட்டுகிறார்கள் என்பது கொஞ்சம் ஓவர். ஏனெனில் என்னோடு படித்த பிராமணர்களில் பல பேருக்கு வடமொழி தெரியாது.//
இதானே வாணாங்கறது. உங்களைப் பற்றி பேசுங்கள். மற்றவர்கள் எப்படி என்றெல்லாம் பேசுவது வேண்டாத வேலை. அது உங்கள் அரைகுறை புரிதல் மட்டுமே.

மேலும் இசைக்கு மொழி தேவையில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அவர்கள் ஆதரவு சக இசுலாமிய நாடான பாலஸ்தீனத்துக்கே. நமக்கு ஏன் பிடுங்கிக் கொள்ள வேண்டும் அவர்களுக்கு ஆதரவு அளிக்க?

இதை பாகிஸ்தானுக்கே என படிக்கவும்

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

////எனது பூர்வ பந்தமாகிய யூத்ர்கள் பற்றி பிறகு பின்னூட்டம் இடுகிறேன்.//

இத...இத இந்த பதிவில் எழுதியதற்குத்தான் பல அனானிகள் என்னை திட்டி 10க்கு மேல் பின்னூட்டம் இட்டிருந்தனர்.//
யூத இஸ்ரவேல் எனது பூர்வ பந்தம் என்பது நான் பிராமணனாக இல்லாவிட்டாலும் நடந்திருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

suvanappiriyan said...

//அந்த எகிப்தியர்கள் யூதர்களா முசல்மான்களா? நிற்க.//

முன்னாளைய இஸ்ரவேலர்களில் பலர் முஸ்லிமகளாக மாறி விட்டனர். சிலர் எகிப்திலேயே தங்கி விட்டனர். மேலும சிலர் இஸ்ரேலுக்கு குடி பெயர்ந்து சென்று விட்டனர். எனவே மூலம் இருவரும் ஒரே இனமே!

//அறுபது லட்சம் பேரை கொலை செய்வது என்பது இது வரை சரித்திரத்தில் நடக்காதது.//

இது கூட மிகைப்படுத்தப்பட்ட வரலாற்று திரிபு என்று சில ஆய்வுகள் கூறுகிறதே சார்!

//சோம்பேறி பசங்கள் பாலஸ்தீனியர் என்பதே நிஜம்.//

இல்லை. நான் நேரில் பார்த்த வகையில் யூதர்களைப் பொன்றே அறிவில் சிறந்தவர்களாகவே உள்ளனர். சில ஆய்வுகள் சொல்வது போல் மதம் மாறிய முன்னாலய யூதர்களே இன்றைய பாலஸ்தீனர்கள் என்பதையும் இங்கு நினைவுபடுத்திக் கொள்வது நல்லது.

//யூத இஸ்ரவேல் எனது பூர்வ பந்தம் என்பது நான் பிராமணனாக இல்லாவிட்டாலும் நடந்திருக்கும்.//

எப்படி? நான் பாலஸ்தீனிய மக்களின் மீது காட்டும் அன்பு அவர்கள் பக்கம் உள்ள நியாயமும் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றவர்களாகவும் இருப்பதனால். அத்துமீறி வேறொரு நாட்டிலே புகுநது அந்நாட்டு மக்களை சொந்த மண்ணிலிருந்து விரட்டி உலகம் முழவதும் பயங்கரவாதத்தை தூண்டி விட்டுக் கொண்டிருக்கும் ஒரு அரசை ஒரு இனத்தை எந்த வகையில் ஆதரிக்கிறீர்கள்? பிராமணராக இல்லாவிட்டாலும் அந்த அன்பு ஏன் தொடர்கிறது? அது என்ன பூர்வ பந்தம்?

ஷர்புதீன் said...

யாரேனும் செஸ் விளையாடினால் அதனை பார்க்க/ரசிக்க செஸ் விளையாட்டை பற்றிய அறிவு கொஞ்சமேனும் வேணும்., செஸ் விளையாட சுயம்புவாய் யாரும் உருவாக முடியாது., நிபுணராக வேண்டுமானால் மற்றவர் உதவியில்லாமல் தனித்திறமை கொண்டு முன்னேறி வரலாம்!

சராசரி செஸ் வீரனான அடியேன் ஆனந்த் போன்றார்களின் விளையாட்டு நுணுக்கங்களை புரிந்துகொள்வது கடினம்!

எல்லாவற்றையும் புரிந்துகொள்ள நினைக்கும் மனோபாவம் இருந்தால்., அது எல்லாவற்றையும் கற்க வைக்கும்!

தருமி said...

