Followers

Wednesday, December 21, 2011

வெள்ளை மாளிகை முன்பு தொழும் ஒரு முஸ்லிம்!




ஒரு மனிதன் தனது இறை கடமையை செய்வதற்கு எந்த அளவு எதிர்ப்பு வருகிறது என்பதை பாருங்கள். உலகிலேயே நாகரிகமானவர்கள் என்று தம்பட்டம் அடிக்கும் அமெரிக்கர்கள் தொழும் ஒரு அடியானிடம் நடந்து கொள்ளும் முறை இதுதானா?

'தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா? அவர் நேர்வழியில் இருப்பதையோ, அல்லது இறையச்சத்தை ஏவுவதையோ அவன் பொய்யனெக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா?

அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?'

-குர்ஆன் 96:9,10,11,12,13,14.


1400 ஆண்டுகளுக்கு முன்பு இறங்கிய இந்த வசனம் இன்று அமெரிக்காவில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு எவ்வளவு அருமையாக பொருந்துகிறது என்பதை எண்ணி வியந்து போகிறேன். இந்த முஸ்லிம் குடித்து விட்டு தரையில் உருளவில்லை. அல்லது எந்த பெண்ணிடமும் தவறாக நடக்கவில்லை. எந்த ஒரு குற்றமும் செய்யவில்லை.

தொழ வேண்டிய நேரம் வந்தவுடன் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் ஒரு ஓரமாக தனது இறைவனை பிரார்த்திப்பதுதான் இவர்களை இந்த அளவு எரிச்சல்படுத்துகிறது. இது போன்று கேலியும் கிண்டலும் அடிக்கும் கூட்டத்தைப் பார்த்து இறைவன் மேலும் கூறுகிறான்.....

'தொழுகைக்கு நீங்கள் அழைக்கும் போது அதை அவர்கள் கேலியாகவும் விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டனர். அவர்கள் விளங்காத கூட்டத்தினராக இருப்பதே இதற்குக் காரணம்'
-குர்ஆன் 5:58

இத்தனை தூரம் காட்டு கத்தல்கள் வந்தாலும் அதைப் பற்றி எந்த ஒரு கவலையும் படாமல தனது உயிரைப் பற்றியும் கவலைப்படாமல் இறை வணக்கத்தில் ஈடுபட்டிருக்கும் இவரின் நெஞ்சுரத்தை எண்ணி வியக்கிறோம்.

'நம்பிக்கைக் கொண்டோர் வெற்றிப் பெற்று விட்டனர். அவர்கள் தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணர்களைப் புறக்கணிப்பார்கள்'
-குர்ஆன் 23:1,2,3


ஆம்...அந்த முஸ்லிம் வெற்றி பெற்று விட்டார். பணிவுடன் தொழுகவும் செய்கிறார். கரடியாகக் கத்தும் அந்த வீணர்களைப் புறக்கணித்தும் விட்டார்.

30 comments:

Thozhirkalam Channel said...

தொடர்ந்து சிறப்பான பதிவுகளை தரும் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்..

வாழ்த்துக்களுடன்

VANJOOR said...

அருட்கொடையாம் தொழுகை

ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி (ஒழு) செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி
உட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா?

ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.

இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.

ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?

சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.

ஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்
இறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா ?

உலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.

இதன் சூட்சுமம் அளவிலடங்காதது.

உலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற
உண்மை உணர்ந்தீரா?

தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,

நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது
நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?

உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.

பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து

"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.
ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '
என கூறுகிறார்.

தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் "பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்."

தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.

தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.

தொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள்.

திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.

நமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை.

தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.
********
எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!!

அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் . “தொழுகை .”

மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும்,

ஊணத்திலும், நலத்திலும்,

பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்……எல்லா சூழ்நிலைக‌ளிலும் அகிலத்தில் ஒவ்வொரு விநாடியும் அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் தொழும் முஸ்லீம்கள்.

சொடுக்கி விடியோக்கள் காணவும்.

>>>>> அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். <<<<<<


.

நட்புடன் ஜமால் said...

சுப் ஹானல்லாஹ் ...

suvanappiriyan said...

வாஞ்சூர் பாய்!

//அருட்கொடையாம் தொழுகை

ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி (ஒழு) செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி
உட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா?.........//

பதிவு சம்பந்தமாக நீண்ட மேலதிக விளக்கம் கொடுத்ததற்கு நன்றி! சுட்டிகளை இணைத்ததற்கும் நன்றி!

suvanappiriyan said...

Cpede News!

//தொடர்ந்து சிறப்பான பதிவுகளை தரும் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்..//

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

suvanappiriyan said...

திரு நடபுடன் ஜமால்!

//சுப் ஹானல்லாஹ் ...//

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

suvanappiriyan said...

ஆன்லைன் ஒர்க்ஸ்!

//World No.1 Money Making Site. 100% Without Investment Job.

Visit Here: http://adf.ly/4FKbj//

வருகைக்கும் விளம்பரத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்,
அட... இத்தனை இடையூறுகளா..?
இருந்தும் இவர் உறுதியோ உறுதி..!
சுபஹானல்லாஹ்.

இந்த கானொளியில் என்னை கவர்ந்த ஒரு விஷயம்... "Jesus Loves You" என்ற போர்டுதான்.

"ஜீசஸ்... ஜீசஸ்" என்று அவர்களால் அழைக்கப்படும்... நபி ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு நிச்சயமாக இந்த தொழுகையாளியை ரொம்பவும் பிடிக்கும்..!

நெஞ்சுரம் ஊட்டக்கூடிய பதிவு. Jazaakkalaah Khair.

zalha said...

அஸ்ஸலாமு அலைக்கும்!!
சுபஹானல்லாஹ்!! அந்த சகோதரரின் இறையச்சம் உள்ளத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அல்லாஹ் நம் அனைவரினதும் இறையச்சத்தை அதிகப்படுத்துவானாக!!

ad said...

அவர்கள் இவ்வாறுசெய்து அந்த முஸ்லிமையோ அல்லது அல்லாவையோ அவமதிக்கவில்லை.அவர்கள் தங்களையும் ஜேசுவையுமே அவதித்துக்கொள்கிறார்கள்.

suvanappiriyan said...

சலாம் சகோ. ஆஷிக்!

//"ஜீசஸ்... ஜீசஸ்" என்று அவர்களால் அழைக்கப்படும்... நபி ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு நிச்சயமாக இந்த தொழுகையாளியை ரொம்பவும் பிடிக்கும்..!

நெஞ்சுரம் ஊட்டக்கூடிய பதிவு. Jazaakkalaah Khair.//

அந்த ஏசு போதித்த உண்மையான ஏவல்களை தொலைதது விட்டு இன்று பரிதாபமாக நிற்கிறது கிறித்தவ உலகம்.

"நான் உங்களுக்குக் கற்பிக்கின்ற வசனத்தோடே நீங்கள் ஒன்றும் கூட்டவும் வேண்டாம், குறைக்கவும் வேண்டாம்." -(உபாகமம் 4:2) "நான் உனக்கு விதிக்கின்ற யாவையும் செய்யும்படி கவனமாயிரு! நீ அதனோடு கூட்டவும் வேண்டாம், குறைக்கவும் வேண்டாம்." - (உபாகமம் 12:32)

என்று சொல்லிக் கொண்டே வருடம் ஒரு புது சேர்த்தலுடன் பைபிளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் ஜல்ஹா!

//அஸ்ஸலாமு அலைக்கும்!!
சுபஹானல்லாஹ்!! அந்த சகோதரரின் இறையச்சம் உள்ளத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அல்லாஹ் நம் அனைவரினதும் இறையச்சத்தை அதிகப்படுத்துவானாக!!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

திரு கேதரன்!

//அவர்கள் இவ்வாறுசெய்து அந்த முஸ்லிமையோ அல்லது அல்லாவையோ அவமதிக்கவில்லை.அவர்கள் தங்களையும் ஜேசுவையுமே அவதித்துக்கொள்கிறார்கள்.//

“பூமியில் உள்ள யாரையும் உங்கள் பிதா என அழைக்காதீர்கள். பரலோகத்தில் இருக்கிற கர்த்தரே உங்களுக்கு பிதாவாக இருக்கிறார்”

பைபிளில் வரும் இந்த வசனத்தை சரிவர புரிந்து கொண்டோமானால் பல குழப்பங்கள் விலகும்.

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

பாண்டியன்!

//சிலியில் ஏற்பட்ட பூகம்பம் அதில் மாட்டி கொண்டவர்களின் மன நிலை என்பது பற்றி எல்லாம் ஆராயப்பட்ட கட்டுரைகள் நம் முன்ன கொட்டிகிடக்கும் போது இந்த மாத்ரி வார்த்தை ஜாலம் வைத்து ஊரை எமாரூபவரை என்னவென்று சொல்வது//

ஒன்றும் சொல்ல வேண்டாம்! சிலி நாட்டில் பூகம்பம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டால் அதை நிவர்த்தி செய்ய அந்நாட்டு அரசாங்கம் உண்டு. அல்லது ஐக்கிய நாடுகள் சபை உண்டு. ஆனால் பிராமணரின் எச்சில் இலையில் புரளும் அந்த தலித்களுக்கும் மற்றும் பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி, திண்ணியம் கொடுமைகளுக்கும் நமது நாட்டில் அந்த மக்களுக்கு இன்று வரை ஒரு தீர்வை நமது அரசால் கொடுக்க முடியவில்லை. அதற்கு காரணம் என்ன? இப்படி ஒரு பழக்கம் இந்த மக்கள் மனத்திலே வேரூன்ற மூல காரணம் எது? என்று சிந்தித்து அந்த மக்களின் விடிவுக்கு ஒரு வழியை கண்டுபிடிக்க பாருங்கள். அதன்பிறகு சிலிக்கோ, பிலிப்பைனுக்கோ செல்லலாம்.

Anonymous said...

முகமது அல் வாரக் இஸ்லாம் பத்தி சொல்வதை கேளு!
Al-Warraq was skeptical of the existence of Allah because "He who orders his slave to do things that he knows him to be incapable of doing, then punishes him, is a fool." Warraq also doubted claims portraying Muhammad as a prophet:[1]


That Muhammad could predict certain events does not prove that he was a prophet: he may have been able to guess successfully, but this does not mean that he had real knowledge of the future. And certainly the fact that he was able to recount events from the past does not prove that he was a prophet, because he could have read about those events in the Bible and, if he was illiterate, he could still have had the Bible read to him.[1]



Al-Warraq challenged the notion that Islam was a revealed religion. He argued that if humans are capable of figuring out that, for instance, it is good to be forgiving, then a prophet is unnecessary, and that we should not heed the claims of self-appointed prophets if what is claimed is found to be contrary to good sense and reason. Warraq admired the intellect not for its capacity to submit to a god, but rather for its inquisitiveness towards the wonders of science. He explained that people developed the science of astronomy by gazing at the sky, and that no prophet was necessary to show them how to gaze. He also said that no prophets were needed to show them how to make flutes, either, or how to play them.[1]

ரவி said...

ஹிந்து மதத்தை இழிந்து எண்கள் மனதை புன்படுத்துவதுதான் இறைவன் உங்களுக்கு சொல்லி கொடுத்ததா?உங்கள் மதத்தின் பெருமை எவ்வளவு வேணும்னாலும் சொல்லிக்கோ!ஆனால் ஹிந்து மதத்தை இழிய வேண்டாம்!அடுத்தவன் மனதை புண்படுத்த எந்த இறைவனும் சொல்லவில்லை!கொஞ்சம் யோசி!

Aashiq Ahamed said...

சலாம் சகோதரர்,

சுப்ஹானல்லாஹ்...எதற்கும் சட்டைசெய்யாத மனது...

இறைவா, எங்களின் ஈமானை அதிகப்படுத்துவாயாக...ஆமீன்..

வஸ்ஸலாம்

suvanappiriyan said...

திரு ரவி!

//ஹிந்து மதத்தை இழிந்து எண்கள் மனதை புன்படுத்துவதுதான் இறைவன் உங்களுக்கு சொல்லி கொடுத்ததா?உங்கள் மதத்தின் பெருமை எவ்வளவு வேணும்னாலும் சொல்லிக்கோ!ஆனால் ஹிந்து மதத்தை இழிய வேண்டாம்!அடுத்தவன் மனதை புண்படுத்த எந்த இறைவனும் சொல்லவில்லை!கொஞ்சம் யோசி!//

இங்கு யார் எந்த மதத்தை இழிவுபடுத்துகின்றனர் என்பதை காணொளியில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். எனது முந்தய பதிவை யொட்டியது உங்கள் கருத்து எனில் அதற்கு பதிலளிக்கிறேன்.

நம்மைப் போன்ற மல ஜலங்களை சுமநத ஒரு மனிதன் சாப்பிட்ட எச்சில் இலையில் புரண்டால் உடல் நலமாகும் என்பது அறிவுடைய செயலா? இப்படி ஒரு சம்பவம் நடந்ததை எண்ணி வருந்தி அதைத் தடுக்க நீங்கள் முயன்றிருக்க வேண்டும். அதை விடுத்து சுட்டிக்காட்டிய என் மேல் பாய்வது எந்த வகை நியாயம். ஒருவன் நெற்றியில் பிறந்தான் சூத்திரன் காலில் பிறந்தான் என்று மனிதர்களை பிரித்து அதற்கு மத அங்கீகாரமும் கொடுத்து அதை ஆதரிக்கும் உங்களைப் பார்த்தால் பரிதாபமே மிஞ்சுகிறது. கோபம் வரவில்லை.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ. ஆஷிக்!

//சுப்ஹானல்லாஹ்...எதற்கும் சட்டைசெய்யாத மனது...

இறைவா, எங்களின் ஈமானை அதிகப்படுத்துவாயாக...ஆமீன்..//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

அனானி!

//முகமது அல் வாரக் இஸ்லாம் பத்தி சொல்வதை கேளு!//

அவர் வைக்கும் அத்தனை கேள்விகளுக்கும் அறிஞர்களால் முன்னரே பதில் கொடுத்தாகி விட்டது. உங்களுக்கு என்ன சந்தேகம் என்பதை தனியாக எழுதுங்கள். பதில் தர முயற்ச்சிக்கிறேன்.

Anonymous said...

