Followers

Monday, December 24, 2012

சோனாலி முகர்ஜி - ஆசிட் வீச்சால் முகத்தை இழந்தவர்.

புதுடில்லி :காதலிக்க மறுத்ததால், மூன்று இளைஞர்களால், "ஆசிட்' வீச்சுக்கு இலக்காகி, முகத்தை பறிகொடுத்த, சோனாலி முகர்ஜி என்ற இளம் பெண், "கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியில் பங்கேற்று, 25 லட்சம் ரூபாய் பரிசு வென்றார்.


தலைநகர் டில்லியில், ஓடும் பஸ்சில், மருத்துவ மாணவி, ஆறு பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட கொடூரம், நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன், இது போன்றதொரு, கொடுமையான செயலுக்கு ஆளாக்கப்பட்டவர், சோனாலி முகர்ஜி."ஆசிட்' வீச்சுக்கு ஆளான அவருக்கு முகமே கிடையாது; கருகிய சதை துணுக்குகள் தான் முகத்தில் ஆங்காங்கே உள்ளது. அழகிய முகத்தை இழந்த அந்த பெண், தன் முகத்தையே வெளியே காட்டுவது கிடையாது. ஆனால், அவரை அந்த கொடுமைக்கு ஆளாக்கிய, மூன்று நபர்கள், வெளியே சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர்.ஒன்பது ஆண்டுகளுக்கு முன், இப்போது இருக்கும் அளவுக்கு, "மீடியா' தாக்கம் இல்லை என்றாலும், அப்போதும் பரபரப்பாக இந்த செய்தி பேசப்பட்டது.


ஆசிட் வீசுவதற்கு முன்....ஆசிட் வீசியதற்கு பின்...

ஜார்க்கண்ட் மாநிலத்தின், தன்பாத் நகர கல்லூரி ஒன்றில் படித்து வந்தார், சோனாலி முகர்ஜி. கல்லூரிக்கு செல்லும் வழியில், மூன்று இளைஞர்கள், அந்த பெண்ணை தொந்தரவு செய்து வந்தனர். வலுக்கட்டாயமாக, காதலிக்க வற்புறுத்தி வந்தனர்; அதை அந்த பெண் மறுத்து வந்தார்.

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, உள்ளே நுழைந்த அந்த கயவர்கள், கனரக இரும்பு பொருட்களில், துரு அகற்ற பயன்படுத்தப்படும், பயங்கரமான, "ஆசிட்'டை, அந்தப் பெண்ணின் முகத்தில் வீசி விட்டு ஓடினர்.இதில், முகம் பூராவும் வெந்து, இரு கண்களும் குருடாகி, ஒரு காது முற்றிலும் கேட்காத நிலையை அடைந்த சோனாலி, அதற்கு பிறகு வெளியே வருவதே இல்லை.

கைது செய்யப்பட்ட அந்த இளைஞர்கள், ஒன்றிரண்டு ஆண்டு சிறைத் தண்டனைக்கு பிறகு, வெளியே வந்து விட்டனர். ஆனால், அந்தப் பெண் வீட்டிலேயே முடங்கி விட்டாள். எனினும், தன்னம்பிக்கையை கைவிடாமல், "டிவி'யில், நடிகர், அமிதாப் பச்சன் நடத்தும், "கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியில், சமீபத்தில் பங்கேற்றார். அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியாக பதிலளித்து, 25 லட்சம் ரூபாயை வென்றுள்ளார்.

""இந்த பணத்தைக் கொண்டு, என் முகத்தில் உரிந்து வரும் பிளாஸ்டிக் இழைகளை சரி செய்ய முடியும்; சில நாட்களுக்கு நிம்மதியாக சாப்பிட முடியும். எனினும், முகம் இனி கிடைக்கப் போவதில்லை. அதற்காக வீட்டிலேயே முடங்கிக் கிடந்தால், வாழ்க்கை என்னாவது என்ற எண்ணத்தில், போட்டியில் பங்கேற்றேன். என் முகத்தை, "டிவி'யில் காட்டினர். அதுவே, அந்த கயவர்களுக்கு உண்மையான தண்டனையாக இருக்கும்,'' என, சோனாலி கூறினார்.நிகழ்ச்சியின் போது, சோனாலியை, நடிகர் அமிதாப் பச்சன், "வீரமான பொண்ணு' என, பாராட்டினார்.

பத்திரிக்கை செய்தி

23-12-2012

இவர் பாதிக்கப்பட்ட அந்த ஆண்டுகளில் பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வெளியில் வந்தால் இதே போன்ற தாக்குதல் நடக்கும் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இந்தியா முன்னேறுகிறது என்று பெருமை பட்டுக் கொண்டே எவ்வளவு அரக்க்தனங்களையும் அரங்கேற்றி வருகிறோம்.

http://www.blottr.com/breaking-news/posters-warn-women-they-will-face-acid-attack-if-they-wear-jeans

-------------------------------------------------------

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பஸ் நிலையத்தில், நேற்று இரவு, 9:00 மணிக்கு, இளம்பெண் ஒருவர் அழுதபடி வந்து கொண்டிருந்தார். அங்கிருந்த பொதுமக்கள் அவரிடம் விசாரணை செய்தனர். இரவு, 8:00 மணிக்கு, தனது உறவினரான காதலனுடன், மணிமுக்தாற்றில் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த, நான்கு பேர், தன்னிடம் இருந்த துப்பட்டாவால், தனது காதலனை கட்டிப்போட்டு, தன்னை கற்பழித்ததாகக் கூறினார்.தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று, அப்பெண்ணை போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். டி.எஸ்.பி., வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் சீராளன் விசாரணை நடத்தினர்.அதனைத் தொடர்ந்து, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின், மேல் சிகிச்சைக்காக, கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர்.

டிசம்பர் 25,2012 - தின மலர்

இது நேற்று நடந்த சம்பவம்.

இந்த அலங்கோலங்கள் அதிகமாகாமல் கட்டுப்படுத்த வேண்டுமானால் கடுமையான தண்டனையும் சினிமாவுக்கு கடுமையான சென்சாரையும் கொண்டு வர வேண்டும். இந்த சமூகம் சீரழிந்ததற்கு இந்த கூத்தாடிகளின் பங்கு மிக அதிகம். இவர்களை சரியாக்கினால் சமூகமும் சரியாகும்.

26 comments:

உம்ம் ஒமர் said...

பாய்...இவரைப் பற்றி ஏற்கனவே ஒரு பதிவின் கமெண்ட்டிலும் குறிப்பிட்டிருந்தேன். அவர் இப்ப க்ரோர்பதி 25 லட்சம் வென்றுள்ளார். ...இதெல்லாம் ஒரு தடையே அல்ல என்பதற்கு வேறென்ன உதாரணம் இருக்க முடியும்... மாஷா அல்லாஹ்... இந்தப் பணத்தைக் கொண்டே தன் சர்ஜரிக்கு செலவிடப்போவதாக கூறியுள்ளார். இந்திய அரசு வெட்கப்படவேண்டும் இதைக் கேட்டு!!

http://www.huffingtonpost.co.uk/2012/12/24/sonali-mukherjee-acid-attack-india-millionaire-surgery_n_2359455.html?utm_hp_ref=uk

enrenrum16 said...

நேற்று 50 வயது பெண் பலாத்காரம்னு செய்தி... //இந்தியா முன்னேறுகிறது என்று பெருமை பட்டுக் கொண்டே எவ்வளவு அரக்க்தனங்களையும் அரங்கேற்றி வருகிறோம்.// உண்மையிலும் உண்மை.

mohamed said...

சலாம் சகோ சுவனப்பிரியன்,

அந்த பெண்ணை பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.எதனை கனவுகளோடு இருந்திருப்பார் அந்தப் பெண் கயவர்கள் ஆசிட் ஊற்றி அதை அளித்து விட்டார்கள்.பாகிஸ்தான்,ஆப்கானித்தான் நாட்டில் உள்ள பெண்களின் உரிமைகளை பற்றி பேசும் யோக்கியர்கள் இந்தியாவில் நடப்பதை கண்டு கொள்ளாமல் விட்டதேனோ.

faizeejamali said...

Naatil irattai jananayaga murai ullathu anna hazare matrum iromsharmila vishayam migapperiya udharanam adhe pondru congress kathchiyil irattai membership undu cingress il urupinarage iruppavar viruppapattal hindu maha sabaiyilum uruppinaraga irundhu kollalam wow enna oru madhasaarbatre katchi congress soothiran badhikkabattaal oru niyayam brhamanan baadhikkapattaal oru niyayam

UNMAIKAL said...

சேலத்தில் பல மாதங்களாக 2 சிறுமிகளை பலாத்காரம் செய்த 2 கொடியவர்கள் கைது

Posted by: Mayura Akilan Published: Tuesday, December 25, 2012, 12:21 [IST]

சேலம்: சேலத்தில் ஆதரவற்ற இரண்டு சிறுமிகளை அதே ஊரைச் சேர்ந்த இரண்டு பேர் தொடர்ந்து பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் சரண்யா, லாவண்யா ,(பெயர் மாற்றப்பட்டுள்ளது).

