Followers

Saturday, January 05, 2013

சந்தீப் தேசாய் + நூருல் இஸ்லாம் - வெற்றிக் கூட்டணி!


எதற்கெடுத்தாலும் அரசையே குற்றம் சாட்டிக் கொண்டிருக்காமல் தனி மனிதர்களாக நின்று இன்று பல ஏழை குழந்தைகளின் கல்விக் கனவை நனவாக்கியிருக்கிறார்கள் புரபசர் சந்தீப் தேசாயும் அவரது நண்பர் நூருல் இஸ்லாமும். மும்பையில் குடிசை பகுதிகளில் உள்ள ஏழை குழந்தைகள் இன்று கான்வென்டில் இவர்கள் தயவால் படிக்கின்றனர். இதற்கான பொருளாதாரத்தை தினமும் ரயிலில் உண்டியல் குலுக்கி சேர்த்து வருகிறார் தேசாய். ஒரு பொறியியல் வல்லுனரான இவரும் இவரது குழுமமும் கல்விக்காக பொதுவில் பிச்சை எடுப்பதை கேவலமாக நினைப்பதில்லை.


'கற்கை நன்றே! கற்கை நன்றே! பிச்சை புகினும் கற்கை நன்றே'

என்ற பழமொழிக்கு உயிர் கொடுத்துள்ளார்கள் இந்த டிரஸ்டின் உறுப்பினர்கள். வருடத்துக்கு ஒரு பள்ளி வீதம் குடிசை ஏரியாக்களில் திறப்பது என்ற குறிக்கோளுடன் செயல்படுகின்றனர்.

'ஒவ்வொரு கிராமங்களிலும் 3500 லிருந்து 4000 மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் குடிசை பகுதிகளில் கல்விக் கூட வசதி இல்லாததால் பல குழந்தைகள் கல்வியறிவே இல்லாமல் வளர்க்கப்படுகின்றனர். அரசு இதைப் பற்றி எல்லாம் கவலைபட்டதாகவே தெரியவில்லை.இருக்கும் ஒன்றிரண்டு கல்விக் கூடங்களோ அதிக கட்டணம் வசூலிக்கின்றன. இங்குள்ள கூலி தொழிலாளிகளால் எவ்வாறு இந்த கல்விக் கட்டணத்தைக் கட்ட முடியும்?'

'2005 ல் ஸ்லோகா டிரஸ்ட் என்ற ஒன்றை ஆரம்பித்து மும்பை வடக்கு பகுதியில் ஆரம்ப பள்ளியை துவக்கினோம். முதன் முதலாக 285 குழந்தைகளை வைத்து இந்த குடிசைப் பகுதியில் துவக்கப் பாடங்களைக் கொடுத்தோம். எங்களது பணி தற்போது ராஜஸ்தானுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது கல்விக் கூடத்தை அடுத்த மாதம் திறக்க உள்ளோம்.

ரேணுகா மேத்தா: ரயில்வே பயணி கூறுகிறார்

'புரபசரை தினமும் ரயிலில் பார்ப்பேன். அனைவரிடமும் எந்த சங்கோஜமும் படாமல் உண்டியல் குலுக்கி பணம் வசூலிப்பார். பல ஏழைக் குழந்தைகளின் வாழ்வு சிறப்படைய அல்லும் பகலும் உழைக்கும் இவர்களுக்கு நம்மால் ஆன உதவிகளை கண்டிப்பாக செய்ய வேண்டும்'

திரஜ் டோங்ரே ஆட்டோ டிரைவர் கூறுகிறார்.

'நான் கனவிலும் நினைக்கவில்லை. எனது பிள்ளைகளும் ஆங்கில கல்விக் கூடத்தில் படிக்கும் என்று. எனது குழந்தைகளின் எதிர்காலத்தை வளமுள்ளதாக்கும் இவர்களை என்ன பாராட்டினாலும் தகும்'

தற்போது இந்த டிரஸ்ட் மூலமாக 500க்கும் மேற்பட்ட ஏழை குழந்தைகள் படித்து வருகின்றனர். செல்வந்தர்களும் தன்னார்வத் தொண்டர்களும் இவர்களின் முயற்சிக்கு உறுதுணையாக இருக்கின்றனர். இவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு நாமும் நமது கிராமங்களில் இது போன்ற கல்விச் சாலைகளை அதிகமதிகம் உருவாக்கி ஏழை மக்களுக்கு சிறந்த கல்வி கிடைக்க முயற்சிப்போமாக!

