Followers

Tuesday, December 25, 2012

சவுதியில் பெண்களின் உண்மையான முன்னேற்றம்!


சவுதி இளவரசி ரிமா பின்த் தலால் 'உங்களின் அழகு' என்ற தலைப்பில் ஒரு கண்காட்சியை நடசத்திர ஹோட்டல் ஒன்றில் திறந்து வைத்தார். மூன்று நாடகள் நடந்த இந்த நிகழ்ச்சியில் திறமை மிக்க பெண் டிசைனர்கள், ஓவியக் கலை வல்லுனர்கள், என்று பலதரப்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். பெண்கள் மேல் ஆடை தயாரிப்பு, நகைகள் டிசைன் செய்தல், வாசனை திரவியங்கள் உருவாக்குதல்போன்ற தொழில்களில் பல ஆண்டுகள் பரிச்சயம் உள்ள பெண்மணிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களின் திறமையை வெளிக் காட்டினர். சவுதி நோய் தடுப்பு கழகமும், குர்ஆன் மனனமிடுதல் சம்பந்தமான குழுமமும் இணைந்து இந்த கண்காட்சியை நடத்தின.

இளவரசி ரிமா தனது உரையில் 'மன்னர் அப்துல்லா பெண்கள் முன்னேற்றத்துக்கும் இது போன்ற பெண்களுக்கென்றே பிரத்யேகமான கண்காட்சி நடைபெறுவதற்கும் மிகுந்த ஒத்துழைப்பு தருவதாக குறிப்பிட்டார்.

இளவரசி நூரா தனது பேச்சில் 'சவுதி பெண்கள் தங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய ஆபரணத் துறையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். வருங்காலத்தில் இந்த துறைக்கு மிகுந்த வரவேற்பு வரும் வாய்ப்பு உள்ளது. இந்த கண்காட்சி சிறப்பாக அமைய ஒத்துழைப்பு நல்கிய சவுதி பெண்கள் 15 பேரையும் நான் பாராட்டுகிறேன். ஒத்துழைப்பு நல்கி வரும் மன்னர் அப்துல்லாவுக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்' என்றார்.

-------------------------------------------------சவுதி பெண்களின் வேலை வாய்ப்பு:

சவுதி பிஆர்ஜேயின் இயக்குனர் ரோலா பாஸ்மத் தனது அறிக்கையில் 'சவுதி பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் போன வருடத்தோடு ஒப்பிடும் போது 300 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறுகிறார். போன வருடம் 2011 ஆம் ஆண்டு பிஆர்ஜே 929 வேலை வாய்ப்புகளை பெண்களுக்கு வழங்கியது. அதே போல் மறு வருடம் 2012 ஆம் ஆண்டு 2922 வேலை வாய்ப்புகளை பெண்களுக்கு வழங்கி சாதனை படைத்துள்ளது' என்கிறார்.

பல கம்பெனிகள் சவுதி பெண்களை வேலைக்கு அமர்த்த ஆர்வமுடன் உள்ளனர். சவுதி பெண்கள் தங்களுக்கு தரப்படும் வேலைகளை மிகவும் திறம்பட செய்து வருவதாகவும், இவர்களின் வேலைகளில் தாங்கள் முழு திருப்தி கொள்வதாகவும் பல கம்பெனிகள் எங்களுக்கு தகவல் தந்த வண்ணம் உள்ளனர். இது ஒரு மாறுதலான மற்றும் மகிழ்ச்சிக்குரிய செய்தி என்கிறார் பாஸ்மத்.

இந்த வேலைகள் அனைத்தும் பெண்களாலேயே நிர்வகிக்கப்படுகிறது. ஆண் பெண் கலப்பு இங்கு தேவையில்லாமல் தவிர்க்கப்படுகிறது. அவசிய தேவைகள் இருந்தால் மட்டுமே ஆண்களை இவர்கள் சந்திக்கின்றனர். அதுவும் கண்ணியமான புர்காவோடு. இதனால் இவர்களின் வேலைகளில் எந்த சிக்கலும் இல்லை. பாலியல் துன்புறுத்தல் இல்லை. வேலையும் ஒழுங்காக நடைபெறுகிறது.

பெண்களின் முன்னேற்றம் என்பது இந்த வகையில் இருக்க வேண்டும். பெண் விடுதலை என்ற பெயரில் ஆபாச உடைகளை உடுத்திக் கொண்டு கண்ட பாய் பிரண்டுகளோடு சுற்றுவதும், இரவு வெகுநேரமாகியும் காதலனோடு சினிமாவுக்கு செல்வதும்தான் பெண் விடுதலை என்று நம் நாட்டில் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இப்படி இவர்கள் சினிமாக்களைப் பார்த்து அதை வாழ்விலும் கடை பிடிக்க ஆரம்பிப்பதால் முடிவில் காமுகர்களால் வஞசிக்கப்படுகின்றனர். பிறகு அந்த பெண்ணை காதலனோ சமூகமோ திரும்பிக் கூட பார்ப்பதில்லை. தங்களுக்கு தாங்களே ஏன் இவ்வாறு சிரமங்களை பெண்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்? அரை குறை ஆடைகளோடு வெளியில் வந்து நீங்கள் சாதித்தது என்ன? தவறு செய்யாதவனைக் கூட உங்களின் உடைகள் அவனை தவறு செய்ய தூண்டுகின்றன.

எனவே உங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆபாச உடைகளை தவிர்த்து கண்ணியமான உடைகளில் வர முயற்சிப்பீர்களாக!..தேவையற்ற பிரச்னைகள் உருவாவதையும் தடுப்பீர்களாக!

20 comments:

mohamed said...

சலாம் சகோ சுவனப்பிரியன்,

மாஷா அல்லாஹ் நல்ல ஆக்கம் சகோ.உண்மை என்னவென்றால் இன்றைய உலகத்தில் பெண்களின் முன்னேற்றம் எனபது அவர்கள் அணியும் ஆடையை பொறுத்துதான் கணிக்கப் படுகிறது என்ற விசயம் தான் வேதனைக்குரியது.

vijay lankan said...

மிக்க நன்று ....

சுவனப் பிரியன் said...

சலாம் சகோ முஹம்மத்!

//மாஷா அல்லாஹ் நல்ல ஆக்கம் சகோ.உண்மை என்னவென்றால் இன்றைய உலகத்தில் பெண்களின் முன்னேற்றம் எனபது அவர்கள் அணியும் ஆடையை பொறுத்துதான் கணிக்கப் படுகிறது என்ற விசயம் தான் வேதனைக்குரியது.//

பெண்களின் உரிமை என்ன? அவர்களின் சுதந்திரம் என்ன? என்பதில் ஏற்பட்ட குளறுபடிகளே சமீபததிய விரும்பத்தகாத நிகழ்வுகள்.

சுவனப் பிரியன் said...

சகோ விஜய்!

//மிக்க நன்று ....//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

jaisankar jaganathan said...

கசாப்பை சப்போட் பண்ணின நீங்களா இந்த மாதிரி எழுதுறது. நம்ப முடிய வில்லையே

ராவணன் said...

அண்ணாச்சி.....

உங்கள் அன்னை....உங்களது இத்தாலிய கிருத்துவ அன்னையின் பாதுகாப்பில் இருக்கும் இந்திய நாடு நன்றாகவே உள்ளது.

ராவணன் said...

வணக்கம் அண்ணாச்சி....

பாஷா ரஜினிகாந்த் ...நல்ல பதிவு அண்ணாச்சி.

நமது ஒரே இறைவன் முனியாண்டிசாமிக்குத் தெரியாதா?

சுவனப் பிரியன் said...

//கசாப்பை சப்போட் பண்ணின நீங்களா இந்த மாதிரி எழுதுறது. நம்ப முடிய வில்லையே //

கசாபை நான் சப்போர்ட் பண்ணவில்லை. அவனது கைதில் உள்ள சந்தேகங்களையும் மர்மங்களையும் தான் பட்டியலிட்டேன். கசாப் உண்மையிலேயே குற்றவாளி என்றால் அவனை பலர் முன்னிலும் தூக்கிலிடட்டும் என்று நான் எழுதியதை பார்க்கவில்லையா?

சுவனப் பிரியன் said...

ராவணன்!

//உங்கள் அன்னை....உங்களது இத்தாலிய கிருத்துவ அன்னையின் பாதுகாப்பில் இருக்கும் இந்திய நாடு நன்றாகவே உள்ளது.//

இந்துத்வாவாதிகள் ஆட்சியில் அமர்ந்து இந்திய ரத்தகளரியாக ஆவதற்கு பதில் சோனியா காந்தியே இருந்து விட்டு போகட்டும்.

//பாஷா ரஜினிகாந்த் ...நல்ல பதிவு அண்ணாச்சி.

