Followers

Sunday, December 23, 2012

குர்ஆனை எரித்தவர் உயிரோடு எரித்து கொலை!

குர்ஆனை எரித்தவர் உயிரோடு எரித்து கொலை!

//பாகிஸ்தானில் முஸ்லிம்களின் புனித நூலான குரானை இழிவு படுத்தியாக குற்றம்சாட்டப்பட்ட ஒரு நபர், 200 பேர் கொண்ட கும்பலால் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்தச் செய்தி சம்பந்தமாக உங்களது கருத்தை அறிய ஆவலாக உள்ளேன் சு.பி. சாமியார் அவர்களே...// - தேன் மதுரன்

சகோ தேன் மதுரன். முதலில் இஸ்லாத்தில் புரோகிதம் கிடையாது. சாமியார்கள் கிடையாது. மவுலவிகள் கிடையாது. இதற்காக பட்டம் கொடுக்க இஸ்லாத்தில் எந்த அமைப்பையும் முகமது நபி உருவாக்கவில்லை. குர்ஆனை யார் நன்கு விளங்கி தேர்ச்சி பெறுகிறாரோ அவர் அறிஞராக மதிக்கப்படுவார். அதற்காக தேவையில்லாத மரியாதையை எல்லாம் பெற்றுக் கொள்ள மாட்டார். பெற்றுக் கொள்ளவும் கூடாது. இனி விஷயத்துக்கு வருவோம்.


பாகிஸ்தானில் இஸ்லாமியத் திருமறையான குரானை இழிவுபடுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட முஸ்லிம் ஒருவரை கும்பல் ஒன்று எரித்துக் கொன்றுள்ளதாக போலிசார் கூறுகின்றனர். நாட்டின் தென்பகுதியில் சீதா கிராமத்தில் (சீதா பிராட்டியாரின் சொந்த ஊரோ) உள்ள ஒரு கிராமத்துப் பள்ளிவாசல் ஒன்றில் அந்நபர் இரவுப்பொழுதைக் கழித்திருந்தார். மறுநாள் காலையில் அந்த பள்ளிவாசலுக்குள் குரானின் பிரதி ஒன்று எரிந்து கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.அவர்தான் குரானை எரித்திருக்க வேண்டும் எனக் கருதிய கிராமவாசிகள் ஆத்திரம் மேலோங்க அவரைத் தாக்கி பின்னர் போலிசாரிடம் ஒப்படைத்திருந்தனர்.

ஆனால் ஒரு சில மணி நேரங்களில் இருநூறு பேர் அடங்கிய பெரிய கும்பல் ஒன்று காவல்நிலையத்துக்குள் தடாலடியாக நுழைந்து அந்நபரை வெளியில் இழுத்துப் போட்டு அவரைக் தீவைத்துக் கொளுத்தியிருந்தனர்.இத்தாக்குதல் தொடர்பில் முப்பது பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.கவனக்குறைவாக இருந்தார்கள் என்பதற்காக போலிஸ்காரர்கள் ஏழு பேர் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மதநிந்தனை என்பது பாகிஸ்தானில் மரண தண்டனைக்குரிய ஒரு குற்றமாகும். ஆனாலும் மிகச் சிலருக்கே அங்கு இக்குற்றச்சாட்டுக்காக தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

http://www.indiatvnews.com/news/world/man-torched-for-desecrating-quran-in-pakistan-9992.html


இது இணையத்தில் வந்த செய்தி. இதற்கு இஸ்லாம் என்ன தீர்வு கூறுகிறது என்பதை சற்று பார்ப்போம்.

குர்ஆன் என்றால் எது? அதை எவ்வாறு மதிப்பது? என்ற விபரங்களை அறிந்து கொண்டால் இது பற்றிய தெளிவான விளக்கத்துக்கு நம்மால் வர முடியும்.

இறைவனின் வார்த்தை என்பதால்தான் குர்ஆனுக்கு ஒரு மதிப்பை நாம் கொடுக்கிறோம். இந்த குர்ஆனானது நபியவர்களுக்கு எழுத்து வடிவில் நாம் பார்க்கும் இந்த நிலையில் அருளப்படவில்லை. மாறாக ஓசை வடிவில்தான் அருளப்பட்டது.

குர்ஆனை ஓசை வடிவில் கொண்டு வருவதற்கு எழுத்து உதவியாக இருக்கின்ற காரணத்தினால்தான் நமது வசதிக்காக அதனை எழுத்து வடிவில் ஆக்கிக் கொண்டோம். இவ்வாறு எழுதப்பட்ட காகிதங்களில் காகிதத் தன்மையைத் தாண்டி வேறு எந்த புனிதமும் இல்லை.

இன்றைய கணிணி யுகத்தில் குறுந்தகடுகளிலும், கணிணியிலும், செல்ஃபோன்களிலும் குர்ஆன் பதியப்படுகிறது. குர்ஆன் பதியப்பட்ட காரணத்தால் இந்த நவீன சாதனங்கள் புனிதம் பெற்று விட்டதாக நாம் எண்ணுவதில்லை.

குர்ஆன் என்ற இந்த வேத நூலானது மக்களுக்கு பயன்படுகின்ற சிறந்த உபதேசங்களாகும். இதனை மனிதர்கள் பின் பற்றி நேர் வழி பெற வேண்டும் என்பதற்காக இறைவனால் அருளப்பட்டது. எனவே குர்ஆனின் உபதேசங்களை கடைபிடிக்க வேண்டும். அதை மற்றவர்களுக்கு பரப்ப முயற்சிக்க வேண்டும். இதுதான் குர்ஆனை மதிப்பதற்கான சிறந்த வழி.

ஒருவர் தனது பெற்றோரின் உபதேசங்களை எழுதிக் கொண்டு எழுதப்பட்ட காகிதங்களுக்கு மரியாதை செலுத்தினால் அவர் காகிதங்களுக்கு மரியாதை செய்திருக்கிறார் என்று கூறலாமே யொழிய பெற்றோரையோ அவர்கள் செய்த உபதேசத்தையோ மதித்தவராகக் கருதப்பட மாட்டார். அவர்களின் உபதேசங்களை வாழ்வில் கடை பிடிப்பதன் மூலமாகத்தான் அவர் மரியாதையை வெளிப்படுத்த முடியும்.

முன்பு உஸ்மான் அவர்களின் காலத்தில் பலரும் சிறு சிறு அத்தியாயங்களை முழு குர்ஆன் என்று விளங்கி தங்கள் வீடுகளில் பாதுகாத்து வந்தனர். எது முகமது நபிக்கு அருளிய வரிசைபடுத்தப்பட்ட குர்ஆன் என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. குர்ஆனை மனனமிட்ட பல தோழர்களை அழைத்து அவர்களை ஓதச் செய்து அதனை பிரதி எடுத்தார் ஜனாதிபதி உஸ்மான். பிறகு பலர் வீடுகளில் வைத்திருந்த தோல்களிலும், எலும்புகளிலும் எழுதப்பட்ட பல அத்தியாய பிரதிகளை கொண்டு வரச் செய்து அனைத்தையும் எரித்து விட்டார். இங்கு ஜனாதிபதி உஸ்மானை குறை காண முடியுமா?

அந்த எலும்புகளுக்கோ தோல்களுக்கோ ஏதும் புனிதம் இருப்பதாக ஜனாதிபதி அவர்கள் நினைக்கவில்லை. முகமது நபியும் தனது தோழர்களுக்கு அவ்வாறு கட்டளை இடவில்லை.

