Followers

Saturday, December 22, 2012

நம் தமிழகத்தில் அடுத்து ஒரு மாணவி வன்புணர்ந்து கொலை!

நம் தமிழகத்தில் அடுத்து ஒரு மாணவி வன்புணர்ந்து கொலை!

கேட்கவே மனம் கொதிக்கிறது. பள்ளிக்கு படிக்க செல்லும் பெண்களையும் இந்த காமுகர்கள் விடுவதில்லை.


தூத்துக்குடி அருகே, பள்ளிக்கு சென்ற மாணவி கொல்லப்பட்ட சம்பவத்தில், கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம், கிளாக்குளம் சத்துணவு உதவியாளர், பேச்சியம்மாள். இவரது மகள் புனிதா, நாசரேத்தில், விடுதியில் தங்கி, தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வந்தார். புனிதா நேற்றுமுன்தினம் பள்ளி செல்லும் வழியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கொலையாளிகளை பிடிக்க மாவட்ட எஸ்.பி., ராஜேந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை இச்சம்பவம் தொடர்பாக, தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியை அடுத்த பாறைக்குட்டம் என்ற பகுதியைச் சேர்ந்த சுப்பையா (36) என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மாணவி புனிதாவை பலாத்காரம் செய்ய முற்பட்டபோது சத்தமிடவே பயந்து போன இந்த கிறுக்கன் அந்த சிறுமியின் துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொன்றுள்ளான். இவன் இது போல் பலரை பலாத்காரம் செய்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

கடந்த டிசம்பர் 1ம் தேதி, தனது தங்கை முறையான, சித்தி தாயம்மாளின் மகள் பூர்ணகலா என்பவரிடம் தவறாக நடக்க முயனறதாக கைது செய்யப்பட்ட சுப்பையா, ஜாமினில் வெளிவந்து அவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டியுள்ளான். வெட்டியவுடன் அங்கிருந்து தலை மறைவாகியிருக்கிறான். இந்த கேஸில் போலீஸ் அவனை தேடி வந்திருக்கிறது. இதனிடையில் மாணவி புனிதாவை பலாத்காரம் செய்து கொலையும் செய்துள்ளான் இந்த படுபாவி.

இவ்வளவு குற்றம் செய்த ஒருவனை எவ்வாறு ஜாமினில் விட்டனர். நமது நாட்டு சட்டங்களில் உள்ள குறைகளே இது போன்ற குற்றங்கள் பெருகுவதற்கு காரணம. இவனுக்கு முன்பே உரிய தண்டனை கொடுத்து சிறையில் அடைத்திருந்தால் மாணவி புனிதாவின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும்.

அடுத்து டெல்லி மருத்துவ கல்லூரி மாணவி வன் புணர்வுக்கு எதிராக திரண்ட மக்களும் பதிவர்களும் இந்த குற்றத்துக்கு அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. பணம் காரணமா? அல்லது ஜாதி காரணமா? விளங்கவில்லை

அனைத்து உயிர்களையும் சமமாக பாவிக்கும் மனநிலை என்று நம் நாட்டில் தோன்றுகிறதோ அன்று தான் சமூக நீதி கிடைத்ததாக நாம் பெருமைபட்டுக் கொள்ள முடியும்.

இந்த காமுகனையும் டெல்லி காமுகர்களையும் ஒரே தரத்தில் வைத்து அதிக பட்ச தண்டனை எதுவோ அதை காலம் தாழ்த்தாமல் உடன் கொடுக்க மத்திய மாநில அரசுகள் முயல வேண்டும்.

-----------------------------------------------

திரிபுராவில் நடந்த கொடூரம்!

அகார்தலா: 37 வயதுடைய பெண்மணியை கூட்டாக வன்புணர்ந்து பிறகு அந்த பெண்ணை அடிக்கவும் செய்துள்ளனர் மாபாவிகள்.அந்த பெண்ணை நிர்வாணமாகவும் ஆக்கியுள்ளனர்.இது சம்பந்தமாக ஏழு பேரை நேற்று போலீஸ் கைது செய்துள்ளது. ஐந்து வயது குழந்தைக்கு தாயான இவரை இது போல் இதற்கு முன்னும் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை கூறுகிறது. கிராமத்தில் உள்ள எந்த நபரும் இந்த கொடுமையை தட்டிக் கேட்காததுதான் கொடுமையின் உச்சம்.

மாதர் சங்க பொறுப்பில் உள்ள பூர்ணிமா ராய் இந்த சம்பவத்துக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சில குண்டர்கள் இந்த செயலை செய்துள்ளதாக செய்தி கூறுகிறது.தோழர்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? கார்ல்மாக்ஸை படிப்பதை விட்டு விட்டு காம சூத்ரா படிக்க ஆரம்பித்து விட்டார்களோ என்னவோ.

http://timesofindia.indiatimes.com/india/Woman-gang-raped-stripped-naked-in-Tripura-seven-arrested/articleshow/17722097.cms

-----------------------------------------------

இலங்கையில் கல்வியில் முஸ்லிம்கள் முன்னேற்றம்:


நாட்டில் இடை நிலைக் கல்வியில் நிலவும் சமநிலை இன்மையை முஸ்லிம்கள் புரிந்துகொண்டு சிறப்பாக திட்டமிட்டு செயற்பட்டுவருவதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்;

2009 ஆம் ஆண்டிலிருந்து நாட்டின் பல்கலைக்கழக அனுமதி வீதத்தை உற்று நோக்கும் போது முஸ்லிம்கள் கல்வி தொடர்பில் கொண்டுள்ள சிரத்தையை கண்டுகொள்ள முடியும். 2009 முதல் சிங்களவர்களின் பல்கலைக்கழக அனுமதியானது 0.9 வீதத்தாலும் தமிழர்களின் பல்கலைக்கழக அனுமதியானது 0.2 வீதத்தாலும் பின்னடைந்துள்ளதுடன் முஸ்லிம்களின் பல்கலைக்கழக அனுமதியானது 10.8 வீதத்தால் அதிகரித்துள்ளது. இது ஒரு ஆரோக்கியமான முன்னேற்றம்.

முஸ்லிம்கள் எங்களுக்கு முன்மாதிரியாக கல்வி தொடர்பில் நீண்டகால திட்டங்களுடன் செயற்படுகின்றனர். அதனடிப்படையில் முஸ்லிம் பாடசாலைகள் சிறப்பாக செயற்படுகின்றன என்பதை கல்வி அமைச்சர் என்ற வகையில் என்னால் உறுதியாக கூறமுடியும். அத்துடன் அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு நாம் செயற்படவேண்டும் என்றார்.