இதில் ஒரு சிறுமியின் வயது 12 என்றும் மற்றொரு சிறுமியின் வயது 16 என்றும் தெரியவந்துள்ளது.

தாய் தந்தையரின் ஆதரவை இழந்த, இந்த இரு சிறுமிகளும், தங்களது பாட்டியுடன் அம்மாபேட்டையில் வசித்து வந்துள்ளனர். பாட்டி இறந்துவிடவே தனித்துவிடப்பட்ட சிறுமிகள் இருவரும், சேலம் பேருந்து நிலைய பகுதிகளில் சுற்றித் திரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த நாகசாமி என்பவர், தனது வீட்டில், வீட்டு வேலை செய்யுமாறும், தேவையான உதவிகளை செய்வதாகவும் கூறி அவர்கள் இருவரையும், அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அவர்களை நாகசாமி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

அவருடன், அவரது உறவினரான சந்திரன் என்பவரும் இந்த தகாத செயலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

இது குறித்த தகவல் அறிந்த சமூக ஆர்வலர் ஒருவர் சிறுமிகளை காப்பாற்றியதோடு, காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து நாகசாமியையும், சந்திரனையும் சேலம் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

சிறுமிகள் இருவரும் காப்பகம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Read more at: http://tamil.oneindia.in/news/2012/12/25/tamilnadu-two-arrested-raping-minor-girl-166851.html

சுவனப் பிரியன் said...

சகோ உம் உமர்!

//பாய்...இவரைப் பற்றி ஏற்கனவே ஒரு பதிவின் கமெண்ட்டிலும் குறிப்பிட்டிருந்தேன். அவர் இப்ப க்ரோர்பதி 25 லட்சம் வென்றுள்ளார். ...இதெல்லாம் ஒரு தடையே அல்ல என்பதற்கு வேறென்ன உதாரணம் இருக்க முடியும்... மாஷா அல்லாஹ்... இந்தப் பணத்தைக் கொண்டே தன் சர்ஜரிக்கு செலவிடப்போவதாக கூறியுள்ளார். இந்திய அரசு வெட்கப்படவேண்டும் இதைக் கேட்டு!!//

பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் நாள் தோறும் அதிகரித்து வருவது கவலை தருவதாக உள்ளது.

சுவனப் பிரியன் said...

சகோ என்றென்றும் பதினாறு!

//நேற்று 50 வயது பெண் பலாத்காரம்னு செய்தி... //இந்தியா முன்னேறுகிறது என்று பெருமை பட்டுக் கொண்டே எவ்வளவு அரக்க்தனங்களையும் அரங்கேற்றி வருகிறோம்.// உண்மையிலும் உண்மை.//

நாடு வல்லரசாகப் போகிறதாம். எதில் என்பதுதான் கேள்வி.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

சுவனப் பிரியன் said...

சலாம் சகோ முஹம்மத்!

//அந்த பெண்ணை பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.எதனை கனவுகளோடு இருந்திருப்பார் அந்தப் பெண் கயவர்கள் ஆசிட் ஊற்றி அதை அளித்து விட்டார்கள்.பாகிஸ்தான்,ஆப்கானித்தான் நாட்டில் உள்ள பெண்களின் உரிமைகளை பற்றி பேசும் யோக்கியர்கள் இந்தியாவில் நடப்பதை கண்டு கொள்ளாமல் விட்டதேனோ.//

அந்த போட்டோவைப் பார்க்கும் நமக்கே இவ்வளவு மனது சங்கடப்படுகிறதே! அந்த பெண்ணுக்கு எப்படி இருக்கும்?

காதலிக்க மறுத்ததற்காக இவ்வளவு பெரிய தண்டனையா? இதுதான் முற்போக்கு தனமா?

சுவனப் பிரியன் said...

சகோ ஃபைஜி ஜமாலி!

//Naatil irattai jananayaga murai ullathu anna hazare matrum iromsharmila vishayam migapperiya udharanam adhe pondru congress kathchiyil irattai membership undu cingress il urupinarage iruppavar viruppapattal hindu maha sabaiyilum uruppinaraga irundhu kollalam wow enna oru madhasaarbatre katchi congress soothiran badhikkabattaal oru niyayam brhamanan baadhikkapattaal oru niyayam //

பார்க்க போனால் காங்கிரஸூக்கும் பிஜேபிக்கும் பெரும் வித்தியாசம் எல்லாம் இல்லை. இந்துத்வா வாதிகள் காங்கிரஸிலும் நிறைந்துள்ளனர்.