தற்போது குர்ஆன் எரித்த விவகாரத்துக்கு வருவோம். முதலில் அந்த குர்ஆனை யார் எரித்தது என்பதே தெரியவில்லை. அப்படியே அந்த நபர் எரித்திருந்தாலும் இஸ்லாமிய சட்டத்தின் படி அது தீயிட்டு கொலை செய்யும் அளவுக்கு மிகப் பெரிய குற்றமும் கிடையாது. அறியாமல் செய்த அந்த தவறை விளக்கி அவரை கண்டித்து விட்டிருக்கலாம். அடுத்து குற்றவாளியை காவல் துறை வசம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைத்த ஒருவரை இந்த கிறுக்குக் கூட்டம் காவல் நிலையம் சென்று அவரை இழுத்து வந்து தீயிட்டு கொளுத்தியிருக்கிறது. இது மடத்தனமான செயல். இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது. பாகிஸ்தான் அரசும் பணியில் கவனக் குறைவாக இருந்த பல காவலர்களை வேலை நீக்கம் செய்துள்ளது.

இஸ்லாமிய பார்வையில் அந்த நபரை கொன்ற அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை விளங்காத மூடக் கூட்டங்கள் பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் இன்னும் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு உண்மையான இஸ்லாமிய போதனைகள் என்ன? குர்ஆன் அவர்களிடம் என்ன எதிர் பார்க்கிறது? என்பதை விளக்க வேண்டும். பள்ளி கல்லூரிகளில் தவ்ஹீத் வகுப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும். சவுதியில் இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் அரசாங்கம் உரிய நடவடிக்கையை எடுத்து மக்களின் மூட நம்பிக்கைகளை களைய முயற்சிக்க வேண்டும். ஒரு நேர்மையான அரசு அதைத்தான் செய்ய வேண்டும்.

43 comments:

mohamed sultan said...

அல்ஹம்துலில்லாஹ். அருமையாக விளக்கியுள்ளீர்கள் சுவனப்ரியன்.
குர்ஆன் என்பது ஓசையாகத்தான் இறக்கியருளப்பட்டது. குர்ஆன் என்பது ஒலி வடிவம்.

Annu UmmOmar said...

//இஸ்லாமிய பார்வையில் அந்த நபரை கொன்ற அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை விளங்காத மூடக் கூட்டங்கள் பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் இன்னும் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு உண்மையான இஸ்லாமிய போதனைகள் என்ன? குர்ஆன் அவர்களிடம் என்ன எதிர் பார்க்கிறது? என்பதை விளக்க வேண்டும். பள்ளி கல்லூரிகளில் தவ்ஹீத் வகுப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும். சவுதியில் இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் அரசாங்கம் உரிய நடவடிக்கையை எடுத்து மக்களின் மூட நம்பிக்கைகளை களைய முயற்சிக்க வேண்டும். ஒரு நேர்மையான அரசு அதைத்தான் செய்ய வேண்டும்.//

Well said Bhai. 100% echo.

சுவனப் பிரியன் said...

சகோ சுல்தான்!

//அல்ஹம்துலில்லாஹ். அருமையாக விளக்கியுள்ளீர்கள் சுவனப்ரியன்.
குர்ஆன் என்பது ஓசையாகத்தான் இறக்கியருளப்பட்டது. குர்ஆன் என்பது ஒலி வடிவம்.//

நீண்ட நாட்களுக்குப் பிறகு கருத்தை பகிர்ந்திருக்கிறீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

சுவனப் பிரியன் said...

சகோ உம்மு உமர்!

//Well said Bhai. 100% echo.//

என்ன ஒரு அழகிய மார்க்கம். இது போல் ஒரு சிலர் தேவையில்லாத உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து குர்ஆன் இறக்கப்பட்டதன் பலனையே சிதறடித்து விடுகிறார்கள். உண்மையன இஸ்லாமிய கல்வியறிவு நமது மக்களுக்கு மிக அவசிய தேவையாக தற்காலத்தில் தேவைப்படுகிறது.

mohamed said...

சலாம் சகோ சுவனப்பிரியன்,

மாஷா அல்லாஹ் அருமையான விளக்கம் சகோ.பாகிஸ்தான் அதிக மூடர்கள் வாழும் நாடு என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று..அவர்களின் இந்த காட்டுமிராண்டி செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.இந்த அக்கிரமத்தை செய்த கயவர்களுக்கு அந்த நாட்டு அரசு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். உயிர் இழந்த அந்த சகோதரரின் குடும்பத்திற்கு தகுந்த நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

Anonymous said...

இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை விளங்காத மூடக் கூட்டங்கள் பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் இன்னும் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு உண்மையான இஸ்லாமிய போதனைகள் என்ன? குர்ஆன் அவர்களிடம் என்ன எதிர் பார்க்கிறதுஎன்பதை விளக்க வேண்டும்

Riyas Qatar

faizeejamali said...

Superb article but nermaina arasu pakistanil konjam kastamthaan pakistaanil ulla uyar padhavigalil kadiyanigalum hindutva aadaravu boli shekmargalum irukkum varai indhiyavil hindutva aakkal irukkum varai indha irandu naadugalilum kulappangalum moodanambikkaigalum theevaravathamum oliyathu

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

சலாம்,
அருமையான விளக்கம் சகோ.
எரித்தவர்கள் முஸ்லிம் என்பதால் நாம் வக்காலத்து வாங்கி பேசுவோம் என கேள்வி கேட்ட நபர் எண்ணி விட்டார் போலும்!!!!தவறை யார் செய்தாலும் தவறு தான்,அது ஒரு இஸ்லாமியனாக இருந்தாலும் சரியே,நம்மை எல்லாம் படைத்த அல்லாஹ் முன் அனைவரும் சமமே.இதனை இனியாவது கேள்வி கேட்கும் கூட்டம் விளங்கட்டும்.

enrenrum16 said...

குர் ஆன் எரிக்கப்பட்டதற்கு உங்களிடமிருந்து கண்டனத்தையும் மனிதனை எரித்தவர்களை ஆதரவையும் தெரிவித்து உங்கள் பதிவு இருக்கும் என எதிர்பார்த்த தேன் மதுரன் அவர்களுக்கு சரியான பதிலடி.... இது வரை அறிந்திடாத இஸ்லாமிய வரலாறு ஒன்றினை அறிந்திட இப்பதிவு உதவியது. நன்றி சகோ.

சிராஜ் said...

நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்.. என வன்மையான கண்டனங்கள்..

லூசுப் பசங்க... குரானை எரித்தால் என்ன??? இதுக்கு போய் ஏன் கொல்லணும்??? குரான் அவனுக்கும் உரியது தானே?? அவன் உரிமையை அவன் தவறான வழியில் பயன்படுத்துகிறான்.. அதற்க்காக கொல்வது என்பது நினைக்கவே முடியல...

கண்டிப்பா அவனுங்கள சட்டம் தண்டிக்கணும்.. உண்மையான இஸ்லாமிய அரசா இருந்தா கண்டிப்பா தண்டிக்கும்.. பட் இவர்கள் செய்வார்களா??

சேக்கனா M. நிஜாம் said...

விளக்கம் அனைவரும் அறிந்துகொள்ளும்படி எளிமையாக உள்ளது.

சமூகத்துக்கு எதிராக கூறக்கூடிய கருத்துகளை கண்ணியமான முறையில் எதிர்கொள்வது என்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

தொடர வாழ்த்துகள்...

Adirai Iqbal said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

மிகவும் எளிமையாக விளக்கி இருக்கீர்கள் . புரிந்துணர்வுடன் விளங்கி கொள்வார்களா!!!!!!!

