Followers

Tuesday, May 26, 2015

ஏகன் அனேகன் இறைவனடி போற்றி - திருவாசம்‬

திரு சென்னி மலை!

//ஏகன் அனேகன் இறைவனடி போற்றி,
---‪#‎திருவாசம்‬
திருவாசக சித்தர் அண்ணன் Nazeer Ahamed இங்கு வந்து இந்த பாடல்களுக்கு நபிவழி விளக்கம் அளிப்பார் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது,//

“திருவாசகத்தில் “ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க” என்று ஒரு வாக்கியம் இருக்கு. அதில் ஏகன் என்றால் ஓர் ஆள், அனேகன் என்றால் பல ரூபங்களில் இருக்கும் ஒரே ஆள் என்று அர்த்தம்.

ஒரு மனிதனுக்குள்ளே குடும்ப சூழலில் பல எண்ணங்கள் வருவதைப் பார்க்கிறோம். அன்பு, பணிவு, அடக்கம், கோபம், தாபம், நெகிழ்வு, காமம் ஊடல் என்று பல தன்மைகளை இந்த மனிதன் எடுக்கிறான். ஆனால் அந்த மனிதன் ஒருவன்தான்.

அதே போல் இறைவனானவன் தனது அடியார்களைப் பார்த்து சந்தோஷமடைகிறான், சிலரைப் பார்த்து சிரிக்கிறான், இன்னும் பலரைப் பார்த்து கோபப்படுகிறான். குணங்கள் மனிதர்களின் செயல்களைப் பார்த்து மாறுகிறதே யொழிய அந்த இறைவன் ஒருவன்தான். ஒரு இறைவன்தான் மனிதர்களுக்கேற்ப பல தன்மைகளை பெறுகிறான்.

இந்த இறைவனின் தன்மைகள் 99 ஐத்தான் நான் போன பதிவில் குர்ஆனிலிருந்து எடுத்து பதிவிட்டேன். நபிகள் நாயகமும் குர்ஆனும் எதைச் சொல்கிறதோ அதனைத்தான் தேவாரமும் கூறுகிறது. இந்து மதமும் இதே போல் இறைவனின் தன்மைகளை பட்டியலிடுகிறது. அனால் சென்னி மலை போன்றோர் இதனை தவறாக விளங்கிக் கொண்டு அந்த இறைவன் ஒருவனல்ல... பலவாக பிரிந்து விட்டான் என்ற கற்பனையில் உள்ளனர். ஆக்குவதற்கு ஒரு கடவுளும், அழிப்பதற்கு ஒரு கடவுளும், காப்பதற்கு ஒரு கடவுளுமாக எண்ணற்ற கடவுள்களை கற்பனையில் உருவாக்கி விட்;டனர். அவர்களுக்கு உண்மையை விளக்கி நேர் வழியில் கொண்டு வருவது நம்மவர்களின் கடமை. அதனைத்தான் இந்த பதிவும் சொல்கிறது.

'கடவுள்களைப் பூமியிலிருந்து இவர்கள் தயாரிக்கிறார்களா? இவர்கள் கூறும் அந்த கடவுள்கள் உயிர் கொடுத்து எழுப்புவார்களா?'

'வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் அனைத்தும் சீரழிந்திருக்கும். அவர்கள் கூறுவதை விட்டும் அர்ஷூக்கு அதிபதியான அல்லாஹ் தூயவன்'

-குர்ஆன் 21: 21,22

No comments: