Followers

Monday, December 10, 2012

பாவம்! தலைவர் ரொம்பவும்தான் சோகத்தில் இருக்கிறார்!


இருக்கிற நாப்பது தொகுதியை மூன்றாக பிரித்தால்தான் நாம நிம்மதியாக இருக்க முடியும். இதுல கூட்டணி கட்சிகளுக்கு வேற பிரிக்கணும். மூணு பேருமே ஒரே தொகுதிகளை கேட்டா நான் என்ன பண்ணுவேன். இதுக்கு பேசாம தேர்தலே வராம இருந்திருக்கலாம்.

-------------------------------------------------


கோவை மாவட்டம் துடியலூர் அருகே மடத்தூர் மகா சக்தி மாரியம்மன் கோவில் விழாவில் பூச்சட்டியுடன் பெண்கள் மீது பூசாரி நடந்து வந்தார். இதனை செய்தியாக போட்டு புளகாங்கிதம் அடைந்துள்ளது தினமலர். பக்தி என்பது குருட்டுத் தனமாக இருக்கக் கூடாது. கீழே கிடக்கும் அந்த பெண்களை விட எந்த வகையில் இந்த பூசாரி உயர்ந்து விட்டார்? வேறு ஒருவரின் மனைவியின் உடலில் இந்த பூசாரியின் கால்கள் படலாமா? பெண்களை இதை விடக் கேவலமாக யாரும் இழிவுபடுத்தி விட முடியாது. இவ்வாறான வேண்டுதல்களுக்கு மனமுவந்து எப்படி இந்த பெண்களின் கணவர்கள் அனுமதிக்கிறார்கள் என்று தெரியவில்லை. மிக உயர்ந்த தத்துவங்களைக் கொண்ட இந்து மதம் இடைப்பட்ட காலத்தில் இது போன்ற மூடப் பழக்கங்களை அனுமதித்ததால்தான் வெறுத்து போய் பலர் நாத்திகத்தின் கதவுகளை தட்டுகின்றனர்.

எங்கள் ஊரிலும் ஆன்மீக குரு என்ற பெயரில் ஒரு கயவன் பெண்களுக்கு கெட்ட ஆவிகளிடமிருந்து பாதுகாக்கிறேன் என்று தனி அறையில் சில சில்மிசங்களை செய்தான். பெரிய தாடி. அதை விட பெரிய தலைப்பாகை. இளைஞர்கள் ஒரு நாள் அவனின் காம விளையாட்டுகளை ஆதாரத்தோடு பிடித்தனர். பிறகென்ன. செமத்தையாக அடி கொடுத்து 'இனி எங்கும் சில்மிசம் செய்யக் கூடாது' என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர். புரோகிதத்துக்கு இஸ்லாத்தில் எந்த வகையிலும் ஆதரவு இல்லை. அது சாமியார்கள் ரூபத்தில் வந்தாலும் மௌலவிகள் ரூபத்தில் வந்தாலும் அல்லது ஃபாதர்கள் ரூபத்தில் வந்தாலும் அவர்களிடம் எந்த வொரு விஷேஷ தன்மையும் இல்லை என்று தெளிவாக கூறி விடுகிறது இஸ்லாம்.

மேலும் இஸ்லாத்தில் பெண்களை அதிகம் வெளியில் விடுவதில்லை. முக்காடு போட்டு மூடி வைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை வைக்கும் பலர் இது போன்ற அவலங்களை திரும்பி பார்ப்பது கூட இல்லை. முகத்தை மூடச் சொல்லி இஸ்லாம் கட்டளையிடவில்லை என்பதையும் இங்கு நோக்க வேண்டும். அடுத்து இது போன்று பெண்களை முஸ்லிம்கள் ஓரளவு வீட்டுக்குள் வைத்திருப்பதால் காதலில் வீழ்ந்து எதிர்காலத்தை பிரச்னையாக்குவது மற்ற சமூகங்கள விட மிக குறைவாகவே உள்ளது. பெண்களுக்கு கல்வி கொடுப்பதையோ தனக்கு விரும்பிய ஆடவனை தேர்வு செய்து கொள்வதையோ, பெண்கள் வேலைக்கு செல்வதையோ இஸ்லாம் தடுக்கவில்லை என்பதையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இஸ்லாம் பெண்கள் மீது பொருளாதாரச் சுமையையும், குடும்பப் பொறுப்புகளையும் சுமத்தி வைக்காததால், வேலைக்கோ, புற தேவைகளுக்கோ பெண்கள் செல்வது குறைவு. ஆண்களே இப்பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதால், இஸ்லாமியப் பெண்கள் முறையற்ற தொடர்புகளில் சிக்கிக் கொள்வதற்கு வாய்ப்புகள் குறைவு.

