மனித வாழ்வின் இன்பங்களை தடுக்கிறதா இஸ்லாம்?
//Dear Suvanapiriyan sir,
I read your blog for more than 2 years. All articles and your polite answers makes me more eager to read your blog.
once i told my friend "enjoy your week end" during week end, he answered me that islam allows all human being to be in peace not to enjoy.
because peace is more greater feeling than enjoyment.
Peace is a feeling that is permanent.
but enjoy is a temporary feeling.
and he told me that quran also saying to be in peace not to enjoy.
So i expect you to write an article to explain this 2 things clearly . may allah help us.//
சகோ சலீமுக்காக இந்த பதிவு!
முதலில் அவரது நண்பர் இஸ்லாத்தை பற்றி வைத்திருக்கும் எண்ணம் தவறானது என்பது எப்படி என்று பார்போம். குர்ஆன் எந்த இடத்திலும் மனிதர்களை இன்பமாக இருக்க தடை சொல்ல வில்லை. முகமது நபியின் வாழ்வும் மனிதர்கள் இன்பமாக இருக்க எந்த தடையையும் போடவில்லை. மாறாக இன்பங்களை அனுபவிக்க சொல்கிறது. ஆனால் அதற்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அதில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
முதலில் மனிதனை துறவறம் பூணுவதை இஸ்லாம் முற்றாக தவிர்க்க சொல்கிறது. மற்ற மார்க்கங்களில் துறவறம் பூண்ட மார்க்க அறிஞர்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து இன்று மக்களால் பாரக்கப்படுகின்றனர் என்பதை நாம் அறிவோம்..
ஒருமுறை ஒரு நபித்தோழர் நபிகள் நாயகத்திடம் 'நான் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளேன்' என்கிறார். 'கன்னிப் பெண்ணாஅல்லது விதவையா?' எனக் கேட்கிறார் முகமது நபி. அதற்கு அந்த நபித் தோழர் 'விதவை' என்கிறார். 'கன்னிப் பெண்ணை திருமணம் முடித்தால் அவளோடு அதிக சந்தோஷத்தோடு இருக்கலாமே?' என முகமது நபி கூற அதற்கு நபித் தோழர் 'வயதான எனது பெற்றோர்களை கவனித்துக் கொள்ள விதவைப் பெண்ணே ஏற்றவர் என்பதால் நான் விதவையை தேர்வு செய்துள்ளேன்' என்கிறார். இதிலிருந்து தனது மனைவியோடு இன்பமாக இருப்பதை முகமது நபி விரும்புவதையே காட்டுகிறது.
மற்றொரு சந்தர்பத்தில் முகமது நபியும் அவரது மனைவி ஆயிஷாவும் அபிசீனிய நாட்டு வீரர்களின் வீர விளையாட்டை வேடிக்கை பார்த்துள்ளனர். தனது மனைவி போதும் என்று சொல்லும் வரை அந்த விளையாட்டை முகமது நபியும் பார்த்ததாக வரலாறு சொல்கிறது. வேறொரு சந்தர்ப்பத்தில் முகமது நபியும் அன்னை ஆயிஷாவும் அவர்களுக்குள் ஓட்டப் பந்தயம் வைத்துள்ளார்கள். ஒரு முறை ஆயிஷா ஜெயித்திருக்கிறார். மற்றொரு முறை நபிகள் நாயகம் ஜெயித்துள்ளார். இந்த சம்பவங்களெல்லாம் நாம் நமது வாழ்நாளில் அனுமதிக்கப்பட்ட துணைகளோடு சந்தோஷமாக இருக்கவே சொல்கின்றன.
மற்றொரு முறை முகமது நபியின் வீட்டில் சிலர் இசைக் கருவிகளை வைத்துக் கொண்டு பாடலை பாடி ஆனந்தமாக இருந்தனர். அந்த நேரத்தில் அங்கு வந்த அபுபக்கர் அவர்கள் 'இறைத் தூதரின் இல்லத்தில் இசைக் கச்சேரியா?' என்று கடிந்து கொள்கிறார். அதற்கு நபிகள் நாயகம் 'அவர்களை விட்டு விடும்' என்று பாடல் பாடியவர்களை கண்டிக்காது விட்டதை பார்க்கிறோம். அதே நேரம் 24 மணி நேரமும் இசையே கதி என்று அதில் தனது வாழ்நாளை வீணடிப்பவர்களை இஸ்லாம் கண்டிக்கிறது. எனவே எதற்கும் ஒரு அளவை நிர்ணயித்து நமது சுய சிந்தனையை மழுங்கடிக்காமல் இருக்க வேண்டும் என இஸ்லாம் எதிர் பார்க்கிறது.
எந்த நேரமும் முகத்தை கடு கடு என்று வைத்துக் கொண்டு சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழ இஸ்லாம் சொல்லவில்லை.
இதே போன்று சல்மான் ஃபார்ஸி என்ற நபி தோழருக்கும் அபு தர்தா என்ற நபி தோழருக்கும் ஏற்பட்ட பிரச்னையை நாம் அறிவோம். அதாவது எப்போதும் தொழுகை வணக்கம் என்று இருந்து தனது மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையையும் மறந்து இறை வணக்கத்தில் ஈடு பட்டு பகலில் நோன்பும் வைக்கிறார் அபு தர்தா. இந்த பழக்கத்தை மாற்றி கடமையான தொழுகைகளை மட்டும் தொழச் செய்து பகல் காலத்தில் அவர் நோன்பையும் முறித்து விடுகிறார் சல்மான் பார்சி. இந்த பிரச்னை முகமது நபி வசம் வருகிறது. விபரத்தைக் கேட்ட நபிகள் நாயகம் சல்மான் ஃபார்சி செய்ததுதான் சரி என்று தீர்ப்பு கூறுகிறார். 'கண்களுக்கு செய்ய வேண்டிய கடமை(தூங்குவது) மனைவிக்கு செய்ய வேண்டிய கடமை(இல்லறத்தில் ஈடுபடுவது, அவரது சாப்பாட்டுக்காக உழைக்க செல்வது) போன்ற ஒவ்வொரு உறுப்புகளுக்கும் அதற்கான கடமைகளை செவ்வனே செய்து விட வேண்டும்' என்று அபு தர்தாவுக்கு போதிக்கிறார் நபிகள் நாயகம்.
அதோடு அமைதியையும் இஸ்லாம் வலியுறுத்துகிறது. ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை பார்க்கும் போது 'உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்' என்று தான் வாழ்த்தச் சொல்லி இஸ்லாம் கற்றுக் கொடுக்கிறது. ஒரு மனிதன் இன்பங்களை முறையாக அனுபவித்தால்தான் அவனால் நிம்மதியான வாழ்வையும் வாழ முடியும். கட்டுப்பாடற்ற இன்பங்கள் அந்த மனிதனை பெரும் சோகத்தில் ஆழ்த்தி விடுவதையும் தினமும் நாம் பத்திரிக்கையில் பார்க்கிறோம். எனவே மனம் அமைதியுற வேண்டுமானால் சில கட்டுப்பாடுகளோடு இன்பங்களை மனிதன் அனுபவிக்க வேண்டும். இந்த இன்பங்களின் மூலமாகத்தான் மனிதன் அமைதியான வாழ்வையும் பெற்றுக் கொள்கிறான். இறைவன் ஆணையும் பெண்ணையும் படைத்தது ஒருவர் மற்றவருக்கு இன்ப துன்பத்தில் சம பங்கு வகித்து வாழ்வை அமைதியாக கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே! இந்த அறிவுரைகளை கூறுவதற்காகத்தான் உலகின் அனைத்து பிரதேசங்களுக்கும் அனைத்து மொழி பேசும் நபர்களுக்கும் வேதத்தையும் தூதர்களையும் இறைவன் அனுப்பினான்.
