Followers

Saturday, August 11, 2012

அல்ஜிமர்ஸ் நோயை விரட்டுகிறது தொழுகை-அமெரிக்க ஆய்வு

அல்ஜிமர்ஸ் நோயை விரட்டுகிறது தொழுகை-அமெரிக்க ஆய்வு

எனது தாத்தாவுக்கு 90 வயதுக்கு மேல் ஆகிறது. போன வருடம் வரை முடிந்த வரை பள்ளியில் சென்று தொழுது வருவதை நான் பார்த்துள்ளேன். போன வருடம் மதிய தொழுகை தொழுது விட்டு அவர் வீடு செல்வதற்கு பதில் எங்கள வீட்டு பக்கம் வர ஆரம்பித்துள்ளார். எனது நண்பன் இவர் ஞாபக மறதியில் தெரு மாறி செல்கிறார் என்பதால் 'என்ன தாத்தா? தெரு மாறி செல்கிறீர்கள்? உங்கள் வீடு அடுத்த தெரு' என்றவுடன் தாத்தா சுதாரித்துக் கொண்டு 'ஹி...ஹி...எனக்கு தெரியும் தம்பி. என் மக வீட்டுக்கு போறேன். வேறொன்றுமில்லை' என்று சிறிது தூரம் நடந்து பிறகு வந்த வழியே திரும்பி சென்றிருக்கிறார். என் நண்பன் என்னிடம் 'உன் தாத்தாவுக்கு குப்புற விழுந்தாலும் மீசையில மண் ஒட்டவில்லை என்ற கதை தான். எப்படியாவது சமாளித்து தான் கண்டிஷனில் இருப்பதாக காட்டிக் கொள்வார்' என்றான் சிரித்துக் கொண்டே........



(அமெரிக்க சர்ச் ஒன்றில் தொழுகைக்கான அழகிய அழைப்பொலி)

இதை நான் சொல்லக் காரணம் இறை பக்தியில் தினமும் தொழுகையை தவறாது பள்ளியில் சென்று ஐந்து நேரமும் நிறைவேறறுபவர்கள் எவருக்கும் சிரமம் கொடுக்காமல் தங்களது 90 வயதிற்கு பிறகும் நோய் நொடி இல்லாமல் வாழ்வதை பார்த்து வருகிறேன் என்பதை தெரிவிப்பதற்காகவே. சில மாதங்களுக்கு முன்பு தான் எனது தாத்தாவுக்கு கண் பார்வை மங்கத் தொடங்கியுள்ளது. இதே போல் இந்துக்களிலும் காலையிலும் மாலையில் எழுந்து குளித்து கோவிலுக்கு சென்று வருபவர்கள் நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வருவதை பார்த்து வந்துள்ளேன்.

இதை எல்லாம் நான் இங்கு குறிப்பிட காரணம் ஐவேளை தொழுகையை நேரம் தவறாமல் நிறைவேற்றும் முஸ்லிம்களிடம் அல்ஜிமர்ஸ் எனும் நோய் 50 சதவீதம் கட்டுப்படுத்தப் பட்டுள்ளதாக அமெரிக்க - இஸ்ரேலிய விஞ்ஞானிகள் புதிதாக கண்டு பிடித்துள்ளனர். அப்பாவி உலக மக்களை அழிப்பதில் முன்னணியில் இருக்கும் இந்த இரு நாடுகளும் இது போன்று ஆக்கபூர்வமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டால் பலரும் பயனடைவர். :-) அல்ஜிமர்ஸ் எனும் இந்த நோய் மனிதனுக்குள் ஏற்படும் ஞாபக மறதியைப் பற்றியது. தொழுகாத மக்களை விட நேரம் குறிப்பிட்டு சரியாக மசூதியை அடைந்து விடும் மக்களுக்கு இந்த நோய் வருவது தடுக்கப்படுகிறது.

டெல் அவீவ், யாஃபா, அமெரிக்காவின் இதர பல்கலைக்கழகத்தைச் சார்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். நினைவாற்றல் குறையாமலிருக்க பயிற்சி மையங்கள் மற்றும் இதர வழிகளில் பயிற்சி மேற்கொள்பவர்களை விட குறிப்பிட்ட நேரத்தில் தொழுகையை பேணுபவர்களுக்கு அல்ஸிமர்ஸ் நோய் தாக்கும் வாய்ப்பு குறைவாகும் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறித்த நேரத்தில் தொழுகையை பேணுவது அல்ஷிமர்ஸ் நோயிலிருந்து காப்பாற்றுவதுடன் புத்தியாகவும், சிந்தனை ரீதியாகவும் பேசுவதற்கு தேவையான ஆக்கப்பூர்வமான பலன்கள் கிடைப்பதாக இந்த ஆய்வுக் குழுவின் தலைவராக பணியாற்றிய பேராசிரியர் Rivka Inzelberg கூறுகிறார். இவரது ஆராய்ச்சியின் முடிவை துருக்கியில் நடந்த சர்வதேச ஆய்வு மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. துருக்கி, ஈரான், ஈராக், லெபனான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரபு நாடுகள், இந்தியா, போன்ற நாடுகள் இதில் கலந்து கொண்டன.

65 வயதுக்கு மேற்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 92 பேருக்கு மட்டுமே ஞாபக மறதி நோய் பாதித்துள்ளது. 300 பேருக்கு சிறிய அளவில் பாதித்துள்ளது. மீதமுள்ளோருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

'யார் வேதத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டு தொழுகையையும் நிலை நாட்டுகிறாரோ அத்தகைய சீர்படுத்திக் கொள்வோரின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம். '
-குர்ஆன் 7:170

ஆம். மன நிம்மதி, நோயிலிருந்து மீட்டல், பல வேலைகளையும் குறித்த நேரத்தில் செய்வதற்கான உந்துதல், சிறந்த உடற்பயிற்சி இவை எல்லாவற்றையும் விட இறப்புக்கு பிறகு இறைவன் தரக் கூடிய சொர்க்க வாழ்க்கை என்று ஐந்து வேளை தொழக் கூடியவரின் நன்மையின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இக்பால் செல்வன், சார்வகனிலிருந்து தருமி வரை எப்படியாவது முஸ்லிம்களை நாத்திகத்தின் பக்கம் கொண்டு வந்து விட வேண்டும் என்று அல்லும் பகலும் பாடுபடுகின்றனர். ஆனால் இறைவன் அவர்கள் நம்பும் அறிவியலின் மூலமாகவே பல உண்மைகளை உலகுக்கு அறிவித்துக் கொண்டுள்ளான்.

எனவே ஐவேளை தொழும் பழக்கம் இல்லாத மக்கள் இன்றிலிருந்து ஐந்து வேளையும் மசூதியில் சென்று தொழும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார்களாக! இதன் மூலம் செய்யும் தவறுகளிலிருந்தும் நோய்களிலிருந்தும், இறைவனின் கோபத்திலிருந்தும் தங்களை காத்துக் கொள்வார்களாக.....

http://www.haaretz.com/news/national/israeli-u-s-study-praying-regularly-could-reduce-risk-of-alzheimer-s.premium-1.453668

http://israel21c.org/health/israeli-research-shows-gardening-reading-and-praying-can-help-stave-off-alzheimers-disease

http://dinaex.blogspot.in/2012/08/50.html

http://thebeautyofislam.tumblr.com/post/28542915951

http://25.media.tumblr.com/tumblr_m64tffH12e1ruvx75o1_500.gif

Study shows females who prayed regularly had 50 percent less chance of having mild dementia or Alzheimer’s.

Praying regularly can reduce the risk of developing Alzheimer’s disease and milder memory problems by 50 percent, according to a joint Israeli-American study funded by the U.S. National Institutes of Health.

The study was aimed at identifying factors that increase the risk of developing Alzheimer’s. Researchers examined several aspects of the subjects’ lives, including what they did in their spare time during their 20s and 30s. It turns out females who prayed regularly had 50 percent less chance of having mild dementia or Alzheimer’s.
Lead researcher Prof. Rivka Inzelberg said they couldn’t determine the connection between praying and Alzheimer’s amongst men because 90 percent of their male subjects prayed daily. “But among the women, only 60 percent of the women prayed five times a day, as per Islamic custom, but 40 percent didn’t pray regularly, so we were able to compare the data,” Inzelberg explained.

The study did not characterize the connection between prayer and memory, but Inzelberg noted, “Prayer is a custom in which thought is invested, and the intellectual activity involved in prayer, beyond the content of the prayers, may constitute a protective factor against Alzheimer’s.”

The findings, presented at a Tel Aviv conference last month, also showed that 50 percent more women suffer memory problems than men and that formal schooling reduced the risk of Alzheimer’s and memory impairments.

Other risk factors that were identified were high blood pressure, diabetes, excess fats in the blood and heart problems.

In addition, researchers said those who gardened in their youths also had a reduced risk of dementia, though they hadn’t calculated the exact degree of influence.
This is not the first study suggesting a link between religion and health. In 2005 researchers concluded that adopting a spiritual or religious lifestyle slows down the progress of Alzheimer’s. An earlier study showed that more people succumbed to heart problems and cancer in secular kibbutzim than in religious ones.

The Israeli group Assia found that the morbidity and mortality rates among infants was much lower in religious communities than in secular ones. And researchers who conducted another joint Israeli-American study postulated that the mortality rate was lower for Arab dialysis patients than Jewish patients as a result of spiritual and community support.

http://thebeautyofislam.tumblr.com/post/28542915951

--------------------------------------------------------------

மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு – 18




36 comments:

ராஜ நடராஜன் said...

சகோ.சுவனப்பிரியன்!தொடர் தொழுகை,சரியான உபவாசம்,முந்தைய உணவு மற்றும் வாழ்க்கை முறையால் தாத்தா நீண்ட வாழ்நாட்களில் என நினைக்கின்றேன்.

அமெரிக்க ஆய்வு ஒரு நாள் காபி குடிச்சா உடலில் காஃபின் அதிகமாகி விடும் என்று சொல்லும்.இன்னொரு ஆய்வு காபி அதிகமாக குடிங்கப்பா என்று சொல்லும்:)

அல்ஜிமர்ஸ் நோயை தொழுகை விரட்டுகிறது என்பது விஞ்ஞான உண்மையாய் இருந்தால் சார்ல்டன் ஹெஸ்டன் எப்பொழுதோ இஸ்லாத்திற்கு மதம் மாறி இருந்திருப்பார்:)

மிதமான எந்த உடற்பயிற்சியும் நோய்களை தள்ளிப்போடும் என்பதே அடிப்படை என்பதால் மதத்திற்கும் நோய்களுக்கும் சம்பந்தமில்லை.

VANJOOR said...

அருட்கொடையாம் தொழுகை. உங்களுக்கே.! உங்களுக்கே.!! உங்களுக்கே.!!!

ஒவ்வொரு தொழுகைக்கும் (சுத்தி) ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி உட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா?

ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.

இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.

ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?

சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.

ஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும் இறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா ?

உலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.

இதன் சூட்சுமம் அளவிலடங்காதது.

உலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற உண்மை உணர்ந்தீரா?

தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,

நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது
நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?

உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.

பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து

"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '
என கூறுகிறார்.

இதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.

தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் "பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்."

தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.

தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன.

அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.

தொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.

நமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை.

தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.

வாஞ்சையுடன் வாஞ்சூர்.
******************

மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும்,

ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும்,

பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்……

எல்லா சூழ்நிலைக‌ளிலும் அகிலத்தில் ஒவ்வொரு விநாடியும் அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல் தொழுகை.

இங்கே சொடுக்கி >>>> அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களின் சீரிய(ஸான) ஒரே செயல் . “தொழுகை ! விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்கள் <<<<< காணுங்கள்

.
.

suvanappiriyan said...

சகோ ராஜ நடராஜன்!

//அல்ஜிமர்ஸ் நோயை தொழுகை விரட்டுகிறது என்பது விஞ்ஞான உண்மையாய் இருந்தால் சார்ல்டன் ஹெஸ்டன் எப்பொழுதோ இஸ்லாத்திற்கு மதம் மாறி இருந்திருப்பார்:)

மிதமான எந்த உடற்பயிற்சியும் நோய்களை தள்ளிப்போடும் என்பதே அடிப்படை என்பதால் மதத்திற்கும் நோய்களுக்கும் சம்பந்தமில்லை.//

நாம் தொழுவதால் இறைவனின் மதிப்பு கூடிவிடப் போகிறதா? இல்லை. இந்த தொழுகை மனிதர்களின் நன்மைக்காகவே உண்டாக்கப்பட்டது. உடல் உழைப்பின் அவசியத்தை உணர்த்துவதாகவும் உள்ளது.

சில நாத்திகர்கள் முஸ்லிம்கள் ஐங்கால தொழுகையை நேரம் தவறாமல் தொழுவதை கிண்டலடித்திருப்பதை நான் பார்த்துள்ளேன். எதற்கெடுத்தாலும் அறிவியல் சொன்னால் ஒத்துக் கொள்கிறேன் என்று வாதம் வைப்பவர்களுக்காகத்தான் இந்த பதிவு. இந்த நோயை குணப்படுத்துவதில் நேரம் தவறாத தொழுகை முறையும் ஒரு காரணம் என்பதே இந்த ஆராய்ச்சி முடிவு.

suvanappiriyan said...

