Followers

Friday, June 06, 2014

போகோ ஹராமும் நமது நாட்டு இந்துத்வாவாதிகளும்!நைஜீரியாவில் சமீப காலமாக 'போகோ ஹராம்' என்ற ஒரு தீவிரவாத அமைப்பு பல கிறித்தவ சிறுமிகளை கடத்திக் கொண்டு சென்றுள்ளது. அவர்களை விலைக்கு விற்போம் என்று அதன் தலைவன் அறிவிக்கிறான். இடைக்கு இடையே வெறி வந்தவனாக 'அல்லாஹு அக்பர்' என்று வேறு கத்துகிறான். அட கிறுக்கனே! இதுதான் இஸ்லாமா? இஸ்லாம் இதைத்தான் உனக்கு போதித்ததா?

நபிகள் நாயகத்தின் இறக்கும் காலங்களில் அவரின் கவச உடை ஒரு யூதரிடம் அடமானமாக இருந்தது. நபித் தோழர் ஒருவர் 'பக்கத்து வீட்டு மாற்றுமத நண்பருக்கு இன்று சாப்பாடு கொடுத்து விட்டாயா?' என்று தினமும் தனது மனைவியிடம் கேட்பாராம். ஏனெனில் அவ்வாறு செய்யச் சொல்லி நபிகள் நாயகத்தின் கட்டளை இருக்கிறது. உக்கிரமமாக நடக்கும் போரில் கூட பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள், மத குருமார்கள் போன்றவர்களை கொல்லக் கூடாது என்று குர்ஆன் தடை விதித்திருக்கிறது. நபிகள் நாயகத்தின் வாழ்நாள் முழுக்க மாற்று மதத்தவர்களிடம் மிக அன்பாகவே நடந்துள்ளனர். நபிகளையும் அவரது தோழர்களையும் இஸ்லாத்தை ஏற்ற ஒரே காரணத்தினால் கொல்ல வரும் போது தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போரை நபிகளார் தனது தோழர்களுக்கு கடமையாக்கினார். அதுவும் தற்காப்புக்காகவே!

ஆனால் இங்கு அப்பாவி சிறுமிகள் கடத்திச் செல்லப்படுகிறார்கள். அவர்களை கொல்வோம் என்றும் மத மாற்றம் செய்வோம் என்றும் சந்தையில் விற்று விடுவோம் என்றும் பகிரங்கமாக தொலைக்காட்சியில் அறிவிக்கின்றனர். கடைசியில் 'அல்லாஹூ அக்பர்' என்று தட்டுத் தடுமாறி சொல்லி முடிக்கின்றனர். அரபு வார்த்தைகள் கூட சரளமாக வரவில்லை.

சவுதி அரேபிய தலைமை முஃப்தி சொல்கிறார் 'போகோ ஹராம் என்ற அமைப்புக்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தம் இல்லை. இஸ்லாத்தை விட்டு என்றோ அவர்கள் வெளியாகி விட்டனர். அவர்களின் செயல்களை இஸ்லாத்தோடு சம்பந்தப்படுத்த வேண்டாம். முஸ்லிம்கள் இவர்களிடம் இருந்து விலகியிருங்கள்' என்று அறிக்கை விட்டுள்ளார்.

மேற்கத்திய உலகம் இன்று மிகப் பெரிய சிக்கலை சந்தித்து வருகிறது. அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் கட்டுக் கடங்காமல் மக்கள் இஸ்லாத்தை ஏற்று வருகின்றனர். அங்குள்ள ஆட்சியாளர்களுக்கு இது மிகப் பெரும் பிரச்னைகளை உண்டு பண்ணுகிறது. இஸ்ரேலும் இதனால் மிகவும் ஆடிப் போயுள்ளது. இது போன்ற இஸ்லாமிய வளர்ச்சியை தடுக்க அவர்களுக்கு உள்ள ஒரே வழி இஸ்லாத்தின் மேல் அந்த மக்களுக்கு வெறுப்பை உண்டாக்க வேண்டும். குர்ஆனை வைத்தும் நபிகளை வைத்தும் அந்த வெறுப்பை உண்டாக்க முடியாது. அதற்கு தக்க பதிலை முஸ்லிம்கள் கொடுத்து விடுவார்கள் என்று தெரியும். எனவே தான் மொஸாத்தின் துணை கொண்டு உலகம் முழுவதும் இஸ்லாமிய போர்வையில் தீவிரவாதத்தை அரங்கேற்றி வருகின்றனர்.

தாலிபான் - போகோ ஹராம் - இந்தியன் முஜாஹிதீன் - லஸ்கர் இ தொய்பா - அல் கைதா என்று உலகில் உள்ள அனைத்து இஸ்லாமிய தீவிரவாத கும்பல்களையும் நன்கு ஆராய்ந்து பாருங்கள். அவர்கள் ஏதோ ஒரு வகையில் அமெரிக்காவிடமோ, இஸ்ரேலின் மொசாத்திடமோ மறைமுகமான தொடர்பு வைத்திருப்பதை அறியலாம். இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பு இந்திய உளவுத் துறையால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை அமைப்பு என்று முன்னால் உச்ச மன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கூறியதை இங்கு நாம் நினைவு கூற வேண்டும். தாலிபான்களை ஆரம்பத்தில் உருவாக்கி உசாமா பின் லேடனை ஹீரோவாக்கியதும் அமெரிக்கா என்பதும் நம் அனைவருக்கும் தெரியும்.

இஸ்ரேலோடு ராஜீய தொடர்புகளை நமது நாடு சென்ற வாஜ்பாயி காலத்தில் ஏற்படுத்திக் கொண்ட பிறகுதான் இந்தியாவில் இஸ்லாத்தின் பெயரால் தீவிரவாதம் தலை தூக்கியதை நாமும் அறிவோம். அவர்கள் முதலில் வறுமையில் உழலும் இஸ்லாமிய இளைஞர்களை தேர்ந்தெடுப்பர். கள்ள முல்லாக்களைக் கொண்டு ஜிஹாதுக்கு தவறான அர்த்தங்களை கற்பித்து அந்த இளைஞர்களை மூளை சலவை செய்து தற்கொலை குண்டுதாரியாக மாற்றுவர். ஒரு பாகிஸ்தானிய நண்பன் தங்கள் நாட்டில் இது போன்று நடந்து பிறகு ராணுவத்தால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறினான். மாலேகான் குண்டு வெடிப்பாகட்டும், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பாகமட்டும், மெக்கா மசூதி குண்டு வெடிப்பாகட்டும் அனைத்தையும் கச்சிதமாக அவர்கள் நிறைவேற்றி பழியை முஸ்லிம்கள் மேல் போட்டனர். ஆனால் ஹேமந்த் கர்கரே என்ற நேர்மையான அதிகாரி மூலமாக அவர்களின் சதி அனைத்தும் வெளி உலகுக்கு தெரிய வந்தது.

ஹேமந்த் கர்கரே மட்டும் அன்று இந்த உண்மைகளை கண்டு பிடிக்காமல் விட்டிருந்தால் இன்று நமது பாரத தேசம் ஒரு ஈராக்காகவோ, ஒரு லிபியாவாகவோ, அல்லது ஒரு நைஜீரியாவாகவோ என்றோ மாறி அழிவை சந்தித்துக் கொண்டிருந்திருக்கும். அதிலிருந்து இறைவன் காப்பாற்றினான். அதே போன்ற செயல்பாடுகள் தான் ஈராக், லிபியா, நைஜீரியா போன்ற நாடுகளில் மொசாத், அமெரிக்க, ஐரோப்பிய அரசுகளின் துணை கொண்டு நடத்தப்படுகிறது.

இந்தியாவில் மொசாத், மற்றும் இந்துத்வாவாதிகளின் உண்மை முகம் வெளிப்பட்டது போல் போகோ ஹராமுக்கு பின்னால் யார் உள்ளனர் என்பதும் பின்னாளில் தெரிய வரும். தற்போதும் அதே பாணியை பின் பற்றி அமைதி பூங்காவாம் தமிழகத்தை ரண களமாக்க இந்துத்வாவாதிகள் தயாராகி வருகின்றனர். அதன் முதல் முயற்சியாகத்தான் ஆங்காங்கே முஸ்லிம்களை வெட்டுவதும், பள்ளிவாசலுக்குள் புகுந்து தகராறு வளர்ப்பதும் சில நாட்களாக தொடர்கதையாகி வருகிறது. நம்மைச் சுற்றியுள்ள இந்து நண்பர்களில் 80 சதவீதமான நபர்கள் மிகவும் நல்லவர்கள். இந்துத்வாவின் சூழ்ச்சிகளுக்கெல்லாம் அடி பணியாதவர்கள். 20 சதமான இந்துத்வாவாதிகளுக்காக நாம் 80 சதமான நபர்களை பகைத்துக் கொள்ளக் கூடாது. எந்த முயற்சி நடந்தாலும் சட்டத்தை நாம் கையில் எடுக்காமல் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். இந்துத்வாவாதிகள் செய்யும் அனைத்து காரியங்களையும் இணையம், மற்றும் பத்திரிக்கை வாயிலாகவும், தனி நபர்களை சந்தித்தும் அன்போடு விளக்க வேண்டும். இது போன்ற நமது முயற்சியால் அவர்களின் சூழ்ச்சிகளை மிக இலகுவாக நம்மால் முறியடிக்க முடியும். அதை விடுத்து 'வெட்டு, குத்து' என்று பதிவுகளை உசுப்பேற்றும் வகையில் அமைத்தால் அதனால் பாதிப்படைவது முஸ்லிம்கள் தான். ஏனெனில் அரசு உத்தியோகங்களில் இந்துத்வாவாதிகளின் ஆளுமை அதிகமாக உள்ளது. நாம் உணர்ச்சிவசப்பட்டு அவர்களை தாக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டமே! எனவே அதற்கு நாம் பலியாகிவிடக் கூடாது. ஒரு கட்டத்துக்கு மேல் எல்லை மீறி சென்றால் அப்போது யாரும் சொல்லாமலேயே இறைவன் நம்மை ஒன்று படுத்துவான்: நமது எதிரிகளை எப்படி கையாள்வது என்ற அறிவையும் நமக்கு தருவான். அது வரை நாம் அவரப்படாமல் சட்டத்தின் துணை கொண்டு அனைத்து பிரச்னைகளையும் சமாளிக்க முயற்சிப்போம்.

"ஏக இறைவனை மறுப்போரும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர். அல்லாஹ்வும் அவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன்"

குர்ஆன் 8:30

22 comments:

Anonymous said...

அமெரிக்காவின் 20 மாகாணங்களில் 2வது பெரிய மதமாக உருவெடுத்துள்ள இஸ்லாம்!

10 ஆண்டுகளில் 67% வளர்ச்சி !!

'வாஷிங்டன் போஸ்ட்' விரிவான தகவல்!!!

அமெரிக்காவின் 20 மாகாணங்களில் இஸ்லாமிய மார்க்கம், இரண்டாவது பெரிய மதமாக உருவெடுத்துள்ளதாக "ASARB" (Association of Statisticians of American Religious Bodies) என்ற 'சென்செஸ்' வெளியீட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

மதங்கள் குறித்த 'சென்சஸ்' எடுப்பதில், அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அமைப்பான, "ASARB"யின் புள்ளி விவர தகவல்களை 'வாஷிங் போஸ்ட்' வெளியிட்டுள்ளது.

மனமாற்றத்தின் மூலம் தான் 'மதமாற்றம்' நிகழ்ந்துள்ளதாக கூறும் மேற்படி ஆய்வில், 20% அமெரிக்கர்கள் இஸ்லாமிய போதனைகள் மற்றும் ஆய்வுகளை முழுமையாக மேற்கொண்ட பிறகு தான் இஸ்லாத்தை எற்றுள்ளதாக கூறுகிறது,ASARB.

Pew Forum on Religion and Public Life என்ற மற்றொரு அமைப்பு, சற்று தெளிவாகவே ஆய்வு செய்து, இஸ்லாத்தை எற்போரில் ஆண்களின் சதவிகிதம் 54 என்றும் 46% மட்டுமே பெண்கள் எனவும் கூறுகிறது.

முன்னதாக வெளியிடப்பட்ட "ASARB" ன் கணக்கின்படி, 2000 முதல் 2010 வரையான காலக் கட்டத்தில், மட்டும் 10 லட்சம் அமெரிக்ககர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

-MARUPPU

சுவனப் பிரியன் said...

இதுதான் தமிழகம்!

ஒரு இந்து சகோதரரின் உள்ளக் குமுறல்

தற்போது இங்கு FB நடந்துவரும் சில விவாதங்களுக்கு பதில் சொல்லவே இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

நாம் நம்முடைய நெருங்கிய இஸ்லாமிய நண்பரையே "டேய் துலுக்க பையா " என்றுதான் அழைக்கிறோம். துலுக்கன் என்று கூறி அவர்களை கிண்டல்
செய்வதாக நினைக்கிறோம். இந்த பெயர் காரணத்தை நான் பிறகு கூறுகிறேன். உங்களில் எத்தனை பேருக்கு இஸ்லாமிய நண்பர்கள் உள்ளனர்.எனக்கு நிறைய இஸ்லாமிய நண்பர்களை தெரியும். என் அனுபவத்தில் அந்த இளம் வயதில் அவர்கள் கடைபிடிக்கும் ஒழுக்க நெறிகள் நம்மில் ஒரு சிலர் கூட கடைபிடிப்பதில்லை. அப்படி யாராவது ஒரு சிலர்
கடைபிடித்துவிட்டால் " அப்பா , அவர் ரொம்ப நேர்மையானர்பா ", என்று கூறும் அளவிற்குதான் நாம் உள்ளோம்.

