Followers

Tuesday, March 21, 2017

தோழர் இரா. முருகவேள் -இன் பதிவு


தோழர் இரா. முருகவேள் -இன் பதிவு

தோழர் பாரூக்கின் கொலைக்குப் பிறகு நடந்த சில நிகழ்வுகள் மனநிலைகள் சரியாகப் பதிவு செய்யப்படவில்லை என்று நினைக்கிறேன்.

கொலைக்குக் கண்டனம் தெரிவித்து கு.ராமகிருஷ்ணன் தலைமையிலான பெரியார் தி.க தோழர்கள் கடந்த ஞாயிறு அன்று நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு இஸ்லாமிய அமைப்பினர் அழைக்கப்படவில்லை. கொலைக்குப் பின்னால் அமைப்பு ஏதாவது இருக்கிறதா யார் காரணம் எனப்து தெளிவாகாத நிலையில் உணர்ச்சியமயான சூழலில் கொதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது பின்பு அனைவரையும் இணைத்து அடுத்த நிகழ்சி நடத்திக் கொள்ளலாம் என்று கருதியதாக தோழர் கு.ரா பின்பு தெரிவித்தார்.

ஆனால் மனித நேய மக்கள் கட்சி, , எஸ்டிபிஐ, வெல்பெர் பார்ட்டி, தமுமுக, பிஎஃப் ஐ போன்ற அமைப்பினர் தோழர் கு.ராமகிருஷ்ணனை தொலைபேசியில் அழைத்து தங்களையும் அழைக்க வேண்டும். தாங்களும் இந்தக் கொலையைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். கொலையாளீகளைத் தண்டிக்கக் கோருகிறோம் என்று கூறினர்.

தங்களுக்கு அழைப்[பு இல்லாவிட்டாலும் பெயர் போடப்படாவிட்டாலும் தாங்களும் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதாகவும் அது தங்கள் உரிமை என்றும் கூறினர்.

அத்ன் படியே அலி பாய், நாசர், ரஹீம், பாட்சித், போன்ற முக்கிய தலைவர்கள் உட்பட பல இஸ்லாமிய அமைப்பினர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். தோழர் ராமகிருஷ்ணன் இதைக் குறிப்பிட்டு தனது உரையில் பேசினார்.

கடந்த இரண்டு நாட்களில் நான் சந்திக்க நேர்ந்த ஒவ்வொரு இஸ்லாமியரும் கவலையும் வருத்தமும் கொண்டிருப்பதைக் காண முடிந்தது. வெள்ளம், ஜல்லிக் கட்டு போன்ற நிகழ்வுகளின் போதெல்லாம் இஸ்லாமியர் ஆற்றிய சேவைகளால் பெற்ற நன்மதிப்பை இந்த வெறிச்செயல் கெடுக்கும் ஆபத்து உள்ளது என்ற வருத்தத்தைத் தெரிவித்தனர்.


பல்லாண்டுகள் சிறைகளில் கழித்து இறுகி்ப் போன தோழர்கள் கூட இது குறித்து வருத்தம் கொண்டிருந்தனர்.

நீதிமன்றத்தில் சரணடைந்தவர்கள் செல்போன் தொலைந்ததாகவும், இஸ்லாத்திற்காக கொலை செய்ததாகவும் கூறியதாக வெவ்வேறுவிதமான பதிவுகள் வந்த வண்ணமிருந்தன. ஆனால் ச்ரண்டர் பெட்டிஷன் எனபப்டும் சரண்டையும் மனுவில் நான் போலீஸால் கைது செய்யப்படலாம் என்ற சந்தேகம் இருப்பதால் சரண்டைகிறேன் என்ற மிக சாதாரணமான வாசகங்கள்தான் இருந்தன. பின்பு வழக்கு நடத்த வசதியாக இருக்கும் என்ற நோக்கில் வழக்குரைஞரால் வழக்கமாக எழுதப்பட்டவை. சரணடைந்தவர்கள் இதுவரை நீதிமன்றத்தில் எந்த வாக்குமூலமும் கொடுக்கவில்லை.

இருந்த போதும் சில இஸ்ஸாமிய இளஞர்களிடையே இணையத்தின் மூலம் புதிய புதிய பொருட்கொள்ளும் போக்குகள், இஸ்ஸாமிலிருந்து வெளியேறுபவர்களை முர்ஷத் என்ற முறையில் தண்டிக்க வேண்டும் என்ற பேச்சுக்கள் இருபதை உண்ர முடிந்தது என்று சிலர் கூறினர். உனது மதம் உனக்கு எனது மதம் எனக்கு என்பது வழக்கமானது. ஆனால் வெளியேறுபவர்களை அப்படிப் பார்க்க முடியாது என்பது முர்ஷத். (எனக்குப் புரிந்தவரை).

வெளிநாடுகள், மத்தியக் கிழக்குப் போர்க்களங்களில் இருந்து பரவும் இக்கருத்துக்களை மிக குறைந்த அளவுள்ள அறிவுஜீவி இளைஞர்கள் பரிசீலிக்கின்றனர் என்றனர். இஸ்லாமிய இயக்கங்கள் பதிலடி தருவதற்காகவும் உரிமைகளுக்குப் போராடவுமான அமைப்புகள். ஆனால் இந்தக் கருத்துக்கள் அறிவுத் தளத்தில் மத்தியதரவர்க்க அல்லது மேல்தட்டு வர்க்க இளஞர்களை எட்டுகிறது என்பதை இந்தக் கொலை காட்டுகிறது.

இந்தக் குழுக்கள் (அப்படி ஏதாவது இருந்தால்) ஒரு போதும் இஸ்லாமிய மக்கள் ஆதரவு பெற்றவையாக இருக்க முடியாது. இவர்கள் என்ன சொல்லிக் கொண்டாலும் இஸ்லாமிய சமூகம் இதை தனது நன்மைக்கான செயலாக ஏற்றுக் கொள்ளாது என்பது நண்பர்களின் கருத்து.

எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் இடதுசாரிகள் திகவினருக்கு நன்கறிந்த ஒரு தோழரின் இழப்பு பேரிழப்பு. கடும் கோபத்தை ஏற்படுத்தக் கூடியது.

கொலைகாரர்கள் மீதான தோழர்களின் வெறுப்பு ஒருபோதும் நம்மோடு இணைந்து நிற்கும் இஸ்லாமிய அமைப்புகள், நம்மோடு வசிக்கும் இஸ்லாமிய மக்கள் மீதான வெறுப்பாகவோ இடைவெளி ஏற்படுத்தக் கூடியதாகவோ மாறாது.

கொலைகாரகள் கடும் தண்டனை அடையவேண்டும் என்பது நமது கோரிக்கை. நம்மைப் போலவே கொலைகாரகளை வெறுக்கும் இஸ்ஸாமிய தோழர்களுடனான தோழமை தொடரச் செய்வதும் நமது கடமை. ஒருவிதத்தில் அவர்கள் நம்மை விட அதிக கவலை கொண்டுள்ளனர். கொலைகார்களையும் அந்த கருத்துக்களையும் தனிமைப்ப்டுத்த வேண்டும் என்பதிலும் அதீத ஆர்வம் கொண்டுள்ளனர்.

அடக்குமுறைகளை ஒன்றாக எதிர்கொள்ளும் தோழர்களுக்கிடையேயான ஒற்றுமையை ஒரு சில கொலைகாரர்கள் சிதைக்க அனுமதிக்கக் கூடாது.

No comments: