அமெரிக்க துப்பாக்கி கலாசாரம்! கமல் கவனிப்பாரா?
நேற்று வாஷிங்டனில் ஆயிரக்கணக்கான மக்கள் துப்பாக்கிகளின் உரிமங்களைக் கட்டுப் படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியுள்ளனர். தினமும் துப்பாக்கிகளால் பள்ளி சிறுவர்கள் துளைக்கப்படுவது அந்த நாட்டையே அச்சத்திற்குள்ளாக்கியிருக்கிறது. மித மிஞ்சிய சுதந்திரம் சமூகத்தை அமைதியாக வைக்காது என்பதற்கு இவை எல்லாம் சில உதாரணங்கள்.
உலகின் பல நாடுகளில் தீவிரவாதம் பரவ முதல் காரணியாக செயல்படுவது அமெரிக்காதான். பல நாடுகளின் தங்களின் படைத் தளங்களை நிறுவி அந்த நாட்டு உள் விவகாரங்களில் தலையிட்டு அந்த மக்களின் ரத்தத்தை உறிஞ்சி தனது மக்களை குஷி படுதத நினைத்தால் விளங்குமா? தவறான வழியில் வந்த பணம் அந்த மக்களின் வாழ்வில் நிம்மதியைக் கொடுக்காது பலரை மன நோயாளிகளாக மாற்றியிருக்கிறது. தாய் தந்தையர் சிறு வயதிலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விடுவதால் ஆதரவின்றி நிர்க்கதியாக நிற்கும் அந்த இளைஞன் சமூகத்தின் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் உள்ள கோபத்தை உயிரிகளை எடுப்பதன் மூலம் தீர்த்துக் கொள்கிறான்.
உலகில் தீவிரவாதத்தை அப்பட்டமாக தைரியத்தோடு செயல்படுத்தும் ஒரு நாடு அமெரிக்கா! ஆப்கன், ஈராக், லிபியா, ஏமன், ஆப்ரிக்க நாடுகள் என்று எங்கு பார்த்தாலும் தற்போது நடக்கும் அனைத்து குளறுபடிகளையும் ஆரம்பித்து வைத்தது அமெரிக்கா என்றால் மிகையாகாது. ஒழுங்காக ஆட்சி செய்து வந்த தாலிபான்களின் ஆட்சியை கவிழ்த்து அங்கு ஒரு பொம்மை அரசை நிறுவ வேண்டிய அவசியம் எங்கோ இருக்கும் அமெரிக்காவுக்கு ஏன்? சதாமை பொய் குற்றம் சுமத்தி கீழிறக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? எனவே கோபப்பட்டு அவன் ஆயுதத்தை தூக்குகிறான். அந்நிய படைகள் மீது குண்டுகளை வீசுகிறான். நம் நாட்டில் அந்நியர் ஆண்டபோது இதனை செய்தவர்களை நாம் தியாகி என்று போற்றவில்லையா?
தாலிபான்கள் செய்யும் அனைத்து செயல்களையும் நான் ஆதரிக்கவில்லை. அதே நேரம் அவர்கள் பெயரால் வெளி வரும் செய்திகள் யாவும் வெளியிடுவது அமெரிக்க படைகளே என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நம் நாட்டில் சமீப காலம் வரை நடக்கும் அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும் முஸ்லிம்களே காரணம் என்று பலரும் நம்பி வந்தோம். தற்போதுதான் இந்தியாவில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளுக்கு பின்னால் இந்துத்வாவினர் உள்ளது தெரிய வந்தது. இவ்வளவு சுதந்திரமாக செயல்படும் நமது நாட்டிலேயே எந்த அளவு உண்மைகள் மறைக்கப்பட்டன என்பது நமக்கு தெரியும். ஆப்கானின் முழு கட்டுப்பாடும் அமெரிக்கா வசம் இருக்கும் போது தாலிபான்களைப் பற்றி எப்படிப்பட்ட செய்திகளை வெளியிடுவார்கள் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். முல்லா உமரும் அமெரிக்கா சொல்லும் எந்த தகவலையும் நம்ப வேண்டாம். எல்லாம் அமெரிக்கர்களின் கட்டுக் கதை என்ற பெருநாள் செய்தியையும் நாம் முன்பு பார்த்தோம். ரசாயன ஆயுதங்கள் உள்ளது என்று பொய் கூறி சதாமை வேட்டையாடி அந்த நாட்டை சின்னா பின்னப் படுத்தியதும் அமெரிக்காதான். இனி டாலரில் பெட்ரோல் வியாபாரம் இல்லை. யூரோவுக்கு மாறப் போகிறேன் என்று சொன்ன காரணம் தானே இத்தனை பிரச்னைகளையும் கொண்டு வந்து விட்டது.
எனவே முஸ்லிம் ஆயுதம் தூக்குகிறான் என்று சொன்னால் எதற்காக அவன் தூக்க வேண்டும்? அதன் சூத்திதாரி யார்? என்று தேடி அந்த நாட்டின் உண்மை முகத்தையல்லவா கமல் தோலுரிக்க வேண்டும். மாற்றாக தனது படத்தில் அமெரிக்கர்களை நலன் விரும்பிகள் போலவும் ஆப்கானிய முஸ்லிம்கள் குர்ஆனோடு ஜிஹாதுக்கு கிளம்புவதாகவும் காட்டுவது நேர் எதிர் கருத்துக்கள அல்லவா? மனுஷ்ய புத்திரன் ஒரு பேட்டியில் அமெரிக்கா தனது ஆளுமைகளை நியாயப்படுத்த பல தயாரிப்பாளர்களுக்கு பண உதவி செய்வதாக சொல்லியிருந்தார். தனது ஹாலிவுட் படங்களுக்கு பணத்தை திரட்ட இது போன்ற யுக்திகளை கையாண்டால் பணம் கொட்டும் என்று நினைத்தாரோ என்னவோ!