எனவே அந்த இறைவன் தந்த வேதத்தை பலமாக பற்றி பிடித்து இந்த பூமியில் இன்பங்களை அனுபவித்து அமைதியான வாழ்வு வாழ வாய்ப்புகளை தர அந்த இறைவனை இறைஞ்சுவோம்.
--------------------------------------------------------
'தாமாகவே துறவறத்தை உருவாக்கிக் கொண்டனர். அதைக் கூட பேண வேண்டிய விதத்தில் பேணவில்லை'
-குர்ஆன் 57:27
இறைவன் விதியாக்காமல் ஏசு நாதரும் சொல்லாமல் கிறித்தவர்கள், இந்துக்கள், பவுத்தர்கள் தாங்களாகவே துறவறத்தை வலிந்து ஏற்றுக் கொண்டதாக குர்ஆன் கூறுகிறது. அதைக் கூட பேண வேண்டிய முறையில் பேணவில்லை என கண்டிக்கிறது குர்ஆன். பாதிரிகளும், கன்னியாஸ்த்ரிகளும், சாமியார்களும் பண்ணும் சேட்டைகள் கொஞ்ச நஞ்சமல்ல. இவை எல்லாம் இறைவன் அனுமதிக்காத துறவறத்தை மேற்கொண்டதால் வந்தவை.
'இப்போது முதல் அவர்களுடன் இல்லறத்தில் ஈடுபடுங்கள். இறைவன் உங்களுக்கு விதித்த சந்ததிகளைத் தேடுங்கள்'
-குர்ஆன் 2:187
ரமலான் மாதங்களிலும் இரவு நேரங்களில் மனைவியோடு சந்தோஷமாக இருந்து நம்முடைய சந்ததிகளை தேடிக் கொள்ளச் சொல்கிறான் இறைவன்.
'நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும் இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும்'
-குர்ஆன் 30:21
மனித வாழ்வு அமைதியாக செல்ல வேண்டுமானால் இல்லற இன்பம் மிக அவசியமானதாகும் என்பது இவ்வசனத்திலிருந்து தெரியலாம். கணவன் மனைவிக்கிடையே அன்பையும் பாசத்தையும் இதனாலேயே இறைவன் உண்டாக்கியிருப்பதாக குர்ஆன் கூறுகிறது. எனவே அன்பு மனைவியோடு இல்லறத்தை இன்பமாக அனுபவித்து அழகிய குணமுடைய குழந்தைகளை பெற்று இறைவன் காட்டிய வழியில் பயணித்து உலக வாழ்வை இன்பமாக்குவோம். அதன் பலனாக மறுஉலக இன்ப வாழ்வையும் பெற்றுக் கொள்வோம்.
13 comments:
சலாம் சகோ. தேவையான, போதுமான விளக்கம். மாஷா அல்லாஹ்!
சலாம் சகோ அஸ்மா!
//சலாம் சகோ. தேவையான, போதுமான விளக்கம். மாஷா அல்லாஹ்! //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
//இந்த எக்கச்சக்க செலவுகளை தவிர்ப்பதற்காக சில குடும்பங்கள், தங்கள் மகன்களையும் மகள்களையும் அடுத்த குடும்பத்தின் மகள்களுக்கும் மகன்களுக்கு திருமணம் செய்து வைத்துகொள்கிறார்கள். இதனை “பதல்” திருமணம் அல்லது பதிலுக்கு பதில் திருமணம் எனலாம்.