நமது ஒரே இறைவன் முனியாண்டிசாமிக்குத் தெரியாதா?//

உங்க முனியாண்டி சாமியை ஒரே மதத்துக்குள் இருக்கும் பார்பனர்கள் கடவுளாக ஏற்றுக் கொள்வார்களா? கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்! :-)

Anonymous said...

சி. ஜெயபாரதன் says:
December 26, 2012 at 2:18 pm

http://jayabarathan.wordpress.com/is-there-a-fate
[ஊழிற் பெரு வலி யாதுள ?]

பிரபஞ்சத்தை ஒரு பிரம்மாண்டமான நூலகமாக ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் நோக்குகிறார். அதன் விண்வெளியில் உள்ள கரும்பிண்டம், கருஞ்சக்தி, கருந்துளைகள், கோடான கோடி காலக்ஸி ஒளிமந்தைகள், பில்லியன் கணக்கான பரிதி மண்டலங்கள், அண்டக் கோள்கள், துணைக் கோள்கள், அவற்றைப் பிணைத்துள்ள ஈர்ப்பு விசைகள், விலக்கு விசைகள் அத்தனையும் நூலகத்தில் முன்னமே எழுதப் பட்டு வரிகையாக அடுக்கப்பட்டுள்ளன ! அந்த நூல்களை யார் எழுதி வைத்தார், எப்போது எழுதி வைத்தார், ஏன் எழுதி வைத்தார், எப்படி எழுதி வைத்தார் எந்த விதிகளைக் கையாண்டார் என்பதை அறிந்து கொள்ளவே நான் முனைகிறேன்.

பிரபஞ்சம் ஓர் உன்னத சக்தியான கடவுளால் படைக்கப் படவில்லை. அது தானாக உருவானது என்று விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறுவது முதலில் ஒரு விஞ்ஞான முடிவில்லை. அப்படி மேலாகச் சொல்லித் தப்பிக் கொள்வது ஒரு விஞ்ஞான மேதையின் இயலாமையைத்தான் குறிக்கிறது.

காரண-விளைவு நியதியைத் (Cause & Effect Theory) தர்க்க ரீதியாக ஒப்புக் கொள்ளும் உலக விஞ்ஞானிகள், பிரபஞ்சம் தானாக உருவானது, தானாக இயங்குவது, தானாக மாறுவது, தானாகச் செம்மைப் படுத்துகிறது என்று ஆதாரமின்றிக் கூறுவதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது.

சி. ஜெயபாரதன்.

சுவனப் பிரியன் said...


சார்வாகன்!

இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை ஏன் அமுல்படுத்துவதில்லை என்ற அருமையான கேள்வியையும் வைத்துள்ளீர்கள். தற்போதய சட்டத்தை வைத்தே முஸ்லிம்களை எந்த அளவு பாடாய் படுத்துகிறது காவல் துறை என்பதை அறிவோம். இந்துத்வா வாதிகள் குண்டு வைத்து முஸ்லிம்கள் இறக்கிறார்கள். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களையே கைது செய்து கொண்டு போகும் பாசிச காவல் துறையை நாம் இத்தனை வருடங்களாக பார்த்து வருகிறோம்.

இன்னும் இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் முஸ்லிம்களுக்கு மட்டும் அமுல்படுத்தப் பட்டால் உங்கள் ஆட்கள் இதை வைத்தே ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் ஒழித்து விடுவார்கள். எனவே விகிதாச்சார அடிப்படையில் அரசு உத்தியோகங்களில், காவல் துறையில், நீதி மன்றங்களில், பாராளுமன்றம், சட்ட மன்றங்களில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநித்துவம் கிடைத்தவுடன் தாராளமாக முஸ்லிம்களுக்கு குற்றவியல் சட்டங்களை அமுல்படுத்தலாம். அந்த சட்டங்கள் உங்களைப் பொன்றவர்களையும் கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில் குற்ற செயல் செய்த இந்து வெளியில் சுதந்திரமாக உலாவுவான், அதே குற்றத்தை செய்த முஸ்லிம் தண்டனையை அனுபவிப்பான். இந்த சிக்கல் தீர குற்றவியல் சட்டங்கள் எல்லோருக்கும் பொதுவாகவே இருந்தால்தான் நமது நாட்டுக்கு சரியாகும்

மற்றபடி அருமையான ஒரு தீர்வை நமது நாட்டுக்கு சொல்லியுள்ள சகோ ஆனந்தை வாழ்த்துகிறேன்..

Anonymous said...