நாங்கள் முன்பு விரும்பிய கமலாக திரும்ப வர வேண்டும். இந்த தீவிரவாதங்களுக்கெல்லாம் மூல காரணியான அமெரிக்க தீவிரவாதத்தையும் அதன் உண்மையான காரணங்களையும் விசுவரூபம் பார்ட் 2 வில் கொண்டு வர வேண்டும். இதன் மூலம் மட்டுமே இழந்த தனது பெயரை கமல் திரும்ப சம்பாதிக்க முடியும். மனித நேயத்தை கமல் உண்மையாகவே விரும்புபவராக இருந்தால் இதனை செய்து முடிக்கட்டும்.
மற்றபடி நாளை படத்தை பார்த்து நீதிபதிகள் திரையிட அனுமதி வழங்கி விட்டால் இதற்கு மேலும் இந்த பிரச்னையை வளர்க்காமல் அதன் போக்கில் விட்டு விடுவதே நல்லது. தியேட்டரில் சென்று பிரச்னை பண்ணுவது சில விஷமிகள் தங்களின் காரியத்தை சாதித்துக் கொள்ள சாதகமாக்கி விடும். பெண்கள் குழந்தைகளோடு தியேட்டருக்கு படம் பார்க்க பலரும் வருவர். நாம் நமது எதிர்ப்பை காட்டி விட்டோம். பலரும் உண்மையை புரிந்து கொண்டனர். எனவே தீர்ப்பு கமலுக்கு சாதகமாக வந்தால் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் சட்டத்துக்கு கட்டுப்படுவதே நமது கடமை. அண்ணன் தம்பிகளாகவும் மாமன் மச்சான்களாகவும் சகோதர பாசத்தோடு பழகி வரும் பெரும்பாலான மாற்று மத சகோதரர்கள் நம் மீது வைத்திருக்கும் நல்லெண்ணம் பாழ்பட்டு விடக் கூடாது. முஸ்லிம்கள் தங்களின பொறுப்புணர்ந்து செயல்படுவார்களாக!
25 comments:
துப்பாக்கி கலாச்சாரம் பத்தி அமெரிக்கா கவலைப்படட்டும். முதல்ல வெடிகுண்டு கலாச்சாரம் பத்தி கவலைப்படுங்க சுவனம்
அஸ்ஸலாமு அலைக்கும். சகோ சுவனப்பிரியன்.
மிக நடு நிலையோடு ஆய்வு செய்து பதிவிட்டிருக்கிறீர்கள். "துப்பாக்கி" பெரும்பிரச்சனையில் மாட்டியது அறிந்தும் இப்படி செய்கிறார் என்றால் அவருடைய அகம்பாவத்தைத்தான் காட்டுகிறது.எது அப்படியோ நாம் சொன்ன செய்திகள் அவர்களிடம் சேர்ந்து விட்டது.இனி இப்படி படம் எடுப்பவர்கள் சிந்திப்பார்கள்.
kalam
Rajesh kumar said...
Why Talibans taking weapons? since Islam preaches peace, why dont they try ahimsa? Gandhiji took only one weapon ahimsa and British bowed. Why not Talibans? All world will support them if they put down weapons.
ராஜேஷ் குமார்!
//Why Talibans taking weapons? since Islam preaches peace, why dont they try ahimsa? Gandhiji took only one weapon ahimsa and British bowed. Why not Talibans? All world will support them if they put down weapons.//
தாலிபான்கள் ஏன் ஆயுதத்தை தூக்கினார்கள் என்பதை இந்த பதிவில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.
5) ஆக்கிரமிப்பாளர்கள் பல அநீதிகளை இழைத்துள்ளனர். இரவில் கைது, இரவில் தேடுதல், குழந்தைகளை துன்புறுத்தல், சித்திரவதை செய்தல், இறந்த உடல்களை அசிங்கப்படுத்தல், பெண்களை வதைத்தல், மானபங்கம் செய்தல் என பற்பல. இத்தனையையும் செய்து விட்டு இவர்கள் உலகுக்கு மனித நேயத்தைப் பற்றி பாடம் எடுக்கிறார்கள்.
6) பதுஷ்தானில் இருந்து ஹெல்மண்ட் வரை, ஹேரத்தில் இருந்து நங்ககர் வரை முஜாஹித்களை கண்டு பெண்கள் சந்தோஷமடைகின்றனர். இதன் அர்த்தம் எமது கட்டளைகளை இந்த பிராந்தியங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன என்பதாகும். இந்த வெற்றிகள் எதிரிகளை நிலைகுலையச செய்துள்ளது.
7) எதிரிகளின் சதிகளை நம்பி எம்மக்கள் பலர் ஏமாந்து போய் விடுகின்றனர். இதனை நாம் இயன்றளவு தடுத்து வருகின்றோம். மீடியாக்களை தன் பக்கம் வைத்திருக்கும் எதிரிகள் முஜாஹிதின்களைப் பற்றி பல பொய்களை தினமும் பொதுவில் வைக்கின்றனர். ஆனால் மக்கள் உண்மையை தெரிந்தே வைத்துள்ளார்கள்.
8) தங்களின் குள்ளநரித்தனமான செயல்களால் நம் மக்களிலேயே பலரை பகடைக் காய்களாக இது வரை பயன் படுத்தி வந்தனர். முன்பு எவ்வாறு 90 களில் கம்யூனிஸ்ட் படைகளை விரட்டினோமோ அது போன்ற நிலையை இறைவன் ஏற்படுத்துவான். ஹமீத் ஹர்சாய்க்கு அவரின் அதிகாரம் குறைந்து வருவது புரிகிறது. அவர் எத்தனை மாநாடுகளை நடத்தினாலும் அதனால் எம்மை கட்டுப்படுத்த முடியாது என்பதே உண்மை.
9) பலஹீனமான ஒரு அரசிடம் பொறுப்பை கொடுத்து தங்களின் தோல்வியை மறைக்கப் பார்க்கினறனர் அமெரிக்கர்கள். நாம் துணிவு கொண்டுள்ளோம். அமெரிக்கா மட்டுமல்ல வேறு எந்த நாடு வந்தாலும் முகம் கொடுக்கும் ஆற்றலையும் நம்பிக்கையையும் இறைவன் எமக்கு தந்துள்ளான்.
10) இந்த நாட்டை வேறு சில சக்திகளுக்கு விற்கும் நாடகமும் நடந்தேறி வருகிறது. ஆப்கானின் உண்மை விசுவாசிகள் இதனை ஒருக்காலும் அனுமதிக்கமாட்டார்கள். இந்த நாடகத்துக்கு துணை போகும் கர்சாயின் அரசையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இந்த நோன்பில் எமக்கு இன்னோரு மகிழ்ச்சிகரமான செய்தியொன்றுள்ளது. அது, ஆப்கானிய மக்கள் எம்மை, எமது தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த நிலை காபூல் வரை ஏற்பட்டுள்ளது. எமது பல தாக்குதல்களுக்கு காபூல் மக்களின் பேருதவியே பெரும் காரணமாக அமைந்தது.
http://suvanappiriyan.blogspot.com/2012/08/blog-post_23.html
jaisankar!
//துப்பாக்கி கலாச்சாரம் பத்தி அமெரிக்கா கவலைப்படட்டும். முதல்ல வெடிகுண்டு கலாச்சாரம் பத்தி கவலைப்படுங்க சுவனம்//
உங்க சாகாக்களில் பயின்ற பலரை வெடிகுண்டு வழக்கில் உள்ளே பிடித்து போட்டதால் தற்போது எங்குமே குண்டு வெடிப்பதில்லை என்பது தெரியுமோன்னோ
வஅலைக்கும் சலாம் சகோ கலாம்!
//மிக நடு நிலையோடு ஆய்வு செய்து பதிவிட்டிருக்கிறீர்கள். "துப்பாக்கி" பெரும்பிரச்சனையில் மாட்டியது அறிந்தும் இப்படி செய்கிறார் என்றால் அவருடைய அகம்பாவத்தைத்தான் காட்டுகிறது.எது அப்படியோ நாம் சொன்ன செய்திகள் அவர்களிடம் சேர்ந்து விட்டது.இனி இப்படி படம் எடுப்பவர்கள் சிந்திப்பார்கள்.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
At least five people were gunned down Saturday in Chicago, including a 34-year-old man whose mother had already lost her three other children to shootings.
Ronnie Chambers, who was his mother Shirley's youngest child, was shot in the head while sitting in a parked car on the city's West Side. A 21-year-old man who was also in the car was wounded, police said.
Shirley Chambers, whose two other sons and daughter were shot in separate attacks more than a decade ago, was left grieving again on Saturday, WLS-TV reported ( http://bit.ly/VCSh8i ).
"Right now, I'm totally lost because Ronnie was my only surviving son," Chambers said.
Shirley Chambers' first child, Carlos, was shot and killed by a high school classmate in 1995 after an argument. He was 18. Her daughter Latoya, then 15, and her other son Jerome were shot and killed within months of one another in 2000.
"What did I do wrong? I was there for them. We didn't have everything we wanted but we had what we needed," she asked Saturday.
Chambers said despite this latest tragic chapter in her life, she's not bitter or angry.
http://abcnews.go.com/US/wireStory/die-shootings-bloody-chicago-day-18326354
Investigators are probing the background of a Las Vegas police lieutenant who apparently killed his wife and son before setting his home on fire and taking his own life.
Police, firefighters and a SWAT team were called to a Boulder City, Nev., home Monday. The home, which is about 20 miles from Las Vegas, is owned by Hans P. Walters, 52, according to records from the Clark County Assessor's Office.
The names of the victims are expected to be released later today by the Clark County Coroner's Office.
The Henderson Police Department, along with the Las Vegas Metropolitan Police Department, confirmed the murder-suicide involved an off-duty, 52-year-old Las Vegas police lieutenant but did not release his name.
http://abcnews.go.com/US/police-investigate-las-vegas-cop-killed-family/story?id=18287084
விஸ்வரூபம் படத்தை தணிக்கை செய்த உறுப்பினர்களில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த நான் இடம் பெற்றிருந்தாலும் அதில் பங்குபெறும் மற்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை முடிவே இறுதியானதாகும் என்பது உண்மை.
விஸ்வரூபம் படத்திற்கு அனுமதி அளித்த தணிக்கைக் குழுவில் உறுப்பினராக இடம் பெற்றுள்ள திமுகவைச் சேர்ந்த ஹசன் முகம்மது ஜின்னா, விஸ்வரூபம் சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
>>>>>> விஸ்வரூபம் தணிக்கைக் குழுவின் ஹசன் முகம்மது ஜின்னா விளக்கம்.
.
//மற்றபடி நாளை படத்தை பார்த்து நீதிபதிகள் திரையிட அனுமதி வழங்கி விட்டால் இதற்கு மேலும் இந்த பிரச்னையை வளர்க்காமல் அதன் போக்கில் விட்டு விடுவதே நல்லது. தியேட்டரில் சென்று பிரச்னை பண்ணுவது சில விஷமிகள் தங்களின் காரியத்தை சாதித்துக் கொள்ள சாதகமாக்கி விடும். பெண்கள் குழந்தைகளோடு தியேட்டருக்கு படம் பார்க்க பலரும் வருவர். நாம் நமது எதிர்ப்பை காட்டி விட்டோம். பலரும் உண்மையை புரிந்து கொண்டனர். எனவே தீர்ப்பு கமலுக்கு சாதகமாக வந்தால் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் சட்டத்துக்கு கட்டுப்படுவதே நமது கடமை. அண்ணன் தம்பிகளாகவும் மாமன் மச்சான்களாகவும் சகோதர பாசத்தோடு பழகி வரும் பெரும்பாலான மாற்று மத சகோதரர்கள் நம் மீது வைத்திருக்கும் நல்லெண்ணம் பாழ்பட்டு விடக் கூடாது. முஸ்லிம்கள் தங்களின பொறுப்புணர்ந்து செயல்படுவார்களாக!//
finally some responsible suggestions.
இந்த படத்தை பார்க்கையில் பழையகால Manual vending Machine ஒன்றில் என்
அறிவுஜீவி நண்பன் காபித்தூள், பால், சர்க்கரை ஆகிய பொத்தான்களை வேக
வேகமாக அழுத்திவிட்டு குவளை(Cup) பொத்தானை அழுத்த மறந்தது தான்
நினைவுக்கு வருகிறது..