வாஞசூர் அண்ணன்!

//எல்லா சூழ்நிலைக‌ளிலும் அகிலத்தில் ஒவ்வொரு விநாடியும் அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல் தொழுகை.

இங்கே சொடுக்கி >>>> அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களின் சீரிய(ஸான) ஒரே செயல் . “தொழுகை ! விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்கள் <<<<< காணுங்கள்//

பதிவுக்கு ஏற்ற அருமையான காணொளிகளை பகிர்ந்தமைக்கு நன்றி!

சிராஜ் said...

சலாம் அண்ணன்...

ஹா..ஹா..ஹா...

பதிவுலகத்தில் படு பீக்ல இருக்கீங்க போல... எக்கசக்க எதிர்பதிவு வருது... டாக் ஆப் த வேர்ல்டா(பதிவு) வாழ்த்துக்கள் அண்ணன்..

எது எப்படி இருந்தாலும் தொடர்ந்து பதிவெலுதும் உங்களை நினைத்து வியக்கிறேன்...

suvanappiriyan said...

சலாம் சகோ சிராஜ்!

//எது எப்படி இருந்தாலும் தொடர்ந்து பதிவெலுதும் உங்களை நினைத்து வியக்கிறேன்...//

நாளை மறுமையில் இறைவனுக்கு முன்னால் சார்வாகனும், நரேனும், இப்னு ஷகீரும், இக்பால் செல்வனும், தருமியும் வரிசையாக நின்று கொண்டு 'இறைவா! பல உண்மைகளை எங்களுக்கு சொல்லாமல் சுவனப் பிரியன் மறைத்து விட்டார். இது என்ன நியாயம்?' என்று என்மேல் கேஸ் போட்டால் நான் தப்பித்துக் கொள்ள வேண்டும் அல்லவா?

எனவேதான் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் இது போன்ற பதிவு மழைகள். எல்லாம் சுயநலம் கலந்த பொது நலம். :-)

சிராஜ் said...

கேஸ் போட்டால் நான் தப்பித்துக் கொள்ள வேண்டும் அல்லவா?
//

அத விட முக்கியம அவங்களே சொல்லுவாங்க.. ஏன்னா நேர்மையானவங்களா தான் தெரியுது..இஸ்லாம் விஷயத்தில் மட்டும் கோபம் கண்ண மறைக்கிதுன்னு நினைக்கிறேன்.. உமர் ரலியை விடவா இவங்க கோப காரங்க... அவரே இஸ்லாத்தை தழுவி அளப்பரிய சேவை செஞ்சார்...இஸ்லாத்தின் இரண்டாவது கலீபாவாக உயர்ந்தார்.. இவர்களும் இஸ்லாத்தை தழுவி.. வர இருக்கும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் உயர் பதவிகள் வகுப்பார்கள் என்றே எனக்கு என்னத் தோன்றுகிறது....

VANJOOR said...

The Physical Benefits of Salat (Prayer)

Salat is one of the five fundamental requirements that a Muslim is obligated to perform.

Salat is given the highest priority in the Holy Quran.

There are many benefits of Salat described in the Book of Allah.

It says, innassalata tanha anil fahsha'i, Surely Prayer restrains one from indecency. (29:46)

In chapter Luqman, We read that when Hadhrat Luqman was giving advice to his son,

the first and foremost on his mind was to remind his son,

ya bunayya aqimissalat "O my dear son,! observe Prayer." (31:8)

According to a Hadith the Prophet of Islam (peace be upon him) is reported to have said, inna fissalati shifa'a " verily there is cure in salat ".

According to a Muslim scholar, as reported in monthly Urdu magazine, Tahazibul Akhlaq, Aligarh, India, a Muslim who offers salat regularly has very little chance of getting arthritis as we exercise our bones and joints while we offer salat.

In the light of this Hadith we shall endeavor to describe some orthopedic benefits of salat in this short note.

1. Regular exercise reduces cholesterol in the body.

Cholesterol causes heart failures, strokes, diabetes and many other ailments.

It is a known fact that people in professions where exercise is required have less amount of cholesterol in their bodies.

2. Salat is an excellent form of exercise to prevent indigestion.

In the morning when stomach is empty, a Muslim is required to offer fewer number of Rak'aat whereas in the evening after the dinner we offer an extra number of Rak'aat.

3. By offering Takbir at the beginning of salat, we move hand and shoulder muscles thereby increasing the flow of blood towards torso. Akamat performs a similar function.

4. The most important function in salat is sajdah where we touch the ground with our forehead.

This posture increases fresh supply of blood to our brain.

Needless to say in certain forms of yoga some adherents stand on their heads for the same purpose.

5.In tashah'hud position, our hip, elbow, knee joints, backbone, wrist joints move in a way that it provides a form of relaxation to our entire body.

Pressure is applied on the body parts as if it was a kind of massage which releases tension.

6. Heart in the most important organ in the body. It supplies fresh blood to all body tissues.

These body movements performed during salat are an excellent source of exercise for our heart as well.

According to a Hadith of the Holy Prophet,"There is an organ in the body, when it is healthy, the whole body is healthy, and when this is sick, the entire body becomes sick". It is the heart.

7. A remarkable tissue in our body is cartilage.

It is unique in being a living tissue with no direct blood supply.

The only way it receives nutrients and oxygen is by movements of the joints.

The pumping effect forces blood into the joint area which would otherwise be bypassed.

Those who sit at the terminals are in greater danger of ending up with dead cartilage tissues that will subsequently wear away.

This will leave us with arthritis, painful joints and paralysis.

Bacteria and viruses find safe haven in joints for this reason as no blood cell can get at them and in most cases neither can antibodies.

Salat therefore, has many orthopedic benefits for all Muslims.

Next time you offer salat, thank Almighty Allah that He made you a Muslim. Indeed, there is cure in salat.

http://www.alislam.org/library/articles/salat.htm

Flavour Studio Team said...

அஸ்ஸலாமு அழைக்கும் சகோ சுவனப்பிரியன்..!

மாஷா அல்லாஹ் மற்றுமொரு அருமையான படைப்பு உங்களிடம் இருந்து.. ஓய்வே இல்லாத உங்களின் மார்க்க பணியை எல்லாம் வல்ல இறைவன் பொருந்தி கொண்டு நற்கூலி வழங்கி அருள்புரிவானாக ஆமீன்..!

