Followers

Tuesday, September 25, 2012

தலித் பெண் கற்பழிப்பு: தந்தை தற்கொலை!ஹரியானா மாநிலத்தில் 18 வயது இளம் தலித் பெண் பல உயர் சாதி மிருகங்களால் கற்பழிக்கப்பட்ட செய்தி பெரும் பரபரப்பாகியுள்ளது. அந்த கயவர்கள் கற்பழித்ததோடு அல்லாமல் அந்த காட்சியை மொபைலில் படம் பிடித்து பலருக்கும் அனுப்பியுள்ளார்கள். இந்த அவமானம் தாங்காமல் அந்த பெண்ணின் தகப்பனார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் நடந்து இன்றோடு பதினைந்து நாட்களாகிறது. ஆனால் இதுவரை இரண்டு பேரை மட்டுமே போலீஸ் கைது செய்துள்ளது.குற்றவாளிகள் யார் என்று நன்றாக தெரிந்தும் அவர்களை கைது செய்ய காவல் துறை தயங்குகிறது. காரணம். தவறு செய்தவர்கள் ஆதிக்க சாதியை சேர்ந்தவர்களாம். என்ன கொடுமை இது. நாம் எந்த நூற்றாண்டில் வாழ்கிறோம்.

உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த ஒரு பெண் கற்பழிக்கப்பட்டு தந்தை இதனால் தற்கொலையும் செய்து கொண்டுள்ளார். இரண்டு சோகங்களை தாங்கிக் கொண்டிருக்கும் அந்த குடும்பத்துக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை. மேல் சாதி அமைப்புகளிலிருந்து காவல் துறைக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறதாம். போன வருடம் இதே கிராமத்தில் முழு கிராமமும் ஆதிக்க சாதியினரால் தீ வைத்து கொளுத்தப்பட்டதாம். இந்த வருடம் இப்படி ஒரு சோகம்.

ஒரு பெண் கற்பழிக்கப்பட்டது முதல் குற்றம்.

பல பேர் சேர்ந்து அந்த பெண்ணை கற்பழித்தது அடுத்த குற்றம்.

கற்பழித்த காட்சியை மொபைலில் பார்வைக்கு அனுப்பியது அதை விட பெருங் குற்றம்.


இன்று வரை குற்றவாளிகளை பிடிக்காமல் போக்கு காட்டும் காவல் துறையின் செயல் அதை விட கொடுங் குற்றம்.

'நாங்கள் ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள். உங்களால் என்ன செய்து விட முடியும்' என்று கேட்பது போல் உள்ளது இந்த நிகழ்வு. தலித் இனத்தில் பிறந்தது அந்த பெண் செய்த பாவமா? என்ன நடக்கிறது நம் நாட்டில்?

• 2008ஆம் ஆண்டு 34 படுகொலைகளையும் 30 பாலியல் தாக்குதல்களையும் உள்ளடக்கிய 1545 வன்கொடுமைகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடந்துள்ளன.
• 2009ஆம் ஆண்டு 27 படுகொலைகளையும் 30 பாலியல் தாக்குதல்களையும் உள்ளடக்கிய 1264 வன்கொடுமைகள் நடந்துள்ளன.
• 2010ஆம் ஆண்டு முதல் ஒன்பது மாதங்கள் 22 படுகொலைகளையும் 24 பாலியல் தாக்குதல்களையும் உள்ளடக்கிய 1633 வன்கொடுமைகளைக் கண்டுள்ளன.
• 2011ஆம் ஆண்டு 44 படுகொலைகளும் 20 பாலியல் வல்லுறவும், 12 பாலியல் வல்லுறவு முயற்சிகளும் உள்ளடக்கிய 336 வன்கொடுமைத் தாக்குதல்கள் நடந்துள்ளன. அந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 44 பேரில் 4 வயது, 6 வயது, 11 வயது, 16 வயது சிறுமிகள் உட்பட 8 பேர் சிறுவர் சிறுமியர்.
• இந்த ஆண்டு முதல் மூன்று வாரங்களில் மட்டும் எட்டு தாழ்த்தப்பட்டவர்கள் ஆதிக்க சாதியினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.


'இந்தியா ஒளிர்கிறது' என்று பெயருக்கு சொல்லி வருகிறோம்.

--------------------------------------------------

நமது கூத்தாடிகளும் தங்களது பங்குக்கு சாதியை உரம் போட்டு வளர்க்கின்றனர். 'சுந்தர பாண்டியன்' என்ற படம் ஒன்று வந்துள்ளதாம். அதில் சாதி வெறியை எவ்வளவு நாசூக்காக ஏற்றுகிறார்கள் என்பதை வினவு தளத்தில் வந்த கட்டுரையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.


“சுந்தரபாண்டியன்”’ திரைப்படம் ஒன்றும் நாட்டை ‘திருத்த’ வந்த கருத்து சினிமா இல்லை. அப்படி அவர்களும் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால் இந்த திரைப்படம் மோசமான பிற்போக்குத்தனங்களையும், அசூசையான பிழைப்புவாதத்தையும் நேர்மறையில் உணர்த்துகிறது. அவற்றை அன்றாட வாழ்க்கையின் இயல்புகள் போல சித்தரிக்கிறது. காமடி, செண்டிமெண்ட் முதலான அதுவும் தேய்ந்து போன அரதப்பழசான காட்சிகளின் ஓட்டத்தில் பார்வையாளர்கள் அதை உணர்வாளர்களா என்பது சந்தேகம்தான்.

சுந்தர பாண்டியன்’ என்ற தலைப்பில் துருத்திக் கொண்டு தெரியும் “பாண்டியன்”’ என்ற சொல், இந்தப் படத்தின் ரசிக இலக்கு யார் என்பதை நமக்கு கோடிட்டுக் காட்ட… திரை விலகி ஆரம்பக் காட்சியிலேயே இது ஓர் அப்பட்டமான தேவர் சாதி படம்’ என்பதை வெளிப்படையாக சொல்கின்றனர்.

“இதுதான் உசிலம்பட்டி”’ என்ற வாய்ஸ் ஓவரில் முத்துராமலிங்க தேவர் பெயர் பலகையுடன் துவங்குகிறது படம். சுவரில் போஸ்டர் ஒட்டும் ஒருவரை “எங்க ஆளுகளை தவிர யாரும் ஒட்டக்கூடாது… போ, போ’” என்று விரட்டிவிடுகிறார் ஒரு வயதானவர். தமிழ்நாட்டில் எவ்வளவோ நடிகர்கள் இருந்தாலும் இவர்களுக்கு பிரபுவும், கார்த்திக்கும்தான் ஸ்டார்கள்’ என்கிறது குரல். இருவரும் தேவர் சாதி நடிகர்கள் என்பது நமக்கு உணர்த்தப்படுகிறது. “தமிழ்நாட்டில் ஆயிர கட்சிகள் இருந்தாலும் இவர்கள் வட இந்திய தலைவர்களை அழைத்து வந்து கூட்டம் நடத்துவார்கள். நேதாஜிதான் இவர்களுக்குத் தலைவர்”’ என்கிறார்கள். ஃபார்வர்டு பிளாக் பற்றியும் முத்துராமலிங்க தேவர் பற்றியும் நமக்கு நினைவூட்டப்படுகிறது.

“எவ்வளவு பாசக்காரய்ங்களோ, அதே அளவுக்கு கோபக்காரய்ங்க. குலசாமியா நினைச்சு வளர்க்கும் பொண்ணுங்க மனசை காதல், அது இதுன்னு எவனாவது கெடுத்துட்டா என்ன செய்வாங்க தெரியுமா?”’ என குரல் நிறுத்த.. இளைஞர் ஒருவரை கருவேலங்காட்டுக்குள் சுற்றி வளைத்து வெட்டிக் கொல்கிறது ஒரு கும்பல். “குல கவுரவத்த சீண்டுறவனை கருவருக்குற இடம் இதுதான்”’ என்கிறது குரல். எங்க கிட்ட மோதினா இதுதான் கதி’ என்று நமக்கு மிரட்டல் விடப்படுகிறது. சாதித் திமிரே பெருமிதமாக, ஒரு கொலையை நியாயப்படுத்தும் நீதியாக காட்டும் இந்தக் காட்சிகளை உசிலம்பட்டி பற்றிய டாக்குமென்டரி’ என்கிறார்கள் சிலர். ஆனால், இதுதான் உசிலம்பட்டியா? தேவர்கள் மட்டும்தான் உசிலம்பட்டியா?

ஆயிரமாயிரம் ஒடுக்கப்பட்ட மக்களும் அதே உசிலம்பட்டியில்தான் வாழ்கின்றனர். பாப்பப்பட்டியும், கீரிப்பட்டியும் கூட உசிலம்பட்டிக்கு மிக அருகில்தான் இருக்கின்றன. இவர்கள் யாரும் அந்தக் காட்சியின் வரம்புக்குள் வரவில்லை. தலித்துக்களையும் இதர சாதி உழைக்கும் மக்களையும் கணக்கிலேயே எடுக்காமல் உசிலம்பட்டியின் ஒவ்வொரு அங்குலமும் தேவர் சாதிக்கு மட்டுமே பட்டா போட்டுக் கொடுக்கப்பட்டதை போல “இதுதான் உசிலம்பட்டி”’ என்கிறார்கள்.

http://www.vinavu.com/2012/09/25/sundarapandian-review/

--------------------------------------------------

தடா ரஹீம் அவர்களின் பேச்சை இங்கு கேளுங்கள்.64 comments:

கோவி.கண்ணன் said...

எழில் என்பவரது பதிவில் வஹாபிய வர்சன் போல் எழுதத் துணிந்த சுவனப்பிரியனுக்கு நல்வாழ்த்துகள்.

ஏழைகளுக்கும் அடிமைகளுக்கும் போக்கிடம் இல்லை என்பதை பல ஆண்டுகளாகவே சொல்லிவருகிறோம்.

தேனாறும் பாலாறும் ஓடும் சவுதியில் பெண்கள் வேலைக்கு வரும் வெளிநாட்டு பெண்கள் நிலை ஒன்றும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை, வயிறு எரியும் அளவுக்கே உள்ளது என்கிறார்கள். வழக்கம் போல் 'இஸ்லாமை முழுமையாக பின்பற்றாதவர்களின் செயல், அல்லது அமெரிக்க பத்திரிக்கைகளின் கட்டுக்கதை' என்று முட்டுக் கொடுக்க நீங்கள் இருக்கிறீர்கள்.

http://www.topix.com/forum/religion/islam/TB11PD6GPEFAKJLVQ

In Saudi Arabia rape victims or their families seldom report the crime. They want to guard the family honor. But what happens to the victims? Girls who have lost their virginity will be regarded as worthless and without a future. Counseling for the victims will have to forgo in place of saving family honor.

Their has been a spree of brutal child rapes in Jeddah, as well as a serial rapist, but many families will not report the crime. This hiding of rape crime will only serve to support the rapists and make them feel safe to commit more crimes.