http://www.rediff.com/news/slide-show/slide-show-1-the-unique-prof-who-begs-so-that-he-can-open-a-school-for-poor-kids/20101221.htm#1

http://www.ndtv.com/article/cities/why-this-professor-begs-on-mumbai-trains-305790

--------------------------------------------

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்கள் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மக்களுக்குப் போதனை செய்பவர்களாக இருந்தார்கள். ஒரு முறை ஒரு மனிதர் அவர்களை அணுகி, 'ஏன் நீங்கள் தினமும் போதனை செய்யக் கூடாது?' என்று கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்கள். 'நான் மக்களைச் சலிப்படையச் செய்வதை வெறுக்கின்றேன். இதுவே அப்படிச் செய்ய எனக்குத் தடையாகவுள்ளது. எங்களுக்குச் சலிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில் நபி அவர்கள் மிகக் கவனமாக உபதேசித்தது போன்றே நானும் நடந்து கொள்கின்றேன்' என்றார்கள். (ஆதாரம் : புகாரி)

கல்வித் திட்டமானது மாணவர்களை வெருண்டோடச் செய்யாமல் ஆர்வமுடன் கற்கும் வகையில் அமைக்க வேண்டும்.

'நிச்சயமாக அறிவைத் தேடிச் செல்பவனுக்கு, வானவர்கள் அவன் செய்யும் அவ்வேலையில் திருப்தியடைந்து தமது இறக்கைகளை விரிக்கின்றனர். அறிஞனுக்காக, நீரில் உள்ள மீன்கள் உட்பட, வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்தும் பாவ மன்னிப்புக் கோருகின்றன. ஓர் வணக்கவாளிக்கு முன்னால், ஓர் அறிஞனின் சிறப்பு, நட்சத்திரங்களுடன் ஒப்பிடும்போது சந்திரனுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும். மேலும், அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகளாவர். நபிமார்கள் தங்க நாணயத்தையோ அல்லது வெள்ளி நாணயத்தையோ வாரிசாக விட்டுச் செல்லவில்லை. அவர்கள் அறிவை மட்டுமே வாரிசாக விட்டுச் சென்றனர். அதனைப் பெற்றுக் கொண்டவர் பெரும் பேற்றைப் பெற்றுக் கொண்டவராவர்.' (அபூதாவுத், அஹ்மத்)

'ஒருவர் அறிவைத் தேடி ஒரு பாதையில் சென்றால், அல்லாஹ் அதனைக் கொண்டு அவருக்கு சுவனம் செல்லும் ஒரு பாதையை இலகுபடுத்திக் கொடுக்கின்றான்.' (முஸ்லிம்)

'இலகு படுத்துங்கள், கஷ்டப்படுத்தாதீர்கள். ஆசையூட்டுங்கள், வெறுப்படையச் செய்யாதீர்கள்' (புகாரி , முஸ்லிம்)

இங்கு கல்வி, அறிவு என்பது வெறும் மத்ரஸா கல்வி என்று பலர் விளங்கி வைத்துள்ளனர். நபி அவர்கள் வெறும் மார்க்க போதனைகளை மட்டும் தனது தோழர்களுக்கு உபதேசிக்கவில்லை. வியாபாரம் எப்படி செய்வது? மனைவி மக்களை எவ்வாறு நடத்துவது? மாற்று மதத்தவர்களோடு எவ்வாறு நடந்து கொள்வது? என்று ஒவ்வொன்றையும் அந்த தோழர்களுக்கு கற்று தந்தனர். சுதந்திர தாகத்தால் வெள்ளையன் கொடுத்த வேலையையும், படிப்பையும் துறந்தோம். அதன் பலனை இஸ்லாமிய சமூகம் இன்று வரை அனுபவித்து வருகிறது.

'அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என்று கேட்பீராக. அறிவுடையோர் தான் நல்லறிவு பெறுவார்கள்.
-குர்ஆன் 39:9

'உங்களில் நம்பிக்கைக் கொண்டோருக்கும் கல்வி வழங்கப்பட்டோருக்கும் இறைவன் பல தகுதிகளை உயர்த்துவான்'
-குர்ஆன் 58:11

மனிதர்களில் ஏற்றத் தாழ்வு கிடையாது அனைவரும் சமம் என்று சொல்லும் குர்ஆன் கல்வி கற்றவர்களை மட்டும் அவர்களின் தகுதியை உயர்த்துவதாக சொல்வதில் இருந்து கல்வியின் முக்கியத்துவத்தை உணரலாம்.

கெடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு
மாடல்ல மற்றை யவை
-குறள் 40:400

ஒருவனுக்கு எவ்வகையிலும் அழிவே இல்லாத சிறந்த செல்வமானது கல்வியே ஆகும். அது தவிர்ந்த பொன்னும், மணியும் மற்ற அலங்காரப் பொருட்களும் உண்மையான செல்வங்கள் அல்ல என்கிறார் வள்ளுவர்.

சந்தீப் தேசாய், நூருல் இஸ்லாம் போன்று ஒவ்வொரு கிராமத்திலும் பல இளைஞர்கள், பல செல்வந்தர்கள் உருவாக வேண்டும். 60 ஆண்டு காலம் கல்வியை துறந்த மக்கள் அதை ஈடு செய்யும் முகமாக கல்விக்கு முக்கியத்துவத்தை கொடுத்து வருங்கால சந்ததிகளை அறிவுள்ள மக்களாக ஆக்க முயற்சிப்போமாக!


13 comments:

UNMAIKAL said...

முறைகேடான பாலியல் உறவு முஸ்லிம், ஹிந்து சமூகத்தில் மிகவும் குறைவு! –

ஆய்வில் தகவல்!


2 Jan 2013

நியூயார்க்:குடும்ப கட்டமைப்பை சீர்குலைப்பதில் முக்கிய பங்கினை வகிக்கும் திருமண உறவு வெளியேயான முறைகேடான பாலியல் உறவுகள் முஸ்லிம், ஹிந்து சமூகத்தில் மிகவும் குறைவு என்று அமெரிக்கன் சோசியலாஜிக்கல் ரிவியூ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

31 வளர்ச்சியடைந்த நாடுகளில் 15-59 வயது வரையிலான ஆறுலட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்ற ஆய்வில் பொதுவாகவே பாலியல் ஒழுக்கங்களை பேணுவதில் முஸ்லிம் நாடுகள் முன்னணியில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

அனைத்து மதங்களும் திருமண உறவிற்கு வெளியே உள்ள முறைகேடான பாலியல் உறவுகளை ஊக்கப்படுத்துவதில்லை.

ஆனால், அனைத்து மத நம்பிக்கையாளர்களும் ஒன்றுபோல் இல்லை என்று இந்த ஆய்விற்கு தலைமை தாங்கிய ஆமி ஆடம்ஸிக் சுட்டிக்காட்டுகிறார்.

முஸ்லிம் நாடுகளில் எய்ட்ஸ் நோய் மிகக் குறைவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

முஸ்லிம்கள் மற்றும் ஹிந்துக்களின் எண்ணிக்கை கூடுவதையொட்டி சமூகத்தில் திருமணத்திற்கு வெளியேயான முறைகேடான பாலியல் உறவுகளும் குறைந்து வருகின்றன.

திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவுகள் யூதர்களில் 94 சதவீதமாகும்.

கிறிஸ்தவர்களில் 79 சதவீதம் காணப்படுகிறது.

புத்தர்களில் 65 சதவீதம்.

ஹிந்துக்களில் 13 சதவீதம் காணப்படுகிறது.

திருமணத்திற்கு பிறகும் முறைகேடான பாலியல் உறவுகள் யூதர்களிடம் 4 சதவீதமும்,

கிறிஸ்தவர்களிடம் 3 சதவீதமும், ஹிந்து, பெளத்த, முஸ்லிம்களிடம் ஒரு சதவீதமாகவும் உள்ளது.

இந்த ஆய்வுக் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்காவின் கத்தோலிக் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த சோசியாலஜிஸ்ட் ரெவ.பால் சுல்லின்ஸ் கூறுகையில்,

“இந்த ஆய்வின் முடிவுகள் ஆச்சரியமானதல்ல.

ஏனெனில் இவை பாரம்பரிய இஸ்லாமிய நாடுகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

புர்கா(உடலை மறைக்கும் ஆடை) உண்மையிலேயே இவ்விஷயத்தில் நன்றாக வேலை செய்கிறது.