“இப்படிப்பட்ட செயல்களை தண்டிக்க சட்டங்கள் இருந்தாலும் அவை நிறைவேற்றப்பட்டதே இல்லை” என்று முஸ்தபாவி கூறுகிறார். ” இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடும் சிலரை தண்டித்து அதன் மூலம் தங்கள் மகள்களை விற்கும் குடும்பத்தினரை எச்சரிக்கலாம் என்று சட்ட ஒழுங்கு அமைச்சகத்தை கேட்டுகொண்டுள்ளோம்” என்கிறார் முஸ்தபாவி.//
இஸ்லாமியர்களிடம் இது போன்று பெண்களிடம் வரதட்சணை கேட்கும் பழக்கம் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளிலேயே அதிகமாக நடைபெறுகிறது. இந்து மதத்திலிருந்து இஸ்லாத்தை ஏற்ற போது பல பழக்கங்களை அங்கிருந்து கொண்டு வந்தனர். அதில் வரதட்சணையும் ஒன்று. இது இஸ்லாத்திற்கு எதிரானது. ஒரு பொற்குவியலையே கொடுத்தாலும் அந்த மஹர் பெண்ணுக்கு ஈடாகாது என்பது ர்ஆனின் சட்டம். பெயருக்கு 1000, 2000 என்று எழுதிக் கொண்டு கொல்லைப் புறமாக கொள்ளையடிக்கும் பழக்கம் இஸ்லாத்தில் இல்லாத ஒன்று.
அரபு நாடுகளில் பெண்கள் கட்கும் மஹரை தர முடியாமல் 35, 40 வயது இளைஞர்களும் :-) கல்யாணமாகாமல் இருப்பதை சர்வ சாதாரணமாகப் பார்ககலாம். இதனால் அரசு இளைஞர்களுக்கு திருமண உதவித் திட்டத்தை ஆரம்பித்து செயல்படுத்தி வருகிறது.
தமிழகத்திலும் இஸ்லாமியரிடத்தில் இந்த வரதட்சணை கொடுமை முன்பு இருந்தது. தற்போது டிஎன்டிஜே என்ற அமைப்பின் அயராத முயற்சியால் இன்று வாங்கிய வரதட்சணையை திருப்பி கொடுப்பதை ஒரு நிகழ்ச்சியாகவே நடத்தி வருகின்றனர். வஹாபிய இயக்கத்தால் தமிழகத்தில் விளைந்த நன்மைகளில் இதுவும் ஒன்று. இந்த நிலை ஆப்கானிஸ்தானிலும் ஏற்பட வேண்டும்.
சங்கர நாராயணன்!
//அந்த நாட்டில் எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கிறது. அந்நாட்டில் கல்வியறிவு அற்ற பெண்கள் பெருக, பெருக அவர்கள் சந்ததியினரும் மூடர்களாக, முர்கர்களாக பல்கி பெருகி மிருகத்தனமாக தாமையே அளித்து சாக வேண்டும். அடுத்த உலகம் சரியான முறையில் BALANCE ஆகிகொண்டிருக்கிறது……..//
எப்படி?….நம்ம தர்மபுரியிலே வன்னியர்களும் தலித்களும் வெட்டிகிறாங்களே! அது மாதிரியா? அல்லது ராமநாதபுரத்தில் தேவர்களும் தலித்களும் வெட்டிக்கிறாங்களே அது போலவா?
பாகிஸ்தானில் குழப்பம் வந்தால் அது பக்கத்து நாடான நமக்கும் தீராத தலைவலி என்பது சங்கர நாராயணன் என்ற அதி மேதாவிக்கு தெரியவில்லை போல் இருக்கிறது. இந்திய எதிர்ப்பு என்பது அந்நாட்டு அரசாங்கம் விளையாடும் சித்து வேலை. சாமான்ய பகிஸ்தானிகள் இந்தியர்களோடு நட்புடனேயே பழகுகின்றனர். நம் நாட்டில் ஏதாவது பிரச்னை வந்தால் பாகிஸ்தானை எதிலாவது நமது அரசாங்கம் இழுத்து விடும். அதுபோல் அங்கும் நடக்கிறது.
