Followers

Sunday, June 01, 2014

தமிழகத்தில் அடிமை முறை இருந்ததா?அடிமை முறை என்பது தமிழர்களுக்கு சொந்தமான ஒன்றல்ல. அதனை அறிமுகப்படுத்தியது மொகலாய மன்னர்தான். இஸ்லாம் தான் இதற்கு வழிகாட்டி என்று முன்பு தங்கமணி என்னோடு வாதம் செய்தார். ஆனால் அவரது வாதம் தவறானது என்பதற்காகவும் முகமது நபி இஸ்லாத்தை அரேபிய மக்களிடம் போதிப்பதற்கு முன்பே தமிழகத்தில் அடிமை முறை இருந்துள்ளது என்பதை விளக்குவதற்காகவும் சில ஆதராரங்களை இந்த பதிவில் பதிகிறேன்.

"சோழர்காலத்தில் அடிமை முறை வழக்கத்தில் இருந்தது. அடிமைகளாகவே சிலர் வாழ்ந்துள்ளனர். சிலர் வரிகட்ட முடியாமல் தங்களைத் தாங்களே விற்றுக் கொண்டனர். தலைமுறை தலைமுறையாகப் பணி செய்யவும் சிலர் விற்கப்பட்டனர். போரில் சிறைபிடிக்கப்பட ஆண்களும் பெண்களுமே பெரும்பாலும் பணியாளர்களாக அமர்த்தப்பட்டனர். போரிட்டு வென்ற வேற்று நாட்டிலிருந்து கொணர்ந்த பெண்கள் வேளம் என்ற மாளிகையில் குடியமர்த்தப்பட்டனர். சோழர்கள் வேளத்தில் (palace establishments) நூற்றுக்கணக்கான பெண்கள் அரசனின் பாலியல் மற்றும் களியூட்டல் பயன்பாட்டுக்காக இருந்தார்கள். இங்கு ஆண் அடிமைகளும் வேலை செய்தார்கள்."

- http://ta.wikipedia.org/wiki/சோழர்காலச்_சமுதாயம்

“விக்ரம் நூற்றாண்டு 1288 (கி.பி. 1231) வைகாசி 15-ம் நாள் வியாழக்கிழமை. இன்று இங்கே (ஸ்ரீ அன்ஹில் பாட்டனில்) கடவுளுக் கொப்பான ஸ்ரீ பீம தேவரின் வெற்றி ராஜ்ஜியத்தில் அடிமைப் பெண் விற்பனைப் பத்திரம் இவ்வாறு எழுதப்படுகிறது.
“ராணா ஸ்ரீ பிரதாப் சிங்கால் கொண்டு வரப்பட்ட சிவப்பு நிறமான பதினாறு வயது நிரம்பிய ‘பனுதி’ என்னும் பெயருடைய அடிமைப் பெண், தலைமேல் புல்லை வைத்து, நகரத்தின் பஞ்சாயத்தார் அறியும்படி நாற்சந்தில் வைத்து விற்கப்பட்டாள். அவளை விலைக்கு வாங்கிய ஆஸ்தர் அடிமைப் பணியைச் செய்விப்பதற்காக ஸ்ரீ பிரதாப் சிங்குக்கு ஐந்நூற்றி நாலு பணங்கள் தந்து, நகர வாசிகளான நாலு வர்ண மக்களுக்கும் தெரியும்படி ‘பனுதி’ அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கிக் கொண்டார்.

“இதன் பின்னர் அவ்வடிமைப் பெண் மனது வைத்துச் செய்ய வேண்டிய வேலைகளாவன: அவளை விலைக்கு வாங்கிக் கொண்டவரின் வீட்டைக் கூட்டுவது, பெருக்குவது, தானியங்களைக் குத்துவது, மாவரைப்பது, சுள்ளி பொறுக்கி வருவது, தண்ணீர் காய்ச்சுவது, அசுத்தங்களைத் தூர எறிவது, ஆடு, மாடுகளைப் பால் கறப்பது, தயிர் கடைவது, வயலுக்கு மோர் கொண்டு செல்வது, பருத்திக் காட்டில் வேலை செய்வது, நூல் நூற்பது, விவசாய வேலைகள், வீட்டு வேலைகள் முதலியன. இவ்வாறு வேலை செய்து கொண்டிருக்கும் அடிமைப் பெண்ணுக்கு வீட்டுச் சொந்தக்காரர் (எஜமான்) நாட்டையும், காலத்தையும் பொருத்தும், அவருடைய சொத்தின் அளவுப்படியும் உணவு, உடை வழங்க வேண்டும். அவள் எஜமானின் வீட்டு வேலைகளைச் செய்யும் போது அவளுடைய தந்தையோ, சகோதரனோ, கணவனோ வந்து வேலைகளுக்குத் தடங்கல் ஏற்பட்டால், எஜமான் அவ்வடிமைப் பெண்ணை ஈவிரக்க மின்றிக் கட்டி வைத்து அடித்து விற்பனைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லா வேலைகளையும் செய்யும்படி செய்யலாம். பிறகு எஜமான் அவளுடைய தலைமுடியைப் பிடித்திழுத்து, காலால் உதைத்தும், தடியால் அடித்தும் அவள் இறந்துவிட்டால், எஜமான் குற்றவாளியல்ல; அவள் தன் தலையெழுத்தின் படி செத்தாள் என்பதை நான்கு வர்ண மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தத் தீட்டிலிருந்து புனிதர்களாக்கிக் கொள்வதற்காக எஜமான் தனது மனைவி, மக்களுடன் கங்கை நதியில் மூழ்கி எழுந்தாலே போதுமானது. அந்த அடிமைப் பெண் குளம், குட்டையில் விழுந்தோ, விஷம் கலந்த உணவு சாப்பிட்டோ இறந்து விட்டால், அவளுடைய எஜமான் குற்றவாளியல்ல; அவள் தனது விதியின்படி செத்தாள் என்பதை ஊர் பஞ்சாயத்துக்காரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

எஜமான் தன் குடும்பத்தாருடன் கங்கை நீராட வேண்டும். இதில் எழுதப் பட்ட கடமைகளை ஆற்றுவதற்கு நகரக்காவலர்களும், நகர வாசிகளும் சாட்சிகளாவர். இந்த விஷயமான ராணா பிரதாப்சிங்கும், நான்கு காவலர்களும் தமது கையால் எழுதியிருக்கின்றனர். இந்த விற்பனைப் பத்திரத்தை இரு தரப்பாரும் கேட்டதன் பேரில் ஜயதா பாரதியால் எழுதப்பட்டது.”
மேற்கண்ட விற்பனைப் பத்திரத்தில் அடிமை வழக்கத்தின் எவ்வளவு மோசமான உருவத்தைக் கண்டோம்! ஆனால், கரபாத்ரி சுவாமிஜி இதை எவ்வளவு அழகாக சித்திரிக்கிறார், பாருங்களேன்;

“அடிமை முறை யுகத்தில்கூட அடிமை வேலை செய்ய இயலாமல் ஆகி விட்டால் அவளுடைய குடும்பப் பொறுப்பையும் எஜமானரே ஏற்றுக் கொண்டார்.”

