Followers

Monday, December 31, 2012

"சிதம்பரம்: ஒரு பார்வை"-இதில் நம்முடைய பார்வை

"சிதம்பரம்: ஒரு பார்வை"-இதில் நம்முடைய பார்வை



சென்னையில் நேற்று முன்தினம் திமுக தலைவர் கருணாநிதி,"சிதம்பரம்: ஒரு பார்வை" என்ற புத்தகத்தை வெளியிட்டார். இவ்விழாவில் சிதம்பரம், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் சிதம்பரம் உரையாற்றவில்லை. பார்வையாளர்கள் பக்கத்தில் அமர்ந்திருந்தார். புத்தகத்தை கலைஞர் வெளியிட சிதம்பரத்தின் தாயார் பெற்றுக் கொண்டார்.

இவ்விழாவில் கருணாநிதி பேசும் போது கூறியதாவது : சிதம்பரம், சிலரது இதயத்தில் நீங்காத உயர்ந்த இடத்தை பிடித்துள்ளார்; இவ்வாறு இருக்கையில் அடுத்து நடக்க வேண்டியது என்ன?; வேட்டி கட்டி தமிழன் பிரதமராக வர வேண்டும்.(இதில் உள் குத்து எதுவும் இல்லையே கலைஞர் அவர்களே! ஏனெனில் முன்பு மூப்பனார் பிரதமராக இருந்த சமயம் அதை தடுத்தது நீங்கள்தான் என்ற ஒரு பேச்சு உண்டு) இவ்வாறு கருணாநிதி தெரிவித்தார். கருணாநிதியின் பேச்சை முன்மொழிவது போல் கம்ஹாசனும், இந்திய அரசில் சிதம்பரத்திற்கு மிகப்பெரிய இடம் உள்ளது என தெரிவித்தார். இதே போன்று புத்தக ஆசிரியர் இலக்கிய நடராஜனும் தனது வரவேற்புரையில் பிரதமராகும் அனைத்து தகுதிகளும் சிதம்பரத்திற்கு உண்டு என தெரிவித்துள்ளார்.

டில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சிதம்பரம் கூறியதாவது : எனது வரம்பு என்னவென்று எனக்கு நன்றாக தெரியும்; எனது வரம்புகளுக்கு உட்பட்டே நான் வாழ்ந்து வருகிறேன்; அதன்படியே நான் என்னை வழி நடத்துகிறேன்; உங்களில் சிலர் என்னை முட்டாள் என நினைப்பது எனக்கு தெரியும்; அவர்களுக்கு நான் சொல்லி கொள்வது ஒன்று மட்டுமே; நீங்கள் நினைப்பது போல் நான் முட்டாள் இல்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார். (இந்த பதில் கலைஞருக்கும் கமலஹாசனுக்குமா அல்லது பத்திரிக்கை நிருபர்களுக்கா என்பது சிதம்பர ரகசியம்)

அந்த விழாவில் கமலஹாசனும் ஒரு வேட்டிக் கட்டிய தமிழன் பிரதமராக அமருவதை காண ஆசைப்படுகிறேன் என்று சொன்னது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. சிதம்பரத்தைப் பொருத்த வரை அந்த பதவிக்கு மிக்க பொருத்தமானவரே! இதில் மாற்றுக் கருத்து இல்லை. ராகுல் காந்தி தற்போது உள்ளது போல் வெளியில் இருந்து நமது நாட்டுக்கு தேவையான நல்ல காரியங்களை செய்து வரலாம்.

ப.சிதம்பரம் அவர்களின் அரசியலை முன்பிருந்தே கவனித்து வருகிறேன். நிதானமாக மற்றும் உறுதியாக தனது ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பவர் சிதம்பரம். இதுவரை எந்த ஊழல் குற்றச்சாடடிலும் சிக்காமல் தூய்மையான அரசியலை நடத்தி வருகிறார். பரம்பரை பணக்காரர். அரசியலுக்கு வந்துதான் காசு பண்ண வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லாதவர். தற்போதுள்ள இக்கட்டான சூழ்நிலையில் நமது நாட்டுக்கு சிதம்பரத்தை பிரதமராக்க சோனியா காந்தி அவர்கள் முயல வேண்டும். இது சோனியா அவர்களின் மதிப்பை மேலும் உணர்த்தும்.

எதிர் தரப்பில் போட்டியாக மோடியை நிறுத்தப் போகிறார்களாம். ஆனால் அது நடக்குமா என்று தெரியவில்லை. ஏனெனில் ஏற்கெனவே தற்போதய பாஜக வின் அரசியல் நடவடிக்கைகளை வைத்து 100 எம் பி சீட் கிடைத்தாலே பெரிது என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதில் மோடியை பிரதம வேட்பாளராக அறிவித்தால் 50 சீட் தேறுவது கூட கஷ்டம்தான் என்பது எனது கணிப்பு. பார்ப்போம் அரசியலில் மேலும் என்னவெல்லாம் கூத்துக்ள் அரங்கேறுகிறது என்று.

20 comments:

Unknown said...

மோடி பிரதமர் ஆக வருவார். சுவனம். மனசு நொந்து போய் எதுவும் பண்ணிக்காதீங்க

suvanappiriyan said...

கனவு காண எவருக்குமே உரிமை உண்டு. :-)

suvanappiriyan said...


ஸ்மிதா!

//But as priyan says, muslims are sons of the soil – so carry on, brother.//

தமிழ் இந்து வில் வரும் கட்டுரைகளை பெரும்பான்மையான இந்துக்களே நம்புவதில்லை.

பிஜேபியின் அரவிந்த ரெட்டி கொல்லப்பட்டதற்கு முதலில் இஸ்லாமிய இயக்கங்களை காரணமாக்கி தமிழ் இந்து வில் கட்டுரை வந்தது. சில நாட்கள் கழித்து தினகரன் பத்திரிக்கை அந்த கொலைக்கு காரணம் இந்துக்களே என்ற செய்தியை பிரசுரித்தது. ஆனால் அந்த செய்தியை தமிழ் இந்து கண்டு கொள்ளவில்லை.
http://suvanappiriyan.blogspot.com/2012/11/blog-post_4854.html

அதனை நான் கொடுத்துள்ள லிங்கில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.

கோயமுத்தூர் குண்டு வெடிப்பை தவிர்த்து தமிழகத்தில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும் காரணம் இந்துத்வா என்பது காவல் துறையே தரும் செய்தியாகும. தற்போது இணையம் என்ற ஒரு சக்தியால் உங்கள் இனத்தவர் அரசு உத்தியோகங்களில் இருந்து இது போன்ற செய்திகளை இருட்டடிப்பு செய்தாலும் வெளி வந்து விடுகிறது.

தமிழகத்தில் கடந்த இருபது வருடங்களாக நடந்த குண்டு வெடிப்புகள், கொலைகளுக்கு எந்த இயக்கம் காரணம் என்பதை ஆதாரத்தோடு உங்களால் சொல்ல முடியுமா? இஸ்லாமிய இயக்கங்கள் காரணம் இல்லை என்பதை ஆதாரத்தோடு என்னால் சொல்ல முடியும்.

ஆனால் உங்களின் காப்பி பேஸ்ட் பதிலை அனுமதிக்கும் திண்ணை நான் ஏதும் ஆதாரங்கள் கொடுத்தால் அதை ஏனோ மட்டுறுத்தி விடுகிறது.

எதையாவது எழுதி பிஜேபியை அரியணையில் ஏற்ற துடிப்பது தெரிகிறது. அது தமிழகத்தில் நடக்காது. முதலில் இந்து மதத்தில் சீர்திருத்தத்தை ஆரம்பியுங்கள். இல்லை என்றால் எஞ்சிய மக்களும் இஸ்லாத்தை நோக்கி சென்று விடுவர்.

நேற்று கூட மதுரை ஆதீனம் கற்பழிப்பு குற்றங்கள் குறைய இஸ்லாமிய பர்தா முறையே சிறந்தது. இந்து, கிறித்தவ பெண்கள் பர்தா அணியுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

faizeejamali said...

Salam Sago cidhambaram prethamar aanal adhu mudhalaali thuvathai Indhiya vil menmelum balapaduthividum arjunsing pondra nallulangal congressil irukuiraargal avargalukku eppothum vaaiyppu valangappaduvadhe illai

suvanappiriyan said...

சலாம் சகோ ஃபைஜி ஜமாலி!

//Salam Sago cidhambaram prethamar aanal adhu mudhalaali thuvathai Indhiya vil menmelum balapaduthividum arjunsing pondra nallulangal congressil irukuiraargal avargalukku eppothum vaaiyppu valangappaduvadhe illai //

இருப்பதில் நல்லது எது என்றுதான் பார்க்க முடியும். அர்ஜூன் சிங்கால் பிரதமராக செயலபடுவது கஷ்டம். அந்த அளவு சிக்கல் நிறைந்தது இந்த வேலை.

தமிழில் யுனிகோடில் எழுதலாமே. பாமினி யை பயன்படுத்துங்கள்.

Mohamed Shaheed said...

மாஷா அல்லாஹ், நல்ல பதிவு...

Unknown said...

சலாம் சகோ ஃபைஜி ஜமாலி!

/தமிழில் யுனிகோடில் எழுதலாமே. பாமினி யை பயன்படுத்துங்கள்.//

மேலும் தங்கிலிஷ் ( amma = அம்மா )ல டைப் பண்ணி பேஸ்ட் பண்ணலாம்..

www.onlinepj.com

www.dinamalar.com ல உள்ள கமெண்ட் பாக்ஸை யூஸ் பண்ணிகோங்க..

சகோ.முகம்மத் ஆசிக்கும் அவரோட தளத்துல இந்த ஆப்சன் வச்சிருக்காரு !!!

நன்றி !!!

suvanappiriyan said...

சகோ முஹம்மத் ஷஹீத்!

//மாஷா அல்லாஹ், நல்ல பதிவு...//

அழகிய பெயர். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம் சகோ நாகூர் மீரான்!

//சகோ.முகம்மத் ஆசிக்கும் அவரோட தளத்துல இந்த ஆப்சன் வச்சிருக்காரு !!!//

நலமா! நீண்ட நாட்களாக இந்த பக்கம் காணோமே! அதிக வேலையோ!

தமிழில் எழுத இந்த தளத்திலேயே பாமினி யுனிகோட் பாக்ஸை பயன்படுத்தலாமே

Unknown said...

சலாம் சகோ.சுவனப்பிரியன் !

நலம்..நீங்களும் நலம் என்பதை உங்களின் தின பதிவுகள் மூலம் அறிந்து கொண்டேன்..அதிகமாக அட்டெண்டன்ஸ் போட முடியாவிட்டாலும் பதிவுகளை மொத்தமாக படித்தே வருகிறேன் சகோ..

சரி வந்ததற்கு ஏதாவது வினையை உண்டாக்க வேண்டாமா..? நாஸ்டர்டாம்ஸ் பற்றி ஒரு பதிவு போடுங்களேன்..

suvanappiriyan said...

மதுரைத் தமிழன்!

//2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்//

இந்த வருடம் என்று மட்டும் அல்லாமல் வாழ்வின் அனைத்து வருடங்களும் நம் அனைவருக்கும் இன்பமயமாக அமைய பிரார்த்திக்கிறேன்.

suvanappiriyan said...

சகோ நாகூர் மீரான்!

//சரி வந்ததற்கு ஏதாவது வினையை உண்டாக்க வேண்டாமா..? நாஸ்டர்டாம்ஸ் பற்றி ஒரு பதிவு போடுங்களேன்..//

வருங்கலத்தில் என்ன நடக்கும் என்று தீர்மானிக்கும் சக்தி பூமியில் எவருக்கும் இல்லை. எனவே அதைப் பற்றி எழுதி நமது நேரத்தை ஏன் விணாகக வேண்டும்..

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

கவிஞா் கி. பாரதிதாசன்
பிரான்சு
01.01.2013

suvanappiriyan said...

கவிஞர் திரு பாரதிதாசன்!

//ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!//

உங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

RK.KALYAN said...

THE SAVINGS MENTALITY IS GOING TO BE REDUCED IF MR. CHIDAMBARAM CONTINUED AS FINANCE MINISTER,,IF IT IS SO HOW CAN BE MR. CHIDAMBARAM WILL BE ..

ஜீவன் சுப்பு said...

## நிதானமாக மற்றும் உறுதியாக தனது ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பவர் சிதம்பரம். இதுவரை எந்த ஊழல் குற்றச்சாடடிலும் சிக்காமல் தூய்மையான அரசியலை நடத்தி வருகிறார். பரம்பரை பணக்காரர். அரசியலுக்கு வந்துதான் காசு பண்ண வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லாதவர். தற்போதுள்ள இக்கட்டான சூழ்நிலையில் நமது நாட்டுக்கு சிதம்பரத்தை பிரதமராக்க சோனியா காந்தி அவர்கள் முயல வேண்டும். இது சோனியா அவர்களின் மதிப்பை மேலும் உணர்த்தும்.##
** மறுக்க முடியாத உண்மைதான்.இது நடந்தால் ரெம்ப சந்தோசம் .
( ஒரே ஒரு வருத்தம், எங்கள் தொகுதியில் இருந்து பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட ப.சி அவர்கள் தொகுதிக்கு பெரிதாக எதுவும் செய்துவிடவில்லை , ATM திறப்பதின் மூலம் மட்டுமே அவரின் இருப்பை அறிந்து கொள்கிறோம் . சென்ற முறையே .................. வெற்றி பெற்றார் . அடுத்த முறை ? வாய்ப்பு மிக மிக குறைவே .)

suvanappiriyan said...

திரு ஜீவன் சுப்பு!

//ப.சி அவர்கள் தொகுதிக்கு பெரிதாக எதுவும் செய்துவிடவில்லை , ATM திறப்பதின் மூலம் மட்டுமே அவரின் இருப்பை அறிந்து கொள்கிறோம் . சென்ற முறையே .................. வெற்றி பெற்றார் . அடுத்த முறை ? வாய்ப்பு மிக மிக குறைவே .)//

பிரபலங்கள் யாருமே தொகுதி பக்கம் வர நேரம் கிடைப்பதில்லை. அகில இந்திய அளவில் அவரது கவனம் உள்ளதால் இது போன்ற குறைகள் தவிர்க்க முடியாததே!

suvanappiriyan said...

திரு கல்யாண்!

//THE SAVINGS MENTALITY IS GOING TO BE REDUCED IF MR. CHIDAMBARAM CONTINUED AS FINANCE MINISTER,,IF IT IS SO HOW CAN BE MR. CHIDAMBARAM WILL BE ..//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

//வருங்கலத்தில் என்ன நடக்கும் என்று தீர்மானிக்கும் சக்தி பூமியில் எவருக்கும் இல்லை. எனவே அதைப் பற்றி எழுதி நமது நேரத்தை ஏன் விணாகக வேண்டும்..//

ஓ, அப்படியா! கடவுள்கிட்ட இருந்து வஹீ வாங்குற சக்தி மட்டும் மனிதன்கிட்ட இருக்கா, ஏன் அண்ணாச்சி இந்த முடியாத காரியத்தை பற்றி பதிவா எழுதி நேரத்தை வீனடிகிறீங்க

suvanappiriyan said...

//ஓ, அப்படியா! கடவுள்கிட்ட இருந்து வஹீ வாங்குற சக்தி மட்டும் மனிதன்கிட்ட இருக்கா, ஏன் அண்ணாச்சி இந்த முடியாத காரியத்தை பற்றி பதிவா எழுதி நேரத்தை வீனடிகிறீங்க//

முகமது நபி குர்ஆன் என்று கொடுத்ததும, ஏசு இன்ஜீல் என்று கொடுத்ததும் அவர்களின் சொந்த கருத்து அல்ல. உங்களையும் என்னையும் படைத்த அந்த இறைவனின் வார்த்தை. இன்றைய அறிவியலுக்கும், முழு உலகுக்கும் பொருந்தக் கூடியதாக உள்ளது குர்ஆன். முகமது நபி தனது போதனையாக சொன்ன நபி மொழிகளுக்கும் குர்ஆனின் வசனங்களுக்கும் மிகுந்த வேறுபாடு உள்ளதை மொழி பெயர்ப்பை படிப்பவர்களுக்கும் மூல மொழியில் படிப்பவர்களுக்கும் மிக இலகுவாக விளங்கும்.