மங்கோலியர் வரலாறு நமக்கு உணர்த்துவது என்ன?
ஹிஜாப் தடை செய்யப்பட்ட தீர்ப்பை அடுத்து முஸ்லிம் சமூகத்தில் ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுள்ளது.
இனி இந்தியாவில் நாம் ஏதேனும் உரிமையை நிலைநாட்ட முடியுமா.? என்ற சந்தேகம் ஆழமாக பதிந்து வருகிறது.
இந்த வல்லாதிக்க சக்தியை வெற்றி பெற முடியாது என்ற குறுகிய மனப்பான்மை சமூகத்தில் உளவியல் ரீதியாக ஏற்பட்டுள்ளது.
நாம் எப்படி இவர்களை எதிர் கொள்ள போகிறோம், நமது எதிர் காலம் எப்படி ஆக போகிறதோ என்ற அச்சமும் சமூகத்தை பீடித்துள்ளது.
இப்படிப்பட்ட குமுறல் பதிவுகள் தான் அதிகமாக இணையத்தில் உலா வருகிறது.
இன்னும் சிலர் தனியாக முஸ்லிம் பெண்களுக்கு பள்ளிக்கூடம் கட்டி ஹிஜாப் அணிய வேண்டுமென பாடம் எடுக்க ஆரம்பித்து விட்டனர். அப்படியென்றால் தற்போது நாம் என்னதான் செய்வது என்ற கேள்வி எல்லோர் மத்தியில் எழும்புகிறது.
நம் இஸ்லாமிய சமூகம் இது போன்ற பிரச்சனைகளை முதல் முறையாக சந்திக்கவில்லை. இதை விட கொடுமைகளை பார்த்தும், இதை விட வல்லாதிக்க சக்திகளை வீழ்த்திய வரலாறு தான் இஸ்லாமிற்கு உண்டு. நாம் வரலாற்றில் இருந்து தீர்வு பெற வேண்டும்.
13ஆம் நூற்றாண்டில் மங்கோலிய பேரரசின் செங்கிஸ்கான் பேரன் மோங்கே கான் ஆட்சியில் ஹுலாகு கான் கண்ணில் பட்ட தேசத்தை முழுவதும் தன் வசப்படுத்தினான்.
அனைத்து மன்னர்களும் அவர்களை பகைத்தால் அழிவு தான் மிஞ்சும் என தாமாக சரணடைந்தனர்.
எதிர்த்தவர்களை தடமே இல்லாமல் ஈவு இரக்கமில்லாமல் மங்கோலியர்கள் கொன்றொழித்தார்கள்.
இதில் முஸ்லிம்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.
கடைசியில் 500 ஆண்டு பழமையான முஸ்லிம்களின் அப்பாசிய ஆட்சியின் மீது மங்கோலியர்களின் பார்வை விழுந்தது.
ஹுலாகு கான் தலைமையில் மிகப்பெரிய படை அப்பாசிய ஆட்சியின் தலைநகரமான பாக்தாத்தை நோக்கி விரைந்தது. பாக்தாத்தை கைப்பற்றி சொல்லால் வர்ணிக்க முடியாத அளவிற்கு மங்கோலியர்கள் அநியாயம் செய்தார்கள். இரத்த ஆறுகள் அங்கு ஓடியது.
லட்சக்கணக்கில் பாக்தாத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். மற்றொரு முஸ்லிம்களின் சாம்ராஜ்ஜியமான அய்யூபி சாம்ராஜ்யத்தையும் மங்கோலியர்கள் முடிவுக்கு கொண்டு வந்தனர்.
அதை காலகட்டத்தில் மற்றொரு பக்கம் பைசாந்திய பேரரசும் இஸ்லாமியர்களுக்கு பல நெருக்கடிகள் கொடுத்தது. இது இரண்டுக்கும் நடுவில் சிக்கி கொண்டு முஸ்லிம்கள் விழித்து கொண்டு இருந்தனர்.