நன்றி(விடிவெள்ளி)

சந்தோஷமான செய்தி. இலங்கை முஸ்லிம்களை முன் மாதிரியாகக் கொண்டு தமிழக முஸ்லிம்களும் கல்வியில் முன்னேற்றத்தைக் காண வேண்டும். கடந்த அறுபது ஆண்டு காலமாக மிகவும் பின்தங்கி விட்டோம். அரசு வேலைகளில் தற்போது இட ஒதுக்கீடும் கிடைத்து வருவதால் படித்தவர்களுக்கு அரசு வேலைகளோ அல்லது வளைகுடா நாடுகளிலோ சிறந்த எதிர்காலம் முஸ்லிம்களுக்கு உண்டு. எனவே முன்பு போல் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு முடித்தவுடன் பாஸ் போர்ட் எடுக்கும் வேலைகளை பார்க்காமல் எந்த விலை கொடுத்தாவது கல்லூரி படிப்பை முடித்து விடுங்கள்.

வசதியுள்ள முஸ்லிம்கள் வசதியில்லாத எத்தனையோ குடும்பங்களுக்கு படிக்க உதவி செய்யலாம். கடனாகவும் கொடுக்கலாம். இறப்புக்கு பிறகு கல்விக்கு செய்யும் உதவிகள் நன்மைகளாக நமக்கு ராயல்டிகளாக வந்து கொண்டிருக்கும்.

எனக்கு இத்தனை வேலி நிலம் இருக்கிறது, நான் இத்தனை காலனிகளை கட்டி வாடகை பெறுகிறேன் என்று வீண் பெருமை பேசிக் கொண்டிருக்காமல் தேவையுள்ள மக்களுக்கு உங்கள் பணத்தை தாராளமாக கல்விப் பணிக்கு செலவு செய்யுங்கள். அரசு வேலைகளில் முஸ்லிமகள் அதிகம் இடம் பெற உங்களின் பொருளாதாரத்தை செலவு செய்யுங்கள். அதிலும் அந்த கல்வியானது இஸ்லாமிய அடிப்படைகளை தகர்க்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டம். 7 ஆம் வகுப்புக்குப் பிறகு பெண்களையும் ஆண்களையும் தனித் தனியே பயிற்று விக்கும் பள்ளி கல்லூரிகளில் சேர்க்க முன்னுரிமை கொடுங்கள். ஏனெனில் சமூகம் அந்த அளவு சீரழிந்து கிடக்கிறது. மற்ற சமூகங்களுக்கு நாம் வழி காட்டியாக இருக்க வேண்டுமானால் கல்வியில் தன்னிறைவு அடைவது அவசியம். இதை உணர்ந்து நம்மால் முடிந்த கல்வி உதவிகளை கணக்கின்றி செய்வேமாக...

28 comments:

mohamed said...

முன்னாள் நீதிபதி கட்ஜு அவர்கள் செய்தி வெளியிட்டு இரண்டு நாள் கூட ஆகவில்லை அவருடைய வாக்கை உண்மை படுத்தி விட்டார்கள் நம் இந்திய நாட்டு அரசியல் வாதிகலும் ஊடகவியலாளர்களும்.கிராமப்புற பெண்களுக்கு நடந்தது கொடுமை இல்லையா?? அவர்களுக்கு எல்லாம் கரப்புகள் இல்லையா?? என்ன ஒரு ஓர வஞ்சனை இந்த மீடியாக்களும் அரசியல்வாதிகளிடமும்.அசிங்கமாக இருக்கிறது.

mohamed said...

மாஷா அல்லா இலங்கையில் நம் இஸ்லாமிய சகோதரர்கள் கல்விய கற்பதில் காட்டும் ஆர்வம் உண்மையாகவே மகிழ்ச்சியான செய்ஹ்டி தான்.அல்ஹம்துளிலாஹ்

சுவனப் பிரியன் said...

சகோ முஹம்மத்!

//முன்னாள் நீதிபதி கட்ஜு அவர்கள் செய்தி வெளியிட்டு இரண்டு நாள் கூட ஆகவில்லை அவருடைய வாக்கை உண்மை படுத்தி விட்டார்கள் நம் இந்திய நாட்டு அரசியல் வாதிகலும் ஊடகவியலாளர்களும்.கிராமப்புற பெண்களுக்கு நடந்தது கொடுமை இல்லையா?? அவர்களுக்கு எல்லாம் கரப்புகள் இல்லையா?? என்ன ஒரு ஓர வஞ்சனை இந்த மீடியாக்களும் அரசியல்வாதிகளிடமும்.அசிங்கமாக இருக்கிறது.//

இந்த அழகில் ஏமனில் சிறு வயதினரை திருமணம் முடிக்கிறார்கள் என்று சிலர் வருத்தப்பட்டு பதிவெழுதுகின்றனர். நம் நாட்டில் அனேக குறைகளை வைத்துக் கொண்டு ஆப்கானிஸ்தானத்துக்கும், ஏமனுக்கும் ஏன் ஓட வேண்டும்.

ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை என்ற பழமொழிதான் ஞாபகம் வருகிறது.

Anonymous said...

22 டிசம்பர் 2012,அகமதாபாத்
கடந்த 2003-ம் ஆண்டு ஜனவரி மாதம், குஜராத் மாநிலம் பவா நகரை சேர்ந்த சாதிக் ஜமால் என்பவரை குஜராத் போலீசார் அகமதாபாத்தில் எண்கவுன்டரில் சுட்டுக்கொன்றார். இந்த சம்பவம் போலி எண்கவுன்டர், இதுதொடர்பாக மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என சாதிக் ஜமாலின் சகோதரர், சபீர் ஜமால் என்பவர் குஜராத் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.


இந்நிலையில், மும்பை போலீஸ் படையை சேர்ந்த 'எண்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்' தயா நாயக் என்பவரிடம் குஜராத் போலீசார் சாதிக் ஜமாலை ஒப்படைத்த காட்சியை, தான் நேரில் பார்த்ததாக, கேத்தன் தரோட்கர் என்பவர் மும்பை ஐகோர்ட்டில் வாக்குமூலம் அளித்தார்.இதனையடுத்து, இவ்விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு குஜராத் ஐகோர்ட் உத்தரவிட்டது. சி.பி.ஐ. போலீசார், குஜராத் போலீசாரிடம் நடத்திய விசாரணையில் துணை போலீஸ் சூப்பிரண்ட் பர்மார், இன்ஸ்பெக்டர்கள் கோகில், மவானி, தலைமை காவலர்கள் அஜய்பால் சிங், சத்ரசிங் சுதஸ்மா ஆகியோரை கைது செய்து, நேற்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.வழக்கம்போல் நீதிபதியிடம் விசாரணைக்காவல் கேட்காமல், கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் போலீசார் குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்தனர்.இவ்வழக்கு தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டு சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பரோட் மற்றும் மேலும் 2 ஓய்வுபெற்ற போலீசார் என மொத்தம் 8 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ஓய்வுபெற்ற 2 போலீசாரையும் கைது செய்ய ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் வழங்கும்படி சி.பி.ஐ. போலீசார் நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

http://jnizamudeen.blogspot.com/2012/12/10.html

jaisankar jaganathan said...

//mohamed said...
மாஷா அல்லா இலங்கையில் நம் இஸ்லாமிய சகோதரர்கள் கல்விய கற்பதில் காட்டும் ஆர்வம் உண்மையாகவே மகிழ்ச்சியான செய்ஹ்டி தான்.அல்ஹம்துளிலாஹ்//

ஆமாம்.நல்லா படிச்சு பெரிய பெரிய பாம் எல்லாம் செஞ்சு காபிர்கள் வீட்டுல வைக்கனும். சரியா

Adirai Iqbal said...


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

//இந்த அழகில் ஏமனில் சிறு வயதினரை திருமணம் முடிக்கிறார்கள் என்று சிலர் வருத்தப்பட்டு பதிவெழுதுகின்றனர்.//

இதற்கு சார்வாகனார் . பிவருமாறு பின்னூட்டம் இட்டுள்ளார் .

//ஒரே வாதம் அவர்கள் சரியாக மதம் பின்பற்றவில்லை!!//

என்னடா இது பெரும் வம்பாக இருக்கிறது . இஸ்லாத்தில் இல்லாத வழக்கத்தை அவர்கள் பின்பற்றினால் அதற்கு இஸ்லாம் எப்படி பொறுப்பாக முடியும் .

ஆணுக்கும் பெண்ணுக்கும் முழு விருபோத்துடன் மட்டுமே வாழ்கை ஒப்பந்தம் ஏற்பட முடியும். இங்கு இஸ்லாம் திருமணத்தை வாழ்கை ஒப்பந்தம் என்றே குறிப்பிடுகிறது .

ஆனால் இந்த சார்வாகனார் மற்றும் இக்பால் செல்வன் இருவரும் வருண் எழுதிய
கன்னிப்பெண்ணின் கற்பை விலைக்கு வாங்க முயன்ற பிராமணாள்!

இந்த கட்டுரைக்கு இவர்களின் பின்னூட்டங்கள்

சார்வாகன் சொல்கிறார் இப்படி

//இதில் பிராமணர்களை இழுத்தது தேவையற்றது.//

இக்பால் சல்வனும் இப்படித்தான் கூறுகிறார்

//சார்வாகன் சொன்னது போல பிராமணாள் பெயரை இழுத்தது தேவையற்றது . ஏன் இங்கு மதமோ, சாதியோ பிரதானப்படவில்லை. பணமே பிரதானமாய் இருந்துள்ளது . //

சுவனப் பிரியன் said...

//ஆமாம்.நல்லா படிச்சு பெரிய பெரிய பாம் எல்லாம் செஞ்சு காபிர்கள் வீட்டுல வைக்கனும். சரியா//

இந்துத்வ வெறி பித்தம் தலைக்கேறினால் ஒரு மனிதன் எவ்வாறெல்லாம் பிதற்றுவான் என்பதற்கு இந்த பின்னூட்டமே சாட்சி.

சுவனப் பிரியன் said...

சகோ அதிரை இக்பால்!

//இக்பால் சல்வனும் இப்படித்தான் கூறுகிறார்

//சார்வாகன் சொன்னது போல பிராமணாள் பெயரை இழுத்தது தேவையற்றது . ஏன் இங்கு மதமோ, சாதியோ பிரதானப்படவில்லை. பணமே பிரதானமாய் இருந்துள்ளது . ////

அவர்கள் முஸ்லிம்களுக்கு ஒரு அளவு கோலும் பார்பபணர்களுக்கு ஒரு அளவு கோலும் எப்போதும் வைத்திருப்பார்கள். விட்டுத் தள்ளுங்கள்.

சுவனப் பிரியன் said...

திரு மலர் மன்னன்!

//ஆலயங்களில் தேவரடியார்கள் இருக்க வேண்டும் என்கிற விதிமுறை எங்கு உள்ளது என்றுதான் கேட்டேன். அடிப்படை வித்தியாசங்களைப் புரிந்துகொண்டு பதில் சொல்ல முற்பட வேண்டும்.//

அடிப்படை விததியாசங்களை மலர் மன்னன் அவர்கள்தான் விளங்கிக் கொள்ளவில்லை. திருநாவுக்கரசர் அருளிய பாடலை ஆதாரமாக தந்தேனே! சிவ பெருமானே பறவை நாசசியாரின் காதலுக்கு தூது போனதாக குறிப்பிட்டிருந்தேனே. இதை விட என்ன ஆதாரம் வேண்டும். அல்லது அனைத்தும் பொய்யாக புனைந்துரைக்கப்பட்டது என்று சொல்லப் போகிறீர்களா?

