பலர் என்னை கேட்கும் கேள்வி : நீங்கள் பிறப்பால் பிராமணர் தானே...நீங்களே
இப்படி பேசலாமா??!
பதில்: பிராமணன்னா பெரிய கொம்பா.பிறப்பால் உயர்ந்தவன் எவனுமே கிடையாது.
ஒருவரின் மனிதமும் நற்பண்பும் தான் அவரை உயர்த்தும்.
மனிதமும்,சமூகநீதியுமே
எனது அடையாளமாக இருக்க வேண்டுமே தவிர என் ஜாதியல்ல
(டாக்டர்
ஷர்மிளா தற்போதய விசிக எம்எல்ஏ வின் மனைவி. கணவர் பாலாஜி வன்னியர் சமூகத்தை
சேர்ந்தவர். இந்தியாவில் உள்ள எல்லா பிராமணர்களும் டாக்டர் ஷர்மிளா
போன்று பரந்த மனப்பான்மைக்கு வந்து விட்டால் இந்தியா முழுவதும் அமைதிப் பூங்காவாக
மாறி விடும்.)
2 comments:
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதனியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி
"நல்வழி" என்னும் நூளில் ஔவையார் அவர்கள் எழுதியது...
விளக்கம்:
மக்களை "சாதி" என்ற முறையில் வைத்து பிரிக்கவேண்டுமெனில், இரண்டாக பிரிக்கலாம்... நீதி, நெறிமுறை தவறாமல் பெருந்தன்மையுடன் வாழும் பெரியோர் என்ற ஒரு பிரிவும், நீதி, நெறிமுறை தவறி நடக்கும் இழிகுலத்தோர் மற்றொரு பிரிவும் ஆவர்...-------------------------------------------------------------------------------------
காபீர்கள் சண்டாளர்கள் போன்ற சொற்களை மறக்கும் அளவிற்கு இந்த உலகம் உருப்படும்.
சதா பிறாமணர்களை குறி வைத்து தாக்கும் போக்கு சு..ன் அதிகரித்து வருகிறது. பண்டைய காலத்தில் சில குறைகள் இருந்தது உண்மைதான்.ஆனால் பலரது தொணடால் அந்த ஆணவப்போக்கு மாறி கிட்டத்தட்ட 95 சதம் அழி்ந்து விட்டது. பிறாமணர்களும் விதிவிலக்கு அல்ல. தீணடாமை என்று சமூக அநீதியை அனைத்து சாதி மக்களும் கடைபிடித்து சில பிரிவினரை .சங்கடப்படுத்தினது உண்மை. பிறாமணர்களை மட்டும் சுட்டிக்காட்டு வது கயமை.
Post a Comment