Followers

Thursday, June 05, 2014

ஆணும் பெண்ணும் சமமல்ல - ஹிந்து பத்திரிக்கை

"அல்லாஹ் இஸ்லாமிய பெண்ணுக்கு கொடுக்காத சமத்துவத்தை 'மக்கள் சட்டங்கள்' ஒரு இஸ்லாமிய பெண்ணுக்கு கொடுத்திருக்கிறது என்றால் தூக்கி எறிப்பட வேண்டிய சட்டம் எது?"

- தமிழச்சி
05/06/2014//

‘(நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள். ஆண்களில் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சிகளில் நீங்கள் பொருந்தக் கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள். பெண்கள் இருவர் ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்.’

அல்-குர்ஆன்(2:184)


இந்த வசனத்தைப் பற்றித்தான் தமிழச்சி இங்கு குறிப்பிடுகிறார். மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு ஆணாதிக்க மனோபாவமாகவே தெரியும். சாட்சிகள் என்று வரும் போது மட்டும் தான் இரண்டு பெண்கள் என்று இறைவன் குறிப்பிடுகிறான். ஏனெனில் பெண்கள் சற்று பலஹீனமாக படைக்கப்பட்டுள்ளனர். உடற்கூறு ரீதியாக அவர்கள் ஆண்களோடு போட்டியிட முடியாது. தற்போதய ஆராய்ச்சியானது சிந்தனை சக்தி, ஞாபக சக்தி, ஆளுமைத் திறன் அனைத்திலுமே ஆணுக்கும் பெண்ணுக்கும் பல வித்தியாசங்கள் உள்ளதாக இன்றைய அறிவியல் கூறுகிறது. ஹிந்து பத்திரிக்கையில் முன்பு வந்த கட்டுரையின் தமிழாக்கத்தை தருகிறேன் படித்து தமிழச்சி போன்றவர்கள் தெளிவு பெறுவார்களாக!ஆண்கள் ஏன் மார்ஸிலிருந்து வந்தவர்கள், பெண்கள் ஏன் வீனஸிலிருந்து வந்தவர்கள் என்பதற்கு விடை அறிவியலில் உள்ளது எனக் கூறுகிறார், அமெரிக்காவில் உள்ள வேய்னே ஸ்டேட் மருத்துவ பல்கலைக் கழகத்தின் உளவியல் மற்றும் நரம்பியல் துறை பேராசிரியர் எட்வர்ட் காஃபி..

சென்னையில் எம்.வி.அருணாசலம் அறக்கட்டளை சார்பாக நடந்த அகில உலக நரம்பியல் மற்றும் உளவியல் அமைப்பின் 8 வது மாநாட்டில் 'பாலினத்தின் பாத்திரம் (Role of sexes)" என்ற தலைப்பில் பேராசிரியர் காஃபி உரையாற்றினார். அதில் உரையாற்றும் போது ஏன் ஆண்கள் ஆண்களாக இருக்கினறனர், பெண்கள் ஏன் பெண்களாக இருக்கின்றனர் என்பதற்கான விளக்கம் மனித மூளையில் உள்ளதாகத் தெரிவித்தார்.

உடல் கட்டமைப்பு ரீதியாகவும், செயல்பாடு ரீதியாகவும் ஆண் பெண் மூளைகளில் வித்தியாசங்கள் உள்ளன. மூளையின் அளவிலும், மூளையின் உட் பொருட்களான செர்ப்ரோஸ்பினல் ஃபுளூயிட்டின் (serebrospinal fluid) அளவு மற்றும் வெள்ளை பருப் பொருள் (white matter), சாம்பல் பருப் பொருட்களின் அளவு (gray matter) வரை ஆண் பெண் மூளைகளில் வித்தியாசங்கள் உள்ளன.

இந்த உடல் கட்டமைப்பு ரீதியான வேறுபாடு பிறப்பிலேயே தோன்றுகின்றது. ஆனால் இந்த வேறுபாடு மனிதன் வளர வளர மாறுபடுகின்றதா? அல்லது அதே நிலையில் நீடிக்கிறதா?

இது வரை இந்த கேள்விக்கான பதில் நமக்குத் தெரியாமல் இருந்தது. ஆனால் மனிதனின் வளர்ச்சிக்கும் வயதுக்கும் ஏற்ப மூளைகளில் மாறுபாடுகள் தோன்றுகின்றன என்பதற்கான புதிய ஆதாரங்கள் தற்போது வெளி வரத் தொடங்கியுள்ளன என்று கூறுகிறார் பேராசியர் காஃபி.

9 வயதில் மூளையின் வெளிப் பகுதியை மூடி இருக்கும் கோர்டெக்ஸ் (cortex) எனும் பொருள் பெண் மூளையை விட ஆண் மூளையில் பெரிதாக இருக்கின்றது. ஆனால் அடுத்த பத்து ஆண்டுகளில் அதாவது 19 வயதில் இந்த வேறுபாடுகள் மாற்றம் அடைகின்றன.

இந்த வேறுபாடுகள் ஆண் பெண் என்ற பாலினத்தைப் பொருத்து மாறுபடுகின்றது. ஆண் மூளை 'முன் மடலின் (frontal lobe) ' தடிமன் பெண் மூளையை விட வெகுவாக குறைகிறது. ஆனால் மூளையின் பின் பக்கப் பகுதி (posterior region) இதற்கு நேர் மாற்றமாக உள்ளது. அதாவது பெண் மூளையின் பின் பக்க பகுதியின்(posterior region) தடிமன் ஆண் மூளையை விட வேகமாகக் குறைகின்றது.சில வருடங்கள் தொடர்ந்து மூளையைப் புகைப்படங்கள் எடுத்து ஆய்வு செய்ததில் அது ஒரே மாதிரி இருப்பதில்லை, மூளையில் மேலே குறிப்பிட்ட பகுதிகள் வயதுக்கு ஏற்ப மாற்றம் அடைகின்றன என காஃபி விளக்குகின்றார்.

30 வயதுக்கு மேல் மனிதனுக்கு வயது கூட கூட மூளையின் கட்டமைப்பு சுருங்குகின்றது.

நரம்பியல் மற்றும் உளவியலோடு பாலினத்துக்குத் தொடர்பு இருக்கின்றது என்றால் அப்பொழுது கண்டிப்பாக மூளையிலும் வேறுபாடு இருக்கும் என்று குறிப்பிட்டார் பேராசிரியர் காஃபி.

மொழி செயல்பாடுகள் –language function

காட்சி இடம் சார் செயல்பாடுகள்- visual –spatial function

சமூக அறிவாற்றல் திறன்- social cognition skills

உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் முறை- empathy

உணர்வு மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்துதல்-emotion and perception

தேடுதல் மற்றும் பரபப்பு- seeking and sensation

இவ்வாறு அனைத்து செயல்களிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடு உள்ளதாக அறிக்கை கூறுகிறது.

பண்புகள் ஒரே மாதிரி இருந்தாலும் ஆண் பெண்ணிற்கான அடிப்படை உயிரியல் ஒன்றல்ல.

ஒரே வேலையைச் செய்து முடிப்பதற்கு ஆண் மூளையில் செயல்படும் பகுதியும் பெண் மூளையில் செயல்படும் பகுதியும் வேறு வேறாக உள்ளது.

இந்த உடற் கூறு ரீதியான வேறுபாடு ஆண் பெண்களின் சமுதாய நிலையினாலும் தோன்றி இருக்கலாம். சமூகத்தில் ஆண்கள் தேடக் கூடியவர்களாகவும் (hunter) அனைத்தையும் திரட்டக் கூடியவர்களாகவும் (gatherer), பெண்கள் குழந்தைகளை சுமக்கக் கூடியவர்களாகவும் குடும்பத்தை வீட்டை கவனிக்கக் கூடியவர்களாகவும் இருக்கின்றனர் என்பதே இதற்குக் காரணமாக இருக்கும் என பேராசிரியர் காஃபி குறிப்பிடுகின்றார்.

இருந்தாலும் இந்த வேறுபாடுகள் நம்மை வகைப்படுத்தி வரையறுக்கின்றதா? ஆம். இந்த உடற்கூறு ரீதியான வேறுபாடுகள் நம்மை ஆண் பெண் என மட்டும் தான் வேறுபடுத்துகின்றது. தனிப்பட்ட மனிதன் அவனுடைய சிறப்பான மாறுபட்ட திறமைகளை வைத்து வேறுபடலாம். அது எப்படி இருந்தாலும் உடல் நலத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் இந்த ஆண் பெண் உடல் ரீதியான வேறுபாடுகளில் நாம் கண்டிப்பாக கவனம் செலுத்தியாக வேண்டும் எனக் கூறி முடிக்கின்றார் அமெரிக்கப் பேராசியர் காஃபி.

Why boys will be boys and girls will be girls, has an explanation in their brains, Prof. Coffey adds. Structurally, and functionally, there are differences between the brains of men and women, as a collective. Right from brain volume, to cerebrospinal fluid volume, white matter and gray matter, there are differences between the male and the female brain.

http://www.thehindu.com/todays-paper/tp-miscellaneous/tp-others/article2464138.ece?css=print

இது 'தி ஹிந்து' பத்திரிக்கையில் செப்டம்பர் 18 - 2011 அன்று 6 ஆவது பக்கத்தில் வந்த கட்டுரை:

---------------------------------------------------------------------------------

மனித படைப்பில் எல்லோரும் சமமே! ஆனால் உடற்கூறு வேறுபாட்டினடிப்படையில் சில தகுதிகள் ஆண்களுக்கு சிறப்பாக உண்டு. சில தகுதிகள் பெண்களுக்கு சிறப்பாக உண்டு. தாய்மை என்று ஒன்று மட்டுமே போதும் பெண்களின் சிறப்பை கூறுவதற்கு. இது பற்றி குர்ஆன் கூறும் வசனங்களையும் பார்ப்போம்.

சிலரை மற்றும் சிலரை விட இறைவன் மேன்மைபடுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு.

-குர்ஆன் 4:32

சிலரை மற்றும் சிலரை விட இறைவன் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்.
-குர்ஆன் 4:34

குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் பெற்றோரும்,உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. பெற்றோரும் உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. இப் பங்கீடு கட்டாயக் கடமை.(4:7)

ஆண்களிலோ பெண்களிலோ நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
-குர்ஆன் 4:124ஆணை விட பெண் உடற்கூறு அளவில் பலஹீனமாக படைக்கப்பட்டுள்ளாள். எனவேதான் படைத்த இறைவன் பெண்களின் ஞாபக சக்தியில் ஏதேனும் குறைவு ஏற்பட்டால் மற்றொரு பெண் அவளுக்கு உண்மையை விளக்க முடியும் என்ற ரீதியில் சாட்சிகளாக இரு பெண்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்கிறான். இன்றைய அறிவியலும் அதனையே மெய்ப்பிக்கிறது.

4 comments:

ஆனந்த் சாகர் said...

//ஆணை விட பெண் உடற்கூறு அளவில் பலஹீனமாக படைக்கப்பட்டுள்ளாள். எனவேதான் படைத்த இறைவன் பெண்களின் ஞாபக சக்தியில் ஏதேனும் குறைவு ஏற்பட்டால் மற்றொரு பெண் அவளுக்கு உண்மையை விளக்க முடியும் என்ற ரீதியில் சாட்சிகளாக இரு பெண்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்கிறான். இன்றைய அறிவியலும் அதனையே மெய்ப்பிக்கிறது.//

பெண்களைவிட ஆண்கள் அதிக உடல் பலம் உள்ளவர்களாக இருக்கின்றனர். சரி, அதற்கும் அவர்களின் ஞாபக சக்திக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? உடல் பலத்திற்கும் புத்தி கூர்மைக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது? சாட்சி கூறுவதற்கு உடல் பலம் வேண்டுமா? அல்லது ஞாபக சக்தி வேண்டுமா? உடல் பலம் அதிகம் இருப்பவருக்கு அதிக ஞாபக சக்தி இருக்கும், குறைந்த உடல் பலம் உள்ளவர்களுக்கு குறைந்த ஞாபக சக்தி இருக்கும் என்று சொல்கிறீர்களா? உங்களுக்கு மூளை குறைவாக இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது!

yalali1956 said...

To ananda sahar.....

// பெண்களைவிட ஆண்கள் அதிக உடல் பலம் உள்ளவர்களாக இருக்கின்றனர். சரி, அதற்கும் அவர்களின் ஞாபக சக்திக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? உடல் பலத்திற்கும் புத்தி கூர்மைக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது? சாட்சி கூறுவதற்கு உடல் பலம் வேண்டுமா? அல்லது ஞாபக சக்தி வேண்டுமா? உடல் பலம் அதிகம் இருப்பவருக்கு அதிக ஞாபக சக்தி இருக்கும், குறைந்த உடல் பலம் உள்ளவர்களுக்கு குறைந்த ஞாபக சக்தி இருக்கும் என்று சொல்கிறீர்களா? உங்களுக்கு மூளை குறைவாக இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது!

5:42 AM //

You don't understand what is the difference between the "anatomy of the female body" and the "power of female body " . I suggest first you go to a Dr and ask this. then vomit here.

Ashak S said...

ஆனந்த் சாகர் said...
//ஆணை விட பெண் உடற்கூறு அளவில் பலஹீனமாக படைக்கப்பட்டுள்ளாள். எனவேதான் படைத்த இறைவன் பெண்களின் ஞாபக சக்தியில் ஏதேனும் குறைவு ஏற்பட்டால் மற்றொரு பெண் அவளுக்கு உண்மையை விளக்க முடியும் என்ற ரீதியில் சாட்சிகளாக இரு பெண்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்கிறான். இன்றைய அறிவியலும் அதனையே மெய்ப்பிக்கிறது.//

பெண்களைவிட ஆண்கள் அதிக உடல் பலம் உள்ளவர்களாக இருக்கின்றனர். சரி, அதற்கும் அவர்களின் ஞாபக சக்திக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? உடல் பலத்திற்கும் புத்தி கூர்மைக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது? சாட்சி கூறுவதற்கு உடல் பலம் வேண்டுமா? அல்லது ஞாபக சக்தி வேண்டுமா? உடல் பலம் அதிகம் இருப்பவருக்கு அதிக ஞாபக சக்தி இருக்கும், குறைந்த உடல் பலம் உள்ளவர்களுக்கு குறைந்த ஞாபக சக்தி இருக்கும் என்று சொல்கிறீர்களா? உங்களுக்கு மூளை குறைவாக இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது!

பெண் உடற்கூறு அளவில் பலஹீனமாக படைக்கப்பட்டுள்ளாள் - உடற்கூறு என்பதில் மூளையும் அடங்கும்

Anonymous said...

this oppose what you said

http://en.wikipedia.org/wiki/Gender_differences_in_eyewitness_memory