//இஸ்லாமிய குடிமைச் சட்டத்தின் பிரகாரம் மனைவி மண விலக்குப் பெறுவதானால் பத்து மாதம் சுமந்து பெற்று, சீராட்டி வளர்த்த தன் குழந்தைகள் மீதுகூட எவ்வித உரிமையும் இன்றி, அனைத்தையும் துறந்து கணவன் வீட்டைவிட்டு வெறுங் கையுடன் வெளியேற வேண்டும்.//

எந்த சட்டம் அவ்வாறு சொல்கிறது? ஆதாரம் தர முடியுமா? தயவு செய்து பொய்களை அரங்கேற்ற வேண்டாம். குர்ஆனின் சட்டத்தை பார்க்கவும்

'விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு நல்ல முறையில் வசதிகள் அளிக்கப்பட வேண்டும்.இறைவனை அஞ்சுவோருக்கு இது கடமை'
-குர்ஆன் 2:241
'வசதி உள்ளவர் அவருக்கு தக்கவாறும் ஏழை தமக்குத் தக்கவாறும் சிறந்த முறையில் அவர்களுக்கு வசதிகள் அளியுங்கள். இது நன்மை செய்வோர் மீது கடமை'
-குர்ஆன் 2:236
விவாகரத்து செய்பவன் வசதியுள்ளவனாக இருந்தால் அவனது வசதிக்கேற்ப லட்சக் கணக்காண ரூபாய்களை அந்த பெண்ணுக்கு பெற்றுத் தர வேண்டியது அந்த ஊர் ஜமாத்தின் கடமை. இது கட்டாயக் கடமை என்றும் கூறுவதைப் பார்க்கவும். எங்கள் ஊரில் ஏற்கெனவே மஹராக கொடுத்தும் விவாகரத்து சமயத்தில் பல லட்சங்களை பெண்ணுக்கு கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. அரபு நாடுகளில் அந்த பெண்களுக்கு கோடிக் கணக்கில் பணம் கிiடைக்கும்

'பெண்களை விவாகரத்து செய்த பின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தமக்குப் பிடித்த கணவர்களை விருப்பப் பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதை தடுக்காதீர்கள்'
-குரஆன் 2:232

விவாகரத்து செய்து விட்டால் அந்த பெண் மறுமணம் செய்து கொள்வதை முந்தய கணவன் தடுக்கக் கூடாது என்று குர்ஆன் இடும் கட்டளையை கவனியுங்கள். இது 1400 வருடங்களுக்கு முன்பே வந்த புரட்சிகர திட்டம். ஆனால் மலர் மன்னன் பின் பற்றும் மார்க்கம் அந்த பெண்களை கணவனின் நெருப்பிலேயே தள்ளி விட்டு சதி என்ற சடங்கை சமீப காலம் வரை செய்து வந்தீர்கள். அக்பர், ஒளரங்கசீப் போன்ற முகலாய மன்னர்கள் கடுமையான சட்டம் போட்டு இந்த கொடுமையை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தார்கள். அதன பிறகு ராஜாராம் மோகன்ராயும் , ஆங்கிலேயர்களும் இந்த சட்டத்தை மிக கடுமையாக்கி இன்று சமூகத்தில் அந்த பழக்கம் முற்றாக ஒழிக்கப்பட்டது. ஆனால் வட நாடுகளில் இன்றும் அந்த கொடுமை மறைமுகமாக நடந்து வருகிறது. ரூப் கண்வர் விவகாரம் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். வலுக்கட்டாயமாக சிகையில் தள்ளிய கொடுமையை மறக்க முடியுமா?

//கணவனால் திராவகம் ஊற்றப்பட்ட பல இஸ்லாமியப் பெண்கள் சார்பில் போராடியபோது பல நடைமுறைச் சிக்கல்களை நேரில் எதிர்கொண்டவன் நான்.//

இது புதிய செய்தியாக உள்ளது. மலர் மன்னனே தயாரித்த செய்தியாக இருக்கலாம். ஏனெனில் குர்ஆன் இவ்வாறு கட்டளையிட்டுருக்க ஆசிட் ஊற்றியவன் கண்டிப்பாக முஸ்லிமாக இருக்க முடியாது...

சுவனப் பிரியன் said...

திரு மலர் மன்னன்!

//எஸ். சத்திய மூர்த்தி தமிழ் நாட்டில் ஓர் அரசியல் கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்தவர். ஹிந்து வேதாகம சாஸ்திர விற்பன்னரோ, அவற்றின் அடிப்படையில் அங்கீகாரம் அளிக்க அதிகாரம் பெற்றவரோ அல்லர். மேலும் அவர் ஹிந்து தர்மத்தின் பிரதிநிதி என்று தம்மை முன்னிறுத்திக்கொண்டவரும் அல்லர். ஐயர் என்று அவர் தம் பெயருக்குப் பின்னொட்டுப் போட்டுக் கொண்டதும் இல்லை. இங்கு அவரை சத்திய மூர்த்தி அய்யர் என்று வேண்டுமென்றே சாதியைக் குறிப்பிட்டு எழுதுவது அப்பட்டமான துவேஷத்தின் வெளிப்பாடு.//

சத்திய மூர்த்தி சொல்லும் செயலும் இந்து மதத்தை கட்டுப்படுத்தாது என்று சொல்லும் அதே நீங்கள் கர்நாடகாவில ஏதோ ஒரு பெயர்தாங்கி முஸ்லிம் இஸ்லாமிய பெண்களுக்கு இழைத்த கொடுமையை ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் மேல் எப்படி போடுகிறீர்கள்? உங்களுக்கு நியாயம்: எனக்கொரு நியாயமா? நான் சத்திய மூர்த்தியை மட்டும் குறிப்பிடவில்லை. சிவ பெருமான் தூது போன கதையையும் குறிப்பிட்டுள்ளேன்.

//இங்கு, ’தங்களுக்குத் தேவையில்லை என்றால்…’ என்பதை கவனிக்க வேண்டும். இது பெண்ணை ஒரு பண்டம் எனக் கருதுவதுபோல் அல்லாமல் வேறு எப்படிக் கருதத் தோன்றுகிறது?//

'தேவையில்லை' என்பது திருமண பந்தம் ஒன்றுக்கு மட்டும் பொருந்தக் கூடியது அல்ல. அன்று முகமது நபி அரபுலகம் அனைத்திற்கும் சக்கரவர்த்தியாக இருந்தார். ஒரு ஆட்சித்தலைவருக்கு அரசாட்சி செய்ய ஆண்களும் பெண்களும் நிறைய தேவைப்படும். ஆட்சித் தலைமை மட்டும் அல்லாது ஆன்மீக தலைமையையும் முகமது நபி கவனித்து வந்தார். எனவே தான் அந்த தோழர் 'உங்கள் வேலைக்கு தேவைப்படவில்லை என்றால் அந்த பெண்ணை நான் திருமணம் முடித்துக் கொள்கிறேன்' என்று கேட்டது. நன்றாக கவனிக்கவும். 'தேவரடியாராக வைத்துக் கொள்கிறேன்' என்று கேட்கவில்லை. 'திருமணம் முடித்துக் கொள்கிறேன்' என்றுதான் கேட்கிறார்.


சுவனப் பிரியன் said...

திரு மலர் மன்னன்!