எனவே இறை வணக்கம் என்பது உளப்பூர்வமாக மன அமைதியோடு நம்மை படைத்த இறைவனிடம் நமது தேவைகளை முறையிடுவதாக இருக்க வேண்டும். நம்மைப் போன்ற மல ஜலத்தை சுமந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனிடம் நமது தலையை தாழ்த்துவதும் அவரது பேச்சுக்களை தெய்வ வாக்காக நம்பி தங்களின் சுய மரியாதையை இழப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலை மாறி உண்மையான இறை பக்தி நம் மக்களிடத்தில் பரவ நம்மால் ஆன முயற்சிகளை எடுக்க வேண்டும்.

20 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அரசியல் நிலவரத்துடன் சமய சடங்குகள் அலசலும் சிந்தனைக்குரியன.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அரசியல் நிலவரத்துடன் சமய சடங்குகள் அலசலும் சிந்தனைக்குரியன.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அரசியல் நிலவரத்துடன் சமய சடங்குகள் அலசலும் சிந்தனைக்குரியன.

semmalai akash said...

நல்லதொரு பதிவு, இப்போதுள்ள நிலைமை இப்படிதான் இருக்கிறது.

UNMAIKAL said...

அஸ்லம் பாவா கேமராவில் மாட்டிக்கொண்டார்

இனிமேல் பாவாக்களை நம்பாதிர்கள்

திருந்துவதற்கு முயற்சிசெயுங்கள்

சொடுக்கி >>> 1.பாவா கேமராவில் மாட்டிக்கொண்டார் <<<< காண்க‌



சொடுக்கி >>> 2.
சாமியார் கம்பேனி பிரைவேட் லிமிடெட்!


சொடுக்கி >>> 3.பிரேமானந்தா நித்தியானந்தா சாய்பாபா காண்க‌

சொடுக்கி >>> 4 சாமியார்களுக்கு ஞானக்கண் உண்டா? காண்க‌

.
.

Saleem said...

Dear Suvanapiriyan sir,

I read your blog for more than 2 years. All articles and your polite answers makes me more eager to read your blog.

once i told my friend "enjoy your week end" during week end, he answered me that islam allows all human being to be in peace not to enjoy.

because peace is more greater feeling than enjoyment.

Peace is a feeling that is permanent.

but enjoy is a temporary feeling.

and he told me that quran also saying to be in peace not to enjoy.

So i expect you to write an article to explain this 2 things clearly . may allah help us.

Unknown said...

தாலிபான் ஊத்தாத ஆசிட்டா தமிழநாட்டுல ஊத்திட்டாங்க?

suvanappiriyan said...

சகோ நிஜாமுத்தீன்!

//அரசியல் நிலவரத்துடன் சமய சடங்குகள் அலசலும் சிந்தனைக்குரியன. //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ செம்மலை ஆகாஷ்!

//நல்லதொரு பதிவு, இப்போதுள்ள நிலைமை இப்படிதான் இருக்கிறது.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

//அஸ்லம் பாவா கேமராவில் மாட்டிக்கொண்டார்

இனிமேல் பாவாக்களை நம்பாதிர்கள்

திருந்துவதற்கு முயற்சிசெயுங்கள்//

அருமையான சுட்டிகளை பகிர்ந்தமைக்கு நன்றி!

suvanappiriyan said...

சகோ சலீம்!

//So i expect you to write an article to explain this 2 things clearly . may allah help us.//

தொடர்ந்து படித்து வருவது அறிந்து மகிழ்ச்சி. எல்லா புகழும் இறைவனுக்கே!

நேரம் கிடைக்கும் போது நீங்கள் குறிப்பிட்ட தலைப்பில் எழுகிறேன் இன்ஷா அல்லாஹ்.

suvanappiriyan said...

திரு ஜெய்சங்கர்!

//தாலிபான் ஊத்தாத ஆசிட்டா தமிழநாட்டுல ஊத்திட்டாங்க?//

தாலிபான்கள் மூடர்கள் என்பதும் அல்லது அவ்வாறு அமெரிக்காவில் உலகுக்கு சித்தரிக்கப்படகின்றனர் என்பதும் நாம் அறிந்த ஒன்று. தாலிபான்களின் அப்பாவிகளை கொல்லும் தீவிரவாத செயலுக்கோ பெண் கொடுமைகளுக்கோ இஸ்லாம் எந்த விதத்திலும் பொறுப்பாகாது. இஸ்லாம் அதனை அனுமதிக்கவும் இல்லை.

அதை காட்டி நம் தமிழகத்தில் நடக்கும் இது போன்ற மூடப் பழக்கங்களை ஆதரிக்கலாம் என்கிறீர்களா?

Unknown said...