சரி அப்படியும் பிரம்மாண்ட சண்டை காட்சிகளிலாவது சிறந்து விளங்குகிறதா
என்றால் இல்லை. சராசரி தமிழ்ப்படங்களை விட நிறைய உலங்கு ஊர்திகளை
(Helicopters) பறக்க விட்டுள்ளார்.. அவ்வளவே.. தமிழ் மொழியிலே மட்டுமே
வெளியிடப்படும் சின்ன பட்ஜெட் படங்களுக்கு கமலின் படம் கொஞ்சம் high-tech
ஆகத்தான் தோன்றும். விஜய், அஜீத் படங்களை விட சாதுர்யமாகதான் இருக்கும்.
ஆனால் Saving Private Ryan, Troy போன்ற ஹாலிவுட் படங்களுடன்
ஒப்பிட்டுக்கொல்வது ரொம்ப அதிகம்.
திரைக்கதையிலும் பெரிய சாமர்த்தியம் இல்லை.. பார்த்து பார்த்து புளித்த
போன ஹாலிவுட் முறைகள்.. குறிப்பாக நம்மவர்களை ஈர்க்க போவது ஒரு காட்சி..
தொழுகை செய்வதாக சொல்லி கண்ணிமைக்கும் நேரத்தில் அத்துணை பேரையும்
துவம்சம் செய்யும் காட்சி.. அதிலும் குறிப்பாக நொடி நேரத்தில் செய்த
அசகாய சண்டையை Slow Motion ல் விளக்குவது.. ஆனால் இது Sherlock Holmes
(2009) படத்தில் வரும் குத்துசண்டை காட்சியின் அப்பட்டமான காப்பி..
மேலும் அது தேவைப்படும் அளவுக்கு இது ஒன்றும் ஜாக்கிசான், ப்ரூஸ்லீயின்
அதிவேக சண்டை இல்லை..
ஆங்கிலப்படங்கள் பார்க்காத நம்மூர் மக்களை ஏமாற்றுவதில் கமலஹாசனுக்கு ஒரு
கள்ளப்பெருமை இருக்கலாம், அதில் ஹாலிவுட் படங்களையும் ரசிப்பவர்கள்
பாராட்ட எதுவும் இல்லை..
மற்றபடி மொத்தப் படமும் freezerல் வைத்து பல நூற்றாண்டுகளாக
அறைக்கப்படும் அதே ஊசிப்போன மாவு தான். பின்னணி இசையிலும் பல இடங்கள்
Dark Knight உட்பட எனக்கு பிடித்த பல படங்களில் இருந்து சுட்டவையே..
(தழுவல் என்று வேண்டுமானால் நாசூக்காக சொல்லாம்.)
ஆனால் பாடல்கள் காப்பி அடித்தது போல இல்லை.. தனித்தன்மையுடனே இருக்கின்றன
அனைத்து பாடல்களும்.
இத்தகைய அமெரிக்க ராணுவ வீர சாகச மொக்கை படங்களை அந்த கதையுடன் நேரடி
தொடர்பு உள்ள அமெரிக்கர்கள் கூட இப்போதெல்லாம் அவ்வளவாக ரசிப்பதில்லை..
அதையே தமிழ்மொழியில் எடுத்து கமல் பெருமைப்படுவது நகைப்புக்குரியது.
-Sooriya Prakash Thangaswamy - உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்
வழக்கமான கமல் படங்களை போல இதிலும் எங்கெங்கும் எல்லா காட்சிகளிலும்
நீக்கமற நிறைந்திருக்கும் பிராமண வாடை.. பேச்சு, பெயர்கள், கலாசாரம்
என்று சகலத்திலும் பிராமண நெடி. ஹிந்தி மட்டும் இந்தியாவின் மொழியல்ல
என்று கூச்சல் போடுகிறோம். (இத்தனைக்கும் நிறைய மக்கள்
பேசுகிறார்கள்/புரிந்துகொள்கிறார்கள்) ஆனால் கடுகளவு சிறுபாண்மையான
பிராமணர் மட்டும் தான் தமிழ்நாட்டில் வாழ்பவர் என்கிற பாணியில் தான் கமல்
படங்கள் எப்போதும் இருக்கும். அது ஊர் அறிந்த ரகசியம் தானே.. அதை விட்டு
விடலாம்.
தமிழகத்தின் ஒரு அறுதி சிறுபான்மையான பிராமணர்களை தவிர வேற யாரை கொண்டும்
படம் எடுக்க தெரியாத கமல் என்னத்த உலக நாயகன்? தசாவதாரத்தில் தலித் என்று
சொல்லிக்கொண்டு பார்க்க சகிக்காத ஒரு வேடம் பூண்டு வந்த கமலால் சராசரி
தமிழனை அழகாகவோ, கேமரா முன்னாள் நிற்க தகுதி உள்ளவனாகவோ பார்க்க
முடியாதுதான். ஆனால் குறைந்தபட்சம் தன் பிராமண பிரிவுக்குள்ளாவது ஒரு
பரந்த சிந்தனை இருந்திருக்கலாம் ஆனால் அதுக்குள்ளேயும் அய்யங்காருக்கு
அவர்களுக்கு படம் முழுக்க பெருமாள் பஜனை தான்.
முதலில் இது ஹாலிவுட் தர படமா என்ற கேள்வியே தேவையற்றது.. தமிழன் கலை
படைப்புகளில் என்றைக்கும் பின் தங்கியவன் இல்லை.. வெள்ளைக்காரனை
வெற்றிகரமாக காப்பியடித்து பெருமைப்படுவது பைத்தியக்காரத்தனம்.. மேலும்
ஹாலிவுட் படங்களின் உன்னதம், வெற்றி அவர்கள் பறக்கவிடும் விமானங்களிலும்,
வெடிக்கவிடும் கட்டிடங்களிலும் இல்லை.. கதை சொல்லும் நேர்த்தியில்
உள்ளது..
உலக சினிமாவின் தலைசிறந்த படங்களாக பல தலைமுறைகளை தாண்டியும் நின்று
நிலைக்கும் Shawshank Redemption, Godfather, Pulp Fiction, Fight club,
12 Angry Men, Psycho, The Pianist போன்ற படங்கள் கோடிகளை வாரி இறைத்து
எடுக்கப்பட்டவை அல்ல.. அன்றியும் Inception, Dark Knight, Matrix போன்ற
பெரிய பட்ஜெட் படங்களில் பிரம்மாண்டத்தை தூக்கி நிறுத்துவது
திரைக்கதையின் சுவாரசியமே..