UNMAIKAL said...

திரிபுராவில் இளம்பெண்ணை கற்பழித்து,

நிர்வாணமாக்கி தாக்கி,

மரத்தில் கட்டி வைத்த கும்பல்


Posted by: Siva Published: Monday, December 24, 2012, 10:20

அகர்தலா: திரிபுராவில் 37 வயது குடும்பத் தலைவி ஒருவரை ஒரு கும்பல் கற்பழித்து அவரை நிர்வாணமாக்கி அனைவர் முன்பும் அடித்து, மரத்தில் கட்டி வைத்துள்ளது.

டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ படிப்பு மாணவி கற்பழிக்கப்பட்டதற்கு நியாயம் கேட்டு தலைநகரில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில் திரிபுராவில் 5 வயது குழந்தையின் தாயை ஒரு கும்பல் கற்பழித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு திரிபுராவில் உள்ள பிஷால்கரைச் சேர்ந்த 37 வயது குடும்பத் தலைவியை ஒரு கும்பல் கற்பழித்தது.

மேலும் அவரை நிர்வாணமாக்கி ஊர் மக்கள் முன்பு அடித்து நொறுக்கியது.

அதோடு மட்டுமல்லாமல் அந்த பெண்ணை நிர்வாண கோலத்தில் மரத்தில் கட்டி வைத்துள்ளது.

அவர் அதே நிலையில் பல மணி நேரம் இருந்தும் அவரை யாரும் காப்பாற்ற வரவில்லை.

பின்னர் அந்த பெண் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் 7 பேரைக் கைது செய்தனர், 3 பேரை தேடி வருகின்றனர்.

மேலும் அப்பெண்ணின் கணவர் அந்நேரத்தில் எங்கே சென்றார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், அந்த கும்பல் அப்பெண்ணை வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்து பெண்கள் உள்பட பலர் முன்பு கற்பழித்துள்ளனர்.

ஆனால் ஒருவர் கூட அவரைக் காப்பாற்றவில்லை என்றனர்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து பிஷால்கரில் கண்டனப் பேரணி நடந்தது.

Read more at: http://tamil.oneindia.in/news/2012/12/24/india-tripura-woman-stripped-raped-beate-166776.html

சுவனப் பிரியன் said...

சகோ உண்மைகள்!

//திரிபுராவில் இளம்பெண்ணை கற்பழித்து,

நிர்வாணமாக்கி தாக்கி,

மரத்தில் கட்டி வைத்த கும்பல்//

நம் நாட்டில் தினம் தினம் அதிகரித்து வரும் பெண்களுக்கெதிரான கொடுமைகள். எங்கு சென்று கொண்டிருக்கிறது நமது நாடு?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

அவிநாசி: அவிநாசி அருகே பள்ளி அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 மாணவிகள் திடீரென மாயமானதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்தபெரியாயி பாளையத்தைச் சேர்ந்த மூன்று மாணவிகள், அங்குள்ள திருவள்ளுவர் அரசு மேல் நிலைப்பள்ளியில் 8 மற்றும் 6ம் வகுப்பு படித்த வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை பள்ளி அருகே விளையாடிக்கொண்டிருந்த அவர்கள் திடீரென மாயமாயினர். பெற்றோர்கள் நேற்றிரவு முழுவதும் தேடி அவர்கள் கிடைக்காத நிலையில், இதுகுறித்து அவிநாசி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி அருகே மூன்று மாணவிகள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Anonymous said...


திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே தண்ணீர் இன்றி பயிர் கருகியதால் விரக்தியடைந்த விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த மேல கொருக்கையைச் சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் (35). இவர் தனக்குச் சொந்தமாக 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில், தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதால் விரக்தியடைந்த கோபால கிருஷ்ணன் இன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இத்துடன் இந்த மாவட்டத்தில் இது 3 வது விவசாயி மரணம் ஆகும்.

--------------------------

கோவை: போதிய வருமானமில்லாததால் விரக்தியடைந்த கணவன் மனைவி சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர். கோவை சாய்பாபா காலனி ஜவஹர் நகரை சேர்ந்தவர் நந்த குமார் (39). நகைப்பட்டறை தொழிலாளி. இவரது மனைவி அகிலாண்டேஸ்வரி (33). இவர்களுக்கு விமல் (13) என்ற மகனும், ஸ்வேதா (12) என்ற மகளும் உள்ளனர். சமீப காலமாக நந்தகுமார் வேலைவாய்ப்பின்றி இருந்ததாக கூறப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்திருந்த நந்தகுமார், வேலை வாய்ப்பு இல்லாததால் விரக்தியடைந்து மது குடித்துள்ளார். இதனால் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இருவரும் தற்கொலை செய்து கொள்வதென முடிவெடுத்து, நகைப்பட்டறையில் பயன்படுத்தப்படும் சயனைடை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Dinamalar
25-12-2012

jaisankar jaganathan said...

தாலிபான்களை பார்த்து இந்தியா உருப்புடாம போச்சு

jaisankar jaganathan said...

நண்பர் சுவனம்,
என் கேள்விக்கு பதில் தருவதுஇல்லை போல. சௌக்கியமா?

சுவனப் பிரியன் said...

//என் கேள்விக்கு பதில் தருவதுஇல்லை போல. சௌக்கியமா?//

கேள்வி கேட்பதில் ஏதாவது பொருள் இருந்தால் பதில் சொல்லவும் நமககு ஆர்வம் வரும். இந்தியாவில் நடக்கும் பாலியல் கொடுமைகள் பெண் கொடுமைகளுக்கு யார் காரணம்? எந்த மதம் காரணம்? என்பதை எல்லாம் உங்களவர்களே நன்கு விளங்கியுள்ளனர். பொட்டு கட்டி தேவரடியாராக கடவுளுக்கு நேர்ந்து விட்டு கடைசியில் அந்த பெண்ணை பொது சொத்தாக்கி நாசமாக்கினீர்கள். சதி சென்ற பெயரில் பெண்களுக்கு எதிராக சதி செய்து பெண்களை வலுக்கட்டாயமாக உடன் கட்டை ஏற வைத்தீர்கள். பார்ப்பனர்கள் தவறு செய்தால் அதற்கு எந்த தண்டனையும் இல்லை ஆனால் பிற்படுத்தப்பட்டவன் அதாவது சூத்திரன் தவறு செய்தால் அவன் தலையை எடுக்க வேண்டும், வேதம் படித்தால் அவன் நாக்கை அறுக்க வேண்டும் என்று இந்து மத சட்டங்களாக மனுஸ்ருமிதி மூலமாக சட்டங்களை இன்று வரை பாதுகாத்து புனிதப்படுத்தி வருகிறீர்கள். இந'த சட்டங்களை வழி வழியாக படித்து வந்ததனால் பெண் கொடுமை வன் புணர்வு என்பது இந்த மக்களுக்கு சர்வ சாதாரணமாகி விட்டது.

மொகலாயர் ஆட்சி வந்து இதற்கெல்லாம் ஒரு கடிவாளம் போட்டனர். அந்த ஆட்சிகளே தொடர்ந்திருந்தால் பெண் கொடுமைகள் நம் சமூகத்தில் முற்றாக ஒழிக்கப்பட்டிருக்கும். ஆட்சியை நடக்க விட்டார்களா உங்கள் சொந்தங்கள். அதன் பலனை இன்று இந்தியா அனுபவிக்கிறது.

UNMAIKAL said...

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மகள்கள் "ஃபேஸ் புக்" பயன்படுத்த தடை!

Tuesday, 25 December 2012 07:33 MARUPPU மீடியா - மறுப்பு செய்திகள்


DEC25,

நான், எனது 2 பெண் பிள்ளைகளையும் "ஃபேஸ்புக்"கில் கணக்கு துவங்க அனுமதிக்க மாட்டேன்,

அவர்கள் "வேறு பெயர்களில்" ஃபேஸ்புக் பயன்படுத்துவதற்கும் "தடை" விதிக்கப்பட்டுள்ளது,

என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.

ஒபாமாவின் மூத்த மகள் மாலியா (14), இளைய மகள் ஸாஷா (12).

இவர்களிடம் அறிமுகமில்லாத யாரும் நட்புக்கொள்வதை, தாம் விரும்பவில்லை.

எனவே, அவர்கள் ஃபேஸ்புக்கை பார்வையிடவும் - பயன்படுத்தவும் - கணக்கு துவங்கி பிறருடன் நட்புக்கொள்ளவும் "தடை" விதித்துள்ளேன்.

அவர்கள், வேறு பெயர்களில் ஃபேஸ்புக்கில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதையும் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

எந்நிலையிலும் அவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை அனுமதிக்க மாட்டேன்.

இந்த தடை, குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியாகும் வரை நீடிக்கும் என்றார்.