//இரண்டு சதம் இரண்டு சதம் என்று ஹிந்து சமுதாயத்தைப் பிரித்துப் பேசினால் அந்த இரண்டு சதமும் சிறுபான்மைதானே, அதற்குரிய இப்போதுள்ள சலுகைகளை அளிக்கலாமா?//

சரியான வாதம். நீங்கள் உடனே ஆர்எஸ்ஸையும், பிஜேபியையும், பார்பனர்கள் சங்கத்தையும் தொடர்பு கொண்டு இந்தியாவில் பார்பணர்கள் மொத்தம் எத்தனை பேர் என்று கணக்கிட சொல்லுங்கள். அந்த விகிதாசரப்படி நீங்கள் பணியில் அமர்ந்துள்ளீர்களா என்று பாருங்கள். கூடுதலாக இருந்தால் அதனை தலித், பிற்படுத்தப்பட்டோருக்கு பிரிதது கொடுத்து விடுங்கள். குறைவாக இருந்தால் தாராளமாக அரசிடம் வாங்கிக் கொள்ளுங்கள். இதற்கு முஸ்லிம்களோ, தலித்களோ, பிற்படுத்தப்பட்ட சாதியினரோ குறுக்கே நிற்க மாட்டார். இதை நீங்கள் முன்னெடுத்து செய்யலாமே!

//சிறுபான்மை என்ற பெயரில் வேறு எங்குமே காணாத பல சலுகைகளைப் பெற்று, எல்லாத் துறைகளிலும் – ஹவாலா, கள்ளக் கடத்தல் உள்பட!- எவ்விதத் தடங்கலும் இன்றி முன்னேறிவரும் முஸ்லிம்கள் இங்கு முஸ்லிம்களாக இருப்பதால சிரமப் படுவதாக ஒரு முஸ்லிம் சொன்னால் அது சந்தேகமில்லாமல் தேசத் துரோகம்.//

ஒரு தாவுத் இப்றாகிமோ, ஒரு ஹாஜி மஸ்தானோ ஒட்டு மொத்த இந்திய இஸ்லாமிய மக்களின் பிரதிநிதியாக முடியாது. உங்கள் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஏழை முஸ்லிம்களை சற்று நோக்குஙகள். தலித்களை விட மிக மோசமான நிலையில்தான் முஸ்லிம்கள் உள்ளதாக சச்சார் கமிட்டி ஆய்வு சமர்பித்ததை அதற்குள் மறந்து விட்டீர்களா?

ஆரம்பததில் இருந்து பர்மா, சிலோன், மலேசியா, வளைகுடா என்று தமிழக மற்றும் கேரள முஸ்லிம்கள் வெளி நாடுகளுக்கு சென்று பொருளீட்ட சென்றதால் இந்த இரண்டு மாநிலங்களில் மட்டும் சற்று வசதியாக உள்ளனர் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் ஒட்டு மொத்த இந்தியாவை எடுத்துக் கொண்டால் இஸ்லாமியர்களின் நிலை மிக கவலைக்கிடமாகவே உள்ளது. இதை அரசும் அறியும்.

semmalai akash said...

நாளுக்குநாள் நாள் இதுபோல் சம்பவம் கூடிக்கொண்டே போகிறது! கேட்கவே மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது. ஏன்டா உலகம் அழியவில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது.

சுவனப் பிரியன் said...

திரு ராம்!

//ஏதோ வறுமையும் , அறியாமையும் முஸ்லிம்களுக்கு மட்டுமே உண்டானது என்பது போல் பேசுகிறீர்கள். சரி, அந்த வறுமையும் அறியாமையும் உள்ள முஸ்லிம் இளம் பெண்களுக்கு ஏன் முஸ்லிம் சட்டப்படி பாதுகாப்பு இல்லை ?//

காரணம் இந்து மதத்தில் ஊறிப் போன வரதட்சணை கொடுமை. இந்து மதத்திலிருந்து மதம் மாறிய இஸ்லாமியர்கள் வரதட்சணை பழக்கத்தையும் கூடவே கொண்டு வந்ததால் இந்த பிரச்னை. தற்போது மஹர் கொடுத்து திருமணம் முடிப்பதுதான் இஸ்லாமிய முறை என்று தவ்ஹீத் ஜமாத் மூலம் பட்டி தொட்டி எல்லாம் கடந்த 20 வருடங்களாக பிரசாரம் செய்ததன் பலனாக நிறைய மாற்றங்கள் தென்படுகிறது. இளைஞர்கள் வரத்சணை வாங்க மாட்டோம் என்று ஒவ்வnhரு கூட்டத்திலும் இறைவன் மேல் ஆணையிட்டு உறுதி மொழி எடுத்துக் கொள்கின்றனர். முன்பு வாங்கிய வரதட்சணையை பலர் தற்போது திருப்பி கொடுத்து வருகின்றனர்.

//தவறு அரசிடமும் , பெரும்பான்மை சமூகத்திடமும் (யாரது?) இருந்தால் இந்தியாவில் உள்ள மற்ற சமூகத்திலும் இது போன்ற திருமணங்கள் இருக்க வேண்டுமே?//

ஏன் இல்லை. பால்ய விவாகம் இன்றும் இந்து மதத்தில் நடந்து வருகிறதே! கடுமையான சட்டம் போட்டும் அதனை தடுக்க முடியவில்லையே!

//எப்படி தடுப்பீர்கள்?//

பிரசாரத்தின் மூலம்தான். சவுதியில் இது போன்ற பால்ய விவாகம் முற்றிலும் தடை செய்யப்பட்டது. நம் இந்திய முஸ்லிம்களும் கல்வி வேலை வாய்ப்புகளில் சம அந்தஸ்தை பெறும் போது வறுமை நீங்கி இந்த பால்ய விவாகம் தடுக்கப்படும்.

//இந்து மக்கள் யாரும் தங்கள் மதம் மாறுதலுக்கு தேவையே இல்லாத perfect மதம் என்று கூறுவதில்லை. எனக்கு தெரிந்து கிறிஸ்துவர்களும்,சீக்கியரும், பௌத்தரும் கூட இதேபோல் மாற்றங்களை ஏற்கின்றனர், அவை தங்கள் பழைய மத நம்பிக்கை மற்றும் மத புத்தகங்களுக்கு எதிராக இருந்தாலும்.//

குர்ஆனில் அப்படி மாற்றம் செய்தே ஆக வேண்டும் என்று ஏதாவது ஒரு வசனத்தை காட்ட முடியுமா? இது அகில உலக மக்களுக்கும் இன்று வரை எந்த சட்ட சிக்கலையும் தர வில்லையே...

jaisankar jaganathan said...