புதுடெல்லி: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷியை, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு குற்றவாளியான ஹிந்துத்துவா பயங்கரவாதி ராஜேந்தர் சவுத்ரி கொலைச்செய்ததாக கருதப்படுகிறது.

2007-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுனில் ஜோஷி மர்மமான முறையில் கொலைச் செய்யப்பட்டான். இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளி அண்மையில் மத்திய பிரதேச மாநிலத்தில் வைத்து கைதுச் செய்யப்பட்ட ராஜேந்தர் சவுத்ரி என்று என்.ஐ.ஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தங்களின் ரகசியங்கள் வெளியுலகிற்கு தெரியாமலிருக்க சுனில் ஜோஷியை ஹிந்துத்துவா சக்திகள் கொலைச் செய்துள்ளனர்.

2006-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிகழ்ந்த மாலேகான் குண்டுவெடிப்பு, 2007 பெப்ருவரி மாதம் நிகழ்ந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, 2008-ஆம் ஆண்டு நிகழ்ந்த மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு, 2007 அக்டோபரில் அஜ்மீர் தர்காவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு, 2008-ஆம் ஆண்டு மலேகானிலும், மொடாஸாவிலும் நிகழ்ந்த குண்டுவெடிப்பு ஆகியவற்றை சதித்திட்டம் தீட்டியதில் ஜோஷி முக்கிய பங்கு வகித்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதில் அஜ்மீர் தர்காவில் குண்டுவைப்பதற்கான திட்டம் வெற்றிப் பெற்றதில் ஜோஷிக்கும் அளவுக்கதிகமான தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது.இவ்வழக்கில் போலீசார், அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைதுச்செய்ததும், மக்களிடையே முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வு வளர்ந்ததும், ஜோஷிக்கு சந்தோசத்தை ஏற்படுத்தியது.தங்களின் பின்னால் புலனாய்வு ஏஜன்சிகள் வராததும், சதித்திட்டங்கள் தீட்டுவது, இயக்கத்தை வழி நடத்துவது ஆகியவற்றில் ஜோஷிக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியதோடு காரியங்களை எளிதாக கையாளவும் வழிவகுத்தது. இதனைத்தொடர்ந்து பலரிடம் ரகசியங்களை ஜோஷி பகிர்ந்துகொண்டுள்ளான். இதனை இயக்கத்தின் இதர தீவிரவாதிகள் அச்சுறுத்தலாககண்டனர். இதன் மூலம் ஜோஷியை கொலைச்செய்வதை தவிர அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை.

மத்தியபிரதேச மாநிலம் மோவ் பிரதேசத்தில் ஜோஷி கொலைச்செய்யப்பட்டான். இதைப்போலவே பல்வேறு கொலைகள் நடந்துள்ளன.இதனைக்குறித்தும் என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது. தற்போது சம்ஜோதா எக்ஸ்பிரஸ்,மக்கா மஸ்ஜித், மலேகான் குண்டுவெடிப்புகளில் தனது பங்கினை ராஜேந்தர்சவுத்ரி ஒப்புக்கொண்டுள்ளான். சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் வைக்கப்பட்ட நான்கு குண்டுகளில் ஒன்றை வைத்தவன் ராஜேந்தர் சவுத்ரி ஆவான்,

http://dinaex.blogspot.com/2012/12/blog-post_26.html

Anonymous said...

வதோதரா: உறவினரால் கற்பழிக்கப்பட்ட 2 வயது குழந்தை இன்று பரிதாபமாக பலியானது. குஜராத் மாவட்டம் வதோதரா பகுதியில், நேபாளத்தை சேர்ந்தவர்களின் 2 வயது குழந்தை, கற்பழிக்கப்பட்டு புதரில் வீசப்பட்டு கிடந்தது. இந்த சம்பவத்துக்கு, அக்குழந்தையின் தாய்மாமன் தான் காரணம் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே கடத்தல் மற்றும் கற்பழிப்புதொடர்பான வழக்குகள் உள்ளன. தற்போது கொலை வழக்கும் சேர்ந்துள்ளது. இந்நிலையில் புதரில் கிடந்த குழந்தையை கண்டெடுத்த பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். இன்று சிகிச்சை பலனின்றி அக்குழந்தை பலியானது. சம்பவத்துக்கு காரணமானவனுக்கு தூக்கு தண்டணை வழங்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Yusuf Ismath said...

///பல கம்பெனிகள் சவுதி பெண்களை வேலைக்கு அமர்த்த ஆர்வமுடன் உள்ளனர். சவுதி பெண்கள் தங்களுக்கு தரப்படும் வேலைகளை மிகவும் திறம்பட செய்து வருவதாகவும், இவர்களின் வேலைகளில் தாங்கள் முழு திருப்தி கொள்வதாகவும் பல கம்பெனிகள் எங்களுக்கு தகவல் தந்த வண்ணம் உள்ளனர்///

கம்பனிகள் என்பன சவூதி கம்பனிகளா அல்லது அமெரிக்க, ஐரோப்பிய கம்பனிகளா?

அமெரிக்க, ஐரோப்பிய கம்பனிகள் என்றால் நாறிப் போகுமே?

UNMAIKAL said...

சிதம்பரத்தில் தலித் பெண் கற்பழித்துப் படுகொலை

- வழக்கை போலீஸ் மாற்றி பதிவு செய்ததால் போராட்டம்!

Posted by: Shankar Updated: Wednesday, December 26, 2012, 15:00 [IST]

சிதம்பரம்: தலித் இன இளம் பெண்ணை சிதம்பரம் அருகே முட்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் கற்பழித்துக் கொன்றுள்ளனர்.

ஆனால் போலீசார் இதனை மாடியிலிருந்து குதித்து தற்கொலை என்று பதிவு செய்துள்ளதால் விடுதலைச் சிறுத்தைகள் போராட்டத்தில் களமிறங்கியுள்ளது.

சிதம்பரம் அருகே உள்ள முட்லூர் என்ற இடத்திற்கு அருகில் உள்ள சம்பந்தம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தியா (வயது 20).

ஸ்டுடியோ ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று மாலை 4 மணிக்கு அந்தப் பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பல் அந்த ஸ்டுடியோவில் வைத்தே கற்பழித்துள்ளது.

பின்னர் அந்தப் பெண்ணை கடுமையாகத் தாக்கியதோடு, மூன்றாவது மாடியிலிருந்து கீழே தள்ளி கொன்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

அந்தப் பெண் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் கடலூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

உயிருக்குப் போராடிய நிலையிலும், தன்னைக் கெடுத்தவர்கள் மற்றும் தள்ளயவர்களை அடையாளம் காட்ட தயார் என்று சந்தியா போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த பெண் மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்துக்கொண்டதாக போலீசார் வழக்குப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

வன்புணர்ச்சிச் செய்து படுகொலை செய்யப்பட்ட தலித் பெண்ணுக்கு நீதி கேட்டு விடுதலைச் சிறுத்தைகள் இப்போது சாலை மறியல் உள்ள போராட்டங்களில் இறங்கியுள்ளது.

சந்தியாவைக் கெடுத்த மூன்று பேரும் வேறு சாதியைச் சேர்ந்தவர்கள்.

டெல்லியில் ஒரு பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு நாடே கொந்தளித்து வரும் நிலையில், தமிழகத்தில் அதற்குப் பிறகு தொடர்ந்து நான்காவது கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

போலீசோ அதை தற்கொலை என மாற்றுகிறது.

ஊடகங்களும் கண்டு கொள்ளவே இல்லை. என்னதான் நடக்கிறது?

Read more at: http://tamil.oneindia.in/news/2012/12/26/tamilnadu-dalit-girl-gang-raped-murdered-at-chidambaram-166922.html

UNMAIKAL said...

டெல்லியில் மேலும் ஒரு கொடுமை...

42 வயது பெண் கூட்டாக கற்பழிப்பு.. குற்றவாளிகள் ஓட்டம்!


Posted by: Shankar Published: Thursday, December 27, 2012, 9:45 [IST]


டெல்லி: டெல்லியில் மேலும் ஒரு கற்பழிப்பு சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

இந்த முறை 42 வயது பெண் ஒருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் கற்பழித்துவிட்டு, தலைமறைவாகிவிட்டது.

தெற்கு டெல்லியில் புதன்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஜெய்ப்பூரைச் சேர்ந்த அந்தப் பெண், பிருந்தாவனிலிருந்து டெல்லிக்கு வந்துள்ளார்.

அப்போது அவருக்குத் தெரிந்து ஒருவர், மேலும் இருவருடன் அந்தப் பெண்ணை தெற்கு டெல்லியில் உள்ள கல்காஜி எனும் இடத்தில் சந்தித்துள்ளார்.