அவர்களுடைய பொருளாதார, கல்வி, நிலையை பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? தாழ்த்தப்பட்ட ,மலைவாசி மக்களை விட மிக மோசமாக இருக்கிறார்கள். மதம் அவர்களை பல வழிகளில் தடுப்பதால் மிக நேர்மையாக பொருளீட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்களுக்கு வீடு வாடைகைக்கு கூட நம்மில் யாரும் கொடுப்பதில்லை. கேட்டால் அவர்கள் மதவெறி பிடித்தவர்கள் என்போம். அவர்கள் மத வெறி பிடித்தவர்கள் அல்லர். மாறாக மார்க்க நெறியை பின்பற்றுபவர்கள்.
அவர்களுடைய மார்க்க நெறியை நம்மால் ஒருநாள் கூட கடைபிடிக்க
முடியாது.

‪#‎அடுத்தது_தீவிரவாதம்‬.

தீவிரவாதம் எங்கு இல்லை? ஒரு புழுகூட தாக்கபட்டால் சற்று நெளிந்து தன் எதிர்ப்பை காட்டும்.
பா.ம.க எப்படி வளர்ந்தது? வாண்டையார்கள் எப்படி வளர்ந்தார்கள்?
மூப்பனார்கள் எப்படி வளர்ந்தார்கள் ? தேவர்கள் மற்றும் முக்குலத்தோர் எப்படி வளர்ந்தார்கள்? விடுதலை சிறுத்தைகள் எப்படி வளர்ந்தார்கள் ?
இதெல்லாம் தீவிரவாதம் இல்லையா? எங்கோ ரேஷன் கடையில் கடைசியில் நிற்கும்ஒரு இஸ்லாமியரை நாம் தீவிரவாதியாக பார்க்கிறோம்.
இவர்கள் மட்டும் யார்? சில தலைமுறைகளுக்கு முன் நம் உறவினர்களாக இருந்தவர்கள்தான். இதைத்தான் மானுடவியலும் அறிவியல் பூர்வமாக சொல்கிறது. நிச்சியமாக இங்கே இருக்கும் இந்த தினகரனின் ஜீனும்,எங்கோ உள்ள அப்துல்லாவின் ஜீனும் ஒன்றாகவே இருக்கும். என்னுடன் பழகும்
இஸ்லாமிய நண்பர்கள் அனைவரும் மனதார தீவிரவாதத்தையும், கொலை செயலையும் மிக கடுமையாக எதிர்கிறார்கள். சகோதரத்துவத்தையே¬
அவர்கள் விரும்பிகிறார்கள். ஒரு காலத்தில் இஸ்லாம் துருக்கியை தலைநகராக கொண்டு இருந்தபோது துருக்கியன் என்று அழைக்கபட்டர்கள்.
அது மருவி துலுக்கன் என்றாகிவிட்டது. இது ஒன்றும் கேலிக்குரிய வார்த்தை அல்ல. மகாகவி பாரதிகூட தன்னுடைய படைப்புக்களில் "திசை பார்த்து கும்பிடும் துருக்கியன்", என்று குறிப்பிட்டுள்ளார்

ஆகவே நண்பர்களே ! பிறந்துவிட்டோம். 60ஆண்டு காலமோ அல்லது 70 ஆண்டு காலமோ நம் வாழ்கை. மிக சிறிய வாழ்கை. ஒரு ஆமைகூட400 ஆண்டுகள் வாழ்கிறது. அந்த வாழ்க்கைகூடநமக்கு கிடையாது. இதில் பாதி காலம் தூக்கத்திலேயே போய்விடுகின்றது. இருக்கும் சில ஆண்டுகளையாவது சகோதரத்துவத்துடன் எல்லோரையும் அரவணைத்து செல்வோம். ஒரு இஸ்லாமியருக்கு சலாம் சொல்லிபாருங்கள்.அப்புறன் தெரியும் அவர்களுடைய அருமையும், பெருமையும்.

நன்றி: வாசுதேவன் தினகரன்.

Azeez Nizardeen said...

இஸ்லாத்தின் கண்ணியத்தை குலைக்கும், அமெரிக்காவின் அரசியல் நலன்களைப் பாதுகாக்கும் இந்த ஜிஹாத் கூலிப்படைகள் எழுபதுகளின் இறுதிப்பகுதியில் ஆப்கான் போராட்டத்திற்காக சீஐஏ வினால் உருவாக்கப்பட்டவை அமெரிக்காவின் அரசியல் எதிரியாக இருக்கும் நாடுகளுக்கு அன்பளிப்பாக இந்த ஜிஹாத் வழங்கப்பட்டடது. பாகிஸ்தான் தான் இந்த ஜிஹாதிகளின் விளை நிலமானது.

http://www.badrkalam.com/2009/07/blog-post.html

ஆனந்த் சாகர் said...