//ஒரு மனிதன் தனது இறை கடமையை செய்வதற்கு எந்த அளவு எதிர்ப்பு வருகிறது என்பதை பாருங்கள். உலகிலேயே நாகரிகமானவர்கள் என்று தம்பட்டம் அடிக்கும் அமெரிக்கர்கள் தொழும் ஒரு அடியானிடம் நடந்து கொள்ளும் முறை இதுதானா?//
ஒரு முஸ்லிம் தொழுகிறார், சில வேலை இல்லாதவர்கள் கிண்டல் செய்கிறார்கள். தொழுகை முடிந்தவுடன் அவர் பத்திரமாக செல்கிறார். இது காபிர்களின் தேசத்தில் நடந்தது,, ஆனால் அல்லாவின் ஆட்சி நடக்கும் சவுதியில் ஒரு வேற்று மதத்தை சேர்ந்தவன் இப்படி பொது இடத்தில் தான் நம்பும் இறைவனை வணங்க முடியுமா. அப்படி வணங்கிவிட்டு உயிருடன் திரும்ப முடியுமா? சவுதி இஸ்லாமிய நாடு அங்கே முஸ்லிம்கள் அதிகம். இஸ்லாமிய சட்டம் அங்கே இருக்கிறது என்று ஊத்தை பதிலை தான் உங்களால் சொல்ல முடியும். பிற மதத்தவரை தனது பள்ளிவாசலுக்குள் அனுமதிக்காத, தனது ஊருக்குள் அனுமதிக்காத இவர்கள் தான் தனக்கு அது போன்ற ஒன்று நேரும்போது கூச்சல் போடுகிறார்கள். அதே வாயால் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் பிராமணர்கள் சாதியால் பிரிகிறார்கள், அவர்கள் கோவிலுக்குள் தலித்துகளை அனுமதிப்பதில்லை, தீண்டாமை செய்கிறார்கள் என்றும் கூறுவார்கள். உங்கள் மத நம்பிக்கைபடி பிற மதத்தவரை காபிர் என்பதும், அவர்களை நீங்கள் பெரும்பான்மையினராக இருக்கும் நாடுகளில் அவமதிப்பதும் நடக்கும்போது, அமெரிக்கர்கள் செய்ததில் எந்த தவறும் இல்லை.

suvanappiriyan said...

வேதம் கோபால்!

//எதற்கோ ரத்தவிளாரியாக மார்பில் அடித்து கொள்வது, புலாலுக்காக பிராணிகளை பாதிகழுத்தை அறுத்து அது துடிதுடிக்க சாகும் வரை காத்திருந்து ஜிவ இம்சைசெய்தல். பெண்களை சுகாதாரம் அற்ற ஒரு கருப்பு துணியால் மூடுதல் ¬//

மார்பில் ரத்தம் வரும்வரை அடித்துக் கொள்வது இஸ்லாம் தடை செய்த ஒரு பழக்கம். இப்படி மார்பில் அடித்துக் கொள்ளச் சொல்லி குர்ஆனிலோ ஹதீதிலோ எங்கும் நீங்கள பார்க்க முடியாது. இந்த தவறை விளக்கி பிரசாரம் செய்து வருகிறோம். கூடிய விரைவில் தமிழகத்தில் இது நிறுத்தப்படும்.

அடுத்து புலாலுக்காக மிருகங்களின் கழுத்தை பாதி அறுத்து ரத்தத்தை வெளியேற்றுவது மருத்துவர்களின் கூற்றுப்படி சிறந்ததே! இந்துக்களில் சிலர் மிருகங்களை அடித்து கொல்கிறார்கள். ரத்தம் வெளியேற்றாமல் இப்படி சமைப்பது உடலுக்கு தீங்கை வரவழைக்கும் என்பது மருத்துவ அறிக்கை. மேலும் புரதச் சத்து மாமிசங்களிலேயே கிடைக்கிறது. அடுத்து ஆடு மாடு கோழி முதலான வற்றையே மனிதரகள் அதிகம் சாப்பிடுகின்றனர். இவை நாளுக்கு நாள் எண்ணிக்கையில் அதிகரித்தே வருகின்றன. மனிதர்கள் சாப்பிடாத புலி, சிங்கம் போன்ற உயிரினங்கள் உலகில் எண்ணிக்கையில் குறைந்து வருவதையும் பார்க்கிறோம். கோழி மாடு ஆடுகள் குறிப்பிட்ட சதவீதம் அறுக்கப்பட வில்லை என்றால் அவை எண்ணிக்கையில் அதிகமாகி சுற்றுப்புற சூழலுக்கு கேட்டையும் விளைவிக்கும். மேலும் குறிப்பிட்ட சாரார் புலால் உண்ணுவதாலேயே காய்கறிகளின் விலை ஒரு கட்டுக்குள் இருக்கிறது. எல்லோரும் காய்கறியின் பக்கம் வந்து விட்டால் காய்கறிகளின் விலை தாறுமாறாக ஏறி விடாதா?

suvanappiriyan said...

தங்கமணி!

