From Brinda Ponni
ஏன் பெண்கள் பாலியல் வன்முறை பத்தி பேச மாட்டேங்கிறாங்க - ஒரு உதாரணம் ----------------------------
June 2017: ஒரு 17 வயசு பொண்ணு பாஜக எம்.எல்.ஏவால உனோ நகரத்தில் பாலியல் வன்கொடுக்கு ஆளாகுறா
June 2017 - April 2018: போலிஸ் புகாரை வாங்க மறுக்குறாங்க. பெற்றோர்கள் கோர்ட்டுக்கு போறாங்க
April 3, 2018: அப்பாவை எம்எல்ஏ ஆட்கள் அடிக்கிறாங்க
April 3, 2018: போலிஸ் அப்பாவை கைது செய்றாங்க
April 8, 2018: உத்திரப்பிரதேச முதல்வர் யோகி வீட்டுக்கு முன்னாடி அந்த பொண்ணு தற்கொலை செய்ய முயற்சிக்கிறா
April 9, 2018: அப்பா கொலை செய்யப்படுறார்
April 10, 2018: போலிஸ் எம்.எல்.ஏ அடி ஆட்கள் 4 பேரை கைது செய்றாங்க. CBIகு கேஸ் மாறுது.
April 13, 2018: அலகாபாத் கோர்ட் எம்.எல்.ஏவை கைது செய்ய உத்தரவு இடுது
11 July 2018: CBI பாலியல் வன்கொடுமைக்கும், அப்பாவோட கொலைக்கும் chargesheet file செய்றாங்க.
18 August, 2018: அப்பாவின் கொலையை பார்த்த witness தீடீர்னு இறந்து போறார். அவர் மாமா அவர் விஷம் குடுத்து கொல்லப்பட்டதா சொல்றார்.
21st November 2018: அவர் மாமா 18 வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு விஷயத்துக்காக கைது செய்யப்படுறார்.
26 December 2018: பிறந்த நாள் மாற்றி சொன்னதாக பாலியல் வன்முறைக்கு ஆளான பெண், அவ மாமா மேல FIR போடப்படுது.
28th July 2019: மாமாவை பார்க்க ஜெயிலுக்கு போகும் போது, ஒரு வண்டி இந்த பொண்ணோட கார் மேல மோதுது. பொண்ணு, அவளோட வக்கில் உயிருக்கு போராடிட்டு இருக்காங்க. கூட வந்த 2 அத்தைங்க இறந்திடுறாங்க.
ஆக அப்பா அடிச்சி கொலை, மாமா கைது, அத்தைகள் இறந்திட்டாங்க. Witness கொலை. பொண்ணும் வக்கிலும் உயிருக்கு போராடிட்டு இருக்காங்க.
கேளுங்க, ஏன் இந்த முட்டா பெண்கள் பாலியல் வன்முறைகளை பத்தி பேச மாட்டேங்கிறாங்க
* ஓரு ஆங்கில பதிவின் தமிழாக்கம்
1 comment:
பிரம்மச்சரியம் பிரதி பன்னம் வீரிய லாப - பிரம்மச்சரியம் காப்பது இளைஞர்களின் கடமை - சீதையைத்தவிர வேறு பெண்ணை சிந்தையாலும் தொட மாட்டேன் என்ற கருத்துக்கள் மலிந்த நாடு. இந்த கலாச்சாரத்தை அழித்து பெண்களை குமுஸ் பெண்களாக மாற்றப் துணியும் அரேபிய காட்டுமிராண்டி கலாச்சாரத்தை 1000 ஆண்டுகள் இந்துஸ்தானத்தில் முன்னிலைப்படுத்தியவர்கள் அரேபிய படையெடுப்பாளா்கள் மற்றும் இந்தியாவில் வாழும் அவர்களது அடிமைகள். பெண்கள் துன்புருத்தப்படுகின்றாள் எனில் அங்கு இந்து பண்பாடு துளிர்விடவில்லை என்று அர்த்தம்.முறையான பண்பாட்டுக்கல்வியை அனைவருக்கும் அளித்தால் பெண்கள்சிறப்பாக வாழ்வார்கள்.பலாத்காரம் என்ற பேச்சிற்கு இடம் அல்லாது போகும்.
Post a Comment