பின்னடியே உண்மைங்கிற பேரில் பிட்டு ஒட்ட ஒருவர் வருவார். ஆமாம் யாராவது அதையெல்லாம் படிக்கிறாங்களா ?

உண்மையில் அவர் கீதையைப் பின்பற்றுபவராக இருக்கக் கூடும், 'கடமையைச் சரியாகச் செய்கிறார், பலன் இல்லாவிட்டலும்'

suvanappiriyan said...

கோவி கண்ணன்!

//தேனாறும் பாலாறும் ஓடும் சவுதியில் பெண்கள் வேலைக்கு வரும் வெளிநாட்டு பெண்கள் நிலை ஒன்றும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை, வயிறு எரியும் அளவுக்கே உள்ளது என்கிறார்கள். வழக்கம் போல் 'இஸ்லாமை முழுமையாக பின்பற்றாதவர்களின் செயல், அல்லது அமெரிக்க பத்திரிக்கைகளின் கட்டுக்கதை' என்று முட்டுக் கொடுக்க நீங்கள் இருக்கிறீர்கள்.//

சவுதியில் வேலைக்கு வரும் பெண்கள் கொடுமை படுத்தப் பட்டால் அங்கு நாம் பெண்களை அனுப்பாமல் இருந்து கொள்ளலாம். சவுதி அரசு கூட தற்போது வீட்டு வேலைக்கு வரும் பெண்களின் கணவர் அதே வீட்டுக்கு டிரைவராகவும் வர வலியுறுத்தி வருகிறது. தற்போது இந்தோனேஸிய பெண்களை அந்நாடு வீட்டு வேலைக்கு அனுப்புவதில்லை. அது பொல் நம் நாடும் அனுப்புவதில்லை. இது வெளி நாட்டினர் பிரச்னை. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

ஆனால் நம் நாட்டில் தலித்களுக்கு செய்யப்படும் கொடுமை சொந்த நாட்டு மக்களாலேயே அரங்கேற்றப்படுகிறது. அவர்களை இந்து மதத்திலும் வைத்துக் கொண்டு ஆதிக்க சாதியினர் பண்ணும் அழிச்சாட்டியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆதிக்க சாதியினரை கண்டிக்க உங்களுக்கு மனம் வரவில்லை. சவுதியை காட்டி கணக்கை சரி செய்து கொள்கிறீர்கள். என்னத்த சொல்ல போங்க....:-(

//பின்னடியே உண்மைங்கிற பேரில் பிட்டு ஒட்ட ஒருவர் வருவார். ஆமாம் யாராவது அதையெல்லாம் படிக்கிறாங்களா ?//

ஒரு நாளைக்கு 1200 பார்வையாளர்கள் இந்த பதிவை பார்வையிடுகிறார்கள். அவர்கள் மூலமாக ஷேர் செய்வது எண்ணிக்கையை இன்னும் அதிகரிக்கும். இவ்வளவு எண்ணிக்கை அதிகரிக்க சகோ உண்மைகள் தரும் சுட்டிகளும் ஒரு காரணம்.


//உண்மையில் அவர் கீதையைப் பின்பற்றுபவராக இருக்கக் கூடும், 'கடமையைச் சரியாகச் செய்கிறார், பலன் இல்லாவிட்டலும்'//

பலன் இல்லையா? சகோ உண்மைகள் வைக்கும் ஒவ்வொரு ஆதாரமான சுட்டிகளுக்கும் சம்பந்தப்பட்டவர்களால் பதில் சொல்ல முடியாமல் திணருவதைத்தான் தினமும் பார்க்கிறோமே!

Nizam said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோ. உண்மையை வைத்து பொய்களுக்கு பதில் சொல்லும் உங்கள் பணி மகத்தான அல்ஹம்துலில்லாஹ்

Seeni said...

nalla thakavalkal!

Barari said...

சிங்கை இராமகோபலனின் பின்னூட்டம் எப்போதுமே ஏட்டிக்கு போட்டியாகதான் இருக்கும்.தென்னை மரத்தில் தேள் கொட்டியது என்று சொன்னால் உடன் பனை மரத்துக்கு நெரி கட்டி விட்டது என்பார்.எப்போதும் கோணலாகவே அவர் புத்தி போகிறது.

suvanappiriyan said...

சகோ பராரி!

//சிங்கை இராமகோபலனின் பின்னூட்டம் எப்போதுமே ஏட்டிக்கு போட்டியாகதான் இருக்கும்.தென்னை மரத்தில் தேள் கொட்டியது என்று சொன்னால் உடன் பனை மரத்துக்கு நெரி கட்டி விட்டது என்பார்.எப்போதும் கோணலாகவே அவர் புத்தி போகிறது.//

அவரை ராம கோபாலனுக்கு ஒப்பிடுவதை நான் ஏற்கவிலலை. கோவி கண்ணன் நன்றாக சிந்திக்கக் கூடியவரே! அவ்வப்போது பிறந்த மதத்துக்காக பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

அடுத்து சவுதியில் எங்காவது இது போன்று கற்பழிப்புகள் நடந்ததாக நான் கேள்விப்படவில்லை. வீட்டு வேலைக்கு வரும் வெளி நாட்டு பெண்களிடம் சில சவுதி காமுகர்கள் தவறாக நடப்பதை நாமும் மறுக்கவில்லை. காவல் துறைக்கு தெரிய வரும் பட்சத்தில் பாரபட்ச மற்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை நான் அறிவேன்.

ஆனால் நமது இந்தியாவிலோ கற்பழித்து அதற்கு சாட்சியாக அவர்களே அதனை மொபைலில் வெளியிடவும் செய்கிறார்கள். வெளியிட்ட அவர்கள் சுதந்திரமாக வெளியிலும் உலாவுகிறார்கள். சவுதி சம்பவத்துக்கும் நமது நாட்டு சம்பவத்துக்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது என்பதை ஏனோ கோவி கண்ண்ன் கவனிக்கத் தவறி விடுகிறார்.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ நிஜாம்!

//அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோ. உண்மையை வைத்து பொய்களுக்கு பதில் சொல்லும் உங்கள் பணி மகத்தான அல்ஹம்துலில்லாஹ்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ சீனி!

//nalla thakavalkal!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

UNMAIKAL said...

இஸ்லாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட நீண்ட நாள் அரசியல் சிறைவாசிகளின் விடுதலைக் கோரி

கடந்த 1-9-2012 அன்று சென்னையில் SAVE TAMILS MOVEMENT ஏற்பாடு செய்த அரங்கக்கூட்டத்தில்

17 ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்து விடுதலையான தடா ரஹீம் அவர்கள் ஆற்றிய உரை

CLICK HERE >>>>>1. 17 ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்து விடுதலையான தடா ரஹீம் அவர்கள் ஆற்றிய உரை <<<<<<

இஸ்லாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட நீண்ட நாள் அரசியல் சிறைவாசிகளின் விடுதலைக் கோரி

SAVE TAMILS MOVEMENT ஏற்பாடு செய்த அரங்கக்கூட்டத்தில்

கோவை குண்டு வெடிப்பு தொடர்பான பொய்வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து விடுதலையான தோழர் ஆயிஷா இப்ரஹீம் அவர்களின் உரை

CLICK HERE >>>>>> 2. கோவை குண்டு வெடிப்பு தொடர்பான பொய்வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து விடுதலையான தோழர் ஆயிஷா இப்ரஹீம் அவர்களின் உரை <<<<<

.

Anonymous said...

நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தும் வீடியோவை நீக்காமல் வைத்துள்ள Yotube க்கு ப்ரேசில் நாட்டு நீதிமன்றம் நேற்று ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. 10 நாட்களுக்குள் நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தும் வீடியோவை Youtube ல் இருந்து நீக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

National Islamic Union என்ற இஸ்லாமிய அமைப்பு ஒன்று தொடர்ந்த வழக்கில் ப்ரேசில் நாட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதே போன்று மற்றுமொரு சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்குமாறு ப்ரேசில் நாட்டு தேர்தல் நீதிமன்றம் சமீபத்தில் Google க்கு உத்தரவிட்டது, ஆனால் வழக்கம் போல இது பேச்சு சுதந்திரம் எனக் கூறி Youtube நீக்க மறுத்து விட்டது. ஒபாமா கி்ட்டதான் இந்த மாறி பேச்சுல்லாம் செல்லும் , ஆனால் ப்ரேசில் நாட்டு நீதிமன்றம் ஆத்திரமடைந்து சமீபத்தில் ப்ரேசில் நாட்டு Google நிறுவனத்தின் தலைவருக்கு (Head of Google operation in Brazil) பிடி வாரண்ட் பிறப்பித்தது உத்தரவிட்டது.

இதே போன்று ஈரான் நாட்டு அரசு தற்போது Gmail க்கு ஈரான் நாட்டில் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஈரான் நாட்டு தொலை தொடர்பு துறை அமைச்சர் , நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து Google நிறுவனத்தில் Gmail சேவை ஈரான் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது மேலும் மறு உத்தரவு வரும் வரை இந்த தடை தொடரும் எனக் தெரிவித்துள்ளார்.

Anonymous said...

நபிகள் நாயக்ததை கொச்சைபடுத்தி Nakoula Basseley Nakoula என்பவனால் தாயரிக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தில் நடித்த Lee Garcia என்பவர் சமீபத்தில் லாஸ் ஏன்ஜல்ஸ் நீதின்றத்தில் படத் தயாரிப்பாளன் Nakoula Basseley Nakoula என்பவன் மற்றும் அதை வெளியிட்டுள்ள Youtube க்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதி நடிகையின் கோரிக்கை ஏற்க மருத்து வழக்கை நிராகரித்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய Lee Garcia மற்றும் அவரது வழக்கறிஞர், லாஸ் ஏன்ஜல்ஸ் நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கை இன்று நாங்கள் டிஸ்மிஸ் செய்யப் போகின்றோம் அதே கையோடு படத் தயாரிப்பாளன் Nakoula Basseley Nakoula என்பவன் மற்றும் Google , Youtube க்கு எதிராக ஃபெடரல் கோர்ட்டில் இன்று Copy Right புகார் அளித்து வழக்கு தொடரப் போகின்றோம் எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் எனது குறளுக்கு எனக்கு தெரியாமல் வேறு டயலாக்கை டப் செய்துள்ளார் எனவும் நடிகை Lee Garcia குறிப்பிட்டுள்ளார்.

இந்த பேட்டியின் போது நடிகை Lee Garcia என்பவரின் வழக்கறிஞர் கூறுகையில்,

Google மற்றும் அதன் நிறுவனம் Youtube மிகப்பெறும தவறு செய்து கொண்டிப்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது. ”வெறுக்கத் தக்க பேச்சுக்கு (hate speech) அனுமதி இல்லை” என அவர்களே அவர்களது நிபந்தனைகளில் குறிப்பிடுள்ளனர். இதை (வீடியோ) எப்படி வெருக்க தக்க பேச்சு இல்லை எனக் கூற முடியும்? சட்டப்படியோ, அறிவு ரீதியாகவோ அல்லது ஒழுக்கம் சார்ந்தோ இதை எப்படி தவறு இல்லை என்று கூறுவது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

நாம் சென்ற வாரம் Youtube ன் விதிமுறைகள் குறித்து வெளியிட்ட ( அமெரிக்க திரைப்பட வீடியோ: பொய்க் காரணத்தை கூறும் Google) விசயத்தை நடிகையின் வழக்கறிஞர் தற்போது கையில் எடுத்துள்ளார்.

