Followers

Monday, December 17, 2012

கசாப்-ஐ இரகசியமாகத் தூக்கிலிட்டது ஏன்?

முதலில் ஒன்றை தெளிவு படுத்தி விடுகிறேன். எனது தாய் நாட்டின் மீது எந்த அயோக்கியனும் தாக்குதல் நடத்துவதை என்னால் பொருத்துக் கொள்ள முடியாது. அது பாகிஸ்தானாக இருக்கட்டும், அல்லது இலங்கையாகட்டும். நான் வாழும் தேசத்தை நேசிக்கிறேன். ஒரு முஸ்லிம் பெயர் தாங்கியே இந்தியாவுக்கு எதிராக அநியாயமாக நடந்தால் அந்த முஸ்லிம் எனக்கும் எதிரியே! அந்த வகையில் அஜ்மல் கசாப் நமது நாட்டின் மீது ஒரு கும்பலோடு வந்து நூற்றுக் கணக்கான அப்பாவி மக்களை கொன்றதாக பிடி பட்டான். சில நாள் விசாரணைக்கு பிறகு அவனை மிக ரகசியமாக தூக்கில போட்டதாக நமது அரசு சொன்னது. இவ்வளவு ரகசியமாக அவனை தூக்கிலிட என்ன அவசியம் வந்தது? என்ற சர்ச்சை அன்றே பலரால் எழுப்பப்பட்டது. தற்போது இது சம்பந்தமாக சகோ குலாம் அவர்கள் எழுப்பும் சில கேள்விகளை அப்படியே உங்கள் முன்னும் வைக்கிறேன். குலாம் முகம்மது வைக்கும் குற்றச்சாட்டுகளில் நியாயம் உள்ளதா? அல்லது நமது அரசு சொல்லும் அறிக்கைகள் உண்மையை உரைக்கிறதா என்பதை படிப்பவர்களின் விருப்பத்திற்கு விட்டு விடுகிறேன். மும்பை தாக்குதலில் அஜ்மல் கசாப் ஈடுபட்டிருந்தால் கண்டிப்பாக தூக்கு மேடைக்கு செல்ல வேண்டியவன் என்பதில் இரு வேறு கருத்தில்லை என்பதையும் பதிக்கிறேன்.

இனி குலாம் முகம்மதுவின் கட்டுரையைப் பார்ப்போம்.

2008 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 26 ஆம் நாள் நமது மும்மை நகரம் மிகவும் மர்மமான முறையில் திடீரென தாக்கப்பட்டது. இதில் இந்தியாவில் 16 குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய இந்துத்துவ தீவிரவாதிகளைக் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்திய காவல்துறை அதிகாரி ஹேமந்த் கர்கரேயும் கொலை செய்யப்பட்டார். அவர் அப்போது மராட்டிய மாநில தீவிரவாதத் தடுப்புப்படையின் தலைவராக இருந்தார்.


மும்பைத் தாக்குதலே ஹேமந்த் கர்கரேயைக் கொலை செய்வதற்கான முன்னேற்பாடு என்பதை நிரூபிக்கும் காலம் நெருங்கிக் கொண்டிருந்தபோது, ‘கசாப்’ஐ திடீரென இரகசியமாகத் தூக்கிலே போட்டதாகக் கூறி, உடனேயே புதைத்து விட்டாகவும் செய்திகளைப் பரப்பி விட்டார்கள். கசாப்போடு மொத்த விவகாரத்தையும் புதைத்துவிட்டார்கள். இதில் புதைந்துபோன பல உண்மைகளை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

நமது இந்திய அரசு திடீரென ஒரு அதிர்ச்சியை (21-11-2012 காலை 7.30 மணிக்கு) மக்கள் மன்றத்தில் வைத்தது. அதுதான் அஜ்மல் கசாப்-ஐ யாருக்கும் தெரியாமல் தூக்கிலிட்டது. யாருக்கும் தெரியாமல் என்பதில் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அவர்களும் அடங்குவார்கள்.

நாட்டின் நிருவாக இயந்திரத்தை இயக்கும் மாலுமி, பிரதமர் மன்மோகன் சிங் அவர்களே தொலைக்காட்சியைப் பார்த்துத் தான் 26/11 மும்பை தாக்குதலில் பழி சுமத்தப்பட அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டதைத் தெரிந்து கொண்டாராம்.

டாக்டர் மன்மோகன் சிங் அவர்களைப் போல் மிகவும் முக்கியமானவர் சோனியா காந்தி. ஏனெனில் நாட்டை ஆளும் கூட்டணியின் தலைமைக் கட்சி காங்கிரஸ்-ன் தலைவர். சோனியாகாந்தி அவர்களும் தொலைக்காட்சியைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டராம். அவ்வளவு இரகசியமாக ‘கசாப்’-ஐ தூக்கிலிட வேண்டிய காரணம் என்ன?

கருணை மனு

இதில் அனைவர் கண்களிலும் மண்ணைத் தூவும் மற்றொரு செய்தி என்னவெனில், 'கசாப்' தனது தண்டனைக்கு எதிராக நமது குடியரசுத் தலைவர் அவர்களிடம் சமர்ப்பித்த 'கருணை மனுவும்' நிராகரிக்கப்பட்டு விட்டதாம். இந்த நிராகரிப்பு, நவம்பர் 8 ஆம் நாள் நடந்தது என நமக்கு 21 ஆம் நாள் செய்தி சொல்லின. ஆனால் அடுத்த நாள் நமது பத்திரிகைகள் எல்லாம் நவம்பர் ஐந்தாம் நாளே அந்த நிராகரிப்பு நடந்ததாக குறிப்பிட்டன. இதில் எது உண்மை என யாரும் கேட்டிடக் கூடாது. ஏனெனில் இந்தியாவில் அப்படியொரு நீதி நிருவாகம் நடந்து கொண்டிருக்கின்றது. உண்மையைச் சொன்னால் திரைமறைவு நிருவாகம் ஒன்றை மத்திய உளவுத்துறை நடத்திக் கொண்டிருக்கின்றது.

குடியரசு தலைவர் அவர்களுக்கு, அவர்கள் அலுவலகத்திற்கு அனுப்பட்ட, கருணை மனு நிராகரிக்கப்பட்டது தெரியுமோ என்னவோ, யாமறியோம்.

அந்தத் திறைமறைவு நிருவாகம் அவ்வளவு அழுத்தம் நிறைந்தது போலும். தன் முன்னால் வரும் கருணை மனுவை ஏன் நிராகரித்தேன் என்பதற்கான காரணங்களைக் குடியரசு தலைவர் மக்கள் மன்றத்திற்கு சொல்லியாக வேண்டும். இஃது இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வரும் நியதி. ஆனால் இங்கே பத்திரிகையாளர்கள், தகவல் அறியும் உரிமையின் கீழ் தகவல் கேட்ட பின்பும் அது கிடைக்கவில்லை (இந்தக் கட்டுரை அச்சேறும் வரை அது தான் நிலை.)

இன்று கசாப், நாடறிந்த கொலைகாரன். அப்படிதான் ஊடகங்கள் மக்கள் மன்றத்தை நம்ப வைத்துள்ளன. அவனது கருணை மனுவை நிராகரித்த தேதியையும், காரணங்களையும் அத்துணை மறைவாக வைத்திட வேண்டிய காரணம் என்ன?

கசாப்-ஐ இரகசியமாகத் தூக்கிலிடாமல் வழக்கமான தூக்குத் தண்டனைகளைப் போல், தேதியை மக்களுக்கு அறிவித்துத் தூக்கிலிட்டால், என்ன நடக்கும்? அப்போதும் ஊடகங்கள் நமக்குக் காட்டும் முகங்கள், ஏதோ 26/11க்கு நீதி கிடைத்துவிட்டதாக பாராட்டித்தான் இருக்கும். யதார்த்தங்கள் இப்படி இருந்திடும் போது, அத்துணை அவசரமாக இரகசியமாகத் தூக்கிட வேண்டிய காரணம் என்ன?

அரசியல் காரணம்!

நம் நாட்டில் எது நடந்தாலும் அதற்கோர் அரசியல் பின்னணி இருப்பது வழக்கம்.

இந்த வகையில் கசாப்-ஐ இரகசியமாகத் தூக்கில் போட்டதற்கும் ஓர் அரசியல் காரணம் சொல்லப்படுகின்றது. அது நவம்பர் 22 ஆம் நாள் நாடாளுமன்றம் கூடிட இருந்தது. எதிர்கட்சிகள், நம்பிக்கை இல்லா தீர்மானம் உட்பட பல கபளீகரங்களை செய்திட இருந்தன. இதனால், கசாப்-ஐ தூக்கில் போட்டு எல்லாக் கட்சிகளிடமும் ஓர் இணக்கத்தைச் சம்பாதிக்கலாம் என அரசு முடிவு செய்திருந்தது. அப்படியானால், சோனியாவும், மன்மோகனும் நாங்கள் தொலைக்காட்சியைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டோம் எனச் சொன்னது பொய்யா?

ஊர் அறிய இதைச் செய்திருந்தால், இதனால் இன்னும் அதிகமான இணக்கம் கிடைத்திருந்திருக்கும். மக்களும், இப்போது போல் அரசை ஆகோ, ஓகோ எனப் பாராட்டி இருப்பார்கள் என்பதே உண்மை. இத்தனையும் இருக்கும் போது ஏன்? இரகசியமாகத் தூக்கிலிட வேண்டும்.

ஆகவே இரகசியமாகத் தூக்கிலிட்டதற்கு வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றிற்குள் புகுமுன் கசாப்-இன் பக்கம் சற்றே திரும்புவோம்.

அவன் பட்ட சித்திரவதைகளால் ஏற்கெனவே மடிந்து கொண்டிருந்தான். பொய் வாக்குமூலங்களை வாங்குவதற்கு அவனைப் படுத்திய சித்திரவதைகள் அவை.

தான் சற்றும் அறிந்திடாத ஒரு குற்றத்திற்கு இப்படி சித்திரவதை செய்கின்றார்களே என்ற மன வேதனையில் அவன் எப்போதோ மனதால் மடிந்து போயிருந்தான். அவன் நீதிமன்றங்களில், நீதிபதியிடம் பேசிட வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் என்னை தூக்கில் போட்டுவிடுங்கள் என்றே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான். மரணந்தான் அவனுக்கு விடுதலை, நிம்மதி!

கிடைத்த மரணம் சித்திரவதைகளிலிருந்து விடுதலை. இன்னும் சொன்னால் சிறைச்சாலையில் அவன் அடிக்கடி தன் தலையை சுவற்றில் மோதிக்கொண்டான். இதனை அசிஸ் சவுதிரி என்ற எழுத்தாளர், (இவர் மும்பை தாக்குதலில் தன் உறவினரில் சிலரை இழந்தவர்) கூறுகின்றார்: TH:23/11/2012.

யார் இந்த கசாப்?

இந்த ‘கசாப்’ நமக்குச் சொல்லப்படுவதைப் போல், பாகிஸ்தானில் இருந்து 2008 ஆம் ஆண்டு மும்பையைத் தாக்குவதற்காக வந்தவனல்ல. அவன் 2006 ஆம் ஆண்டு வறுமை தாளாமல் நேப்பாள்- என்ற நமது அண்டை நாட்டுக்கு பிழைப்புத்தேடி வந்தவன். அவன் மட்டுமல்ல இப்படி எத்தனையோ பேர் பாகிஸ்தானிலிருந்து வயிறு பிழைக்க நேப்பாளுக்கு வந்திருக்கின்றார்கள்.

இவர்களில் யாரும் நேப்பாளத்திற்குள் ஊடுருவி விடவில்லை. அவர்கள் அத்தனை பேருமே முறையான document-கள் வழி நேப்பாளத்திற்குள் வந்தவர்கள்தாம். பல நேரங்களில் அவர்களை நேப்பாள அரசு கைது செய்து முறையான வேலை அனுமதியைப் பெற்று வந்திட வேண்டும் என திரும்ப அனுப்பியுள்ளது.

இப்படிக் கைது செய்யப்படுவர்களில் சிலரை இந்திய உளவுத்துறை இங்கே கடத்தி வந்துவிடுவது உண்டு. சிலரை இந்தியாவைத் தாக்கிட நேப்பாளத்திற்கு வந்ததாகவும், பின்னர் நேப்பாளத்திலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராக இருந்தாகவும் கூறி முறையாக அழைத்து வருவதும் உண்டு. எப்படி அழைத்து வந்தாலும், அவர்களை நேப்பாளிலிருந்து அழைத்து வந்ததாகவோ, கடத்தி வந்ததாகவோ பதிவு செய்வதில்லை. இத்தனைக்கும் நமது இந்தியாவிற்கும் நேப்பாளத்திற்கும் Deportation Agreement என்று சொல்லக் கூடிய தேவைப்படும் நபர்களை அனுப்பித் தந்திட வேண்டும் என்ற ஒப்பந்தம் இருக்கின்றது.

ஆனால் நம்மவர்கள் நமது உளவுத்துறையின், ஏற்பாட்டின் கீழ் அவர்களை இந்தியாவில் ஒரு பயங்கர பதுங்குமிடத்தில் வைத்துக் கைது செய்ததாகவே காட்டுவார்கள். இந்த மொத்த விவகாரத்தையும் தி வீக் ‘The Week’ பத்திரிகை வெளியிட்டிருக்கின்றது.

அப்படி நேப்பாளிலிருந்து கொண்டு வரப்படுபவர்களை என்ன செய்வார்கள்? அவர்களை இந்தியாவிலிருக்கும் பல்வேறு சித்திரவதைக் கூடங்களிலும் வைத்து சித்திரவதைச் செய்வார்கள். பின்னர் அவர்களைத் தங்கள் விரும்பும் இடத்தில் வைத்து, விரும்பிய குண்டு வெடிப்புகளில் சம்மந்தப்படுத்திக் காட்டுவார்கள். உண்மையில் அந்தக் குண்டு வெடிப்புகளை நடத்தியவர்கள், அபிநவ்பாரத் போன்ற இந்துத்துவ தீவிரவாத அமைப்பைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள்.

இப்படித்தான் அஜ்மல் கசாப் சிக்க வைக்கப்பட்டான். அவன் 2006 முதலே நமது உளவுத்துறையின் கைகளில் இருக்கின்றான், என்பதை நமது முன்னாள் காவல்துறை அதிகாரி ஷி.வி.முஷ்ரிப் அவர்கள் எழுதிய “கர்கரேயை கொலை செய்தது யார்?” என்ற நூலில் தெளிவுபடுத்துகின்றார்.

நேப்பாளத்திலுள்ள உச்ச நீதிமன்றத்தில் இவருடைய வழக்கு 2006இலேயே நடந்தது. இவருக்காக பாகிஸ்தானைச் சார்ந்த, வழக்கறிஞர் சி.வி.பாரூக் என்பவர் வந்து வாதிட்டார். ஆனால் அந்த வழக்கில் நேப்பாள உச்ச நீதிமன்றம் கசாப்-ஐ விடுதலை செய்ய மறுத்து விட்டது. காரணம் கேட்டபோது “Not on the Merits of the Case, but on the Technical Grounds” எனக் கூறியது. இதன் பொருள், அவர் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுவிட்டது என்பதனால் அல்ல; மாறாக, அவரை விடுதலை செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் முறையாக அமையவில்லை என்பதனால்தான். இப்படி நேப்பாளத்தில் உச்சநீதிமன்றம் வரை விவாதித்திற்குள்ளானவர் 2008 இல் தாக்குதல் நடந்தபின் கையில் ஒரு AK 47 ரக துப்பாக்கியுடன் அத்துணை ஒய்யாரமாக நடந்து வருவானாம். இருவர் படம் எடுப்பார்களாம். நம்புங்கள் எங்களை என்கின்றார்கள் மும்பை தாக்குதலுக்கு ஏற்பாடு செய்தவர்கள். கசாப்-ஐ 2006இலேயே இந்திய உளவுத்துறையிடம் நேப்பாள் அரசு ஒப்படைத்தது என்கின்றார் வழக்கறிஞர் சி. வி. பரூக். Source: The News Revalpindi, Tol: DEC16, 2008.

கர்கரேயைக் கொலை செய்தது யார்? என்ற நூலை நாம் தமிழகத்தில் அறிமுகப்படுத்திய நாள் முதலே, நாம் ஒரு செய்தியை நினைவுபடுத்தி வருகின்றோம்.

மும்பை CST என்ற சக்கரவர்த்தி சிவாஜி இரயில் நிலையம் என்ற மும்பை விக்டோரிய ரெயில் நிலையத்தில் தாக்குதலை நடத்தியவர்கள் முகத்தை நன்றாக மூடிக்கொண்டுதான் தாக்குதலை நடத்தினார்கள். அவர்கள் துப்பாக்கிகளை இயக்கிய வேகம் யாரும் அவர்களைப் படம் எடுக்கும் நிலையில் இல்லை. ஆகவே அஜ்மல் கசாப்-ஐ அங்கே ஜோடித்திருக்கின்றார்கள், வீடியோக்களில் தங்கள் விளையாட்டுக்களைக் காட்டி. இதனை மும்பை ரெயில் நிலையத்தில் உணவு விடுதி நடத்தி வரும் ஷஷிகுமார் சிங் என்பவரும் உறுதி செய்துள்ளார்.

தாக்குதலை நடத்தியவர்களை போட்டோ எடுத்து யார்?

மும்பை ரெயில் நிலையத்தில் தாக்குதலை நடத்தியவர்களை போட்டோ எடுத்தாகக் கூறப்படுபவர்கள் இரண்டு பேர். இவர்கள் இருவரும் இருவேறு பத்திரிக்கையைச் சார்ந்தவர்கள்.

ஒருவர் மும்பை மிரர் என்ற ஆங்கில பத்திரிகையைச் சார்ந்தவர்: பெயர் செபாஸ்டின், டி சவோசா. மற்றொருவர் “புடாரிபூன்” என்ற மராட்டிய பத்திரிகையைச் சார்ந்தவர். இந்த இரண்டு போட்டாக்களும் ஒன்று தான். அதாவது அது அவர்களின் கைகளில் (மேற்படி)யாளர்களால் திணிக்கப்பட்டவை. ஆனால் வழக்கு நடந்து கொண்டிருந்தபோது, "இந்த இருவரையும் சாட்சியம் கூறிட கொண்டு வாருங்கள்! அவர்களிடம் அவர்கள் எப்படிப் படம் எடுத்தார்கள் என்பதை விசாரிக்க வேண்டும்" என கேட்டார்கள், அஜ்மல் கசாப்பிற்காக அரசு நியமித்த முதல் வழக்கறிஞர்கள்.

அவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்திட இயலாது என அடம்பிடித்தார் நீதிபதி. "அவர்களை குறுக்கு விசாரணைச் செய்ய அனுமதிக்க மாட்டோம். அவர்கள் எழுதி தந்துள்ள அறிக்கையை அப்படியே அட்டி இன்று ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்றார் நீதிபதி தகல்யானி. "அவர்களை நீதிமன்றம் கொண்டு வந்தாக வேண்டும். அவர்களிடம் போட்டோ எப்படி எடுத்தார்கள் என்பதையெல்லாம் விசாரித்தாக வேண்டும்" என அடம்பிடித்தார் அரசு தரப்பில் கசாப்பிற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்.

நீதிபதி அந்த வழக்கறிஞரை மாற்றினாரே அல்லாமல், போட்டோ எடுத்தவர்களை சாட்சியம் சொல்ல தருவிக்கவில்லை. அடுத்து இன்னொரு வழக்கறிஞரை நியமித்தார்கள். அவர் தான் அப்பாஸ் காஸ்மி. அவர் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தார். ஒன்று அஜ்மல் கசாப்-ஐ ஒரு முறையேனும் சந்திக்க வேண்டும். அதுவும் தனிமையில். இரண்டு, போட்டோ எடுத்தவர்களை நேரில் விசாரிக்க வேண்டும்.

சிறப்பு நீதிமன்ற நீதிபதி இரண்டு கோரிக்கைகளையுமே நிராகரித்தார். அத்தோடு அந்த வழக்கறிஞரையும் நீதிபதி நீக்கிவிட்டார். இறுதியில் கசாப்பின் தரப்பில் பொம்மைதாம் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் பெயர் K.P. பாவர். TH: 1/12/009. அவர் கசாப்-ஐ ஊசி போட்டுக் கொல்ல வேண்டும் என்று கசாப்பிற்காக வாதாடினார். என்னே நீதி இங்கே!.

அரசே நியமித்த வழக்கறிஞர் அரசே வெளியே தள்ளியது...?

26/11 வழக்கை நடத்திய நீதிபதி எம்.எல்.தகாலியானி அவர்கள், தன் சார்பில் ஒரு விஷயத்தை ஏற்க வேண்டும் என்றார் வழக்கறிஞர் அப்பாஸ் காசிமி அவர்களிடம். அது, "இந்த வழக்கில் 71 சாட்சிய அறிக்கைகளை வைத்திருக்கின்றோம். அஜ்மல் கசாப் சார்பில் அவற்றை ஏற்றுக் கொள்ளப்பட்ட சாட்சியங்களாக அங்கீகரிக்க வேண்டும். இந்த 71 சாட்சிய அறிக்கைகளையும் தந்த சாட்சியங்களை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும், அவர்களை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் எனக் கேட்கக் கூடாது."

இதனையும் அப்பாஸ் காஸ்மி ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் நீதிமன்றத்திலேயே பகிரங்கமாக வழக்கறிஞர் அப்பாஸ் காஸ்மி அவர்களைக் கண்டித்தார் நீதிபதி தகல்யானி.

20,000 பக்கங்களைப் படிக்க.

கசாப் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகை 20,000 பக்கங்களைக் கொண்டது. இதைப் படிக்க, சிறப்பு நீதிமன்ற நீதிபதி தகால்யானி கொடுத்தது எட்டே நாள்கள் தாம். இந்த எட்டு நாள்களில், மூன்று நாட்கள் கசாப்-இன் வயது பற்றிய விவகாரத்தில் கடந்துவிட்டன. மீதமுள்ள ஐந்து நாள்களில் 20,000 பக்கங்களைப் படித்திட முடியாது என்ற கோரிக்கையை அவசர நீதிபதி தகாலியானி ஏற்றுக் கொள்ளவில்லை ஐந்து நாள் கால அவகாசத்தை அப்பாஸ் காசிமி ஏற்றுக் கொள்ளவில்லை. SOURCE: FRONTLINE SEPT 16, 2012. GAISIW Kasab case

இதுவும் அப்பாஸ் காசிமியை வெளியேற்றிட, அதாவது கசாப்பிற்காக வாதாடுவதிலிருந்து அப்பாஸ் காசிமியை வெளியேற்றிட தகல்யானி கண்டுபிடித்த இன்னொரு காரணம். ஏனெனில் தகாலியானியை நியமித்தவர்கள் தூக்குத் தண்டனையை விரைந்து வழங்கிட வேண்டும் எனக் கட்டளை இட்டிருந்தார்கள்.

கசாப் -இன் வயது: நமக்குப் பொதுவாகக் காட்டப்படுவதைப்போல் கசாப் ஒரு வளர்ந்த வாலிப வயதைச் சார்ந்தவன். அவனுக்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் அவன் ஒரு ‘ஜீவனைல்’ என்ற குழந்தைகள் வயதிற்குள் வரும் ஒரு பையன் என்றே நினைத்தார்கள். ஆகவே அவனை நேரடியாகத் தனியாகச் சந்திக்கும் வாய்ப்பை நீதிபதி தகாலியானிடம் கேட்டார்கள். நீதிபதி சந்திக்க விடமாட்டேன் எனக் கூறிவிட்டார். இதனால் கசாபுடைய வயதை அறிந்திட இருந்த அனைத்து வழிகளும் அடைக்கப் பட்டுவிட்டன.

ஆனால் நமது சட்டங்கள் குறிப்பாக “குழந்தைக் குற்றவாளிகள் சட்டம் 2001” என்ன சொல்லுகின்றது என்றால், குற்றவாளியின் வயதை சரியாக தெரிய வேண்டும் என்ற விண்ணப்பம் வைக்கப்படுமேயானால், அதனை நீதிமன்றம் விசாரணைக்கு உட்படுத்திட வேண்டும். உண்மையான வயதை அறிந்து ஆவணங்களில் கொண்டு வந்திட வேண்டும்.

ஆனால் நீதிபதி தகயல்யானி தனது எஜமான விசுவாசத்தைக் காட்டிட விரும்பினார். வயது குறித்த மனுதாக்கல் செய்யப்பட்ட அதே வேகத்தில் அதை நிராகரித்தார்.

அஜ்மல் கசாப்பிற்காக நமது இந்திய அரசால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் அப்பாஸ் காஸ்மி, மேல் முறையீட்டுக்குத் தயாரானார். உடனேயே சிறப்பு அரசு வழக்கறிஞர் யுஜ்ஜவால் நிக்காம் நீதிபதி தகல்யானி முன், அஜ்மல் கசாப்பின் வயதை அறியும் மனு ஒன்றை வேகமாகத் தாக்கல் செய்தார்.

இவ்வளவு அவசரப்பட்டதற்குக் காரணம் அஜ்மல் கசாப்பின் உண்மை வயது எங்கே வெளியே வந்து விடுமோ, எங்கே நாம் அவனை விரைந்து தூக்கிலிடுவது சிக்கலாகிவிடுமோ என்ற எண்ணங்கள்தாம்.

அஜ்மல் கசாப்-ஐ விரைந்து தூக்கிவிட்டால் தான், இங்கேயுள்ள பலரைக் காப்பாற்றிட இயலும். ஆகவே அரசு வழக்கறிஞர் யுஜ்ஜவால் நிக்காம் மனுவை (அதாவது அஜ்மல் கசாப் இன் வயதை அறியும் மனுவை) தனது சார்பில் பதிவு செய்தார். அதே வேகத்தில் அந்த மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அஜ்மல் கசாப் இன் வயதை அறிந்திட ஏற்பாடு செய்தார்கள். அவன் குழந்தை குற்றவாளி வயதைக் கடந்த வயதுக்கு வந்துவிட்டான். “வயது சுமார் 21” என அறிவித்தார்கள். SOURCE: FRONT LINE: Sept 16, 2012.

யார் சொன்னது எனக் கேட்டபோது எக்ஸ்ரே வல்லுநர்கள் சொன்னார்கள் என்றார்கள். "அவர்களில் ஒருவரை நீதிமன்றத்தில் நிறுத்தி ஒரு நிமிடம் கேள்வி கேட்கலாமா" என்று கோரியபோது முடியாது, கூடாது எனக் கூறிவிட்டார்கள்.

"சரி அவர்கள் தந்த எக்ஸ்ரே அறிக்கையை வேறு ஒரு நிபுணரிடம் காட்டி ஒரு கருத்தைக் கேட்கலாமா? நீதியின் பெயரால் ஒரே ஒரு வாய்ப்பாவது வழங்கப்படுமா? அந்த X ray -ரிப்போர்ட்டின் உண்மை நகல் ஒன்று கிடைக்குமா?" எனக் கேட்டபோது, அதற்கும் அனுமதிக்கவில்லை. "நீ வெளியே போ" என அஜ்மல் கசாப்புக்காக வாதாட அவர்களே நியமித்த வழக்கறிஞரை தூக்கி வீசிவிட்டார்கள்.

இந்த தகவல்களைத் தரும் FRONTLINE இப்படிக் கூறுகின்றது “Getting other Experts Opinion may have helped kasmi in contesting the technical evidence”. ஏனைய நிபுணர்களின் கருத்தைத் தெரிந்திடுவது. காசிமிக்கு நீதிமன்றத்தில் காட்டப்படும் “டெக்னிக்கல்” சாட்சியங்களை எதிர்த்து வழக்காட பெரிதும் உதவி செய்திருக்கும். FRONT LINE; Sept 16, 2012. வயதைப் பொறுத்தவரை மருத்துவ சான்றிதழை ஏற்றுக் கொள்ள முடியாது என்பது வரையறுக்கப்பட்ட மருத்துவ நியதிகள். ஒரு குழந்தை குற்றவாளியை தூக்கில் போடுவது எல்லா விதத்திலேயும் தடுக்கப்பட வேண்டிய ஒன்று. அதேபோல் கசாப்பும் இன்னும் 9 பேரும் முதலில் ஒரு கப்பலில் பாகிஸ்தானிலிருந்து வந்தார்கள். பின்னர், அந்தக்கப்பலில் இருந்து வெளிபோந்த குயூபர் போட்டில் வந்தார்கள் -தீவிரவாதிகள் என கதை கட்டினார்கள்.

இந்த குயூபர் போட்டையும் பார்வையிடவேண்டும் என காசிமி கேட்டார். அதேபோல், இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 27 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட எல்லாத் தளங்களையும் பார்வை இடவேண்டும் எனக் கோரினார். இதற்கெல்லாம் நீதிபதி தந்த ஒரே பதில் - நீ ஒத்துழைக்கமாட்டேன் என்கின்றாய். வெளியே போ.

மூத்த வழக்கறிஞர் Fali S.நரீமான், அப்பாஸ் காசிமியை நீக்கிய விதத்தைக் காரணங்காட்டியே உயர் நீதிமன்றம், இந்த மொத்த தீர்ப்பையும் நிராகரித்திருக்கலாம். ஆனால் ஆச்சர்யப்படக் கூடிய அளவில் உயர்நீதிமன்றம், இந்த மொத்த விவகாரத்தையும் கண்டுகொள்ளவே இல்லை.

இதில் அதிர்ச்சிதரும் தகவல் என்னவெனில், உச்சநீதிமன்றம் ராக்கட் வேகக்தில் ஆகஸ்ட் 29இல் வழங்கிய தீர்ப்பிலும் இதைக் கண்டு கொள்ளவில்லை.

உயர்நீதிமன்றத்தில்:

உயர் நீதிமன்றத்தில் கசாப்புக்காக வைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர்கள் அமின் சோல்கர், பர்கானாஷா ஆகியோரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடம், "தாங்கள் கசாப்-ஐ சற்று கூப்பிடு தூரத்தில் நின்றாவது சந்திக்க அனுமதி வேண்டும்" எனக் கேட்டார்கள்.

அதற்கு உயர்நீதிமன்றம் "அவன் உங்களையும் சிறையில் வைத்து ஏதேனும் செய்துவிடுவான். அதனால் சந்திக்க அனுமதிக்க முடியாது" எனக் கூறிவிட்டார்கள்.

அதன்பின் கசாப்-ஐ தூக்கில் தொங்கவிடும் ஆணையை உறுதி செய்யுமுன், அவனது மனநிலை பற்றிய ஆய்வு ஒன்றை நடத்திட வேண்டும் என்பது சட்டத்தின் தேவை. ஏனெனில் அவன் திருந்தும் வாய்ப்பிருந்தால் அல்லது சிறையில் சந்தித்த தனிமை போன்றவற்றால் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால், ‘mitigating circumstance’ தூக்குத் தண்டனையை தவிர்க்கும் சூழல் ஏற்படும். இது கருணை மனுவில் பெரிய அளவில் உதவி செய்யும்.

இதற்கான ஏற்பாட்டைச் செய்திட வேண்டும் என கசாபிற்காக உயர் நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள், கேட்டபோது அந்தக் கோரிக்கையையும் தூக்கி வீசிவிட்டார்கள்.

ஒரு பாகிஸ்தான் குழந்தையை 2006 இல் நேப்பாளிலிருந்து பிடித்து வந்து 2008 மும்பை தாக்குதலின் ஒரே குற்றவாளி எனக் கூறி கொலை செய்துவிட்டார்கள். இதில் உச்ச நீதிமன்றமும் உடந்தை!

மேலும் விளக்கங்களுக்கு படியுங்கள் "கர்கரேயைக் கொலை செய்து யார்?"

நீதிபதி தகலியானி-இன் சட்டத் துரோகம்:

ஒரு வழக்கில் குற்றச்சாட்டப்பட்டு நிற்கும் ஒருவனுக்கு, வழக்காட வக்கில்லை என்றால், அரசு ஒரு வழக்கறிஞரை நியமிக்கின்றது. அவருக்குச் சம்பளமும் தருகின்றது.

வழக்கறிஞரை நியமிக்கும் உரிமைதான் அரசுக்கு இருக்கின்றதே அல்லாமல், அவரைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் உரிமை அரசுக்கில்லை. ஆனால் அந்த உரிமை குற்றம் சாட்டப்பட்ட திக்கற்ற குற்றாளிக்கு மட்டுமே உண்டு.

ஆனால் இங்கே கசாப்-ஐ தூக்கிலிட்டு, அத்தனை இந்து ராஷ்டிர சிற்பிகளையும் காப்பாற்றுவதே நோக்கம். அதனால் நமது நீதிபதிகள், நமது நாட்டுச் சட்டங்களுக்கு கசாப் வழக்கில் துரோகம் செய்வதை தேசிய சேவை என எடுத்துக் கொண்டார்கள்.

மேல் முறையீடு:

“என்னை விலக்கியது சரியல்ல, அதில் நீதிபதி சட்டத் துரோகத்தைச் செய்துவிட்டார்” என வழக்கறிஞர் அப்பாஸ் காஸ்மி அவர்கள் உயர் நீதிமன்றம் சென்றார். கசாப்-ஐ தூக்கில் போடும் வரை உயர்நீதிமன்றம் இந்த மனுவின் மேல் முடிவெடுக்கவில்லை. FRONTLINE: SEPT 16, 2012.

எப்படி இருக்கின்றது நீதிபரிபாலனம்? நம் நாட்டில் அரசியலில் முகவரி இழந்துவரும் சோற்றால் அடித்த பிண்டங்கள் பல, சட்டத்தின் எல்லா கதவுகளும் கசாப்பிற்கு திறந்து விடப்பட்டிருந்தன எனப் பிதற்றுகின்றன. வெட்கம்! வெட்கம்!! மாபெரும் வெட்கம்

புகைப்படமும் கசாப்பும்.

கசாப்-ஐ அதாவது அவன் லாவகமாக மும்பை CSTஇல் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்தபோது படம் எடுத்த பத்திரிகையாளர்களை கடைசிவரை நீதிபதியிடமோ, நீதிமன்றத்திலோ நிறுத்திடவில்லை.

ஆனால் மும்பை CST ரெயில் நிலையத்தில் - துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் - 18 ‘CCTVS’ என்ற கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவை துப்பாக்கிச் சூடு நடந்ததை மட்டுமல்ல, அங்கே நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளையும் நீண்ட நாள்களாகவே படமெடுத்து வருகின்றன. அவற்றின் பதிவுகள் தாம் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

அதை நம்மைப் போன்றவர்கள், S.M. முஷ்ரிப் தலைமையில் கேட்டபோது "அந்த பதினெட்டுக் கேமராக்களும் அன்று வேலை செய்யவில்லை. ஆனால் மீதமுள்ள 20 கேமராக்களும் வேலை செய்தன" என்றார்கள். "இரண்டனவற்றை வேறு பக்கம் திருப்பி விட்டுவிட்டோம்" எனக் கூறிவிட்டார்கள்.

இந்து ரஷ்டிரவுக்காக அதாவது நம் நாட்டுக்கு எதிராக போர் தொடுத்துக் கொண்டிருப்பவர்களைக் காப்பாற்றிட நமது பிரதிநிதியான உள்துறை அமைப்பு செய்த ஏற்பாடு. அவர்கள் இப்போது நமது அரசாங்கத்தில் நமது வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள் - என்னே அவலம்!

கசாப் - யாரைக் காப்பாற்ற இந்த அவசர தூக்கு?

உண்மையிலேயே மும்பைத் தாக்குதலை நடத்தியவர்கள் யார்? மும்பை ரெயில் நிலையத்தில் தாக்குதலை நடத்தியவர்களின் செல்போன்களும் சிம் கார்டுகளும் கிடைக்கவே செய்தன. மாவட்டம் வே தாலுக் கும்பப் புகார்வாடி கிராமத்தவர்களுக்குச் சொந்தமானவை.

ஒன்றின் உடைமையாளர் அஷோக் ஷார்க், அவர் அதனை இரத்தின கிரி என்ற இடத்தில் தொலைத்து விட்டதாகக் கூறினார். ஆனால் அதை பயன்படுத்திக் கொண்டிருந்தவர் சத்தீஷ்கர் மாநிலத்தில் சங்கப் பரிவாரத்தின் பிரச்சாரகர். இன்னொரு சிம் கார்டு, அதே முத்தாரா மாவட்டத்திலுள்ள வாலி தாலுகாவிலுள்ள ஒரு பெண்ணுக்குச் சொந்தமானது.

"இந்த சிம் கார்டு, இதனை பயன்படுத்தியவர்கள் - இவர்களையெல்லாம், ஏன் விசாரணைக்குக் கொண்டு வந்திடவில்லை?" எனக் கேட்டதற்கு, "இவர்களையெல்லாம் விசாரிக்க வேண்டும் என நாங்கள் கருதவில்லை" எனக் கூறிவிட்டார்கள்.

இவர்களையெல்லாம் விசாரித்தால் இங்குள்ள இந்துத்துவ அமைப்புகள், மொத்தமாக சிக்கி இருக்கும். அவர்களை காப்பாற்றத் தான் இந்த அவசர இரகசிய தூக்கு.

சட்டம் தன் கடமையைச் செய்ததா?

இல்லை! கசாப்-இன் கருணை மனுவை நிராகரித்திருந்தால் கூட, அவன் மீண்டும் நீதிமன்றங்களை அணுக உரிமை உண்டு. என்னென்ன காரணங்களுக்காகக் கருணை மனு நிராகரிக்கப்பட்டதோ அதை சீர்தூக்கிப் பார்த்திடும் அளவில் அவன் மறுபரிசீலனைக்கு மனு போடலாம். இதனை விளக்கமாக அறிந்திட பாரதப் பிரதமர் இந்திரா காந்தியைக் கொலை செய்த குற்றவாளி கேகர் சிங் விவகாரத்தில் என்ன நடந்தது என்பது ஓர் எடுத்துக்காட்டு.

பிரதமர் இந்திராகாந்தி கொலையும் கேஹர் சிங்கும் Kaher Singh Vs Union of India (AIR 1989 SC 653)

கேகர் சிங் என்பவர் பாரதப் பிரதமர் இந்திரா காந்தியைக் கொலை செய்தவர்; கொலை செய்திட சதிதிட்டம் தீட்டியவர் என்றெல்லாம் குற்றம் சாட்டப்பெற்றவர். குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப் பெற்றவர்.

அவர் தனக்கு வழங்கப் பெற்ற மரணதண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றார். உச்சநீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது; மரண தண்டனையை உறுதி செய்தது. அவருடைய மகன் குடியரசு தலைவருக்கு மனு ஒன்றை அனுப்பினான். அதில் "அரசியல் நிர்ணயச் சட்டம் பிரிவு 72இன் கீழ் தனது தந்தைக்கு கருணை காட்டிட வேண்டும். மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டான். அதையும் குடியரசு தலைவர் நிகராகரித்து விட்டார்.

பின்னர் கேகர் சிங் தான் குடியரசு தலைவரைத் தனியாகச் சந்தித்து சில விஷயங்களைப் பரிமாறிக்கொள்ள விரும்பி, அதற்காக மனு கொடுத்தார். இதனை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டார்.

"கருணை மனுவைத்தான், தான் பரீசிலிக்க முடியும். அஃதல்லாமல் வேறு யாரையும் அதுகுறித்து சந்திக்க இயலாது. காரணம் இதுவரை நம் நாட்டில் பின்பற்றப்பட்டுவரும் நெறிமுறைகளுக்கு அஃது நேர் எதிரானது" எனக் கூறிவிட்டார் குடியரசு தலைவர்.

குடியரசு தலைவரின் பதிலையும், கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்தும் டெல்லி உயர் நீதிமன்றத்திற்குச் சென்றார் கேகர் சிங். டெல்லி உயர் நீதிமன்றம் அவர் மனுவை நிராகரித்தது.

உச்ச நீதிமன்றம் சென்றார். உச்சநீதிமன்றம் "குடியரசு தலைவரின் அதிகாரத்திற்கு எல்லாம் உட்பட்டது. கருணை மனுக்களை ஏற்றுக் கொள்வது அல்லது நிராகரிப்பது என்பது நீதிமன்றங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை குடியரசு தலைவர் பெறுவதுதான். ஆனாலும் நீங்கள் உச்ச நீதிமன்றம் உறுதி செய்த சாட்சியங்களை மறுபரிசீலனை செய்யலாம். நாங்கள் வழங்கியுள்ள தீர்ப்பையும் மறுபரிசீலனை செய்யலாம்" எனக்கூறியது. இதில் உச்ச நீதிமன்றம் குடியரசு தலைவரின் அதிகாரத்தின் எல்லை விரிவானது என்பதை விளக்கியது. அதனால் அனைவரும் குடியரசு தலைவர் தனது அதிகாரத்தை தாராளமாகப் பயன்படுத்தலாம் என்கின்றனர். உச்ச நீதிமன்றம் மேற்கொண்ட நிலைபாட்டைப் பாராட்டினார்கள்.

மொத்த சூழலையும் பாராட்டிய மாதாபுஷி கிரிதர் (இவர் ஹைதராபாத் சட்டக்கல்லூரி பேராசிரியர்) கூறுகின்றார். “நமது உச்ச நீதிமன்றம் தவறு செய்தால், அதனை குடியரசு தலைவர் சீர் செய்யலாம். குடியரசு தலைவர் தவறு செய்தால், உச்ச நீதிமன்றம் சரி செய்யலாம்" என்கின்றார். (The Hindu, No.22,2012.)

இந்த மொத்த விவகாரத்திலும் குற்றவாளிக்கு கருணை மனுவோடு விவகாரம் முடிந்திடவில்லை. குடியரசு தலைவர் கருணை மனுவை தள்ளுபடி செய்ததற்கான காரணங்களை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றமும், அதுவும் மறுத்தால், உச்ச நீதிமன்றமும் சென்றிட முடியும்.

நீதி தேடிடும் மீதமிருக்கும் வழிமுறைகளை முற்றாக மறுத்துவிட்டு சட்டம் தன் கடமையைச் செய்தது எனச் சொல்லுவது நாம் ஓர் சர்வாதிகார நாடு என்பதையே சொல்லும்.

சுருக்கமாக இந்துராஷ்டிரவின் சட்டம் செயலில் வந்துள்ளது. இதனால்தான் கசாப்-ஐ நமது நீதி நிறுவாகம் கொலை செய்துவிட்டது. இப்படித்தான் கசாப்-இன் கொலையை An Act of Constitutional Improperiety என்கின்றார்கள். அதாவது அரசியல் நிர்ணயச்சட்டத்தின்படி ஓர் அடாத செயல்.

உள்துறை அமைச்சர் ஷுஷில் குமார் ஷிண்டே-இன் அறியாமை.

ஏன் அவசர அவசரமாகத் தூக்கில் போட்டீர்கள் என்பதற்கு இப்படிப் பதில் சொல்லி இருக்கின்றனர். “நான் ஒரு காவல்துறை அடியாளாய் பயிற்சி எடுத்தவன். இவற்றில் இரகசியம் காப்பது என் இயல்பு." இப்போதுதான் உண்மை வெளிச்சத்திற்கு வருகின்றது. அதாவது காவல் நிலையத்தில் அமர்ந்து அப்பாவிகள் மீது பொய் வழக்குகளைப் போட்டுக் கொண்டிருந்தவர் மத்திய அமைச்சராகி இருக்கின்றார். அத்தோடு இப்படியும் கூறியுள்ளார்.

"இன்னொரு முறை மனித உரிமைகள் அமைப்புகள் இதில் பிரச்னைகளை உருவாக்குவார்கள் என்பதால் தான் நான் இரகசியமாக வைத்திருந்தேன்." இப்படி ஒரு மத்திய அமைச்சர் கூறியிருப்பது, நம் நாட்டை ஒரு சர்வாதிகார நாடாகவே மக்கள் மனதில் பதிய வைக்கும் என்கின்றார் இந்து பத்திரிகையின் கட்டுரையாளர்.

ஆனால் நமது ஷிண்டேயை விஞ்சி மனித உரிமை அமைப்புகள் வேகமாக செயல்படுகின்றன. மும்பையிலிருந்து ஓர் மனித உரிமை அமைப்பு அனுப்பிய சுற்றறிக்கை:

IB-இன் வேலை

ஆதிமுதல் அனைத்தும், IB என்ற மத்திய உளவுத்துறையின் வேலை இது என்கின்றார்கள்.

1. அஜ்மல் கசாப்-இன் கருணை மனுவை கசாப் தயாரித்ததாகக் கூறப்படுகின்றது. அதுவும் 3 முதல் 4 நாள்களுக்குள் தயாரித்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.

உண்மையில் கசாப்பிற்கு ஆங்கிலம் தெரியாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஆங்கிலத்தில் தான் வெளியே வந்தது. அது 400 பக்கங்களைக் கொண்டது. பிரபல வழக்றிஞர்களே 400 பக்கத் தீர்ப்பை படிக்க நாற்பது நாள்கள் கேட்டார்கள். ஆனால் ஆங்கிலம் தெரியாத கேசாப் 4 ஐந்து மூன்று முதல் 4 நாள்களில் படித்து, தனக்குத் தெரியாத மொழியில் கருணை மனுவை தயாரித்து விட்டானாம்.

அது உடனேயே உரிய துறைகள் மூலம் குடியரசுத் தலைவருக்கு விரைந்து சென்றதாம். குடியரசுத் தலைவர் 29 மனுக்கள் தனக்குப் பின்னால் இருக்க இந்த மனுவை முதன் முதலில் எடுத்தாராம். மறுத்தாராம்-கசாப் செத்தாராம். அனைத்தும் மத்திய உளவுத்துறையின் வேலை என்கின்றது மும்பை மனித உரிமை குழுமம்.

2. ஆனால் மேலே நாம் சொன்ன இந்த உண்மைகளையெல்லாம் மனுவாக மாற்றி மராட்டிய மாநில அரசிடம் தந்தார் வழக்கறிஞர் எங் சவுதிரி என்பவர். ஆனால் மத்திய உளவுத்துறை அதை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது. உச்ச நீதிமன்ற (அ) நீதிமன்ற தீர்ப்பைப் பற்றி அந்த மனித உரிமை அமைப்பின் அறிக்கை இப்படிக் கூறுகின்றது.

“உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் மத்திய உளவுத்துறை ஏமாற்றிவிட்டது. இந்தியாவிலுள்ள ஒரே ஏதேச்சதிகாரி மத்திய உளவுத் துறைதான். இது பிரதம அமைச்சர் குடியரசு தலைவர், அரசு அனைத்தையும் விஞ்சி அதிகாரம் கொண்டது. சொல்லப்போனால் நாடாளும் மன்றத்தை விஞ்சும் அதிகாரத்தைக் கொண்டது. இங்கே உச்ச நீதிமன்ற நீதிபதிகளையே அது வரை கோட்டில் கையெழுத்துப் போட செய்துள்ளது என்றே சொல்ல வேண்டும். இந்தத் தீர்ப்பைத் தயாரித்தவர்கள் தங்கள் புலனாய்வில் இடம் பெற்ற ஓட்டைகளையெல்லாம் அடைப்பதற்குரிய வரிகளை தீர்ப்பில் திணித்திருந்தார்கள். இந்த வரிகளை தொடக்க நாள் முதல் இந்தச் சதியின் அனைத்து அம்சங்களையும் தெரிந்தவர்களால் மட்டுமே வரைந்திட முடியும். நீதிபதிகள் இருவரில் ஒருவர் முஸ்லிமாக இருந்ததால் உளவுத் துறையின் வேலை மிகவும் எளிதாகிவிட்டது. முஸ்லிம்கள் பதவியில் உயர, உயர அழுத்தங்களுக்கு எளிதில் ஆளாகிவிடுகின்றார்கள்." (page 6 of the Human Rights Report) பாபரிமஜ்ஜித் வழக்கில் IB பகிரங்கமாகத் தலையிட்டது என்பதை நாம் தெளிவு படுத்தி இருந்தோம்.

ராஜீ ராமச்சந்திரன்

இவர் அரசால் உச்சநீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட நீதிமன்ற நண்பன். இவர் கசாப்பிற்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் இடையில் நட்பை ஏற்படுத்த வேண்டும். இதிலும் ராதாகாந்த் யாதவ் - இவர்தான் நமது சார்பில் கர்கரையைக் கொலை செய்தது யார்? என நீதிகேட்டு உச்சநீதிமன்றத்திற்கும் மும்பை உயர் நீதிமன்றத்திற்கும் கொண்டு சென்றவர் - தந்த தகவல்களின் அடிப்படையில் மிகவும் சிறப்பாக விவாதித்தார். கசாப் நிச்சயமாக விடுதலை பெறுவான் என நம்பினார். ஆனால் தீர்ப்பு அவருக்குப் பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. இதனால் அவருக்கு உச்ச நீதிமன்றம் தந்த 11.43 லட்சம் ரூபாயையும் அவருடைய உதவியாளருக்குத் தந்த 3.50 லட்சம் ரூபாயையும் மறுத்துவிட்டார்.

மு.குலாம் முஹம்மது

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22309

டிஸ்கி: ஒரு அரசு தனது குடிமகனுக்கு தேவைப்படும் விபரங்களை அளிக்கக் கடமைபட்டுள்ளது. கசாப் உண்மையான குற்றவாளி என்றால் எனது நாட்டின் மீது தாக்குதல் தொடுத்த அவனை தூக்கில் இட்டது முற்றிலும் சரியே! ஆனால் கட்டுரையாளர் சொல்லும் தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்த நாட்டில் பல கருப்பு ஆடுகள் அரசு சம்பளத்தை வாங்கிக் கொண்டு யாருக்கோ வேலை செய்து வருகின்றனர். உண்மையை அதிக நாட்கள் மூடி வைக்க முடியாது. அது ஒன்றுதான் தற்போது நம்மால் சொல்ல முடியும்.

28 comments:

dheen said...

சுவனத்துபிரியன் அவர்களே பெருமைபடுகிறேன் இஸ்லாமிய சமுதயாம் சந்திக்கும் பரிசினை பற்றி வெளிய்ட்டீர்கலே.
இந்தியாவில் இஸ்லாம் சந்திக்கும் பிரசினயைவிட இஸ்லாமிய மக்கள் சந்திக்கும் பிரசின்னை அதிகம்.
இஸ்லாம் வளரவேண்டும் என்றால்
இஸ்லாமியர்கள் வாழவேண்டும் .
இஸ்லாமியர்கள் நியூஸ் முக்கியத்துவம் கொடுங்கள்

Anonymous said...

இதுதான் நீங்கள் சமயத்தையும் விட அளவு கடந்து நேசிக்கும் இந்தியாவா? ஒரு முஸ்லிமுக்கு தான் சார்ந்த சமயத்தை விட, அஃதாவது இஸ்லாத்தை விடத் தன் நாட்டின் மீது பற்றுக்கொள்வது சிறந்ததென இஸ்லாம் எங்காவது கூறுகிறதா? திருக்குர்ஆனிலிருந்தோ நபிமொழிகளிலிருந்தோ ஆதாரம் காட்டுங்களேன், சுவனப்பிரியன்.

- வள்ளுவன்

dheen said...

விஷம் கக்கும் விஸ்வரூபம்? : களம் இறங்கும் முஸ்லிம் சமூகம்! Tuesday, 18 December 2012 04:29 MARUPPU மீடியா - மறுப்பு செய்திகள்
DEC18, "உன்னைப்போல் ஒருவன்" படத்தில், முஸ்லிம்களுக்கு எதிராக விஷம் கக்கிய கமலஹாசனின் சுயரூபம், தற்போது "விஸ்வரூபம்" எடுத்துள்ள நிலையில், அனைத்து முஸ்லிம் அமைப்புக்களின் "அவசர ஆலோசனைக்கூட்டம்" நேற்று சென்னையில் நடைபெற்றது.

கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சித்தரிப்புகள் இருக்கின்றன, என்ற கருத்துகளும், சந்தேகங்களும் வலுத்துள்ள நிலையில், நேற்று மாலை 7 மணியளவில், சென்னை அண்ணா நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் "அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் ஒருங்கினைப்புக்கூட்டம்" நடந்தது.

ஜமாத்துல் உலமா தலைவர், மவுலவி அப்துல் ரஹ்மான் அவர்களின் தலைமையில், விஸ்வரூபத்தை எந்த ரூபத்தில் எதிர்கொள்வது? என்ற அடிப்படையில் நடத்தப்பட்ட ஆலோசனைக்கூட்டத்தில், எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் ஃப்ரண்ட், ம.ம.க., தமுமுக, இ.த.ஜ, ஜமாத்தே இஸ்லாமி, ஜம்யியதுல் உலமா, தேசிய லீக் உள்ளிட்ட அனைத்து இயக்கங்களின் தலைவர்களும் கலந்துக்கொண்டனர்.

2 மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனைக்கூட்டத்துக்குப் பிறகு கீழ்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.

1.விஸ்வரூபம் திரைப்படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கள் இருப்பதாக வரும் தகவல்களின் அடிப்படையில், சம்மந்தப்பட்டவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கிட, உள்துறைச்செயலாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை 20/12/12 அன்று நேரில் சந்தித்து மனு கொடுப்பது.

(துப்பாக்கி திரைப்பட சர்ச்சை வந்தபோது, விரைந்து செயல்பட்டு தீர்வை ஏற்படுத்திய தமிழக அரசு "விஸ்வரூபம்" விஷயத்திலும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும், என பல தலைவர்களும் நம்பிக்கையை வெளிப்படுத்தினர்)

2.இரண்டு நாட்களுக்குள் தீர்வு கிடைக்காத பட்சத்தில், 22/12/12 அன்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தீர்வு காணவும், முடிவு செய்யப்பட்டது.

3.வழக்குப்பதிவு செய்த பிறகு, அன்றைய தினமே "பத்திரிக்கையாளர் சந்திப்பை" நிகழ்த்தி கூட்டமைப்பின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.



தமிழ் சினிமாக்களில், "பாகிஸ்தான்" முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டிக்கொண்டிருந்தவர்கள், இப்போது, இந்தியாவில் "உங்கள் ஊரில் - உங்கள் கடைகளுக்கு பக்கத்திலயே அவர்கள் "ஸ்லீப்பர்" செல்களாக இருக்கலாம், என முஸ்லிம்களை காட்சிப்படுத்தியது, விஜய் நடித்து வெளிவந்த துப்பாக்கி.

தமிழ் சினிமாவில் மணிரத்னத்தின் 'ரோஜா' (1992) முதன்முதலில் "விஷக்கருத்துக்களை" விதைத்தது.

"ரோஜா"வில் முஸ்லிம் வேடத்தில் இருக்கும் தீவிரவாதி ஒருவர், இந்திய "தேசியக்கொடி"யை எரிப்பது போலவும், பார்ப்பன வகுப்பைச் சார்ந்த கதாநாயகன், எரியும் கொடியின் மீது படுத்து தீயை அணைப்பது போலவும் காட்டப்பட்டிருந்தது.

இந்த காட்சியின் மூலம் முஸ்லிம்கள் என்றால் இந்திய தேசத்துக்கு எதிரானவர்கள் என்ற கருத்தையும், பார்ப்பனர்கள் என்றால் தேசத்தைக் காக்க உயிரையே பணயம் வைப்பவர்கள் போலவும் காண்பித்து முஸ்லிம்களை இழிவு படுத்திய அதே வேளையில், தான் சார்ந்த பிராமனீயத்தை போற்றி "விஷமம்" செய்திருந்தார்,மணிரத்னம்.

ரோஜாவுக்குப் பின் பம்பாய், பம்பாய்க்குப் பின் அதே பாணியில் விஜயகாந்தின் பல படங்கள், அர்ஜுனின் படங்கள், கமலஹாசனின் படங்கள் என முஸ்லிம் விரோத படங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றன. அந்த வரிசையில் சமீபத்திய வரவு "விஸ்வரூபம்"

dheen said...

சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் குண்டுவெடிப்பு இந்துத்துவ தீவிரவாதி கைது!


சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான தீவிரவாதி ராஜேஷைத் தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர்.டெல்லி மற்றும் பாகிஸ்தானிலுள்ள லாகூர் இடையே இயக்கப்பட்ட சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது. அரியானா மாநிலம் பானிப்பட் அருகே பாகிஸ்தான் நோக்கி ரயில் சென்று கொண்டிருந்த வேளையில் இந்த அசம்பாவிதம் நடந்தது.குண்டுவெடிப்பைத் தொடர்ந்து ரயில் பெட்டிகளில் ஏற்பட்ட பயங்கர தீயில் கருகி ரயில் பயணிகள் 68 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் பலத்தக் காயமுற்றனர். இதில் பெண்களும் குழந்தைகளுமே அதிகம்.

இந்த குண்டுவெடிப்புக்கு முதலில் லஸ்கர் இ தொய்பா,ஜெய்ஷ் இ முஹம்மத் என புருடா விட்டு அப்பாவி முஸ்லிம்கள் பலரை கைது செய்தனர் இவர்கள் இந்தியா பாகிஸ்தான் ஒற்றுமையை சீர்குலைக்க முயன்றனர் என பொய் குற்றம் சாட்டினர் இந்திய உளவு துறை.பத்திரிக்கைகளும் முதல் பக்கத்தில் வெளியிட்டு முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்தனர்.பின்னர் தெரியவந்தது செய்தது ஆர்.எஸ்.எஸ் பின்னர் பத்திரிக்கைகளும் இந்த செய்தியை ஒரு பெட்டி செய்தியாக மாற்றியது.பொது மக்களும் முஸ்லிம்களை தீவிரவாதியாக சித்தரிக்க ஆரம்பம் செய்து விட்டனர்.

இந்தக் குண்டுவெடிப்பு வழக்கின் முக்கியக் குற்றவாளியான ராஜேஷ் சவுதாரி என்ற தீவிரவாதியை மத்திய பிரதேசத்திலுள்ள உஜ்ஜயினில் தேசியப் புலனாய்வு அமைப்பினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இந்த ராஜேஷ் சவுதாரி குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய்ச் சன்மானம் வழங்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு நடந்த காலத்தில், இந்த நாசகார வேலையில் பாகிஸ்தான் ஈடுபட்டதாக காவல்துறை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மாலேகான் குண்டுவெடிப்பு விசாரணையில், ஹிந்துத்துவ இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் அதில் ஈடுபட்ட தகவல்கள் வெளியானதன் பின்னர் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு விசாரணையும் திசைமாறி, அதில் ஈடுபட்டவர்களாக சுவாமி அசிமானந்தாவையும் மேலும் நான்கு ஹிந்துத்துவ தீவிரவாதிகளையும் அடையாளம் காட்டியது தேசிய புலனாய்வு அமைப்பு!

இதனைத் தொடர்ந்து சுவாமி அசிமானந்தா வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்திற்குப் பிறகே, இந்தக் குண்டுவெடிப்புகளில் ஈடுபட்ட உண்மயான தீவிரவாதிகள் யாரென்பது வெளியாக ஆரம்பித்தது.

dheen said...

முஸ்லிம்களை பொய்யாக தீவிரவாதியாக சித்தரித்த பொழுது முதல் பக்கத்தில் இட்ட பத்திரிக்கை உண்மையான குற்றவாளியான ஆர் எஸ் எஸ் தீவிரவாதி கைதை பெட்டி செய்தியாக மாற்றுவது ஏன்?

suvanappiriyan said...

சகோ வள்ளுவன்!

//இதுதான் நீங்கள் சமயத்தையும் விட அளவு கடந்து நேசிக்கும் இந்தியாவா? ஒரு முஸ்லிமுக்கு தான் சார்ந்த சமயத்தை விட, அஃதாவது இஸ்லாத்தை விடத் தன் நாட்டின் மீது பற்றுக்கொள்வது சிறந்ததென இஸ்லாம் எங்காவது கூறுகிறதா? திருக்குர்ஆனிலிருந்தோ நபிமொழிகளிலிருந்தோ ஆதாரம் காட்டுங்களேன், சுவனப்பிரியன்.//

ஒன்றை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அஜ்மல் கசாப் உண்மையிலேயே பல லட்சங்களை வாங்கிக் கொண்டு எனது நாட்டு அப்பாவி மக்களின் மீது துப்பாக்கி பிரயோகம் செய்திருந்தால் எனது முதல் எதிரி அஜ்மல் கசாபே! அவன் முஸ்லிம் என்பதற்காக நான் அவனுக்கு ஆதரவாக சென்றால் அது இன வெறி, அல்லது மத வெறியாகும் என்று இஸ்லாம் முஸ்லிம்களுக்கு கட்டளையிடுகிறது. ஆதாரமான நபி மொழி கீழே!

அதே நேரம் கட்டுரையாளர் குலாம் சொல்வது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதிகார வர்க்கத்தில் இருக்கும் இந்துத்வ வாதிகளை களையெடுக்க அரசுக்கு நிர்பந்தம் கொடுக்க வேண்டும். அதனை தனி மனிதனாக தீவிர வாத செயல்களில் ஈடுபடாமல் தவ்ஹீத் ஜமாத், தமுமுக போன்ற பெரும் இயக்கங்களின் துணை கொண்டு அரசுக்கு இந்த செய்தியை எடுத்துச் செல்ல வேண்டும். அதுதான் இஸ்லாம் காட்டும் முறையும் கூட.


ஒரு முறை புசைலா என்ற சஹாபி பெண்மணி நபி அவர்களிடம் வந்து "இறைத்தூதரே நான் என் சமூகத்தை நேசிப்பது இன வெறியா என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள் தன் சமூகத்தை ஒருவன் நேசிப்பது இன வெறி அல்ல. மாறாக தன் சமூகத்தை சார்ந்தவன் வரம்பு மீறி அநீதியை செய்யும்போது அவன் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் தன் சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காக அவனுக்கு உதவினால் அதுவே இனவெறி" என்றார்கள்.- நூல்: அஹ்மத்

Sathish Murugan . said...

பெஷாவரில் குண்டு வெடிப்பு, இந்துக்கள் அக்கிரமம்... விரைவில் எதிர்ப்பார்க்கிறேன் இப்படி ஒரு தலைப்பை... குண்டு வைக்கும் முஸ்லீம்கள் அனைவரும் இந்துக்களாக மாற சூனாபானா சாமியார் தீட்சை தருகிறார்... நீரும் உம்முடைய கோணல் மூளையில் பரவிக்கிடக்கும் மத வியாதியும்.

Sathish Murugan . said...

அவனை தூக்கில் இட்டதில் எனக்கும் விருப்பம் இல்லை, சாகும் வரை அவன் வெதும்பி சாக வைத்திருக்க வேண்டும் அவனை போன்ற கொடூர நாய்களை... அவனுக்கு வக்காலத்து வாங்கும் கோமாளிகளை அவனுக்கு துணையாக அடுத்த அறையில் அடைத்து வைத்திருக்க வேண்டும்.

suvanappiriyan said...

//அவனை தூக்கில் இட்டதில் எனக்கும் விருப்பம் இல்லை, சாகும் வரை அவன் வெதும்பி சாக வைத்திருக்க வேண்டும் அவனை போன்ற கொடூர நாய்களை... அவனுக்கு வக்காலத்து வாங்கும் கோமாளிகளை அவனுக்கு துணையாக அடுத்த அறையில் அடைத்து வைத்திருக்க வேண்டும். //

கட்டுரையாளர் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதை விட்டு விட்டு என் மேல் கோபப்படுவதில் அர்த்தமே இல்லை. சிந்திக்கும் திறன் இருந்திருந்தால் நீங்கள் இப்படி ஒரு நிலையில் இருக்க மாட்டீர்கள் சதீஷ் முருகன். சிந்தியுங்கள்.

//பெஷாவரில் குண்டு வெடிப்பு, இந்துக்கள் அக்கிரமம்... விரைவில் எதிர்ப்பார்க்கிறேன் இப்படி ஒரு தலைப்பை.//

அங்கு நடப்பது அமெரிக்க யூதர்களின் கை வரிசை. இது பற்றி பல கட்டுரைகள் பல தளங்களில் வந்துள்ளது. காரணம் என்ன என்பதை படித்துப் பார்க்கவும்.

suvanappiriyan said...

சகோ தீன்!

//முஸ்லிம்களை பொய்யாக தீவிரவாதியாக சித்தரித்த பொழுது முதல் பக்கத்தில் இட்ட பத்திரிக்கை உண்மையான குற்றவாளியான ஆர் எஸ் எஸ் தீவிரவாதி கைதை பெட்டி செய்தியாக மாற்றுவது ஏன்? //

அதுதான் இந்திய பத்திரிக்கா தர்மம். வருகைக்கும் பல உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்டியதற்கும் நன்றி!

Anonymous said...

அபூ அஃப்ரஹ் said...

சகோதரர் வியாசன் அவர்களே நாம் கேட்ட ஆதாரம் அஜ்மல் கசாப் பாகிஸ்தானை சேர்ந்தவனா என்பதல்ல? மீண்டும் ஒரு முறை நான் கேட்டுள்ளதை படித்துபாருங்கள். லஸ்கர் இ தொய்பாவில் இணையுமாறு கேட்டுக் கொண்ட அஜ்மல் கசாப்பின் தந்தை என குறிப்பிட்டுள்ளீர்களே அதற்கு தான் நான் ஆதாரம் . கேட்டேன். அஜ்மல் கசாப் பாகிஸ்தானில் இருந்து வேலை தேடி நேபாளத்திற்கு சென்றவன் என்பது கர்கரேவை கொலைசெய்தது யார் என்ற நூலில் உள்ளது தானே? நீங்கள் என்ன புதிதாக சொல்வது. மேலும் உங்களை போன்ற வகுப்புவாத சிந்தனைகளில் ஊறிக்கொண்டிருக்கும் பலர் இதை விட ஆயிரம் இணைய தளங்களை இயக்கிக்கொண்டிருக்கிறார்கள். அவை அனைத்தும் இதே போன்ற செய்திகளைத் தான் வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன.

ஆனால் கர்கரேவை கொலைசெய்தது யார்? என்ற நூல் இந்திய செய்திதாள்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் அதுவும் ஏதோ நீங்கள் சுட்டிக்காட்டும் ஒன்றுக்கும் உதவாத யாரும் அறியாத இணைய தளங்கள் அல்ல மிக முக்கியமான செய்திதாள்களாகிய டைம்ஸ் ஆஃப் இந்தியா சதாரா போன்ற பிரபலமான செய்திதாள்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டது. உலகளாவிய ஊடகங்களின் முஸ்லிம்களுக்கு எதிரான தீவிரவாதிகள் என்ற பொய் பிரச்சாரத்திற்கு பிறகும் சில நேரங்களில் வெளி வந்து விட்ட உண்மைகள் இவை., வேறு வழியில்லை இவற்றை நீங்கள் ஜீரணித்துத்தான் ஆகவேண்டும். இன்னும் சில புதிய கேள்விகளை உங்களிடம் கேட்கிறேன்.

1) ஐ.பி என்ற மத்திய உளவுத்துறை எந்த தப்பும் செய்யவில்லை என்றால் மும்பை தாக்குதலுக்கு பிறகு கர்கரேவை கொலை செய்தது யார் என்ற புத்தகம் வந்த பிறகு தேசிய புலனாய்வு துறை (என்.ஐ.ஏ) புதிதாக ஏற்படுத்தப்பட்டது. ஏன்?

2) ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இந்தியாவெங்கும் பல குண்டு வெடிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்ட பிறகும் நிற்காத குண்டு வெடிப்புகள் மாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளிகளான புரோகித், பெண்சாமியார் சாத்வி, அசிமானந்தா, தயனந்த பாண்டே போன்றோர் கைது செய்யப்பட்டவுடன் நின்றது எப்படி?

3) அசிமானந்தா அப்ரூவராக மாறி பக்கம் பக்கமாக ஒப்புதல் வாக்குமூலம் தந்தாரே அது பல பத்திரிக்கைகளில் குறிப்பாக டெகல்காவில் வெளிவந்ததே அது என்னவாயிற்று?

4) 30க்கும் அதிகமான ஐ,பி உயர் அதிகாரிகள் குறிப்பாக ஐ.பி.எஸ் அதிகாரிகள் சமீபத்தில் மாற்றப்பட்டனரே அது ஏன்?

5) ஐ.பி என்ற மத்திய உளவுத்துறை யாருக்கு கீழ் இயங்குகிறது? அதன் நடவடிக்கைகளுக்கு யாருக்கு பதில் சொல்கிறது? என்றும் அதன் நடவடிக்கைகள் நாடாளுமன்ற குழுவால் கட்டுப்படுத்தப்படவேண்டும் என்ற துணை ஜனாதிபதியின் கோரிக்கை என்னவாயிற்று? இக்கோரிக்கை ஏன் வைக்கப்பட்டது?

Anonymous said...

....continue...
6) இதே கேள்வி உயர்நீதிமன்றத்திலும் கேட்கப்பட்டு ஐ.பி சில நாட்கள் இயங்கக்கூடாது என்று தடை ஏன் விதிக்கப்பட்டது?

7) நீங்கள் தற்போது சுட்டிக்காட்டியுள்ளது போன்ற ஒன்றுக்கு உதவாத இணையதளங்கள் அல்லாமல் பல பிரபலமான ஊடகங்களிலும் பல இணையங்களிலும் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நடத்தப்பட்டது என சுட்டிக்காட்டப்பட்ட சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் இரயில் குண்டு வெடிப்பு தற்போது இந்திய (இந்து) தீவிரவாதியால் நடத்தப்பட்டது என்பதை என்.ஐ.ஏ (நன்றாக கவனிக்கவும் ஐ.பி அல்ல என்.ஐ.ஏ) கண்டுபிடித்துள்ளதே. அதற்காக இந்து தீவிரவாதி ராஜேந்திர சவுத்ரி என்பவன் கைது செய்யப்பட்டுள்ளானே. 2007ல் நடந்த இதை ஏன் ஐ.பி. கண்டுபிடிக்கவில்லை. ஹ்ட்ட்ப்://இன்டிஅடொடய்.இன்டொடய்.இன்/ச்டொர்ய்/சம்ஜ்ஹௌட-எ௯ப்ரெச்ச்-ப்லச்ட்ஸசெ-கெய்ஸுச்பெச்ட்நிஅ-மெச்ச-ப்லச்ட்/1/238054.ஹ்ட்ம்ல்

8) இவன் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பிலும் தொடர்புடையவன் என தற்போது தெரிய வந்துள்ளதே? அப்படியானால் இதுவரை பாகிஸ்தான் தீவிரவாதிகளின் செயல் ஸ்லீப்பர் செல்கள் மூலம் நடந்த தாக்குதல் என உங்களை போன்ற ஆட்கள் கூறி வந்த பொய்கள் என்னவாயிற்று. இந்த குண்டுவெடிப்புகளுக்காக கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்களின் நிலை என்ன? இந்த குற்ற செயல்களுக்கு உடந்தையாயிருந்த ஐ,பி மும்பைத்தாக்குதலை திட்டமிடவில்லை என்பதை எவ்வாறு நம்பமுடியும்?

9) மும்பை ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானிலிருந்து 384 கால்கள் வந்தன. ஆனால் அஜ்மல் கசாபிற்கு ஒரு போன் கூட வரவில்லையே அது ஏன்?

10) மும்பை ஹோட்டல்களில் நடந்த தாக்குதல்களில் அப்பாவி மக்கள் இலக்கான போது கசாபும் அவனுடைய கூட்டாளி நடத்திய தாக்குதலில் மட்டும் (போலிஸ் அதிகாரிகள் வரும் வரை மறைந்திருந்து காத்திருந்து) கர்கரே, சலாஸ்கர், காம்தி போன்ற அதிகாரிகள் தாக்கப்பட்டது ஏன்? குறிப்பாக கர்கரே இலக்காக்கப்பட்டது எவ்வாறு? ஏன்?

11) சி.எஸ்.டி காமா மருத்துவமனையில் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் ( அதாவது அஜ்மல் கசாப்) மராத்தியில் சரளமாக பேசினான் என நேரில் பார்த்த சாட்சி அவனிடம் பேசிய சாட்சி கூறியுள்ளரே. அப்படியானால் மராத்தியில் பேசிய அந்த குற்றவாளி யார்?

12) ஃபைபர் போட்டில் வந்திறங்கிய குற்றவாளிகளை நேரில் பார்த்த அனிதா உத்தய்யா என்பவர் அந்த நபர்களில் அஜ்மல் கசாப் கிடையாது என உறுதி செய்தாரே அது என்னவாயிற்று. அவருக்கு எதிராக வழக்கு போடப்பட்டதே அது ஏன்?

13) குறிப்பாக சி.எஸ்.டி இரயில் நிலையத்தில் நிறுவப்பட்டிருந்த குற்றவாளிகளை படம் பிடித்த அந்த 16 சி.சி.டி.வி கேமராக்கள் அன்றுமட்டும் வேலை செய்யவில்லையே அது ஏன்? இவ்வளவையும் செய்து விட்டு யாரோ அஜ்மல் கசாப் என்பவன் பாகிஸ்தானில் இருந்து படகில் வந்து சுட்டான் என்பதை நம்புகிறீர்களே நம்ப சொல்கிறீர்களேஅப்புறம் எதுக்கய்யா உளவுத்துறை, கடலோர காவல், கண்காணிப்பு மண்ணாங்கட்டி எல்லாம். . உங்களை பார்த்து அழுவதா சிரிப்பதா என்பது தெரியவில்லை. இன்னும் ஏகப்பட்ட கேள்விகள் உள்ளன. நண்பரே...பதில் சொல்ல தயாராகுங்கள்.

UNMAIKAL said...

சம்ஜோதா எக்ஸ்பிரஸ்:மேலும் ஒரு ஹிந்துத்துவா பயங்கரவாதி கைது!

18 Dec 2012 Samjhauta Express blast- NIA makes another hindutva terror arrest

புதுடெல்லி:2007-ஆம் ஆண்டு 68 பேரின் மரணத்திற்கு காரணமான சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான டான்சிங்கை மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கைது செய்துள்ளது.

ரகசியமாக கிடைத்த தகவலின் அடிப்படையில் டான்சிங்கை என்.ஐ.ஏ கைது செய்துள்ளது.

2008-ஆம் ஆண்டு நடந்த மலேகான் குண்டுவெடிப்பு வழக்கிலும் டான்சிங்கிற்கு தொடர்பிருப்பதாக என்.ஐ.ஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுவாமிஜி என்ற போலி பெயரில் டான்சிங் அப்பகுதியில் தங்கியிருந்துள்ளான்.

சம்ஜோதா எக்ஸ்பிரஸில் குண்டுவைத்த முக்கிய குற்றவாளியான ஹிந்துத்துவா பயங்கரவாதி ராஜேந்தர் சவுதரியை மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜையினில் இருந்து கடந்த 15-ஆம் தேதி என்.ஐ.ஏ கைது செய்திருந்தது.

இவனுக்கு ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கிலும் தொடர்பிருப்பதாக என்.ஐ.ஏ தெரிவித்தது.

ஹரியானாவில் உள்ள பஞ்ச்குலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சவுதரியை என்.ஐ.ஏ 12 தினங்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி பெற்றுள்ளது.

இவ்வழக்கில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளான கமல் சவுகான், சுவாமி அசிமானந்தா, லோகேஷ் சர்மா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பில் 68 பேர் அநியாயமாக பலியாகினர்.

SOURCE: http://www.thoothuonline.com

UNMAIKAL said...

தள்ளுபடியாகும் தீவிரவாத வழக்குகள்!

கேள்விக்குறியாகும் முஸ்லிம் இளைஞர்களின் வாழ்க்கை!



தீவிரவாத வழக்குகளிலும், குண்டுவெடிப்புகளிலும் குற்றவாளிகளாக சித்தரித்து சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிராக சாதாரண ஆதாரங்கள் கூட இல்லை

என்று கூறி நீதிமன்றங்கள் விடுதலைச் செய்யும் பொழுது போலீஸ் மற்றும் புலனாய்வு ஏஜன்சிகள் குறித்த சந்தேகம் வலுக்கிறது.

டெல்லி லஜ்பத் நகர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்ட 2 கஷ்மீர் முஸ்லிம் இளைஞர்களுக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்துச்செய்தது.

இதனைத் தொடர்ந்து போலீஸாரின் செயல்பாடுகள் குறித்த விவாதம் மீண்டும் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.

விசாரணை நீதிமன்றத்தால் மரணத் தண்டனை விதிக்கப்பட்ட முஹம்மது அலி மற்றும் மிர்ஸா நிஸார் ஆகியோரின் தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்துச் செய்து விடுதலைச்செய்தது.

சாதாரண ஆதாரங்களை கூட தாக்கல் செய்யாத போலீசாரின் நடவடிக்கையை நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.

முஸ்லிம் சமுதாயத்தினரையும், பழங்குடி-தலித் சமூகத்தினரையும் பொய் வழக்குகளில் சிக்க வைத்து அரசு கொடுமை இழைப்பதாக சிறுபான்மை அமைப்பினரும்,

மனித உரிமை அமைப்புகளும் கூறிவரும் குற்றச்சாட்டுக்கள் உண்மை என்பதையே இச்சம்பவம் நிரூபிக்கிறது.

போலீஸ், ஊடகங்களால் பரபரப்பாக பரப்புரைச் செய்யப்பட்ட தீவிரவாத-குண்டுவெடிப்புகள் தொடர்பான பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றங்கள் விடுவித்துள்ளன.

இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் குற்றம் சாட்டப்பட்டு டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவு கைது செய்த ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் பல ஆண்டுகள் சிறையில் அநியாயமாக தங்களது வாழ்க்கையை பாழாக்கிய பிறகு நீதிமன்றங்களால் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தீவிரவாத-குண்டுவெடிப்பு வழக்குகளில் ஆதாரங்களை ஆஜர்படுத்துவதில் போலீசாருக்கு ஏற்பட்ட தோல்வியே விசாரணை நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட நபர்களை உயர்நீதிமன்றங்கள் விடுவிக்க காரணம் என்று டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.எஸ்.சோதி கூறுகிறார்.

மிகவும் இயந்திரத்தனமாக விசாரணை நீதிமன்றங்கள் தீவிரவாத வழக்குகளில் தீர்ப்பு அளிப்பதாக உச்சநீதிமன்ற வழக்கறிஞரான காமினி ஜெய்ஸ்வால் கூறுகிறார்.

பல வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படுவதில்லை.

போலீஸின் கோரிக்கைகளை பரிசோதித்து ஆராயாமல் விசாரணை நீதிமன்ற நீதிபதிகள் பரிசீலிக்கின்றனர்.

இதன் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கஸ்டடி நீளுகிறது என்று ஜெஸ்வால் கூறுகிறார்.

அதுமட்டுமல்ல, குற்றம் சாட்டப்பட்டோர் மீது சுமத்தும் பல்வேறு குற்றப்பிரிவுகளும் இன்னொரு முடிவை எடுப்பதில் இருந்து நீதிபதிகளை தடுப்பதாக சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

லஜ்பத் நகர் குண்டுவெடிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பால் நீதி ஜெயித்துள்ளது என்று மகிழ்ச்சி அடைந்தாலும்,

பல வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டவர்களும்,

அவர்களது குடும்பத்தினரும் எதிர்காலத்தை குறித்து கவலை அடைந்துள்ளனர்.

14-வது வயதில் லஜ்பத் நகர் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்க வைக்கப்பட்ட மிர்ஸா நிஸார், தனது எதிர்காலத்தைக் குறித்த கவலையில் ஆழ்ந்துள்ளார்.

“நீதிமன்ற தீர்ப்புக் குறித்து மகிழ்ச்சியே! ஆனால்,தனது வாழ்க்கையின் முக்கியத்துவம் வாய்ந்த 16 ஆண்டுகளை சிறையில் கழித்த பிறகு நிஸார், இனி என்னச் செய்வார்? ” என்று அவரது மாமா மிர்ஸா முஹம்மது ஹுஸைன் கேள்வி எழுப்புகிறார்.

மிர்ஸா முஹம்மது ஹுஸைன் போன்றோரின் கேள்விக்கு உரிய பதிலை ஆட்சியாளர்களால் அளிக்க முடியுமா?

அல்லது மிர்ஸா நிஸார் போன்ற அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் சிறையில் தொலைத்த வாழ்க்கையை அவர்களுக்கு மீட்டுக் கொடுக்கத்தான் முடியுமா?

எப்பொழுது இந்த துயரங்கள் முடிவுக்கு வரும்?

SOURCE: http://www.thoothuonline.com/the-terrorist-cases-discount-questioned-muslim-youths-life/

UNMAIKAL said...

ஒரு இனவெறி-இந்துவெறி பாசிச பயங்கரவாத கிரிமினல், மாஃபியா கும்பலின் தலைவன் பால் தாக்கரே:

ஒரு பாசிஸ்ட்டின் கிரிமினல் வரலாறு !


சிவசேனா கட்சியின் தலைவரான பால்தாக்கரே கடந்த நவம்பர் 17 அன்று இயற்கையாக மரணமடைந்துவிட்டார் என்பதற்காக நாம் வருந்தத்தான் வேண்டும்.

ஒரு இனவெறி-இந்துவெறி பாசிச பயங்கரவாத கிரிமினல் மாஃபியா கும்பலின் தலைவன் தண்டிக்கப்பட்டு, பலமுறை தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்படாமல், இயற்கையாக மரணமடைந்திருப்பது வருத்தமானதுதான்.

செத்தவன் எவ்வளவு பெரிய அயோக்கியனாக இருந்தாலும், அவனைத் தெவமாக்குவதென்பது இந்துத்துவ மரபு.

அந்த வழியில் முதலாளித்துவ ஊடகங்களும் ஓட்டுக்கட்சிகளும் தாக்கரேவுக்காக ஒப்பாரி வைத்து, அவரது சிவசேனா கும்பலின் பாசிச பயங்கரவாத வெறியாட்டங்களைச் சூடு சோரணையின்றி மூடிமறைத்தன.

ஆனால், இப்பயங்கரவாத கும்பலின் இரத்தவெறி பிடித்த வரலாறை நாட்டு மக்கள் ஒருக்காலும் மறக்கவே முடியாது.

1970-களில் தாக்கரேவின் இந்துவெறியானது பிவாண்டி, ஜலகோன், மகத் ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதலாகப் பரவியது.

இந்திய நாட்டில் இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் புற்று நோயைப் போன்றவர்கள்; அவர்களை அழிக்கும் வரை நமது போராட்டம் ஓயாது” என்று வெறியூட்டிய தாக்கரே, முஸ்லிம்களுக்கு எதிராக தற்கொலைப் படையைத் திரட்டுவோம் என்று வெளிப்படையாக அறிவித்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக 1992-93இல் அயோத்தி பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர்,

மும்பையில் இந்துவெறியர்களும் சிவசேனா குண்டர்களும் முஸ்லிம்கள் மீது நடத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்கும் நரவேட்டைக்கும் மூளையாகச் செயல்பட்டவர்தான் பால்தாக்கரே என்று சிறீகிருஷ்ணா கமிசன் குற்றம் சாட்டிய போதிலும்,

மும்பையில் முஸ்லிம்களுக்கு எதிராகத் தாக்குதலை நான்தான் தொடங்கி வைத்தேன்.

நான் அறிவித்த பிறகுதான் தாக்குதல் நின்றது” என்று பகிரங்க வாக்குமூலமாக சாம்னா இதழின் தலையங்கத்தில் தாக்கரே எழுதியிருந்த போதிலும்,

இந்திய அரசு இப்பயங்கரவாதியைத் தண்டிக்காமல் அதிகாரபூர்வ பயங்கரவாதியாக வைத்துப் பாதுகாத்தது.

தாக்கரே மீதான இதர வழக்குகளும் அவரது சாம்னா நாளேட்டின் இனவெறிப் பிரச்சாரத்துக்கு எதிரான வழக்குகளும் இன்னமும் நடத்தப்படவேயில்லை.


பிரதீபா பட்டீல், பிரணாப் முகர்ஜி ஆகியோர் அரசுத் தலைவர்களான விவகாரங்களில் சிவசேனாவுடனான காங்கிரசின் கள்ளக்கூட்டு அப்பட்டமாக வெளிப்பட்டது.

பால்தாக்கரேவின் உடல் எரியூட்டப்பட்ட அதே சிவாஜி பூங்கா பகுதியில் 1970-இல் பால்தாக்கரேவையும் அவனது கூலிப்படையினரையும் மும்பை வீதிகளில் வெட்டிப் புதைப்போம்!” என்று சூளுரைத்து 25,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.

போலி கம்யூனிஸ்டுகள், போலி சோசலிஸ்டுகளின் சந்தர்ப்பவாதமும் காங்கிரசின் ஆதரவும் மட்டுமல்ல; எல்லாவற்றுக்கும் மேலாக அதிகாரவர்க்கம், போலீசு, நீதித்துறை அடங்கிய அரசு எந்திரமே இந்துவெறி போதை தலைக்கேறி பாசிச பயங்கரவாத சிவசேனா கும்பலை ஆதரித்து நின்றது.

இதனாலேயே இட்லரின் வாரிசாக சிவசேனா இத்தனை காலமும் கொட்டமடிக்க முடிந்துள்ளது.

இதுதான் பீற்றிக் கொள்ளப்படும் இந்திய போலி ஜனநாயக அரசியலமைப்பு முறையின் மகிமை.

தாக்கரே, மோடி, அத்வானி, இந்திரா, ராஜீவ், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா – என இத்தகைய பாசிஸ்டுகளும் இன்னும் பல புதிய பாசிஸ்டுகளும் உருவாவதற்கு அடிப்படையாக இருப்பது இந்தியாவின் போலி ஜனநாயக அரசியலமைப்பு முறைதான்.

எந்த அரசுப் பதவியிலும் இல்லாத, இந்துவெறி – இனவெறி பாசிச பயங்கரவாதியான பால்தாக்கரேவின் உடலுக்குத் தேசியக் கொடியைப் போர்த்தி அரசு மரியாதையுடன் இறுதி ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பிற மாநிலத்தவர்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்ட பயங்கரவாதிக்கு,

தேசிய ஒருமைப்பாட்டை உபதேசிக்கும் இந்திய அரசு தேசியக் கொடியைப் போர்த்தி மரியாதை செதது ஏன் என்பது புரியாத புதிரல்ல.

ஏனென்றால் இந்திய அரசானது இந்துத்துவ மேலாதிக்க, பாசிச சர்வாதிகார அரசு.

மண்ணின் மைந்தர் கொள்கையை வேரூன்றச் செய்து மகாராஷ்டிராவில் அசைக்க முடியாத பாரம்பரியத்தை நிலைநாட்டியவர், மக்களின் செல்வாக்குமிக்க தலைவர் பால்தாக்கரே என்று இந்துவறி-இனவெறியர்களும் ஓட்டுப் பொறுக்கி பிழைப்புவாதிகளும் அவரைப் புகழ்ந்து அஞ்சலி செலுத்தி வருந்துகிறார்கள்.

நாமும் வருந்தத்தான் வேண்டும் – ஒரு பாசிச பயங்கரவாத மாஃபியா கும்பலின் தலைவன் தண்டிக்கப்படாமல் இயற்கையாக மரணமடைந்ததற்காக.

THANKS TO: VINAVU.COM

கட்டுரை சுருக்கப்பட்டுள்ளது.

முழுக்கட்டுரையும் இங்கே

>>> பால் தாக்கரே : ஒரு பாசிஸ்ட்டின் கிரிமினல் வரலாறு ! <<<<

UNMAIKAL said...

மகாராஷ்டிரா மாநில சிறைகளில் வாடும் அப்பாவி முஸ்லிம்களை விடுவிக்கக் கோரி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாளை அம்மாநிலத்தில் மாபெரும் பேரணியை நடத்துகிறது.



சென்னை:மகாராஷ்டிரா மாநில மைனாரிடி கமிஷன் சமீபத்தில் டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயன்ஸ் (டி.ஐ.எஸ்.எஸ்.) என்னும் நிறுவனத்தாரிடம்,

மகாராஷ்டிரா மாநில சிறைச்சாலைகளில் அடைபட்டுள்ள கைதிகள் குறிப்பாக முஸ்லிம் கைதிகள் பற்றிய விவரங்களைச் சேகரித்துத் தரும் பொறுப்பை ஒப்படைத்தது.

அந்த நிறுவனத்தைச் சேர்ந்த கிரிமினாலஜி எனப்படும் குற்றச் சட்டயியல் மற்றும் நீதித்துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் விஜய் ராகவன், ரோஸ்னி நாயர் இருவரும் அந்தப் பொறுப்பை ஏற்று, ஓராண்டு காலம் ஆய்வு நடத்தி அறிக்கை அளித்தனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 15 சிறைச்சாலைகளில் உள்ள முஸ்லிம் கைதிகளில் 70 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகள்.

இவர்களில் ஆண்கள் 64.5 சதவீதம்; பெண்கள் 5.2 சதவீதம் பேராவர்.

இவர்களில் 47.4 சதவீதம் பேர் மீது மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் 3.8 சதவீதம் பேர் மீதுள்ள வழக்குகள் மட்டுமே தீர்ப்பு கூறப்படும் அளவுக்கு வந்திருக்கிறது.

மகாராஷ்டிரா சிறைச்சாலைகளில் உள்ள மொத்த கைதிகளில் முஸ்லிம் கைதிகள் மட்டுமே 65.5 சதவீதம் பேர் உள்ளனர்.

இவர்கள் யாவரும் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.

இவர்களில் 58.2 சதவீதம் பேர் ஆரம்ப பள்ளிப் படிப்பு அளவு படித்துள்ளனர்;

மீதமுள்ள 31.4 சதவீதம் பேர் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.

பெண் கைதிகளில் பெரும்பான்மையானவர்கள் வங்க தேசத்தைச் சேர்ந்தவர்கள்.

சிறையில் உள்ள 96 சதவீதம் முஸ்லிம் கைதிகளுக்கு எந்தவொரு தீவிரவாதக் கும்பலுடனோ, கிரிமினல் கும்பலுடனோ தொடர்பு எதுவும் இல்லை.

50 சதவீதம் பேருக்கு 2013ல் தண்டனை காலம் முடிகிறது.

38 சதவீதம் பேர் தாங்கள் கைதானதைத் தங்கள் குடும்பங்களுக்குத் தெரிவிக்க காவல்துறையினர் உதவவில்லை.

பல பேர், எந்தக் குற்றமும் செய்யாமல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏதாவது ஒரு குற்றத்தைப் பார்த்ததாக சாட்சி சொல்ல முன்வராததாலும்,

ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவர் குற்றம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டால்,

அவருக்குப் பதிலாக அந்தக் குடும்பத்தில் உள்ள இன்னொருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறையில் வாடும் முஸ்லிம் கைதிகளுக்கு நியாயம் வழங்கக் கோரியும்,

அப்பிராணிகளை விடுவிக்க வேண்டியும் விதர்பா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நாளை பிரமாண்டப் பேரணி நடத்தப்படுகிறது.

இந்தப் பேரணியின் இறுதியில் அம்மாநில முதல்வரிடம் இது குறித்து மனு அளிக்கவுள்ளனர்.

Read more at: http://tamil.oneindia.in/news/2012/12/18/tamilnadu-iuml-conduct-procession-maharashtra-166507.html

Unknown said...

சுவனம் சிந்தியுங்கள்.உங்கள் நாட்டையும் முன்னோர்களையும் அவமதிக்குமொரு மதம் தேவையா?

Anonymous said...

//இஸ்லாம் வளரவேண்டும் என்றால்
இஸ்லாமியர்கள் வாழவேண்டும் .//

எதை சாதிப்பதற்கு சகோ இஸ்லாம் வளர வேண்டும், அப்படிஎன்றால் மற்றவர்கள் எல்லாரும் பூ பறித்து கொண்டு இருக்க வேண்டுமா? நீங்கள் எல்லாரும் புத்திசாலிகள், உங்கள் மதம் மட்டுமே யோக்கியம், மற்றவர்கள் எல்லாம் முட்டாள்கள் அப்படிதானே? உங்கள் கூட்டதிற்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு காரணம் என்ன தெரியுமா, நீங்கள் சொன்ன 'இஸ்லாம் வளர வேண்டும்' என்பது தான். எல்லா நேரத்திலும் எல்லாரும் இதை ரசித்து கொண்டு இருக்க மாட்டார்கள் அல்லவா

வந்துவிட்டார்கள் மதத்தை பரப்புவதற்கு, என்னவோ உலகத்திற்கு பெரிதாக சாதித்துவிட்டதாக நினைப்பு

semmalai akash said...

இதில் அனைவர் கண்களிலும் மண்ணைத் தூவும் மற்றொரு செய்தி என்னவெனில், 'கசாப்' தனது தண்டனைக்கு எதிராக நமது குடியரசுத் தலைவர் அவர்களிடம் சமர்ப்பித்த 'கருணை மனுவும்' நிராகரிக்கப்பட்டு விட்டதாம்.

நிறைய புதிய செய்திகளை சொல்லிருக்கிறீர்கள் நன்றி.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

தூக்கிலிடப்பட்டது அஜ்மல் கசாப் என்பவந்தான் என்பதற்கு என்னிடம் எவ்வித ஆதாரமும் இல்லை. அந்த ஊடக-நீதிமன்ற பதிவுகள் ஏதும் எனக்கு நம்பும்படியாக இல்லை. ஆனால்... உச்ச நீதி மன்ற உடன்பாட்டுடன் ரகசியமாக இந்திய நீதி தேவதையை அன்று தூக்கில் போட்டு தொங்க விட்டு இருக்கிறார்கள் என்று எவரேனும் சொன்னால்... அதை நம்ப இந்த பதிவை நான் ஆதாரமாக ஏற்றுக்கொள்கிறேன்.

சார்வாகன் said...

சகோ சு.பி,

உமது வாக்கியங்களில் அடைப்புக்குறிக்குள் வரவேண்டிய வரிகளை நாம் தருகிறோம்.
//நான் வாழும் தேசத்தை நேசிக்கிறேன்//
அதாவது அல்லா,முகமது(சல்),இஸ்லாம் இவற்றுக்கு விரோமில்லாமல் இருக்கும் வரையில்.
***
//அவன் 2006 ஆம் ஆண்டு வறுமை தாளாமல் நேப்பாள்- என்ற நமது அண்டை நாட்டுக்கு பிழைப்புத்தேடி வந்தவன். அவன் மட்டுமல்ல இப்படி எத்தனையோ பேர் பாகிஸ்தானிலிருந்து வயிறு பிழைக்க நேப்பாளுக்கு வந்திருக்கின்றார்கள்.///

பாகிஸ்தானை விட நேபாளம் வசதியானதா?? சொல்வதை பொருந்த சொல்லுங்கள். பாகிஸ்தானில் குழப்பம் வன்முறை மூமின் நாடு என்பதால் இயல்பான,வழக்கமான ஒன்று!!இத்னால் வந்தான் என்றால் ஒருத்தமாக இருக்கும்.

