Followers

Thursday, June 12, 2014

தமிழில் தொழாதவர்க்கு நரகமா? - ஐயாரப்பன்!

ஹானஸ்ட் மேன்!

//“அல்லாவே மிகபெரியவன் தொழுகை நோக்கி விரைந்து வாருங்கள். அல்லாவை தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. முகமது (ஸல்) அவர்கள் அல்லாவின் தூதர் என்று சான்று பகர்கிறேன்” என்று சொன்னால் தமிழ் தெரிந்த முஸ்லிம்களுக்கு புரியாதோ? முஸ்லிம்கள் தமிழ் ஆர்வலர்கள் இல்லையா? அல்லது நீங்கள் தமிழர்களே இல்லையா?//

இஸ்லாமிய மார்க்கமானது உலகலாவிய மதம். ஒரு அமெரிக்கனோ, ஒரு ஆப்ரிக்கனோ இஸ்லாத்தை ஏற்றவர்கள் தமிழகத்துக்கு வந்தால் அங்கிருந்து ஒலி பெருக்கியில் 'அல்லாஹ் அக்பர்' என்ற சப்தம் வந்தால் உடனே அந்த பள்ளியை நோக்கி யாரும் சொல்லாமலேயே தொழுகைக்கு வந்து விடுவர். எந்த மொழியை பேசுபவராக இருந்தாலும் அவர் உலகில் நடக்கும் இஸ்லாமிய தொழுகைகளில் எந்த இடைஞ்சலும் இல்லாமல் தனது வணக்கத்தை செய்து விட முடியும். இந்த உலக ஒற்றுமைக்காகத்தான் பள்ளிகளில் அரபி அழைப்பும் தொழுகையும் நடத்தப்படுகிறது. அரபி மொழி தேவ மொழி என்று குர்ஆனும் சொல்லவில்லை. உலக மூல மொழிகள் அனைத்தையும் படைத்தவன் இறைவனே என்கிறது குர்ஆன். எனவே மொழிகளுக்குள் ஏற்றத் தாழ்வு கற்பிப்பதும் இஸ்லாமிய அடிப்படையில் தவறு.

தமிழகத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்த நான் சவுதியின் தலைநகர் ரியாத்தில் மிக பிரமாண்டமான பள்ளிவாசலில் தலைவராக நின்று தொழுகை நடத்தியுள்ளேன். என்னை பின் பற்றி ஆப்ரிக்கனும், ஐரோப்பியனும், பாகிஸ்தான், பங்களாதேஷ், என்று உலக நாடுகள் அனைத்திலுமிருந்தும் வந்தவர்கள் எனது கட்டளைக்கு பணிந்து நான் குனிந்தால் அவர்களும் குனிகிறார்கள்: எனது சிரத்தை இறைவனுக்காக தரையில் வைத்தால் என்னைப் பின்பற்றி அவர்களும் தங்கள் தலைகளை வைக்கிறார்கள். யாரும் யாருக்கும் இங்கு சொல்லிக் கொடுப்பதும் இல்லை. ஒரு தமிழனைப் பின் பற்றி ஒரு ஐரோப்பியன் தொழுவதா? என்று அவர்கள் நினைக்கவில்லை. உலக மொழிகள் அனைத்தையும் சம அளவில் பாவிப்பதால்தான் இது போன்ற அழகிய சம்பவங்கள் நடக்கின்றது.

------------------------------------------------------------

திரு ஐயாரப்பன்!

//நம் தாய்மொழி தமிழில் தொழுகைக்கு அழைப்பு விடுப்பது என்பது சோற்றிலே உப்பிட்டு உண்ணுபவர்கள் மட்டுமே செய்வார்கள்.//

அப்படி பார்த்தால் தமிழகத்தில் 90 சதவீதமான நபர்கள் உப்பு போடாமல்தான் சாப்பிட வேண்டி வரும். :-) ஏனெனில் குறிப்பிட்ட சில கோவில்களை தவிர மற்ற அனைத்து கோவில்களிலும் சமஸ்கிரதம்தான் ஆட்சி செய்கிறது. சிதம்பரம் கோவிலில் தமிழில் பாட இன்று வரை அனுமதி மறுக்கப்படுவதை நீங்களும் படித்திருப்பீர்கள். அங்கு இதே வாதத்தை உங்களால் ஏன் வைக்க முடியவில்லை? இந்து மதமானது இந்தியர்கள் மட்டுமே பின்பற்றக் கூடிய ஒரு மதம். எனவே தமிழில் பாடுவதால் எந்த சிக்கலும் வரப் போவதில்லை. இருந்தாலும் உங்களால் அந்த முயற்சியை செய்ய முடியாது. இதுதான் யதார்த்தம்.

