Followers

Tuesday, May 25, 2021

லட்சத் தீவு மக்களையும் நிம்மதியாக விடாத மோடி அரசு!

லட்சத் தீவு மக்களையும் நிம்மதியாக விடாத மோடி அரசு!
90 சதவீதத்துக்கு மேல் முஸ்லிம்கள் மக்கள் தொகை. அமைதியான தீவு. சுற்றுலா துறை மூலம் நல்ல வருமானம். அந்த தீவின் எம்பி முஹம்மது ஃபைஸல்.
இவ்வாறு அமைதியாக சென்று கொண்டுள்ள ஒரு தீவின் மீது தற்போது புதிய சட்டங்கள். மாட்டுக் கறியை அந்த மக்கள் நேரிடையாக வாங்கவோ விற்கவோ கூடாது. இனி கார்பரேட்டுகள் என்ன சொல்கிறார்களோ அந்த விலை கொடுத்துதான் வாங்க விற்க முடியும். மேலும் சாலைகளை விரிவாக்குகிறோம் என்ற பெயரில் அந்த மக்களின் சொத்துக்களை எந்த கேள்வியும் கேட்காமல் பிடுங்குகிறது மத்திய அரசு. 'எங்களுக்கு எதற்கு ஐந்து வழிச் சாலை: எங்களுக்கு தேவையில்லை' என்கின்றனர் அந்த மக்கள். எம்பி ஃபைஸலும் 'எங்களை கலக்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக பல முடிவுகளை எடுக்கிறது' என்கிறார்.
காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். 'அந்த மக்களின் கலாசாரத்திலும் மதத்திலும் மூக்கை நுழைத்தால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம்' என்று கடுமையாக விமரிசித்துள்ளார். அந்த மக்களை கருத்துக் கேட்ட பின்புதான் எந்த நடவடிக்கையையும் எடுக்க வேண்டும் என்கிறார்.
நியாய விலைக் கடைகள் 30க்கு மேல் பூட்டியாகி விட்டது. குழந்தைகளின் மதிய உணவில் மீன், கறி போன்றவை கூடாது. காய்கறிகள் மட்டுமே பரிமாறப்பட வேண்டும் என்ற சட்டம்.
கேரள முதல்வர் பினராய் விஜயன் 'லட்சத் தீவு எங்களோடு பல தலைமுறையாக தொடர்புடைய தீவு. அந்த மக்களின் உரிமைகளில் கை வைப்பதை நாங்கள் வேடிக்கை பார்க்க முடியாது' என்கிறார்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள தீவின் நிம்மதியை கெடுப்பதே அமித்ஷா மோடிக்களின் திட்டம்.
நரேந்திர மோடியின் ஆட்சியில் ஹிந்துக்களும் நிம்மதியாக இல்லை: முஸ்லிம்களும், கிருத்தவர்களும், சீக்கியர்களும், தலித்களும் நிம்மதியாக இல்லை. நாட்டு மக்களை கொடுமைபடுத்தி அதில் சுகம் காணும் இப்படி ஒரு சைகோவை நமது வாழ்நாளில் நாம் பார்க்கப் போவதில்லை. இறைவன் இந்த கொடியவர்களை இழிவுபடுத்துவானாக!
ஆக்கம்
சுவனப்பிரியன்
Priyanka Gandhi Vadra
@priyankagandhi
4h

The people of Lakshadweep deeply understand and honour the rich natural and cultural heritage of the islands they inhabit. They have always protected and nurtured it. The BJP government and its administration have no business to destroy this heritage, to harass the people of Lakshadweep or to impose arbitrary restrictions and rules on them. Dialogue sustains democracy. Why can’t the people of Lakshadweep be consulted? Why can’t they be asked what they believe is good for them and for Lakshadweep? How can someone who knows nothing about their heritage be allowed to use his power to destroy it? I extend my full support to the people of Lakshadweep. I will always stand by you and fight for your right to protect your heritage. It is a national treasure that we all cherish. 





No comments: