Followers

Friday, June 13, 2014

நெகிழ வைத்த ஒரு நிகழ்வு - ரியாத் பேரூந்து நிலையத்தில்

நெகிழ வைத்த ஒரு நிகழ்வு - ரியாத் பேரூந்து நிலையத்தில்

கம்பெனி வேலையாக ஒரு வாரம் தபூக் மாநகருக்கு வரும் ஞாயிறன்று செல்கிறேன். அதற்காக டிக்கெட் முன் பதிவு செய்ய ரியாத் பேரூந்து நிலையத்துக்கு சென்று வரிசையில் காத்திருந்தேன். அப்போது எனக்கு பின்னால் ஒரு இந்தியர் திரு திரு என்று ஒரு பயம் கலந்த தொனியில் நின்று கொண்டிருந்தார். என்னிடம் ஏதோ சொல்ல வருவதை உணர்ந்து கொண்டு நான் கேட்டேன்...

'எந்த ஊரு?'

'ஆந்திரா... கர்நூல்' அந்த இந்து நண்பருக்கு உருதுவும் சரியாக வரவில்லை. தட்டுத் தடுமாறி பேசினார். தனது கையில் உள்ள ஒரு துண்டு சீட்டை என்னிடம் நீட்டினார். அதில் ஹஃப்ரல்பாதின் என்ற ஊர் பெயரும் - மற்றும் டெலிபோன் நம்பரும் எழுதப்பட்டிருந்தது. புதிதாக சவுதி வருகிறார். விமான நிலையத்திலிருந்து பேரூந்து நிலையம் வந்து விட்டார். இங்கு ரியாத்திலிருந்து அவர் வேலை செய்யும் இடமான ஹஃப்ரல் பாதின் 250 கிலோ மீட்டருக்கும் அதிக தூரத்தில் உள்ளது. அங்கு பஸ் பிடித்து இவர் செல்ல வேண்டும்.

எனது முறை வரவே நான் டிக்கெட் எடுத்து விட்டு அவரது பாஸ்போர்டை கொடுத்து 'ஹஃரல் பாதினுக்கு ஒரு டிக்கெட் கொடுங்கள்' என்று கவுண்டரில் உள்ளவரிடம் கேட்டேன். அவர் பெயரை பதிவு செய்து விட்டு '110 ரியால்' என்று என்னிடம் கேட்டார். நான் அந்த இந்து நண்பரிடம் '110 ரியால் பஸ் டிக்கெட்டுக்கான ரியாலை கொடுங்கள்' என்றேன். அவர் தனது கையில் இருந்து முழு பணத்தையும் என்னிடம் தந்தார். எண்ணிப் பார்த்தால் வெறும் 35 ரியால்தான் இருந்தது. 'என்ன இது? மீதி பணம் எங்கே?' என்றேன். தான் விமான நிலையத்திலிருந்து பேரூந்து நிலையம் வர 50 ரியால் கொடுத்ததாகவும் கொஞ்சம் இந்திய ரூபாய் இருப்பதாகவும் வேறு பணம் இல்லை என்றும் பரிதாபமாக சொன்னார். டிக்கெட் கவுண்டரில் உள்ள சவுதி நாட்டவரோ பணம் இல்லை என்றவுடன் சற்று கோபத்துடன் அடுத்த ஆளை கூப்பிட்டார்.

எனது தகுதிக்கு 10 ரியால் கொடுத்து மற்றவர்களிடமும் வசூல் பண்ணி கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் அவரை அழைத்துக் கொண்டு நகர ஆரம்பித்தேன். எங்கள் வரிசையில் நின்ற இரண்டு சவுதி நாட்டவர் இதனை கவனித்து விட்டு என்னிடம் 'என்ன பிரச்னை?' என்று கேட்டனர். நான் முழு விபரத்தையும் சொன்னேன். உடனே அந்த இருவரும் தங்கள் பையிலிருந்து 50 ரியாலையும் மற்றவர் 50 ரியாலையும் என்னிடம் கொடுத்து 'போதுமா' என்றனர். தற்போது 135 ரியால் சேர்ந்து விட்டது. நான் போதும்' என்றேன். அதே நபர் மேற்கொண்டு 20 ரியாலை அந்த இந்து நண்பரின் கையில் கொடுத்து 'வழியில் சாப்பிட வைத்துக் கொள்' என்று கொடுத்தார். அந்த இந்து நண்பருக்கு முகத்தில் ஏக மகிழ்ச்சி. அவர்கள் இருவருக்கும் நான் நன்றி சொன்னேன். அந்த இந்து நண்பரையும் நன்றி சொல்ல சொன்னேன். அவரும் அந்த சவுதிகளின் கைகளை பிடித்து நன்றி கூறினார். இது ஒரு சிறிய உதவிதான். ஆனால் மொழி தெரியாமல், சாப்பிடாமல் ஒரு அந்நிய தேசத்தில் அல்லாடிக் கொண்டிருக்கும் அந்த நேரத்தில் இந்த நூறு ரியால் என்பது வள்ளுவர் சொல்வது போல் 'ஞாலத்தின் மாணப் பெரிது' அல்லவா?

காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது


-திருக்குறள்

விளக்கம் : மிகவும் தேவைப்படும் நேரத்தில் ஒருவருக்கு செய்யப்படும் உதவி சிறிதாக இருந்தாலும், அது உலகத்தை விடப் பெரிதாக மதிக்கப்படும்.

நான் அவர் ஒரு இந்தியர் என்ற காரணத்தினால் உதவ போனேன். ஆனால் அந்த இரண்டு சவுதிகளும் யாரென்றே தெரியாத அந்த இந்து நண்பருக்கு உதவிய மனிதத் தன்மையை நினைத்து நெகிழ்வுற்றேன். இது போல் சவுதியில் ஆங்காங்கு பல நிகழ்வுகள் தினமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. உலகம் முழுக்கவும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நமது இந்திய நாட்டில் இந்துத்வாவாதிகளால் தினமும் எங்காவது ஒரு மூலையில் இஸ்லாமியர்கள் கொடுமைபடுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த இந்துத்வாவாதிகள் செய்யும் அந்த கொடூரங்கள் என்னை இந்த இந்து நண்பருக்கு உதவி செய்ய தடுத்து விடவில்லை. அந்த இரண்டு சவுதிகளும் டிக்கெட்டுக்கு பணத்தையும் கொடுத்து சாப்பாட்டு செலவுக்கு மேற்கொண்டும் பணத்தை கொடுத்த அந்த மனித நேயத்தை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.

சில நாட்களுக்கு முன்பு பால்தாக்கரேயையும், சிவாஜியையும் தரக்குறைவாக விமரிசித்ததாக கூறி அதனை முஸ்லிம்கள் செய்ததாக வதந்தி பரப்பி கலவரத்தை காவிகள் மும்பையில் அரங்கேற்றினர். சற்றும் சம்பந்தம் இல்லாத ஒரு கணிணி வல்லுனர் காவிகளால் அடித்தே கொல்லப்பட்டார். அந்த நேரத்தில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள கிராமங்களில் இந்துக்களை யாரும் தாக்கி விடாமல் முஸ்லிம்கள் காவல் காத்தார்களாம். இதனை நெகிழ்வாக ஒரு இந்து நண்பரே பேட்டியாக கொடுத்துள்ளார். இதனைத்தான் குர்ஆன் முஸ்லிம்களுக்கு போதிக்கிறது.

திருக்குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள்:

'நம்பிக்கை கொண்டோரே! இறைவனுக்குக் கட்டுப்பட்டு நீதிக்கு சாட்சிகளாக ஆகி விடுங்கள். ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள். அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள். இறைவன் நீங்கள் செய்வதை நன்கு அறிந்தவன்'
-குர்ஆன் 5:8

6 comments:

yalali1956 said...

Humanity and feeling is same everywhere. So many examples are posted here and in FB quoting the humanity of arabs in various occasions. May allah bless you and the arab brothers who helped needy man from India. Islam has been spread by beautiful actions and life example.

yalali1956 said...

*

சுவனப் பிரியன் said...

சகோ யாழாளி!

//Humanity and feeling is same everywhere. So many examples are posted here and in FB quoting the humanity of arabs in various occasions. May allah bless you and the arab brothers who helped needy man from India. Islam has been spread by beautiful actions and life example.//

தொடர்ந்து படித்தும் கருத்துக்களை பரிமாறியும் வருவதற்கு நன்றி! எல்லா புகழும் இறைவனுக்கே! பணி நிமித்தம் தபூக் செல்வதால் ஒரு வாரத்திற்கு பிறகு வழமை போல் இணையத்தில் வருகிறேன். Insha Allah!

Seeni said...

பகிர்வுக்கு நன்றி..

சுவனப் பிரியன் said...

திரு க்ருஷ்ணகுமார்!

//உலகளாவி இஸ்லாமியத் தொழுகை அரபியில் மட்டிலும் நடத்தப்படுகிறது. இதை மறைக்க முயல்வது நேர்மையின்மை.//

நான் மறைக்கவில்லையே! உலக ஒற்றுமைக்காக இவ்வாறு அரபியில் தொழுகை நடத்தப்படுகிறது: தேவ மொழி என்பதற்காக அல்ல என்று கூறியுள்ளேனே! மறைக்க வேண்டிய அவசியமும் இல்லையே!