//வெளிநாடுகளில் இருந்து நம் நாட்டை கொள்ளை அடிக்க வந்துவிட்டு, இங்கேயே தங்கி விட்டவர்கள். கடவுளை வணங்க தன் தாய் மொழியை பயன்படுத்தாமல் இருப்பவர்களுக்கு இறைவன் அருள் நிச்சயம் கிடைக்காது. ஆபிரகாமியர்கள் பாணியில் சொல்வதென்றால், இத்தகைய வஞ்சகர்களுக்கு மீளா முழு நரகம் மட்டுமே கிடைக்கும்..//

இங்குள்ள முஸ்லிம்களை வெளி நாட்டு இறக்குமதி என்று சொன்னால் உங்கள் அருகில் இருக்கும் இந்து நண்பர்களே முதலில் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் நமது தொப்புள் கொடி உறவு என்று தான் சொல்வார்கள்.

அடுத்து கூட்டு இறை வழிபாடு முடிந்து பிரார்த்தனை என்ற ஒரு சடங்கு அனைத்து முஸ்லிம்களுக்கும் இருக்கிறது. அதாவது தனது தேவைகளை இறைவனிடம் இரைந்து கேட்பது. இந்த இடத்தில் அவரவர் சொந்த மொழியிலேயேதான் கேட்பார்கள். தொழுகையின் கடைசி இருப்பில் அமர்ந்திருக்கும் போது இறைவனிடம் தனது தேவைகளை தனது தாய் மொழியில்தான் கேட்கின்றனர். ஏனெனில் இறைவனுக்கு தமிழ் மொழியும் தெரியும்: உலக மொழிகள் அனைத்தும் தெரியும்.

மேலும் மெக்காவில் கஃபாவை வலம் வரும் போது உலக மக்கள் தங்கள் தாய்மொழியில் தங்களின் தேவைகளை இறைவனிடம் மிக சத்தமாக கோரஸாக சொல்லிக் கொண்டு செல்வதை நாம் பார்க்கலாம். அரபியில் பிரார்த்தனை செய்து கொண்டுதான் வலம் வர வேண்டும் என்று எவரும் கட்டாயப்படுத்துவதில்லை. எனவே நீங்கள் சொல்வது போல் எவருக்கும் மீளா நரகம் கிடைக்க வாய்ப்பே இல்லை. சொர்க்கத்தையும் நரகத்தையும் தருவது நம்மை படைத்த இறைவன் கையில்தான் உள்ளது. நம் கையில் இல்லை நண்பரே!

தாய் மொழிப் பற்று என்பதற்கும், தாய்மொழி வெறி என்பதற்கும் சிறிய வித்தியாசம் உண்டு. அதனை விளங்காதனால் பல குழப்பங்களை நீங்கள் சந்திக்கிறீர்கள். கூடிய விரைவிலேயே தெளிவடைவீர்கள்!

11 comments:

ஆனந்த் சாகர் said...

அரபி தெரியாமல் ஒரு சில குரான் வசனங்களை அரபியில் மனப்பாடம் செய்துகொண்டு தினமும் அதை ஒப்பிப்பதுதான்(வாந்தி எடுப்பது) தொழுகை என்பது கேலிக்கூத்து. இஸ்லாம் உலகளாவிய மதம், எனவே அரபியில் தொழுகை செய்ய வேண்டும் என்பது சுத்த மடத்தனம். முஸ்லிம்கள் சுயமாக சிந்திக்க கூடாது என்பதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் இஸ்லாம் செய்கிறது. அதில் ஒன்றுதான் இந்த அரபியில் தொழுகை என்பதுவும். முஸ்லிம்கள் தொழுகைக்கு செல்லும்போது தங்கள் காலணிகளை மட்டுமல்ல, தங்கள் மூளையையும் வெளியே கழட்டி வைத்துவிட்டுத்தான் செல்கிறார்கள்.

ஆனந்த் சாகர் said...


//இந்து மதமானது இந்தியர்கள் மட்டுமே பின்பற்றக் கூடிய ஒரு மதம்.//

அட தற்குறியே, அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் ஹிந்து மதத்தை பின்பற்றுவது உங்களுக்கு தெரியாதா? எந்த நாட்டவரும் ஹிந்து மதத்தை பின்பற்றலாம். அது இயற்கையோடு ஒன்றிணைந்த மதம். இஸ்லாம்தான் இயற்க்கைக்கு விரோதமான மதம். அது பொய் மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றின்மூலம்தான் நீடித்து வருகிறது. அது முடிவுக்கு வரும்.

ஆனந்த் சாகர் said...

//அடுத்து கூட்டு இறை வழிபாடு முடிந்து பிரார்த்தனை என்ற ஒரு சடங்கு அனைத்து முஸ்லிம்களுக்கும் இருக்கிறது. அதாவது தனது தேவைகளை இறைவனிடம் இரைந்து கேட்பது. இந்த இடத்தில் அவரவர் சொந்த மொழியிலேயேதான் கேட்பார்கள். தொழுகையின் கடைசி இருப்பில் அமர்ந்திருக்கும் போது இறைவனிடம் தனது தேவைகளை தனது தாய் மொழியில்தான் கேட்கின்றனர். ஏனெனில் இறைவனுக்கு தமிழ் மொழியும் தெரியும்: உலக மொழிகள் அனைத்தும் தெரியும்.//

பிரார்த்தனையை அவரவர் மொழியில் செய்யும்போது தொழுகையை மட்டும் அரபியில் ஏன் செய்யவேண்டும்? அவரவர் மொழியில் தொழுகை புரிந்தால் மட்டும் அல்லாஹ்வுக்கு புரியாதா? அரபியில் தான் தொழுகை புரிய வேண்டும் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறவில்லையே. பிறகு ஏன் தொழுகை அரபியில்தான் இருக்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறீர்கள்? தொழுகையில் அரபியில் ஓதுவதை அவரவர் மொழியில் ஓதினால் அல்லாஹ்வுக்கு ஜன்னி வந்துவிடுமா?

tamilan said...

சமஸ்கிருதம் தவிர வேறு பாஷை எதுவுமே பேசக்கூடாது. பேசினால் பாவம்.

கர்மாக்களில், யாகங்களில் ஒரு வேத மந்த்ரம் சொல்வார்கள்.

“நமோ கங்கா யமுனை யோஹேமத்யேயே வசந்தீ...தேமே ப்ரஸனினாத் மானாஹா”...

இந்த வேத மந்த்ரத்தை நமது காவேரிக்கரையிலோ... வைகைக்கரையிலோ... தாமிரபரணி ஆற்றின் கரையிலோ உட்கார்ந்து பிராமணன் உச்சரிக்கிறான். அவனும் கைகூப்பி அவனுக்கு எதிரே உட்கார்ந்திருக்கிறவர்களையும் கைகூப்பச் சொல்கிறான்.

இந்த மந்த்ரத்துக்கு என்ன அர்த்தம் என்று கேட்டால்...“கங்கை நதிக்கும் யமுனை நதிக்கும் இடையில் வசிக்கும் ரிஷிகளே மக்களே உங்களை வணங்குகிறேன்” என்பதாகும்.

“அடத்திருடா... நீ உட்கார்ந்திருப்பது காவிரிக் கரையில். உனக்கு தட்சணை கொடுப்பதும் காவிரிக்கரைக்காரன் தான். நீ எதற்கு கங்கைக்கும் யமுனைக்கும் இடையே இருந்தவர்களுக்கு வணக்கம் செலுத்துகிறாய்?

கேள்வி கேட்டால், ‘வேதத்தில் இருக்கு நான் சொல்கிறேன்’ என்பார்கள். வேதத்தில் தான் தமிழ் கெட்ட பாஷை அதை பேசக்கூடாது என்றிருக்கிறது.

உன் தாய்மொழியை, உன் தாயை வேதம் கெட்டவள் என்கிறது.
நான் சொல்கிறவனை கும்பிடு என்கிறது. அதற்காக வேதம் சொன்ன எல்லாவற்றையும் செய்வாயா?

காவேரிக்கரையில் நின்று கொண்டு கங்கையைக் கும்பிட்டால்? அந்த மந்த்ரத்தை மாற்றவேண்டும்.

சென்னையில் இருக்கும் பிராமணர்கள்...“நமோ அடையாறு கூவம் யோஹேமத்யேயே வசந்தீ...” அடையாறுக்கும் கூவம் ஆற்றுக்கும் இடைப்பட்ட ரிஷிகளை வணங்குகிறேன் என சமஸ்கிருதத்தில் வேண்டாம் தமிழில் சொல்லுங்கள்.