இந்த முறை வசமாக மாட்டியுள்ள Google ஐயும் படத் தயாரிப்பாளைனயும் அமெரிக்க நீதி மன்றம் எப்படி காப்பாற்ற பொகின்றதோ தெரியில்லை.

கஜினி முஹம்மது போன்று அந்த நடிகையும் தோல்வி அடைந்த போதிலும் துவன்று விடாமல் தொடர்ந்து கோர்ட்டுக் மேல் கோர்ட் வழக்கு தொடர்ந்து கொண்டிருக்கின்றார்.

ஆனால் உலகமே பற்றி எரிந்து கொண்டிருக்கும் இந்த விசயத்தை அமெரிக்க நீதிமன்றங்கள் அசால்ட்டா தட்டிக்கழிக்கின்றன…

http://www.tntj.net/105747.html

Anonymous said...

ஆஸ்திரேலிய நாட்டு ரோமன் கேத்தலிக் திருச்சபை ”இதுவரை 600 க்கு மேற்பட்ட குழந்தைகள் பாதிரிமார்களால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சிகரமான அதே நேரத்தில் மிகவும் கிறிஸ்துவ உலகிற்கு மிகவும் கேவலமான தகவலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலிய நாட்டின் விக்ட்டோரியா மாநிலத்தில் உள்ள ரோமன் கேத்தலிக் திருச்சசை மாநில பாராளுமன்ற விசாரனைக்கு குழுவிடும் இந்த அறிக்கையை சமர்பித்துள்ளது.

பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உண்மையான எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் பெருப்பாலானவைகள் 1960 முதல் 1980 வரை நடைபெற்றதாகும். மேலும் இது தொடர்பாக 45 வழக்குகளை இன்னனும் நாங்கள் விசாரித்துக் கொண்டு உள்ளோம் எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது விக்டோரிய மாநிலத்தில் மட்டும் உள்ள பாதிரிமார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட குழுந்தைகள் பற்றிய விபரமாகும் எனக் கூறியுள்ளனர்.

மெல்போன் நகர Archbishop , Denis Hart இதை ”இது நமக்கு மிகவும் கேவலமான செய்தி” என சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு நாட்டில் ஒரு மாநிலத்தில் 10 ஆயித்திற்கு மேல் என்றால் அனைத்து நாட்டிலும் உள்ள அனைத்து மாநிலத்திலும்?

http://www.tntj.net/105559.html

UNMAIKAL said...

பொருட்காட்சிக்கு வாலிபருடன் சென்ற 2 இளம்பெண்களுக்கு அடி, உதை, அபராதம்

பாட்னா: பீகாரில் ஒரு வாலிபருடன் பொருட்காட்சிக்கு சென்றதற்காகவும், பான் மசாலா சாப்பிட்டதற்காகவும் 2 இளம்பெண்களை பஞ்சாயத்து உத்தரவின்பேரில் மக்கள் அடித்து உதைத்து அவர்களின் முடியையும் நறுக்கியுள்ளனர்.

பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ள பிரபல்பூரைச் சேர்ந்தவர்கள் கலா(15), ரதி(17)(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). அவர்கள் கடந்த 20ம் தேதி மீனு(21) என்ற வாலிபருடன் சேர்ந்து பொருட்காட்சிக்கு சென்றுள்ளனர்.

மேலும் அவர்கள் இருவரும் பான் மசாலா சாபிட்டுள்ளனர். இதை அந்த பொருட்காட்சிக்கு சென்ற பிரபல்பூர்வாசிகள் பார்த்துவிட்டு வந்து கிராம பஞ்சாயத்தில் தெரிவி்த்துள்ளனர்.

இதையடுத்து பஞ்சாயத்தைக் கூட்டி அப்பெண்கள் மற்றும் அந்த வாலிபரின் குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர்.

மேலும் அப்பெண்களின் பெற்றோர்கள் தலா ரூ.21,000 அபராதம் கட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

அதில் ஒரு பெண்ணின் பெற்றோர் பணத்தை கட்டிவிட்டனர். இன்னொரு பெண்ணின் பெற்றோர் மிகவும் ஏழை என்பதால் அபராதத் தொகையை கட்ட வேண்டாம் என்று கூறப்பட்டது.

இத்தனை தண்டனையும் கொடுத்த பிறகு அந்த 2 பெண்களையும் பஞ்சாயத்தார் உத்தரவின்பேரில் மக்கள் அடித்து உதைத்துள்ளனர்.

மேலும் அவர்களின் முடியையும் நறுக்கிவிட்டுள்ளனர்.

இதற்கிடையே அந்த 2 பேரையும் பொருட்காட்சிக்கு அழைத்துச் சென்ற வாலிபர் பீகாரை விட்டே ஓடிவிட்டார்.

இளம்பெண்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பி்ன்னர் இந்த சம்பவம் தொடர்பாக 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தலைமறைவாகிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

SOURCE:THATSTAMIL

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்,
வர்ணாசிரம ஜாதிப்பிரிவுகளுக்கு மூடநம்பிக்கையுடன் முட்டுக்கொடுப்பவர்கள்... தமிழகத்தில் சைவ, வைணவ, கிருத்துவ மதங்களில் மட்டுமின்றி பெரியாரிய/கம்யுனிச நாத்திகர்களிலும் உண்டு.

இவர்களின் மனம்மாறினால் மட்டுமே சாதி ஒழியும். அதற்கான மருந்து எங்கே கிடைக்கிறது என்பதும் இவர்களுக்கு தெரியும். அவர்களில் மனம்மாறியோர் சாதியை வெறுத்து 'மருந்தை' வாங்கி அருந்தி முஸ்லிம்களாகின்றனர். அதனால், 'மருந்துக்கடை'யை சாதி வெறியர்கள் எழுத்தாலும் சொல்லாலும் செயலாலும் வீண்பழி போட்டு தூற்றுவார்கள். இதுதான் நடந்து கொண்டு இருக்கிறது.

சாதி வெறியர்கள் அனைவரும் 'அந்த மருந்தருந்தி நமைப்போல ஆகிவிட' இறைவனிடம் பிரார்த்திப்போம்.

suvanappiriyan said...

சலாம் சகோ ஆஷிக்!

//அதனால், 'மருந்துக்கடை'யை சாதி வெறியர்கள் எழுத்தாலும் சொல்லாலும் செயலாலும் வீண்பழி போட்டு தூற்றுவார்கள். இதுதான் நடந்து கொண்டு இருக்கிறது//

இன்றில்லா விட்டாலும் என்றாவது தங்களின் தவறை உணருவார்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

சு.பி.சுவாமிகள்,

எந்த பெண் கற்பழிக்கப்பட்டாலும் குற்றமே, செய்தவர்கள் யாராயினும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் நீங்கள் அதை எல்லாம் பேசுவது தான் சாத்தான் வேதம் ஓதுவது போன்றது.

நான் கேட்ட எதற்கும் நீங்கள் நேரிடையான பதில் சொல்லாமல் திணறுவதை உங்கள் பதிவை படிப்பவர் அனைவருமே அறிவார்கள்.

நீங்கள் ஏன் ஆப்கானில் 17 பழங்குடியின இஸ்லாமிய ஆண் ,பெண்கள் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்ததை கண்டித்து பதிவிடவில்லை. ஆப்கான் வெளிநாடு அதனால் அங்கு நடப்பதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என சொல்வீர்கள் :-))

ஆனால் ஆப்கான் முல்லா ஓமர் பெருநாள் வாழ்த்து செய்தி என வெளியிடுவீர்கள். முல்லா ஓப்மரின் தலிபான்கள் தானே கொலை செய்தது என்றால் வெளிநாடு என்பீர்கள் :-))

நாகூர் அருகே நடந்த சம்பவம் , ஒரு பாலிடெக்னிக் மாணவன், ஒரு பெண்னை காதலிப்பதாக சொல்லி ,ரூம் போட்ட் அனுபவித்து விட்டு அவன் நண்பர்களையும் கூப்பிட்டு அனுபவிக்க வைத்ததோடு அல்லாமல் அதனை மொபைலில் படம் எடுத்து வெளியில் சொன்னால் இன்டெர்நெட்டில் போட்டு விடுவேன் என மிரட்டி அனுப்பினான்.

வீட்டுக்கு சென்றதும் அப்பெண்ணுக்கு உடலில் ரத்தப்போக்கு ஏற்படவே மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது தான் உண்மை தெரிய வந்தது, ஆனால் போலிசில் சொல்லவில்லை, அவர்கள் சார்ந்த மத தலைவரிடம் முறையிடவே அவ்விளைஞனை கொன்றுவிட உத்தரவு இடப்பட்டு அதன் படியே கொலை செய்யப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டான்.

குற்றவாளியும், பாதிக்கப்பட்டவர்களும் ஒரே மதம் தான் , என்ன மதம் என்பதையும் , சம்பவத்தின் உண்மை தன்மையையும், நாகை நாகூர் வாசிகளிடம் கேட்டு தெரிந்துகொள்ளவும்.

நாகூர் கனினு ஒருத்தர் வருவாரே அவராவது உண்மையை சொல்கிறாரா எனப்பார்ப்போம்.

இந்த சம்பவம் சுந்தப்பாண்டியன் கதை போலத்தான் :-))
---------

கோவி.கண்ணன் said...

//சூத்திரன் கோவிக்கண்ணனும் பகவத் கீதையும்//

என்னை சூத்திரன் என்று சொல்பவரை செருப்பால் அடிக்கும் உரிமை எனக்கு உண்டு, வாங்க விருப்பம் இருந்தால் தொடர்ந்து சொல்லவும், ஏனெனில் நான் எந்த பார்பனரையும் பிராமணன் என்று எழுதுவதோ ஒப்புக் கொள்வதோ கிடையாது. திருவாளர் சுபி தான் பார்பனரை பிராமணர் என்று எழுதுவார்.

suvanappiriyan said...

திரு கோவி கண்ணன்!

//என்னை சூத்திரன் என்று சொல்பவரை செருப்பால் அடிக்கும் உரிமை எனக்கு உண்டு, வாங்க விருப்பம் இருந்தால் தொடர்ந்து சொல்லவும், ஏனெனில் நான் எந்த பார்பனரையும் பிராமணன் என்று எழுதுவதோ ஒப்புக் கொள்வதோ கிடையாது. திருவாளர் சுபி தான் பார்பனரை பிராமணர் என்று எழுதுவார்.//

உங்களின் கோபம் நியாயமானதே! மனு தர்மம் அவ்வாறு சொன்னாலும் அந்த கருத்து எனக்கு ஏற்புடையதல்ல. அதை நீக்கி விட்டேன். பல வேலைகள் காரணமாக பின்னூட்டங்களை முழுவதும் படிக்காமல் வெளியிட்டு விட்டேன்.

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி!

suvanappiriyan said...

கோவி கண்ணன்!

நான் எனது நாட்டை இழிவாக நினைத்தால் அது என்னை நானே இழிவாக்கிக் கொள்வதாக அர்த்தம். சவுதியிவிருந்து ஊருக்கு செல்லும் போது அந்த குறுகிய சாலைகளையும் அதன் இரு புறமும் வளைந்து நெளியும் மரங்களையும் மண் வாசனையையும் சுவீகரித்துக் கொண்டே செல்வேன்.

ஏசி, உயர்தரமான அலுவலகம், கணிணி என்று சவுதியில் சற்று வசதியான வாழ்வு வாழ்ந்தாலும் எனது ஊரிலும் எனது நாட்டிலும் இருக்கும் நாட்களின் சுகங்களை எழுத்தில் வடிக்க முடியாது.

நமது நாட்டு அவலங்களை அவ்வப்போது எழுதுவதன் காரணம் எனது தாய் நாட்டின் மீது உள்ள பற்றுதலாலேயே! எனது பதிவுகளை ஒரு பாகிஸ்தானியோ, ஒரு சவுதியோ படிப்பதில்லை. தமிழ் பேசும் மக்கள் தான் படிக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் எழுதுகிறேன். சொந்த மக்களிடத்தில் தனது சொந்த வீட்டைப் பற்றி பேசுவதோ சுட்டிக் காட்டுவதோ எவ்வாறு இழிவாகும்.?

அபாண்டமாக பொய் சொன்னாலோ அல்லது வேறு இனத்து மக்களுக்கு மத்தியில் இதை எல்லாம் சொல்லி எள்ளி நகையாடியாலோ உங்களின் குற்றச்சாட்டுக்கு உள்ளானவனாவேன்.

எனவே இந்த மக்களை எவ்வாறு திருத்துவது என்ற ஆதங்கத்தில் எழுந்த பதிவுகள் தானே யொழிய வேறு எந்த உள் நோக்கமும்
இல்லை.

அடுத்து சவுதியில் வீட்டு வேலைக்கு வரும் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்பது உலகம் முழுவதும் தெரிந்த ஒன்று. வெளியில் நடக்கும் தவறுகளை சட்டத்தின் மூலம் தடுக்கலாம். ஆனால் வீட்டுக்குள்ளே நடப்பதை எவ்வாறு தண்டிப்பது. தவறு நடந்தாலும் தெரிய வருவது மிக குறைவே.

எனவே தான் நான் முன்பு ஒரு பதிவில் பெண்கள் தனியாக தனியாக இங்கு வீட்டு வேலைக்கு வர வேண்டாம் என்று பதிவிலேயே கோரிக்கை வைத்தேன். நம்மால் முடிந்தது அவ்வளவுதான். தெரிந்தே தங்களது வறுமையினால் இது போன்ற சிரமங்களை சுமப்பவர்களை நாம் என்ன செய்ய முடியும்? வரும் பெண்கள் தனது கணவர் வீட்டு டிரைவராக வருமாறு பார்த்துக் கொண்டால் இந்த பிரச்னைகளிலிருந்து ஓரளவு தப்பிக்கலாம்.

முன்பெல்லாம் எத்தனையோ இலங்கை தமிழ் பெண்களுக்கு கடிதம் எழுதி கொடுத்துள்ளேன். படிப்பறிவு இல்லாமல் இங்கு வந்து சிரமப்படுவதை பார்த்து வருத்தமுற்றிருக்கிறேன்.

சவுதியில் எல்லா நபர்களும் இறைவனுக்கு பயந்தவர்களாக இருப்பார்கள் என்று நினைக்க முடியாது. எனது அரபி மிக நல்லவர். 20 வருடமாக ஒரே பெண் ராணி போல் வசதியாக இருக்கிறார். சிலருக்கு நரகமாக அமைந்து விடுகிறது. நமது எம்பாஸியும் ஸ்ரீலங்கா எம்பாஸியும் ஒரு அமைப்பை கூட்டாக ஏற்படுத்தி இது போன்ற சிக்கல்களை களைய முயற்ச்சிக்கலாம். அல்லது விசாக்களை முழுவதுமாக தடை செய்யலாம்..

Nasar said...

சகோ கோ.க. SAID..
// என்னை சூத்திரன் என்று சொல்பவரை செருப்பால் அடிக்கும் உரிமை எனக்கு உண்டு, வாங்க விருப்பம் இருந்தால் தொடர்ந்து சொல்லவும், //

IPC 501 SECTION A2 சட்ட பிரகாரம் படி உங்களுக்கு முழு உரிமை உண்டு ....
தயவு செய்து யாரும் அவரை அவ்வாறு அழைக்கவேண்டாம் என் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கோவி அவர்களே உண்மையிலேயே என் மனம் திறந்து பாராட்டுகிறேன் .....
// நான் எந்த பார்பனரையும் பிராமணன் என்று எழுதுவதோ ஒப்புக் கொள்வதோ கிடையாது. திருவாளர் சுபி தான் பார்பனரை பிராமணர் என்று எழுதுவார்.//

அதே போல சுவணன் அவர்களை உண்மையான முஸ்லிம் என்று அழைக்காமல் " வஹாபி " என்று அழைப்பதேன் ??

தனிமரம் said...

காந்தி தேசத்தின் சட்டம் இப்படி கேவலமாக இருக்கு!

வருண் said...

இந்த 21 நூற்றாண்டில் இப்படி நடக்கிதுனா ரொம்ப வருத்தப் படக்கூடிய ஒரு விசயம், சுவனப் பிரியன்.

வட மாநிலங்கள் (பிஹார்) போன்றவை ரொம்ப மோசம்னு கேள்விப் பட்டு இருக்கேன்.

ஆனால், பதிவுலகில் இந்த சூழலில் நீங்க இதை சொல்வதால், நீங்க இந்துக்கள் சாதிப் பிரிவை அவமானப் படுத்தவென்றே இதைப் பத்தி பேசுறீங்கனு சொல்லுவாங்க, அதுபோல் ஜோடிக்கப்படும்.

உண்மையை யாருவேணா சொல்லலாம் என்பதே என் நிலைப்பாடு. பழிக்குப் பழி வாங்கும் எண்ணத்திலேயே இருந்தால் எல்லாரும் நாசமாப் போக வேண்டியதுதான்.

"ரொம்ப வருத்தமான செய்தி" "இதுபோல நடக்ககூடாது" "இந்தியர்கள் நாம் அனைவருமே அவமானப்படனும் இதுக்காக" னு தன் வருத்தத்தை ஒரு இந்தியனாக சொல்லிவிட்டு போனால் என்ன தப்புனு தெரியலை. இந்துவாகத்தான் வர்றாங்க.

பதிவுலகில் நியாயஸ்தன்னு ஒரு சிலர் பதிவுக்குப் பதிவு வந்து எதையாவது சொல்லிக்கிட்டு திரிகிறானுக. இந்த நியாயஸ்தன் யோக்கியதை கேட்டால் அதைவிட கேவலமாயிருக்கும்.. பேரை எல்லாம் சொல்ல வேணாம்னு பார்க்கிறேன்.

பாருங்க மனிதாபிமானத்துடன் தன் வருத்தத்தை சொல்ல ஒரு மூத்த பதிவர்கூட இதுவரை வரவில்லை!

எல்லாமே இங்கே இந்து-முஸ்லிம் பிரச்சினைதானா? சாதாரண மனிதாபமுள்ள மனுஷனே பதிவுலகில் இல்லையா? என்ன ஒரு கேவலமான நிலை? :(

Unknown said...

பதிவு சரி ,ஆனா அது என்ன கீழ ஒரு யுடியூப் சுட்டி? இதுக்குள் எதற்கு உங்க மார்க்க முட்டாள்களை புகுத்தி காமெடி செய்கிறீர்கள்?அப்போ இன்னமும் நீங்க யூடியுப்பை புறக்கணிக்க தொடங்கல்லியா? கடைசில தமிழ்மணத்தை புறக்கணித்த கதை தான் போல:)

Unknown said...

அதே போல சுவணன் அவர்களை உண்மையான முஸ்லிம் என்று அழைக்காமல் " வஹாபி " என்று அழைப்பதேன் ??///

இத்தால் சொல்லப்படுவது யாது எனில்.. இனி சூனா பானாவை 'உண்மையான முஸ்லீம்' என்ற அடிமொழியுடன் தான் அழைக்க வேண்டும். அப்படி அழைக்க தவறுபவர்களுக்கு சூனா பானா எழுதிய இறுதி ஐந்து பதிவுகளை கட்டி வைத்து வாசிக்க கட்டாயபடுத்தபடுவார்கள்

கோவி.கண்ணன் said...

//ஒரு நாளைக்கு 1200 பார்வையாளர்கள் இந்த பதிவை பார்வையிடுகிறார்கள். அவர்கள் மூலமாக ஷேர் செய்வது எண்ணிக்கையை இன்னும் அதிகரிக்கும். //

அட உங்கப் பதிவை படிக்கிறார்களா என்று நான் கேட்கவில்லை, அவர் உங்கள் பதிவில் ஒட்டும் பின்னூட்டம் யாரும் படிக்கிறார்களா என்று தான் கேட்டேன், UNMAIKAL said... என்று பின்னூட்டம் பார்த்தாலே நான் அடுத்த பின்னூட்டத்தைப் பார்க்கச் சென்றுவிடுவேன்.

UNMAIKAL said...

நான் ஒரு இந்துன்னு ஒத்துக்கிட்டேன்னா நான் சூத்திரன்னு ஒத்துக்கத் தானே வேணும்!

அது மாத்திரமல்ல, மற்ற சாஸ்திர சம்பிரதாயங்களை ஒத்துக்கிட்டா,

கடவுளை ஒத்துக்கிட்டா கடவுள் சொன்னார் என்பதற்கெல்லாம் நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்!

சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதற்கு நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்!

யாரடா சொன்னா, உன்னைத் தேவடியா மகன்னு, சூத்திரன்னு சொன்னா?

கிருஷ்ணன் சொன்னான்! எங்கடா சொன்னான்? கீதையிலே சொன்னான்!

கிருஷ்ணனையும் கீதையையும் செருப்பால் அடிக்கத் துணியாமல் போனால் நீ சூத்திரன் தானே! பயந்தீன்னா நீ சூத்திரனாக இருந்துக்கோ!

----தந்தைபெரியார்- நூல்:

"சிந்தனையும் பகுத்தறிவும்" பக்கம் 8-11


SOURCE: >>>> கிருஷ்ணனையும் கீதையையும் செருப்பால் அடிக்கத் துணியாமல் போனால் நீ சூத்திரன் தானே! பயந்தீன்னா நீ சூத்திரனாக இருந்துக்கோ! <<<<<


http://thamizhoviya.blogspot.sg/2008/04/blog-post_3045.html

UNMAIKAL said...