சுவனப் பிரியன் said...

சகோ ரியாஸ் கத்தார்!

//இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை விளங்காத மூடக் கூட்டங்கள் பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் இன்னும் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு உண்மையான இஸ்லாமிய போதனைகள் என்ன? குர்ஆன் அவர்களிடம் என்ன எதிர் பார்க்கிறதுஎன்பதை விளக்க வேண்டும்//

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

சுவனப் பிரியன் said...

சலாம் சகோ முஹம்மத்!,


//மாஷா அல்லாஹ் அருமையான விளக்கம் சகோ.பாகிஸ்தான் அதிக மூடர்கள் வாழும் நாடு என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று..அவர்களின் இந்த காட்டுமிராண்டி செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.இந்த அக்கிரமத்தை செய்த கயவர்களுக்கு அந்த நாட்டு அரசு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். உயிர் இழந்த அந்த சகோதரரின் குடும்பத்திற்கு தகுந்த நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

சுவனப் பிரியன் said...

சகோ ஃபைஜி ஜமாலி!

//Superb article but nermaina arasu pakistanil konjam kastamthaan pakistaanil ulla uyar padhavigalil kadiyanigalum hindutva aadaravu boli shekmargalum irukkum varai indhiyavil hindutva aakkal irukkum varai indha irandu naadugalilum kulappangalum moodanambikkaigalum theevaravathamum oliyathu//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

சுவனப் பிரியன் said...

சலாம் சகோ திருவாளப்புத்தூர் முஸ்லீம்!

//அருமையான விளக்கம் சகோ.
எரித்தவர்கள் முஸ்லிம் என்பதால் நாம் வக்காலத்து வாங்கி பேசுவோம் என கேள்வி கேட்ட நபர் எண்ணி விட்டார் போலும்!!!!தவறை யார் செய்தாலும் தவறு தான்,அது ஒரு இஸ்லாமியனாக இருந்தாலும் சரியே,நம்மை எல்லாம் படைத்த அல்லாஹ் முன் அனைவரும் சமமே.இதனை இனியாவது கேள்வி கேட்கும் கூட்டம் விளங்கட்டும்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

maarkka bandhu said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ , வெறும் தலைப்பு செய்திகள் படித்து விட்டு பிதற்றுபவர்களுக்கு சரியான பதிலடி , விளக்கமான செய்தி வெளியிட்டதற்கு நன்றி .

சுவனப் பிரியன் said...

சகோ என்றென்றும் பதினாறு!

//குர் ஆன் எரிக்கப்பட்டதற்கு உங்களிடமிருந்து கண்டனத்தையும் மனிதனை எரித்தவர்களை ஆதரவையும் தெரிவித்து உங்கள் பதிவு இருக்கும் என எதிர்பார்த்த தேன் மதுரன் அவர்களுக்கு சரியான பதிலடி.... இது வரை அறிந்திடாத இஸ்லாமிய வரலாறு ஒன்றினை அறிந்திட இப்பதிவு உதவியது. நன்றி சகோ.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

சுவனப் பிரியன் said...

சகோ சிராஜ்!

//நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்.. என வன்மையான கண்டனங்கள்..

லூசுப் பசங்க... குரானை எரித்தால் என்ன??? இதுக்கு போய் ஏன் கொல்லணும்??? குரான் அவனுக்கும் உரியது தானே?? அவன் உரிமையை அவன் தவறான வழியில் பயன்படுத்துகிறான்.. அதற்க்காக கொல்வது என்பது நினைக்கவே முடியல...

கண்டிப்பா அவனுங்கள சட்டம் தண்டிக்கணும்.. உண்மையான இஸ்லாமிய அரசா இருந்தா கண்டிப்பா தண்டிக்கும்.. பட் இவர்கள் செய்வார்களா??//

சில மாற்றங்கள் தற்போது வந்து கொண்டிருக்கிறது. முதலில் மதரஸாக்களில் மனிதர்கள் இயற்றிய குப்பைகளை தூக்கி எறிந்து விட்டு குர்ஆனையும், நபி மொழிகளையும் பயிற்று விக்க முயற்சி எடுத்தாலே அனேக மூடப்பழக்கங்கள் குறைய வாய்ப்புண்டு.

சுவனப் பிரியன் said...

சகோ சேக்கனா நிஜாம்!

//விளக்கம் அனைவரும் அறிந்துகொள்ளும்படி எளிமையாக உள்ளது.

சமூகத்துக்கு எதிராக கூறக்கூடிய கருத்துகளை கண்ணியமான முறையில் எதிர்கொள்வது என்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

சுவனப் பிரியன் said...

வஅலைக்கும் சலாம் சகோ இக்பால்!

//மிகவும் எளிமையாக விளக்கி இருக்கீர்கள் . புரிந்துணர்வுடன் விளங்கி கொள்வார்களா!!!!!!!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

சுவனப் பிரியன் said...

திரு ராம்!

//குர்ஆனில் அப்படி மாற்றம் செய்யவே கூடாது என்று ஏதாவது ஒரு வசனத்தை காட்ட முடியுமா?//

'அவர்களில் ஒரு பகுதியினர் உள்ளனர். வேதத்தில் இல்லாததை வேதம் என்று நீங்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக வேதத்தை வாசிப்பது போல் தமது நாவுகளை வளைக்கின்றனர். 'இது இறைவனிடமிருந்து வந்தது' எனவும் கூறுகின்றனர். அது இறைவனிடமிருந்து வந்ததல்ல. அறிந்து கொண்டே இறைவனின் பெயரால் பொய் கூறுகின்றனர்.'
-குர்ஆன் 3:78

முன்னால் வேதம் கொடுக்கப்பட்ட மக்கள் தங்கள் வசதிக்காக வேதக் குருத்துக்களில் தங்களின் கருத்தையும் புகுத்தி விட்டனர். தங்களுக்கு எவை எல்லாம் பிரச்னை தருகிறதோ அந்த வசனங்களை நீக்கி விட்டனர். எனவே தான் ஒரே வேதத்தில் ஏக தெய்வ கொள்கையும் பல தெயவ கொள்கையும் வருவதைப் பார்க்கிறோம். இறைத் தூதரான ஏசுநாதரை கடவுளாக்கியதும் இவ்வாறுதான். ரிக், யஜூர் வேதங்களில் ஏக தெய்வ கொள்கையும், பல தெய்வ கொள்கையும் வருவது இதனால்தான்.

ஒரு வேதத்தில் ஒவ்வொரு வருடங்களிலும் மாற்றங்களை செய்தால் அது இறை வேதமாக இருக்க முடியாது. முக்காலத்தையும் உணர்ந்த இறைவன் அருளிய வசனங்கள் எத்தனை ஆயிரம் வருடங்களானாலும் உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தி வர வேண்டும். அது போல் எல்லா நாட்களுக்கும் எல்லா நாட்டு மக்களுக்கும் இன்று வரை எந்த சட்ட சிக்கலையும் குர்ஆன் தரவில்லை. எனவே மாற்ற வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை.

'நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்'
-குர்ஆன் 15:9

குர்ஆனை அருளிய இறைவனே அதனை பாதுகாக்கும் பொருப்பையும் ஏற்றுக் கொண்டுள்ளான். எனவே உலக முடிவு நாள் வரையில் இந்த குர்ஆனில் எந்த மாற்றமும் ஏற்படாது.