“உண்மையில் இவ்வடிமைகள் பெயரளவுக்குத் தான் அடிமைகளே தவிர, அவர்கள் எஜமானரின் குடும்ப உறுப்பினர்களாகவே கருதப்பட்டனர். அதனால் தான் எஜமானர் அடிமைகளின் உணவு, உடை வசதியைக் கவனித்த பிறகே, தன் குடும்பத்தின் உணவு, உடை வசதியைக் கவனித்தார்.”

பழங்கால அடிமை முறை மீண்டும் திரும்பி வரப்போவதில்லை. இதை, கரபாத்ரியின் ‘ரிதம்பரா பிரக்ஞை’யும் அறியும் இருந்தாலும் முக்காலங்களையும் ‘அறிந்த’ ரிஷிகளின் சாஸ்திரங்களை ஆதரிப்பது அவருடைய ‘கடமை’யாதலால், அடிமை வழக்கத்தையும் ஆதரிக்கிறார் பாவம்!////

http://www.keetru.com/anaruna/aug07/ilavenil_2.php -

------------------------------------------------------------

ஆ. சிவசுப்பிரமணியன் எழுதிய "தமிழகத்தில் அடிமை முறை" என்ற நூலிலிருந்து:

சங்க காலத்தில் அடிமை முறை என்ற பகுதியில் மருத நிலப்பகுதியில் அடிமைகள் இருந்ததைக் குறிப்பிடுகிறார் “சங்க காலத்தில் வாணிபம் செழித்து வளர்ந்த நெய்தல் பகுதிகளிலும், உணவு உற்பத்தி செய்து வந்த மருத நிலப்பகுதிகளிலும் அடிமை முறை வழக்கிலிருந்தது. போரில் வெற்றி பெற்ற மன்னர்கள் தோற்ற மன்னர்களின் மனைவியரையும், பிற பெண்டிரையும் சிறை பிடித்து வந்ததைச் சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன. இவ்வாறு சிறை பிடித்துக்கொண்டு வரப்பட்ட பெண்கள் காவிரி பூம்பட்டினத்திலுள்ள அம்பலங்களில் விளக்கேற்றி நிற்பதனைக் கூறும் பொழுது “கொண்டி மகளிர்” என்று இவர்களைப் ‘பட்டினப் பாலை’ ஆசிரியர் குறிப்பிடுகிறார். (22)

பல்லவர்கள் காலத்தில் வேளாண் பெருக்கம் காரணமாக அடிமை முறை விரிவடைந்தது. இப்பொழுது உள்ள முறையில் “ஆள்” என்று அடிமைகள் குறிப்பிடப்பட்டனர். இந்தச் சொல்லைச் சுந்தரர் பல இடங்களில் பயன்படுத்தியதைச் சுட்டிக் காட்டுகிறார். “கூழாள்” என்ற சொல் பெரியாழ்வார் பாடலில் இடம் பெறுகிறது. இது பற்றிப் பெரிய வாச்சான் பிள்ளை தமது திருப்பல்லாண்டு வியாக்கியானத்தில் ‘கூழாள்’ என்ற சொல்லிற்கு “சோற்றுக்காக யாரேனும் தன்னை எழுதிக் கொடுக்கை” என்று விளக்கம் எழுதியுள்ளார் (பக். 29) அடிமைத் தொழில் இழிவாக இக்காலகட்டத்தில் கருதப்பட்டதைப் பல சமய இலக்கியச் சான்றுகள் கொண்டு விளக்கியுள்ளார்.

சோழர் காலத்தில் அடிமை முறை இன்னும் விரிவாக்கம் பெற்றது. அடிமைகள் குறித்த பல கல்வெட்டுச் சான்றுகள் சோழர் காலத்தில் கிடைக்கின்றன. போர் அடிமைகள் பெரும்பாலும் பெண்களாகவே இருந்தனர். (34) வீட்டடிமைகள் என்ற வழக்கமும் இருந்தது. சுந்தரர் கதை இதற்குச் சிறந்த உதாரணம் (35) இவற்றை விரிவாகக் கூறிவிட்டுப் பின்வரும் முடிவுகளை ஆ. சிவசுப்பிரமணியம் முன் வைக்கிறார்.

(1). அடிமை முறை சோழர் காலத்தில் நிலவியது, (2). அந்தணர் அடிமையாகும் வழக்கமில்லை, (3). அடிமையாவோர் அடிமையாளருக்கு ஓலை எழுதிக் கொடுக்கும் பழக்கமுண்டு. இதற்கு ஆளோலை என்று பெயர், (4). ஆளோலையில் எழுதிக் கொடுத்தவரின் கையெழுத்துடன் சாட்சிக் கையெழுத்தும் இருக்கும், (5). தன்னை மட்டுமின்றி, தன் பரம்பரையினரையும் அடிமையாக எழுதிக் கொடுக்கும் பழக்கமுண்டு, (6). அடிமை தன் பணியில் தவறினால் அது குறித்து அடிமையாளன் ஊர் வழக்கு மன்றத்தில் முறையிடலாம், (7). தக்க ஆளோலை இருப்பின் அடிமையாளனுக்கு அடிமையின் மேலுள்ள உரிமையை ஊரவை உறுதிப்படுத்தும் (36) சோழர் காலத்தில் கோயில்கள், மடங்கள் ஆகியவற்றில் அடிமைகள் இருந்தனர். இவற்றிற்கு அடிமைகளைத் தானமாகக் கொடுத்தனர்.