சரி... நெல்லை, மதுரை போன்ற தென்ஜில்லாக்காரர்களா? தாமிரபரணிக்கும் வைகையாற்றுக்கும் இடையே உள்ளவர்களை வணங்குகிறேன்... என சொல்லிவிட்டு ஆரம்பியுங்கள்.

தஞ்சாவூர், திருச்சி... என காவேரி பாயும் ஊர்க்காரர்கள்.

காவேரியையும் கொள்ளிடத்தையும் கைகூப்பிவிட்டு... ஆரம்பிக்கட்டும்.

மேலும் படிக்க >>இங்கே<<
=====
தமிழ் உள்ளே போகக்கூடாது என்பதற்காக தெய்வத்தை வெளியே தூக்கிவருகிறார்கள்.

மேலும் படிக்க >>>இங்கே<<

=====

Good Morning. கடவுளுக்கு காலை வணக்கம் செலுத்தி அவரை எழுப்புவது தான் சுப்ரபாதம்.

சுப்ரபாதம் ஏன் தமிழில் இல்லை?...சுப்ரபாதம் என்றால் என்ன அர்த்தம்?... அது ஒரு வடமொழிப் பெயர். அதாவது இப்பொழுது நற்பொழுதாகட்டும் என்று அர்த்தம்.

சமஸ்கிருத கைதிகளாக இருக்கும் சிலபேர் தமிழை நீசபாஷை என ஒதுக்கித் தள்ளியிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் பற்பல பிராமணர் அல்லாதோர் வீடுகளிலும் இந்த சுப்ரபாதப் பாடல் ஒலித்து மயக்குகிறதே... இந்த சுப்ரபாதம் ஏன் தமிழில் இல்லை?...

மேலும் படிக்க >>>>இங்கே<<

ஏன்சாமி! வீட்லபேசற தமிழ்லயே பகவான்ட்டயும் பேசுங்களேன்
“ஏங்காணும்... இப்படி திடீர்னு தமிழ்ல அர்ச்சனை பண்ணுன்னா எப்படி?

எங்களுக்குனு சம்ப்ரதாயங்கள் இருக்கு. அனுஷ்டானங்கள் இருக்கு. அது எல்லாத்தையும் தமிழ்ல பண்ண முடியாதே...” என குரல் கொடுத்தனர்.

“ஏன் சாமி... வீட்ல பேசும்போது உங்க மனைவிகிட்ட மகள்கிட்டயெல்லாம் சமஸ்கிருதத்துலயா பேசறீங்க. அதுபோல... பகவான்ட்டயும் தமிழ்லயே பேசுங்களேன்...”

மேலும் படிக்க >>>>இங்கே<<

tamilan said...

தன் தாயையே சந்தேகப்படும்படியான மந்த்ரத்தை திவசம் செய்யும் போது, வாத்தியார் சொல்லச் சொல்ல ‘மகன்’கள் திரும்பச் சொல்கிறார்கள் அர்த்தம் தெரியாமலேயே.


இனியொரு முறை திவசம் செய்யும்போது இந்த மந்த்ரத்தை உச்சரிப்பார்களா?


மகன்கள் தன்தாயையே கொச்சைப்படுத்தும் திதிமந்திரம்..

உதடுபடக் கூட இப்படியொரு அர்த்தத்தை அறிவிக்கக் கூடாதென்று எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரிப்பார்களா?


மேலும் படிக்க >>இங்கே<<

.

tamilan said...

பகவானுக்கும் பசிக்கும். குளிரும். திருஷ்டி படும். சளி பிடிக்கும்.


மேலும் படிக்க >>இங்கே<<

.

Ashak S said...

ஆனந்த் சாகர் said...
//அடுத்து கூட்டு இறை வழிபாடு முடிந்து பிரார்த்தனை என்ற ஒரு சடங்கு அனைத்து முஸ்லிம்களுக்கும் இருக்கிறது. அதாவது தனது தேவைகளை இறைவனிடம் இரைந்து கேட்பது. இந்த இடத்தில் அவரவர் சொந்த மொழியிலேயேதான் கேட்பார்கள். தொழுகையின் கடைசி இருப்பில் அமர்ந்திருக்கும் போது இறைவனிடம் தனது தேவைகளை தனது தாய் மொழியில்தான் கேட்கின்றனர். ஏனெனில் இறைவனுக்கு தமிழ் மொழியும் தெரியும்: உலக மொழிகள் அனைத்தும் தெரியும்.//

