Followers

Tuesday, December 06, 2011

பிச்சைப் பாத்திரம் ஏந்துபவர்கள்!




தஞ்சாவூர்: தஞ்சையில் திருட்டு தொடர்பாக பிச்சைக்காரரிடம் சோதனையிட்டதில் சிக்கிய, 6.23 லட்சம் ரூபாய்க்கு, அவர் வங்கி ரசீதுகளை காட்டி பணத்தை மீட்டுச் சென்றார். இது, போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா அலுவலக சாலை இரண்டாம் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் சமது, 55. இவரது மனைவி நூர்ஜகான், 45. இந்த தம்பதிகள் பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்டவர்கள். இருவரும் சேர்ந்து ஒரே இடத்தில் பிச்சை எடுப்பதில்லை. சீசனுக்கு தகுந்தாற்போல் திருச்சி, சென்னை, ஏர்வாடி, நாகூர் போன்ற ஊர்களில் உள்ள பள்ளிவாசல்களில், விழாக்கள் நடக்கும் போது பிச்சை எடுக்கச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தற்போது இவர்கள் தஞ்சை ஆற்றுப்பாலம் ஜூம்மா மசூதியில், சில வாரங்களாக தங்கி பிச்சை எடுத்து வருகின்றனர். காந்திஜி சாலையில் உள்ள இரட்டை மஸ்தான் தர்கா அருகில் இரவு நேரங்களில் தங்கி வந்துள்ளனர். கடந்த 2ம் தேதி, கீழவாசலைச் சேர்ந்த மன்சூர் என்பவர், தொழுகைக்கு வந்துள்ளார். அவர் மொபைல் போன் தொலைந்ததும் போலீசில் புகார் செய்தார். உடனே, பள்ளி வாசல் நிர்வாகிகள் மற்றும் மன்சூர் சேர்ந்து, சந்தேகத்தின் பேரில் மசூதி வாசலில் இருந்த பிச்சைக்காரர்களை சோதனையிட்டனர். அங்கே பிச்சை எடுத்துக் கொண்டிருந்த அப்துல் சமது பையை எடுத்து சோதனையிட்ட போது, அவரது பையிலிருந்து கத்தை, கத்தையாக லட்சக்கணக்கில் பணம் இருந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளிவாசல் நிர்வாகிகள், சமதையும், அவரது பணத்தையும் தஞ்சை மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்துள்ளனர். எஸ்.ஐ., சுதா மற்றும் போலீசார், அப்துல் சமதுவிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அப்துல் சமது கூறியதாவது: கடந்த 2003ல், சென்னை தாம்பரம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ஒரு தொகையை டெபாசிட் செய்திருந்தேன். அதேபோல், சென்னை, திருச்சி ஆகிய இடங்களில் சில வங்கிகளில் பணத்தை பிரித்து டெபாசிட் செய்து வைத்திருந்தேன். பிச்சை எடுப்பது எளிதாக இருந்தாலும், இரவில் தங்குவது மிகவும் சிரமமாக இருந்தது. ஆகையால், வங்கிகளில் டெபாசிட் செய்திருந்த பணத்தை எடுத்து, தஞ்சையில் இடம் வாங்கி செட்டில் ஆகிவிட வேண்டும் என்ற ஆசையில் வந்தேன். ஒரு மாதமாக இடம் தேடியும், சரியான இடம் அமையவில்லை என்பதால், கையிலேயே பணத்தை வைத்து அலைந்து வருகிறேன். இவ்வாறு அப்துல் சமது கூறினார். மேலும், அவர் வைத்திருந்த, 6 லட்சத்து, 23 ஆயிரத்து, 930 ரூபாய்க்கு உரிய வங்கி ரசீதுகளை போலீசாரிடம் காட்டியதும், அவரை, "பணத்தை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்' என்று கூறி வியப்புடன் அனுப்பி வைத்தனர்.

-தினமலர்: செய்தி
06-12-2011

இந்த செய்தியை பார்த்தவுடன் உழைக்கும் பலருக்கும் இனி பிச்சை எடுத்து சாப்பிடலாம் என்ற எண்ணம் வரும். பொதுவாக பல மதங்களும் ஏழைகளுக்கு உதவுவதை வலியுறத்துகின்றன. அதிலும் குறிப்பாக இஸ்லாத்தில் சற்று அதிகமாகவே வலியுறுத்தப்பட்டுள்ளது. நோன்பு தொழுகை போன்ற வணக்கங்களை உடல் நலை சரியில்லாது யாராவது விட்டால் அதற்கு பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க சொல்லி இஸ்லாம் கட்டளையிடுகிறது. அதே போல் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட சில காரியங்களை சிலர் செய்து விட்டால் அதற்கு பரிகாரமாக 30 ஏழைகளுக்கு உணவளி: 40 ஏழைகளுக்கு உணவளி என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.


