Followers

Friday, June 06, 2014

ஒளரங்கஜேப்பை ஏன் எல்லோரும் எதிர்த்தார்கள்?

ஒளரங்கஜேப்பை ஏன் எல்லோரும் எதிர்த்தார்கள்?



நமது வரலாற்றுப் பாடநூல்களில் ஒளரங்கஜேப்பைப் பற்றி மிகக் கொடுமையான அரசன் என்ற பிம்பத்தை கொடுத்திருப்பார்கள். சிறு வயதில் ஒளரங்கஜேப்பை நானும் வெறுத்துள்ளேன். அந்த அளவு நமது வரலாறுகள் இந்த மன்னரைப் பற்றி அவதூறுகளை அள்ளி வீசியுள்ளன. ஆனால் உண்மை வரலாறோ அதற்கு நேர் மாற்றமாக உள்ளது. நமது நாட்டையும், நமது நாட்டு மக்களையும் இன மத பேதம் பாராமல் நேசித்தவர் ஒளரங்கஜேப். நமது நாட்டை ஐம்பது ஆண்டு காலம் ஆண்டு அகண்ட பாரதத்தை உருவாக்கி விட்டு போனவர் ஒளரங்கஜேப்! அவரது வரலாறுகளில் இருந்து சிலவற்றை பார்ப்போம்.

சீக்கியர்கள் தங்கள் மத நடவடிக்கைகள் தவிர அரசியலில் தீவிரம் காட்டிப் பேரரசருக்கு எதிராக ஆலோசனைகளும் ஆயுதங்களும் தந்து கிளர்ச்சிக்கு உதவிக்குக் காரணமான குருதேஜ பஹ்தூர் கொல்லப்பட்டார், எனவே சீக்கியர்கள் எதிரி.

மூடப்பழக்க வழக்கங்களைத் தடுக்கும்பொருட்டு ஜோதிடம் பார்த்தல், பஞ்சாங்கம் தயாரித்தல், குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறுதல் தீண்டாமை போன்றவைகளுக்குத் தடை விதித்ததார். எனவே ராஜபுத்திரர்கள் எதிரி.

காட்டுமிராண்டிகளாக வாழ்ந்து பொது மக்களுக்கும் சமூகத்திற்கும் தொல்லை கொடுத்த ‘சத்நாமிகள் ‘ என்ற கூட்டத்தாரை அழித்ததால் அந்த இனம் பாதுஷாவுக்கு பரம்பரை எதிரி.

மராட்டியர்களின் நாயகனாகக் கருதப்பட்ட சிவாஜியை கைது செய்து சிறையில் அடைத்ததார். அவர் தந்திரமாகத் தப்பிச்சென்று அவுரங்கசீப்புக்கு எதிராக மராட்டிய மக்களிடம் பிரச்சாரம் செய்த காரணத்தினால் மராட்டியர்கள் எதிரி.

ஷியா முஸ்லிம்கள் தங்கள் உடல் முழுவதும் அலகுகள் குத்திக்கொண்டும் சாட்டையால் தங்களை அடித்துக்கொண்டும், மார்பில் அடித்துக்கொண்டும் மொஹரம் பண்டிகையைக் கொண்டாடினர். அந்த பண்டிகை ஊர்வலத்திற்கு தடை விதித்ததால் ஷியா முஸ்லிம்கள் அவுரங்கசீப்புக்கு எதிரி.

(முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம் – கரைகண்டம் கி. நெடுஞ்செழியன்)

-----------------------------------------------------------------------------------------------------------------------
பிற மதத்தவரின் பிரார்த்தனைக்கு அனுமதி!

‘நமது பரிபாலனத்தின் கீழ் உள்ள இந்த நாளில் பனாரஸிலும் அதன் சுற்றுப் புறங்களிலுமுள்ள இந்துக் குடிமக்கள் சிலரால் கொடுமைப் படுத்தப் படுவதாகவும் புராதனமான இந்துக் கோவில்களின் பொறுப்பிலுள்ள பிராமணர்கள் அங்கிருந்து வெளியேறும்படி அச்சுறுத்தப் பட்டு மிரட்டலுக்கு ஆளாகி அதனால் அந்த வகுப்பினர் மன வேதனைக்கு ஆளாகி இருப்பதாகவும் நமது மேன்மைக்குரிய புனித அரசவைக்குத் தகவல் வந்துள்ளது. எனவெ இந்த அரசாணை பிறப்பிக்கப்படுகிறது. பிராமணர்களையோ மற்ற இந்து குடிமக்களையோ சட்ட விரோதமாகத் தலையிட்டுத் தொல்லைக்குட்படுத்தக் கூடாது. அவர்கள் தங்கள் தொழிலைத் தொடர்ந்து செய்து வரவும் இறைவன் அளித்த இந்த வரமான இந்த சாம்ராஜ்யம் நிலைக்கும் வகையில் அவர்கள் சமாதானம் நிறைந்த மனதுடன் பிரார்த்தனைகள் நடத்தவும் முன்பு போலவே அனுமதிக்க வேண்டும். இந்த ஆணையை அவசரமானதாக மேற்கொண்டு இது வந்து சேர்ந்ததும் அதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும்.’

இவ்வாறு ஒளரங்கஜேப்பின் பனாரஸ்ஃபார்மன் என்ற சாசனத்தில் கூறப்பட்டுள்து.
பி.என்.பாண்டே, இஸ்லாமும் இந்திய கலாச்சாரமும், டாயல் மொழி பெயர்ப்பு,சென்னை.
1987, Page 61.

---------------------------------------------------------------------------------------------------------
‘சதி’யை நிறுத்தியவர் ஒளரங்கஜேப்!

ஆதரவற்ற துர்பாக்கியவதியான ஒரு பெண்ணை ‘சதி’ (உடன்கட்டை ஏறுதல்) என்ற சடங்கால் உயிருடன் எரிக்க முயன்றனர். ஆட்சித் தலைமை வகித்த ஒளரங்கஜேப் இதை அறிந்து அந்த கொடுமையை தடுத்து நிறுத்தினார். அதோடு எந்த ஓர் இந்துப் பெண்ணையும் உயிருடன் எரிக்க அதிகாரிகள் அனுமதி அளிக்கக் கூடாதென்றும் உத்தரவு பிறப்பித்தார்.
இதனை அறிந்த உயர் ஜாதி இந்துக்கள் தங்கள் மத விஷயத்தில் ஒளரங்கஜேப் தலையிடுவதாக புகார் கூறினர். ‘உயிருள்ள ஒரு பெண்ணை எரிப்பது அவர்களுடைய மத நம்பிக்கை என்றால் அத்தகைய மோசமானச் செயலை செய்திட அனுமதி அளிக்காமலிருப்பதே தன்னுடைய நம்பிக்கை என்று ஒளரங்கஜேப் உறுதியாக நின்றார். உயர் பிரிவைச் சேர்ந்தவர்கள் பலரது எதிர்ப்பை மீறிதாம் இட்ட கட்டளையை நிறைவேற்றிடவும் பணித்தார். பலவந்தமாக உடன் கட்டை ஏற்றப்படும் பெண்களின் நகை, ஆபரணங்களைப் பெற்று அனுபவித்து வந்தவர்கள் பாதிப்பிற்குள்ளாயினர்.

விளைவு, மதத் தலைவர்கள் ரகசிய இடத்தில் ஒன்று கூடினர். ஒளரங்கஜேப் அரசைக் கவிழ்க்க சதி செய்தனர். அவரைக் குறித்து ஹிந்து மத விரோதி என பொய்களைப் புனைந்துரைத்தனர்.

ஜோசப் இடமருகு, பிராமண மதம், (மலையாளம்) தமிழில் த.அமலா, சென்னை 1995, Page 227
Premnath Bazaz, The Role Of Bhagavadgita in Indian History, New delhi 1975, Page 339

--------------------------------------------------------------------------------------------------------

எனது தேசத்து ஏழைகளுக்கு……

ஒரு சமயம் புனித மக்கா நகரத்தின் ஷெரீப் பொருள் உதவி வேண்டி தனது தூதரை ஒளரங்கஜேப்பிடம் அனுப்பியபோது அவரக்கு பொருளுதவி செய்ய மறுத்ததோடு ‘எனது தேசமான இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அந்தப் பணத்தை வினியோகிக்க்க் கூடாதா? என்று கேட்டு விட்டு ‘இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான்’ என்றும் அந்தத் தூதரிடம் பதில் தந்தவர் ஒளரங்கஜேப்’
டி.என். ராமச்சந்திரன், நமது சரித்திர பாரம்பரியம், நாகப்பட்டினம்.
Page 80, 81.

1 comment:

Anonymous said...

இந்துக்களின் மேல் ஜிஸ்யா வரியை தினித்ததை மட்டும் சௌகரியமாக "மற்ந்து" விட்டீர்களே ?