Mr Jaisangar


//தாலிபான் ஊத்தாத ஆசிட்டா தமிழநாட்டுல ஊத்திட்டாங்க?///


எவனோ அசிட் ஊற்ற, தலபான்தான் குற்றவாளியாக ஊடகங்களுக்கு கிடைக்கிறது.

காஷ்மீரிலும் இந்திய இராணுவத்தின் எடுபிடிகள் அசிட் ஊற்ற, அங்குள்ள போராளிகள் குற்றவாளிகளாக உங்களுக்குத் தெரிகிறது.

Unknown said...


Mr Jaisangar


//தாலிபான் ஊத்தாத ஆசிட்டா தமிழநாட்டுல ஊத்திட்டாங்க?///


எவனோ அசிட் ஊற்ற, தலபான்தான் குற்றவாளியாக ஊடகங்களுக்கு கிடைக்கிறது.

காஷ்மீரிலும் இந்திய இராணுவத்தின் எடுபிடிகள் அசிட் ஊற்ற, அங்குள்ள போராளிகள் குற்றவாளிகளாக உங்களுக்குத் தெரிகிறது.

Unknown said...

யூசுப் இஸ்மத்

பாகிஸ்தானில் பெண்கள் படிப்புக்கு எதிராக தாலிபான் கூட்டம் ஒரு பெண்ணின் மேல் ஆசிட் ஊத்தியதே. அது சரியா?

suvanappiriyan said...

//பாகிஸ்தானில் பெண்கள் படிப்புக்கு எதிராக தாலிபான் கூட்டம் ஒரு பெண்ணின் மேல் ஆசிட் ஊத்தியதே. அது சரியா?//

சரி என்று சொன்னது யார்?

Unknown said...

jaisangar

///பாகிஸ்தானில் பெண்கள் படிப்புக்கு எதிராக தாலிபான் கூட்டம் ஒரு பெண்ணின் மேல் ஆசிட் ஊத்தியதே. அது சரியா?///

அதுதான் சொன்னேனே! எவனோ ஊற்ற, தலபான் குற்றவாளி என்று!

தலபானைப் பொறுத்தவரை, மீடியா உலகத்திற்கு வேண்டாப் பெண்டாட்டி.

அவர்களின் வாந்தியை விழுங்குபவர்களுக்கு தலபானின் கால் பட்டால் குற்றம், கை பட்டால் குற்றம்தானே!

Sathish Murugan . said...

// பெண்களை இதை விடக் கேவலமாக யாரும் இழிவுபடுத்தி விட முடியாது.// சொல்றது யாருங்கோ... முப்பது முழம் துணியில் முஸ்லிம் ஆடவர்களையே நம்பாது சுற்றி வைப்பதை மதமென கருதும் நீர்.... ஓநாயின் நீலிக்கண்ணீர்.

// அடுத்து இது போன்று பெண்களை முஸ்லிம்கள் ஓரளவு வீட்டுக்குள் வைத்திருப்பதால் காதலில் வீழ்ந்து எதிர்காலத்தை பிரச்னையாக்குவது மற்ற சமூகங்கள விட மிக குறைவாகவே உள்ளது.// அடபோங்க சூனாப்பானா நீங்களும் உங்க கோணல் விளக்கமும்... தாய்லாந்திலும் இந்தோனேசியாவிலும் (இன்னும் பல இடங்களில்) நிறைந்து கிடக்கும் விபச்சாரப் பெண்கள் உண்மையான இஸ்லாமியர்களே இல்லை என்று சொல்வீர்... என்ன நிலையான மனம் பிறழ்ந்த நிலை உம்முடையது... பாவம் நீர்...

மற்ற படி, மூடப்பழக்க வழக்கங்களை நானும் எதிர்க்கிறேன்

suvanappiriyan said...

//முப்பது முழம் துணியில் முஸ்லிம் ஆடவர்களையே நம்பாது சுற்றி வைப்பதை மதமென கருதும் நீர்.... ஓநாயின் நீலிக்கண்ணீர். //

உமது சமூகத்தில் அடக்கி வைக்காது விட்டதனால் இன்று தர்மபுரி பற்றி எறிகிறதே. இன்று முதல் தர்மபுரியில் 144 தடை உத்தரவு தெரியுமோ?

இது போன்ற அசம்பாவிதங்களைத் தடுக்கத்தான் பெண்களுக்கு கண்ணியமான உடைகளை இஸ்லாம் தந்தது.

suvanappiriyan said...

//தாய்லாந்திலும் இந்தோனேசியாவிலும் (இன்னும் பல இடங்களில்) நிறைந்து கிடக்கும் விபச்சாரப் பெண்கள் உண்மையான இஸ்லாமியர்களே இல்லை என்று சொல்வீர்... //

அந்த நாடுகள் இஸ்லாமிய சட்டங்களை சரிவர பேணியிருந்தால் அந்த பெண்கள் இந்த இழி நிலைக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்.