சில நேரங்களில் சாப்பாடு கொடுக்க ஏழைகளை தேடிச் செல்வோரும் உண்டு. வயது முதிர்ச்சி, கை கால்களில் ஊனம், சொந்தங்கள் கை விட்டு விடுதல் போன்ற காரணங்களால் பிச்சை எடுக்க தொடங்கி விடுகின்றனர். இவர்களைப் பற்றி பிரச்னையில்லை.

ஆனால் நல்ல உடல் ஆரோக்கியம் உள்ள நபர்களும் இதை ஒரு தொழிலாக நடத்த ஆரம்பித்து விடுகின்றனர். தங்களின் இயலாமையை எடுத்துச் சொல்வதற்காக பல பொய்களையும் இவர்கள் சொல்லத் தயங்குவதில்லை. இதனால் உண்மையாக பிச்சை எடுக்கும் தகுதியுடையவர்களுக்கு சிரமத்தையும் கொடுக்கிறார்கள்.

நாம் பிச்சை போடும்போது ஒரு ரூபாய் ஐந்து ரூபாய் என்று 1000 2000 என்று மாற்றி வைத்துக் கொண்டு வரிசையாக பொட்டுக் கொண்டு செல்கிறோம்.

இப்படி செய்வதால் நாம் பிச்சைக்காரர்களை இன்னும் ஊக்குவிக்கிறோம். 100 பேருக்கு சில்லறைகளாக கொடுக்கும் பணத்தை ஒருவரை தேர்ந்தடுத்து கொடுத்தால் அவர் பிச்சை தொழிலை விடுவதற்கு வாய்ப்பாக அமையும். ஒரு தள்ளு வண்டியோ, ஒரு பிளாட்பார கடையோ அமைத்து கொடுத்து 'இனி பிச்சை எடுப்பதை நான் பார்த்தால் நான் கொடுத்த பணத்தை திரும்ப தந்துவிட வேண்டும்' என்ற உறுதி மொழியோடு தர வேண்டும். இப்படி செய்வதற்கு எல்லோரும் முன் வந்தால் வெகு சீக்கிரத்தில் பிச்சைக்காரர்களை ஒழித்து விடலாம்.

மனிதனுக்கு சுயமரியாதை அவசியம். சுயமரியாதையை விற்று இப்படி தகுதியில்லாதவர்கள் பிச்சை எடுப்பவர்களை இஸ்லாமும் தடுக்கிறது. பிச்சை எடுத்தல் சம்பந்தமாக இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதனை பின் வரும் நபிமொழிகளில் பார்ப்போம்.


"ஒரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெனில் அவன் தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள எச்செல்வத்தையும் பெற்றிருக்க மாட்டான்; பிறரும் அவனுடைய நிலையை அறிந்து தர்மம் செய்ய மாட்டார்கள், தானும் வலியச் சென்று கேட்கமாட்டான்." (இத்தகையவனே உண்மையான ஏழையாவான்) (புஹாரி-1479)

இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள், மிம்பர் (வெள்ளிக்கிழமை ஜும்மா அன்று சொற்பொழிவு மேடை) மீதேறி, தர்மம், சுயமரியாதை, யாசகம் ஆகியவற்றைப் பற்றி உபதேசம் செய்துவிட்டு, ‘உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்ததாகும்; உயர்ந்த கை என்பது தர்மம் செய்யக்கூடியதும்; தாழ்ந்த கை என்பது யாசிக்கக் கூடியதும்” என்றும் கூறினார்கள். (புஹாரி-1429)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் : "என் உயிர் யாருடைய கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! உங்களில் ஒருவர் தம் கயிற்றை எடுத்துக் கொண்டு விறகு வெட்டி (கட்டி) அதைத்தம் முதுகில் சுமந்து (விற்று)சம்பாதிப்பது, ஒருவனிடம் வந்து யாசிப்பதைவிடச்சிறந்ததாகும். அவன் யாசிப்பவருக்கு கொடுக்கவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம்." (புஹாரி-1470)

ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார். நான், நபி(ஸல்) அவர்களிடம் (பொருளுதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, "ஹகீமே! நிச்சயமாக இச்செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் அபிவிருத்தி ஏற்படுத்தப்படும்; இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கிறவருக்கு அதில் அபிவிருத்தி ஏற்படுத்தப்படாது. அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன் போலாவான். உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது" எனக் கூறினார்கள்.