ஒரு முஸ்லிம் கிராமத்தில் ஒரே ஒரு மங்கோலியன் நுழைவானாம் ஒருவனை அடித்து இங்கேயே இரு கத்தியை மறந்து விட்டேன் எடுத்து வரும் வரை இங்கேயே இருக்க வேண்டும் என சொல்லுவானாம் மங்கோலியன் திரும்பி வரும் வரை அவனிடம் சாவதற்காக அங்கேயே அவன் இருப்பானாம். இன்னொரு இடத்தில் குதிரைகள் கணைத்தால் ஏன் கனைக்கிறாய் (தாதாரியாக்கள்)மங்கோலியர்களை பார்த்து விட்டாயா என்று அளருகின்ற அளவிற்கு முஸ்லிம் சமூகம் அழிவின் விளிம்பில் அச்சத்தில் இருந்தது.
தனக்கான இஸ்லாமிய கிலாபத் ஆட்சி போய்விட்டது. கலீபாவை கொன்று விட்டனர். மங்கோலியர்களை பகைக்கும் ஒருவன் இந்த உலகத்தில் இல்லை என்ற அளவிற்கு அவர்களுக்குள் அச்சம் தலைவிரித்தாடியது.
இவர்களுக்கு பயந்து சிலர் பெயரை மாற்றிக்கொண்டு மங்கோலிய படையில் இணைந்து கொண்டனர். பலர் நாடோடிகளாக சொந்த நாடுகளை விட்டு வேறு இடங்களுக்கு ஓட்டம் பிடித்தனர்.
தோல்வியை காணாத மங்கோலிய படை அப்பாசிய ஆட்சியின் தலைநகரமான பாக்தாத்தை கைப்பற்றியவுடன், அடுத்து அவர்களின் பார்வை ஜெருசலேம் நோக்கி விழுந்தது. அங்கே இருந்து அப்பிராந்தியங்களை கைப்பற்ற முன்னேறி சென்றனர். இப்போது அப்பகுதியை ஆண்ட மம்லூக் வம்சத்தினர் மந்திரிகளை அழைத்து ஆலோசனை செய்கின்றனர்.
பெரும்பாலான மந்திரிகள் சரணடைந்தால் உயிர் பிச்சையாவது கிடைக்கும் என ஆலோசனை கூறுகின்றனர். ஆனால் மம்லூக் மன்னன் யுத்தம் செய்ய முடிவெடுக்கிறான். மங்கோலிய தூதுவர் தலை வெட்டப்பட்டு திருப்பி அனுப்பப்படுகிறது.
இதை சற்றும் எதிர் பார்க்காத ஹுலாகு கான் மீண்டும் ஒரு படையெடுப்பை செய்கிறான். மம்லுக் மன்னன் குதுஸ் ஐன் ஜாலூத்தில் மங்கோலிய படைய எதிர் கொள்கின்றனர். மங்கோலிய படையோடு ஒப்பிடும்போது சொற்ப எண்ணிக்கையில் மம்லுக் படை இருந்தது.
ஆனாலும் அல்லாஹ்வின் உதவி கொண்டு வெற்றி அடைந்தது. முதல் முறையாக யுத்த களத்தில் மங்கோலிய படை தோல்வியை சந்தித்தது. அதிலிருந்து மங்கோலிய படையின் அடுத்தடுத்த தோல்விகள் தொடர்ச்சியாக ஏற்பட ஆரம்பித்தன.
வரலாற்றில் மங்கோலியர்கள் ஆரம்பித்த வேகத்தில் காணாமல் போனார்கள். வரலாறு அவர்களை காட்டுமிராண்டிகளாக பதிவு செய்தது. மூன்றில் இரண்டு பகுதி நிலம் இருந்தும் சிலநூறு ஆண்டுகளில் மங்கோலிய பேரரசு துடைத்து எரியப்பட்டது.