CLICK >>>>>
"தமிழர்கள் இந்துக்கள் அல்ல, அல்ல, அல்ல”என்று அறுதியிட்டுச் சொல்கிறேன், உரக்கக் கூவுகிறேன். - அறிவழகன் கைவல்யம்
<<<<< TO READ

Source: http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=3935:2010-02-20-08-29-29&catid=1:articles&Itemid=264

THANKS TO: KEETRU.COM

Anonymous said...

kovi said
// என்னை சூத்திரன் என்று சொல்பவரை செருப்பால் அடிக்கும் உரிமை எனக்கு உண்டு, வாங்க விருப்பம் இருந்தால் தொடர்ந்து சொல்லவும், //

அப்படி அவரை அழைப்பது தவறுதான்.அவர் கோபப்பட்டது சரிதான். சிந்தனையாளரான கோவி,தன்னை இப்படி அழைத்ததால் கோபப்படும் அவர் இஸ்லாத்தின் மீது உண்மையானவற்றை விமர்சனம் பண்ணாமல் விஷக்கருத்துகளை தூவுகிறாரே அப்போதுமட்டும் முஸ்லிம்கள் கோபப்படுவார்கள் என்பதை சிந்திக்கமாட்டாரா?

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

நேற்று அனானிமஸ் ஆக வந்தது எனது பின்னூட்டம் தான் நேற்று பல தடவை எனது ஐ.டியில் பின்னூட்டம் போடப்பார்த்தேன், ஆனால் ஏற்கவில்லை, ஒரு வேளை எனது ஐடி யை பிளாக் செய்துவிட்டீர்களோ என அனானியாகவே போட்டேன்.

நீங்கள் அப்படி செய்யமாட்டீர்கள் என்றாலும் பிளாக்கரில் அப்படி ஏதோ எனக்கு பிரச்சினை இருக்கலாம் எனவே அனானியாக முயற்சித்து பார்த்தேன், இன்று சரியாகிவிட்டதா என தெரிய வில்லைப்பார்ப்போம்.

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

சலாம்,
அருமையான பதிவு சகோ.

என் தளத்தில் இப்பொழுது:

நரேந்திர மோடி-அதிகாரபூர்வ பெயர் மாற்றம்

கட்டுரையை பற்றி :
பதிவுலகில் இருபவர்களுக்கே இவ்விசயம் தெரியவில்லை என்றால் மற்ற மக்களை பற்றி யோசியுங்கள், நம் ஊடகங்கள் அப்படி உள்ளது....

நீங்கள் அறிந்த இவ்வசயத்தை பிறருக்கும் சொல்லுங்கள் முடிந்தால் இந்த கட்டுரையின் லிங்கையும் உங்கள் தளத்தில் கொடுங்கள்,பிறருக்கும் இவ்விசயம் தெரிய உதவுங்கள்.

http://tvpmuslim.blogspot.in

Anonymous said...

// சாதி வெறியர்கள் அனைவரும் 'அந்த மருந்தருந்தி நமைப்போல ஆகிவிட' இறைவனிடம் பிரார்த்திப்போம்.//

ஆம், இதனால் எல்லாரும் செய்ய வேண்டியது என்னவென்றால் எல்லாரும் சாதி வெறியை ஒழித்து விடுங்கள் அது மிகவும் தவறாகும் என்று அல்லா சொல்கிறார். அதற்கு பதிலாக எல்லாரும் மருந்தருந்தி மத வெறியர்கள் ஆகி விடுங்கள். அல்லாவின் பிள்ளைகளின் கூற்றுப்படி சாதி வெறி தான் தவறு, மத வெறி தவறே இல்லை. நீங்கள் சாதி வெறியில் அநீதிகள் செய்வதற்கு பதிலாக மத வெறியில் அநீதிகள் செய்யலாம் அது தவறு இல்லை. அல்லாவின் பிள்ளைகளும் அதை செய்து தான் சொர்க்கத்தில் என்னவெல்லாமோ அனுபவித்து கொண்டிருக்கிறார்களாம். யாரெல்லாம் தயாராக இருக்கிறீர்கள் மத வெறியர்களாக மாறுவதற்கு

k.rahman said...

//காந்தி தேசத்தின் சட்டம் இப்படி கேவலமாக இருக்கு//

its still better than jinnah desam.

Unknown said...

Mr Kovi Kannan,


///UNMAIKAL said... என்று பின்னூட்டம் பார்த்தாலே நான் அடுத்த பின்னூட்டத்தைப் பார்க்கச் சென்றுவிடுவேன்.///

உண்மைகள் எப்போதும் கசக்கும் அல்லது அந்த உண்மைகளுக்கு நேர்மையாக பதிலளிக்க தைரியமில்லை என்பதனால் அடுத்த பின்னூட்டத்திற்குத் தாவுகிறீர்களா?

suvanappiriyan said...

வாங்க வருண்!

//எல்லாமே இங்கே இந்து-முஸ்லிம் பிரச்சினைதானா? சாதாரண மனிதாபமுள்ள மனுஷனே பதிவுலகில் இல்லையா? என்ன ஒரு கேவலமான நிலை? :( //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

ரஹ்மான் என்ற போலி!

//its still better than jinnah desam.//

இந்தியாவை விட பாகிஸ்தான் மோசம்தான். ஒத்துக்கறேன். அதை ஏன் முஸ்லிம் பெயரில் ஒளிந்து கொண்டு சொல்லணும். :-) குடுமி அழகா தெரியுதே.....

ராஜ நடராஜன் said...

சகோ.சுவனப்பிரியன்! மார்க்க சிந்தனைகள், ஒற்றைப்பார்வை,கூட்டமாக கூவும் ஆகா பின்னூட்டங்கள் குறித்து எனக்கு நிறைய கருத்து மாறுபாடுகள் இருக்கின்றன.பலரின் மதம் சார்ந்த பதிவுகளின் பின்னூட்டங்களும் அதையே பிரதிபலிக்கின்றன என்ற போதிலும் கூட

இந்தப்பதிவுக்கு முதல் பின்னூட்டமிட்ட கோவி.கண்ணன் பூ மிதிக்க வாங்கன்னு கூப்பிட்டதால் அதனையும் பார்வையிட்டேன்.அங்கே உங்கள் பின்னூட்டம் சிறப்பாக இருந்தது.வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் said...

//பாருங்க மனிதாபிமானத்துடன் தன் வருத்தத்தை சொல்ல ஒரு மூத்த பதிவர்கூட இதுவரை வரவில்லை! //

வரூண் பாய்,

வருத்தைத்தை மட்டும் பகிர்ந்திருந்தால் பிரச்சனை இல்லை, சுவனண்ணன் கடைசியில் வீடியோவைப் பகிர்ந்ததில் வருத்தம் பல்லிளிக்கிறது.

கோவி.கண்ணன் said...

//நான் ஒரு இந்துன்னு ஒத்துக்கிட்டேன்னா நான் சூத்திரன்னு ஒத்துக்கத் தானே வேணும்! //

நீங்க சிட்டிசன் ஆப் வேர்ல்டுன்னு ஒத்துக் கொண்டால், உங்க மதத்து மேல தீவிரவாதம் குத்தும் ஊடகங்கள் சொல்வதை மண்டையை ஆட்டி ஆட்டி நீங்க கேட்டு விட்டு ஆமாம்னு ஒப்புக் கொள்ளனும்.

இவன் குண்டுவைக்கக் கூடியவன் என்று இன்னொருவன் சொன்னால் ஆமாம் ஆமாம் னு அதையும் கேட்டக்கனும்.

பொழப்பு வேற இல்லையா ?

கோவி.கண்ணன் said...

//அதே போல சுவணன் அவர்களை உண்மையான முஸ்லிம் என்று அழைக்காமல் " வஹாபி " என்று அழைப்பதேன் ??//

வஹாபிகளின் பிடியில் இருக்கும் சவுதியில் தான் நல்லாட்சி நடைபெறுவதாகவும் உலகத்தின் முன்மாதிரி என்று சுவன அண்ணன் தான் சொல்கிறார். அவர் தன்னை வகாபி என்று பிறர் சொல்வதால் இழுக்கு அடைந்ததாக வருத்தப்பட்டது போல் தெரியவில்லை, பிறகு உங்களுக்கு ஏன் கவலை ?

கோவி.கண்ணன் said...

// UNMAIKAL said...
CLICK >>>>>
"தமிழர்கள் இந்துக்கள் அல்ல, அல்ல, அல்ல”என்று அறுதியிட்டுச் சொல்கிறேன், உரக்கக் கூவுகிறேன். - அறிவழகன் கைவல்யம் <<<<< TO READ //

வாருங்கோ பாய்,

தமிழர்கள் இந்து இல்லைன்னு நான் ஒப்புக் கொள்கிறேன், ஆனா தமிழை தாய்மொழியாக கொண்ட இஸ்லாமியர்கள் தமிழர்கள் இல்லைனு ஒரு கேணப் பய எழுதி இருந்தால் அதை எடுத்துப் போடுங்க, அப்பதான் உங்க நேர்மை வெத்தலையில் தடவி தெரிந்து கொள்ள முடியும்

Nasar said...

யாரப்பா இந்த "உண்மைகள்".......??!!!
கோவியாருக்கு பயங்கரமாக "கவுன்ட்டர்" தராரு....!!!
பதிவின் மைய கருத்தை திசை திருப்பி தேவையில்லாத சண்டையை
ஆரம்பித்து வைத்தவர் திருவாளர் முதல் கமென்ட் போட்டவர்தான்...ஆவ

suvanappiriyan said...

சலாம் சகோ திருவாளப்புத்தூர்!

//அருமையான பதிவு சகோ.

என் தளத்தில் இப்பொழுது:

நரேந்திர மோடி-அதிகாரபூர்வ பெயர் மாற்றம்//

பதிவை பார்க்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

//வருத்தைத்தை மட்டும் பகிர்ந்திருந்தால் பிரச்சனை இல்லை, சுவனண்ணன் கடைசியில் வீடியோவைப் பகிர்ந்ததில் வருத்தம் பல்லிளிக்கிறது.//

அவரது சோகத்தையும் பகிர்வது தவறா? குற்றமே செய்யாமல் 15 வருடம் விசாரணை கைதியாக இருந்து 'சரி நீ குற்றம் செய்யல... வீட்டுக்கு போ....' என்றால் உங்களின் மனநிலை எப்படி இருக்கும்?

கோவி.கண்ணன் said...

//Nasar said...
யாரப்பா இந்த "உண்மைகள்".......??!!!
கோவியாருக்கு பயங்கரமாக "கவுன்ட்டர்" தராரு....!!!//

தடவிக் கொள்ள சுண்ணாம்பு வாங்கப் போய் இருக்கிறார், வந்து சொல்லுவார் பொருந்திருந்து பாருங்கள். ரொம்ப கற்பனை வேண்டாம் மூக்கு முனை தான் உடைந்துவிட்டதாம்

கோவி.கண்ணன் said...

