Followers

Sunday, August 10, 2014

கூரை ஏறி கோழி பிடித்துக் கொண்டுதான் இருக்கிறோம்!

சகோ வியாசன்!

//இத்தனை நூற்றாண்டுகள் தமிழ்நாட்டிலிருந்தும் இஸ்லாத்தால் சாதிக்க முடிந்தது எல்லாம் வெறும் 5% தான், இந்த லட்சணத்தில் உங்களின் கதையைப் பார்த்தால், கூரையேறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானமேறி வைகுந்தம் போவானாம் என்றது போலத் தான். :-) //

நீங்கள் சொல்வது ஓரளவு உண்மைதான். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை நீங்கள் சொல்வது போன்ற நிலைமைதான் இருந்தது. இஸ்லாம் ஒரு அரேபிய மார்க்கம். அரேபியர்களுக்கு சொந்தமான ஒரு மார்க்கம். தமிழகத்தில் உள்ள முஸ்லிம்களெல்லாம் அரபு நாட்டு இறக்குமதி என்ற எண்ணமே பல இந்து நண்பர்களுக்கு இருந்தது.

கடந்த 25 ஆணடுகளாக பட்டி தொட்டிகளெல்லாம் 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியை நடத்தி அங்கு இந்து நண்பர்களையும், கிறித்தவ நண்பர்களையும் அழைத்து வந்து கேள்வி கேட்க வைத்தோம். ஆர்வமாக பங்கு பெற்று பல கேள்விகளை வைத்தார்கள். அவர்கள் வைத்த அத்தனை கேள்விகளுக்கும் சளிக்காமல் தவ்ஹீத் ஜமாத் சார்பாக பதில்கள் வைக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் இந்நிகழ்ச்சியை தொலைக் காட்சியிலும் பார்த்தனர். இஸ்லாத்தைப் பற்றி அவர்களுக்கிருந்த பயம், சந்தேகம் அனைத்தும் தீர்க்கப்பட்டது. இன்று சாரை சாரையாக அவர்களாகவே விரும்பி இஸ்லாத்தை ஏற்ற வண்ணம் உள்ளனர்.

ஒரு முறை நான் எங்கள் ஊர் பள்ளியில் மாலை நேர தொழுகையை முடித்து விட்டு வெளியேறும் போது ஒரு 30 வயது மதிக்கத்தக்க எங்கள் ஊர் இந்து இளைஞரும், அவரது மனைவி மற்றும் கைக்குழந்தையோடு ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருந்தனர். 'என்ன விஷயம்' என்று வினவப்பட்டது. 'நாங்கள் குடும்பத்தோடு இஸ்லாத்தை ஏற்க விரும்புகிறோம்' என்றார் அந்த இளைஞர். ஊர் பெரியவர் முன் வந்து 'தம்பி.... ஏற்கெனவே ராமகோபாலனால் எங்கள் ஊரில் சிறிய பிரச்னை. எனவே நீ வெளியூரில் சென்று மாறிக் கொள்ளப்பா' என்றார். அந்த நபரோ 'நான் இஸ்லாத்தை விளங்கி வந்துள்ளேன். ஏன் இப்படி பயப்படுகிறீர்கள். எனது சுய விருப்பத்தில் வருகிறேன் என்று எழுதி கொடுக்கிறேன்' என்றார்.

இருந்தும் ஊர் பெரிய மனிதர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. எனக்கும் அந்த நேரத்தில் 25 வயதுதான். என்னாலும் அந்த இந்து நபருக்கு எந்த உதவியும் செய்ய முடியவில்லை. பிறகு அவர் தஞ்சை தவ்ஹீத் ஜமாத்தை தொடர்பு கொண்டு அவர்கள் மூலம் சென்னை சென்று முறையாக இஸ்லாத்தை கற்று இன்று சிறந்த முஸ்லிமாக வாழ்ந்து வருகிறார். சொந்த ஊரான எங்கள் ஊருக்கு தனது தாய் தந்தையரை பார்க்க விடுமுறையில் வரும் போது அவரை பார்த்து ஆச்சரியப்படுவேன். என்ன ஒரு மாற்றம். எல்லா புகழும் இறைவனுக்கே!