//ஒவ்வொரு மதத்திற்கும் தனி சட்டம் இருப்பதே சிக்கல் தானே?//

நமது இந்தியாவில் இந்துக்களுக்கும், கிறித்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் தனித் தனி சட்டமே உள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் என்ன சிக்கல் வந்து விட்டது?

//காலத்திற்கு ஏற்ப மாற முடியாத சட்டம் எல்லோராலும் ஏற்க முடியாது.//

உலக முஸ்லிம்கள் அனைவரும் ஏற்று அதை கடைபிடித்து வருகிறார்களே!

//நீங்கள் உங்கள் சட்டத்தை காலத்து ஏற்ப மாற்ற முடியாது. ஆனால் காலத்திற்கு ஏற்ப பிரசார மற்றம் மட்டும் செய்யலாம் என்கிறீர்கள்.//

'அறிந்து கொண்டே சரியானதைத் தவறானதுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்காதீர்கள்'
-குர்ஆன் 2;42

உண்மை தெரியாமல் இருக்கும் மக்களுக்கு பிரசாரம் செய்து விளங்க வைக்க குர்ஆன் கட்டளையிடுகிறது.

'தர்மம், நன்மையான காரியம், மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துதல் ஆகியவற்றை ஏவியதைத் தவிர அவர்களின் பெரும்பாலான பேச்சுகளில் எந்த நன்மையும் இல்லை. இறைவனின் திருப்தியை நாடி இவற்றைச் செய்பவருக்கு மகத்தான கூலியை வழங்குவோம்.'
-குர்ஆன் 4:114

மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துதல் நன்மையான காரியங்களை ஏவுதல் போன்றவற்றை செய்பவரை இறைவன் விரும்புகிறான். இது உலக மக்கள் அனைவருக்கும் நன்மை தரும் செயல்தானே...

jaisankar jaganathan said...

சுவனம்,

இது யூத சதி. முஸ்லீம்கள் என்கிற போர்வையில் 200 யூதர்கள் வந்து அந்த அப்பாவி முஸ்லீமை கொளித்திட்டாங்கன்னு சொல்லுவீங்களே. அத காணமே. என்ன ஆச்சு?

Anonymous said...

சுவனம்,

அவசரப்பட்டு உங்கள் சகோதரர்கள் மூடர்கள் என்ற உண்மையை நீங்களும் உங்கள் நண்பர்களும் சேர்ந்து மாறி மாறி போட்டு உடைக்கிரீர்களே. கொஞ்சம் பொறுங்கள் இந்த சம்பவத்திற்கு பின்னால் மொசாத் அல்லது அமெரிக்காவின் சதி இருக்க போகிறது. பிறகு அவசரப்பட்டு உங்கள் கூட்டம் ஒரு மூட கூட்டம் என்பதை ஒத்துக்கொண்டு விட்டதற்காக வருத்த பட போகிறீர்கள். ஒருவேளை இந்தியாவும் இஸ்லாமிய மயம் ஆனால் இது போன்ற கூட்டம் தானே உருவாகும், அம்மாடி, இந்தியாவின் நிலையை நினைத்தால் பயமாகத்தான் இருக்கிறது.

அண்ணே சுவனம்,
எரித்தவன் முஸ்லிம், கொளுத்தியவர்கள் மூட கூட்டத்தின் பிரதிநிதிகள் , அவர்களும் முஸ்லிம்கள் இதுவே ஒரு வேற்று மதத்தவர் எரித்து இருந்தால் உங்கள் சுவனக்கூட்டம் இப்படி சொல்லி இருக்கும். 'அவரை எரித்து கொன்றது தவறு, கொன்றவர்கள் முஸ்லிம்கள் இல்லை. அவர்கள் முஸ்லிம் பெயர் தாங்கிகள், ஆனாலும் குரானை எரித்தவர் அப்படி செய்திருக்க கூடாது, இதற்கு பின்னால் மொசாத்தின் சதி இருக்கும், அமெரிக்காவின் சதி இருக்கும்.' என்றெல்லாம் ரெடிமேட் பதில்கள் நிறைய உங்களிடம் இருந்து வந்திருக்கும், உங்கள் சகோஸ் அதற்கு 'அமாங்கண்ணே ' என்று தாளம் போட்டிருப்பார்கள்.
போங்கையா நீங்களும் உங்க நல்ல பிள்ளை டிராமாவும்.

ஆனாலும் உங்களுக்கு பாராட்டுக்கள் சுவனம், உங்கள் கூட்டம் ஒரு மூட கூட்டம் என்ற உண்மையை ஒத்து கொண்டதற்காக, அதற்காக பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தானையும் தான் நான் சொன்னேன் மற்றவர்களை சொல்லவில்லை என்று சொல்லவேண்டாம். முகமதுவை பற்றி எதோ எழுதியதற்காக ஒருவரின் கையை வெட்டிய நல்லவர்கள் தானே இங்கே இருக்கும் மும்மீன்கள் எனவே நீங்கள் மூட கூட்டம் என்று சொன்னது உலகம் முழுக்க உள்ள உங்கள் சகோஸ் எல்லாருக்கும் பொருந்தும்.

jaisankar jaganathan said...

//குர்ஆனை அருளிய இறைவனே அதனை பாதுகாக்கும் பொருப்பையும் ஏற்றுக் கொண்டுள்ளான். எனவே உலக முடிவு நாள் வரையில் இந்த குர்ஆனில் எந்த மாற்றமும் ஏற்படாது.
//

அப்படின்னா காபிர்களின் கதி?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,
அருமையான பதிவு. நன்றி சகோ.

கலிபா உஸ்மான் ரலி உட்பட பல்வேறு மனன வல்லுனர்களால் சரிபார்க்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டு கஷ்டப்பட்டு கோர்த்து கட்டி மீண்டும் பற்பல மனன வல்லுனர்களால் சரிபார்க்கப்பட்ட அந்த ஒரு அபீஷியல் அரச பிரதியில் இருந்துதான் இனி மறு பிரதி எடுக்கப்படல் வேண்டும் என்ற அளவில்... அதனை பாதுகாத்துவிட்டு கலீபா உஸ்மான் மற்றவற்றை எரித்த காரணம் சரியானது.

ஆனால், தற்போது அடுத்தவர் புனித நூலை எரிப்பது எனும் செயல் வேண்டுமென்றே கலவர நோக்கோடு செய்யும் காழ்ப்புணர்வு வன்செயல். இதை நாம் எவர் எவர் மீது செய்தாலும் கண்டிக்க வேண்டும். மேலும், அப்படி செய்தவரை கொலை செய்தது அதைவிட பன்மடங்கு கண்டிக்கப்பட வேண்டிய மாபெரும் வன்செயல்.

எனது வன்மையான கண்டங்கள்.

பிறகு, காகிதத்தில் புனிதம் இல்லை என்பது வேறு விஷயம். ஆனால், அழிப்பு செயலின் நோக்கம்தான் இங்கே முக்கியம்.

இதே போன்று மத மாச்சர்யம் காரணமாக கலவர உள் நோக்கோடு ஒரு முஸ்லிம் பைபிளையோ பகவத் கீதையையோ (அது புத்தகமாகவோ... கேசட்டாகவோ... ஸிடி யாகவோ மெமரி கார்ட் அல்லது பென் ட்ரைவ் ஆக இருந்தாலும்) எரித்தால் - அல்லது வேறு வகையில் பகிரங்கமாக வேண்டுமென்றே அழித்தால் உடைத்தால் வைரஸ் விட்டால் கூட அது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்தான் என்றே நான் கருதுகிறேன்.

மற்றபடி...

இப்பதிவில் நீங்கள் அருமையாக சுட்டியபடி... குர்ஆன் ஒலி வடிவத்தில் தான் அருளப்பட்டது. அப்படியேதான் உலக முஸ்லிம்கள் மனங்களில் அல்லாஹ் குர்ஆனை மனனம் செய்ய வைத்து பாது காத்து வருகிறான். உலகில் உள்ள எல்லா காகித/ஒலிநாடா/சிடி-ஹார்ட் டிரைவ் டிஜிட்டல் குர்ஆன் பிரதியும் அழிக்கப்பட்டாலும்... அடுத்த நொடியே... கோடானு கோடி முஸ்லிம் மனங்கள் அதனை பல்வேறு வழியில் பிரதி எடுக்க ஆரம்பித்து விடும்..!

சுவனப் பிரியன் said...


திரு பாண்டியன்!

//ஈராக்கில் தற்போது பெண்களை ஏற்றுமதி செய்யும் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. ஒரு கன்னிப் பெண் 5000 டாலர்களுக்கு விலை போகின்றார்.//

இந்த செய்தி உண்மையானால் அதற்கு யார் காரணம்? சிறப்பாக ஆட்சி செய்து வந்த சதாம் ஹூகைனை நீக்கியது ஏன்? பெட்ரோலை உலக மார்க்கெட்டில் டாலரில் விநியோகம் செய்ய மாட்டேன். யு_ரோவுக்கு மாறப் போகிறேன் என்று சதாம் சொல்லவும் அங்கு ரசாயன ஆயுதங்கள் உள்ளன என்ற பொய்யான காரணத்தை சொல்லி போர் தொடுத்தது யார்? ஒரு சிறிய நாட்டை 10க்கு மேற்பட்ட நாசகார நாடுகள் துவம்சம் செய்தன. இன்று அந்த மக்கள் உணவுக்கு சிரமப்படும் நிலை. இதை உண்டாக்கியது அமெரிக்க ஐரோப்பிய கிறித்தவ நாடுகள் அல்லவா?

அதனால் ஐரோப்பிய மக்கள் தங்கள் அரசாங்கத்தின் செயலால் வெறுத்து போய் இன்று இஸ்லாத்தை எந்த பிரசாரமும் இல்லாமல் கூட்டம் கூட்டமாக ஏற்று வருகின்றனர். இன்னும் ஒரு 10 ஆண்டுகளில் உலகின் தலைவிதியை நிர்ணயிக்கும் வல்லமை முஸ்லிம்கள் கைகளில் வருகிறதா இல்லையா என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

சுவனப் பிரியன் said...

சலாம் சகோ ஆஷிக்!

//இப்பதிவில் நீங்கள் அருமையாக சுட்டியபடி... குர்ஆன் ஒலி வடிவத்தில் தான் அருளப்பட்டது. அப்படியேதான் உலக முஸ்லிம்கள் மனங்களில் அல்லாஹ் குர்ஆனை மனனம் செய்ய வைத்து பாது காத்து வருகிறான். உலகில் உள்ள எல்லா காகித/ஒலிநாடா/சிடி-ஹார்ட் டிரைவ் டிஜிட்டல் குர்ஆன் பிரதியும் அழிக்கப்பட்டாலும்... அடுத்த நொடியே... கோடானு கோடி முஸ்லிம் மனங்கள் அதனை பல்வேறு வழியில் பிரதி எடுக்க ஆரம்பித்து விடும்..!//

வருகைக்கும் நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி! கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் சில விஷமிகள் குர்ஆன், பைபிள், கீதை போன்றவற்றை எரித்தால் அதனை உடன் தடுத்து காவலர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும். இதில் மாற்றுக் கருத்து இல்லை.

Anonymous said...

கண்ணன் ராமசாமி says:
December 24, 2012 at 6:38 pm

This is what we have been saying, my friend. How long can you expect hindus tolerating getting killed by muslim terrorists? Try teaching this patience to your muslim brethen.//

நீங்கள் தவறாக செயல்பட்ட சில முசுலீம்களை சுட்டிக் காட்டி உங்கள் முசுலிம்களுக்கு அமைதியை கற்றுத் தாருங்கள் என்று கூறுகிறீர்கள்.
ஆனால் ஒரு இந்து தவறு செய்தால் மட்டும்; எல்லோரும் அப்படியில்லை. ஏதாவது ஒன்றிரண்டு பேர் இப்படி வெறிப் பிடித்து அலைகிறார்கள் என்று கூறுகிறீர்கள்.
இது எந்த வகையில் நியாயம்? நீங்கள் சுட்டிக் காட்டியது போல ஒரு நல்ல முசுலிமை நானும் சுட்டிக் காட்டுவேன்.
ஏன், ஹே ராம் படத்தில் நான் குறிப்பிட்ட அந்த வசனத்தை சொல்வதே ஒரு முசுலிம் தானே? ஷாருக் கானிடம் உள்ளதே அந்த மன்னிக்கும் குணம்? இதைச் சொன்னால் அவர் காசு வாங்கிக் கொண்டு நடித்தார் என்பீர்கள். காரணம், உங்களிடம் அந்த நல்லெண்ணம் இல்லை. அவருடைய பெயரில் கான்-என்ற வார்த்தை இருந்ததாலேயே அவரை தீவிரவாதி போல நடத்தினார்கள் விமான நிலையத்தில். ஏன் கமலுக்கே இது நடந்திருக்கிறது. உன்னை போல் ஒருவன் சமயத்தில் கமலுடைய தாடியையும், ஹாசன் என்ற புனைப் பெயரையும் பார்த்து அவர் தீவிரவாதியா என்று சோதித்தார்கள். இந்துவை சகோதரனாக பார்த்த ஒரு முசுலிமிற்கும், இந்து முசுலிம் இணக்கத்தை வலியுறுத்தும் ஒரு இந்துவுக்கும் நம் இந்து நாடு கொடுத்த மரியாதை இது தான்!

உதாரணம் இரண்டு, கோத்ரா ரயில் எரிப்பில் சம்மந்தப் பட்டவர் என்று குற்றம் சாட்டப் படும் மொதியை பிரதமர் பதவிக்கு வர வழிக்க வேண்டும் என்று கூறும் அளவிற்கு ஒரு முசுலிமிற்கு பெரிய மனது உள்ளதே! டிவியில் பார்க்கவில்லையா? இங்கே குறிப்பிட்டிருக்கும் விவரத்தை படிக்கவில்லையா?

Roughly 25 percent who cast their ballots for the BJP this election were Muslim, says Mr. Deshmukh, who polled more than 78,000 voters, including 7,000 Muslims as they exited voting booths across the state. That’s up from just 3 percent in 2007. While the majority of Muslims still vote for the Congress party, a growing number of young educated Muslims are opting for the BJP, says Deshmukh. They believe Modi is the most viable option for sustained growth and career opportunities in the state.//

இதை எல்லாம் ஏன் நீங்கள் பார்க்க மாட்டேன் என்கிறீர்கள்?
நான் கொடுத்த உதாரணங்களை மறுக்க்கப் போகும் நீங்கள்,
என்னை புதிய கண்ணோட்டத்தை ஏற்கும் அளவிற்கு மனப்பக்குவம் இல்லாத ஒருவராக எப்படி குற்றம் சுமத்தலாம்?

உதாரணம் மூன்று, நேற்று நான் என்னோடு பயின்ற ஒரு முசுலிம் நண்பரின் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். படிக்கும் போது அவனுடன் பெரிதாக பேச்சு வார்த்தை இருந்ததில்லை. ஆனாலும் என் நெற்றியில் இருந்த திருநீறை கவனித்த பிறகும் என்னை ஆறத் தழுவி வரவேற்ற அவர்கள், தனியாக அழைத்து உட்கார வைத்து, மமிசமில்லா உணவைப் பரிமாறினார்கள்.