////அறுபது லட்சம் பேரை கொலை செய்வது என்பது இது வரை சரித்திரத்தில் நடக்காதது.//

இது கூட மிகைப்படுத்தப்பட்ட வரலாற்று திரிபு என்று சில ஆய்வுகள் கூறுகிறதே சார்!//

அது எப்படி சார்? உங்களைப் போன்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு இது ஒரு வழக்கமான பேச்சாக இருக்கிறது.

60 ஆண்டுகளுக்கு கண்முன் நடந்தவைகளை திரிபு என்கிறீர்கள். ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் நான் கடவுளைப் பார்த்தேன், சுவனம் பார்த்தேன், வஹி வாங்கினேன் என்பதை கண்களை மூடிக்கொண்டு நம்பி விடுகிறீர்கள்!

ஆச்சரியம்தான்!

suvanappiriyan said...

திரு தருமி!

//அது எப்படி சார்? உங்களைப் போன்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு இது ஒரு வழக்கமான பேச்சாக இருக்கிறது.//

நான் ஹிட்லர் யூதரகளை கொடுமைபடுத்தியதை மறுக்கவில்லை. 60 லட்சம் என்பது யூதர்கள் மேல் உலக மக்கள் பரிதாபப் பட வேண்டும எனற நோக்கில் எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டது என்று சில ஆய்வாளர்களின் கூற்றைத்தான் மேற்கோள் காட்டினேன்.

//ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் நான் கடவுளைப் பார்த்தேன், சுவனம் பார்த்தேன், வஹி வாங்கினேன் என்பதை கண்களை மூடிக்கொண்டு நம்பி விடுகிறீர்கள்!

ஆச்சரியம்தான்!//

அதற்கு காரணம் முகமது நபி தான் நபி என்று சொன்னதற்கு முன்னால் 'அல்அமீன்' நம்பிக்கையாளர் என்றும் அதற்கு முன் அவர் அந்த மக்களிடத்திலே பொய் பேசாதவராகவும் இருந்தது ஒரு காரணம். அடுத்து அவர் குர்ஆன் என்று சொல்லும் வேதத்துக்கும் ஹதீதுகள் என்று சொல்லும் விரிவுரைகளுக்கும் பெருத்த வித்தியாசம் உள்ளது. இதை அரபு மொழியை நன்கு தெரிந்தவர் உணர்ந்து கொள்ளலாம். மொழி பெயர்ப்பிலும் நீங்கள் ஆராய்ந்தால் குர்ஆனின் தரம் உயர்ந்தும் முகமது நபியின் ஹதீதுகள் நாட்டுப்புற பாஷையிலும் இருப்பதை அறியலாம். ஒரு மனிதர் ஒரு நாள் இரண்டு நாள் அல்ல. 23 வருடங்கள் தொடர்ந்து ஒரு மொழியை இவ்வாறு வேறுபடுத்த முடியாது.

அடுத்து அவர் குர்ஆன் என்று சொல்வது பல அறிவியல் முடிவுகளை முன்னறிவிப்பாக சொல்கிறது. பல சவால்களையும் விடுகிறது. இன்று வரை உலக அறிஞர்களால் இந்த சவால்களை முறியடிக்க முடியவில்லை.

இது பற்றி முன்பு நாம் அதிகமாகவே விவாதித்திருக்கிறோம். கடலகளையே பார்க்காதவர் கடல்களுக்குள் தடுப்பு உண்டு என்று எப்படி சொன்னார்? வான்வெளிக்கு செல்லாதவர் விண்வெளி பயணம் மேற்கொள்ளும் ஒருவனின் இதயத்தின் நிலையை எவ்வாறு சொல்ல முடிந்தது? ரோம பாரசீகத்தின் வெற்றி தோல்வியை முன் கூட்டியே எவ்வாறு முகமது நபியால் சொல்ல முடிந்தது? கோள்களின் சஞ்சாரங்களையும் அவை அனைத்தும் சூரியன் உட்பட ஒரு இலக்கை நோக்கி ஓடிக கொண்டிருக்கிறது என்பதையும் எழுதவும் படிக்கவும் தெரியாத ஒருவரால் எவ்வாறு கூற முடிந்தது? உலக மக்கள் அனைவரும் பின்பற்றத்தக்க வகையில் இதன் சட்டங்களை ஒரு அரபியரால் எவ்வாறு தொகுக்க முடிந்தது? 14 நூற்றாண்டுகளுக்கு முன் அருளப்பட்ட ஒரு நூல் இன்றும் கூட பின்பற்றத்தக்க வகையில் அமைந்துள்ளதும் நாம் சிந்திக்க வேண்டியது……… என்று வரிசையாக இன்னும் நூற்றுக்கணக்கான கேள்விகளை வைக்கலாம்.

suvanappiriyan said...

திரு ஷர்புதீன்!