//அதே போல தமிழ் முஸ்லீம் பெண்கள் பர்தா போட்டு உடலை மூடுவதால், விட்டமின் டி குறைபாடு ஏற்பட்டு ரிக்கட்ஸ் என்ற வியாதி உருவாகிறது. இஸ்லாமிய மூட நம்பிக்கை காரணமாக தமிழ் பெண்களில் ஒருசாராருக்கு இவ்வாறு ரிக்கட்ஸ் வியாதி வந்து அவர்களதுஎலும்புகள் வலுவிழந்து கால்கள் வாத்து கால்கள் போல வளைந்து விடுகின்றன.//

தமிழகத்தில் மட்டும் அல்ல. உலகம் முழவதும் முகம், கை தவிர மற்ற உறுப்பகளை கருப்பு அங்கியால் மூடும் வழக்கம் பரவலாக உள்ளது. எந்த நாட்டு பெண்களின் கால்கள் வளைந்து விட்டதாக சொல்கிறீர்கள்? மருத்துவர்களின் ரிப்போர்ட் ஏதாவது இருக்கிறதா? வெயில் நேரிடையாக மேனியில் தொடர்ந்து படுவதால உடலுக்கு கேடு என்றும் வெளியில் சென்றால் உடலை முடுவது சுகாதாரமே என்றும் நான் படித்துள்ளேன். உங்கள் குற்றச்சாட்டுக்கு ஆதாரத்தை தரவும்.

மேலும் புர்கா போடுவதால் அது அந்த பெண்ணின் தனிப்பட்ட உரிமையாகிறது. ஆனால் மற்றொருவருடைய எச்சில் இலையில் புரள்வது என்பது புரளும் மனிதனின் சுயமரியாதை சம்பந்தப்பட்டது. இரண்டையும் எப்படி ஒன்றாகப் பார்க்கிறீர்கள்? முஸ்லிம் பெண்கள் போடும் முக்காட்டைப் போன்றே வட நாட்டு இந்துப் பெண்கள் இன்றும் தலையை மறைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வடநாட்டு மார்வாடிப் பெண்களுக்கு கால் சூம்பிப் போனதாக நான் எங்கும் கேள்விப்படவில்லை.

suvanappiriyan said...

அனானி!

//உங்கள் மத நம்பிக்கைபடி பிற மதத்தவரை காபிர் என்பதும், அவர்களை நீங்கள் பெரும்பான்மையினராக இருக்கும் நாடுகளில் அவமதிப்பதும் நடக்கும்போது, அமெரிக்கர்கள் செய்ததில் எந்த தவறும் இல்லை.//

”முஸ்லிமல்லாத குடிமகன் ஒருவனுக்கு ஒரு முஸ்லிம் அநீதியிழைத்துவிட்டாலோ- அவனது உரிமைகயைப் பறித்தாலோ அவனது பொருள் எதையேனும் பலவந்தமாக எடுத்துக் கொண்டாலோ நான் மறுமைநாளில் இறைவனின் நீதிமன்றத்தில் அந்த முஸ்லிமுக்கு எதிராகத் தொடுக்கப்படும் வழக்கில் அந்த முஸ்லிமல்லாத குடிமகனின் வழக்கறிஞராக வாதாடுவேன் “(நூல்:அபூதாவூத்)

ஜனாதிபதி உமர் பைத்துல் முகத்தஸை கைப்பற்றிய போது எழுதியளித்த ஒப்பந்த வரிகள்:

’அவர்களுடைய உயிர்கள் உடைமைகள் அவர்களுடைய தேவாலயங்கள் மடாலயங்கள் அவர்களிலுள்ள நலமுள்ளவர்கள் நோயுள்ளவர்கள் அனைவருக்கும் அபயம் அளிக்கப்படும் “எலியா”வின் சமயத்தவர் அனைவருக்குமே! அவ்ர்களுடைய வழிபாட்டிடங்கள் முஸ்லிம்களின் வசிப்பிடங்களாக ஆக்கப்படமாட்டாது அவை தகர்க்கப்பட மாட்டாது. அவற்றின் கட்டுமானத்திலும் சுற்றுச் சுவர் களிலும் எத்தகைய மாறுதலும் மேற்கொள்ளப்பட மாட்டாது.அவர்களுடைய சிலுவைகளுக்கோ சொத்துக்கோ எவ்வித சேதமும் ஏற்படாது. சமய விவகாரங்களில் அவர்கள் வற்புறுத்தப்பட மாட்டார்கள்.அவர்கள் யாரும் தொல்லைப்படுத்தப்படவும் மாட்டார்கள்.-என்று உறுதிமொழி அளிக்கப்படுகின்றது.

மேலே பார்க்கும் இதுதான் இஸ்லாமிய நடைமுறை.

சவுதியைப் பொறுத்தவரையில் அந்நாட்டுக்கு சட்டத்துக்கு உட்பட்டுத்தான் பணி புரிவேன் என்று ஒப்பந்தத்தின் அடிப்பiடையில் நீங்கள் அங்கு வருகிறீர்கள். ஆனால் அமெரிக்காவின் சட்டம் அதுவல்ல. இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது.

'காஃபிர்' என்ற சொல் ஏதோ அவமானகரமான சொல் என்ற புரிதலில் கேடடிருக்கிறீர்கள். காபிர் என்ற சொல்லுக்கு இறை மறுப்பாளன் என்ற பொருள் வரும். அரபு அகராதியைப் படியுங்கள். விளக்கம் பெறுவீர்கள்.

suvanappiriyan said...