இந்த கட்டுரையின் ஒவ்வொரு வரியும் பொய் என்பது சுயமாக சிந்திக்கிற எவருக்கும் நன்கு தெரியும். சுவனப்பிரியனின் ஒவ்வொரு கட்டுரையும் பொய்யும் புரட்டும் நிரம்பியாய்வையே. அந்த வரிசையில் இதுவும் ஒன்று. காபிர்கள் ஒருவரும் இதையெல்லாம் நம்பமாட்டார்கள்.

Anonymous said...

ஆனந்த சாகர் என்று அனானி முகமூடிக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் கோழைகள் இருட்டிலிருந்து கல்லெறிகிறார்கள். தர்க்கம் தானே செய்கிறோம். ஏன் ஒளிகிறாய்?

ஆறறிவு படைத்த எந்த மனிதனும் போகோஹராம் செய்வதை ஒப்புக்கொள்ளான். ராணுவ பலம் மிகுந்த அமெரிக்காவால் அந்தப் பொட்டல் வெளிக்காட்டில் இன்னமும் மாணவிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லையாம். போங்கள் சாகர், இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள், உங்கள் ஆட்சிதான் வந்து விட்டதே... சங் பரிவாரங்களுக்கு துப்பாக்கி பயிற்சி கொடுக்க வேண்டியது தானே பாக்கி...??

ஜமால்

yalali1956 said...

//ஆனந்த் சாகர் said...
இந்த கட்டுரையின் ஒவ்வொரு வரியும் பொய் என்பது சுயமாக சிந்திக்கிற எவருக்கும் நன்கு தெரியும். சுவனப்பிரியனின் ஒவ்வொரு கட்டுரையும் பொய்யும் புரட்டும் நிரம்பியாய்வையே. அந்த வரிசையில் இதுவும் ஒன்று. காபிர்கள் ஒருவரும் இதையெல்லாம் நம்பமாட்டார்கள்.//

Why this kolaiveri anadaaa !!! Don't you have a heart and mind to digest the truth. What you have is to argue for anything and everything like your rotten concept of " Everything and anything is god" . Man have open mind at least when you are reading genuine feeling that of " Brother வாசுதேவன் தினகரன். "

Anonymous said...

//ஒரு இஸ்லாமியருக்கு சலாம் சொல்லிபாருங்கள்.அப்புறன் தெரியும் அவர்களுடைய அருமையும், பெருமையும்.//
கண்டிப்பாக் தெரியும் எப்படி தெரியுமா. முதலில் நண்பர்களாக பழகுவார்கள் பிறகு மெதுவாக "நீ வணங்குவது தவறு, உன் வழிபாடு தவறு, நாங்களே யோக்கியம் உத்தமம்." என்று தங்கள் மதமாற்ற மூளை சலவை வேலையை ஆரம்பிப்பார்கள். பிறகு "அவர் மதம் மாறிவிட்டார், இவர் மதம் மாறிவிட்டார்" என்று விளம்பரம் செய்வார்கள். இதில் பெரிய கூத்து 'எங்கள் கொள்கை பிடித்து போய் வந்தார் " என்று உளறுவது, இந்து சகோதரா மிக விரைவில் இந்த கூட்டத்தின் மூளை சலவைக்கு நீயும் ஆளாக நேரிடும். ஏனென்றால் முன்பு போல் படை திரட்டி நாட்டை பிடித்து இவர்களால் இஸ்லாமிய தேசம் அமைக்க முடியாது\. எனவே அதற்கு கண்டுபிடித்த சூழ்ச்சி வலைதான் இந்த பிற மதத்தவரை நண்பா, சகோதரா என்று கூறி பழகி மதம் மாற்றுவது. ஜாக்கிரதை இவர்களுக்கு வக்காலத்து வாங்கி வருங்காலத்தில் உன் வணக்க வழிபாட்டை நீ ஜிஸ்யா வரி கட்டி செய்யும் நிலைக்கு தள்ளப்படலாம்

//அவர்களுடைய பொருளாதார, கல்வி, நிலையை பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? தாழ்த்தப்பட்ட ,மலைவாசி மக்களை விட மிக மோசமாக இருக்கிறார்கள்.//

அதற்கு அரசாங்கம் காரணமா அல்லது பிற மதத்தினர் காரணமா.? அவர்களேதான் காரணம் அவர்கள் மதம் காரணம்.
// இதில் பாதி காலம் தூக்கத்திலேயே போய்விடுகின்றது. இருக்கும் சில ஆண்டுகளையாவது சகோதரத்துவத்துடன் எல்லோரையும் அரவணைத்து செல்வோம்.//
அதையே நாங்களும் சொல்கிறோம் முட்டாளே. "உன் மதம் உனக்கு என் மதம் எனக்கு " என்ற அவர்களின் குரான் வசனத்தை இந்த தேச துரோகிகள் கடைபிடித்து வாழ்ந்தால் இவர்களுக்கு என்ன பிரச்சினை, எவன் எந்த மதத்தை பின்பற்றினால் இவனுகளுக்கு என்ன வந்தது.