ஒபாமாவின் இந்த கட்டுப்பாடுகளுக்கு அமெரிக்க பெண்ணியவாதிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


குறிப்பு:

பெண் சுதந்திரம் பற்றி வாய்க்கிழிய பேசும் அமெரிக்காவில்,

அதன் அதிபர் பொறுப்பிலிருப்பவரே,

தன் மகள்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளபோது,

பெண்களை கண்ணியமாக பாதுகாக்க வேண்டிய முஸ்லிம் சமூகத்தினர்,

தன் பிள்ளைகள் விஷயத்தில்பொறுப்பை உணர்ந்து செயல்படுவது அவசியம்.


SOURCE: http://www.maruppu.in/all-medias/43-maruppu-news/691--q-q-

ராவணன் said...

குண்டு வைப்பவர்களும்...ஆசிட் ஊற்றுபவர்களும் நிறைந்த நாடு அண்ணாச்சி.

அண்ணாச்சி நமக்கு நம்ம ஒரே இறைவன் முனியாண்டிசாமி துணையிருப்பான்.

UNMAIKAL said...

தங்களின் ரகசியங்கள் வெளியுலகிற்கு தெரியாமலிருக்க ஹிந்துத்துவா சக்திகள் கொலைச் செய்துள்ளனர்.

சுனில் ஜோஷியை கொன்றது ராஜேந்தர் சவுத்ரி!


25 Dec 2012
புதுடெல்லி: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷியை,

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு குற்றவாளியான ஹிந்துத்துவா பயங்கரவாதி ராஜேந்தர் சவுத்ரி கொலைச்செய்ததாக கருதப்படுகிறது.

2007-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுனில் ஜோஷி மர்மமான முறையில் கொலைச் செய்யப்பட்டான்.

இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளி அண்மையில் மத்திய பிரதேச மாநிலத்தில் வைத்து கைதுச் செய்யப்பட்ட ராஜேந்தர் சவுத்ரி என்று என்.ஐ.ஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தங்களின் ரகசியங்கள் வெளியுலகிற்கு தெரியாமலிருக்க சுனில் ஜோஷியை ஹிந்துத்துவா சக்திகள் கொலைச் செய்துள்ளனர்.

2006-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிகழ்ந்த மாலேகான் குண்டுவெடிப்பு,

2007 பெப்ருவரி மாதம் நிகழ்ந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு,

2008-ஆம் ஆண்டு நிகழ்ந்த மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு,

2007 அக்டோபரில் அஜ்மீர் தர்காவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு,

2008-ஆம் ஆண்டு மலேகானிலும், மொடாஸாவிலும் நிகழ்ந்த குண்டுவெடிப்பு

ஆகியவற்றை சதித்திட்டம் தீட்டியதில் ஜோஷி முக்கிய பங்கு வகித்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதில் அஜ்மீர் தர்காவில் குண்டுவைப்பதற்கான திட்டம் வெற்றிப் பெற்றதில் ஜோஷிக்கும் அளவுக்கதிகமான தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது.

இவ்வழக்கில் போலீசார், அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைதுச்செய்ததும்,

மக்களிடையே முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வு வளர்ந்ததும்,

ஜோஷிக்கு சந்தோசத்தை ஏற்படுத்தியது.

தங்களின் பின்னால் புலனாய்வு ஏஜன்சிகள் வராததும்,

சதித்திட்டங்கள் தீட்டுவது,

இயக்கத்தை வழி நடத்துவது

ஆகியவற்றில் ஜோஷிக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியதோடு காரியங்களை எளிதாக கையாளவும் வழிவகுத்தது.

இதனைத்தொடர்ந்து பலரிடம் ரகசியங்களை ஜோஷி
பகிர்ந்துகொண்டுள்ளான்.

இதனை இயக்கத்தின் இதர தீவிரவாதிகள்
அச்சுறுத்தலாககண்டனர்.

இதன் மூலம் ஜோஷியை கொலைச்செய்வதை தவிர அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை.

மத்தியபிரதேச மாநிலம் மோவ் பிரதேசத்தில் ஜோஷி கொலைச்செய்யப்பட்டான்.

இதைப்போலவே பல்வேறு கொலைகள் நடந்துள்ளன.

இதனைக்குறித்தும் என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது.

தற்போது சம்ஜோதா எக்ஸ்பிரஸ்,மக்கா மஸ்ஜித், மலேகான் குண்டுவெடிப்புகளில் தனது பங்கினை ராஜேந்தர்சவுத்ரி ஒப்புக்கொண்டுள்ளான்.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் வைக்கப்பட்டநான்கு குண்டுகளில் ஒன்றை வைத்தவன் ராஜேந்தர் சவுத்ரி ஆவான்.

SOURCE: http://www.thoothuonline.com/

UNMAIKAL said...

ஓரினச்சேர்க்கை திருமணம்:

படைப்பின் நோக்கத்தையே தகர்த்துவிட்டது – போப்!

25 Dec 2012 Pope-Benedict-XVI1

வடிகான் சிட்டி:மனித படைப்பின் நோக்கத்தையே தகர்ப்பதுதான் ஓரினச் சேர்க்கை திருமணம் என்று போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியை தெரிவிக்கும் வேளையில் அவர் ஓரினச்சேர்க்கைக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வெளியிட்டார்.

மேலும் அவர் கூறியது:

ஆண், பெண் என்பது இறைவனின் படைப்பாகும்.

அதனை மாற்ற முடியாது.

ஓரினச்சேர்க்கை திருமணம் செய்பவர் இயற்கையான நிலையை சீர்குலைக்க முயலுகின்றனர்.

கருக்கலைப்பு, கருணைக் கொலையைப் போலவே ஓரினச் சேர்க்கை திருமணமும் உலக அமைதிக்கு எதிரானது.

இவ்வாறு போப் கூறினார்.

அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவான கொள்கை முடிவுகளை அரசுகள் எடுத்துவரும் வேளையில் போப்பின் இந்த விமர்சனம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாஷிங்டன் மற்றும் மேரிலாண்டில் அண்மையில் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக பெரும்பாலான மக்கள் வாக்களித்தனர்.

இவ்விடங்களில் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு சட்ட அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

SOURCE: http://www.thoothuonline.com/

Kiruththikan Yogaraja said...

மீஸ்ரர் உண்மைகள்..உமக்கு மேனியா இருக்கின்றது எந்தவிடயத்திற்கென்றில்லாமல் எல்லாவற்றிற்குமே உணர்ச்சிவசப்படுகின்றீர்கள்...சுவனப்பிரியன்சார் கூட உம் அளவிற்கு இல்லை அய்யா அக்கப்போர் தாங்கல
நான், எனது 2 பெண் பிள்ளைகளையும் "ஃபேஸ்புக்"கில் கணக்கு துவங்க அனுமதிக்க மாட்டேன்,

அவர்கள் "வேறு பெயர்களில்" ஃபேஸ்புக் பயன்படுத்துவதற்கும் "தடை" விதிக்கப்பட்டுள்ளது,

என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.

ஒபாமாவின் மூத்த மகள் மாலியா (14), இளைய மகள் ஸாஷா (12).

இவர்களிடம் அறிமுகமில்லாத யாரும் நட்புக்கொள்வதை, தாம் விரும்பவில்லை.//

Obama said: 'I'm very keen on protecting her privacy. She can make her own decisions as she gets older, but right now, for security reasons, she does not have a Facebook page.

Read more: http://www.dailymail.co.uk/news/article-2229201/Presidential-election-2012-Obama-pays-tribute-smart-beautiful-daughters.html#ixzz2G4rzYOKS
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

அதாவது அவர்களுக்கு வயது வந்ததும் நான் அனுமதிப்பேன் என்று அர்த்தம்...கொய்யாலே

In a New Hampshire radio interview on Election Day, Obama spoke about how being a parent is not always easy. A co-host’s 12-year-old daughter, called Taylor, had prepared a question for Obama. She asked him: 'Mr President, my mom won't let me date until I'm 16. Do you allow your daughters to date yet?'
Obama said that Sasha, 11, his younger daughter, did not yet seem to be interested in dating. He said that for Malia, 14, now in high school, there hadn't been 'anything official' yet.
'I would say that you should talk it through with your parents and the time will be right where there's nothing wrong with a young man coming by, introducing himself, being very proper and polite and making sure that you guys get home at a reasonable time,' he said


Read more: http://www.dailymail.co.uk/news/article-2229201/Presidential-election-2012-Obama-pays-tribute-smart-beautiful-daughters.html#ixzz2G4sWTQWq
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook உண்மைகள் உங்க ஒறிஜினல் நேம் என்னய்யா திட்டிற எண்டால் கூட உண்மைகள் எண்டா திட்ட முடியும் தேவுடா

Adirai Iqbal said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

இந்த கேள்வியை இங்கு நான் கேட்பதால் என்னை அல்லாஹ்வுக்காக மன்னிக்கவும்.
நாத்திகம் என்பது கடவுள் மறுப்புக்கொள்கை . அதாவது ஏக இறைவனை மறுக்கும் கொள்கை . ஒரு சாமியார் என்று சொல்லக்கூடியவன் தன்னை கடவுள் என்று சொன்னால் அவனும் நாத்திகந்தானே. நாத்திகத்தால்தானே பல கொடுஞ்செயல்கள் நடக்கின்றன.பஷார் அல் ஆஸாத் கூட நாத்திக சிந்தனை உள்ளவராமே . என் மாணவனின் கேள்விக்கு விளக்கம் தேவை

சுவனப் பிரியன் said...