தங்கமணி!

//சரியான பதிலை தந்துவிட்டாலோ, அல்லது உங்களுக்கு சிக்கலான விஷயத்தை பேச ஆரம்பித்தாலோ ஓடிவிடுவீர்கள் என்பது என் அனுபவம்.
இப்போதும் அப்படித்தானா?//

நைஜீரியாவில் இந்த நோய் இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இதற்கு காரணம் புர்கா போட்டதனால் அல்ல. வல்லரசுகளின ஆதிக்க போட்டியினால் அந்த நாடு இன்று பொருளாதாரத்தில் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அந்த மக்களுக்கு இந்த நோய் வந்தது ஊட்டச்சத்து குறைவினால்.

மேலும் இது போன்ற நோய்கள் வருவதற்கு மூல காரணம் ரத்த பந்தங்களுக்குள் திருமண உறவு வைத்துக் கொள்வதே. இதைத் தடுத்தாலே அந்த நோயை மிக இலகுவாக கட்டுப்படுத்தி விடலாம். புரதச் சத்து குறைவும் ஒரு காரணம். அசைவப்பிரியர்களாக மாறினாலும் இந்த நோயிலிருந்து தப்பலாம்.

அடுத்து சவுதி அரேபிய பெண்களைப் பற்றி ஒரு சுட்டி கொடுத்துள்ளீர்கள். அதில் உள்ள விபரத்தை எந்த இடத்தில் இந்த சர்வேயை எடுத்தனர் என்பதை பார்க்க போனால் அதற்கு புத்தகத்தை வாங்க வேண்டுமாம. இப்படி ஒரு தலைப்பை வைத்தால் கல்லா கட்டுவதற்கு ஏதுவாக இருக்கும் என்று ஆசிரியர் நினைத்திருக்கலாம். எனவெ அதன் உள் உங்கள் வாதத்துக்கு ஆதரவான என்ன கருத்து உள்ளது என்பதை அறிய தாருங்கள். நான் இருபது வருடமாக சவுதியில் இருந்தும் இப்படி ஒரு செய்தியை எங்கும் கேள்விப்படவில்லை.

மேலும் ஒரு ஆராய்ச்சி இந்தியாவிலும கணிசமாக இந்த நோய் இருக்கிறது என்று இந்த சுட்டி சொல்கிறது. இந்தியாவில் புர்கா போடாத பெண்கள்தானே பெரும்பான்மை. இந்தியாவிற்குள் இந்த நோய் எப்படி வந்தது. எனவே இந்த நோய்க்கு புர்கா காரணம் அல்ல. மேலும் சல்வார் கமீஸ் அணிந்து மேலதிகமாக தலையில் ஒரு துப்பட்டாவை போடுவதுதான் முஸ்லிம்களின் புர்கா. மேலதிகமாக கருத்த மெல்லிய ஆடையை அணிகிறார்கள். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இனி பெண்கள் ஆடையில்லாமல்தான் வெளியில் வர வேண்டும் என்று சொல்வது போல இருக்கிறது.

http://www.ajcn.org/content/81/5/1060.short

suvanappiriyan said...

புனை பெயரில்!

//மதமாறியதால் உயர்வு என்பதும் மூட நம்பிக்கையே… ரஹமானின் -திலீப்புங்க – வியாதி ஒரு மாந்திரிகத்தால் குணமடைந்தால் அப்புறம் எதற்கு அராபுகள் அப்போலா ஹாஸ்பிட்டலுக்கு வருகிறார்கள்…? அது மாதிரி இதுவும் நம்பிக்கை….//

ரஹ்மானின் உயர்வுக்கு 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று அவரே மேடைதோறும் முழங்கி வருகிறார். அடுத்து ரஹ்மானும் இன்னும் இஸ்லாத்தை சரியாக விளங்காமல் நாகூர் தர்ஹா, மந்திரம் மாயம் என்றும் நம்பிக்கை கொண்டுள்ளார். இவற்றுக்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தம் இல்லை. சமீபத்தில் கூட மந்திரம் செய்கிறேன என்று பலரை ஏமாற்றிய ஒரு பெண்ணை சவுதி அரசு மரண தண்டனை கொடுத்து தீர்ப்பளித்து. எனவே ரஹ்மான் இஸ்லாத்தை நோக்கி இன்னும் சரிவர நெருங்கவில்லை.

புரோகிதத்தை ஒழித்தது இஸ்லாம். உடல் நிலை சரியில்லா விடடால் மருத்துவரை அணுகவே சொல்கிறது இஸ்லாம். முகமது நபியும் இதுபோல் மருத்துவரிடம் சென்றிருக்கிறார். அரபுகள் பணம் இருப்பதால் அப்போலோவில் வந்து உயர்தர சிகிச்சை பெற்றுக் கொள்கிறார்கள். இதில் என்ன தவறு?

