//Nazeer Ahamed அண்ணாச்சி.....
விலங்கினத்துலயும் காபிர் அம்சம் அல்லது சாத்தான் அம்சம் கொண்ட விலங்கினம் இருக்குதா???
இல்லியா???//
மனிதர்களுக்குத்தான் நன்மை எது? தீமை எது? என்ற பிரித்தறியும் தன்மையை கொடுத்துள்ளான் இறைவன். ஒரு மாடு உங்கள் வீட்டு வைக்கோலையும் தின்னும். எனது வீட்டு வைக்கோலையும் தின்னும். நமது முதலாளியின் வீட்டு வைக்கோல் எது என்று பகுத்தறியும் அறிவு கொடுக்கப்படவில்லை. ஆனால் தனது எஜமானனின் வீடு எது என்பதை அது விளங்கிக் கொள்ளும். மனிதனுக்கும் மிருகங்களுக்கும் அறிவில் உள்ள வேறுபாட்டை புரிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
//முகம்மது தான் மனிதன்தான் அப்படின்னு அவரும் குரான்ல சொல்லியிலுக்காரு.. நீங்களும் அப்படித்தான் சொல்றீங்க.....
அதான் இப்போ பிரச்சனை.....
முகம்மதுவுக்கு மிருக பாஷை தெரியுமா???
தெரியாதா???//
நபிகள் நாயகம் உங்களையும் என்னையும் போன்ற ஒரு மனிதர்தான். அவருக்குள்ள தனிச் சிறப்பே அவருக்கு இறைவனிடம் இருந்து வரும் செய்திகள்தான்.
பல நேரம் சாதாரண மனிதராகத்தான் இருப்பார். இறை செய்தி வரக் கூடிய சில நேரங்களில் மனிதர்களுக்கு குர்ஆனை விளக்கும் சமயங்களில் இறைத் தூதராக விளக்கம் அளிப்பார்.
இறை செய்தியின் மூலம் மிருகங்களின் பாஷையையும் அறியும் ஆற்றல் பெற்றவர் நபிகள் நாயகம். ஆனால் எல்லா நேரமும் இந்த சக்தி அவருக்கு இருக்காது. இறைவன் சொல்லிக் கொடுத்தால் அதன் அடிப்படையில் மிருகங்களின் பாஷையையும் நபிகள் நாயகம் அறிவார்.
நபிகள் நாயகம் அவர்களிடம் ஒரு ஒட்டகம் இருந்தது. 'அள்பா' என்று அதற்குப் பெயரிட்டிருந்தார்கள். இந்நிலையில் ஒரு கிராம வாசி ஒரு ஒட்டகத்துடன் வந்தார். அவரது ஒட்டகத்துக்கும், நபிகள் நாயகத்தின் ஒட்டகத்துக்கும் வைக்கப்பட்ட போட்டியில் அக்கிராம வாசியின் ஒட்டகம் முந்திச் சென்றது. இது முஸ்லிம்களுக்கு மனக் கவலையை ஏற்படுத்தியது. இதனை அறிந்து கொண்ட நபிகள் நாயகம் அவர்கள் 'இவ்வுலகில் எப்பொருள் உயர்நிலையை அடைந்தாலும் அதைத் தாழ்த்துவது அல்லாஹ்வின் நடவடிக்கையாகும்' என்று கூறினார்கள்.
நூல் : புகாரி 2872, 6501
'உயருகின்ற ஒவ்வொரு பொருளும் ஒரு நாள் இறங்கியே ஆக வேண்டும்' என்னே அற்புதமான வாசகம்!
தனது ஓட்டகம் தோற்றது தான் சரி. இப்படித் தோல்வி ஏற்படுவது தான் நல்லது என்று போட்டியில் பங்கெடுத்த எவரேனும் கூறுவதுண்டா?
இந்த ஒட்டகத்தை எந்த ஒட்டகத்தினாலும் முந்த முடியாது என்ற நிலையே கர்வத்தின் பால் கொண்டு செல்லும் என இம்மாமனிதர் நினைக்கிறார். கோழிச் சண்டையில் தனது கோழி வெற்றி பெற வேண்டும் என்று சாதாரண மனிதன் விரும்புவானே அந்த விருப்பம் கூட இவருக்கு இருக்கவில்லை. தன்னை ஒரு சாதாரண மனிதராகவே காட்டிக் கொண்டார் என்பது இந் நிகழ்விலிருந்து நமக்கு தெரிகிறது.
No comments:
Post a Comment