ஆண்களிலிருந்து முற்றிலும் வேறுபடுத்தி உடல் முழுவதும் மறைத்தால் பெண்களை அவர்களது திருமணம் முடியும் வரை முந்தைய முறைகேடான பாலியல் உறவுகளில் இருந்து பாதுகாக்க முடியும்” என கூறுகிறார்.


சூசி இஸ்மாயில், இவர் திருமணம் மற்றும் விவகாரத்துக்கான மனவளவாளர்(கவுன்சலர்) ஆவார்.

இவர் கூறுகையில், “திருமணத்திற்கு முந்தையை, பிந்தைய முறைகேடான பாலியல் உறவுகள் முஸ்லிம்களிடம் குறைவாக இருப்பதற்கு அவர்களது மார்க்க ரீதியான வேர் காரணமாகும்.

இஸ்லாம் விபச்சாரத்தை தடைச் செய்கிறது.

இளம் வயதில் இருந்தே முஸ்லிம்கள் பாலியல் ஒழுக்கம் குறித்து பயிற்றுவிக்கப்படுகின்றார்கள்.”


என தெரிவித்துள்ளார்.

SOURCE:http://www.thoothuonline.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE/

sulthan mydeen said...

மாஷா அல்லாஹ் :) படித்து விட்டேன் ...

Anonymous said...

அரோரா:‌அமெரிக்காவின் கொலராடோவில் உள்ள அரோராவில் 3பேரை பிணையக்கைதிகளாக வைத்திருந்த மர்ம நபர் அவர்களை சுட்டுகொன்றான்.அந்த மர்ம நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.இது குறித்து போலீசார் கூறியதாவது: அரோரா நகரில் ஒரு வீ‌ட்டில் புகுந்த மர்ம நபர் வீட்டில் இருந்த 3 பேரை பிணையக்கைதியாக வைத்திருந்தான் பின்னர் அவர்கள் மூன்று பேரையும் சுட்டுக்கொன்றான்.இந்நிலையில் போலீசார் வீட்டை சுற்றி வளைத்து மர்மநபரை சுட்டுக்கொன்றனர். கடந்த ஆண்டு ஜூலையில் இந்நகரில் உள்ள தியேட்டரில் 12 பேரை சுட்டுக்கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

dinamalar
06-01-2012

UNMAIKAL said...

குடியரசு தினத்தன்று தற்கொலை செய்துகொள்ள அனுமதி கோரி பிரணாபிடம் 165 பேர் மனு

டெல்லி: கடந்த 2 ஆண்டுகளாக தங்களுக்கு வர வேண்டிய ஓய்வூதியம் வராத முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 165 பேர் வரும் 26ம் தேதி தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்குமாறு ஜனாதிபதியிடம் மனு கொடுத்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள யவாத்மால் மாவட்டத்தைச் சேர்ந்த 165 முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக அரசிடம் இருந்து வர வேண்டிய ஓய்தியம் வரவில்லை.

இதனால் அவர்கள் பசியும், பட்டினியுமாக உள்ளனர்.

இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்ட அவர்கள் அனைவரும் சேர்ந்து ஜனாதிபதிக்கு ஒரு மனு எழுதி அதில் கையெழுத்துபோட்டு அனுப்பி வைத்துள்ளனர்.

அந்த மனுவில், வரும் 25ம் தேதிக்குள் தங்கள் குறைகள் தீர்க்கப்படவில்லை என்றால் வரும் 26ம் தேதி தாங்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்ள அனுமதி அளி்ககுமாறு குறிப்பிட்டுள்ளனர்.

ஓய்வூதியம் கிடைக்காதவர்கள் கடந்த ஆண்டு பேரணி நடத்தியும் பலனில்லை.

மேலும் இது குறித்து தாசில்தார் மற்றும் உயர் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து தான் பட்டினியாகக் கிடந்து இறப்பதைவிட தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/01/06/india-deprived-pension-165-people-seek-president-nod-to-end-167434.html

Anonymous said...

சலாம் சகோ சுவனப்பிரியன்,
மாஷா அல்லாஹ் அருமையான ஆக்கம்.அந்த இரண்டு சகோதரர்களின் உன்னத பனி பாராட்ட தக்கது.

உங்கள் சகோதரன் முஹம்மத் இக்பால்

UNMAIKAL said...

வக்ப் வாரிய கடைகளுக்கு ஒரு ரூபாய் வாடகை :

"RTI" தகவல்!


