
'சமத்துவம் மறுக்கப்படும்போது அனைத்தும் மறுக்கப்படுகிறது' ஜேஎன்யு.,வில் பயின்ற தமிழக் மாணவர் முத்துக்கிருஷ்ணன் கடைசியாக தனது முகநூலில் பதிவு செய்த நிலைத்தகவல் இதுதான்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நவீன வரலாறு பாடப்பிரிவில் ஆராய்ச்சி மேற்கொண்டிருந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன், திங்கள்கிழமை மாலை அவரது நண்பரின் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். தற்கொலை குறிப்பு ஏதும் கிடைக்கவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்பட்டாலும் கடைசியாக மார்ச் 10-ம் தேதியன்று முத்துக்கிருஷ்ணன் அவரது முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்த நிலைத்தகவல் அவர் மன உளைச்சலில் இருந்ததை உறுதி செய்வது போல் இருக்கிறது.
அவரது முகநூல் பதிவு:
"எம்.ஃபில்., பி.எச்.டி., மாணவர் சேர்க்கையில் சமத்துவம் பேணப்படவில்லை. ஆராய்ச்சி மாணவர்களுக்காக நடத்தப்படும் வாய்மொழித் தேர்விலும் சமத்துவம் இல்லை. அங்கே நடைபெறுவதெல்லாம் சமத்துவம் மறுக்கப்படுவது மட்டுமே. பேராசிரியர் சுகதேவ் தோரத் பரிந்துரைகள் இங்கு சிறிதும் பின்பற்றப்படுவதில்லை. மாணவர்கள் போராட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. சமூகத்தின் விளிம்புநிலையில் இருந்து வருபவர்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது. சமத்துவம் மறுக்கப்படும்போது அனைத்துமே மறுக்கப்படுகிறது" இவ்வாறு கடந்த 10-ம் தேதியன்று அவர் தனது முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.
நன்றி: தமிழ் இந்து நாளிதழ்
14-03-2017
பட்டம் பதவிகள் எல்லாம் இருந்தும் மனிதனை மனிதனாக மதிக்கவில்லை என்றால் அந்த பட்டங்களும் பதவிகளும் எதற்கு?
இந்து மதம், சாதி, தீண்டாமை ஆகியவை பற்றி எந்தப் புரிதலும் இல்லாத பலர் 'நல்லா படிச்சி முன்னேறினால் தீண்டாமை மறைந்து விடும், சம மதிப்பு தானாகக் கிடைக்கும்’ என்று கூறுவதை வழக்கமாகக் கேட்டு இருப்பீர்கள். ஆனால் உண்மையில் இந்தக் கருத்து, பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழிபோடும் தந்திரமாகும்.
மோடியும் அமீத்ஷாவும் கொண்டு வரத் துடிக்கும் வர்ணாசிரம சட்டங்களின் நீட்சி இது போன்ற மரணங்களாகத்தான் இருக்கும். இந்துத்வா வளர்ச்சியுறுவதால் பாதிப்பு இஸ்லாத்துக்கு அல்ல: மாறாக இந்து பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களே அதிகம் பாதிப்புறுவர். இதனை வருங்கால இந்தியா நமக்கு உணர்த்தும்.
No comments:
Post a Comment