//இந்துத்வ வெறி பித்தம் தலைக்கேறினால் ஒரு மனிதன் எவ்வாறெல்லாம் பிதற்றுவான் என்பதற்கு இந்த பின்னூட்டமே சாட்சி.
//

உங்களுக்கு இருக்குற யூத வெறியை விடவா?

சுவனப் பிரியன் said...

சகோ செம்மலை ஆகாஷ்!

//நாளுக்குநாள் நாள் இதுபோல் சம்பவம் கூடிக்கொண்டே போகிறது! கேட்கவே மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது. ஏன்டா உலகம் அழியவில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது.//

வருந்தத்தக்க நிகழ்வுகள். நிலைமை மாற வேண்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

ஸ்ரீவைகுண்டம்: தூத்துக்குடி மாவட்டம் கிளாக்குளத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி புனிதாவை குடிபோதையில் பலாத்காரம் சென்று கொலை செய்ததாக கொலையாளி சுப்பையா போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளான்.

அதில், “குடித்துவிட்டு வந்து தாதன்குளம் ரயில் நிலையத்தில் ரொம்ப நேரம் இருந்தேன். இரவு முழுவதும் அங்கேயே உறங்கினேன்.

பின்னர் காலையில் எழுந்து மீதியிருந்த மதுவையும் குடித்துவிட்டு நடந்தபோது மாணவி புனிதா அந்த வழியே போனதைப் பார்த்தேன். போதையின் உச்சத்தில் இருந்த நான், அந்த மாணவியை பலாத்காரம் செய்தேன். அது முடியாமல் போனதால், காட்டிக் கொடுத்துவிடுவாரோ என்ற பயத்தில் கொலை செய்தேன்,” என்று கூறியுள்ளான்.

தமிழகத்தில் கொலை, கொள்ளைகள், பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் குடிபோதைதான் என்று கூறப்பட்டு வருகிறது. ஒரு பக்கம் கடும் மின்வெட்டு, மறுபக்கம் போதையில் பெருகும் குற்றங்கள் என தமிழகத்தின் நிலை மிகக் கேவலத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

Anonymous said...

ஷாலி says:
December 23, 2012 at 9:23 am

திரு.மலர்மன்னன் கூறும் தேவரடியார் பதிவிரதா சிரோன்மனிகள் அன்று எந்த தேவனை திருப்தி செய்தார்கள்?. புள்ளை பெயரைச்சொல்லி பூதம் சாப்பிட்டது போல் கடவுள் பெயரால் தேவரடியாள்களை அனுபவித்தவர்கள் கோயில் தர்மகர்த்தாக்கள்,அர்ச்சக பார்ப்பனர்கள்,ஜமீன்தார்கள்.ஊர்ப்பெரியவர்கள்.இதுதானே உண்மை.இந்த நடைமுறையை குறை கண்டு நீக்குவது தவறு என்கிறார்.மலர் மன்னன்.
அதாவது லிமிட்டெட் நபர்கள் அனுபவிப்பதால் பதிவிரதா சிரோமணி தன்மை மாறாது. ஆனால் பப்ளிக்கா அனைவரும் அனுபவித்தால் அவர்கள் பாலியல் தொழிலாளியாக மாறிவிடுவார்களாம். அப்பெண்கள் மேல் என்னே கரிசனம்!

இறுதியில் அண்ணாவிடம் அரசியல் நாகரீகம் பயின்றவர்.
கருணாநிதிக்கும் கரி பூசிவிட்டார்.” அவர் தாயாரும் நானறிந்த அத்தகைய உத்தம பதி விரதா சிரோமணியே!”

T.Thenmathuran said...

///பாகிஸ்தானில் முஸ்லிம்களின் புனித நூலான குரானை இழிவு படுத்தியாக குற்றம்சாட்டப்பட்ட ஒரு நபர், 200 பேர் கொண்ட கும்பலால் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்./// இந்தச் செய்தி சம்பந்தமாக உங்களது கருத்தை அறிய ஆவலாக உள்ளேன் சு.பி. சாமியார் அவர்களே...

சுவனப் பிரியன் said...

திரு தேன் மதுரன்!

//பாகிஸ்தானில் முஸ்லிம்களின் புனித நூலான குரானை இழிவு படுத்தியாக குற்றம்சாட்டப்பட்ட ஒரு நபர், 200 பேர் கொண்ட கும்பலால் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்./// இந்தச் செய்தி சம்பந்தமாக உங்களது கருத்தை அறிய ஆவலாக உள்ளேன் சு.பி. சாமியார் அவர்களே... //

இது விரிவாக விளக்க வேண்டிய செய்தி. நாளை தனி பதிவாகவே இடுகிறேன்.

சுவனப் பிரியன் said...

திரு மலர் மன்னன்!

//இரண்டில் எதை ஏற்பது என்று ஸ்ரீ சுவனப்பிரியன் குழம்ப வேண்டிய அவசியம் என்ன?

வறண்ட பாலைவனப் பிரதேசத்தில் வேலைக்குப் போய்விட்டதாலேயே சிந்தனையில் வறட்சி ஏற்பட வேண்டிய அவசியம் இல்லை. பிரச்சினையை தேவரடியார் பக்கம் திசை திருப்பித் தப்பித்துக் கொள்ளும் புத்திசாலித்தனத்துக்கு மட்டும் குறைச்சலே இல்லை!//

பெண் கொடுமை இஸ்லாத்தில் உள்ளது என்று ஒரு கட்டுரை சொல்லும் போது அதை இஸ்லாமியான எனக்கு விளக்கம் கொடுக்க உரிமை உள்ளது. அதைத்தான் செய்தேன். அதோடு நமது இந்திய நாட்டிலும் பெண்கள் எவ்வாறெல்லாம் கொடுமை படுத்தப் படுகிறார்கள் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை விளக்கவே 'தேவரடியார்கள்' பற்றி நான் சொன்னது. இதில் உங்களுக்கு என்மேல் சற்று கோபம் என்று நினைக்கிறேன். 'மூளை வறண்டு விட்டது' என்று என்னை இகழ்ந்தாலும் உங்கள் மேல் எனக்கு கோபம் வராது. எனது தாத்தா என்னை ஏதும் கோபத்தில் சொன்னால் நான் அவர் மேல் கோபப்படுவேனா! கண்டிப்பாக இல்லை. தாத்தாவிடம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் இல்லை. எனவே தான் கோபப்படுகிறார் என்று நினைத்து விட்டு நான் நடையை கட்டுவேன்.

//” அவர் தாயாரும் நானறிந்த அத்தகைய உத்தம பதி விரதா சிரோமணியே!”//

தனது வாழ்நாள் முழுக்க, தற்போதய தள்ளாத வயதிலும் ஒரு மதத்தின் மீது ஏன் இந்த அளவு சம்பந்தப்பட்டவர் வெறுப்பு வைததுள்ளார் என்பதை மலர் மன்னன் தகவல் மூலம் அறிந்து கொண்டேன். நன்றி.

Anonymous said...

Idealvision Tnmedia 1:20am Dec 17

சோவியத் யூனியன் போலவே அமெரிக்காவும் உடைந்து போகும் - முன்னாள் ரஷ்ய அதிபர் மிக்காயேல் கார்பச்சேவ் :

(TU) உலக போலீஸ் வேடமணிந்து திமிரான கொள்கைகளை பின்பற்றினால் சோவியத் யூனியன் போலவே அமெரிக்காவும் உடைந்து போகும் என்று முன்னாள் ரஷ்ய அதிபர் மிக்காயேல் கார்பச்சேவ் கூறியுள்ளார். மேற்காசியா மற்றும் கருங்கடல் பகுதியின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இஸ்தான்புல்லில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார் கார்பச்சேவ்.

அவர் தனது உரையில் , தொடர்ச்சியாக செய்த தவறுகளின் மூலமே சோவியத் யூனியன் உடைந்து போனது. இந்த முட்டாள் தனத்தை அமெரிக்காவும் பின்பற்றினால் சோவியத்தின் கதிதான் ஏற்படும். ஆட்சியில் இருக்கும் பொழுது இஸ்லாமிய பண்பாடுகளை அழிக்கவே சோவியத் ஆட்சியாளர்கள் முயன்றனர்.

பனிப்போர் காலத்தில் உலக சக்திகள் மதங்களை ஆயுதமாக பயன்படுத்தினர். சோவியத் யூனியனின் ஆப்கான் ஆக்கிரமிப்பு மன்னிக்க முடியாத குற்றமாகும். அமெரிக்கா தற்போது அந்த தவறை தொடர்கிறது. இவ்வாறு கார்பச்சேவ் கூறினார்.

mohamed sultan

Yusuf Ismath said...

///ஆட்சியில் இருக்கும் பொழுது இஸ்லாமிய பண்பாடுகளை அழிக்கவே சோவியத் ஆட்சியாளர்கள் முயன்றனர்.///

அமெரிக்கக் காட்டுமிராண்டிகளைப்போல், இந்த சோவியத் காட்டுமிராண்டிகளும் சிறிதும் சளைத்தவர்கள் அல்ல.

மனிதனின் சட்டங்களும் கொள்கைகளும் கொஞ்சம் நாள்தான் ஆயுள். அவர்களை அறியாமலே, அது அவர்களிடமிருந்து விடை பெறும்.

அமேரிக்கா அதிக நாள் தாங்காது. அதை என் வாழ்நாளில் காண விரும்புகிறேன்.

சுவனப் பிரியன் said...

சகோ யூசுப் இஸ்மத்!

//அமேரிக்கா அதிக நாள் தாங்காது. அதை என் வாழ்நாளில் காண விரும்புகிறேன்.//

உங்கள் வாக்கு பலிக்கட்டும். பல நாட்டு மக்களின் வயிற்றெரிச்சலில் சுகிக்கிறது அமெரிக்கா. சிதறுண்டு போகும் போது அவை தனி இஸ்லாமிய நாடுகளாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் அந்த அளவு இஸ்லாத்தின் வளர்ச்சி அங்கு அபரிமிதமாக காணப்படுகிறது.

faizeejamali said...

Sankara bomb kalacharathai kai vidumbadi karnal brohith pondre padithe arasu uyar padhaviyil irukkum hindututva venargaluku sollu oru muslim padikka aarambithaal kuda avan theevaravaathi gandhiyai kondra gothche kalum muslimgalai karuvatha modigalum advanigalum dhesathin thiyagigal

jaisankar jaganathan said...

// ஏனெனில் அந்த அளவு இஸ்லாத்தின் வளர்ச்சி அங்கு அபரிமிதமாக காணப்படுகிறது.//

இதுல இருந்து என்ன தெரியுது? இஸ்லாம் எங்க வளந்தாலும் அந்த நாடு உருப்புடாது

Anandan krishnan said...

//உங்கள் வாக்கு பலிக்கட்டும். பல நாட்டு மக்களின் வயிற்றெரிச்சலில் சுகிக்கிறது அமெரிக்கா. சிதறுண்டு போகும் போது அவை தனி இஸ்லாமிய நாடுகளாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.//

பாவம் அமெரிக்கா, பாலைவன கூட்டத்திற்கு பரந்த மனதுடன் தனது நாட்டை திறந்து விட்டது, கடைசியில் அதன் நிலை இப்படியா ஆக வேண்டும். அமெரிக்கா சிதறுண்டு போகும்போது உலகம் நன்றாகவே இஸ்லாமை பற்றி புரிந்து கொள்ளும், இவர்கள் கால்வைக்கும் இடம் விளங்காது என்று. பல நல்ல கண்டுபிடிப்புகளை உலகிற்கு தந்த நாடு அமெரிக்கா, இந்த கூட்டத்தை உள்ளே விட்டதற்காக அதற்கு இவ்வளவு பெரிய தண்டனை கிடைக்க வேண்டாம். இந்தியாவிலும் இஸ்லாம் வளருது என்று மும்மீன்கள் சொல்கிறார்கள், அடுத்து எந்த ஏரியாவை பிரித்து கேட்க போகிறார்களோ

//இதுல இருந்து என்ன தெரியுது? இஸ்லாம் எங்க வளந்தாலும் அந்த நாடு உருப்புடாது//

ஆமை புகுந்த வீடு உருப்படாது என்று தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள் இனிமேல் புது மொழியாக இஸ்லாம் புகுந்த நாடு உருப்படாது என்று சொல்லலாம். உதாரணம் பல இருக்கிறது சோமாலியா, உகாண்டா, ருவாண்டா.. இன்னும் பல ஆப்ரிக்க நாடுகளின் மக்கள் ஒருவேளை உணவுக்கு கூட திண்டாடி கொண்டு இருக்கிறார்கள். எல்லாமே இஸ்லாம் என்ற உத்தம மார்க்கத்தை பின்பற்றும் நாடுகள் தான். அவர்களின் வாழ்கையை வளப்படுத்த துப்பில்லாத ஒரு சுவன கூட்டம் பிற நாடுகளையும் மதத்தையும் குறை கூறிக்கொண்டும், இன்னும் தனது மதத்தை வளர்க்க வேண்டும், எந்த நாடுகளை சிதறடிக்கலாம் என்று கணக்கு போட்டுக்கொண்டும் இருக்கிறது, பாரதத்திலும் இந்த கூட்டம் புகுந்ததன் விளைவு, பாகிஸ்தான், பங்களாதேஸ் என்று நாடு சிதறியது, இன்னும் காஷ்மீரத்தையும் கண் வைத்துகொண்டு இருக்கிறார்கள்.

//ஆட்சியில் இருக்கும் பொழுது இஸ்லாமிய பண்பாடுகளை அழிக்கவே சோவியத் ஆட்சியாளர்கள் முயன்றனர்//

அப்படி எண்ணங்க பண்பாடு இஸ்லாமில் இருக்கிறது, காபிர்களை கொலை செய்வதும், செல்லும் இடம் எல்லாம் குண்டு வைப்பதும் சூப்பர் பண்பாடு. நடத்துங்க

சுவனப் பிரியன் said...

//இந்த கூட்டத்தை உள்ளே விட்டதற்காக அதற்கு இவ்வளவு பெரிய தண்டனை கிடைக்க வேண்டாம். இந்தியாவிலும் இஸ்லாம் வளருது என்று மும்மீன்கள் சொல்கிறார்கள், அடுத்து எந்த ஏரியாவை பிரித்து கேட்க போகிறார்களோ //

பாரத நாட்டை இஸ்லாமியர்கள் 1000 வருடங்கள் ஆட்சி புரிந்ததால்தான் மேல் சாதியினர் தங்கள் வாலை சுருட்டிக் கொண்டு இருந்தனர். அனந்தன் கிருஷ்ணன் போன்ற பிற்படுத்தப்பட்ட சாதியினர் ஓரளவு சமூகத்தில் அந்தஸ்து கிடைக்க மொகலாய மன்னர்கள் அன்று போட்ட சட்டங்கள் பல உதவியிருக்கின்றன. இல்லை என்றால் கைகளை கட்டிக் கொண்டு செருப்பை கையில் பிடித்துக் கொண்டுதான் அக்ரஹாரத்தில் நுழையும் நிலை இருந்திருக்கும். சதி உடன் கட்டை ஏறுதல், பால்ய விவாகம், சூத்தி பாகுபாடு, பெண்கள் மேலாடை அணிதல் போன்ற புரட்சிகள் மெல்ல மெல்ல மொகலாயர் ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது.

இதற்கு அனந்தன் கிருஷ்ணன் போன்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லிம்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டாமோ.

// உதாரணம் பல இருக்கிறது சோமாலியா, உகாண்டா, ருவாண்டா.. இன்னும் பல ஆப்ரிக்க நாடுகளின் மக்கள் ஒருவேளை உணவுக்கு கூட திண்டாடி கொண்டு இருக்கிறார்கள். //

ஹி..ஹி..இந்த நாடுகளில் சரி பாதி கிறித்தவர்களும் உள்ளனர். முன்பு முழு நாடும் கிறித்தவத்தில் இருந்தது. நம் நாட்டைப் போல் சாதி வெறி அங்கும் தலைவிரித்தாடியதால் அவர்கள் சமீப காலத்தில்தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். பொருக்குமா மேலை நாடுகளுக்கு? எனவே ஆயுதங்களை சப்ளை செய்து அந்த மக்களுக்குள்ளேயே சண்டை உரம் போட்டு வளர்க்கின்றன மேற்குலக நாடுகள். அதற்கு பலியாகிக் கொண்டிருக்கின்றன இந்த வறிய நாடுகள். இதற்கு காரணமே அமெரிக்க, பிரிட்டன போன்ற நாடுகளின் தலையீடே... வரலாறை தெரிந்து கொண்டு பேசவும்.

//அப்படி எண்ணங்க பண்பாடு இஸ்லாமில் இருக்கிறது, காபிர்களை கொலை செய்வதும், செல்லும் இடம் எல்லாம் குண்டு வைப்பதும் சூப்பர் பண்பாடு. நடத்துங்க//

இனிமேலும் இந்த பொய்கள் எல்லாம் சபை ஏறாது கிருஷ்ணன். இந்த நாட்டில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளையும் செய்தது இந்துத்வா என்று வரிசையாக ஆதாரங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொருவராக கம்பி எண்ணிக் கொண்டு உள்ளனர். இதுதான் இந்துத்வாவின் தேசப் பற்றா? இவர்கள் கையில் நாட்டைக் கொடுத்தால் மனு நீதிதான் ஆட்சி செலுத்தும். பழைய வரலாறு திரம்பும் கிருஷ்ணன் போன்றவர்கள் படிப்பை தொடர முடியாது. வேதம் படிக்க முடியாது. சூத்திரர்கள் என்ற பட்டம் கிடைக்குமம். இளம் பெண்களை பொட்டு கட்டி விட்டு தேவரடியார்களாக மாற்றப்படுவர்.

வாழ்க பாரதம். வளர்க கிருஷ்ணனின் இந்துத்வ ஆட்சி :-)

ராவணன் said...

////சுவனப் பிரியன் said...

சகோ யூசுப் இஸ்மத்!

//அமேரிக்கா அதிக நாள் தாங்காது. அதை என் வாழ்நாளில் காண விரும்புகிறேன்.//

உங்கள் வாக்கு பலிக்கட்டும். பல நாட்டு மக்களின் வயிற்றெரிச்சலில் சுகிக்கிறது அமெரிக்கா. சிதறுண்டு போகும் போது அவை தனி இஸ்லாமிய நாடுகளாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் அந்த அளவு இஸ்லாத்தின் வளர்ச்சி அங்கு அபரிமிதமாக காணப்படுகிறது.////


அண்ணாச்சி இது நடக்கும்போது அரேபிய பிச்சைக்காரர்களும்...
அரேபிய அகதிகளும் இந்திய நகரங்களில் அதிகம் இருப்பார்கள்.

வாக்கு பலிக்கட்டும்.