நான், இறைத்தூதர் அவர்களே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பி வைத்தவன் மீது ஆணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும் வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன் எனக் கூறினேன்.

அபுபக்கர்(ரலி) (ஆட்சிக் காலத்தில்) ஸகாத் பெறுமாறு ஹகீமை அழைத்தார். அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். பிறகு உமர்(ரலி) (தம் ஆட்சியில்) ஸகாத் பெறுமாறு அவரை அழைத்தார். அவர் எதையும் ஏற்க மறுத்தார். அப்போது உமர்(ரலி), ‘முஸ்லிம் சமுதாயமே! தம் உரிமையைப்பெறுமாறு நான் ஹகீமை அழைக்கிறேன். அவரோ அதைப் பெற மறுக்கிறார். இதற்கு நீங்கள் சாட்சி!’ எனக் கூறினார். ஹகீம் நபி(ஸல்) அவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும் வரை எதையும் கேட்கவேயில்லை என ஸயீத் இப்னு அல் முஸய்யப் கூறுகிறார். (புஹாரி-1472)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் "தேவைக்கு அதிகமாக மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவுகூடச்சதை இல்லாதவனாக மறுமை நாளில் வருவான்…" (புஹாரி-1474)

8 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,
மிக்க நல்லதொரு விழிப்புணர்வூட்டும் பதிவு. அருமை.

பிச்சை எடுப்பதை இஸ்லாம் எதிர்க்கும் விஷயத்தை,

'பிச்சைக்காரர்களை வெறுக்கும் இஸ்லாம்' ...என்று மேலும் சில ஆதாரங்களுடன் பதிவிட்டுள்ளேன்.

ஆக்கத்திற்கு நன்றி சகோ.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

'தர்மம் (ஜகாத்/சதகா) செய்பவர்கள், 'தாங்கள் எத்தனைபேருக்கு ஈந்தோம்..' என்றுதான் பார்க்கிறார்களே அன்றி, 'எவ்வளவு ஈந்தோம்...' என்று எண்ணிப்பார்ப்பதில்லை.

இதனால் இன்னும் பிச்சைக்காரர்கள் நிறைய உருவாகிறார்கள்.

இறைவன் வகுத்த ஜகாத் கணக்கு 2.5% / 5% / 10% / 20% என்று செல்வத்தின் அளவில்தான் போகிறதே அன்றி 2, 10, 100, 5000... என்று ஜகாத் பயனாளர்களை எண்ணவில்லையே..?

ஆதலால், அவர்களுக்கு சில்லரையாக வினியோகிப்பது ஜகாத் முறையாகாது. கடமையின் நோக்கமும் நிறை வேறாது. அல்லாஹ்வும் ஜகாத்தை வசூலிக்க கட்டளையிட, நபி(ஸல்) அவர்களும் வசூலித்துதான் தகுதியானவருக்கு விநியோகித்து உள்ளார்கள் என்பதை நாம் மறக்க கூடாது.'

இந்த இஸ்லாமிய அடிப்படையில்...

//100 பேருக்கு சில்லறைகளாக கொடுக்கும் பணத்தை ஒருவரை தேர்ந்தடுத்து கொடுத்தால் அவர் பிச்சை தொழிலை விடுவதற்கு வாய்ப்பாக அமையும்.//

//ஒரு தள்ளு வண்டியோ, ஒரு பிளாட்பார கடையோ அமைத்து கொடுத்து 'இனி பிச்சை எடுப்பதை நான் பார்த்தால் நான் கொடுத்த பணத்தை திரும்ப தந்துவிட வேண்டும்' என்ற உறுதி மொழியோடு தர வேண்டும்.//

---இஸ்லாமிய அரசு சார்ந்த 'பைத்துல்மால்' போன்றவை அனைவருக்கும் இல்லாத நிலையில், அருமையான தீர்வுடன் பக்குவமாக சிந்துக்கும்படி செய்தியை பகிர்ந்துள்ளீர்கள் சகோ.சுவனப்பிரியன். நன்றி.

dondu(#11168674346665545885) said...