//யாரேனும் செஸ் விளையாடினால் அதனை பார்க்க/ரசிக்க செஸ் விளையாட்டை பற்றிய அறிவு கொஞ்சமேனும் வேணும்., செஸ் விளையாட சுயம்புவாய் யாரும் உருவாக முடியாது., நிபுணராக வேண்டுமானால் மற்றவர் உதவியில்லாமல் தனித்திறமை கொண்டு முன்னேறி வரலாம்!//

எப்போதுமே கொஞ்சம் வித்தியாசமாகவே எழுதுபவர் நீங்கள். வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி!

சார்வாகன் said...

வணக்கம் டோண்டு சார்
உங்களுக்கு யூதர்கள் மற்றும் இஸ்ரேலை பிடித்து இருப்பது உங்கள் தனிப்ப்ட்ட விஷயம்.

1.யூதர்கள் 6 மில்லியன் ஹிட்லரால் கொன்று குவிக்கப்பட்டனர் என்பதையும் நான் ஏற்கிறேன்.அதற்காக ஜெர்மனியை பிரித்துதானே இஸ்ரேல அமைக்கப் பட்டு இருக்க வேண்டும்.
இபோதைய இஸ்ரேலின் மக்கள் தொகை சுமார் 8 மில்லியன்.இதில் 75% யூதர்கள் எனின் யூதர்கள் 6 மில்லியன் மடுமே.அமைந்த போது [பொ.ஆ 1947] யூதர்கள் மக்கள் தொகை 1 மில்லியன் மட்டுமே.
6 மில்லியன் யூதர்களை கொன்றவர்களிடம் இருந்துதானே 1 மில்லியன் யூதர்களுக்கு நாடு பிரித்து அளிக்கப் பட்டு இருக்க வேண்டும்?
http://en.wikipedia.org/wiki/United_Nations_Partition_Plan_for_Palestine

2. பாலஸ்தீனத்தில் அங்கு காலம் காலமாக வாழ்ந்து வரும் யூதர்களின் வாழ்வுரிமையை யாரும் மறுக்க மாட்டார்கள்.ஆனால் ஜெர்மனி, இரஷ்யா என்று அனைத்து நாடுகளிலும் இருந்து எங்களுக்கு கடவுள் கொடுத்த பூமி என்று உரிமை கொண்டாடுவது நியாய‌மா?

http://en.wikipedia.org/wiki/Jews_as_a_chosen_people

3. ஜோர்டான் விஷயத்தில் நீங்கள் கூறியது உண்மைதான்.எனினும் ஜோர்டான் மன்னர் என்பது மெக்காவின் ஷெரீஃப் குடும்பம். சவுதி இபின் சவுதுக்கு அளிக்கப்பட்டதற்கு பதிலாக அவர்களுக்கு பிரிட்டிஷாரால் ஜோர்டான் வழங்கப் பட்டது. ஜோர்டான் சிரியா என்ப‌தும் பால‌ஸ்தீன‌த்தின் ஒரு ப‌குதிதான்ஜோர்டானிய மன்னர் குடும்பம் முகமதுவின் ஹாஷிமைட் வம்சத்தை சேர்ந்தவர்கள்.பாலஸ்தீனர்கள் அல்ல. ஆகவே பாலஸ்தீன விடுதலைக்கு அவர்கள் கோல்டா மேயரோடு சேர்ந்து முதுகில் குத்தியதுதான் வரலாறு. மண்ணாசையில் பாலஸ்தீனர்களை கைவிட்டது ஜோர்டான் அரசு.

http://en.wikipedia.org/wiki/Hashemite

4. சரி போனது எல்லாம் போகட்டும் என பாலஸ்தீனர்கள் 1967 ன் படி எல்லைகளை அமைக்க முன்வந்தாலும் மேற்கு கரை முழுவதையும் ஆக்கிரமிக்கும் இஸ்ரேலின் செயலை நியாயப் படுத்துவீர்களா?

பதில் விருப்பம் இருப்பின் டோண்டு சாரோ அல்லது எவரும் அளிக்கலாம்.பாலஸ்தீனர்களின் தரப்பு நியாயம் மட்டுமே எனக்கு தெரிகிறது.அவர்கள் முஸ்லிமா இல்லையா என்பது அவசியமில்லாதது.

Ganesan said...

நண்பர் சார்வாகன், பாலஸ்தீன் இஸ்ரேல் பற்றிய உங்களின் பதில் சிறப்பு. யூதர்களுக்கான இஸ்ரேல் ஜெர்மனியில் தான் உருவாக்பட்டிருக்க வேண்டும். அதுதான் நியாயமாக இருந்திருக்கும். இங்கே அமெரிக்காவில் பல வெள்ளை நண்பர்களிடம் இந்த கருத்தை சொல்ல போனால் அவர்களின் ஒரே பதில் காலம் காலமாய் யூதர் தாய் நாடாய் கருவது ஜெருசலேமை என்பது மட்டுமே. அதே மண் யூதர் வருவதற்கு முன் cannonites வாழ்ந்த இடம் ஆச்சே என்று கேட்டால் பதில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவர்கள் கலிபோர்னியா லிபரல் நண்பர்கள். இவர்களிடமே சமாளிப்புகள் தான் பதிலாய் வர காண்கிறேன், கன்செர்வேடிவ் நண்பர்களை பற்றி சொல்லவே வேண்டாம்.