//தில்லைக்கோவிலில் தமிழில் வழிபாடே இல்லை என்று கூசாமல் பொய் சொன்னது நேர்மையின்மை.//

ஆறுமுக சாமியை தமிழில்பாட அங்குள்ள தீட்ஷதர்கள் அனுமதிக்கவில்லையே! அதற்கு உங்களின் பதிலையே காணோமே!

//உங்களுக்கு மிகக் குறிப்பாக சம்ஸ்க்ருதத்தில் வெறுப்பு உள்ளதும் உர்தூ அரபியில் காதல் உள்ளதும் புரிகிறது.//

எனக்கு தமிழானாலும், அரபியானாலும், சமஸ்கிரதமானாலும் ஒன்றுதான். ஏனெனில் அனைத்துமே இறைவனால் படைக்கப்பட்டு மனிதனுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டதாக குர்ஆன் கூறுகிறது. பாரபட்சம் காட்டக் கூடாது என்றும் கட்டளையிடுகிறது.

இத்தனை மொழிகளைவிட தமிழ் மொழி மேல் சற்று கூடுதல் பிரியம் இருக்கும். அது தாய் மொழி என்பதால். அவ்வளவுதான்.

சுவனப் பிரியன் said...


திரு அடியவன்!

//ஆக, “அஸ்ஸலாமு அலைக்கும்” என்றால் அதன் உண்மைப் பொருள் …
“இஸ்லாம் தழைக்கட்டும்” என்பதே ஆகும்.
அதற்குப் பதிலாக, “அலைக்கும் அஸ்ஸலாம்” என்றால் அதன் உண்மைப் பொருள் …
“அப்படியே, இஸ்லாம் தழைக்கட்டும்” என்பதே ஆகும்.
இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் நேர்மைத் திறம் கூடாது, தக்கியா தான் சரி என்று குரானும் ஹதித்துக்களும் சொல்லி இருப்பதால், பொருளை, அமைthi உண்டாகட்டும் என்று ஆக்கி விட்டார்கள்.
அல்லா இருக்கும் இடம் எங்கும் தக்கியாவும் இருக்கும்!//

உங்களுக்கு அரபி இலக்கணம் எந்த அளவு தெரிந்துள்ளது என்பது உங்களின் பின்னூட்டத்திலிருந்து தெரிகிறது.

ஒரு மலர்க்கொடி மொட்டுவிடுகிறது; பின்னர் மொட்டு கட்டவிழ்கிறது; மலர்கிறது; மணம் வீசுகிறது; மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது; சூல் கொள்கிறது; காய்க்கிறது; கனிகிறது;

(ஸல்ம்) என்னும் வேர்ச் சொல்லில் இருந்து (ஸலம) என்னும் சொல்லும் அதிலிருந்து (அஸ்லம) என்னும் சொல்லும், அதிலிருந்து (இஸ்லாம்) எனும் சொல்லும் தோன்றின.

அரபு அகராதியை நீங்கள் படித்துப் பார்த்தால் இந்த விபரங்கள் கிடைக்கப் பெறும். ஸலம, ஸலாம், இஸ்லாம் என்று ஒரு வேர்ச்சொல் பலவாறாக பிரிகிறது. நமது தமிழ் மொழியிலும் இதே அடிப்படையை கவனிக்கலாம். ஸலம் என்ற வேர்ச்சொல்லுக்கு அமைதி என்ற பொருளே வரும். அதனை எங்கு பயன்படுத்துகிறீர்களோ அந்த இடத்துக்கு தக்கவாறு பொருள் மாறும்.

ஸல்ம் – அமைதி, ஸலம – அமைதியடைந்தான், அஸ்லம – அமைதி பெறத் தேடினான் – அமைதி தேடியவன், இஸ்லாம் – அமைதி பெறத் தேடுதல் – இறைவனுக்கு அடிபணிந்து அமைதி பெறல் – அமைதி சாந்தி என்பன முறையே அந்தச் சொற்களின் பொருள்களாக இருக்கின்றன. இதிலிருந்து இஸ்லாம் எனும் சொல்லின் மூல முதற் சொல்லின் பொருளும் அமைதிதான்; இஸ்லாம் எனும் சொல்லின் பொருளும் அமைதிதான் என்று அறிகிறோம்.

ஸலம என்ற வார்த்தை ஸலாம் என்று பரிணமித்து இஸ்லாம் என்று முடிகிறது. அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொன்னால் அது ஒரு முன்னிலை. நமக்கு முன்னால் உள்ள நபரின் அமைதிக்காக இறைவனிடம் வேண்டுகிறோம். இஸ்லாம் என்றால் 'ஒரு அமைதியான வாழ்வு முறை'. ஆக இரண்டின் பொருளும் ஒன்றுதான்: அது வாழ்வு முறையா அல்லது தனி நபர் வாழ்த்தா என்பது அந்த சொல் பயன்படுத்தும் இடத்தைப் பொருத்தது.