//100 பேருக்கு சில்லறைகளாக கொடுக்கும் பணத்தை ஒருவரை தேர்ந்தடுத்து கொடுத்தால் அவர் பிச்சை தொழிலை விடுவதற்கு வாய்ப்பாக அமையும். ஒரு தள்ளு வண்டியோ, ஒரு பிளாட்பார கடையோ அமைத்து கொடுத்து 'இனி பிச்சை எடுப்பதை நான் பார்த்தால் நான் கொடுத்த பணத்தை திரும்ப தந்துவிட வேண்டும்' என்ற உறுதி மொழியோடு தர வேண்டும். இப்படி செய்வதற்கு எல்லோரும் முன் வந்தால் வெகு சீக்கிரத்தில் பிச்சைக்காரர்களை ஒழித்து விடலாம்.//
ஏதாவது நடக்கிற விஷயமா பேசுங்க சார். ஒருவரிடம் மொத்தப் பணத்தைக் கொடுத்தால் அவர் அதை வங்கியில் போட்டு விட்டு மீண்டும் பிச்சை எடுப்பார். உங்களால் என்ன செய்ய முடியும்? கேஸ் போடுவீர்களா?

அதற்குத்தான் நான் பிச்சையே போடுவதில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

suvanappiriyan said...

தங்கமணி!

//நான் குரூர வசனம், குருட்டுத்தனம் என்று சொல்வது உலகம் முழுவதும் உள்ள ஜிகாதிகள் செய்யும் அழிவு வேலைகளுக்கு அவர்கள் குரானின் குரூர வசனங்களை ஆதாரமாக சொல்வதாலேயே. அவை அப்படிப்பட்ட குரூர வசனங்கள் இல்லை என்று கருதினால், நீங்கள் பேச வேண்டியது என்னிடம் அல்ல. அவர்களிடம்தான்.//

மாலேகான் குண்டு வெடிப்பு, மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு, எ;னறு இந்தியாவில் முன்பு குண்ட வெடிப்பு நடந்தவுடன் உடனே முஸ்லிம்களை எந்த ஆதாரமும் இல்லாமல் கைது செய்து சிறையில் அடைத்தீர்க்ள். உளவுத் துறையே 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற புனைப் பெயரில் போலி ஈமெயில்களையும் உலவ விட்டது. முடிவில் இதனை செய்தது யார்?

ஹேமந்த் கர்கரே என்ற நேர்மையான ஆபிஸரின் முயற்ச்சியால் இந்துத்துவ வாதிகள் வரிசையாக கைதானார்கள். மும்பை துப்பாக்கி சூட்டை காரணமாக்கி அந்த நேர்மையான அதிகாரியையும் கொன்று விட்டனர் படுபாவிகள். இங்கு இந்துத்வ வாதிகள் என்றால் வெளி உலகில் மொசாததும், சிஐஏவும் அந்த காரியத்தை செய்கின்றன. ஒரு முறை ஈராக்கிய ராணுவ உடையில் சியா முஸ்லிம்களை இரண்டு பேர் கண்மூடித்தனமாக கொன்றனர். அவர்களை கிராம மக்கள் பிடித்து விட்டனர். முடிவில் அந்த உடைக்குள் இருந்தது நேட்டோ படையினர்.

சியாக்களையும் சன்னிகளையும் மோத விட்டு 'பாதுகாப்புக்கு நாங்கள் இருக்கிறோம்' என்று மேலும் ஒப்பந்தை நீடிக்கவே இத்தகைய கொலைகள்.

ஒரு சில முஸ்லிம்கள் உணர்ச்சிவசப்பட்டு அப்பாவிகளை கொல்வதும் நடக்கிறது. இதை ஒட்டு மொத்த சமூகமும் கண்டிக்கிறது. பாபரி மசூதி இடிப்புக்கு முனனால் இந்தியாவில் முஸ்லிம்கள் தீவிரவாதத்தில் ஈடுபட்டதில்லை. எனவெ இதற்கெல்லாம் மூல காரணம் அத்வானியே!

சில முஸலிம்கள் அப்பாவிகளை கொன்று விட்டு குர்ஆன் வசனங்களை காட்டுவதாக எங்கு படித்தீர்கள்? அந்த குர்ஆன் வசனங்கள் அனைத்தும் போர்க் களங்களிலே சொல்லப்பட்டவை என்று முன்பே விளக்கியிருக்கிறேன். இதை விட குரூரமான வசனங்களை மகாபாரதத்தில் இருந்தும், பைபிளிலிருந்தும் என்னால் எடுத்துக் காட்ட முடியும்.