# பிரார்த்தனையை அவரவர் மொழியில் செய்யும்போது தொழுகையை மட்டும் அரபியில் ஏன் செய்யவேண்டும்? அவரவர் மொழியில் தொழுகை புரிந்தால் மட்டும் அல்லாஹ்வுக்கு புரியாதா? அரபியில் தான் தொழுகை புரிய வேண்டும் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறவில்லையே. பிறகு ஏன் தொழுகை அரபியில்தான் இருக்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறீர்கள்? தொழுகையில் அரபியில் ஓதுவதை அவரவர் மொழியில் ஓதினால் அல்லாஹ்வுக்கு ஜன்னி வந்துவிடுமா? #

ஏய் மூடனே, குரான் இறங்கியது அரபியில், அதை சரியாக ஊதா அரபிதான் சரி, தமிழில் மொழி பெயர்த்தால் யாருடைய மொழிபெயர்ப்பை ஏற்றுகொள்வது என்று ஒரு வாதம் வரும், மேலும் அய்யர்கள் உங்களை கேவலமாக திட்டுவது போல் அல்ல எங்கள் குரானில் உள்ளது, இனி அறியு கெட்டதனமாக எதையும் பதிய வேண்டாம்.

Ashak S said...

ஆனந்த் சாகர் said...

//இந்து மதமானது இந்தியர்கள் மட்டுமே பின்பற்றக் கூடிய ஒரு மதம்.//

அட தற்குறியே, அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் ஹிந்து மதத்தை பின்பற்றுவது உங்களுக்கு தெரியாதா? எந்த நாட்டவரும் ஹிந்து மதத்தை பின்பற்றலாம். அது இயற்கையோடு ஒன்றிணைந்த மதம். இஸ்லாம்தான் இயற்க்கைக்கு விரோதமான மதம். அது பொய் மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றின்மூலம்தான் நீடித்து வருகிறது. அது முடிவுக்கு வரும்.

அட தற்குறியே? ஹிந்து என்பது மதம் இல்லை, உலகில் மதமே இல்லை, ஹிந்து என்பது மதம் என்றால் உங்கள் வேதத்தில் இருந்து காட்டவும்.

ஆனந்த் சாகர் said...

//ஏய் மூடனே, குரான் இறங்கியது அரபியில், அதை சரியாக ஊதா அரபிதான் சரி, //

யார் மூடன் என்பதை நம்முடைய கருத்துக்களை படிக்கிற சுயபுத்தி உள்ள மக்கள் அறிந்துகொள்வார்கள். உன்னை போன்ற அரேபிய அடிமைக்கு எது சொன்னாலும் உன் மண்டையில் ஏறாது.

அரபிதான் வேண்டும் என்றால் அரபு நாட்டுக்கு ஓடி விடு. இங்கே ஏன் இருக்கிறாய்? உன்னை போன்று எங்களையும் அரபு அடிமையாக்க கனவு காணாதே.

ஆனந்த் சாகர் said...

//தமிழில் மொழி பெயர்த்தால் யாருடைய மொழிபெயர்ப்பை ஏற்றுகொள்வது என்று ஒரு வாதம் வரும்,//

குரானை எவராலும் சரியாக மொழிபெயர்க்க முடியாதென்றால், பிறகு அந்த குரான் அரபி அல்லாத மக்களுக்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாதது, பிரயோஜனம் இல்லாதது.

ஆனந்த் சாகர் said...

//அட தற்குறியே? ஹிந்து என்பது மதம் இல்லை, உலகில் மதமே இல்லை, ஹிந்து என்பது மதம் என்றால் உங்கள் வேதத்தில் இருந்து காட்டவும். //

ஹிந்து நாட்டில் (சிந்து நதியை ஒட்டியும் அதை தாண்டியும் உள்ள அகண்ட பிரதேசம்) வழங்கிவரும் பண்பாட்டு, கலாசார, சமய வழக்கங்கள், நம்பிக்கைகள், தத்துவங்கள், சித்தாந்தங்கள் ஆகிய வேத தர்மம் உட்பட அனைத்தையும் நாங்கள ஹிந்து மதம் என்று அழைக்கிறோம். ஹிந்து நாடு என்பது பண்டைய பாரசீக நாட்டவர்(இன்றைய ஈரான்) எங்களுக்கு வைத்த பெயர். இந்த பெயர் ஹிந்து வேதங்களில் கூறப்படவில்லை. நாங்கள் எந்த பெயரையும் எங்களுக்கு வைத்துக்கொள்வோம். அதனால் உனக்கு என்ன வந்தது?