தமிழ் சினிமாவை உலகம் வியக்கும்படி செய்வது விஸ்வரூபம் போன்ற படங்கள்
அல்ல. அந்த நாள், வீடு, மௌன ராகம், முந்தானை முடிச்சு, சிகப்பு
ரோஜாக்கள், அழகி, தவமாய் தவமிருந்து போன்ற படங்கள் தான்.. பிரம்மாண்டம்
என்றாலும் சந்திரலேகாவின் உச்சகட்ட நடனக்காட்சியும், அவ்வையார் படத்தில்
யானைகள் கோட்டையை இடிக்கும் காட்சியும் பெரிய தொழில் நுட்பங்கள் இல்லாமல்
போனாலும் இன்றைக்கும் ரசிக்க வைப்பது அதில் வாரி இறைத்த காசு அல்ல..
அதற்கான தேவையை உண்டாக்கும் திரைக்கதை தான்.
-Sooriya Prakash Thangaswamy - உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்
கூச்சமே படாமல் காப்பியடித்து Xerox machine என்று பெயரெடுத்த
இசையமைப்பாளர் தேவா ஏனோ நினைவுக்கு வருகிறார். இதுமாதிரி படங்களில்
கோடிகளை போட்டு கோடிகளை அள்ள துடிக்கும் கமலின் செயல் ஒரு வியாபாரியின்
சிந்தனையே அன்றி ஒரு நல்ல கலைஞனின் சிந்தனை அல்ல.
உச்சிதனை முகர்ந்தால், காற்றுக்கென்ன வேலி உட்பட பல நல்ல திரைப்படங்கள்
சிக்கலில் தவிக்கும் போது இமயமலை சாமியார்களுக்கு பேன் பார்க்க
போய்விடும் ரசினிகாந்து இந்த படத்துக்கு வக்காலத்து வாங்குவது சக
வியாபாரி என்ற பாசமே அன்றி இவர்கள் யாரும் கருத்து சுதந்திர போராளிகள்
இல்லை.
அடுத்து இரண்டாவது விடயம். சமூக அக்கறை. தீமை பயக்கும் மெய்யை விட, நன்மை
பயக்கும் பொய்யே நல்லது என்று நாம் ஏற்றுக்கொள்ளும்போது, தீமையை மட்டுமே
விளைக்கும் நிரூபிக்கப்படாத உண்மைகளை பரப்புவது எதற்காக?
தன்னை கலைஞனை மிஞ்சியும் ஒரு சமூக ஆர்வலனாக காட்டிக்கொள்ளும் கமல் இந்த
படத்தினால் இஸ்லாமியர்கள் பற்றிய தேவையற்ற எதிர்மறையான பிம்பம் உண்டாகும்
என்பதை கொஞ்சமும் எண்ணி பார்க்காமல் இதை படம் பண்ண நினைத்தது, காசுக்கு
எதையும் தின்னும் கடைந்தெடுத்த வியாபார புத்தி.
மூன்று விடயங்களில்.. முதல் விடயமே நம்மை மிகவும் கவலை கொள்ள செய்யும்.
அது நேர்மையின்மை. கதை சொல்பவர்கள் கொஞ்சமேனும் தங்கள் தனிப்பட்ட
சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டு திரித்து சுய-நியாயம் ஏற்று கூறுவது
இயல்புதான். ஆனால் அது அளவை மிஞ்சும்போது ஆபத்தாகி அந்த கலையின் ஜீவனையே
கொன்றுவிடும்.
இந்த படத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகளை தாக்கும் அமெரிக்காவும்,
அமெரிக்கர்களை தாக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளுமே இரண்டு கட்சிகள். அப்படி
இருக்க முழுக்க முழுக்க அமெரிக்காவின் தாக்குதல்களை மட்டுமே
நியாயப்படுத்தும் நிலைப்பாடு கமல்ஹாசன் உடுத்திய நடுநிலை வேடத்தின்
நிர்வாணம்.
அதற்காக தலிபான்கள் செய்வது சரி என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர்களின்
வாதத்தையும் ஓரளவேனும் விளக்குவது தான் ஒரு நியாயமான கலைஞனின் கடமை
(அல்லது இந்த வியாபாரியின் தொழில்தர்மம்). கிட்டத்தட்ட படத்தில் வரும்
அத்தனை இஸ்லாமிய கதாபாத்திரங்களையுமே கொடூரர்களாக, கொலைகாரர்களாக,
முட்டாள்களாக காட்டியிருப்பது உலக மகா அயோக்கியத்தனம்.
அதிலும் சிறு இஸ்லாமிய குழந்தைகளின் விளையாட்டே வாயில் துப்பாக்கி
சத்தத்துடன் வெறும் கையால் ஒருவரை ஒருவர் குறிபார்த்து சுட்டு கொல்வது
என்று காட்டுகிறார். இது ரொம்பவே நைச்சியமாக (Subtle ஆக) சில நொடிகளே
காட்டப்படுகிறது என்றாலும் இது கடைந்தெடுத்த ஊடக விபச்சாரம் அன்றி வேறு
இல்லை.
ஒரு மத மக்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் இந்த படம் கலை அல்ல களை..
தொடக்கம் முதல் கடைசி வரை அமெரிக்காவின் ஜால்ராவாகவே இருக்கும் திரைக்கதை
திட்டமிட்டே அவ்வாறு வகுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அயல்நாட்டு
போர்களை வியந்தோதும் படங்களுக்கே ஆஸ்கார் விருதுகள் குவியும் என்பதனை
இப்போது தான் கமல் புரிந்து கொண்டார் போலும்.
-Sooriya Prakash Thangaswamy - உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்
வியட்நாமில் அமெரிக்காவின் அட்டூழியங்களை நியாயப்படுத்தி, வியட்நாமிகளை
நாகரீகமற்ற மனிததன்மையற்ற கொடூரர்களாக சித்தரித்த The Deer Hunter படம்
பெற்ற 5 ஆஸ்கார் விருதுகளும், ரசாயுன ஆயுதம் இருப்பதாக கதை கட்டி ஈராக்
என்ற நாட்டின் தலைவனை கொன்று, அதன் பொருளாதார அடித்தளத்தை சீர்குலைத்த
அமெரிக்க படைகளின் அத்துமீறல்களை மெய்சிலிர்க்க பாராட்டிய Hurt Locker
படம் பெற்ற 6 ஆஸ்கார் விருதுகளும் உதாரணங்கள்.
இந்தியாவை பிச்சைக்கார நாடு, கொலைகார அயோக்கிய நாடு (இது முற்றிலும்
உண்மை என்பது வேறு கதை என்று காண்பித்ததை தவிர வேறு எதையும் கிழிக்காத
Slumdog Millionaire பெற்ற விருதுகளும் இதே வகைதான். ஒருவேளை கமலின்
நீண்டகால ஆஸ்கார் கனவு இதனால் நனவாகலாம். ஆனால் அவரின் ஆஸ்கார் கனவை
எண்ணி சிறு வயது முதல் பெருமைபட்ட எனக்கு இத்தனை அசிங்கங்களையும் ஒரு சேர
கண்ட பின் கமலின் கனவை கேட்டால் வயிற்றை குமட்டி வாந்தியே வந்துவிடும்
போலிருக்கிறது.
ஆஸ்கார் கனவு என்பது ஆகச்சிறிய செயல்திட்டம். ஆனால் வேறொரு விஷயம்
உதைக்கிறது. திரைக்கு முன்னரே DTH ல் வெளியிடுவதால் ஒன்று லாபம் அதிகம்
வரலாம். அல்லது தொலைகாட்சியில் பார்த்துவிட்டதால் திரையரங்கு வசூல்
குறைந்து போகலாம். குறையும் என்பதே பரவலான நம்பிக்கை என்கிற ரீதியில்
ஏற்றுக்கொண்டால், கமல்ஹாசன் புதுமையை புகுத்தவே DTHல் ஒளிபரப்ப முயன்றார்
என்று நம்புவது சிறிது கடினமாய் இருக்கிறது.
ஆனால் DTH ல் வெளியிடுவதன் மூலம் லாபம் குறைந்தாலும், கோடிக்கணக்கான
மக்களை அவரின் அமெரிக்க ஆதரவு பரப்புரை எளிதில் சென்று சேர்ந்துவிடும்
என்பது திண்ணம். இவ்வகையில் தொலைக்காட்சி மூலம் மக்களை அடைந்து “முஸ்லீம்
எல்லாம் பெரும்பாலும் தீவிரவாதிதான்” என்று பாமர மக்களை சொல்ல வைப்பது
தமிழ்நாட்டில் ரொம்ப எளிது. இதில் கமலுக்கு என்னதான் லாபம்?
ஒரு வழக்கமான சந்தேக பிராணி இப்படி தான் யோசிப்பான் : “அமெரிக்கா என்கிற
பெரியண்ணன் உலகில் பல்வேறு இடங்களில் தனக்கான பரப்புரையை பல வகையிலும்
செய்து வருகிறார். இந்தியாவில் அவர்களின் முதல் முயற்சியாகக்கூட இது ஏன்
இருக்கக்கூடாது? தமிழ்நாட்டுக்கு சம்பந்தமே இல்லாத ஆப்கானிஸ்தான்
தீவிரவாதி கதை தமிழ்நாட்டுக்கு எதுக்கு? கமலின் இந்த பிரச்சாரம் வெறும்
கலை சேவை மற்றும் ஆஸ்கார் ஆசையை தாண்டிய விஷயமாக ஏன் இருக்கக்கூடாது?
மக்கள் கொடுக்கும் 5 ரூபாய் 10 ரூபாயை வச்சி போராடுரவனை எல்லாம் அமெரிக்க
கைகூலிங்குறான். ஆனால் கைல இருந்து 80 கோடிய போட்டு கிட்டத்தட்ட அமெரிக்க
ராணுவம் மட்டுமே எடுக்க வேண்டிய ஒரு படத்தை, கமல் ஏன் எடுக்கணும்னு
தோணுது!”
மற்றபடி தமிழ்நாட்டுக்கு சம்பந்தம் இல்லாத, நேர்மை இல்லாத, ரசனை இல்லாத,
Creativity இல்லாத படம் என்றாலும் வெளிவரும் முன்னரே தடை செய்வது நல்ல
முன்னுதாரணமாக இருக்காது. பல நல்ல படைப்பாளிகளின் குரல்வளை நெரிக்கப்பட
இதுவே ஒரு தொடக்கப் புள்ளியாகிவிடும். There seems to be no genuine
artistic experimentations or social motivations behind this movie.
-Sooriya Prakash Thangaswamy - உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்
அநேகமாக தடை நீக்கப்பட்டு வெளியிடப்படும். உடனடியாக தமிழ் மக்களின் மீது
அக்கறை உள்ள இயக்கங்கள், அமைப்புகள் இந்த படத்தை பொது மக்கள்
புறக்கணிக்கும்படி பரப்புரை செய்ய வேண்டும். இத்தகைய படத்தினால்
விளையக்கூடிய தீமைகளை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.
பொருளாதார ரீதியாக வெற்றியடைய விடாமல் வீழ்த்த வேண்டும் அதுவே
உருவாக்கியவர்களுக்கு நல்ல பாடமாக அமையும் வெளிவந்த உடனே இஸ்லாமியர்கள்
தீவிரவாதிகளா முடிவு கட்டப்பட்டு அவர்களுக்கு எதிரான வன்முறை தலைவிரித்து
ஆட வாய்ப்பு இல்லை. ஆனால் இந்த படம் அத்தகைய ஒரு துயர வரலாற்றுக்கான
அச்சாரமாக இருக்கும் என்றே கருதுகிறேன்.
மற்றபடி கமல் என்கிற கலைஞனின் மீது நடந்ததாக கூறப்படும் ஒடுக்குமுறை
பற்றிய எனது கருத்து இதுதான். கடுமையாக உழைத்தே தன்னை
நிலைநிறுத்திக்கொண்ட போதும் கமலுக்கு அறிமுகம்தொட்டே மிக பலம் வாய்ந்த
சினிமா பின்புலம் இருந்து உதவியது. அதனால் பல தோல்விகளுக்கு பிறகும்
அவரால் தொடர முடிந்தது. இன்று பல கோடிகளை போட்டு பிரம்மாண்ட “உலக சினிமா”
பண்ணும் வாய்ப்பு அவருக்கு உள்ளது. என்னை பொருத்தவரை இதில் பெருமை என்று
பெரிதாய் எதுவும் இல்லை.
கோடி ரூபாய்க்கு வாங்கிய BMW காரில் போகிறவனை ஒரு நல்ல Driver சுமாரான
இண்டிகா கொடுத்தாலும் தட்டி எரிஞ்சிட்டு போயிடுவான். விஸ்வரூபத்தை இந்த
கோணத்தில் தான் "நான் யுத்தம்" செய் போன்ற படங்களுடன் ஒப்பிட்டு
பார்க்கிறேன்.
என்ன செய்ய வாய்ப்புகள் கிடைக்காமலேயே பல திறமைசாளிகளின் வாழ்க்கை
முடிந்து போய்விடுகிறது. கமல் போன்றவர்களுக்கு காலமும் சூழ்நிலையும் பல
நூறு வாய்ப்புகளை வழங்குகிறது.
80 கோடி அல்ல 8 கோடியிலேயே உலக சினிமா எடுக்கும் திறமை வாய்ந்த கலைஞர்கள்
இங்கு நிறைய பேர் உள்ளனர் அவர்களை பற்றியும் கொஞ்சம் கவலைப்படுவோம்
-Sooriya Prakash Thangaswamy - உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்
1. தேசத்தை பாதுகாக்கும் போராளிகளை கொச்சைப்படுத்தி படம் எடுக்கும் கமலுக்கு தேசப்பற்றை பற்றி பேச அறுகதை இல்லை.
2. விஸ்வரூபம் படத்தை பார்க்கும் மாற்று மத நண்பர்கள், புர்கா அணியும் முஸ்லிம் பெண்கள் அனைவரும் மனித வெடிகுண்டு என்ற ஒரு தவறான சிந்தனைகள் உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளன.
3. அமெரிக்காவின் தீவிரவாதத்தை பற்றிய படமாக இருந்தால் சென்சார் போர்டு அதனை தடை செய்திருக்கும். ஏனேன்றால் நமது நாட்டில் உள்ள அனைத்தும் அமெரிக்காவிற்கு அடிமையாக உள்ளன என்பதை இதன் மூலம் தெரியமுடிகிறது.
4. நமது நாட்டில் பேச்சி மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு உரிமைகள் உள்ளன. ஆனால் நமது நாட்டையும், நாட்டின் இறையாண்மையையும் புண்படுத்தும் விதமாகவும், நாட்டின் மதநல்லிணக்கத்தை சீர்குழைக்கும் விதமாகவும் இருந்தால் அதை ஒழுங்குப்படுத்தி சீர்படுத்த இந்திய அரசியல் அமைப்பு சட்டம் இடம் அளிக்கிறது என விஷ்வரூபம் படத்தை பற்றி சட்டம் பேசும் சட்ட மேதாவிகளுக்கு சொல்லைக்கொள்கிறேன்.
5. விஸ்வரூபம் படம் இரு மதங்களுக்கு இடையே பிளவு மற்றும் மோதலுக்கு வழிவகுக்கும். இது இந்திய தண்டனைச் சட்டம் 153A வின் படி குற்றமாகும்.
6. சென்சார் போர்டு சான்றிதழ் வாங்கிய பிறகு தடை செய்ய என்ன அதிகாரம் உள்ளது. சென்சார் போர்டு இன்று தனது கடமையை சரியாக செய்தால் இவ்வளவு பிரச்சனைகள் வந்திருக்காது. இதன் மூலம் சென்சார் போர்டு மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்பது தெரிய வருகிறது. சென்சார் போர்டு சான்றிதழ் வாங்கியும் மாநில அரசாங்கம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து இப்படத்தை திரையிட சட்டப் படி தடை செய்வதற்கு CINIMATOGRAPH ACT 1952– ல் இடம் இருப்பதை மேதாவிகளுக்கு தெரிவிக்கிறேன்”.
இந்தியாவின் நாட்டின் நலன் கருதி இந்த திரைப்படத்தை தடை செய்யலாம் என அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் வழக்கறிஞர் ராஜா முஹம்மது அவர்கள் கூறினார்கள்.
ஸுபெர் கட்டுரை சகோ கமலை தேசிய பாதுகாப்பு சட்டதில் கைது செய்ய வேன்டும்
பட்டையை கிளப்பியது பொதுக்கூட்டம் :
அல்ஹம்துலில்லாஹ் !!! பட்டையை கிளப்பியது ரிசானா , விஸ்வரூபம் சம்பந்தமான மாபெரும் பொதுக்கூட்டம்..! மூன்று மணிநேரம் நடந்த விளக்க உரையில் ஒவ்வொன்றும் எதிர் கருத்து உள்ளவர்களின் முகமுடியை கிழித்து எரியக்கூடியதாக அமைந்தது.!
பிஜே பேசிய அனைத்தும் பதிவாக இடவேண்டியவை ...! ரிசானா விவகாரம் சம்பந்தமாக அற்புதமான விளக்கம் கோவை ரஹ்மத்துல்லாஹ் அளித்தார்..! அதை மீண்டும் கேட்பதற்கு ஆன்லைன் பிஜே வின் அப்டேட்டுக்காக காத்திருக்கிறேன்..இன்ஷா அல்லாஹ் அனைவரும் பாருங்கள்..!
விஸ்வரூபம் முடிந்து விட்டதாகவே நினைக்கிறேன்..இன்ஷா அல்லாஹ்.!
Hello Suvanam what about egyptian football massacre? This was done by Muslims against Muslim! And shariat laws were not respected by its own people who took laws in their hands and again cause for death of 30 more people! Barbarian justice!