//அவரது சோகத்தையும் பகிர்வது தவறா? குற்றமே செய்யாமல் 15 வருடம் விசாரணை கைதியாக இருந்து 'சரி நீ குற்றம் செய்யல... வீட்டுக்கு போ....' என்றால் உங்களின் மனநிலை எப்படி இருக்கும்?//

எந்த முகாந்திரமும் இல்லாமல் சும்மா இருப்பவர்களை பிடித்து செல்வார்களா ? குறைந்த பட்சம் சேர்க்கை, சேராத இடம் சேர்ந்தால் இதெல்லாம் எதிர்பார்க்கமலேயே கிடைக்கும், வேறென்ன செய்யமுடியும் நாமும் வருந்துவோம்.

வருண் said...

****கோவி.கண்ணன் said...

//பாருங்க மனிதாபிமானத்துடன் தன் வருத்தத்தை சொல்ல ஒரு மூத்த பதிவர்கூட இதுவரை வரவில்லை! //

வரூண் பாய்,

வருத்தைத்தை மட்டும் பகிர்ந்திருந்தால் பிரச்சனை இல்லை, சுவனண்ணன் கடைசியில் வீடியோவைப் பகிர்ந்ததில் வருத்தம் பல்லிளிக்கிறது.***

உங்களை யாரோ ஒருவர் சூத்திரன்னு சொல்லிட்டார்னு உங்களுக்கு கண்ணாபின்னானு கோவம் வந்துடுத்துபோல. :( என்னை "வருண் பாய்" என்று நீங்க அன்பாக அழைப்பதால் நேக்கு சிரிப்புத்தான் வருது. :)))

அந்த கடைசி வீடியோ, பல்லிளிப்பு எல்லாம் வரலைனாக்கூட இந்தப் பதிவை சரியான முறையில் எடுத்து இருப்பார்களா? என்பதும் எனக்கு சந்தேகமே!

அது என் சந்தேகம் என்னோட போகட்டும்! தொடருங்கள் உங்கள் பணியை! :)))

Nasar said...

// அவர் தன்னை வகாபி என்று பிறர் சொல்வதால் இழுக்கு அடைந்ததாக வருத்தப்பட்டது போல் தெரியவில்லை, பிறகு உங்களுக்கு ஏன் கவலை ? //

சுவணன் வருத்தப்பட்டு இதற்காக ஒரு பதிவு எழுதி கடைசியில ஒரு வீடியோ லின்க்கும் கொடுத்தால்,
தாங்கள் வருத்தம் தெரிவிப்பீர்களோ ??? ஆஹா ..ஆஹா
தங்களை " அது மாதிரி " அழைத்தால் கோவம் வருகிறது..நியாயமான கோவம் தான் இதற்கு நானும் உடன்படுகிறேன்...எனக்கும் பல வருடங்களுக்கு முன்பு இதே கோவம் இருந்தது,அதன் பிறகு பலவிதமான மன ஊளைட்சல்கள்,ஆன்மிக தேடல்கள் கடைசியாக இங்கே வந்து தஞ்சமடைந்துள்ளேன்..
சுயகௌரவத்துடனும், சுயமரியாதையுடனும்,தன்மானத்துடனும் இருக்கிறேன் .......சரி அப்புறம்
அந்த நாலு கலர்களை அறிமுகம் செய்தவர் கிருஷ்ணன் என்கிற கண்ணன் தானே..?!
பிறகு ஏன் நீங்கள் இன்னமும் கண்ணன் என்ற பெயருலேயே இருக்கிறீர்கள் ???
பெயரை துறந்தால் " அந்த " பட்ட பெயரும் இருக்காதல்லவா..!!!!
கோவப்படாமல், நிதானமாக சிந்தியுங்கள்...
கோவப்பட்டால் சரியான முடிவெடுக்கமுடியாது ஏன்னா சுவன் கூட உங்களை நல்ல சிந்தனையாளர்
என்று சர்டிபிகேட் கொடுத்துள்ளார்..நானும் welcome.
-

கோவி.கண்ணன் said...

//"வருண் பாய்" என்று நீங்க அன்பாக அழைப்பதால் நேக்கு சிரிப்புத்தான் வருது. :)))//

பாய் என்று அழைத்தால் சகோதரன் என்று பொருள் தான் வரும் என்று தெரியும், இதில் சிரிப்பு வரவோ, வெறுப்பு வரவோ ஒண்ணும் இல்லை, வேண்டுமென்றால் பழிக்குபழியாக அழைத்துக் கொள்ளூங்க.

கோவி.கண்ணன் said...

//அந்த நாலு கலர்களை அறிமுகம் செய்தவர் கிருஷ்ணன் என்கிற கண்ணன் தானே..?!
பிறகு ஏன் நீங்கள் இன்னமும் கண்ணன் என்ற பெயருலேயே இருக்கிறீர்கள் ???
பெயரை துறந்தால் " அந்த " பட்ட பெயரும் இருக்காதல்லவா..!!!!//

அடேங்கப்பா மஹா கண்டுபிடிப்பு, தாவூத், இப்ராஹிம் என்று பெயர் வைத்து உள்ளவர்களிடம் உங்கள் பேரைக் காட்டாலே மும்பை தொடர் குண்டு வெடிப்பு தான் நினைவுக்கு வருது மாற்றிக் கொள்ளுங்கள் பாய் என்று யாரிடமாவது சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டதுண்டா ?

கண்ணன், கருணன் என்பவை அழகிய தமிழ் பெயர்களே அதன் வடமொழி திரிபே க்ருஷ்ண > கிருஷ்ணா > கிருஷ்ணன் என்பது.

திருவாளர் உண்மை"கள்" (அது அவரது உண்மையான பெயர் கிடையாது) அவர் தலித் முஸ்லிம்களை சூத்திர முஸ்லிம்கள் என்று சொல்லிப்பார்த்துவிட்டு யாராவது செருப்படிக் கொடுத்தால் என்னிடம் சொல்ல வேண்டாம் என்று சொல்லச் சொல்லுங்க, அப்பறம் தலித் முஸ்லிம்கள் என்ற ஒரு பிரிவே இந்தியாவில் கிடையாது என்று கூறித் திரிய வேண்டாம்

Nasar said...

கண்ணன் பாய் ,
// கண்ணன், கருணன் என்பவை அழகிய தமிழ் பெயர்களே அதன் வடமொழி திரிபே க்ருஷ்ண > கிருஷ்ணா > கிருஷ்ணன் என்பது. //

" அந்த " பட்டப் பெயரும் வடமொழி தானே,உண்மை அப்படி இருக்க தங்களை " அப்படி " விளித்தால்
கோவம் வருதே ஏன் ?? [சத்தியமாக அப்படி நான் விளிக்கமாட்டேன் ]
சத்திரிய,தலித் முஸ்லிம் என்று யாரையும் விளிப்பதில்லை, நானும் நாயக்கர் குடும்பத்திலிருந்து வந்தவன் தான் மற்றும் என் பூர்விகத்தை அறிந்தவர்களும் அப்படி விளிப்பதில்லை ..
கற்பனையாக கூறுவது படித்தவர்களுக்கு அழகல்ல .

Nasar said...

கண்ணன் பாய் ,
// கண்ணன், கருணன் என்பவை அழகிய தமிழ் பெயர்களே அதன் வடமொழி திரிபே க்ருஷ்ண > கிருஷ்ணா > கிருஷ்ணன் என்பது. //

" அந்த " பட்டப் பெயரும் வடமொழி தானே,உண்மை அப்படி இருக்க தங்களை " அப்படி " விளித்தால்
கோவம் வருதே ஏன் ?? [சத்தியமாக அப்படி நான் விளிக்கமாட்டேன் ]
சத்திரிய,தலித் முஸ்லிம் என்று யாரையும் விளிப்பதில்லை, நானும் நாயக்கர் குடும்பத்திலிருந்து வந்தவன் தான் மற்றும் என் பூர்விகத்தை அறிந்தவர்களும் அப்படி விளிப்பதில்லை ..
கற்பனையாக கூறுவது படித்தவர்களுக்கு அழகல்ல .

Unknown said...

Mr Kovi Kanna,

///எந்த முகாந்திரமும் இல்லாமல் சும்மா இருப்பவர்களை பிடித்து செல்வார்களா ? குறைந்த பட்சம் சேர்க்கை, சேராத இடம் சேர்ந்தால் இதெல்லாம் எதிர்பார்க்கமலேயே கிடைக்கும்///

சும்மா இருப்பவர்களை பிடிப்பதும், அதுவும் முஸ்லிம் என்றால் 15 வருடம் உள்ளே வைத்துவிட்டு, நீ குற்றமற்றவன் என்று சொல்லி, வெளியில் துரத்துவதை சேராத இடம் சேர்ந்தால் இதெல்லாம் எதிர்பார்க்காமலேயே கிடைக்கும் என்று கொஞ்சமும் சஞ்சலமும் இல்லாமல்! இதை யாரிடம் போய் சொல்வது?

உங்களுக்குப் பிறந்த மகனை இப்படி 15 வருடம் உள்ளே தள்ளி பின் திரும்பியபின், சேராத இடம் சேர்ந்ததால் எதிர்பார்க்காமலே கிடைத்தது என்று நாம் முணுமுணுத்தால், உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

நளினி இருப்பதைப்போல், உங்கள் மகளும் அப்படி சிறையில் இருந்தால், நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா?

கீபோட் கையில் கிடைத்தால், எதை வேண்டுமானாலும் தட்டலாமா?

///தமிழர்கள் இந்து இல்லைன்னு நான் ஒப்புக் கொள்கிறேன், ஆனா தமிழை தாய்மொழியாக கொண்ட இஸ்லாமியர்கள் தமிழர்கள் இல்லைனு ஒரு கேணப் பய எழுதி இருந்தால் அதை எடுத்துப் போடுங்க,///

தமிழை ஒருவர் தாய்மொழியாகக் கொண்டதனால், அவர் தமிழர் ஆகக் கருதப்படமாட்டார்.

தமிழக முஸ்லிம்கள் அவர்களை, இஸ்லாமியத் தமிழர்கள் என்று அழைத்துக் கொள்வார்கள்.

வேறு இடங்களில் வாழும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள், தமிழர்கள் என்ற அடைமொழியில் அழைக்கப் படுவதில்லை. விரும்புவதுமில்லை.

Unknown said...

///இனி சூனா பானாவை 'உண்மையான முஸ்லீம்' என்ற அடிமொழியுடன் தான் அழைக்க வேண்டும். அப்படி அழைக்க தவறுபவர்களுக்கு சூனா பானா எழுதிய இறுதி ஐந்து பதிவுகளை கட்டி வைத்து வாசிக்க கட்டாயபடுத்தபடுவார்கள்///

ஹலோ கந்தசாமி கந்து,

அதென்ன கந்து?

