உஜ்ஜயினுள்ள சிவ ஆலயத்தில் அணையாமல் எரிந்து கொண்டிருந்த நந்தா விளக்கிற்காக தினமும் நான்கு சேர் நெய்யை முகலாய அரசாங்கமே வழங்கி வந்திருக்கிறது. உஜ்ஜயினி மகா கலேஷ்வரர் கோவிலின் அர்ச்சகராயிருந்த தேவ நாராயணனின் கோரிக்கையின் பேரில் இதற்கான உத்தரவு அப்பொது வழங்கப் பட்டிருந்தது.
ஹக்கீம் முகமது மெஹ்தி என்ற அதிகாரி கோவிலின் நந்தா விளக்கிற்குத் தினமும் நான்கு சேர் நெய்வழங்க சபுதரா கொத்வாலின் தாசிலதாருக்கு உத்தரவிட்டுள்ளார். முகலாயப் பேரரசில் ஒளரங்கசீப்பின் ஆடசியின் போது இந்த ஆணை அமுலில் இருந்தது.
P.N.pande, Islam And Indian culture, Page 67.
----------------------------------------
'உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற பாகுபாடு இன்றி எல்லா மட்டத்திலுமுள்ள மக்களின் நலன்களை மேம்படுத்த நாம் சலிக்காமல் மேற்கொண்டு வரும் முயற்சிகள் மிகுந்த அன்போடும் பரிவோடும் செயல்படுத்தப் பட வேண்டும். நமது புனிதமான சட்டத்தின் படி புராதனக் கொவில்கள் எதையும் அழிக்கக் கூடாது. ' - ஒளரங்கஜேப்
P.N.Pande, Islam And Indian Culture, Page 45
----------------------------------------
குமர குருபருக்கு காசியில் கேதார மந்திரமும், கேதாரத் துறையும், அறச்சாலை (குமாரசாமி மடம்) முதலியன அமைத்திட உதவிய முகலாய மன்னர் ஒளரங்க ஜேப்.
-ஸ்ரீ ஆதி குமரகுருபர சுவாமிகள் அருளிச் செய்த 'நீதி நெறி விளக்கம்', திருப்பனந்தாள் காசி மடம் வெளியீடு,
1960, page 7
---------------------------------------
ஒளரங்கசீப்பின் ஆடசி காலத்தில் குமர குருபருக்கு தன்ஆன்மீகப் பணிகளை செய்ய அரசே பல உதவிகளை செய்து கொடுத்தது.
-அ.மார்கஸ், இசுலாமியருக்கு எதிரான கட்டுக் கதைகள், பாண்டிச்சேரி,
1994, Page 7.
-------------------------------------
காசியில் குமரகுருபரர் சிவபெருமானுக்குக் கோயில் கட்டி நித்திய நைமித்தியங்களை நடத்தினார். இன்றும் கூட அங்கே தமிழ்நாட்டு முறையில் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
-உ.வே.சாமிநாதய்யர், நல்லுரைக்கோவை, இரண்டாம் பாகம்,சென்னை.
1946, page 146.
------------------------------------
'ஹிந்து, ஜெயின் ஆலயங்களுக்கும் பூஜீதர்களுக்கும் ஒளரங்கசிப்பால் மான்யங்கள் வழங்கப் பட்டன. ஹிந்து சாதுக்களுக்கும் அறக் கட்டளைகள் அளிக்கப்பட்டன.' - பம்பாயைச் சேர்ந்த ஞானசந்தர் என்பவரின் கூற்று இது.
Pakistan Historical Society, October 1951, Page 247-254
-----------------------------------
கே.கே.தத்தா என்பவர் ஒளரங்கஜேப் இந்துக்களுக்கும் குறிப்பாக அந்தணர்களுக்கு மானியம் வழங்கியதையும் அது குறித்து பிறப்பித்த அரச ஆணைகளையும் வரிசைப்படுத்தி புள்ளி விபரங்களுடன் வெளியிட்டுள்ளார்.
K.K.Datta, Some Firmans, Sanads and Parwanas, (1578-1802), Patna, Part 2
----------------------------------
முஸ்லிமாக மதம் மாறுகிறேன் என்ற அரசர்!
விஜய நகர அரச சாம்ராஜ்ஜியத்தின் கடைசி அரசர் ஸ்ரீரங்க ராயலு பிஜப்பூர் காரர்கள் கர்நாடகத்தை வென்று தெற்கிலிருந்து முன்னேறி வருவதையும் கோல்கொண்டா தளபதிகள் வடக்கிலிருந்து முன்னேறி வருவதையும் கண்டு தன்னுடைய ராஜ்ஜியம் தனது கரங்களிலிருந்து நழவிக் கொண்டிருப்பதை அவர் உணர்ந்தார். எனவே தக்காண சுல்தான்களிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு அளிக்கும் படி வேண்டி ராமராவ் என்ற பிரதிநிதியை ஒளரங்கஜேப்பிடம் அனுப்பி வைத்தார். ஆனால் இதில் தலையிட ஒளரங்கஜேப் விரும்பவில்லை.
ரங்கராயலுக்கு போர் நெருக்கடிகள் இன்னும் அதிகமானபோது ஸ்ரீனிவாஸ் என்ற பிராமணத் தூதுவரை ஒளரங்கஜேப்பிடம் அனுப்பி வைத்தார். 'இரண்டரை கோடி ரூபாயும், இருநூறு யானைகளும், தன்னிடமுள்ள ஆபரணங்களையும் தருவதுடன் வருடாந்திர வரியைத் தொடர்ந்து கட்டிடவும் தனது ராஜ்ஜியத்தை முகலாய சாம்ராஜ்ஜியத்துடன் இணைத்து விட்டு பின் தனது பகுதியை ஒரு ஜாகீராகத் தனக்குத் திரும்பக் கொடுப்பதற்கும் சம்மதம்' என்று ஸ்ரீரங்க ராயலு தெரிவித்தார்.
மேலும் 'தானும் தனது உற்றார் உறவினர்களும் குடிமக்களும் முஸ்லிமாக மதம் மாறுவதற்கு சம்மதிப்பதாகவும்' சொல்லி அனுப்பியவர் ஸ்ரீரங்கராயலு.
“….the Raja promised tp turn Muslim with all his relatives and dependents!……”
உளள்த்தில் மாற்றம் ஏற்படாமல் ஆட்சி போகிறதே என்ற பயத்தினால் இஸ்லாமாவதை தாம் விரும்பவில்லை என்று கூறிய ஒளரங்கஜேப் அந்த அரசரின் கோரிக்கையை நிராகரித்தார்.
Sir Jadunath Sarkar, History Of Aurangzib, Calcutta, 1912 vol. 1, Page 248, 249
இந்த சம்பவத்தைப் பற்றி சொல்லும் போது 'இந்தக் கோரிக்கையின் பெயரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை இந்தியாவில் முகலாயர்கால ஆட்சியின் பண்பைப்பற்றி நல்ல விளக்கத்தைத் தருகிறது.'என்கிறார் ஜாதுநாத் சர்க்கார்.
History Of Aurangzeb, Page 249.
No comments:
Post a Comment