பாகிஸ்தான் அரசு இத்னை சொல்லவில்லை என்பது ஏன்?
உங்களுக்கு தெரிவது அவர்களுக்கு தெரியாதா??

கசாப் பகிஸ்தானி என்பதையே அந்நாடு ஒத்துக் கொள்ளவில்லை!!
***
//இந்தியாவிற்கும் நேப்பாளத்திற்கும் Deportation Agreement என்று சொல்லக் கூடிய தேவைப்படும் நபர்களை அனுப்பித் தந்திட வேண்டும் என்ற ஒப்பந்தம் இருக்கின்றது.//
இது குறித்த விவரம் தேவை. ஏன் இதில் தொடர்பு உடைய அபு ஜிந்தாலை சவுதி அரசு இந்தியாவிடம் கையளித்தது பற்றி எதுவும் சொல்லவில்லை?? இப்பதிவில் சொல்லபடும் கசாப் பற்றிய விவரங்கள் அனைத்தும் ஜியோ டிவி செய்தியின் அடிப்படையில்தானே!!!
**http://www.geo.tv/12-15-2008/30723.htm
தாவூத் இபராஹிம் கூட பாகிஸ்தானில் இருக்கின்றான். அவனும் இறந்து விட்டால் கசாப் போல் நல்லவன் ஆகிவிடுவான்.
பாகிஸ்தான் வக்கீல் பாரூக் சொல்வது சு.பிக்கு சரியாக படுகிறது.
இது பற்றி அலசி நாம் ஒரு பதிவு இடுவோம்!!!

நன்றி!!

suvanappiriyan said...

சகோ சார்வாகன்!

//தாவூத் இபராஹிம் கூட பாகிஸ்தானில் இருக்கின்றான். அவனும் இறந்து விட்டால் கசாப் போல் நல்லவன் ஆகிவிடுவான்.
பாகிஸ்தான் வக்கீல் பாரூக் சொல்வது சு.பிக்கு சரியாக படுகிறது.
இது பற்றி அலசி நாம் ஒரு பதிவு இடுவோம்!!!//

நான் முன்பே கூறி விட்டேன். அஜ்மல் கசாப் பாகிஸ்தான் அரசோடு சேர்ந்து இந்த படுபாதக செயலை செய்திருந்தால் அவனை மக்கள் மத்தியில் பகிரங்கமாக தூக்கில் தொங்க விட வேண்டும். அதுதான் அவனுக்கு சரியான தண்டனை.

ஆனால் இந்த கட்டுரையில் கேட்கப்பட்ட நியாயமான கேள்விகளுக்கு நீங்கள் எந்த பதிலையும் தரவில்லையே. பிறந்த நாட்டின் மீது உள்ள பற்று எவருக்கும் சொல்லி வருவதில்லை. தாய் நாட்டு பற்றானது எனது ரத்தத்திலேயே ஊறிய ஒன்று. அந்த பாசத்தினால்தன் எனது நாடு சீர்கெட்டு சென்று விடக் கூடாது என்பதற்காக இந்த செய்தியை பகிர்ந்தேன். நடு நிலையோடு இந்த கட்டுரையை சீர் தூக்கி பாருங்கள். இதில் கேட்கப்பட்ட சந்தேகங்களுக்கு உங்களின் பதில் என்ன?

suvanappiriyan said...

சகோ முஹம்மது ஆஷிக்!

//தூக்கிலிடப்பட்டது அஜ்மல் கசாப் என்பவந்தான் என்பதற்கு என்னிடம் எவ்வித ஆதாரமும் இல்லை. அந்த ஊடக-நீதிமன்ற பதிவுகள் ஏதும் எனக்கு நம்பும்படியாக இல்லை. ஆனால்... உச்ச நீதி மன்ற உடன்பாட்டுடன் ரகசியமாக இந்திய நீதி தேவதையை அன்று தூக்கில் போட்டு தொங்க விட்டு இருக்கிறார்கள் என்று எவரேனும் சொன்னால்... அதை நம்ப இந்த பதிவை நான் ஆதாரமாக ஏற்றுக்கொள்கிறேன்.//

இந்த கட்டுரையை படித்தவுடன் மனம் கனத்தது. இவை அனைத்தும் உண்மையாக இருந்தால் நமது நீதி மன்றத்தின் மீதும், நமது காவல் துறையின் மீதும் எப்படி ஒரு குடிமகன் மதிப்பு வைக்க முடியும்?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ செம்மலை ஆகாஷ்!

//இதில் அனைவர் கண்களிலும் மண்ணைத் தூவும் மற்றொரு செய்தி என்னவெனில், 'கசாப்' தனது தண்டனைக்கு எதிராக நமது குடியரசுத் தலைவர் அவர்களிடம் சமர்ப்பித்த 'கருணை மனுவும்' நிராகரிக்கப்பட்டு விட்டதாம்.//

அஜ்மல் கசாப் உண்மையிலேயே நமது நாட்டு அப்பாவி மக்களையும், காவல் துறையினரையும் கொன்றிருந்தால் அவன் தூக்கில் இடப்பட வேண்டியவன் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இந்த கட்டுரையில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்திற்கும் இதுவரை அரசு தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை. சமீபத்தில் வந்த பாகிஸ்தான் அமைச்சர் மாலிக் கூட நமது அரசிடம் ஆதாரத்தை கேட்டிருந்தார். அதற்கும் எந்த பதிலும் இல்லை. மிகப் பெரிய ஜனநாயக நாட்டுக்கு இது அழகல்ல அல்லவா!

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

//மகாராஷ்டிரா மாநில சிறைகளில் வாடும் அப்பாவி முஸ்லிம்களை விடுவிக்கக் கோரி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாளை அம்மாநிலத்தில் மாபெரும் பேரணியை நடத்துகிறது.//

சிறந்த சுட்டிகளைப் பகிர்ந்தமைக்கும் வருகைக்கும் நன்றி!

Anonymous said...

அன்புச்சகோதரர் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்!(வரஹ்)
நலமும்,வளமும் பெற்று விளங்க எல்லாம் வல்ல இறைவனிடம் துவா செய்கிறேன்.

உங்களது பின்னூட்டங்களை திண்ணை தளத்தில் படித்து மகிழ்ந்தேன்.இஸ்லாத்தை குறி வைத்து தாக்கும் நான்கு பேர் திண்ணையில்உள்ளனர். .அவைகளின் பற்களை பல இடங்களில் பிடுங்கி விட்டீர்கள்.இருந்தும் அவை தொடர்ந்து சப்தமிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.சரியான பதிலடிமூலம் இஸ்லாத்தின் மாண்புகளை நடு நிலையாளர்களுக்கு எடுத்து வைக்கும் கடமையை சரியாக செய்கிறீர்கள்.

அல்ஹம்துலில்லாஹ்!காவ்யாவும் பாராட்டியுள்ளார்.
தற்பொழுது கஸாப் விசயத்தில், வியாசன் என்னும் அமெரிக்காவில் உள்ள ஈழத்தமிழன் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் முஸ்லிம்களை கடித்து குதறுவதே வேலை. தீவிர சைவ வெள்ளாளன். சீமான் ஆதரவாளன்.கருத்தை திசை திருப்புவதில் கில்லாடி. அவருக்கும் தக்க பதிலடி கொடுக்கவும்.

வஸ்ஸலாம்.

suvanappiriyan said...

சகோ அனானி! வஅலைக்கும் சலாம்!

//உங்களது பின்னூட்டங்களை திண்ணை தளத்தில் படித்து மகிழ்ந்தேன்.இஸ்லாத்தை குறி வைத்து தாக்கும் நான்கு பேர் திண்ணையில்உள்ளனர். .அவைகளின் பற்களை பல இடங்களில் பிடுங்கி விட்டீர்கள்.இருந்தும் அவை தொடர்ந்து சப்தமிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.சரியான பதிலடிமூலம் இஸ்லாத்தின் மாண்புகளை நடு நிலையாளர்களுக்கு எடுத்து வைக்கும் கடமையை சரியாக செய்கிறீர்கள்.

அல்ஹம்துலில்லாஹ்!காவ்யாவும் பாராட்டியுள்ளார்.//

எல்லாப் புகழும் இறைவனுக்கே! காவ்யாவும் பிரமாதமாக பதிலளித்துக் கொண்டுள்ளார். நேரம் கிடைக்கும் போது கீற்று பக்கமும் வருகிறேன்.

UNMAIKAL said...

டெல்லி பலாத்காரம்... லோக்சபாவில் சுஷ்மா ஆவேசம், கண்ணீர் விட்டு அழுத ஜெயா பச்சன்

டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கொடியவர்களுக்கு தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும்.

அவர்களை தூக்கில் தொங்க விட வேண்டும் என்று லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆவேசமாக பேசினார்.

ராஜ்யசபாவில் இதுதொடர்பாக நடந்த விவாதத்தின்போது சோகம் தாங்க முடியாமல் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் கண்ணீர் விட்டு அழுதார்.

உறுப்பினர்கள் அனைவரும் கடும் ஆவேசத்துடன் பேசினர்.

பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசுகையில், இது ஒரு சாதாரண சம்பவம் அல்ல.

இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தூக்கில் தொங்க விட வேண்டும். அவர்கள் யாருமே உயிருடன் இருக்கக் கூடாது.

மறுபடியும் வாழ அவர்களுக்கு வாய்ப்பே தரக் கூடாது என்றார் சுஷ்மா ஆவேசமாக.

கண்ணீர் விட்டு அழுத ஜெயா பச்சன் ராஜ்யசபாவில் ஜெயா பச்சன் பேசுகையில், கண்ணீர் விட்டு அழுதார்.

அவர் கூறுகையில், இந்த நாடாளுமன்றத்தில் உட்கார எனக்கு அவமானமாக உள்ளது.

எல்லாம் இருக்கட்டும், இந்த கடும் பாதிப்பை சந்தித்துள்ள குடும்பத்துக்கு இந்த அரசோ அல்லது டெல்லி அரசோ முதலில் ஒரு இரங்கலைத் தெரிவித்ததா, வருத்தம் தெரிவித்ததா.

இந்த அவமானகரமான செயலுக்காக வருந்துகிறோம் என்று எந்த அரசாவது பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதா?.

Read more at: http://tamil.oneindia.in/news/2012/12/18/india-delhi-rape-jaya-bachchan-breaks-down-rs-166508.html

இளம் மருத்துவ மாணவியை பலாத்காரம் செய்தவர்களை தூக்கில் போட வேண்டும் -சுஷ்மா சுவராஜ் !!! - Adirai Iqbal

பத்திரிகைகளில் ஒரு செய்தி :

டெல்லி ஓடும் பேருந்தில் இளம் மருத்துவ மாணவியை பலாத்காரம் செய்த கொடியவர்களுக்கு மரணத்தண்டனை விதிக்க வேண்டு என்று சுஷ்மா சுவராஜ் ஆவேசமாக பேசினார் .

ராஜ்ய சபாவில் இது தொடர்பாக நடந்த விவாதத்தின்போது அமிதாபச்சனின் மனைவி ஜெயா பச்சன் கண்ணீர்விட்டு அழுதார்.

கண்டிப்பாக இதில் நமக்கு எந்தவித மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை.

ஆனால் அதை சொல்வதற்கு இவருக்கு என்ன அருகதை உள்ளது.

ஆர்.எஸ்.எஸ், வி .ஹெச்.பி , பஜ்ரங்தள் போன்ற வெறி நாய்களால் முஸ்லிம் பெண்களும் , தலித் பெண்களும் கற்பழிக்கப்ப்படும்போது என்ன செய்துகொண்டிருந்தார்.

குஜராத்திலே முஸ்லிம் பெண்கள் கற்பழித்து கொல்லப்படும்போது . நரமாமிச மோடி ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர் வினை உண்டு என்று சொல்லும்போது அதனை ரசித்துக்கொண்டிருந்தார்.

சாம்னாவில் பாசிஸ்ட் கிரிமினல் பால் தாக்கரே அச்செயல்கள் (கற்பழிப்பு, கொலை) தேசப் பக்தியின் வெளிப்பாடு என எழுதும்போது அதனை மௌனமாக ஆதரித்துக்கொண்டிருந்தார் .

தெஹல்காவில் ஒவ்வொரு முஸ்லிம்களையும் எவ்வாறு கற்பழித்தோம் எப்படி கொன்றோம் என வெறி நாய்கள் பேட்டி கொடுக்கும்போது

இந்த ஜெயா பச்சன்களின் கண்ணீர்கள் வற்றி இருந்தனவா?.


எங்களுக்குத்தான் தெரியும் அதன் வழியும் வேதனையும் .

நிச்சயமாக அந்த இளம் மருத்துவ மாணவியை சீரழித்தவர்களுக்கு மரண தண்டனை கொடுத்தே ஆகவேண்டும் .

அதேபோல் அந்த முஸ்லிம் பெண்களையும் , தலித் பெண்களையும் கற்பழித்து கொன்ற பாபு பஜ்ரங்கி போன்ற ஆர்.எஸ்.எஸ், வி .ஹெச்.பி , பஜ்ரங்தள் போன்ற வெறி நாய்களுக்கும் மரணத்தண்டனை கிடைக்க வழி வகைகள் செய்ய வேண்டும் .


Posted by Adirai Iqbal in http://samuthayaarangam.blogspot.com