நீங்கள் சந்து பொந்துகளில் நின்றுகொண்டு, அப்பாவிகளைக் கொல்வதற்கு கண்ணிவெடிகளைப் புதைத்ததினால், உங்களின் தமிழ்ப் பயங்கரவாத மேலிடம், உங்களை கந்து என பெயர் சூட்டி மாவட்டப் பொருளாளராக நியமித்தார்களோ?

Nasar said...

கண்ணன் பாய் சொன்னது..
*எந்த முகாந்திரமும் இல்லாமல் சும்மா இருப்பவர்களை பிடித்து செல்வார்களா ? குறைந்த பட்சம் சேர்க்கை, சேராத இடம் சேர்ந்தால் இதெல்லாம் எதிர்பார்க்கமலேயே கிடைக்கும், வேறென்ன செய்யமுடியும் நாமும் வருந்துவோம்.*
ஜனாப் கண்ணன் பாய், அப்படியே இன்னைக்கு வந்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையும் கீழே உள்ள
லிங்கில் சென்று பார்க்கவும்...[ஜனாப் என்றல் " திரு ' என்கிற அர்த்தம்,இதுக்கெல்லாம் கண்ணன் பாய் கோவிசுக்கமாட்டார் என்றே நம்புகிறேன்]
Don’t give terror tag to innocent minority people: Supreme Court
http://www.thehindu.com/news/national/dont-give-terror-tag-to-innocent-minority-people-supreme-court/article3939481.ece?homepage=true

suvanappiriyan said...

சகோ நாசர்!

//சத்திரிய,தலித் முஸ்லிம் என்று யாரையும் விளிப்பதில்லை, நானும் நாயக்கர் குடும்பத்திலிருந்து வந்தவன் தான் மற்றும் என் பூர்விகத்தை அறிந்தவர்களும் அப்படி விளிப்பதில்லை ..
கற்பனையாக கூறுவது படித்தவர்களுக்கு அழகல்ல .//

இதற்கு கோவி கண்ணன் என்ன பதில் அளிக்கிறார் என்று பார்ப்போம்.

எனது மூதாதையர்களையும் தோண்டி துருவி பார்த்தால் செட்டியாராகவோ மூப்பனாராகவோ இருக்கலாம். ஏனெனில் எங்கள் ஊரைச் சுற்றி இவர்கள்தான் அதிகம் உள்ளனர். ஒரு தலைமுறை போனவுடன் நாங்கள் எந்த சாதியிலிருந்து வந்தோம் என்பதே மறக்கடிக்கப்பட்டு விடுகிறது. அது தான் இஸ்லாம்.

suvanappiriyan said...

சகோ யூசுஃப் இஸ்மத்!

//நீங்கள் சந்து பொந்துகளில் நின்றுகொண்டு, அப்பாவிகளைக் கொல்வதற்கு கண்ணிவெடிகளைப் புதைத்ததினால், உங்களின் தமிழ்ப் பயங்கரவாத மேலிடம், உங்களை கந்து என பெயர் சூட்டி மாவட்டப் பொருளாளராக நியமித்தார்களோ?//

பித்து தலைக்கேறினால் கந்து சந்தில் சிந்து பாடவே செய்யும். :-)

Anonymous said...

Nasar said...

// பித்து தலைக்கேறினால் கந்து சந்தில் சிந்து பாடவே செய்யும்.//

சூப்பரோ......... சூப்பர்
இந்நேரம் கந்தல்சாமி "கடா மார்க் " அடிச்சிட்டு மன்னிக்கவும் COCCONUT ARRACK அடிச்சுட்டு
மப்பூ தலைக்கேறி, சந்துல பிளாட் ஆகி, ஏதாவது ஒரு பொந்துல ??........சீய்

@ கந்தல்சாமி சொன்னது...
// இனி சூனா பானாவை 'உண்மையான முஸ்லீம்' என்ற அடிமொழியுடன் தான் அழைக்க வேண்டும் //

அதென்ன // அடிமொழியுடன் // இன்னும் பழைய நினைப்புலேயே இருக்கீகளா..??

கோவி.கண்ணன் said...

//சகோ நாசர்!

//சத்திரிய,தலித் முஸ்லிம் என்று யாரையும் விளிப்பதில்லை, நானும் நாயக்கர் குடும்பத்திலிருந்து வந்தவன் தான் மற்றும் என் பூர்விகத்தை அறிந்தவர்களும் அப்படி விளிப்பதில்லை ..
கற்பனையாக கூறுவது படித்தவர்களுக்கு அழகல்ல .//

இதற்கு கோவி கண்ணன் என்ன பதில் அளிக்கிறார் என்று பார்ப்போம்.////

இதில் சவால் விட்டு பதில் பெறத் தேவைக்கு எதுவும் இல்லஇ.

தலித் முஸ்லிம் பற்றிய் ஏற்கனவே பல பதிவுகளில் பல இடங்களில் விவாதம் செய்தாகிவிட்டது.

அண்ணன் சுபி சொல்கிறார் தமது முன்னோர்கள் செட்டியாரோ, மூப்பனாராகவோ இருந்திருக்கக் கூடுமாம், ஏனெனில் சுற்றி இருப்பவர்கள் அவர்களாக இருக்கிறார்கள்.

இவரது இஸ்லாமிய அடையாளம் என்பது தமிழகத்தில் உயர்சாதிப் பிரிவுக்குள் வரும் செட்டியாராகவோ, மூப்பனாராகவோ இருக்கக் கூடும் என்பதை இவர் ஒரு பெருமையாகவே நினைத்து சொல்லக் கூடும் என்றே நினைக்கிறேன்.

தமிழகத்தில் மதமாற்றங்களுக்கு இறை நம்பிக்கை அடிப்படையில் மாறுவதற்கான வாய்ப்புகள் அன்றும் இன்றும் என்றும் ஏற்பட்டது இல்லை. இறை நம்பிக்கை உடையவர்களுக்கு ம்தக் கொள்கைகள் பெரிது இல்லை, ஆனால் மதம் மாறுவதற்கான தேவை என்பது சமூகத்தால் ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்து துவங்குவதால் தாழ்த்தப்பட்டவர்களும் அவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்தவர்களும் குறிப்பாக வன்னியர் நாடார் போன்றோர் மதம் மாறினார்கள், அவர்கள் அதே பிரிவாக கிறித்துவத்திற்குள் தொடர்வது இன்றும் நடைமுறையாகவும் உள்ளது, தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் உருவானதும் இதே முறையில் தான், நண்பர் அப்துல்லா தம் முன்னோர்கள் ஏன் மதம் மாறினார்கள் என்பதற்கு ஆங்கிலேய ஆட்சியின் போது குற்றப்பரம்பரை வழக்கில் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டதே காரணம் முன்னோர்கள் தேவர் சாதியை சார்ந்தவர்கள் என்றும் கூறி இருந்தார்.

சுவனப்பிரியன் குறிப்பிட்டுள்ளது செட்டியார் சமூகமோ பார்பன சமூகமோ மதம் மாற்றிக் கொள்வது என்பதற்கான தேவைகள் மிகக் குறைவே, அவர்கள் சமூகத்தில் நல்ல நிலையிலும் சமூகத்தை கட்டுப்படுத்துபவர்களாகவும் இருந்த நிலையில் அவர்கள் மதமாறினார்கள் என்று சொல்ல எந்த முகாந்திரமும் இல்லை.

பார்பனர்களில் மதமாற்றங்கள் சைவ - வைணவ மதங்கள் ஆதிக்கம் செலுத்திய போது ஏற்பட்டன, தற்போதும்
பார்பனர்களில் கூட ஒருசிலர் பிற மதங்களுக்கு மாறுகிறார்கள், அதற்கான தேவையும் நோக்கமும் வேறாக இருக்கக் கூடும்.

****

நான் கேட்டதும், தலித் முஸ்லிம் என்ற ஒரு பிரிவு இல்லாதது போல் அல்லது அப்படி ஒன்று இருப்பதே தமக்கு தெரியாதது போல் நடிக்கிறீர்கள் என்று நான் புரிந்து கொள்ளலாமா ?

****

தௌகீது பிராம­யத்தை இஸ்லாத்திற்குள் கட்டமைக்கும் வகாபிகள் தர்கா கலாச்சாரத்தை பேணும் முஸ்லிம்களை மூடநம்பிக்கையாளர்களாக, இழிந்தவர்களாக அணுகும் போக்கு தீவிரமாக தலைதூக்கியுள்ளது. இக்கருத்தியல் வகாபிகளின் நவீன தீண்டாமை பார்வையாகும்.

இச்சூழலில் இஜாஸ்அலி என்ற சமூக அரசியலாளர் 1994-ல் பாட்னாவில் தலித் முஸ்லிம்கள் மற்றும் அகில இந்திய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் மோர்ச்சா என்றொரு அமைப்பை உருவாக்கி உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், இராஜஸ்தான், டெல்லி, மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான அடிப்படை உரிமைகளுக்காக இயக்கங்களை நடத்தியுள்ளார். தமிழக அளவிலும் முஸ்லிம்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டு அரசியலில் தலித் முஸ்லிம் குறித்த கருத்தாக்கம் விவாதிக்கப்பட்டு வருகிறது என்பதே மற்றுமொரு உண்மையாகும்.

http://www.dalitmuslim.blogspot.sg/search/label/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D

கோவி.கண்ணன் said...

//உங்களுக்குப் பிறந்த மகனை இப்படி 15 வருடம் உள்ளே தள்ளி பின் திரும்பியபின், சேராத இடம் சேர்ந்ததால் எதிர்பார்க்காமலே கிடைத்தது என்று நாம் முணுமுணுத்தால், உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?
//

இது தான் தனிமனித தாக்குதல் இங்கிதம் தெரியாமல் குடும்ப உறுப்பினர்களைப் பற்றி கேள்வி எழுப்புவது.

யாராக இருந்தாலும் எந்த சூழலையும் எதிர் நோக்கத் தான் வேண்டும்.

****

அப்பறம் உங்க பொண்டாட்டி வேற ஒருத்தனுடன் ஓடிவிட்டால் நீங்க என்ன செய்விங்கன்னு உங்களிடம் ஒருவர் கேட்டால் அதை அறிவார்ந்த கேள்வி, பொருமையாக பதில் சொல்ல முடியும் என்று நம்புகிறீர்களா ?

முட்டாள் தனமாக குடும்ப உறுப்பினர்கள் பற்றி கேள்வி எழுப்பும் முன் இதையெல்லாம் நினைத்துப் பார்க்கவும்

k.rahman said...

//இந்தியாவை விட பாகிஸ்தான் மோசம்தான். ஒத்துக்கறேன். அதை ஏன் முஸ்லிம் பெயரில் ஒளிந்து கொண்டு சொல்லணும். :-) குடுமி அழகா தெரியு//

நீங்கள் சொல்வதை கிளிபிள்ளை போல் 'ஆமாம் சாமி' சொல்ல வில்லை என்றால் போலியா? நான் போலியா நிஜமா என்று உங்களிடம் கேட்டேனா? உண்மைய சொன்னா உங்களுக்கு ஏன் உறைக்குது?