ஒரு சில இந்துக்கள் குண்டு வைத்ததால் மொத்த இந்துக்களையும் யாரும் குறை சொல்வதில்லை. அவர்களின் வேதங்கள்தான் காரணம் என்றும் சொல்வதில்லை. ஏனெனில் இந்த காரியத்தை செய்தவர் வேதம் படித்த பிரக்யாசிங்,அசிமானந்தா, புரோகித் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ ஆசிக்!

//ஆதலால், அவர்களுக்கு சில்லரையாக வினியோகிப்பது ஜகாத் முறையாகாது.//

நான் இஸ்லாம் சொல்லும் ஜகாத் முறையை இஙகு குறிப்பிடவில்லை. தர்ம சிந்தனையோடு ஏழைகளுக்கு உதவும் அனைத்து தரப்ப மக்களையும் உத்தேசித்தே மேற்கண்ட இடுகையை எழுதினேன்.

இஸ்லாம் கூறும் ஜகாத் முறையும் பைத்துல் மாலும் முறையாக செயல்பட ஆரம்பித்தால் வறுமையற்ற சமூகத்தை கொண்டு வந்து விடலாம்.

உங்கள் இடுகையும் சிறப்பாக இருந்தது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

டோண்டு சார்!

//ஏதாவது நடக்கிற விஷயமா பேசுங்க சார். ஒருவரிடம் மொத்தப் பணத்தைக் கொடுத்தால் அவர் அதை வங்கியில் போட்டு விட்டு மீண்டும் பிச்சை எடுப்பார். உங்களால் என்ன செய்ய முடியும்? கேஸ் போடுவீர்களா?//

நான் சொன்னது நடந்திருக்கிறது. எனது உறவினர் ஒருவர் ஒரு பிச்சைக்காரருக்கு சலவைப் பெட்டியும், தள்ளு வண்டியும் இலவசமாக கொடுதது அவரை பிச்சை தொழிலிலிருந்து விடுவித்துள்ளார். இன்று கௌரமாக வாழ்ந்து வருகிறார். ஒரு சிலர் திரும்பவும் இந்த தொழிலுக்கு வந்தால் அதனை சட்டை செய்யாது பெரும்பான்மையோரை கருத்தில் கொண்டு செயல்படுவதுதான் உசிதம். உங்களைப் பொன்ற வசதி படைத்தவர்கள் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை போன்றாவது கொடுக்கலாம். செய்து வருவீர்கள் என்று நம்புகிறேன்.

உடல்நிலை தற்போது தேவலாமா? மீண்டும் வழக்கம் போல் பதிவுகள் எழுதுவது கண்டு மகிழ்ச்சி! நீங்கள் களத்தில் இறங்கினால்தான் பதிவுலகில் ஒரு சுறுசுறுப்பே வருகிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

நான் இசுலாமியன் அன்று. எனக்கு இக்கட்டுரையில் சொல்லப்படும் மொழிபெயர்ப்பாளரைப்பற்றி யாதொன்றும் தெரியாது. நிற்க. தங்கமணியின் கூற்றுக்களுக்கே வருவோம்.

தங்கமணி,

இக்கட்டுரைக்கும் இன்றைய மத அரசியலுக்கும் தொடர்பில்லை. இசுலாமியரின் புனித நூல் உருவாக்கப்பட்ட போது நீங்கள் சொல்லும் ஜிஹாதிகள் கிடையா. எனவே இக்க்கட்டுரைப்பொருள் இசுலாமியரின் புனித நூலைப்பற்றியும் அதன் தமிழ் மொழிபெயர்ப்பைப்பற்றியும் மட்டுமே.
அதன்படி,
இந்நூல் எழதப்படவில்லை. வாங்கப்பட்டது இறைவனிடமிருந்து. வாங்கியவர் மறைத்தூதர் எனவழைக்கப்படும் முஹம்மது நபி. வாங்கி அவர் இசுலாமியருக்குக் கொடுத்தார். ஆக, அவரின் படிப்பு, பொது அறிவு, மற்ற உலகஞானம் – இவற்றுக்கெல்லாம் இங்கு வேலையுமில்லை; ஆராய்ச்சியும் இல்லை.
அவரிடம் கொடுக்கப்பட்டதா? ஏன் கொடுக்கப்பட்டது? எவரால்? என்ற கேள்விகளுக்கானப் பதில்களை நீங்கள் நம்பினால் நம்புங்கள்; நம்பாவிட்டால் போங்கள்.
நீங்கள் நம்புகிறீர்கள் பகவத் கீதையை பகவானே அருளினார் குருச்சேத்திர போர்க்களத்தில். ஆழ்வார்கள் மனிதர்கள் அல்ல; திருமாலில் திருஅவதாரங்கள். இல்லையா? அதைப்போலவே இதுவும். அப்படியே விட்டுவிடுங்கள்.
அப்படி நீங்கள் ஆராயத்துணிந்தால், அதை நீங்கள் ஒரு இந்து, அல்லது கிருத்துவர், அல்லது இசுலாமியர் என்ற இட்த்தில் நின்றுகொண்டு செய்ய முடியாது. அதில் காழ்ப்புணர்ச்சிகளுக்கு மட்டுமே இடமிருக்கும். உங்கள் மதத்தை உயர்வாக வைத்து பிறமதங்களை எப்படி இகழலாம் என்றே நோக்குவீர்கள். மதவாராய்ச்சிகள் பலகலைக்கழகங்களிலும் நடக்கின்றன. அவை நாகரிமானவை. உங்களால் முடியாது. நீங்கள் இந்துத்வா எழுத்தாளர்.

ஆதிகாலத்தில் நாம் நிற்கிறோம். எனவே இக்காலத்திற்கு வரவேண்டாம். அப்படி வருவது நீங்கள் ஒரு உள்ளோக்கத்தோடு பின்னூட்டமிட்டு இசுலாமியரையும் இசுலாத்தை பொதுவரங்கில் இழிவுபடுத்தவே என்பதாகிறது.
மதங்களையும் மத நூலகளின் மொழிபெயர்ப்புக்களையும் நாம் ஒரு கருத்தை அல்லது நான் என் கருத்தை இங்கு வைக்கலாம். அக்கருத்து இக்கட்டுரைக்கும் சாலப்பொருந்தும்.

மறுமடலில்.
-Kavya

Thanks Kavya

Anonymous said...

http://www.arabnews.com/saudiarabia/article475414.ece
Despite laws, begging on the rise
By MD HUMAIDAN | ARAB NEWS

Published: Jul 21, 2011 00:25 Updated: Jul 21, 2011 00:25

JEDDAH: The number of beggars in the country exceeds the estimated figure of 150,000 quoted by government statistics, researchers say.

“The number of beggars is much higher than what the latest statistics indicate. More than 87 percent of the beggars are foreigners who come from neighboring countries in the south and the north,” one researcher told Arab News Wednesday. He did not want his name to be published.

He said this was despite the fact that border guards and police along the southern border are constantly trying to stop large numbers of infiltrators who enter the Kingdom with the sole purpose of begging during the peak seasons of Ramadan and Haj.

Arab News has noted growing numbers of beggars along the streets of Jeddah, especially at traffic signals, near malls and entertainment centers.

The majority of the beggars hailing from neighboring countries consist not only of old men, women and children but also young men who are strong and able to work.

Another remarkable feature is that begging continues throughout the day and night. Even women and young children stay till the early hours.

Beggars have also returned in hordes to mosques after their numbers dropping sharply a few months ago following a circular by the Ministry of Islamic Affairs, Endowments, Call and Guidance to imams asking them to help curb begging.

Commenting on the growing phenomenon, some citizens said beggars were now coming right to their homes. “They do not hesitate to knock on the door, especially in the afternoons, to ask for money. This is a grave matter with serious security implications,” one citizen said. He did not want to be identified.

A number of concerned officials and citizens criticized the offices to combat begging and said they were unable to deal with the large number of beggars in the country.

They accused officials of slackness and laziness in their response to calls by citizens informing them of beggars at certain places. “We are asked to call these offices to report beggars but there is no one there to heed our calls,” a citizen said. There are eight offices all over the Kingdom to combat begging in addition to offices that follow up such cases.

The citizens asked the Ministry of Social Affairs to either put pressure on these offices or close them down. They also asked to provide these offices with qualified human cadre, cars and other facilities and to introduce a single helpline to handle reports of beggars.

Many citizens who spoke to Arab News believed that many beggars deported home come back very soon to the Kingdom to continue their business. They said security procedures to combat begging must be revamped.

Researchers and academics interviewed by Arab News believe that awareness programs against begging have not been effective. They said these programs have so far failed to reduce the sympathy of residents toward beggars.

They called for more effective programs that would convince people about the dangers posed by beggars. They also said the programs should inform people about where they should direct their charity given that the country is full of welfare societies that administer charity properly to the poor.