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜே.எஸ். ரிபாயி அவர்கள் வெளியிடும் கண்டன அறிக்கை:
விஸ்வரூபம் திரைப்படத்தை தமிழகத்தில் திரையிடுவதற்கு தமிழக அரசு விதித்துள்ள தடை நீக்கப்பட வேண்டும் என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள கருத்தை தமுமுக வன்மையாக கண்டிக்கிறது.
சமீபத்தில் தருமபுரி மாவட்டத்தில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மையப்படுத்தி அதனுடன் பாமகவின் கொடி, தலைவர்களின் பின்ணணி படங்கள் வன்னியர் சங்கத்தின் தீ சட்டி சின்னம் ஆகியவற்றின் காட்சி பிண்ணனிகளுடன் ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டால் அதனை மரு. ராமதாஸ் அவர்கள் அனுமதிப்பாரா? இதேபோன்றுதான் இஸ்லாத்தின் அடையாளங்களுடன் பயங்கரவாதிகளுடன் தொடர்புபடுத்தி கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தை எடுத்ததினால்தான் முஸ்லிம்கள் அந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் பாரதிராஜா, பார்த்திபன், நடிகர் அஜீத் இவர்களும்கூட கமல்ஹாசனின் விஷகருத்துகள் நிறைந்த விஷரூபமாக தயாரிக்கப்பட்டுள்ள படமான விஸ்வரூபத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்கள்.
முல்லை பெரியாறு அணையை மையமாக வைத்து DAM999 என்ற படம் தமிழகத்திலே தடைசெய்யப்பட்டது. தமிழக அரசின் இந்த தடை மிகவும் நியாமானது ஏனெனில் தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சனையை கொச்சைப்படுத்தி தமிழக மக்களின் உள்ளங்களை ரணப்படுத்தும் வகையில் அந்த படம் எடுக்கப்பட்டது தமிழக அரசு DAM999 படத்தை தடை செய்தது நியாமானது தான் என்றும் மக்களின் உணர்வுகளை புண்படுத்தி திரைப்படம் எடுக்கக்கூடாது என்று ஒருசில நாட்களுக்கு முன் உச்சநீதிமன்றமும் கருத்து தெரிவித்துள்ளது.
இதேஅளவுகோளை பயன்படுத்திதான் மிகுந்த பொறுப்புணர்வுடன் தமிழக அரசு திரையரங்குகளில் விஸ்வரூபம் படம் திரையிடுவதற்கு தடைவிதித்தது. DAM999 மீதான தடையை வரவேற்ற இயக்குநர் பாரதிராஜா போன்றோர் DAM999 ஒர் அளவுகோலும் விஸ்வரூபத்திற்கு ஒரு அளவுகோலும் கையாள்வது நியாயம்தானா?
தமிழ் திரைப்படங்களில் ஒரு சாரார் தொடர்ச்சியாக முஸ்லிம்களை கொச்சைப்படுத்தும் வகையில் படம் எடுத்து வருகிறார்கள் அதன் உச்சகட்டமாக அமைந்துள்ளதுதான் விஸ்வரூபம் திரைப்படம்
அதேநேரத்தில் முஸ்லிம்களின் எதார்த்த நிலையை சிறப்பான முறையில் எடுத்துக்காட்டியுள்ள நீர்பறவையின் இயக்குநர் சீனு ராமசாமி அவர்களுக்கு எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரதிராஜா போன்று கருத்து வெளியிட்ட திரைப்பட உலகினர் முஸ்லிம்களின் உள்ளங்களின் ஏற்பட்டுள்ள ரணங்களை உணர்ந்து கமல்ஹாசன் போன்றோர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
பாரதிராஜா அவர்கள் கமல்ஹாசன் நல்ல தமிழ் கலைஞர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தில் நமது தமிழ்நாடு சர்வதேச குற்றவாளியான முல்லா உமருக்கு புகழிடம் அளித்துள்ளதாக குறிப்பிடுவதுதான் நல்ல தமிழ் கலைஞருக்கு பாரதிராஜா வழங்கும் இலக்கணமா? இப்போது விஸ்வரூபம் திரைப்படங்களில் முஸ்லிம் சமுதாயத்தை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதலேயே கவனம் செலுத்தும் கமல் ஒரு நல்ல கலைஞன் அல்ல மாறாக அவர்தான் ஒரு கலாச்சார பயங்கரவாதி என்பதையே எடுத்துக்காட்டுகிறது.
அன்புடன்
(ஜே.எஸ். ரிபாயி)
//Hello Suvanam what about egyptian football massacre? This was done by Muslims against Muslim! //
ஒரு சாதாரண விளையாட்டை இவ்வளவு சீரியஸாக எடுக்கும் மடக் கூட்டங்களின் நடவடிக்கை இது. இஸ்லாத்தை சரியாக பேணாததால் வந்த வினை இது. இவ்வாறு இஸ்லாமிய சூழலில் அந்த மக்களை வளர்க்காத அந்த பெற்றோர்கள் தான் முதல் குற்றவாளி. இதில் இஸ்லாத்தை குறை கூற என்ன இருக்கிறது?
சகோ நாகூர் மீரான்!
//பிஜே பேசிய அனைத்தும் பதிவாக இடவேண்டியவை ...! ரிசானா விவகாரம் சம்பந்தமாக அற்புதமான விளக்கம் கோவை ரஹ்மத்துல்லாஹ் அளித்தார்..! அதை மீண்டும் கேட்பதற்கு ஆன்லைன் பிஜே வின் அப்டேட்டுக்காக காத்திருக்கிறேன்..இன்ஷா அல்லாஹ் அனைவரும் பாருங்கள்..! //
இன்ஷா அல்லாஹ் நாளை பார்க்கிறேன்.
Hence Talibans parents mistake is the cause for terrorism? And Talibans will teach their kids terrorism. That is wat kamal shows in viswaroopam! Why dont you ignore that since we believe Indian Muslims are not terrorists. And I won't support rss bajrang Dal or any extremist movements. Of course 75 percentage of Hindus won't support them. Wby kamalHasan and murugadoss had shown in their films tht Talibans slitiing throat of people, after reciting quaran? After Talibans slit throat of. Wall street journals reporter Daniel pearl.
Post a Comment