அடிமைகள் வேளாண்மையிலும், அது சார்ந்த தொழில்களிலும் இடம் பெற்றிருந்தனர். “உவச்சர் பறை கொட்டும் பணியினைச் செய்தனர். அடிமைகளுக்கு முத்திரையிடப்பட்டது. (சைவத்தில் உள்ள தீக்கையும், வைணவத்தில் உள்ள சமாச் சரணமும் இந்த வகையைச் சார்ந்தவை) அடிமைகளுக்குக் கடும் தண்டனைகளும் விதிக்கப்பட்டன. (பக். 40).

இதன் நீட்சியாக மராட்டியர்கள் கால அடிமை முறையைக் காட்டுகிறார். இந்த அதிகாரத்தில் அடிமைகள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பற்றியும் கூறுகிறார். இதற்கு முழு உதாரணமாக ‘ஒடைப்பிலே போடு’ என்ற சொல்லாக்கத்திற்கு ஒரு உதாரணம் காட்டுகிறார்.

“எப்பொழுதாவது ஒரு குளத்தில் அல்லது ஆற்றில் கரை உடைந்துவிட்டால் அதற்கு தெய்வத்தின் அல்லது பிசாசின் கோபமே காரணம் எனக் கருதி, அவற்றின் கோபத்தைத் தணிக்க ஓர் அடிமையை அந்த உடைப்பில் தள்ளி, அவர் மேல் மண்ணைப் போட்டு மூடி அவரைப் பலி கொடுத்து விடுவார்கள்..... இந்தப் பயங்கரமான பழக்கம் அவ்வளவு பரவலாக இருந்ததன் விளைவாக அது ஒரு பொதுவான பழமொழிக்கே வழிவகுத்தது! இவன் என்னத்துக்கு ஆவான்! ஒடைப்பிலே போட்டு மண்ணைச் சுமக்கவா?” என்று கூறுவர். அதாவது இவன் உடைப்பில் உயிருடன் போட்டுப் புதைப்பதற்கன்றி வேறெதற்கும் லாயக்கில்லை என்பதாகும்” (58/59).

தமிழகத்தில் அடிமை முறை:

அடிமை முறையின் ஒரு அருவருக்கத்தக்க அம்சம் தேவரடியார்கள் முறை. இது பிற்காலச் சோழர் காலத்தில் வளர்ந்ததென்று இவர்களுக்குச் சுயத்தன்மை உண்டு என்றாலும், இவர்களைக் கோயில்களுக்குத் தானமாக அளித்தனர். போரில் பிடித்த பெண்களைத் தேவரடியார்களாகத் தானமளிப்பது பெண்களை விலைக்கு வாங்கித் தானமாக அளித்தது இந்த இரு கூறுகளில் இதில் காணலாம். இவர்கள் தவறு செய்தால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர் (61) ‘பொட்டுக்கட்டுதல்’ என்ற நிகழ்ச்சி வெள்ளையர் ஆட்சிக் காலத்திலும் தமிழகத்தில் இருந்தது.

“பாலியல், பொருளியல் என்ற தன்மைகளால் அடித்தளத்திலிருக்கும் பெண்ணைப் பொது மகளாக மாற்றும் புனிதச் சடங்கே பொட்டுக் கட்டுதல். சமய முத்திரையின் வாயிலாக வரை முறையற்ற பாலுறவு புனிதமாக்கப்படுகிறது” (67) (இன்றைக்கும் கூட பெருமாள் கோயில்களில் பெருமாள் “தேவடியாக் குடிக்குச்” சென்று வருவது ஒரு திருநாளாகக் கொண்டாடப்படுகிறது).

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் குடும்பத்துடன் அடிமையாக்கப்பட்ட கொத்தடிமைகள், பண்ணையடிமைகள், படியாள் என்ற முறையும், தஞ்சைப் பண்ணையாள் முறை என்பதும் வழக்கத்தில் இருந்தது. இந்தப் பண்ணையாள் முறையை ஒழிப்பதற்கு மணலி சி. கந்தசாமி தலைமையிலான போராட்டம் எவ்வளவு முக்கியமானது என்பதை ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார் (82)

“முழங்கால் வரை இருந்த சேலையை / கணுக்கால் வரை கழுத்து விட்டதாரு / மணலி கந்தசாமி என்று கூறு” (82) இவர்கள் தவிர ஆங்கில ஆட்சியில் மலைத்தோட்ட அடிமைகளும் உருவாயினர்.

இந்த நூலில் அவர் மிகக் கவனமாக அடிமைமுறை என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். ஏனென்றால் இங்கு நிலவியது அடிமைச் சமுதாயம் அல்ல. அடிமை முறை மட்டுமே இருந்தது. இது மேற்கத்திய முறையில் இருந்து மாறுபட்டு இருந்தது. சமூக அமைப்பு புராதன இனக்குழு மக்கள் அமைப்பு, அடிமைச் சமுதாயம், நிலஉடைமைச் சமுதாயம், முதலாளித்துவச் சமூகம் என்றபடி மூளை வளர்ச்சி நம்மிடையே நேர்கோட்டுப் பாதையில் இடம் பெறவில்லை. ஆசிய உற்பத்தி முறை என்று மார்க்ஸ் அழைத்ததற்கு ஏற்ப இங்கு அவற்றில் ஒருவகைத் திணை மயக்கம் ஏற்பட்டு இருந்தது. இவற்றை கா. சிவத்தம்பி சமச்சீரற்ற வளர்ச்சி என்று அழைக்கிறார். சங்ககாலத்தில் ஐவகை நிலங்களில் அடிமைகள் மருத நிலத்தில் மட்டுமே இருந்தனர். சமுதாயமாக அல்ல ஏனென்றால் அடிமைகள் சமுதாயமாக இயங்குவதற்குரிய உபரி உற்பத்தி தமிழகத்தில் இல்லை. ஆனால் சோழர் காலத்தில் அடிமைகளின் உழைப்பு பயன்படுத்தப்பட்டது. இது பற்றி ஆசிரியர் கூறுகிறார்:

“நில உடைமைச் சமூக அமைப்பு சோழர் காலத்தில் நன்கு வேர்விட்டுத் தழைத்திருந்தது. அடிப்படை உற்பத்திச் சாதனமான நிலத்தின் மீது பிராமணர்களும் வேளாளர்களும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இவர்களுடன் கோயிலும் இணைந்து கொண்டது” (பக். 87) இங்குக் கோயில் என்பது தனி சக்தியாகக் காண்பதை விட பிராமணிய வேளாண் சமூகத்தின் ஒரு அடக்குமுறைச் சாதனமே என்றும், அது அந்த அமைப்பின் பிரதிபலிப்பு என்றும் காண்பது நல்லது. இதன் பின்னர் உருவாகும் கருத்தியலை ஆசிரியர் சரியாகவே விளக்குகிறார்.

“தமிழகத்தில் தோன்றிய பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அடிமைகளை உருவாக்க, பிராமணியம் அடிமைகளைத் தீண்டத் தகாதவர்களாக மெல்ல மெல்ல மாற்றியது எனலாம்” (பக். 8) இதன் விளைவாக “ஐரோப்பிய அடிமைகள் கொடூரமாக நடத்தப்பட்டாலும் தீண்டத் தகாதவர்களாக அவர்கள் நடத்தப்படவில்லை. “இந்திய அடிமை முறையானது ஐரோப்பிய அடிமைமுறையை விட மோசமாக இருந்தது (பக். 87). ஐரோப்பிய அடிமைகள் அறிவுசார்ந்த துறைகளிலும் ஈடுபடுத்தப்பட்டனர். இந்தியாவில் அறிவு அவர்களுக்கு மறுக்கப்பட்டது. ஐரோப்பிய அடிமைகளை விட அதிக சுதந்திரம் உள்ளவர்கள் போல இந்திய அடிமைகள் தென்பட்டாலும், உண்மையில் ஐரோப்பிய அடிமைகளைவிட அதிகமான கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகியிருந்தனர். அடிமைகளின் பணியை மேற்பார்வையிட “ஊரில் உள்ள ‘சபா’ என்ற பிராமணரின் ஊராட்சி மன்றமும் ‘ஊர்’ என்ற ஏனையோரின் ஊராட்சி மன்றமும் ஏற்றுக் கொண்டிருந்தன” (பக் 95).

மேற்கண்ட ஆதாரங்கள் தமிழகத்தில் அடிமை முறை இருந்ததை பறை சாற்றுகின்றது. பிற் காலத்தில் மொகலாயர்கள் காலத்திலும் வெள்ளையர்கள் காலத்திலும் இந்த முறை படிப்படியாக குறைக்கப்பட்டு சுதந்திர இந்தியாவில் சட்டத்தின் மூலம் முற்றாக ஒழிக்கப்பட்டது. பிரிட்டிஷார் மதத்தின் பெயரால் விளைந்த அடிமை முறையை ஒழித்தாலும், நிர்வாகத்தை மேம்படுத்த அதே அடிமை முறையை பயன்படுத்தி மக்களை மலேசியா சிலோன் அந்தமான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததையும் நாம் மறந்து விட முடியாது. 'தேவரடியார்கள்' என்று பொட்டு கட்டி விடும் வழக்கம் மறைமுகமாக இன்னும் நடந்து கொண்டதான் இருக்கிறது. நேபாளத்தில் இது சட்டபூர்வமாக இன்றும் நடந்து வருகிறது. காரணம் அது ஒரு இந்து நாடு. தற்போது நரேந்திரமோடி தலைமையில் இந்துத்வா ஆட்சியை பிடித்துள்ளதால் ஒழிந்து போன அந்த முறை திரும்பவும் புதுப்பிக்கப்படலாம். அவ்வாறு சட்டமாக்கப்பட்டால் அதனை ஒட்டு மொத்த இந்தியர்களும் எதிர்க்க வேண்டும்.


19 comments:

ஆனந்த் சாகர் said...

சரி, அடிமை முறை தமிழ் நாட்டிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும், உலகின் பல நாடுகளிலும் பழங்காலத்தில் இருந்தது. இதனால் முஹம்மது சுதந்திரமான மனிதர்களை அடிமைதனதத்திற்குள் தள்ளியது சரியாகிவிடுமா?

பழங்கால மனிதர்கள் நாகரிக வளர்ச்சி அடையாமல் இருந்ததால் அடிமை முறையை பின்பற்றினர். அவர்கள் சாதாரண மனிதர்கள், எனவே அவர்கள் அப்படி நடந்து கொண்டதை புரிந்து கொள்கிறோம். ஆனால் முஹம்மது அப்படி அல்லவே. அவர் தன்னை இறைவனின் தூதர், உலகங்களுக்கெல்லாம் அருட்கொடை(ரஹ்மத்துல் ஆலமீன்), மனிதர்களுக்கு ஒரு முன்மாதிரி என்றெல்லாம் சொல்லிக்கொண்டார். அப்படிப்பட்டவர் அவர் காலத்தில் இருந்த அடிமை முறை என்கிற சமூக சுரண்டல் தீமையை எப்படி பின்பற்றலாம்? வட்டியை தீமை என்று கூறி அதை ஒழிக்க சட்டம் போட்டவர் ஏன் அதைவிட மிக கொடூர சுரண்டலான அடிமை முறையை ஒழிக்க வேண்டும் என்று கூறவில்லை? அவர் காலத்து தீய பழக்கங்களை பின்பற்ற அல்லாஹ்வால் நபியாக அவர் அனுப்பபட்டாரா அல்லது சமூக தீமைகளை ஒழிக்க அனுப்பபட்டாரா?

அடிமை முறைக்கு எதிராக ஒரு வார்த்தையும் அல்லாஹ் குர்ஆனில் அவன் கூறவில்லை. மாறாக, அல்லாஹ் குர்ஆனில் அடிமை முறையை பின்பற்றும்படி பல வசனங்களில் சொல்கிறான். அவனுடைய வார்த்தைகளை மாற்றுவோர் ஒருவரும் இல்லை என்கிறான். உலகம் அழியும்வரை குரான் மாற்ற முடியாதது என்பதுதான் இஸ்லாமிய கோட்பாடு. அப்படியானால் இஸ்லாத்தை பொறுத்தவரை அடிமை முறை உலகம் அழியும்வரை பின்பற்ற கூடியதுதானே? அதனால் தானே நைஜீரியாவில் போகோ ஹராம் என்ற இஸ்லாமிய பயங்கரவாத இயக்கம் கடந்த மாதம் கிறிஸ்தவ பள்ளி மாணவிகளை கடத்தி சென்று அடிமையாக விற்றது? அதன் தளபதி அல்லாஹ் அடிமைகளை விற்க சொல்கிறான் என்று பேட்டி கொடுத்தான்? குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறபடி, முஹம்மது நடந்துகொண்டபடி தானே அவனும் நடந்துகொண்டான்?

சுவனப் பிரியன் said...

இஸ்லாம் பெண்களை கொடுமைபடுத்துவதாக நீங்கள் குற்றம் சாட்டினால் குர்ஆன் வசனத்திலிருந்தோ அல்லது ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலிருந்தோதான் வாதங்களை வைக்க வேண்டும். அதுதான் அறிவுடையோர் செய்யும் செயல். ஆனால் நீங்கள் வைக்கும் ஆதாரமோ சில முஸ்லிம் நாடுகளில் நடந்த நிகழ்வுகளை. இதே போன்ற ஆசிட் வீச்சுக்கு ஆளாகி நமது நாட்டில் இருபதுக்கும் மோலான பெண்கள் முகம் விகாரமாகி வாழ்ந்து வருகின்றனர். இதில் அதிகம் ஒருதலைக் காதல் விவகாரம். இதற்காக நான் இந்து மதத்தை குறை சொல்ல முடியுமா? ஏனெனில் இந்தியாவில் பாதிக்கப்பட்ட அனைவரும் இந்து பெண்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு அமைப்பையும் உருவாக்கியுள்ளனர்.

நீங்கள் போட்டுள்ள முகம் சிதைந்த படங்கள் அனைத்தும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஆப்ரிக்கா போன்ற நாட்டு பெண்களே! அங்கெல்லாம் அமெரிக்கா அரசு இஸ்ரேலிய மொஸாத்தோடு இணைந்து பல அநியாயங்களை அரங்கேற்றுகிறது. வாதத்தால் இஸ்லாத்தை வெல்ல முடியாது என்பதால் இஸ்லாமிய பெயரில் இது போன்ற ஆசிட் வீச்சுக்கு ஒரு சில பெண்களை உள்ளாக்கி இஸ்லாத்தின் மேல் வெறுப்பை வரவழைக்கின்றனர். தாலிபான்களின் தலைவர் முல்லா உமர் 'எங்கள் பெயரால் பல அநியாயங்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து செய்கின்றன. இதனை உலக மக்கள் நம்ப வேண்டாம்' என்று பெருநாள் செய்தியாக சொன்னாரே அதை பார்க்கவில்லையா? இந்த நாடுகளின் செய்தி ஸ்தாபனங்களை முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது அமெரிக்கா. அவர்கள் எதனை வெளியிடுகிறார்களோ அதுதான் செய்தி. அதைத்தான் நீங்களும் படங்களாக வெளியிட்டுள்ளீர்கள். இதற்கும் இஸ்லாமிய நடைமுறைக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை ஓரளவு நடைமுறைபடுத்தி வரும் சவுதி மற்றும் வளைகுடா நாடுகளில் இது போன்ற ஆசிட் வீச்சுகள் ஒன்றையாவது காட்ட முடியுமா?

ஆனந்த் சாகர் said...

சுவனப்பிரியன்,

உம்முடைய இந்த பின்னூட்டம் வேறொரு கட்டுரையின் மற்றவருடைய பின்னூட்டத்துக்கு பதிலாக இட வேண்டியது என்று நினைக்கிறேன்.

Lukman Madurai said...

தங்களது பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக்...

yalali1956 said...

Hello Anand SAHAR

I think you are a FILTHY FANATIC fellow trying to be smart. You don't have either an open mind or a learning capacity. How ever much we come with authentic references from your so called religious scripts or from our original religious script, you are not going to read at least. This is called " வைகோல் பட்டரை ........."

I hope you will change your adamant attitude. Debate anything with open mind not with your filthy fanatic mind. If you continue like this no body is going to entertain you. Give respect and argue with logic and reason.

BEFORE THAT YOU FIRST GO AND READ YOUR VEDAS FROM AUTHENTIC SOURCES . IF YOU CANT ACCEPT YOUR SHORTCOMINGS AS I SAID BEFORE ,YOU ARE A "" வைகோல் பட்டரை ........."

yalali1956 said...

DEAR BRO SUVANAPIRIYAN,

My humble request to you that don't waste your valuable time to answer this kind fanatic minded people who never think what is said or written in front of them. When there is a beautiful way to argue with logic and reason, they ignore this and pour out nasty, filthy and fanatic stuff from their rotten mind.

As allah said in Holy quran ( sura 7 verse 179 ) that
" நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன - ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் - இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்; இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள். "

There are lot of people who follow your post and share them in FB and other social media for others to benefit.

May allah grand you the courage and knowledge to fight against these misguided people. We pray to Allah that these people also to get the light of the true path. Ameen !!!

ஆனந்த் சாகர் said...

யலாளி,

// I think you are a FILTHY FANATIC fellow trying to be smart.//

முஸ்லிம்களால் தர்க்க அறிவுபூர்வமாக பதில் அளிக்க முடியவில்லை என்றால் அவர்களோடு வாதம் புரிபவரை அவர்கள் அவமதிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். உலகம் முழுவதும் முஸ்லிம்கள் ஒரே மாதிரிதான் இருக்கிறீர்கள். ஏனென்றால் உங்களை வார்த்தெடுக்கும் இஸ்லாம் என்ற பட்டறை அப்படி.

// You don't have either an open mind or a learning capacity.//

நான் திறந்த மனதுடன் அணுகுவதால்தான் தர்க்க பூர்வமான வாதங்களை வைக்கிறேன். ஆனால் உங்களுடைய வாதங்கள் தான் தர்க்க அறிவுக்கு புறம்பாக உள்ளன.

// How ever much we come with authentic references from your so called religious scripts or from our original religious script, you are not going to read at least. This is called " வைகோல் பட்டரை ........."//

மற்ற மதங்களை பற்றி நான் வாதம் புரியவில்லை. ஆகையால் மற்ற வேதங்களை பற்றி நீங்கள் பேசுவது நம்முடைய வாதத்துக்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாதது.

மேலும் நான் இஸ்லாத்தை பற்றி மட்டும் வாதம் புரிகிறேன். நான் வைக்கும் வாதங்கள், எதிர் வாதங்கள் இஸ்லாமிய ஆதாரபூர்வமானவை, பகுத்தறிவிற்கும் தர்க்க அறிவிற்கும் ஏற்புடையவை.

// I hope you will change your adamant attitude. Debate anything with open mind not with your filthy fanatic mind.//

இதை நான்தான் உங்களிடம் சொல்ல வேண்டி இருக்கிறது. நீங்கள் தட்டை திருப்பி போட்டு தாளம் போடுகிறீர்கள்!

// If you continue like this no body is going to entertain you.//

நம்முடைய வாதங்களை படிப்பவர்கள் யார் தர்க்க அறிவுபூர்வமாக, பகுத்தறிவுக்கு ஏற்புடைய வாதங்களை வைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வார்கள்.

// Give respect and argue with logic and reason.//

இதை நீங்கள் கடைபிடித்தால் நம்முடைய வாதம் சரியான பாதையில் செல்லும் என்று நினைக்கிறேன்.

ஆனந்த் சாகர் said...

யலாளி,

// BEFORE THAT YOU FIRST GO AND READ YOUR VEDAS FROM AUTHENTIC SOURCES . IF YOU CANT ACCEPT YOUR SHORTCOMINGS AS I SAID BEFORE ,YOU ARE A "" வைகோல் பட்டரை ........."//

நான் வேதங்களை பிடித்து தொங்கிக்கொண்டு இருக்கவில்லை. எதற்கெடுத்தாலும் வேதத்தை பார் என்பது என் அணுகுமுறை அல்ல. என்னுடைய நம்பிக்கைகளை ஏற்காத சக மனிதர்களை அசுத்தமானவர்கள், இறை நிராகரிப்பாளர்கள், அவர்களை கொல்லலாம், அடிமையாக்கலாம், அவர்களுடைய பெண்களை கற்பழிக்கலாம், அவர்களுடைய செல்வங்களை கொள்ளை அடிக்கலாம் என்று கூறுகிற எந்த வேதத்தையும்(குரான் அப்படி கூறுகிறது) நான் குப்பை தொட்டியில் எறிவேன். மாறாக உங்களை போன்று அது இறை வேதம் என்று பிதற்றிக்கொண்டு இருக்கமாட்டேன்.ஆனந்த் சாகர் said...

//As allah said in Holy quran ( sura 7 verse 179 ) that
" நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன - ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் - இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்; இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள். "//

குர்ஆனில் முஹம்மது உளறியதை அப்படியே வாந்தி எடுக்கும் உங்களுக்கு சொந்தமாக சிந்திப்பதற்கு மூளை என்பதே இல்லையா?

//நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்;//

நரகத்திற்கு எப்படியும் அனுப்ப வேண்டும் என்று மனிதர்களை படைக்கிறான் என்றால் அல்லாஹ் எப்படிப்பட்ட கொடூர மனதுடையவன்? அவன் கொடூர புத்தியுள்ள மனநோயாளி என்று தெரிகிறது. அவனைப்போய் இறைவன் என்று முஸ்லிம்கள் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

//அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன - ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் - இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்; இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள்.//

முஹம்மது சொன்னதை எல்லாம் கேள்வி எதுவும் கேட்க கூடாதாம். அவற்றை எல்லாம் அப்படியே நம்பவேண்டுமாம். அவர் கூறியவற்றை நம்பாதவர்களை, அவற்றை ஏற்காதவர்களை முஹம்மது எவ்வளவு கீழ்த்தரமாக குர்ஆனில் திட்டுகிறார் என்பதை பாருங்கள். அவரா இறைதூதர்?

yalali1956 said...

To Annad Sahar......
//முஸ்லிம்களால் தர்க்க அறிவுபூர்வமாக பதில் அளிக்க முடியவில்லை என்றால் அவர்களோடு வாதம் புரிபவரை அவர்கள் அவமதிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். உலகம் முழுவதும் முஸ்லிம்கள் ஒரே மாதிரிதான் இருக்கிறீர்கள். ஏனென்றால் உங்களை வார்த்தெடுக்கும் இஸ்லாம் என்ற பட்டறை அப்படி.//

My dear boy you don't know how to debate or how to develop your knowledge. What you know is your rotten backward fanatic thinking. A real debater will argue with authentic proofs and references but what you bark is your mad imaginations without referring any source. We don't take it into account these kind of fools. Since Islam made us with tolerance and peace we let guys like you in this blog to pour out your filthy thoughts .

//நான் திறந்த மனதுடன் அணுகுவதால்தான் தர்க்க பூர்வமான வாதங்களை வைக்கிறேன். ஆனால் உங்களுடைய வாதங்கள் தான் தர்க்க அறிவுக்கு புறம்பாக உள்ளன.//

I have seen your so called "open mind" in most of your comments. You are a merely a hater of Islam, Indian muslims, Quran and Prof. Muhhamad. I am 100% sure you have no knowledge or a little knowledge which too you might have copy paste out of context from books about this religion. While following most of your comments i could say this. You check what you have written when comes to matters relating to muslims ( you scold with your filthy mouth and accept " Indian muslims are to be sent to pakis. ).

//நான் வேதங்களை பிடித்து தொங்கிக்கொண்டு இருக்கவில்லை. எதற்கெடுத்தாலும் வேதத்தை பார் என்பது என் அணுகுமுறை அல்ல. என்னுடைய நம்பிக்கைகளை ஏற்காத சக மனிதர்களை அசுத்தமானவர்கள், இறை நிராகரிப்பாளர்கள், அவர்களை கொல்லலாம், அடிமையாக்கலாம், அவர்களுடைய பெண்களை கற்பழிக்கலாம், அவர்களுடைய செல்வங்களை கொள்ளை அடிக்கலாம் என்று கூறுகிற எந்த வேதத்தையும்(குரான் அப்படி கூறுகிறது) நான் குப்பை தொட்டியில் எறிவேன். மாறாக உங்களை போன்று அது இறை வேதம் என்று பிதற்றிக்கொண்டு இருக்கமாட்டேன்.//

You are not a Hindu, Christian, Muslim, or atheist then what the hell are you. Again see all your allegations are without any authentic proofs. what your filthy rotten mind think you convert into words and never check what you say. Is it called "Open mind with logic and reason " ??. If so then what i said about you all are 100% correct.

yalali1956 said...