நான் கீழே கொடுத்திருக்கும் ஆதாரங்களை பார்வையிடுங்கள். சென்ற மாதம் ஒரு வாரத்தில் மட்டும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட தமிழ் இந்துக்களைத்தான் பார்க்கிறீர்கள். தவ்ஹீத் ஜமாத் என்ற இயக்கத்தில் இணைந்தவர்கள் மாத்திரமே இத்தனை பேர். இது அல்லாமல் தமுமுக, பாபுலர் ஃப்ரண்ட், போன்ற அமைப்புகள் மூலம் இஸ்லாத்தை ஏற்பவர்களின் எண்ணிக்கை தனி.

இவ்வாறு மாறக் கூடியவர்களை பெயரை மட்டும் மாற்றி விட்டு அனுப்பி விடுவதில்லை. அவர்களுக்கு 6 மாதம் சென்னையில் தவ்ஹித் ஜமாத் சார்பாக வகுப்பு எடுக்கப்படுகிறது. எப்படி தொழுவது? தொழுகையில் என்ன ஓதுவது? இறைவனிடம் நமது தாய் மொழியில் என்ன கேட்பது? இஸ்லாம் மனிதர்களாகிய நம்மிடம் எதிர் பார்ப்பது என்ன? என்பதை குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான நபி மொழிகளின் துணை கொண்டு பிஜே, சுலைமான், அல்தாஃபி போன்ற அறிஞர்களால் தினமும் செதுக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு உணவும் தங்குமிடமும் இலவசமாக கொடுக்கப்படுகிறது. ஆறு மாதத்திற்கு பிறகு அவர்கள் வெளியேறும் போது பல தலைமுறைகளாக இஸ்லாமியனாக இருப்பவர்களை விட மிகத் தெளிவானவர்களாக வெளியேறுகின்றர்.

பார்பனர்களை தூற்றவில்லை: சமஸ்கிரதத்தை சாடவில்லை: கிறித்துவத்தை ஏசவில்லை: அனைவரையும் சகோதரர்களாக பாவித்து சத்தமில்லாமல் ஒரு மிகப் பெரும் புரட்சியே நடந்து வருகிறது. இன்னும் ஒரு 30 வருடம் கழித்து இதன் தாக்கத்தை உங்கள் வாழ்நாளிலேயே பார்ப்பீர்கள். பார்பனர்களோடு இன்னும் 100 வருடங்கள் நீங்கள் விவாதித்தாலும் ஒரு முடிவை எட்டப் போவதில்லை. என்ன காட்டு கத்து கத்தினாலும் சூத்திரர்களை அவர்கள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. நாங்கள் பெரும்பான்மை என்று கணக்கு காட்ட மட்டுமே உங்களை சேர்த்துக் கொள்வர். அந்த பார்பனியம் நம் தமிழர்களின் மீது வேய்ந்த கூரையின் மீது ஏறி நின்று அனாதரவாக நிற்கும் எங்களது தமிழ் சொந்தங்களை அவர்களின் ஆதி மார்க்கமான 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற வழிக்கு அழைத்துக் கொண்டிருக்கிறோம். கீழே ஆதாரங்களை பாருங்கள்.தஞ்சை வடக்கு மாவட்டம் பண்டாரவாடை கிளையில் கடந்த 24-07-2014 அன்று அலெக்ஸ் என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தன் பெயரை முஹம்மது ரஃபீக் என்று மாற்றிக் கொண்டார். எல்லா புகழும் இறைவனுக்கே! ………………..

--------------------------------------------------------------------சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளையில் கடந்த 25-07-2014 அன்று ஜனனி என்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை ஆயிஷா என்று மாற்றி கொண்டார்கள்………….……………


-----------------------------------------------------------------------திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கிளையில் கடந்த 23-07-2014 அன்று தாமோதரன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். எல்லா புகழும் இறைவனுக்கே! ……………

--------------------------------------------------------------------நீலகிரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் கிளையில் கடந்த 18-07-2014 அன்று நாகேந்திரன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை ஷாஹீத் என்று மாற்றி கொண்டார்கள். மேலும் அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது………….……………

---------------------------------------------------------------------நீலகிரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் கிளையில் கடந்த 11-07-2014 அன்று ஜொஷ்வ என்ற கிருத்துவ சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். மேலும் அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது…………………………

---------------------------------------------------------------------சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிளையில் கடந்த 18-07-2014 அன்று ஜானகிராமன் என்ற சகோதரர் குடும்பத்துடன் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை ஜலீல் என்றும், அவருடைய மனைவி தீபா என்பதை தாஹிரா என்றும் மகன் சுதீப் என்பதை சுஹீப் என்றும் மாற்றிக்கொண்டார்கள்…………………………..

---------------------------------------------------------------------

4 comments:

viyasan said...

சகோ. சுவனப்பிரியன்,

உண்மையில் உங்களின் பதிலைப் பார்த்ததும் எனக்குச் சிரிப்புத் தான் வந்தது. இந்துக்கள் இஸ்லாத்துக்கு மட்டுமல்ல எந்த மதத்துக்கும் மதம் மாறக்கூடாது என்று நான் எங்கேயும் கூறியதாக எனக்கு நினைவில்லை. ஆனால் நீங்கள் கூறியது போல் அதிகமானோரை அப்படி மாற்றி விட முடியாது என்று தான் கூறினேன். நீங்கள் காட்டும் ஒரு சில மதமாற்றங்கள் எல்லாம் கடலில் கரைத்த சர்க்கரை மாதிரி, காணாமல் போய் விடும்.

இருந்தாலும் நீங்கள் இவ்வளவு மினக்கெட்டுப் பதிலெழுதியதால், நானும் உங்களுக்கு எனது வலைப்பதிவில் மறுமொழி எழுதியுள்ளேன். :-)

http://viyaasan.blogspot.ca/2014/08/blog-post_11.html

tamilan said...

சொடுக்கி படிக்கவும்


>>>>
ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான். இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான். வேதனைப்படுவான். தலைகுனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான்.>>>> கடவுள்கள் இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடலாமா?

.

ஆனந்த் சாகர் said...

@ சுவனப்பிரியன்,

//இவ்வாறு மாறக் கூடியவர்களை பெயரை மட்டும் மாற்றி விட்டு அனுப்பி விடுவதில்லை. அவர்களுக்கு 6 மாதம் சென்னையில் தவ்ஹித் ஜமாத் சார்பாக வகுப்பு எடுக்கப்படுகிறது. எப்படி தொழுவது? தொழுகையில் என்ன ஓதுவது? இறைவனிடம் நமது தாய் மொழியில் என்ன கேட்பது? இஸ்லாம் மனிதர்களாகிய நம்மிடம் எதிர் பார்ப்பது என்ன? என்பதை குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான நபி மொழிகளின் துணை கொண்டு பிஜே, சுலைமான், அல்தாஃபி போன்ற அறிஞர்களால் தினமும் செதுக்கப்படுகிறார்கள்.//

பிறப்பு முதல் தொடர்ந்து மூளை சலவை செய்யப்படும் முஸ்லிம்கள் பொய்களை நம்பி ஏமாந்து முஸ்லிமாக மதம் மாறும் அப்பாவிகளையும் மூளை சலவை செய்யாமல் விடுவார்களா என்ன? இந்த மூளை சலவையைத்தான் நீங்கள் நீங்கள் மேலே குறிப்பிடுகிறீர்கள்.