ஆனால் இன்றும் இஸ்லாம் மேலோங்கி நிற்கிறது. இஸ்லாம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே எண்ணற்ற ராஜ்ஜியங்களையும், அடக்குமுறைகளையும் பார்த்துள்ளது. ஆனால் எதிரிகளோடு சமரசம் இல்லாமல் எதிர்த்து நின்றதால் அல்லாஹ் அப்படைகளுக்கு உதவி செய்தான். பாசிசத்தை எதிர்த்து நிற்பது தான் முதல் வெற்றி. மற்றவைகளை அல்லாஹ் பார்த்து கொள்வான்.
எதிர்த்து நிற்பது என்பது மனதளவில் உறுதியாகவும், களத்தில் சமூகத்திற்கு நம்பிக்கையூட்டியும், சமூகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து சென்று எதிரியை நேர்கோட்டில் சந்திப்பதே. எல்லா காலத்திலும் முஸ்லிம்களிடம் கருத்து வேறுபாடுகளும், பிரிவுகளும் இருந்தன.
ஆனால் இதையெல்லாம் காரணம் காட்டி சமூகம் ஒதுங்கி செல்லவில்லை. இருக்கும் பிரிவுகளில் நமக்கானவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு அவர்களோடு கைகோர்த்து, அவர்களின் கரத்தை வலுப்படுத்தி எதிரியை சந்தித்தால் நிச்சயம் பாசிசம் தோற்று விடும். அல்லாஹ் தோற்கடிப்பான். இஸ்லாத்தை எதிர்த்து தோற்றுப்போன சாம்ராஜ்ஜுய பட்டியலில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் வந்து விடும்.
எனவே இயக்கங்களை ஆராயுங்கள், நல்லவை ஒன்றோடு கைகோருங்கள், அவர்களை வலுப்படுத்துங்கள். நிறுவனமாக்கப்பட்ட ஒரு சித்தாந்தம் கொண்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பை இன்னொரு நிறுவனமாக்கப்பட்ட அமைப்பு இல்லாமல் அவர்களை எதிர் கொண்டு வெற்றி பெறுவது சாத்தியம் இல்லை.
நம்மை நாம் தான் பாதுகாக்க வேண்டும். இதற்கென ஒரு கூட்டம் உண்டு அவர்கள் பார்த்து கொள்வார்கள், திராவிட அமைப்பு நம்மை பாதுகாக்கும் என இருந்தீர்கள் என்றால்? வட நாட்டில் நடப்பவை வெகு சீக்கிரம் இங்கேயும் அரங்கேறும். அந்த முஸ்லிம்களும் அப்படித்தான் நம்பி இருந்தார்கள். ஆனால் அவர்கள் தங்களை தாங்களே பாதுகாக்க முடியாத நிலைக்கு போய் விட்டார்கள்.
எனவே நிறுவனமாக்கப்பட்ட, எதிர்கால திட்டம் கொண்ட, ஒழுங்கு கட்டமைப்பு கொண்ட, எதிரியோடு சமரசம் இல்லாமல் பயணிக்கின்ற ஒரு அமைப்போடு நம்மை இணைத்து கொண்டு நாம் அணி திரள வேண்டியது காலத்தின் கட்டாயம். அதை நேரத்தில் தியாகமும், அர்ப்பணிப்பும் செய்யவும், இழப்புகளை தாங்கி கொள்ளும் ஒரு பக்குவப்பட்ட சமூகம் கட்டியெழுப்ப வேண்டும்.
நமது எண்ணம் இந்திய முஸ்லிம்களின் விடுதலை நோக்கி இருக்க வேண்டும்.அவ்வாறு சிந்திக்க வேண்டும். தமிழ்நாடு என சுருக்கி பார்க்க கூடாது. இந்திய அளவில் ஒரு தேசிய அமைப்பை நாம் வலுப்படுத்த வேண்டும்.
நீங்கள் எதிர்த்து நில்லுங்கள், அல்லாஹ் எதிரியை மண்டியிட செய்வான்.
- இன்ஷாஅல்லாஹ்
காப்பி பேஸ்ட் செய்யப்பட்டது. எழுதிய நண்பருக்கு நன்றிகள்.