ஆனந்த் சாகர் said...

யார் இந்த வாசுதேவன்? அவர் சரியான அரைவேக்காடு என்பது தெரிகிறது.

ஆனந்த் சாகர் said...

//ஆனந்த சாகர் என்று அனானி முகமூடிக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் கோழைகள் இருட்டிலிருந்து கல்லெறிகிறார்கள். தர்க்கம் தானே செய்கிறோம். ஏன் ஒளிகிறாய்?//

தன்னை விமர்சிப்பவர்களை கொலை செய்வதுதானே முகம்மதுவின் முன்மாதிரி? அதைதானே முஸ்லிம்களும் பின்பற்றி இஸ்லாமிய சொர்க்கத்துக்கு சென்று அல்லாஹ் வழங்கும் 72 கண்ணழகிகளுடன் உல்லாசமாக இருக்க விரும்புகின்றனர்? இப்படிப்பட்ட பைத்தியக்கார கிரிமினல்களிடமிருந்து ஒளியாமல் என்ன செய்வது?

ஆனந்த் சாகர் said...

/தீவிரவாதம் எங்கு இல்லை? ஒரு புழுகூட தாக்கபட்டால் சற்று நெளிந்து தன் எதிர்ப்பை காட்டும்.
பா.ம.க எப்படி வளர்ந்தது? வாண்டையார்கள் எப்படி வளர்ந்தார்கள்?
மூப்பனார்கள் எப்படி வளர்ந்தார்கள் ? தேவர்கள் மற்றும் முக்குலத்தோர் எப்படி வளர்ந்தார்கள்? விடுதலை சிறுத்தைகள் எப்படி வளர்ந்தார்கள் ?
இதெல்லாம் தீவிரவாதம் இல்லையா?//

வன்னியர்களாக மாறுங்கள், வாண்டையர்களாக மாறுங்கள், மூப்பனார்களாக மாறுங்கள், தேவர்களாக மாறுங்கள், முக்குலத்தோர்களாக மாறுங்கள், தலித்துகளாக மாறுங்கள் என்று வாசுதேவன் குறிப்பிடும் கட்சிகள் மிரட்டினார்களா? அல்லது அப்படி மாறாதவர்களை படுகொலை செய்தார்களா? அப்படி மாறாதவர்களை அசுத்தமானவர்கள், புனித மார்கழி மாதம் முடிந்தவுடன் அவர்களை கண்ட இடத்தில பிடரியில் வெட்டுங்கள், எல்லோரும் அவர்கள் ஜாதியாக மாறும்வரை பூமியில் அவர்களுடன் போர் புரியுங்கள் என்று அவர்கள் கூறுகிறார்களா? இதையெல்லாம் செய்யாத அவர்களை முஸ்லிம்களோடு ஒப்பிடுவது அயோக்கியத்தனம். இதைதான் வாசுதேவன் என்ற பிரகஸ்பதி செய்துள்ளாள்.

ஆனந்த் சாகர் said...

//என்னுடன் பழகும் இஸ்லாமிய நண்பர்கள் அனைவரும் மனதார தீவிரவாதத்தையும், கொலை செயலையும் மிக கடுமையாக எதிர்கிறார்கள்.//

ஒன்று அந்த முஸ்லிம்கள் இஸ்லாத்தை, முகம்மதுவை பற்றி சரியாக அறியாதவர்களாக இருக்க வேண்டும் அல்லது தெரிந்தே அவர்கள் முஸ்லிமல்லாதவர்களோடு நண்பர்களாக நடித்துக்கொண்டு இருக்க வேண்டும். நானும் பல முஸ்லிம்களோடு பழகி இருக்கிறேன். அவர்களில் பெரும்பாலானோர் முகம்மதுவை பற்றி நன்கு தெரியாதவர்களாக இருக்கின்றனர். அதனால்தான் அவர்கள் மற்றவர்களை போல் பயங்கரவாதத்தை ஏற்பதில்லை. மனிதர்களாக இருக்கின்றனர்.

ஆனந்த் சாகர் said...

//ஆறறிவு படைத்த எந்த மனிதனும் போகோஹராம் செய்வதை ஒப்புக்கொள்ளான்.//

முஸ்லிம்கள் குரானை ஏற்றுக்கொள்கிறார்களே? அவர்களுக்கு ஆறறிவு இல்லையா?

ஆனந்த் சாகர் said...