இன்னும் சொல்ல போனால் இஸ்ரேல் என்னும் யூத ஆக்கிரமிப்பு ஹிட்லருக்கு முன்பே தொடங்கிய ஒன்று. முதல் அலியாஹ், இரண்டாம் அலியாஹ், மூன்றாம் அலியாஹ் என்று யூத தாய் நாடு உருவாக்கும் குடியேற்றங்கள் 1930 க்கு முன்பே நடை பெற்றவை. முக்கிய காரணி சியோனிஸ்ட் அமைப்பு. இந்த அமைப்புக்கு ஹிட்லரின் இன அழிப்பு ironically ஒரு வரப்ரசாதமாய் அமைந்து போனது. யூதர்கள் அமெரிக்க, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பெரும் செல்வாக்கு கொண்டிருந்தது இந்த வேலையை இலகுவாக்கியது. ஹென்றி ட்ருமன் ஒரு யூதர் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இஸ்ரேல் அங்கிகரிப்பதில் அவரின் செயலர் ஜார்ஜ் மார்ஷல்லுக்குமே இருந்த கருத்து வேறுபாடுகளே சாட்சி.

இதில் எல்லாம் இந்தியரான நமக்கு எந்த சம்பந்தம் இல்லை என்பதால் நாம் நடு நிலை கொண்டு எது சரி தவறு என்று எளிதாய் சொல்ல முடிகிறது என்று நான் நினைப்பதுண்டு. ஆனால் பல இந்திய நண்பர்கள் இஸ்ரேல் உருவகத்தை ஆதரிப்பது ஆச்சர்யபடத்தான் வைக்கிறது.

suvanappiriyan said...

திரு கணேசன்!

// இதில் எல்லாம் இந்தியரான நமக்கு எந்த சம்பந்தம் இல்லை என்பதால் நாம் நடு நிலை கொண்டு எது சரி தவறு என்று எளிதாய் சொல்ல முடிகிறது என்று நான் நினைப்பதுண்டு.//

நியாயவான்கள் இந்த முடிவைத்தான் எடுப்பார்கள்.

//ஆனால் பல இந்திய நண்பர்கள் இஸ்ரேல் உருவகத்தை ஆதரிப்பது ஆச்சர்யபடத்தான் வைக்கிறது.//

“எனது பூர்வ பந்தமாகிய யூத்ர்கள் பற்றி பிறகு பின்னூட்டம் இடுகிறேன்” என்ற திரு டோண்டு அவர்களின் பின்னூட்டத்தை நீங்கள் பார்க்கவில்லையா?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

dondu(#11168674346665545885) said...

பாலஸ்தீனம் என்னும் நாடு தனியாக இருந்த்தேயில்லை. 1947-ல் பழைய துருக்கி சாம்ராஜ்யத்தின் ஒரு ஜில்லா மட்டுமே அது. பிரிட்டனின் பாதுகாப்பில் இருந்தது.

1947-ல் பிரிட்டிஷ் இந்தியாவை பிரித்து இந்தியா, பாகிஸ்தான் என்ற இரு நாடுகளை உருவாகியது போலத்தான், இப்பிரதேசமும் இஸ்ரேல், பாலஸ்தீனம் என உருவாயிற்று.

யூதர்கள் தங்களுக்களிக்கப்பட்ட நாட்டை உருவாக்கி இப்போது நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால் பாலஸ்தீனியர்?

இங்குதான் இசுலாமியர்கள் இன்னொன்றையும் சௌகரியமாக மறைக்கின்றனர். அதாவது பாலஸ்தீனியருக்கு அளிக்கப்பட்ட நாட்டை அவர்கள் அனுபவிக்க முடியாத வண்ணம் செய்தவர்கள் சக இஸ்லாமியரான எகிப்தியர்கள் மற்றும் ஜோர்டானியரே.

இதையெல்லாம் சௌகரியமாக மறைத்து ஜெர்மனியில் அமைப்பதுதானே என்றெல்லாம் ஏசுவது பிதற்றல்.

இஸ்ரவேலர்கள் 2000 ஆண்டுகளாக, அடுத்த ஆண்டு ஜெரூசலத்தில் என நம்பி வந்திருக்கின்றனர். ஆகவே அவர்களது நாடு அங்குதான் அமைய வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்