@சகோ சிராஜ்
//பதிவுலகத்தில் படு பீக்ல இருக்கீங்க போல... எக்கசக்க எதிர்பதிவு வருது... டாக் ஆப் த வேர்ல்டா(பதிவு) // என் பேரும் சேர்ந்து அடிபடுதாமே எதிர்பதிவுல அவ்வ்வ்வ்வ் அம்புட்டு பிரபலமாவா ஆகிட்டேன்.. அவ்வ்வ்வ்வ்வ் ஹாஹஹ்ஹாஹ்... :)
இருக்கட்டும் இருக்கட்டும்... :)

தொடரட்டும் உங்கள் நற்பணி.. வாழ்த்துக்களுடன்...
உங்கள் சகோதரி.
ஷர்மிளா ஹமீத்

Anonymous said...

சிராஜ் said...

// நாளை மறுமையில் இறைவனுக்கு முன்னால் சார்வாகனும், நரேனும், இப்னு ஷகீரும், இக்பால் செல்வனும், தருமியும் வரிசையாக நின்று கொண்டு 'இறைவா! பல உண்மைகளை எங்களுக்கு சொல்லாமல் சுவனப் பிரியன் மறைத்து விட்டார். இது என்ன நியாயம்?' என்று என்மேல் கேஸ் போட்டால் நான் தப்பித்துக் கொள்ள வேண்டும் அல்லவா?
//

சான்ஸே இல்ல.. நீங்க எல்லாத்தையும் சொல்லிட்டீங்கன்னு இங்க இருக்க எல்லாரும் சாட்சி சொல்லுவாங்க... ஹா..ஹா..ஹா...

suvanappiriyan said...

சகோ ஷர்மிளா ஹமீத்!

//மாஷா அல்லாஹ் மற்றுமொரு அருமையான படைப்பு உங்களிடம் இருந்து.. ஓய்வே இல்லாத உங்களின் மார்க்க பணியை எல்லாம் வல்ல இறைவன் பொருந்தி கொண்டு நற்கூலி வழங்கி அருள்புரிவானாக ஆமீன்..! //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

// என் பேரும் சேர்ந்து அடிபடுதாமே எதிர்பதிவுல அவ்வ்வ்வ்வ் அம்புட்டு பிரபலமாவா ஆகிட்டேன்.. அவ்வ்வ்வ்வ்வ் ஹாஹஹ்ஹாஹ்... :)
இருக்கட்டும் இருக்கட்டும்... :)//

////சமீபத்தில் கூட அண்ணரின் விழுதுகளில் ஒன்றான சர்மிளா அகமத் என்ற பொண்ணு கலகலப்பாக இருந்த பேஸ்புக் குழுமத்திற்கு வந்து "முஸ்லீம் அல்லாதவர்கள் எல்லாம் இஸ்லாம் மதத்தை பற்றி அறிந்து கொள்ள எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்" என்று கூறி தன்னுடைய மெயில் ஐடியை கொடுக்காது, இன்னொரு 'விழுதின்' மெயில் ஐடியை கொடுத்துவிட்டு, கலவரத்தை உண்டு பண்ணிவிட்டு சென்று விட்டது!
http://www.nekalvukal.com/2012/08/blog-post.html////

இதைச் சொல்றீங்களா? பதில் இல்லாத போது இது போன்று அர்ச்சனைகள் அவர்களிடமிருந்து வருவது இயற்கையே... இதை எல்லாம் கடந்து போக பழகிக் கொள்ள வேண்டும். :-(

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ சுவனப்பிரியன்.
மிக அருமையான பதிவு.அறிவியல் உண்மைகளை இஸ்லாத்தோடு சம்மந்தபடுத்தாமல் கூறி இருந்தால் உங்களை சார்வாகனும், நரேனும், இப்னு ஷகீரும், இக்பால் செல்வனும், தருமியும் போன்றவர்கள் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி இருப்பார்கள்.இறை அன்பை நாடும் நீங்கள் அறிவியலை
இஸ்லாத்தோடு இணைத்து கூறுவதால் அவர்கள் கடுப்பாகி சிந்தனை வறண்டு உளற ஆரம்பிக்கிறார்கள். மற்ற விசயங்களில் தெளிந்த சிந்தனையோடுதான் இருக்கிறார்கள்.பாவம் இ.செல்வன் உங்களால் ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கிறார் . நான் உங்களை அப்படி நினைத்தேன் இப்படி நினைத்தேன் என்று புலம்பி பின்னோட்டம் இடுகிறார். please அவரை விட்டுடுங்கோ!!!!!!!!!!!!!இவர்கள் அனைவரும் நேர்வழி பெற அல்லாஹ் போதுமானவன்.

Anonymous said...

Kavya says:
August 10, 2012 at 8:50 am

இந்துக்கள் பலவகை.

1. தீவிர இந்து.

2 பொது இந்து

3. சிவனை மட்டுமே முழுமுதற்கடவுளாகக்கொண்டு வாழும் இந்து

4. சிவனிடன் அன்னாரின் குடும்பத்தினரையும் சேர்த்து வணங்கி வாழும் இந்து

5. திருமாலையும் திருமால் அவதாரங்களையும் நித்திய சூரிகளையும் ஆழ்வாரகளையும் ஆச்சாரியர்களையும் வணங்கும் சிரிவைணவர்கள்

6. திருமாலின் ஒரே ஒரு அவதாரத்தை மட்டும் எடுக்கும் ஹரே கிருஸ்ணா இயக்க இந்துக்கள்.

7. பொது இந்து. (இந்து மதத்திலுள்ள எல்லாச்சாமிகளும் வேண்டும்)

8. தமிழ்நாட்டு பொது இந்து. (வேளாங்கண்ணிக்கும் போவார்கள். தெற்கு மாசி வீதி மசூதியில் குழந்தைகளைக்கொண்டு போய் மந்திரித்தும் வருவார்கள்.

இவை போக இன்னும் நிறைய உண்டு.

திண்ணையில் மலர்மன்னனும் அவரைப்போன்றொரும் தீவிர இந்துக்களின் பிரதிநிதிகளாக எழுதுகிறார்கள். மற்றவர்கள் பொது இந்துக்களாக எழுதிவருகிறார்கள்.
தீவிர இந்துக்கள் மற்ற் மதத்தினரை ஏற்றுக்கொள்வதேயில்லை. பிறமதங்கள் போலியானவை. தம் மதமே உண்மையென்ற கொள்கையுடையவர்கள். இவர்கள் தம் மதத்தில் வைக்கப்படும் எந்த விமர்சனததையும் ஏற்றுக்கொள்வதில்லை. அதை வைப்பவைன இந்துத்துரோஹி என்று வைவார்கள். கிருத்துவர்கள், இசுலாமியர்களை மத மாற்றம் செய்து தீவிர இந்துக்களாக்க வேண்டுமென்ற் நோக்கமுடையவர்கள்.