//இவர்களுக்கு உணவும் தங்குமிடமும் இலவசமாக கொடுக்கப்படுகிறது. ஆறு மாதத்திற்கு பிறகு அவர்கள் வெளியேறும் போது பல தலைமுறைகளாக இஸ்லாமியனாக இருப்பவர்களை விட மிகத் தெளிவானவர்களாக வெளியேறுகின்றர்.//

அவர்கள் நன்றாக இஸ்லாமிய வெறியேற்றப்பட்டு வெளியேறுகிறார்கள் என்று அர்த்தம்.

ஆனந்த் சாகர் said...

@ சுவனப்பிரியன்,

அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில அப்பாவிகள் உங்களின் பொய்களை நம்பி ஏமாந்து முஸ்லிமாக மாறினால் உடனே இஸ்லாம் வேகமாக பரவுகிறது என்று தையோ தக்கா என்று குதித்து ஆர்பாட்டம் செய்யும் உங்களை எல்லாம் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது. இப்படி கோமாளித்தனம் செய்யவில்லை என்றால் உங்களுக்கெல்லாம் தூக்கமே வராது போலிருக்கிறது. வெளியே வெளிப்படையாக தெரிவிக்காமல் ஆயிரக்கணக்கானோர் தினமும் இஸ்லாத்தை விட்டு வெளியேறிக்கொண்டு இருக்கின்றனர். முக்கியமாக ஆப்பிரிக்காவில் இது அதிகமாக நடக்கிறது. முல்லாக்கள் எவ்வளவு முயன்றாலும் உங்களை போன்றவர்கள் விழுந்து விழுந்து பதிவுகள் எழுதித்தள்ளினாலும் இந்த நூற்றாண்டுதான் இஸ்லாத்திற்கு இறுதி நூற்றாண்டு. இன்னொரு 50 ஆண்டுகளுக்குள் இஸ்லாத்தின் தாக்கம் உலகில் வெகுவாக குறைந்துவிடும் என்பதில் ஐயமேதுமில்லை. அப்பொழுது இஸ்லாமிய நம்பிக்கைகளை கொண்டிருப்பவர்கள் காலாவதியான மனிதர்களாக பார்க்கப்படுவார்கள். மிக அருமையான பொற்காலம் மனித இனத்திற்கு வரப்போகிறது. அந்த விடியல் ஏற்கெனெவே ஏற்பட தொடங்கிவிட்டது. உலகமெங்கும் ஆன்மீக எழுச்சி ஏற்பட ஆரம்பித்துவிட்டது. ஆன்மீக அறிவியல்தான் உலகை ஆளப்போகிறது. குவாண்டம் அறிவியலும் ஆன்மீக அறிவியலும் வேறு வேறானவை அல்ல. பழைய நியூட்டனிய அறிவியல் வழக்கொழிந்து குவாண்டம் அறிவியல் யுகம் மலர இருக்கிறது. இந்த யுகத்தில் மனிதர்கள் இப்பொழு இருப்பதைவிட மிகவும் மேம்பட்ட இனமாக இருப்பார்கள். இது மனித பரிணாமத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி. அப்பொழுது நிறுவனமயமாக்கப்பட்ட மதங்கள் வழக்கொழிந்து போயிருக்கும். குறிப்பாக ஆப்ரஹாமிய மதங்களை பின்பற்றுவோர் இருக்க மாட்டார்கள். இஸ்லாமிய நம்பிக்கைகள் சுத்த பொய்கள் என்பது எல்லோருக்கும் அப்பொழுது தெரிய வந்திருக்கும். குவாண்டம் அறிவியலை ஓரளவு படித்து புரிந்துகொண்டால் இப்பொழுதே இஸ்லாமிய நம்பிக்கைகள் வெறும் பொய்கள் என்று தெரிந்துவிடும், மேலும் ஹிந்து, புத்த, தாவோ மதங்களின் மேன்மை புரிந்துவிடும்.