//குர்ஆனில் முஹம்மது உளறியதை அப்படியே வாந்தி எடுக்கும் உங்களுக்கு சொந்தமாக சிந்திப்பதற்கு மூளை என்பதே இல்லையா?//

Here it is !! your ignorance about Holy Quran and Prophet Muhhamad. So it implies you know nothing about Islam. Go and search from authentic sources What is Quran and Who is Prophet. What can i say about you. You neither have interest to learn your vedas nor other religious script to mold your arguments in beautiful and logical way. Sorry Dear...

//நரகத்திற்கு எப்படியும் அனுப்ப வேண்டும் என்று மனிதர்களை படைக்கிறான் என்றால் அல்லாஹ் எப்படிப்பட்ட கொடூர மனதுடையவன்? அவன் கொடூர புத்தியுள்ள மனநோயாளி என்று தெரிகிறது. அவனைப்போய் இறைவன் என்று முஸ்லிம்கள் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்//

You keep on proving that you are so poor in understanding. Allah never says " what ever it is i will sent some people to hell" where as he says " Some people will be sent to hell" There is vast difference between in your poor understanding and the statement of the Quran. Now you can decide who is mad ??

//முஹம்மது சொன்னதை எல்லாம் கேள்வி எதுவும் கேட்க கூடாதாம். அவற்றை எல்லாம் அப்படியே நம்பவேண்டுமாம். அவர் கூறியவற்றை நம்பாதவர்களை, அவற்றை ஏற்காதவர்களை முஹம்மது எவ்வளவு கீழ்த்தரமாக குர்ஆனில் திட்டுகிறார் என்பதை பாருங்கள். அவரா இறைதூதர்? //

Ha ha ha ha ha........I really couldn't stop my laughing. You are really confused yes really.....For this i have already commented, anyhow for your stiff mind i will say again, that is, you have a big confusion as to what is Quran and who is Prof. Muhammad. Any knowledge will not come just like that my boy.... go and search. who knows !! you might get real knowledge about Islam and its concept of god and its Prophet.
Anyhow ,since you are a kid in terms of Islamic knowledge i just give 2 links for you to read:

1. http://en.wikipedia.org/wiki/The_100:_A_Ranking_of_the_Most_Influential_Persons_in_History

2.
http://www.fountainmagazine.com/Issue/detail/Understanding-Prophet-Muhammad-Beyond-the-Stereotypes

Come with beautiful open debates after knowing opponents concept on the subject and with your real authentic proofs. May allah open your mind and grand wide knowledge. ameen !!

ஆனந்த் சாகர் said...

திரு.யலாளி,

உங்களுடைய கோபமான, சில்லறைத்தனமான அவமதிப்புகளை ஒருபக்கம் தள்ளி வைத்துவிட்டு, சுவனப்பிரியன் அனுமதித்தால், உங்களுடன் இந்த வலைப்பூவில் இஸ்லாத்தை, முகம்மதுவை குறித்து எழுத்து பூர்வமான விவாதம் செய்ய விரும்புகிறேன். குரான், ஆதாரப்பூர்வமான ஹதீத் மற்றும் சீரா(முகம்மதுவின் வாழ்க்கை வரலாறு) ஆகியவற்றை மட்டுமே நாம் ஆதாரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். விவாதம் தமிழில் இருக்க வேண்டும். எனக்கு ஆங்கிலம் தெரிந்தாலும் தமிழில் தான் விவாதிப்பேன். நீங்களும் தமிழில் மட்டுமே பின்னூட்டமிட வேண்டும்.

விவாதத்திற்கு நீங்கள் தயாரா, திரு.யலாளி?

Dr.Anburaj said...

இந்தியாவில் தமிழ்நாட்டில் மனிதர்கள் ஒன்றம் புனிதர்களாக வாழவில்லை.வாழந்து கொண்டிருககவில்லை.இனியும் அப்படி வாழப்போவதில்லை.சமூகம் தூக்கிப்பிடிக்கம் பத்தகங்களோ நபர்களின் வாழ்க்கையோ மக்களுக்கு உண்மையிவேயே வெளிச்சம் அளிப்பதாக இருக்க வேண்டும். பிறர் மனை நோக்கா பேராண்மை வேண்டும் என்று சொல்லும் திருக்குறள் எங்கே யுத்தத்தில் கைப்பற்றிய பெண்களை அடிமையாக வைப்பாட்டியாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறும் குரான் என்ற அரேபிய நாட்டு புத்தகம் எங்கே? குரான் காலாவதியான ஒரு புத்தகம்.அரேபியர்கள் புதிய வேதம் படைக்க வேண்டும்.

Anonymous said...

கீழ்ஜாதி ஹிந்துக்களைப் பற்றி மனு இப்படிக் கூறுகின்றது:

'அடிமைத்தனம் சூத்திரர்களோடு பிறந்தது. அவர்களை யாரும் அதிலிருந்து விடுதலை செய்திட இயலாது"

(மனுஸ்மிர்தி அத்தியாயம் 8 சுலோகம் - 413)

Anonymous said...

ஸ்ரீ பிரம்மா தீண்டத் தகாதவர்கள் அடிமைகளாகவே பிறந்து அடிமைகளாகவே வாழ்ந்து அடிமைகளாகவே மடிய வேண்டும் என்றே நியமித்துள்ளார்" (மனு அத்தியாயம் - 19. சுலோகம் -414)

Ashak S said...

@ ஆனந்த் சாகர் said...
சரி, அடிமை முறை தமிழ் நாட்டிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும், உலகின் பல நாடுகளிலும் பழங்காலத்தில் இருந்தது. இதனால் முஹம்மது சுதந்திரமான மனிதர்களை அடிமைதனதத்திற்குள் தள்ளியது சரியாகிவிடுமா?