Sunday, 06 January 2013 10:28 MARUPPU மீடியா - மறுப்பு செய்திகள்


Jan6, டெல்லியின் முக்கிய பகுதிகளில் "வக்ப்" வாரியத்துக்கு சொந்தமான 86 வணிக நிறுவனங்கள் 1 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை வாடகைக்கு விடப்பட்டுள்ள அவலம், அஃப்ரோஸ் ஆலம் சாஹில் என்பவருக்கு "தகவல் அறியும் உரிமை" சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த குறைந்த வாடகையை கூட 40 ஆண்டுகளாக செலுத்தாத நிறுவனங்களும் இருக்கின்றன.

CWC "Central Wakf Council" கொடுத்துள்ள தகவலின்படி :

"மோரிகேட்" பகுதியில் "ஓம் பிரகாஷ்" என்பவர், தனது வணிக வளாகத்துக்கு கொடுக்கும் மாதவாடகை ரூ.12

அதையும் "ஓம் பிரகாஷ்" கடந்த 35 ஆண்டுகளாக கொடுப்பதில்லை, அந்தவகையில் ஜூலை 2009 வரை வாடகை பாக்கி ரூ 5,059

"பஹர்கஞ்" பகுதியில் பிளாட் எண் 3197ல் குடியிருக்கும் நரேந்திர சிங்கின் வாடகை பாக்கி ரூ. 4,908 (மாத வாடகை ரூ.12)

இதுபோன்ற 86 சொத்துக்களின் நிலவரம் குறித்த தகவல்களும் கிடைத்துள்ளது.

வாடகையை அதிகரிப்பது குறித்தோ - பாக்கியை வசூலிப்பதிலோ வக்ப் வாரியம் முனைப்பு காட்டவில்லை.

இதுகுறித்து வாரிய அதிகாரிகளிடம் கேட்டால், DRCA (Delhi Rent Control Act) சட்டப்படி மூன்றாண்டுகளுக்கொரு முறை 10% வாடகை உயர்வை அறிவிப்பதாக இருந்தால், 10 பைசா மட்டும் தான் கூடுதலாக வசூலிக்க முடியும் என தெரிவிக்கின்றனர்.


ஒரே ஆறுதல்:

தமிழகத்தைப்போல "வக்ப்" சொத்துக்களை முறைகேடாக விற்பனை செய்து "பட்டா பெயர் மாற்றம்" செய்துக்கொள்ளவில்லை.

அதுபோன்ற மோசடிகளுக்கு உடந்தையாக இருப்பதில் "தமிழக வக்ப் வாரிய அதிகாரிகள்" தான் பெயர் போனவர்கள்.
குறிப்பு : தமிழக வக்ப் வாரிய முறைடுகள் குறித்து "மறுப்பு" தளத்தில் விரைவில் வெளிவரவிருக்கிறது,இன்ஷா அல்லாஹ்.

SOURCE:http://www.maruppu.in/all-medias/43-maruppu-news/727--qrtiq-

UNMAIKAL said...

முஸ்லிம் தலைவர்களிடம் காட்டிய பிறகே விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிட வேண்டும் !

5 ஜனவரி, 2013

கேளிக்கை , பொழுதுபோக்கு , சுயசம்பாத்தியம் ஆகியவற்றை மைய்யமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களில் கோடிக்கணக்கான மக்கள் தங்களின் கொள்கை நெறியாக ஏற்றுச் செயல்படும் இஸ்லாத்தையும் , அதை வாழ்வியல் நெறியாகக் கொண்ட முஸ்லிம்களையும் தவறாகச் சித்தரிப்பது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது .

அந்த வகையில் அண்மையில் வெளியான " துப்பாக்கித் " திரைப்படம் தமிழக முஸ்லிம்களின் உணர்வுகளைக் காயப்படுத்தி கொந்தளிப்பான சூழலை உருவாக்கியது .

முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாகத் துப்பாக்கி படக்குழுவினர் மன்னிப்புக் கோரியதுடன் , ஆட்சேபனைக்குரிய காட்சிகளையும் நீக்கினர் .

" துப்பாக்கி " ஏற்படுத்திய காயத்தின் வலி தீரும் முன்னே மீண்டும் கமல்ஹாசன் "விஸ்வரூபம் " எடுத்திருக்கிறார் .