//நாம் நம்முடைய நெருங்கிய இஸ்லாமிய நண்பரையே "டேய் துலுக்க பையா " என்றுதான் அழைக்கிறோம்.//

எவரும் முஸ்லிமை பார்த்து துலுக்கா என்று அழைப்பதில்லை. முஸ்லிம்கள்தான் மற்றவர்களை காபிர்கள் என்று கேவலப்படுத்துகிறார்கள்.

//என் அனுபவத்தில் அந்த இளம் வயதில் அவர்கள் கடைபிடிக்கும் ஒழுக்க நெறிகள் நம்மில் ஒரு சிலர் கூட கடைபிடிப்பதில்லை. //

ஒரே நேரத்தில் 4 மனைவிகளை வைத்துக்கொள்ளலாம், காபிர்களை கொன்றுவிட்டு அவர்களின் பெண்களை அபகரிக்கலாம், அப்படி கைப்பற்றப்பட்ட பெண்களை கற்பழிக்கலாம், வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்டவர்கள் என்று பெயர் வைத்து அந்த பெண்களை மணம் செய்துகொள்ளாமல் பாலுறவு அடிமைகளாக காலம் முழுவதும் வைத்துக்கொள்ளலாம், ஆறு வயது பெண் குழந்தையையும் மணமுடித்துக்கொண்டு 8 வயது ஆனவுடன் அந்த குழந்தையோடு பாலுறவு கொள்ளலாம் என்கிற இஸ்லாமிய ஒழுக்க(!) நெறிகளைத்தானே இந்த ஐந்தாம் படையை சேர்ந்த வாசுதேவன் பெருமையாக கூறுகிறார்? ஆமாம், இப்படிப்பட்ட ஒழுக்க(!) நெறிகளை காபிர்கள் கடைபிடிக்க மாட்டார்கள்.

ஆனந்த் சாகர் said...

//தீவிரவாதம் எங்கு இல்லை? ஒரு புழுகூட தாக்கபட்டால் சற்று நெளிந்து தன் எதிர்ப்பை காட்டும்.//

தாக்கப்பட்டால் அதை நேரிடையாக எதிர்ப்பதை யார் தீவிரவாதம் என்கின்றனர்? எது பயங்கரவாத செயல் என்பதுகூட இந்த வாசுதேவனுக்கு தெரியவில்லை. முஸ்லிம்களுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று அவர் கட்டுரை எழுத புறப்பட்டுவிட்டார். என்ன கொடுமை சார் இது?

தங்களுடைய அரசியல், மத நோக்கங்களை அடைவதற்காக பொது மக்களின்மீது வன்முறை செயல்களை புரிவது மற்றும் வன்முறையை காட்டி மிரட்டுவது ஆகிய செயல்கள்தான் பயங்கரவாதம் என்று அகராதி கூறுகிறது. இந்த பயங்கரவாதத்தைத்தான் முஸ்லிம்கள் உலகம் முழுவதும் அரங்கேற்றுகின்றனர். அவர்களின் இந்த செயலுக்கு முஹம்மதுதான் அவர்களுக்கு முன்மாதிரி.

ஆனந்த் சாகர் said...

//ஒரு இஸ்லாமியருக்கு சலாம் சொல்லிபாருங்கள்.அப்புறன் தெரியும் அவர்களுடைய அருமையும், பெருமையும்.//

காபிர்களுக்கு சலாம் சொல்லக்கூடாது. அவர்களின் சலாமுக்கும் பதில் சலாம் சொல்லக்கூடாது என்பது இஸ்லாமிய கொள்கை என்பது இந்த முட்டாளுக்கு தெரியவில்லை.

Ashak S said...

ஆனந்த் சாகர் said...
இந்த கட்டுரையின் ஒவ்வொரு வரியும் பொய் என்பது சுயமாக சிந்திக்கிற எவருக்கும் நன்கு தெரியும். சுவனப்பிரியனின் ஒவ்வொரு கட்டுரையும் பொய்யும் புரட்டும் நிரம்பியாய்வையே. அந்த வரிசையில் இதுவும் ஒன்று. காபிர்கள் ஒருவரும் இதையெல்லாம் நம்பமாட்டார்கள்.

பொய் என்றால் ஆதரத்துடன் நிரூபிக்கவும்

Ashak S said...