நான் இது போன்ற முசுலீம்களுக்குத் தான் முதலில் இருந்தே வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறேன். கெட்டவர்களை இனம் கண்டு கொள்வது ரொம்பவே சுலபம். நல்லவர்களையும் கொஞ்சம் தேடுங்கள் அன்புத் தோழி, ஸ்மிதா அவர்களே! நம் இந்து மதத்தில் உள்ள நல்லவர்களையும் கமல் இனம் கண்டு கொண்டுள்ளார். கமலுடன் இணைந்து நூறு படங்களுக்கு மேல் இசை அமைத்த இளையராஜா என்ற இந்துவை கமல் அண்ணன் என்று வாய் நிறையக் கூப்பிடுகிறார். அதையும் கொஞ்சம் கவனியுங்கள். அவர் விமர்சனம் செய்யும் தவறுகளை உண்மையிலே நாம் மாற்றிக் கொண்டு விட்டால், இந்த குற்றச் சாட்டுகளுக்கு இலக்காக வேண்டிய அவசியம் இருக்காதே என்ற கண்ணோட்டத்தை கொஞ்சம் கருத்தில் ஏற்றிக் கொள்ளுங்கள்.

Anonymous said...

கண்ணன் ராமசாமி says:
December 24, 2012 at 6:13 pm

U are not a torch bearer for hinduism, you are also part of one//

இந்து மதத்தில் விளக்கை ஏந்திச் செல்ல புதிதாக ஞான சூனியங்கள் கிடைக்க மாட்டார்கள். கமல் சொல்வது போல, புதிய காந்தியை நீங்கள் பார்லிமென்ட்-ல் தேடிக் கொண்டிருந்தால் கிடைக்க மாட்டன். உங்கள் தெருவில், உங்கள் வீட்டில் தேடுங்கள். இந்து மதத்தின் அங்கமாக இருந்தவர்கள் தான் இந்து மதத்தை விமர்சனம் செய்து திருத்தியும் எழுதினார்கள்.

I have no locu standi to talk of kamal? Fine. What locus standi kamal has to talk ill of hindusim? He has ditched 2 woman, has a live in relationship with another.
Intha maana ketta pozhappukku neenga vakkaalaaththu vera?//

இன்னும் இதை பத்தி பெசலையே-ன்னு பார்த்தேன். நான் இந்துக் கடவுளுக்கு மூன்று பெண்டாட்டிகள் இருப்பதையும் ஏற்கவில்லை. கமலுக்கு இரண்டு பெண்டாட்டி இருந்ததையும் ஏற்கவில்லை. நீங்கள் கண்ணனிடன் அன்பை மட்டும் பார்ப்பீர்கள். ஆனால் கமலை காம வெறியர் என்ற சொல்வீர்கள். அது உங்களுக்கே உரித்தான ஞாயம்! நான் கமலுடைய சொந்த வாழ்க்கையை விமர்சிக்க ஆண்-பெண் எண்ணிக்கையை சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். ஒரு ஆண் இரு பெண்களை மணக்கும் போது மற்றொரு ஆணின் உரிமையை மறைமுகமாக பறிக்கிறான். இது தவறு.
ஆனால், இது சரி; அது தவறு என்று சொல்ல ஒருவருடைய சொந்த வாழ்க்கை சரியாக இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. சமூகத்திற்கு அவர் நல்லதை செய்திருந்தால் போதுமானது.

Unfortunatley he is a role model for even educated minds like you, that is the bigger danger.//

கமலை ஏன் முன்னோடியாக எடுத்துக் கொள்ளக் கூடாது?
அவர் உடல் தானம் செய்கிறார். நானும் செய்வேன்.
அவர் பகுத்தறிந்து பேசுகிறார். நானும் பேசுவேன்.
அவர் தொடங்கி வைத்த பின்பு தான் அரசியல் கட்சிகளே கூட ரத்த தான முகாம்களைக் கொண்டு வந்தன. நானும் ரத்தம் கொடுப்பேன்.
அவர் நேர்மையாக டாக்ஸ் கட்டுகிறார்; அதையும் நான் செய்வேன்.
இந்து மதத்தில் உள்ள சாக்கடைகளை அவர் விமர்சிக்கிறார். அதையும் நான் செய்வேன்.
ராமானுஜரையும், காந்தியையும், பாரதியையும் அவர் போற்றுகிறார். அதையும் நான் செய்வேன்..

இப்பொது வரை நீங்கள் என்னையும் கமலையும் தனிப்பட்ட முறையில் தகாத வார்த்தைகளில் தாக்கி இருந்தாலும், உங்களை நான் மரியாதையோடு தான் நடத்தியிருக்கிறேன். நான் கமலை பின்பற்றியதால் உங்களைப் போன்ற இந்துவுக்கு நல்லது தானே நடந்தது!

T.Thenmathuran said...

ம்ம்... சுவனப்பிரியன்.... நேர்மையான, தெளிவான விளக்கம்... நன்றி.

Anonymous said...

நியூயார்க்:அமெரிக்காவில், தீயணைக்க வந்த வீரர்கள் இருவர், சுட்டுக் கொல்லப்பட்டனர். அமெரிக்காவில், துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் சர்வசாதாரணமாகி விட்டன. கடந்த வாரம், ஒரு பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கிடையே, நேற்று, நியூயார்க்கின், வெப்ஸ்டர் பகுதியில், இன்ஜின் கம்பெனி ஒன்றும், அங்குள்ள வாகனங்களும், தீப்பற்றி எரிவதாகத் தகவல் வந்தது. இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து, தீயை அணைக்கத் துவங்கினர்.தீயை கட்டுப்படுத்திக் கொண்டிருந்த தீயணைப்பு வீரர்களை நோக்கி சிலர், திடீரென சுட்டனர். இதில், இரண்டு தீயணைப்பு வீரர்கள் கொல்லப்பட்டனர். சில வீரர்கள் காயமடைந்தனர்.துப்பாக்கியால் சுட்ட நபர்கள் தான், அப்பகுதியில், தீ விபத்தை ஏற்படுத்தி உள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக, போலீசார் விசாரிக்கின்றனர்.

dinamalar
25-12-2012

UNMAIKAL said...

இயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! :

போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை! .


Monday, 26 November 2012 04:57 MARUPPU மீடியா - மறுப்பு செய்திகள் .

NOV26, டிசம்பர் 25ந்தேதி இயேசு பிறந்தார், என்பதும் தவறு, வரலாற்றில் சொல்லப்பட்டுள்ள வருடமும் தவறு என்று, கத்தோலிக்க மத நிறுவனர் "போப்" ஆண்டவர் "பென்னடிக்ட்" தெரிவித்துள்ளார்.

போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" அவர்களால் எழுதப்பட்டுள்ள "The Infancy Narraatives" என்ற புத்தகத்தின் 3ம் பாகத்தில்,

இயேசு பிறந்த நாள் என்று சொல்லப்பட்டு வரும் "டிசம்பர் 25" என்பதும் தவறு,

இயேசு பிறந்ததாக நம்பப்படும் வருடத்திலும் பல ஆண்டுகள் வித்தியாசம் உள்ளதாக கூறுகிறார்,போப்.

இதற்கு முன்பும் இயேசுவின் வரலாற்றில் தவறுகள் உள்ளன, என பலராலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தாலும்,

கத்தோலிக்க நிறுவனரான "போப்" ஒருவரே இப்படி பகிரங்கமாக அறிவித்திருப்பது, இதுவே முதல் முறையாகும்.

இந்த புத்தகம், 20 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு லட்சக்கணக்கான பிரதிகள் அச்சடிக்கப்பட்டு பல நாடுகளிலும் விநியோகிக்க தயார் நிலையில் உள்ளதாக, தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிருஸ்தவர்கள், "ஈசா நபி" குறித்து தவறான கொள்கையை கடைப்பிடிக்கின்றனர், என்று கடந்த 1400 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இஸ்லாமியர்கள் சொல்லி வருவதும் குறிப்பிடத்தக்கது

source: http://www.maruppu.in/all-medias/43-maruppu-news/639--qq-

Anonymous said...

//முதலில் அந்த குர்ஆனை யார் எரித்தது என்பதே தெரியவில்லை. அப்படியே அந்த நபர் எரித்திருந்தாலும் இஸ்லாமிய சட்டத்தின் படி அது தீயிட்டு கொலை செய்யும் அளவுக்கு மிகப் பெரிய குற்றமும் கிடையாது. அறியாமல் செய்த அந்த தவறை விளக்கி அவரை கண்டித்து விட்டிருக்கலாம். அடுத்து குற்றவாளியை காவல் துறை வசம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைத்த ஒருவரை இந்த கிறுக்குக் கூட்டம் காவல் நிலையம் சென்று அவரை இழுத்து வந்து தீயிட்டு கொளுத்தியிருக்கிறது. இது மடத்தனமான செயல். இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.//

மனிதனை எரித்தவர்கள் உண்மையிலேயே கிறுக்குக் கூட்டம் என்பதும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதும் சரிதான். எவ்வாறாயினும், பள்ளவாசலினுள் குர்ஆனை எரித்தவர் யாராயினும் அது கட்டாயம் கண்டிக்க வேண்டியதே.

மேற்படி சம்பவத்தைப் போலன்றி, இலங்கையில் மாவனல்லை நகரில் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன்னர் முஸ்லிம்களுக்கு எதிராகச் சிங்கள பௌத்தர்கள் கலவரம் செய்தபோது அந்தக் காடையர் கூட்டம் திருக்குர்ஆனை எரித்திருந்தது. அது போன்ற செயல்கள் முஸ்லிம்களை இழிவுபடுத்தும் நோக்கிலானவை. அவ்வாறு எவரேனும் செய்திருப்பின், அதற்குரிய சரியான தண்டனையைக் கொடுத்தேயாக வேண்டும்.

- வள்ளுவன்

UNMAIKAL said...

உ.பி,யில் 9 அமைச்சர்கள் மீது கற்பழிப்பு வழக்குகள்!

48 பேரில் 26 அமைச்சர்கள் கிரிமினல்கள்!!


Posted by: Mathi Updated: Monday, December 24, 2012, 14:06 [IST]

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவோம் என்று அறைகூவல் விட்டு முதல்வர் பொறுப்பேற்ற அகிலேஷ் யாதவ் தலைமையிலான அமைச்சரவையில் 54% பேர் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்களாம்!

இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் அதிகம் நடைபெறக்கூடிய ஒரு மாநிலமாக இருப்பது உத்தரப்பிரதேசம்தான்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சட்டம் -ஒழுங்கு என்பது பொதுவாக அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது இல்லை.

சில தாதாக்கள் வசம்தான் இருக்கும்.

ஆனால் தற்போது அந்த தாதாக்களே அமைச்சர்களாகவும் வலம் வருவதால் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கும் என்பதை சொல்லத்தான் வேண்டியதில்லை.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைச்சர்களாக இருப்பவர்கள் தேர்தலின் போது தாக்கல் செய்தபோது ஆவணங்களை ஆய்வு செய்து ஒரு அறிக்கையை நேற்று வெளியிட்டிருக்கிறது.

இதில் உத்தரப்பிரதேசத்தின் 48 கேபினட் அமைச்சர்களில் 26 பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது.

Read more at: http://tamil.oneindia.in/news/2012/12/24/india-26-of-48-up-cabinet-ministers-have-criminal-past-166779.html

UNMAIKAL said...

ஹிந்துத்துவா சக்திகளின் தலையீடே டெல்லி வன்முறைக்கு காரணம்!

24 Dec 2012 புதுடெல்லி:டெல்லியில் ஓடும் பேருந்தில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட கொடிய செயலைக் கண்டித்தும்,

குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக் கோரியும் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது.

இதற்கு காரணம், ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க மற்றும் பாபா ராம்தேவின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட ஹிந்துத்துவா வகுப்புவாத சக்திகளின் தலையீடே காரணம் என கூறப்படுகிறது.

காவி ரிப்பன் தலையில் கட்டிய ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் போலீஸ் தடுப்புகளுக்கு மேலே ஏறி நின்று போலீஸார் மீது தாக்குதலை நடத்தினர்.

தீவிர ஹிந்துத்துவா இயக்கமான பகத்சிங் க்ராந்தி சேனாவும், உணர்ச்சியை தூண்டும் கோஷங்களுடன் போராட்டக்காரர்கள் மத்தியில் நுழைந்தது.

இந்தியா கேட்டில் மாலையில் பாபா ராம்தேவ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் கெஜ்ரிவாலும் போராட்டத்தில் பங்கேற்றனர். மாலையிலேயே போராட்டம் தீவிரமடைந்தது.

ஐஸா, டி.ஒய்.எஃப்.ஐ அமைப்புகளைச் சார்ந்தவர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
எந்த இயக்கத்தையும் சாராத இளைஞர்கள் தாம் போராட்டத்தில் பெரும் திரளாக கலந்துகொண்டனர்.

இந்நிலையில் சங்க்பரிவாரின் தலையீடே அமைதியான போராட்டத்தை வன்முறையாக மாற்றியது.

மாணவர்களை உபயோகித்து போலீஸாரை தாக்கியதோடு, பொதுச் சொத்துக்களுக்கும் இவர்கள் சேதத்தை ஏற்படுத்தினர்.

நேற்று முன் தினம் நடந்த போராட்டம், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக இணையதளங்கள் மூலமாக விடுக்கப்பட்ட மெஸேஜ்களின் அடிப்படையில் மக்கள் திரண்டனர்.

ஆனால், உள்துறை அமைச்சருடன் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து பெரும்பாலோர் கலைந்து சென்று விட்டனர்.

ஆனால், ஒரு கூட்டத்தினர் கலைந்து செல்லவில்லை.

நேற்று விடுமுறை தினம் என்பதால் மீண்டும் போராட்டம் நடத்த மாணவர்கள் திரண்டனர்.
ஆனால், நேற்று முன் தினம் கூடிய அளவுக்கு மக்கள் கூட்டம் இல்லை.

எனினும், ஹிந்துத்துவா வகுப்புவாத சக்திகளின் தலையீடே போராட்டத்தை வன்முறையாக மாற்றியது.

மாணவர்களிடையே வெளி சக்திகள் ஊடுருவி வன்முறையை ஏற்படுத்தியதாக போலீசாரும் தெரிவித்துள்ளனர்.

SOURCE:http://www.thoothuonline.com

டெல்லி பலாத்கார எதிர்ப்புப் போராட்டத்தில் காயமடைந்த போலீஸ்காரர் மரணம்

Posted by: Sudha Published: Tuesday, December 25, 2012, 8:53 [IST]

டெல்லி: டெல்லியில் பாலியல் பலாத்காரத்திற்கு எதிரான போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் தாக்கியதில் காயமடைந்ததாக கூறப்படும் காவலர் சுபாஷ் தோமர் மரணமடைந்தார்.

இன்று காலை டெல்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது.

இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டத்தின்போது தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்தார்.

இந்தியா கேட் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. இதையடுத்து பலத்த காயத்துடன் அவரை மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்.

தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் இன்றுகாலை உயிரிழந்தார். போராட்டக்காரர்கள் இவரை சரமாரியாக சூழ்ந்து கொண்டு கற்களை வீசியும், தாக்கியும் காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

ஆனால் போராட்டக்காரர்கள் இதை மறுத்துள்ளனர். இதுதொடர்பாக ஏற்கனவே ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

SOURCE: http://tamil.oneindia.in/news/2012/12/25/india-gangrape-protests-constable-subhash-tomar-injured-166829.html

UNMAIKAL said...

5 வயது சிறுமி மீதான பாலியல் வன் கொடுமை :

டெல்லி நீதிமன்றம் தூக்குத்தண்டனை அறிவிப்பு


Tuesday, 25 December 2012 01:46

உத்தர பிரதேசத்தில் 5வயது சிறுமியை வன்புணர்வு செய்து படுகொலை செய்த வழக்கில் குற்றவாளி சுரேந்தர் கோலிக்கு

தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சுரேந்தர் கோலி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது.

வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த தனது ஐந்து வயது மகளை காணவில்லை என தந்தை காவல்துறையில் புகார்கொடுத்ததை அடுத்து, மொகிந்தர் சிங்கையும், அவரது வீட்டில் வேலை செய்த சுரேந்தர் கோலியையும், 2006ம் ஆண்டு காவல்துறையினர் கைது செய்து விசாரித்தனர்.

பின்னர் அவர்களது வீட்டு கழிவு தொட்டியிலிருந்து எலும்புக்கூடுகளும் கைப்பற்றப்பட்டன.

இது போன்று பல சிறுமிகளை வன்கொடுமை செய்து கொலை செய்ததோடு, கொலையானவர்களின் எலும்புகளை சுவைத்து சாப்பிட்டதாக சுரேந்தர் கோலி தன் குற்றத்தை ஒப்புக்கொண்டான்.

இதையடுத்து நான்கு வழக்குகளில் நீதிமன்றம் ஏற்கனவே அவருக்கு தூக்கு தண்டனை வழங்கியிருந்தது.

தற்போது ஐந்தாவது வழக்கிலும் இவ்வாறு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி காசியாபாத் சிபிஐ நீதிமன்றம் இத்தண்டனையை அறிவித்துள்ளது.

கடந்த வாரம் டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கல்லூரி மாணவிக்கு நீதிகோரி டெல்லியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த போது பெண்களை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு அதிகபட்சமாக மரணதண்டனை விதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

இதனை பரிசீலிப்பதாக அவரும் தெரிவித்துள்ளார். இந்நிலையிலேயே டெல்லி நீதிமன்றில் இத்தூக்குத்தண்டனை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

SOURCE:http://www.4tamilmedia.com/

Anonymous said...

jaisankar jaganathan said...

//அப்படின்னா காபிர்களின் கதி?//

கோவிந்தா கோவிந்தா

ராவணன் said...

////சில மாற்றங்கள் தற்போது வந்து கொண்டிருக்கிறது. முதலில் மதரஸாக்களில் மனிதர்கள் இயற்றிய குப்பைகளை தூக்கி எறிந்து விட்டு குர்ஆனையும், நபி மொழிகளையும் பயிற்று விக்க முயற்சி எடுத்தாலே அனேக மூடப்பழக்கங்கள் குறைய வாய்ப்புண்டு.////

அண்ணாச்ச்சி...அந்த பீ....பீஜெ என்ற மனிதரின் மொழிகளைக் கேட்கவேண்டாம்.

அண்ணாச்சி நம்ம ஒரே இறைவன் முனியாண்டிசாமிக்குத் தெரியாதா?

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

உண்மையை சொல்லி இருக்கீங்க.

ஆனால் இந்த மூடர் கூட்டம்,பாகிஸ்தான்,ஆப்கானில் மட்டும் இல்லை உலகம் முழுக்க இருப்பதையும் சொல்லி இருக்கலாம்.

எல்லா மதமும் மூடர்களை உருவாக்குவதில் தான் அக்கறைக்காட்டுது. :-))

---------

சதாம் ஹீசைன் நல்லவர்னு இப்போ சொல்லுறிங்க, 90 இல் குவைத் மீது படை எடுத்து நல்லாட்சி வழங்க முயன்ற சதாம் ஹீசைனை, காபீரான அமெரிக்கா கூட சேர்ந்து ஏன் சண்டை போட்டாங்கனு சொல்லி இருக்கலாம் :-))

சவுதி ஆதரவுடன் தான் சதாம் ஹீசைனை அமெரிக்கா அடக்கியது என்பதையும் சொல்லி இருக்கலாம் !!!

சுவனப் பிரியன் said...

சகோ வவ்வால்!

//ஆனால் இந்த மூடர் கூட்டம்,பாகிஸ்தான்,ஆப்கானில் மட்டும் இல்லை உலகம் முழுக்க இருப்பதையும் சொல்லி இருக்கலாம்.//

தவறை எந்த நாட்டுக்காரன் செய்தாலும், எந்த மத்துக்காரன் செய்தாலும் கண்டிக்க வேண்டும். தண்டிக்க வேண்டும்.

சுவனப் பிரியன் said...

//சதாம் ஹீசைன் நல்லவர்னு இப்போ சொல்லுறிங்க, 90 இல் குவைத் மீது படை எடுத்து நல்லாட்சி வழங்க முயன்ற சதாம் ஹீசைனை, காபீரான அமெரிக்கா கூட சேர்ந்து ஏன் சண்டை போட்டாங்கனு சொல்லி இருக்கலாம் :-))

சவுதி ஆதரவுடன் தான் சதாம் ஹீசைனை அமெரிக்கா அடக்கியது என்பதையும் சொல்லி இருக்கலாம் !!!//

அமெரிக்கா விரித்த வலையில் சதாம் வசமாக விழுந்து விட்டார். குவைத்தை ஆக்கிரமித்தது சதாம் செய்த முதல் குற்றம். விலகி விடச் சொல்லி சவுதி அரேபியாவும் பலமுறை சதாமிடம் பேசிப் பார்த்தது. ஆனால் அவர் மசியவில்லை. வேறு வழியில்லாமலதான் அரை மனதோடு சவுதி அமெரிக்காவுக்கு இடம் கொடுத்தது.

அவரை குவைத்தை ஆக்கிரமிக்க சொல்லி முன்பு சில அமெரிக்கர்களே சதாமுக்கு ஆலோசனை வழங்கினராம். எல்லாம் யூத முளை. சரியாக செயல்பட்டு சதாமை கவிழ்த்து விட்டது.

ஆனந்த் சாகர் said...


சு.பிரியன் : //இன்னும் ஒரு 10 ஆண்டுகளில் உலகின் தலைவிதியை நிர்ணயிக்கும் வல்லமை முஸ்லிம்கள் கைகளில் வருகிறதா இல்லையா என்பதை பொறுத்திருந்து பாருங்கள்...

மற்றவர்கள் ஆணியை பிடுங்கிக்கொண்டு இருப்பார்கள் என்ற நினைப்போ?

நீங்கள் சொல்வதைப்போல நடந்தால் ஒட்டுமொத்த முஸ்லிம் உலகமும் முழுவதுமாக அழியப்போகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.