Unknown said...

Mr Kovi Kannan,

///அப்பறம் உங்க பொண்டாட்டி வேற ஒருத்தனுடன் ஓடிவிட்டால் நீங்க என்ன செய்விங்கன்னு உங்களிடம் ஒருவர் கேட்டால் அதை அறிவார்ந்த கேள்வி, பொருமையாக பதில் சொல்ல முடியும் என்று நம்புகிறீர்களா ? முட்டாள் தனமாக குடும்ப உறுப்பினர்கள் பற்றி கேள்வி எழுப்பும் முன் இதையெல்லாம் நினைத்துப் பார்க்கவும்///


இங்கு தங்களிடம் கேட்கப்பட்டது, அப்பாவிகள் எதுவித விசாரணையுமின்றி 15 வருடங்களாக சிறையில் வாடும் அவலம் பற்றி!

அவர்கள் படும் அவலத்தை துச்சமென மதிக்கும் தாங்கள், தங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அப்படிப்பட்ட தண்டனைகளை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

ஆக, பிற மனிதர்களின் உணர்வுகள், படும் கஷ்ட நஷ்டங்கள், அவலங்களை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் தங்களுக்கு இல்லை என்பதைக் காட்டுகிறது.

கோவி.கண்ணன் said...

//அவர்கள் படும் அவலத்தை துச்சமென மதிக்கும் தாங்கள், தங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அப்படிப்பட்ட தண்டனைகளை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. //

குடும்ப உறுப்பினர்கள் பற்றி கேள்வி எழுப்பினால் அப்படித்தான் பதில் வரும், நீங்களெல்லாம் ஈழத்தமிழர்களுக்கு கண்ணீர் வடித்துவிட்டு இராஜபக்சே ஆட்சியில் தான் அவங்க சிறப்பாக இருப்பாங்கன்னு கருத்து சொன்னப்பவும் நாங்களெல்லாம் உங்க குடும்ப உறுப்பினர் பற்றி நினைச்சு பார்க்கவில்லை.

உனக்கு விவகரத்து ஆகிவிட்டால்
உன் பொண்டாட்டி ஓடிப் போய்விட்டால்
உங்க அண்ணன்காரன் குண்டுவெடிப்பில் செத்துவிட்டால்
.......

இப்படின்னு குடும்ப உறுப்பினர்களை இழுத்து வந்து கும்மி அடிக்கும் முன் நமக்கும் பொண்டாட்டி, புள்ளைக் குட்டிகள் இருக்கு என்பதை நினைத்துப் பார்க்கவும்.

கோவை குண்டுவெடிப்பில் கொலையானவன் போய் சேர்ந்துவிட்டான், ஆனா அவர்களுடைய குடும்பம் ? பற்றி என்றாவது நினைத்து பார்த்ததுண்டா ? ஆனால் அதையெல்லாம் விட்டு 'உனக்கு கோவை குண்டுவெடிப்பு எதனால் நிகழ்த்தப்பட்டது தெரியுமா ? நேர்மை இருந்தால் விவாதிக்க வருகிறாயா ? என்ற கேள்விகள் என்னை நோக்கி எழுப்பப்பட்டபோது கேள்வி எழுப்பியவரின் குடும்ப உறுப்பினர்கள் குறித்து நானும் வினா எழுப்பவில்லை.

இங்கிதங்களைக் கற்றுக் கொண்டு பிறகு எழுதவாருங்கள்

Nasar said...

ஜனாப்.கோவியார் பாய் அவர்களே....
// இவரது இஸ்லாமிய அடையாளம் என்பது தமிழகத்தில் உயர்சாதிப் பிரிவுக்குள் வரும் செட்டியாராகவோ, மூப்பனாராகவோ இருக்கக் கூடும் என்பதை இவர் ஒரு பெருமையாகவே நினைத்து சொல்லக் கூடும் என்றே நினைக்கிறேன். //
உயர்ந்த ஜாதியிலிருந்து மதம் மாறியதால் ஏதாவது முன்னுரிமைகள் கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்கமாட்டார்கள் மேலும் இது ஒன்றும்
காங்கிரஸ்,கழக கட்சிகள் அல்ல.
// தமிழகத்தில் மதமாற்றங்களுக்கு இறை நம்பிக்கை அடிப்படையில் மாறுவதற்கான வாய்ப்புகள் அன்றும் இன்றும் என்றும் ஏற்பட்டது இல்லை. இறை நம்பிக்கை உடையவர்களுக்கு ம்தக் கொள்கைகள் பெரிது இல்லை, ஆனால் மதம் மாறுவதற்கான தேவை என்பது சமூகத்தால் ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்து துவங்குவதால் தாழ்த்தப்பட்டவர்களும் அவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்தவர்களும் குறிப்பாக வன்னியர் நாடார் போன்றோர் மதம் மாறினார்கள்,//

நாட்டு நடப்பு அப்டேட்ஸ் தங்களுக்கு சரியாக தெரியவில்லை என்றே நினைக்கிறேன்..இங்கே வரும் சில முசல்மான்கள் அப்பப்ப கொடுக்கும் மதம் மாறியவர்களின் அப்டேட்ஸ்களையாவது பார்த்து இருக்கிறீர்கள ..!!
// நான் கேட்டதும், தலித் முஸ்லிம் என்ற ஒரு பிரிவு இல்லாதது போல் அல்லது அப்படி ஒன்று இருப்பதே தமக்கு தெரியாதது போல் நடிக்கிறீர்கள் என்று நான் புரிந்து கொள்ளலாமா ? //

நான் அறிந்த வரை,இல்லாத ஒன்றை , இருக்குது என்று எப்படீங்க பதில் சொல்லமுடியும் ...சரி வாதத்துக்கு வைத்துக்கொள்வோம் இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் தன மன இச்சைக்காகவோ அல்லது ஆதாயம் அடைவதட்காகவோ செய்தால் இஸ்லாத்தை பழிக்கமுடியாது ஏனெனில்
இஸ்லாத்தில் அது போன்ற வழிகாட்டுதல் இல்லவே இல்லை என்று தங்களுக்கு நன்றாகவே தெரியும் அதாவது பாமர முஸ்லிம்களை விட ...
// தௌகீது பிராம­யத்தை இஸ்லாத்திற்குள் கட்டமைக்கும் வகாபிகள் தர்கா கலாச்சாரத்தை பேணும் முஸ்லிம்களை மூடநம்பிக்கையாளர்களாக, இழிந்தவர்களாக அணுகும் போக்கு தீவிரமாக தலைதூக்கியுள்ளது. இக்கருத்தியல் வகாபிகளின் நவீன தீண்டாமை பார்வையாகும். //
ஆம் முற்றிலும் உண்மைதான் ....இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை,
இறைவனுக்கு இணை கற்பிக்கும் ஷிர்க் ஆன செயல்களுக்கு துணை போக சொல்கிறீர்கள ..??? அதாவது உங்க பாழையில் சொல்லவேண்டுமென்றால்
ஈரோட்டுக்காரர் செய்ததைத்தான் நீங்கள் கூறிப்பிடும் வஹாபிகள் செய்கிறார்கள் மற்றும் குரான் ஹதிசுக்கு மாற்றமாக புதிதாக ஏதும் வஹாபிகள் சொல்லவில்லையே...

//இச்சூழலில் இஜாஸ்அலி என்ற சமூக அரசியலாளர் 1994-ல் பாட்னாவில் //
இதற்குரிய பதிலும் மேலே சொல்லிவிட்டேன் ...

காபா மற்றும் மதினா எந்த தேசத்திலாவது இருந்துவிட்டு போகட்டுமே ,முஸ்லிம்களுக்கு தேவை 'கிப்லா' என்கிற திசை தொழகைக்கு வேண்டுமென்பதால் பெரும்பாலான இறைத்துதுவர்கள், கடைசி தூதுவர் முஹம்மத் [ஸல்] அவர்களும் அரேபியாவில் தோன்றியதாலும், காபா மற்றும் மதினா அங்கே இருப்பதாலும் அரேபியாவை முன்னோக்குகிறோம் இதுவே அமெரிக்காவில்,ஜப்பானில் இருந்தாலும் அப்படித்தான் ...
வாடிகன் போல முஸ்லிம்களுக்கு சவுதி ஹெட் கோர்ட்டர் அல்ல மேலும்
சகோ சுவன், PJ,சவுதி அரசரோ நமக்கு வழிக்காட்டுபவருமல்ல ......
நமக்கு தலைவர் நபி முஹம்மது [ஸல்] அவ்வளவே....
இனியும் தாங்கள், சுவன், சவுதி சவுதி என்று எதுக்கெடுத்தாலும் சொல்லமாட்டீர்கள் என்று நம்புகிறேன்..
நல்லவைகள் எங்கு நடந்தாலும் எடுத்து சொல்லலாமே EVEN உகண்டாவில்
இருந்தாலும்,இஸ்ரேலில் இருந்தாலும் ...அதற்காக சுவன் இப்படி சொல்வதில்லையே என்று ஆதாங்கப் படவேண்டாம்...

Unknown said...

Mr Kovi Kannan,

15 வருடகாலம் உள்ளே இருந்துவிட்டு, பின் எதுவித கொடுப்பனவுகளும் இல்லாது குற்றமற்றவன் என்று தீர்ப்புக் கூறினால், அந்த 15 வருட காலமும் அவனின் பிள்ளைகள், மனைவி, குடும்பம் என்னவானாலும் பரவாயில்லை என்ற குறுகிய எண்ணத்தோடு, சேராத இடம் சேர்ந்தால் இதெல்லாம் எதிர்பார்க்காமலேயே கிடைக்கும் என்று கொஞ்சமும் மனவழுத்தம் இல்லாது சொல்லுவதற்கு உங்களின் மனம் எப்படி இடம் தருகிறது என்பதுதான் இங்கு கேள்வி.

உங்கள் மகனை, மகளை இழுத்துக் காட்டியது ஏனெனில், பாதிக்கப்பட்டவனின் மனநிலையில் இருந்து சிந்தித்து, தாங்கள் சொன்ன சேராத இடத்தில் சேர்ந்தால் என்ற கூற்றையும் ஒப்பிட்டு பார்ப்பதற்குத்தான்!

இப்படிக் கேட்டதற்காக முட்டாள், உனது பெண்டாட்டி இன்னொருத்தன் ஒருவனுடன் ஓடினால், அண்ணன்காரன் குண்டு வெடிப்பில் செத்தால் போன்ற வசை மொழிகளுடன் இங்கிதமாக ஓடி விளையாடி, திருவாளர் கோவிக்கண்ணன் என்பவர் எதுவித குற்றவுணர்வும் இல்லாமல், நான் இங்கிதம் பயில வேண்டும் என சொன்னதைப் பார்த்து வியக்கிறேன்.