இரவு நேரம், அருகில் யாருமில்லாத இடம் என்பதால், அந்தப் பெண்ணை மூவரும் அங்கேயே கற்பழித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

மயக்க நிலையில் இருந்த அந்தப் பெண்ணை கல்காஜியில் விட்டுவிட்டு மூவரும் ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

மயக்கம் தெளிந்த அந்தப் பெண் உடனடியாக தனக்குத் தெரிந்த ஒரு நண்பரை அழைத்து நடந்ததைத் தெரிவித்துள்ளார்.

உடனடியாக தெற்கு டெல்லி போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கற்பழித்தவர்கள் மூவரும் தப்பிவிட்டனர். ஆனால் விடிவதற்குள் ஒருவனைப் பிடித்துவிட்டதாக போலீஸ் தெரிவித்தாலும், இன்னும் அதை உறுதி செய்யவில்லை.

அடுத்தடுத்து கற்பழிப்பு சம்பவங்கள் அரங்கேறி வருவது நாட்டையே அதிரவைத்துள்ளது.

Read more at: http://tamil.oneindia.in/news/2012/12/27/india-delhi-now-42-year-old-jaipur-woman-gangraped-166946.html

சுவனப் பிரியன் said...

சகோ யூசுஃப் இஸ்மத்!

//கம்பனிகள் என்பன சவூதி கம்பனிகளா அல்லது அமெரிக்க, ஐரோப்பிய கம்பனிகளா?

அமெரிக்க, ஐரோப்பிய கம்பனிகள் என்றால் நாறிப் போகுமே?//

சவுதியில் பெண்கள் வேலைக்கு செல்வது அனேகமாக கணவனின் அனுமதியோடுதான் நடக்கும். சவுதி பெண்களை தங்கள் கலாசாரம் வீணாக வகையில்தான் வேலைக்கு அனுப்புவார்கள். அமெரிக்க ஐரோபபிய கம்பெனிகளில் அந்நாட்டு அட்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள அலுவலக வேலைகளில். எனவே சவுதி பெண்கள் அதிகம் வேலைக்கு செல்வது சவுதி அரசு வேலைகளுக்கும், மருத்துவ மனைகளுக்கும், பள்ளி கல்லூரிகளுக்குமே! எனவே கவலை வேண்டாம்.

சுவனப் பிரியன் said...

சகோ உண்மைகள்!

//டெல்லியில் மேலும் ஒரு கொடுமை...

42 வயது பெண் கூட்டாக கற்பழிப்பு.. குற்றவாளிகள் ஓட்டம்!//

இது நாடா இல்லே...வெறும் காடா...

இத கேட்க யாரும் இல்லே தோழா...

என்று பாடத் தோன்றுகிறது.

செய்திகளை பகிர்ந்தமைக்கு நன்றி!

Yaani said...

பாஸ்.
அரபு நாடுகளில் வேலைக்கு சென்று திரும்பி வரும் பெண்களின் கதையை கேட்டால்,
அரபிகள் மனிதர்களா இல்லை மிருகங்களா என கேட்க தோன்றுகிறது
இதைக்கேட்க அங்கே சுகவனத்திற்கு தெம்பு இல்லையா என பாடத்தோன்றுகிறது.

Anonymous said...

///அரபு நாடுகளில் வேலைக்கு சென்று திரும்பி வரும் பெண்களின் கதையை கேட்டால்,
அரபிகள் மனிதர்களா இல்லை மிருகங்களா என கேட்க தோன்றுகிறது
இதைக்கேட்க அங்கே சுகவனத்திற்கு தெம்பு இல்லையா என பாடத்தோன்றுகிறது.//

""அப்படியா செய்கிறார்கள், அவர்கள் பெயர் தாங்கி முஸ்லிம்கள், இஸ்லாமை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை, இஸ்லாம் அதை போதிக்கவில்லை, இஸ்லாமை தவறாக புரிந்தவர்கள். நல்ல முஸ்லிம் அதை செய்ய மாட்டான். பெயர் தாங்கிகள் செய்வதற்கு இஸ்லாம் எப்படி பொறுப்பாக முடியும்""

அல்லாவின் பிள்ளைகள் செய்யும் எல்லா தவறுகளுக்கும் இதையே பதிலாக எல்லாரும் எடுத்து கொள்ளலாம். எப்படி குரான் ஆயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு மேலாக மாற்றம் இல்லையோ அதோ போல இந்த பதிலிலும் எந்த மாற்றமும் வராது. குரானை அல்லா பாது காக்கிறார். இந்த பதிலை சுவன பிரியர்கள் பாதுக்கக்கிறார்கள்