#வன்னியர்களாக மாறுங்கள், வாண்டையர்களாக மாறுங்கள், மூப்பனார்களாக மாறுங்கள், தேவர்களாக மாறுங்கள், முக்குலத்தோர்களாக மாறுங்கள், தலித்துகளாக மாறுங்கள் என்று வாசுதேவன் குறிப்பிடும் கட்சிகள் மிரட்டினார்களா? அல்லது அப்படி மாறாதவர்களை படுகொலை செய்தார்களா? அப்படி மாறாதவர்களை அசுத்தமானவர்கள், புனித மார்கழி மாதம் முடிந்தவுடன் அவர்களை கண்ட இடத்தில பிடரியில் வெட்டுங்கள், எல்லோரும் அவர்கள் ஜாதியாக மாறும்வரை பூமியில் அவர்களுடன் போர் புரியுங்கள் என்று அவர்கள் கூறுகிறார்களா? இதையெல்லாம் செய்யாத அவர்களை முஸ்லிம்களோடு ஒப்பிடுவது அயோக்கியத்தனம். இதைதான் வாசுதேவன் என்ற பிரகஸ்பதி செய்துள்ளாள்.#

இதிலிருந்து சொல்ல வருவது என்ன?

Ashak S said...

ஆனந்த் சாகர் said...
//ஒரு இஸ்லாமியருக்கு சலாம் சொல்லிபாருங்கள்.அப்புறன் தெரியும் அவர்களுடைய அருமையும், பெருமையும்.//

காபிர்களுக்கு சலாம் சொல்லக்கூடாது. அவர்களின் சலாமுக்கும் பதில் சலாம் சொல்லக்கூடாது என்பது இஸ்லாமிய கொள்கை என்பது இந்த முட்டாளுக்கு தெரியவில்லை.#

இறைவன் ஒருவன் என்று இஸ்லாம் சொல்கிறது, இல்லை இல்லை இறைவன் ஒன்றுக்கு மேற்பட்டவன் என்று நீங்கள் சொல்கிறீர், பிறகு எப்படி இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாக நாங்கள் துணை நிற்க முடியும், ஓரிறை கொள்கையை குரான் மட்டும் அல்ல உங்கள் வேதங்களும் சொல்கிறது.

ஆனந்த் சாகர் said...

// இறைவன் ஒருவன் என்று இஸ்லாம் சொல்கிறது, இல்லை இல்லை இறைவன் ஒன்றுக்கு மேற்பட்டவன் என்று நீங்கள் சொல்கிறீர், பிறகு எப்படி இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாக நாங்கள் துணை நிற்க முடியும், ஓரிறை கொள்கையை குரான் மட்டும் அல்ல உங்கள் வேதங்களும் சொல்கிறது.//

இதுதான் முஸ்லிம்களின் மனநிலை. முகம்மதுவை உண்மையாக பின்பற்றுபவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பதை ஒரு முஸ்லிம் சரியாக மேலே கூறியுள்ளார். காபிர்களே, முஸ்லிம்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ஆனந்த் சாகர் said...

//பொய் என்றால் ஆதரத்துடன் நிரூபிக்கவும் //

ஆதாரங்களை கொடுத்தால் சுவனப்பிரியன் அதனை வெளியிடாமல் மறைக்கிறார். என்னுடைய சில பின்னூட்டங்களையும் அவர் வெளியிடாமல் மறைத்துவிட்டார்.

நான் ஆதாரம் தரவில்லை என்று மொட்டையாக பேசுவதுதான் முஸ்லிம்களின் வழக்கம். என்னுடைய குற்றசாட்டுகளை சுட்டிக்காட்டி அதற்கு ஆதாரத்தை கேட்டால் நான் தர தயாராக இருக்கிறேன். நான் தரும் ஆதாரங்களை சுவனப்பிரியன் தைரியமாக இங்கு வெளியிட முன்வரவேண்டும்.

Ashak S said...

@ ஆனந்த் சாகர் said # காபிர் என்றால் யார் என்று சொல்லவும், உங்கள் வேதத்தில் உள்ளதை பின்பற்றவும், பிறகு தெரியும் இறைவன் யார் என்று

Anonymous said...

காபிர் என்றால் முகமதையும், முகமதின் அல்டர் ஈகோவான அல்லாவையும் ஏற்று கொள்ளாததுதானே ? மற்றவர்கள் படிப்பது இருக்கட்டும். நீங்கள் முதலில் குரான், ஹதீஸ் மற்றும் சீராவைப் படியுங்கள். ஒரு மசாலா படம் பார்த்த எஃபெக்டு வரும்.
காதல், கள்ளக் காதல், தகாத காதல், வெட்டு, குத்து, ஊரை கொள்ளை அடிப்பது, ஊர் மக்களை வேரோடு அழிப்பது, அடிமைத்தனம், சாமியாட்டம், சொன்ன வாக்கை மீறுவது, இடையில் ஊர் மக்களுக்கு அறிவுரை சொல்வது, கட்சி மாறுபவர்களை தீர்த்துக் கட்டுவது, எதிர்த்து பேசுபவன் கதையை முடிப்பது, கற்பழிப்பு நிச்சயம் உண்டு.