எந்த நாடாக இருந்தாலும் அந்த மக்களும் நலமுடனேயே இருக்க வேண்டும் என்று எண்ணும் நல் மனது வேண்டும். அதனை சங்கர நாராயணன் என்ற இந்துத்வாவாதியிடம் எதிர் பார்க்கலாமோ!
//மறுஉலக இன்ப வாழ்வையும் பெற்றுக் கொள்வோம்.//
எப்படிங்க சுவனம். 74 கன்னிப்பெண்களோடா?
//எப்படிங்க சுவனம். 74 கன்னிப்பெண்களோடா?//
இறைவன் தடுத்ததற்காக பல இன்பங்களை தியாகம் செய்யும் ஒரு முஸ்லிமுக்கு அந்த இறைவன் பல வெகுமதிகளை தந்தால் அதைப் பெற்றுக் கொள்வதில் என்ன தவறு?
முற்றும் துறந்த சாமியார்கள் 'கதவை திற காற்று வரட்டும்' என்று எதை எதையோ அறைக்குள் வரவழைத்தனரே! இதனால் வாழ்வை இழந்த இளம் பெண்கள் எத்தனை பேர். பட்டியல் தரட்டுமா? அது தானய்யா தவறு.
சுவனம்
இந்த உலகத்தில் ஏன் ஒழுங்காக இருக்க வேண்டும்?
மேலுலகத்தில் என்சாய் பண்ண.
சரியா?
///இந்த உலகத்தில் ஏன் ஒழுங்காக இருக்க வேண்டும்?
மேலுலகத்தில் என்சாய் பண்ண.///
இந்த உலகத்தில் ஒழுங்காக இருக்காவிட்டால், மாமியார் வீட்டில் enjoy பண்ணலாம்தானே.
//இந்த உலகத்தில் ஏன் ஒழுங்காக இருக்க வேண்டும்?
மேலுலகத்தில் என்சாய் பண்ண.
சரியா? //
படைதத இறைவன் தருவதாக வாக்களிக்கிறான். அதை ஏற்றுக் கொள்வதில் என்ன பிரச்னை?
Hi Suvanappiriyan Sir,
Thank you for your efforts for this article.
I got the information. i explained this article to my friend also as he doesn't know tamil. and yesterday we were discussing about this topic. he also agreed that we can enjoy with what God has permitted.
You continue your good work. We have great Allah.
For your kind information:
www.productivemuslim.com
I also like this website.
சகோ சலீம்!
//I got the information. i explained this article to my friend also as he doesn't know tamil. and yesterday we were discussing about this topic. he also agreed that we can enjoy with what God has permitted.
You continue your good work. We have great Allah.//
கருத்துக்கு நனறி!
தொடர்ந்து உங்களின் கருத்துக்களை கூறி வாருங்கள்.
சரிதான். மரணக்கும் தருவாயில் அல்லாவின் தூதர் தன் மனைவியர்கள் யாரும் திருமணம் செய்யக் கூடாது என்று தடைவிதித்துவிட்டாராமே? மெய்யாலுமா? ஆயிசாவுக்குவயதென்ன?
ரேகானாவுக்கு வயதென்ன ? அவர்களுக்கு துறவளம் அருளிய அண்ணல் அளித்த பயிற்றி என்ன ?
//ரேகானாவுக்கு வயதென்ன ? அவர்களுக்கு துறவளம் அருளிய அண்ணல் அளித்த பயிற்றி என்ன ?//
ரேகானா என்று இல்லாத ஒரு பெயரைச் சொல்லுகிறீர்கள். வரலாறை சரியாக படிக்கவும். அடுத்து துறவறம் இஸ்லாத்தில் கிடையாது. அதை மனிதர்களால் சரி வர பின்பற்றவும முடியாது.
//ஆயிசாவுக்குவயதென்ன?//
முண்டாசு கவி பாரதியாருக்கு மணமகளாக வரும் போது அவர் மனைவியின் வயதென்ன தெரியுமா? இது அந்த காலத்திய பழக்கம்.
Post a Comment