பழங்கால மனிதர்கள் நாகரிக வளர்ச்சி அடையாமல் இருந்ததால் அடிமை முறையை பின்பற்றினர். அவர்கள் சாதாரண மனிதர்கள், எனவே அவர்கள் அப்படி நடந்து கொண்டதை புரிந்து கொள்கிறோம். ஆனால் முஹம்மது அப்படி அல்லவே. அவர் தன்னை இறைவனின் தூதர், உலகங்களுக்கெல்லாம் அருட்கொடை(ரஹ்மத்துல் ஆலமீன்), மனிதர்களுக்கு ஒரு முன்மாதிரி என்றெல்லாம் சொல்லிக்கொண்டார். அப்படிப்பட்டவர் அவர் காலத்தில் இருந்த அடிமை முறை என்கிற சமூக சுரண்டல் தீமையை எப்படி பின்பற்றலாம்? வட்டியை தீமை என்று கூறி அதை ஒழிக்க சட்டம் போட்டவர் ஏன் அதைவிட மிக கொடூர சுரண்டலான அடிமை முறையை ஒழிக்க வேண்டும் என்று கூறவில்லை? அவர் காலத்து தீய பழக்கங்களை பின்பற்ற அல்லாஹ்வால் நபியாக அவர் அனுப்பபட்டாரா அல்லது சமூக தீமைகளை ஒழிக்க அனுப்பபட்டாரா?

அடிமை முறைக்கு எதிராக ஒரு வார்த்தையும் அல்லாஹ் குர்ஆனில் அவன் கூறவில்லை. மாறாக, அல்லாஹ் குர்ஆனில் அடிமை முறையை பின்பற்றும்படி பல வசனங்களில் சொல்கிறான். அவனுடைய வார்த்தைகளை மாற்றுவோர் ஒருவரும் இல்லை என்கிறான். உலகம் அழியும்வரை குரான் மாற்ற முடியாதது என்பதுதான் இஸ்லாமிய கோட்பாடு. அப்படியானால் இஸ்லாத்தை பொறுத்தவரை அடிமை முறை உலகம் அழியும்வரை பின்பற்ற கூடியதுதானே? அதனால் தானே நைஜீரியாவில் போகோ ஹராம் என்ற இஸ்லாமிய பயங்கரவாத இயக்கம் கடந்த மாதம் கிறிஸ்தவ பள்ளி மாணவிகளை கடத்தி சென்று அடிமையாக விற்றது? அதன் தளபதி அல்லாஹ் அடிமைகளை விற்க சொல்கிறான் என்று பேட்டி கொடுத்தான்? குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறபடி, முஹம்மது நடந்துகொண்டபடி தானே அவனும் நடந்துகொண்டான்? #

49:13. மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.

மேலே உள்ள குரான் வசனம் எல்லா மனிதரும் சமம் என்று சொல்கிறது, இதிலிருந்தே யாரும் யாருக்கும் அடிமை இல்லை என்பது புலப்படும், முஹம்மது (ஸல்) வந்தது ஓரிறை கொள்கையை நிலைநாட்டவும், எல்லா தீமைகளையும் களையவும், மொத்தத்தில் மனிதன் எப்படி வாழ் வேண்டும் என்று சொல்ல

ஆனந்த் சாகர் said...

ஆஷாக்,

// 49:13. மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.

மேலே உள்ள குரான் வசனம் எல்லா மனிதரும் சமம் என்று சொல்கிறது, இதிலிருந்தே யாரும் யாருக்கும் அடிமை இல்லை என்பது புலப்படும், முஹம்மது (ஸல்) வந்தது ஓரிறை கொள்கையை நிலைநாட்டவும், எல்லா தீமைகளையும் களையவும், மொத்தத்தில் மனிதன் எப்படி வாழ் வேண்டும் என்று சொல்ல//

##மேலே உள்ள குரான் வசனம் எல்லா மனிதரும் சமம் என்று சொல்கிறது, இதிலிருந்தே யாரும் யாருக்கும் அடிமை இல்லை என்பது புலப்படும்,##

மனிதர்கள் அனைவரும் சமம் என்று எங்கே அந்த வசனம் கூறுகிறது?. ஒரே ஆண், பெண் இணையிலிருந்து மனிதர்கள் படைக்கப்பட்டதாகத்தானே அது கூறுகிறது? பயபக்தி உள்ளவர்கள்தான் அல்லாஹ்விடம் கண்ணியத்துக்கு உரியவர்கள் என்றுதானே அந்த வசனம் கூறுகிறது? அதை எப்படி மனிதர்கள் அனைவரும் சமம் என்று கூறுவதாக எடுத்துக்கொள்ள முடியும்? அடிமைகள் வைத்துக்கொள்வதை பற்றி அல்லாஹ் கூறும் குரான் வசனங்களை நீங்கள் படித்ததில்லையோ?

##முஹம்மது (ஸல்) வந்தது ஓரிறை கொள்கையை நிலைநாட்டவும், எல்லா தீமைகளையும் களையவும், மொத்தத்தில் மனிதன் எப்படி வாழ் வேண்டும் என்று சொல்ல##

ஓரிறை கொள்கையை நிலைநாட்டி முஹம்மது என்னத்தை கிழித்தார்? அவரால் மனித சமுதாயத்துக்கு எந்த பிரயோஜனமும் ஏற்படவில்லை. மாறாக பல கோடி மனித உயிர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு மூல காரணமாக அவர் இருந்தார். அவரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் வேதனைகளையும் அவரை பின்பற்றி முஸ்லிம்களால் படுகொலை செய்யப்படுபவர்களின் வேதனைகளையும் அவர் நரகில் இருந்துகொண்டு அனுபவித்து வருகிறார். முஸ்லிம்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறி மற்றவர்களுக்கு தீங்கு இழைக்காமல் இருந்தால்தான் முஹம்மதின் நரக வேதனை முடிவு பெரும். முஸ்லிம்கள் இதை செய்வார்களா? முஸ்லிம்களே, முகம்மதை நரகிலிருந்து காப்பாற்றுங்கள்!!

ஆனந்த் சாகர் said...

அனானி,

நாம் இஸ்லாத்தை பற்றி விவாதிக்கிறோம். மனு கினு, பைபிள் கைபில் என்று ஓட வேண்டாம். இஸ்லாத்தை பற்றி மட்டும் விவாதிப்போம். என்ன தயாரா?

Ashak S said...

மனிதர்கள் அனைவரும் ஒரு ஆன் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம் என்றால் எல்லோரும் சமம் என்று தானே அர்த்தம்