பொது இந்துவுக்கும் தீவிர இந்துவுக்கும் உள்ள வேறுபாடு, தீவிரம் முன்னவருக்கு கிடையாது. அனுசரித்துபோகுபவர்கள். ஒற்றுமை, எல்லாக்கடவுளர்களும் சரி.
இதில் ஒன்று க‌ண்டிப்பாக‌ க‌வ‌னிக்க‌ப்ப‌ட‌வேண்டும். தீவிர‌ இன்து த‌ம்மால் ம‌ட்டுமே இன்தும‌த‌ம் செழிப்ப‌டையும் என்ப‌துதான். காப்பாற்ற‌ முடியும் என்ற‌ ந‌ம்பிக்கை.
இவ‌ர்க‌ள் இன்தும‌த‌த்தின் பிரிவுக‌ளை விரும்பார். ஆனால் பிரிவுக‌ள் ஏன் தோன்றின‌ என்ப‌தை அணுகார். சைவ‌மும் வைண‌வ‌மும் த‌னித்தே இருன்த‌ன‌. இன்று ஒன்று சேர்க்க‌ முனைகிறார் தீவிர‌ இன்து. கார‌ண‌ம் இசுலாமிய‌ர் கிருத்துவ‌ர் நெருக்குகிறார்க‌ள்.

இணைன்தால் சைவ‌ம் வைண‌வ‌த்தை விழுங்கி விடும். ஆழ்வார்க‌ளும் இராம‌னுஜ‌ரும் காணாம‌ல் போய்விடுவார்க‌ள். பிள‌வு இருன்தே தீர‌வேண்டும்.
ம‌ல‌ர்ம‌ன்ன‌னுக்குப் பிரிவுக‌ள் இருக்க‌க்கூடா. என‌க்கு இருக்க‌ வேண்டும் சிரிவைண‌வ‌த்தை நிலைநிறுத்த‌.

We shd agree to disagree.
Historically, religion and politics lived w/in one another. Still, there r sects which saved themselves from religio-politicians. Hope Shrivaishanavism will save herself from these malefactors by steadfastly retaining her own beauty.

அஸ்மா said...

சலாம் சகோ!

//இறைவன் அவர்கள் நம்பும் அறிவியலின் மூலமாகவே பல உண்மைகளை உலகுக்கு அறிவித்துக் கொண்டுள்ளான்.//

ஆமா சகோ! இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் எத்தனையோ அறிவியல் முடிவுகள் வெளிவந்துக் கொண்டுதான் உள்ளன. அவற்றையெல்லாம் கண்டும் காணாததுபோல் போகக் கூடியவர்களுக்காவே இதுபோன்ற பதிவுகள் அவசியமாகிறது. இது அவர்களின் நன்மைக்கே எனப் புரிந்தால் போதும், இன்ஷா அல்லாஹ்! பகிர்வுக்கு நன்றி சகோ.

வவ்வால் said...

திரு.சு.பி,

ஆகா அருமையான அறிவியல்ப்பதிவு ,இந்தாண்டு மருத்துவத்திற்கான நோபால் பரிசுக்கு உரிய கண்டுபிடிப்பு, ஆனால் அப்படி அறிவித்தால் யாருக்கு கொடுப்பது, முகமது நபிக்கா , இல்லை அவருக்கு சொன்ன அல்லாவுக்கா, இல்லை அதை பதிவெழுதிய உங்களுக்கா, சரி மூன்று பேருமா பகிர்ந்துக்கலாம்னு சொன்னா இணையில்லா இறைவனுக்கு இணையாக உங்களை வைக்க முடியாதே , நோபால் கமிட்டியே மண்டையை உடைச்சுக்கும் :-))

வவ்வால் said...

திரு.சு.பி,

5 வேலை தொழுகை செய்தா அல்சீமர் வராதாம் ஆனால் பர்கின்சன் நோய் வந்திடுமாம் ஒரு ஆய்வு சொல்லுது , உதாரணம் முகமதி அலி என்ற குத்து சண்டை வீரருக்கு பர்கின்சன் நோய் வந்திருக்காம்.

அப்போ நோயே வராத ஒரு தொழுகையை கண்டுப்பிடிங்க சு.பி :-))

suvanappiriyan said...

திரு வவ்வால்!

//5 வேலை தொழுகை செய்தா அல்சீமர் வராதாம் ஆனால் பர்கின்சன் நோய் வந்திடுமாம் ஒரு ஆய்வு சொல்லுது , உதாரணம் முகமதி அலி என்ற குத்து சண்டை வீரருக்கு பர்கின்சன் நோய் வந்திருக்காம்.

அப்போ நோயே வராத ஒரு தொழுகையை கண்டுப்பிடிங்க சு.பி :-)) //

Ali, however, said he thought there might be a connection between his condition and his boxing career. ''I've been in the boxing ring for 30 years,'' he said in an interview yesterday with WNBC-TV, ''and I've taken a lot of punches, so there is a great possibility something could be wrong.''
http://www.nytimes.com/1984/09/20/sports/change-in-drug-helps-ali-improve.html?sec=health

முகமது அலியே தனது நோய்க்கு காரணம் தனது தொழிலான குத்துச் சண்டையே என்று கூறும் போது வவ்வாலுக்கு வழக்கம்போல் கயிறு திரிப்பு எதற்கு?

// ஆனால் அப்படி அறிவித்தால் யாருக்கு கொடுப்பது, முகமது நபிக்கா , இல்லை அவருக்கு சொன்ன அல்லாவுக்கா, இல்லை அதை பதிவெழுதிய உங்களுக்கா, சரி மூன்று பேருமா பகிர்ந்துக்கலாம்னு சொன்னா இணையில்லா இறைவனுக்கு இணையாக உங்களை வைக்க முடியாதே , நோபால் கமிட்டியே மண்டையை உடைச்சுக்கும் :-))//

இப்படி எல்லாம் நீங்கள் கேள்வி கேட்க காரணம் உங்கள் மதத்தில் இறைவனுக்குரிய இலக்கணம் என்ன? இறைத் தூதர்களுக்குரிய இலக்கணம் என்ன? சாதாரண மனிதனுக்குரிய இலக்கணம் என்ன? என்பதை உங்கள் வேதங்கள் விளக்காததே. நோபல் பரிசுக்கெல்லாம் அப்பாற்பட்ட புனிதமான அந்த சொர்க்க வாழ்வை இறப்புக்கு பிறகு எனக்கு கொடுத்தால் அதுவே போதும். நோபல் பரிசெல்லாம் சொர்க்க வாழ்க்கைக்கு முன்னால் நமது கால் தூசுக்கு சமனாக மதிக்கப்படும்.

Anonymous said...

வாங்க வவ்- வால் எங்க போயிட்டீங்க இருட்டுலே தொங்கிட்டு இருந்தா என்னத்துக்கு ஆகும் உங்க(வவ் )வாலு. கொஞ்சம் வெளிச்சத்துக்கு வாங்க.கொஞ்சம் முன்னாடியே வந்திருந்தா அந்த gang லேயே சேர்த்து இருக்கலாம்.பரவா இல்லை.அதென்ன நீங்களே கேள்வி கேட்டுக்கிறீங்க.நீங்களே ஒருபதில சொல்லிக்கிறீங்க.அது சரியா தப்பான்னு தெரியாம குழப்பி திரும்பவும் அதுல ஒரு கேள்வி பிறகு வறண்ட(சிந்தனை)சிரிப்பு என்ன? ஆச்சு உங்களுக்கு நல்லானே இருந்தீக உங்க அறிவியல் காரன்கள் தானே சொன்னாக ஏன்?சு.பி மேல இப்படி கோவப்படுரீக
kalam.

suvanappiriyan said...

சலாம் சகோ அஸ்மா!

//ஆமா சகோ! இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் எத்தனையோ அறிவியல் முடிவுகள் வெளிவந்துக் கொண்டுதான் உள்ளன. அவற்றையெல்லாம் கண்டும் காணாததுபோல் போகக் கூடியவர்களுக்காவே இதுபோன்ற பதிவுகள் அவசியமாகிறது. இது அவர்களின் நன்மைக்கே எனப் புரிந்தால் போதும், இன்ஷா அல்லாஹ்! பகிர்வுக்கு நன்றி சகோ.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Nizam said...
This comment has been removed by the author.
Flavour Studio Team said...

//பதில் இல்லாத போது இது போன்று அர்ச்சனைகள் அவர்களிடமிருந்து வருவது இயற்கையே... இதை எல்லாம் கடந்து போக பழகிக் கொள்ள வேண்டும். :-(/// அதேதான் சகோ.. அந்த பதிவ பார்த்துட்டு விழுந்து விழுந்து சிரிச்சேன்...
இஸ்லாமிய எதிர்ப்பு வெறியின் உச்சத்தை அவர்கள் பதிவின் ஒவ்வொரு எழுத்திலும் காண முடிந்தது..! அவர்கள் எழுத்தின் மூலம் நமது கோபத்தை தூண்டி விட்டு குளிர் காய்ந்து விடலாம் என்று திட்டம் தீட்டி இருப்பார்கள் போல... ஹஹஹா... ஆனா இன்னும் பயிற்சி தேவையோ.. என்னும் அளவுக்கு அத்தனை உளறல்கள் அந்த பதிவு முழுவதும்.. என்ன ஒன்னு ஒரே ஒரு விஷயத்துக்கு அவங்கள எல்லாரையும் பாராட்டியே ஆகணும்..!
உங்களுக்கு எனக்கு அப்பறம் ஆஷிக் அண்ணனுக்கு எல்லாம் அவங்க ப்ரீயா விளம்பரம் கொடுத்துகிட்டு இருக்காங்க..! அவங்க ரொம்ம்ம்பப நல்ல நல்லவங்க.. அவ்வ்வ்வ்வ்வ் :))

.RAHMANFAYED said...

அஸ்ஸலாம் அலைக்கும் வாஞ்சர் அப்பா, நானும் படித்து இருக்கிறன், என் நண்பனின் யேகா புத்தகத்தில் அந்த ஆசனத்தின் பெயர் வீர்ஆசனா [VIRASANA]என்று நினைக்கிறன்.

Unknown said...

மாஷா அல்லாஹ் அழகான பதிவு

suvanappiriyan said...

சகோ சிநேகிதி!

//மாஷா அல்லாஹ் அழகான பதிவு//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

@ சுவனப்பிரியன் - அல்சைமர் வியாதி போக வேண்டுமானால் -

1. தொழுதால் மட்டும் போதுமா ? அல்லது

2. ஐந்து வேளையும் தொழ வேண்டுமா ?

3. இஸ்லாமிய முறைப்படி தொழ வேண்டுமா ? அல்லது
4. எந்த மதப் பிரிவின் படியும் தொழலாமா ?

ஏனெனில் அதன் முழு ஆராய்ச்சிக் கட்டுரையை தரவிறக்கி வைத்துள்ளேன் ... அதனைப் படிக்க முன் உங்களிடம் சில கேள்விகள் கேட்டுவிட்டால். கொஞ்சம் தெளிவடைந்துவிடலாம் அல்லவா ?

suvanappiriyan said...

@இக்பால் செல்வன்!

தொழுகை என்பது வெறும் சடங்காக மட்டும் செய்வதல்ல. தொழுவதற்கு முன் முதலில் உடல் மற்றும் உடை சுத்தம். நாம் இறைவனை வணங்குகிறோம். இந்த அனைத்து உலகையும் கட்டி ஆண்டு கொண்டிருக்கிற நம்மைப் படைத்த இறைவனுக்கு முன்னால் நிற்கிறோம் என்ற நினைவோடு தொழ வேண்டும். நம்மிடம் உள்ள அனைத்து பாரங்களையும் இறைவனுக்கு முன்னால் இறக்கி வைத்து மனதை லேசாக்க வேண்டும். இவ்வாறு ஒரு மனிதன் ஒரு நாளைக்கு ஐந்து வேளை 50 முறைக்கும் மேல் குனிந்து நிமிர்ந்து தனது உடல் எலும்புகளுக்கும் சதைக்கும் சரியான வேலை கொடுத்து வந்தால் பல நோய்கள் குணமாக வாய்ப்புண்டு. இந்த தொழுகையானது அல்சைமர் வியாதி நீங்குவதற்கு பல காரணிகளில் ஒன்றாக உள்ளது.

இந்துக்களிலும் சாஷ்டாங்கம் என்ற முறையில் இறை வழிபாட்டை கொண்டு செல்பவர் பலர் உள்ளனர். அது போல் வேறு முறைகளும் இருக்கலாம். மொத்தத்தில் உடல் உழைப்பு இருக்க வேண்டும். தொழுவதால் மனதும் லேசாகிறது. உடலுக்கும் நோய் தடுப்பாக இருக்கிறது.

Anonymous said...

// குனிந்து நிமிர்ந்து தனது உடல் எலும்புகளுக்கும் சதைக்கும் சரியான வேலை கொடுத்து வந்தால் பல நோய்கள் குணமாக வாய்ப்புண்டு.//

தொழுக வேண்டிய அவசியம் இல்லை. குனிந்து நிமிர்ந்து வேலை செய்தால் கூட போதும் !!! நன்றிகள் !!!

suvanappiriyan said...

//தொழுக வேண்டிய அவசியம் இல்லை. குனிந்து நிமிர்ந்து வேலை செய்தால் கூட போதும் !!! நன்றிகள் !!! //

எத்தனை பேர் இதனை தொடர்ச்சியாக செய்து வருகிறோம்? விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே! ஆனால் முஸ்லிம்கள் இறை கடமையாக நினைத்து அதிலும் கட்டாய கடமையாக செய்து வருகின்றனர். 7 அல்லது எட்டு வயதில் தொழ ஆரம்பிக்கும் ஒரு முஸ்லிம் அவனது இறப்பு வரையில் இந்த செயல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அடுத்து தனது மனதில் உள்ள பாரத்தை எல்லாம் படைத்தவன் முன்னால் இறக்கி வைத்து விட்டு தனது மனதை சீராக்கிக் கொள்கின்றனர். இதனால தான் கேரள கணக்கெடுப்பில் தற்கொலைகளின் விகிதாச்சாரம் முஸ்லிம்களிடம் மிகக் குறைவாக இருப்பதாக தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். கேரளா மட்டும் அல்ல. முழு இந்தியா ஏன் முழு உலகையும் எடுத்துக் கொண்டாலும் தற்கொலை விகிதாச்சாரம் மற்ற சமூகங்களைக் காட்டிலும் குறைவாகவே இருக்கும். எனவே முஸ்லிம்கள் ஐந்து வேளை இறைவனை தொழுவதால் இறைவனின் மதிப்பு கூடி விடப் போவதில்லை. இதன் மூலம் தொழுது கொள்ளும் மனிதனே நன்மைகளை அடைந்து கொள்கிறான்.

2:177. புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; தன் பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், அடிமைகள், கடனாளிகள் போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல் இவையே புண்ணியமாகும்; இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; வறுமை, இழப்பு போன்ற துன்பத்திலும், நோய் நொடிகள் போன்றவற்றின் கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் பயபக்தியுடையவர்கள்.

-குர்ஆன் 2:177

VANJOOR said...

தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. Part 1.

அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.

தொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள்.

திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.

நமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை.

தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.

WE MUSLIMS DO NOT OFFER SALAAH (PRAYERS) FOR ALL THESE MEDICAL BENEFITS.

WE OFFER SALAAH TO THANK ALLAH (S.W.T) ,

TO PLEASE HIM AND TO FOLLOW HIS COMMANDMENTS.

THE MEDICAL BENEFITS ARE ONLY SIDE DISHES OR FRINGE BENEFITS.



Why do Muslims bow down , prostrate and then stand as though they are exercising while offering prayers?

Answer.

SALAAH (prayers) IS LIKE AN EXERCISE

1. Mind is not directly under control.

Pschycologists say that the human-mind is not directly under our control and many a times it keeps wandering.

The body is directly under our control.

If I want to raise my hand I can raise it, if I want to take a step forward, I can do it.

But human mind is not directly under our control.

Therefore to humble the mind you have to humble the body and there is no better way of doing this than what we muslims do

i.e. to bring the highest part of the body i.e. the forehead to the lowest level (i.e. the ground) and then say �Subhanarabbil aala�, i.e. glory be to Allah, the Most High.

2. Medical benefits of Salaah:

Besides the spiritual and social benefits, there are several physical and medical benefits of Salaah.

1. Ruku � Bowing:
During salaah when a person bows down in Ruku :-

Additional

a. Additional blood is pumped in the upper part of the body.

b. Spine is made supple.

c. Spinal nerves are nourished and this provides relief for back-ache and pain.

d. Effective posture against flatulence.

2. Ar�Rafu � standing after bowing:

When a person stands up from ruku, fresh blood which was sent to the upper half of the body returns back to its normal flow and the body is relaxed.

3. Sajdah � Prostration:

Sajdah i.e. prostration is the most important part of Salaah.

a. Electrostatic charges:

Daily people are subjected to electrostatic charges from the atmosphere.

These charges are precipitated on the central nervous system which becomes super saturated.

If these extra charges are not got rid of he may have head-ache, neck-ache, muscle spasms, etc.,

The best way to get rid of these electrostatic charges is by dissipating them and discharging them out of the body.

As a heavy electric appliance requires a three pin plug, the third pin and wire for grounding and earthing,

similarly a human being have to earth these charges on the ground. He has to put his forehead on the ground.

There will be maximum dissipation of the extra electrostatic charges from the brain and the central nervous system into the ground.

You will not get a shock, if you put your hand beneath the prayer mat, under your forehead.

In sajdah the forehead is put on the ground, because the thinking capacity of the brain is in the fore lobe and not at the top of the head.
CONTINUED ……..

VANJOOR said...

தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.

PART 2.

************

Hence we receive peace of mind and soul by prostrating during our five daily prayers.

One also gets peace and relaxation.

b. Increased blood supply to brain:

During Sajdah the blood supply to the brain is increased which is beneficial to the brain.

c. Increase blood supply to the face:

During Sajdah the blood supply to the face is increased which promotes facial circulation especially in the cold season.

It may also help to avoid Fibrositis and chilblains by increase of blood flow to face and neck.

For more details how Sajdah helps Read this Sajdah has plenty of medical advantages

d. Drainage of paranasal air sinuses face:

Five times regular sujud (prostration) helps in drainage of paranasal air sinuses.

The maxillary air sinus has its estium at its upper and medial part and bending of the body will be like tilting a pot containing fluid.

Normally due to the continuous erect posture throughout the day,

the maxillary air sinus cannot be drained and a person suffering from maxillary sinusitus usually gets afternoon headache.

Similarly the frontal, sphenoidal , and ethmoidal sinuses drain better during the various postures of salaah.

e. Drainage of the bronchial tree:

Sajdah causes drainage of the bronchial tree and prevents the secretions from accumulating in it.

It is a natural treatment for drainage of secretions in bronchiotesis

and other pulmonary diseases leading to stasis of secretions, dust of various kinds and bacteria.

f. Exhaling of residual air:

Normally only 2/3 rd of the lung capacity receives fresh air. The remaining 1/3rd is residual air .

During sajdah the abdominal visura presses against the diaphragm

which presses against the lower lobes of the lungs

which help in exhaling the residual air thus allowing more fresh air to be inhaled

and thereby maintaining healthy lungs.

g. Increased venous return from the abdominal organ:

During Sajdah due to reduced gravitational force the venous return from the abdominal organs are increased.

h. Useful against femoral and esophageal hernia:

The Sajdah and Ruku postures are very useful against femoral
and esophageal hernia by decreasing pressure at these openings.

i. Prophylaxis against hemorrhoids (piles) and prolapse of uterus:

Sajdah can help a lot in prophylaxis against hemorrhoids (piles) and prolapse of uterus.

j. Musles are called peripheral heart and increase and increases vinus return to lower half of the body.

During Sajdah when a person lays his body weight on legs flexed at knee the boleus muscle (muscle) which has extensive venous network

and is also called as the peripheral heart of the body is put into action

which increases venues return from the lower half of the body
and also acts as a massage for these muscles

k. Beneficial in cervical and other spinal diseases

WE MUSLIMS DO NOT OFFER SALAAH (PRAYERS) FOR ALL THESE MEDICAL BENEFITS.

WE OFFER SALAAH TO THANK ALLAH (S.W.T) ,

TO PLEASE HIM AND TO FOLLOW HIS COMMANDMENTS.

THE MEDICAL BENEFITS ARE ONLY SIDE DISHES OR FRINGE BENEFITS.



.
.

VANJOOR said...

தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.

PART 3.



During Sajdah, a person has a support his body on knees, hands and forehead.

This posture has it is effects on the inter vertebral joints especially in the cervical
and other spinal diseases,

due to the abuse of moderisation subsequent to mechanised life and lack of bodily movements.

Effective cure in cardiac disease. The posture is sajdah is an effective cure in cardiac disease.

l. Jalsa - Squatting:

i. Fresh blood which was sent to the upper half of the body returns to normally and the body is relaxed.

ii. Stimulates circulation in the nerves and muscles of the thigh.

iii. Relaxing the muscles of the body including those related to the spine.

iv. Eliminates indigestion and constipation.

v. Beneficial in case of peptic ulcer and other stomach ailments.

m. Rising back to standing position (Qayam)

Rising from sitting to standing position on the toes puts the complete body weight on the toes and thus

i. Increases the strength of the muscle of the backbone thighs knees and legs.

ii. Free from backache.

iii. Free from degenerative disease of the knee.

6. Medical benefits only side dishes.

Salaah is offered for pleasing and thanking Allaah (swt):

WE MUSLIMS DO NOT OFFER SALAAH (PRAYERS) FOR ALL THESE MEDICAL BENEFITS.

WE OFFER SALAAH TO THANK ALLAH (S.W.T) ,

TO PLEASE HIM AND TO FOLLOW HIS COMMANDMENTS.

THE MEDICAL BENEFITS ARE ONLY SIDE DISHES OR FRINGE BENEFITS.


http://www.allaahuakbar.net/misconceptions/65.htm

Nizam said...

Arunan Newlight said...

////@ நிஜாம் - //உரிமைகூற ஆட்கள் இல்லம்மல் இங்கு 100 சதவீதம் முஸ்லீம்கள் மட்டும் இருந்தால் சத்தியப்படும்//

நல்லா சுத்துங்க காதுல பூ !!! எகிப்தில் சாத்தானின் சின்னம் தான் சோறு போடுகின்றது, அதனால் தான் அதனை இடிக்கவில்லை .... !!!////

ஐயா நானவது காதில் முறுங்கை பூ தான் சுத்தினேன். நீங்கா வாழைப்பூயே சுத்துகிறீர்கள். நீங்கள் வேனும் நம்புகிட்டு இருங்கா ஷாஜகான், மும்தாஜ் இந்தியவிற்கு சோறு போடுவதாக.

suvanappiriyan said...

//நல்லா சுத்துங்க காதுல பூ !!! எகிப்தில் சாத்தானின் சின்னம் தான் சோறு போடுகின்றது, அதனால் தான் அதனை இடிக்கவில்லை .... !!!//////

எந்த இடமும் கடவுளைப் போல் முக்கியத்துவம் கொடுக்காமல் வணங்கப்படாமல் இருந்தால் அதனால் எந்த பிரச்னையும் இல்லை. பிரமிடுகளையும் யாரும் வணங்குவதில்லை. எனவேதான் சுற்றுலாத் தளமாக இன்றும் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.

Anonymous said...

சுவனப்பிரியன் - //ஆரோக்கியமாக இருந்தவர் திடீரென்று ஒருநாள் தண்ணீரில் வழுக்கி விழுந்தவர் பிறகு எழும்பவே இல்லை. இரண்டு நாளில் மரணமடைந்து விட்டார். நன்றாக இருந்தவர் ஒரு சிறிய விபத்தில் இறந்தது ஆச்சரியமாக இருந்தது. ஒருக்கால் அவர் தினமும் செய்த யோகா அவரது மரணத்தை சிக்கிரமே கொண்டு வந்திருக்கலாம் என்று இப்பொழுது நினைக்கிறேன். //

//எனது தாத்தாவுக்கு 90 வயதுக்கு மேல் ஆகிறது. போன வருடம் வரை முடிந்த வரை பள்ளியில் சென்று தொழுது வருவதை நான் பார்த்துள்ளேன் - ஒரு மனிதன் ஒரு நாளைக்கு ஐந்து வேளை 50 முறைக்கும் மேல் குனிந்து நிமிர்ந்து தனது உடல் எலும்புகளுக்கும் சதைக்கும் சரியான வேலை கொடுத்து வந்தால் பல நோய்கள் குணமாக வாய்ப்புண்டு. இந்த தொழுகையானது அல்சைமர் வியாதி நீங்குவதற்கு பல காரணிகளில் ஒன்றாக உள்ளது. //

உங்களின் யோகா விளக்கமும் - தொழுகை விளக்கமும் முரணாக உள்ளதே !!!

யோகா செய்த தாத்தா சீக்கிரம் இறக்க காரணம் யோகா எனக் கூறுகின்றீர்கள் .. ஆனால் அவர் தொழுததால் தான் சீக்கிரம் இறந்திருப்பாரோ என்று தோன்றச் செய்கின்றதே !!!

ஏனிந்த இரட்டை வேடம் .. உங்களுக்கே நல்லாருக்கா ???

suvanappiriyan said...


இக்பால் செல்வன்!

//சுவனப்பிரியனின் யோகா விளக்கமும் - தொழுகை விளக்கமும் முரணாக உள்ளதே !!!//

யோகா பதிவில் நான் குறிப்பிட்ட தாத்தா எனது அப்பாவின் அப்பா. அவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். ஐந்து வேளை தொழுபவராக இருந்தும் யோகாவையும் தொடர்ந்து செய்து வருவார். சிறிய விபத்து அவரை இறப்பு வரை கொண்டு சென்றது யோகாவோ என்று எனது சந்தே கத்தைத்தான் வெளியிட்டிருந்தேன்.

அடுத்து அல்ஸிமர்ஸ் பதிவில் வந்த தாத்தா எனது தாயாரின் தந்தை. அவர் இன்னும் உயிருடன் உள்ளார்.

இரண்டு பதிவுகளிலுமே நான் கொடுத்த மேற்கோள்கள் அனைத்தும் மேற்குலக அறிஞர்களின் கருத்துகளேயன்றி எனது கருத்துகள் அல்ல. முரண்கள் இருந்தால் நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும்.

srinivasan said...

@ Malaysia Muslim Malay people dying in 50 years itself