மென்மையான மத உணர்வுகளைக் காயப்படுத்தும் விதமாக இத்திரைப்படம் வெளிவரும் பட்சத்தில் அது அமைதிப் பூங்காவான தமிழகத்தின் நல்லிணக்கச் சூழலைச் சிதைத்து விடுமோ என நாங்கள் அஞ்சுகிறோம் .

மேலும் கமல்ஹாசனின் "விஸ்வரூபம் " திரைப்பட முன்னோட்டக் காட்சிகள் அடிமட்டத்திலிருக்கும் முஸ்லிம் சகோதரனுக்கும் கூட பெரும் ஐயத்தை ஏற்படுத்துகிறது .

இந்த அச்சத்தையும் ஐயத்தையும் போக்க ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம்களின் பிரதிநிதிகளான 24 முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்புகளின் தலைவர்களுக்குத் திரையிட்டுக் காட்டுவதற்கு கமல்ஹாசன் கடமைப்பட்டிருக்கிறார் .

அவரது முந்தைய சில படங்களிலும் முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிரான கருத்துகள் இடம் பெற்றிருப்பதால் எங்களது ஐயம் மேலும் வலுப்பெறுகின்றது .

மேலும் முஸ்லிம் சமூகம் பல்வேறு முறைகளில் திரு.கமல்ஹாசன் அவர்களிடம் தங்கள் ஐயத்தை எடுத்துச் சென்ற பின்பும் திரு. கமல்ஹாசன் அவர்கள் சமுதாயத்தின் அச்சத்தை போக்க எவ்விதத்திலும் முன்வரவில்லை .

முஸ்லிம்களைக் குறித்து படமே எடுக்கக் கூடாது என்பதல்ல எங்களின் நிலைப்பாடு .

முஸ்லிம்களின் வாழ்வியலைப் படமாக்குவதில் தவறில்லை .

இந்திய விடுதலைக்காக முஸ்லிம்கள் செய்த தியாகங்கள் , அவர்களின் கல்வி பொருளாதார நிலை எனப் பதிவிற்காக எவ்வளவோ விஷயங்கள் இருக்க , தொடர்ந்து அவர்கள் தேச துரோகிகளாகவும் , பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்படுவது வேதனைக்குரியது.


எதிர்வரும் காலங்களில் இது போன்ற தவறுகளைத் தமிழகத் திரையுலகினர் மேற்கொள்ளாதவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் .

கற்பனைச் செய்திகளுக்கு திரைத்துறையினர் பலியாகிவிடக்கூடாது .

அவர்களுக்கும் சமூகப் பொறுப்புணர்வுகள் இருக்கின்றன என்பதை நினைவுப்படுத்துகிறோம் .

நங்கள் எடுத்து வரும் இந்த முயற்சிகளுக்கு எந்த பலனும் கிடைக்காத பட்சத்தில் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் தங்கள் எதிர்ப்பு மற்றும் உணர்வுகளை ஜனநாயக ரீதியான போராட்டங்கள் மூலம் தெரிவிக்க வேண்டியது தவிர்க்கவியலாத ஒன்றாகி விடும் .

அத்தகைய சூழல் எழா வண்ணம் சமூகப் பொறுப்புடன் செயல்படவேண்டியது ஒவ்வொருவரின் மீதும் கடமையாகின்றது என்பதை இக்கூட்டமைப்பு தெரிவித்துக் கொள்கின்றது .

SOURCE:http://chennaipopularfront.blogspot.in/2013/01/blog-post_5.html

jaisankar jaganathan said...

//sulthan mydeen said...//

இவரைத்தவிர வந்த பின்னூட்டம் எல்லாம் பதிவு சம்பந்தப்பட்டதா?

சுவனப் பிரியன் said...

//இவரைத்தவிர வந்த பின்னூட்டம் எல்லாம் பதிவு சம்பந்தப்பட்டதா? //

நீங்கள் இதற்கு முன் கூட பலமுறை பின்னூட்டம் அளித்துள்ளீர்கள். அனைத்துமே பதிவு சம்பந்தப்பட்டது தானா?

உலகில் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது பின்னூட்டத்தில் தெரிவிப்பது படிப்பவர்களுக்கு பயனளிக்கும் தானே!

சுவனப் பிரியன் said...

சலாம்!

வருகை புரிந்து கருத்தைப் பதிந்த சகோதரர்கள் சுல்தான் மைதீன், உண்மைகள், முஹம்மது இக்பால், ஜெய்சங்கர். அனைவருக்கும் நன்றி!