ரஹ்மான் மூடப்பழக்கத்தை நம்புவதால் எச்சில் இலையில் புரளும் இதுவும் ஒரு நம்பிக்கை என்று சொல்ல வருகிறீர்களா? ஆக எச்சில் இலையில் புரளும் இந்த மட ஸ்னானாவை தடுக்க வர மாட்டீர்கள்! அப்படித்தானே!

baleno said...

ஒரு முஸ்லிம் தொழுகிறார் சில வேலை இல்லாதவர்கள் கிண்டல் செய்கிறார்கள். தொழுகை முடிந்தவுடன் அவர் பத்திரமாக செல்கிறார். இது காபிர்களின் தேசத்தில் நடந்தது ஆனால் அல்லாவின் ஆட்சி நடக்கும் சவுதியில் ஒரு வேற்று மதத்தை சேர்ந்தவன் இப்படி பொது இடத்தில் தான் நம்பும் இறைவனை வணங்க முடியுமா. அப்படி வணங்கிவிட்டு உயிருடன் திரும்ப முடியுமா? சவுதி இஸ்லாமிய நாடு அங்கே முஸ்லிம்கள் அதிகம். இஸ்லாமிய சட்டம் அங்கே இருக்கிறது என்று ஊத்தை பதிலை தான் உங்களால் சொல்ல முடியும்.

திரு.Anonymous,
உண்மையை மிக சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள். நன்றி.

Unknown said...

முஸ்லீம்களின் மத நல்லினக்கம் ஊர் அறிஞ்ச விஷயம். ஏன் உங்களால மாற்று மத சகோதரர்களை தாங்கிக்க முடியலை

Anonymous said...

//காஃபிர்' என்ற சொல் ஏதோ அவமானகரமான சொல் என்ற புரிதலில் கேடடிருக்கிறீர்கள். காபிர் என்ற சொல்லுக்கு இறை மறுப்பாளன் என்ற பொருள் வரும். அரபு அகராதியைப் படியுங்கள். விளக்கம் பெறுவீர்கள்.//
நல்லது, காபிர் என்ற சொல் உங்கள் அல்லா என்ற இறைவனை மறுப்பவர்களை குறிக்கிறது. அல்லாவை தனித்து காட்ட காபிர்கள் என்ற சொல் கூறப்படுகிறது, அது போல் மற்றவர்களின் இறை நம்பிக்கையை முஸ்லிம்கள் ஏற்பதில்லை. அதனால் பிற மதத்தவர்கள் எல்லாம் சேர்ந்து முஸ்லிம்களுக்கு சிறப்பு பெயராக "கூபிர்கள்" என்ற பெயரை வைக்கலாம் என்று நினைக்கிறேன். கூபிர்கள் என்பதற்கு ஆப்ரிக்க பிக்மி மக்களின் மொழி அகராதியில் "கூமுட்டைகள்" என்று அர்த்தம், அவர்கள் அகராதியை படித்தால் விளக்கம் கிடைக்கும் . இந்த பெயர் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் சுவனப்ரியன்.
//சவுதியைப் பொறுத்தவரையில் அந்நாட்டுக்கு சட்டத்துக்கு உட்பட்டுத்தான் பணி புரிவேன் என்று ஒப்பந்தத்தின் அடிப்பiடையில் நீங்கள் அங்கு வருகிறீர்கள். ஆனால் அமெரிக்காவின் சட்டம் அதுவல்ல. இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது.//
இதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது, எல்லா நாடுகளும் சவுதியை போல் அந்தந்த நாடுகளில் பெரும்பான்மை மக்கள் பின்பற்றும் மதத்தின் அடிப்படையில் அவர்களும் அந்த நாடுகளின் சட்டங்களை வைத்து கொள்ளலாம். அப்படி வைக்கா விட்டால் இப்படியெல்லாம் நாங்கள் செய்வோம் என்று சொல்ல வருகிறீர்கள். ஆனால் சுவனப்ரியன் சார் இஸ்லாமியர்களை தவிர வேறு யாரும் மத வெறி பிடித்த கடவுளை வணங்குவதில்லை. தான் மதத்தை பின்பற்றாதவனுக்கு சிறப்பு பெயர் வைக்கும் கடவுள் வேறு எந்த மதத்திலும் இல்லை. இந்தியாவிலும் இந்துக்கள் பெரும்பான்மையாக இருகிறார்கள். அதனால் இந்தியா இந்துக்களுக்கு மட்டும் சொந்தம் வேறு மதத்தவர் பொத்திக்கொண்டு இருக்க வேண்டும் என்று சவுதியை போல் சட்டம் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறன், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
தயவு செய்து பழைய பஞ்சாங்க ஆரிய திராவிட கதைகள், ஆரியன் அங்கே இருந்து வந்தான், திராவிடன் இங்கே இருந்து வந்தான் அதனால் இந்தியா இந்துக்களுக்கு மட்டும் சொந்தமல்ல எல்லாருக்கும் சொந்தம் என்று பதில் கூற வேண்டாம். சவுதியில் இஸ்லாம் வரும் முன்பு அங்கே வேறு மதங்களும் இருந்தது அதற்கு பிறகு வந்த இஸ்லாம் இன்று அங்கே முழுமையாக இருக்கவில்லையா? அது போல இந்தியாவிலும் இந்து சமயம் முழுமையாக இருந்தால் நன்றாக இருக்கும் இல்லையா? உங்கள் கருத்து என்ன

M. Jeyaprakash

suvanappiriyan said...

ஜெயபிரகாஷ்!

//"கூமுட்டைகள்" என்று அர்த்தம், அவர்கள் அகராதியை படித்தால் விளக்கம் கிடைக்கும் . இந்த பெயர் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் சுவனப்ரியன்.//

நீங்கள் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கூப்பிட்டுக் கொள்ளுங்கள். அதற்காக மறுதலித்து சூத்திரன் என்பதற்கு என்ன அர்த்தம் என்று கேட்க மாட்டேன். யாரையும் கூப்பிடவும் மாட்டேன்.

//ஆனால் சுவனப்ரியன் சார் இஸ்லாமியர்களை தவிர வேறு யாரும் மத வெறி பிடித்த கடவுளை வணங்குவதில்லை.//

அதற்கு காரணம் உங்கள் மதத்தில் உள்ள பலகீனம். ஒரு முஸ்லிம் குர்ஆனை பொருளுணர்ந்து படிக்க ஆரம்பித்தால் மேலும் மேலும இஸ்லாத்தை கடைபிடிக்க வேண்டும் என்ற அவா அவனுக்கு உருவாகும். அதே ஒரு இந்து தனது வேத நூல்களையும் மனு ஸ்ருமிதிகளையும் ஆழமாக படிக்க ஆரம்பித்தால் நாத்திகத்தை நாட ஆரம்பித்து விடுவான். இதுதான் இன்று வரை நடந்து வருகிறது. எனவே இதைப் போல் நாத்திகததை முஸ்லிம்களும் நாட வேண்டும் எந்த வகை நியாயம் சார்?

//இந்தியாவிலும் இந்துக்கள் பெரும்பான்மையாக இருகிறார்கள். அதனால் இந்தியா இந்துக்களுக்கு மட்டும் சொந்தம் வேறு மதத்தவர் பொத்திக்கொண்டு இருக்க வேண்டும் என்று சவுதியை போல் சட்டம் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறன், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.//

இதனால் முஸ்லிம்களுக்கு ஒன்றும் நட்டம் இல்லை. இந்து ராஷ்டிரம் உருவானால் மற்ற சாதிகள் அனைத்தும் சூத்திரர்கள் என்ற பிரிவில் கொண்டுவரப்படுவர். உடன்கட்டை ஏறுதல் மீண்டும் அமுல்படுத்தப்படும். இட ஒதுக்கீடு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு ஆரியர்களின் ஆதிக்கம் அதிகமாகும். அரிஜனங்கள் காலில் செருப்பில்லாமலும், பெண்கள் மேல் சட்டை இல்லாமலும் வெளியில் வர வேண்டியிருக்கும். சாதி வேறுபாடு தலைவிரித்தாடும். பொது குளத்தில் அரிஜனங்கள் தண்ணீர் எடுக்க தடை போடப்படும். இரட்டை டம்ளர் முறை இந்தியா முழுக்க சட்டமாக்கப்படும். இந்த கொடுமையை எல்லாம காண சகிக்காமல் பிராமணர்களைத் தவிர மற்ற சாதியார் அனைவரும் இஸ்லாத்தில் கூட்டம் கூட்டமாக இணைவர். சில ஆண்டுகளில் ஹிந்து ராஷ்ட்ரா என்ற சொல் மங்கி இஸ்லாமிய ஆட்சி இந்தியாவிலும் வரும். வேறு ஒன்றும் நடந்து விடாது.

//சவுதியில் இஸ்லாம் வரும் முன்பு அங்கே வேறு மதங்களும் இருந்தது அதற்கு பிறகு வந்த இஸ்லாம் இன்று அங்கே முழுமையாக இருக்கவில்லையா? அது போல இந்தியாவிலும் இந்து சமயம் முழுமையாக இருந்தால் நன்றாக இருக்கும் இல்லையா? உங்கள் கருத்து என்ன//

சிலை வணங்கிகளும், கிறித்தவர்களும், யூதர்களும் இஸ்லாத்தின் மேன்மையை உணர்ந்து அனைவரும் முஸ்லிம்களாகி விட்டனர். பெரும்பான்மையோரின் விருப்பம் அதுவாக இருந்தது.

அதுபோல் இந்துக்களில் பெரும்பான்மையினரான பிராமணர் அல்லாத சாதியினர் அப்படி ஒரு ஆட்சி வர சம்மதிப்பார்களா? எல்லா மாநிலங்களிலும் பிஜேபி மண்ணை கவ்விக் கொண்டல்லவா இருக்கிறது. உங்களின் ஒரே ஆதரவான நரேநதிர மோடியும் முஸ்லிம்களை அரவணைததால்தான் காலம் தள்ள முடியும் என்று நேசக் கரம் நீட்ட ஆரம்பித்து விட்டாரே! தெரியாதா?