வஅலைக்கும் சலாம் சகோ அதரை இக்பால்!

//நாத்திகம் என்பது கடவுள் மறுப்புக்கொள்கை . அதாவது ஏக இறைவனை மறுக்கும் கொள்கை . ஒரு சாமியார் என்று சொல்லக்கூடியவன் தன்னை கடவுள் என்று சொன்னால் அவனும் நாத்திகந்தானே. நாத்திகத்தால்தானே பல கொடுஞ்செயல்கள் நடக்கின்றன.பஷார் அல் ஆஸாத் கூட நாத்திக சிந்தனை உள்ளவராமே . என் மாணவனின் கேள்விக்கு விளக்கம் தேவை //

சாமியார்கள் நமது இந்தியாவில் பலவகைப்படுவர். எக இறைவனை மட்டுமே வணங்கும் சாமியார்கள் உள்ளனர். பல தெய்வ வணக்கத்தை கடைபிடிக்கும் சாமியார்களும் உள்ளனர். தன்னையே கடவுளாக அக்கிக் கொள்ளும் அத்வைத சாமியார்களும் உள்ளனர். நித்தியானந்தா, பிரேமானந்தா போன்ற போலி சாமியார்களும் சமூகத்தில் உள்ளனர். பிணங்களை தின்று வாழும் அகோரிகளும் சாமியார்கள் என்ற வட்டத்துக்குள் வருகின்றனர். சாமியார்களுக்கு இன்ன இலக்கணம் என்று இந்து மதம் எதையும் வரையறுக்கவில்லை.

கடவுளை மறுக்கும் பெரியாரும், கலைஞரும் கூட இந்து மதத்திற்குள்ளேதான் வருவர். சட்ட திட்டங்கள் ஒழுங்காக வகுக்கப்படா விட்டால் இது போன்ற குளறுபடிகள் வருவது இயற்கையே.

பஸர் அல் ஆசாத் நாத்திகரா என்று தெரியவில்லை. ஆனால் கம்யூனிஸ சித்தாந்தத்தில் ஆழ்ந்த பற்று கொண்டவர். இஸ்லாமிய சட்டங்களையும் , முதலாளித்துவத்தையும், நாத்திகத்தையும் ஒன்றாக்கி அமைக்கப்பட்டதே கம்யூனிஸம் என்ற கருத்தும் பலரிடம் உள்ளது.

சுவனப் பிரியன் said...

திரு கிருததிகன் யோகராஜா!

//உண்மைகள் உங்க ஒறிஜினல் நேம் என்னய்யா திட்டிற எண்டால் கூட உண்மைகள் எண்டா திட்ட முடியும் தேவுடா//

ஒரு இணைய தளத்தில் வந்த செய்தியை இங்கு சகோ உண்மைகள் பகிர்ந்திருக்கிறார். இதற்கு ஏன் நீங்கள் இவ்வளவு கோபப்பட வேண்டும்? திட்டக் கூடிய அளவுக்கு அதில் என்ன பிரச்னை உள்ளது.

நாகரிகத்தின் உச்சியில் இருக்கும் அமெரிக்காவில் கூட பெண்களை ஓரளவு அடக்கத்துடன் வளர்க்க வேண்டும். இல்லை என்றால் அந்த பெண்கள்தான் சீரழிவார்கள் என்ற படிப்பினை நமக்கு கிடைக்கிறது. ஆணும் பெண்ணும் எல்லா விதததில் சரி நிகர் சமானம் என்ற கொள்கையே இன்று உலகில் பிரச்னைக்ள் அதிகம் எழக் காரணமாக உள்ளது.

Adirai Iqbal said...

சகோ சுவனப்பிரியன் தங்களின் விளக்கத்திற்கு ஜசாக்கல்லாஹ் ஹைரன்

UNMAIKAL said...

.
.
சொடுக்கி >>> நீதி என்பது நிறம் பார்த்தா? மதம் பார்த்தா? வாழுமிடம் பார்த்தா? <<<< படிக்கவும்
.
.