Anonymous said...

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் போலீசாருக்கும், போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவின் தென்கிழக்கே அட்டிமோனான் பகுதியில் போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடும் கும்பல் நடமாட்டம் இருப்பதாக அறிந்த போலீசார் அங்கு சுற்றி வளைத்தனர். அப்போதுநடந்த துப்பாக்கிச்சண்டையில் 13 குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்கள், துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

-Dinamalar
06-01-2012

UNMAIKAL said...

மனிதர்கள் செத்தால் கவலையில்லை!

மிருகங்கள் வாழவேண்டும்!


Jan 07: செய்தி: சென்னை தாம்பரம் வழியாக சனிக்கிழமை நள்ளிரவு 4 லாரிகளில் எருமை மாடுகளை ஏற்றிச் சென்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த புளூகிராஸ் விரைந்து வந்த எருமை மாடுகளை ஏற்றிச் சென்ற லாரிகளை மடக்கி பிடித்து போலீசுக்கு தெரிவித்தனர்.

போலீசார் லாரியுடன் எருமை மாடுகளை மீட்டு டிரைவர்களிடம் விசாரணை நடத்தினர்.

ஆந்திர மாநிலம் கவரப்பேட்டையில் இருந்து ஓட்டன்சத்திரத்திற்கு இறைச்சிக்காக விற்பனை செய்ய மாடுகளை ஏற்றிச் சென்றதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து டிரைவர்கள் சரவணன், செல்வராஜ், சிவக்குமார், சிவராமன் ஆகியோரை கைது செய்தனர்.

மொத்தம் 113 எருமை மாடுகள் மீட்கப்பட்டது.

அவற்றை உளுந்தூர்பேட்டையில் உள்ள மாடுகள் பராமரிப்பு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்

சிந்திக்கவும்: "புளூகிராஸ்" பணக்கார கோட்டான்கள் நேர போக்குக்கு உண்டாக்கி வைத்திருக்கும் ஒரு அமைப்பு.

இலகுவாக நாங்களும் சேவைகள் செய்கிறோம் என்று காட்டி கொள்ள தொடங்கப்பட்ட அமைப்பு.

ஏழை, எளிய மக்கள் பசி, பட்டினி, ஜாதிகொடுமை, பாலியல் வன்கொடுமை, மதவாதம், அரசு பயங்கரவாதம், என்று பல்வேறு பிரச்சனைகளில் தினமும் கொல்லப்படுகின்றனர், பாதிக்கப்படுகின்றனர்.

இதை பற்றி என்றாவாது பேசி உண்டா இவர்கள்?


இது ஒரு போலித்தனமான மிருக அனுதாபம்.

இந்த, பணக்கார கோட்டான்கள் ஏசி கார்களில் வலம் வந்து வெளிநாட்டு மதுவகைகளை குடித்து பார்ட்டி, பப்பு, என்று மப்பேறி உயர்வகை உணவுகளை உண்டு கொளுத்தது திரியும் சோம்பேறி கூட்டம்.

காவேரி டெல்டா விவசாயிகள் வறுமையில் வாடுகிறார்கள்,

ஏழை, எளிய மக்களின் சிறந்த ஊட்ட சத்து உணவாக மாட்டுக்கறி விளங்குகிறது.

அதையும் அவர்களை திங்கவிடாமல் செய்வதில், இந்த பணக்கார, வக்கிரம் பிடித்த, ஏழை மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாத மேல்தட்டுகாரர்களுக்கு என்ன சந்தோசமோ புரியவில்லை.

புளூகிராஸ் போன்ற மனிதகுல விரோதிகளை நாட்டை விட்டே அடித்து துரத்த வேண்டும்.

அப்பொழுதுதான் மனித இனம் நிம்மதியாக வாழமுடியும்.

THANKS TO SOURCE:http://www.sinthikkavum.net

Anonymous said...

jaisankar jaganathan said...

////sulthan mydeen said...//

இவரைத்தவிர வந்த பின்னூட்டம் எல்லாம் பதிவு சம்பந்தப்பட்டதா?////

இவ்வளவு நாட்களாக உங்கள் பின்னூட்டதை படித்துக்கொண்டுத்தான் வருகிறேன். ஆனால் உங்களிடம் இருந்து இப்படி ஒரு கேள்வியா????