Followers

Friday, January 25, 2013

விஸ்வரூபத்தால் ஆஸ்கார் வராது! ஆஸ்துமாதான் வரும்!

// அப்படியே கமல், இஸ்லாமை எதிர்த்து படம் எடுத்திருந்தால் கூட அதில் என்ன பிரச்சனை? மத நம்பிக்கைக்களை கேள்வி கேட்பதே தவறு என்ற நிலையை அல்லவா இஸ்லாமியர்கள் உருவாக்க முயல்கிறார்கள். இஸ்லாமிய நாடுகளில், ஒரு "Da Vinci code" நூல் வரமுடியுமா? அல்லது ஒரு பெரியார் தான் வர முடியுமா. வர விடுவார்களா இவர்கள்? மாற்று கருத்துகளே இல்லாத ஒரு மோசமான உலகிற்கு, ஒரு மோசமான கால கட்டத்திற்கு நம்மை இட்டு செல்ல முயல்கிறார்கள் இவர்கள்.//

இது நண்பர் கணேசனின் பின்னூட்டம். "முஸ்லிம்கள் விமர்சனத்தையே எதிர்க்கிற சுபாவம் உடையவர்கள்" என்ற பிம்பத்தை உருவாக்க நினைக்கிறார். இன்று உலகம் முழுவதும் மேலும் இணைய தளம் முழுவதுமே இஸ்லாத்துக்கு எதிரான அவதூறுகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன. ஊடகங்கள் ஒரு சமூகத்தை தீவிரவாதிகளாக சித்தரித்தால் அதன் பலன் எது வரை கொண்டு விடும் என்பதற்கு இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் சில சம்பவங்களை அனுபவித்திருப்போம். முன்பு இவர்களால் ஊடகம் கைகளில் இருந்தால் இஸ்லாமியர்களைப் பற்றிய அவதூறுகளை சபை ஏற்ற முடிந்தது. எதிர்த்து பதில் கொடுக்க முஸ்லிம்களிடம் எந்த ஒரு ஊடகமும் இல்லை. இன்று வரை அதுதான் நிலை.

ஆனால பத்திரிக்கை, டிவி, சினிமா போன்ற ஊடகங்கள் முஸ்லிம்களிடம் தற்போதும் இல்லை என்றாலும் இணையம் என்ற மகத்தான தகவல் தொடர்பு சாதனம் ஒரு நொடியில் பல லட்சக்கணக்கான மக்களிடம் செய்திகளை சேர்ப்பித்து விடுகின்றது. இத்தனை காலம் இவர்கள் முஸ்லிம்களைப் பற்றி பரப்பி வந்த அவதூறுகள் வரிசையாக சரிந்து வருவதை பார்தது மனம் நொந்து போய் உள்ளார்கள். அந்த ஆற்றாமையால் வரக் கூடிய வார்த்தைகளே விமரிசனத்தை எதிர்க்கிறோம் என்பது.

நாம் என்று விமரிசனத்தை எதிர்த்தோம். தமிழகத்தில் எந்த ஒரு மதமாவது முஸ்லிம்கள் நடத்தும் 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியைப் போன்று எங்காவது நடத்தியதுண்டா? தமிழகத்தின் அனைத்து மாவடடங்களின குக் கிராமங்களை கூட விட்டு விடாமல் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்துக்களும் கிறித்தவர்களும் நாத்திகர்களும் எவ்வளவு கோபம் வரக் கூடிய கேள்விகளைக் கேட்டாலும் புன் சிரிப்பு மாறாது முஸ்லிம்கள் தரப்பு பதிலளித்துக் கொண்டிருக்கிறது. கேள்வி கேட்பவரிடம் என்ன கேள்வி என்று முன்பே கேட்டு வாங்கிக் கொள்வதும் இல்லை. இந்த அளவு அனுமதி கொடுக்கப்பட்டு தமிழகத்தில் எங்காவது வேறுமதங்கள் நிகழ்ச்சிகளை நடத்தியது உண்டா? 'இந்து ஓர் இனிய மார்க்கம்' அல்லது 'கிறித்தவம் ஓர் இனிய மார்க்கம்' அல்லது 'நாத்திகம் ஓர் இனிய மார்க்கம்' என்று நிகழ்ச்சிகளை நீங்கள் எங்காவது நடத்தியது உண்டா? உங்களால் இவ்வளவு சுதந்திரமாக மாற்று மதத்தவர்களை கேள்வி கேட்க வைக்க முடியுமா? அவர்கள் வைக்கும் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லத்தான் முடியுமா? அத்தனை இஸ்லாமிய நிகழ்ச்சிகளும் தொலைக்காட்சியில் மறுஒலிபரப்பும் செய்யப்பட்டு உலக மெங்கும் நிகழச்சிகள் போய் சேருகின்றன. தீவிரவாதம், குழந்தை திருமணம், ஜிஹாத், பலதார மணம், முகமது நபி பல திருமணங்கள் செய்தது, தற்போது உலகில் நடக்கும் குண்டு வெடிப்புகள், இந்தியாவில் நடந்த குண்டு வெடிப்புகள் என்று ஒன்று விடாமல் ஹிந்துக்களையே கேள்விகள் கேட்க வைத்து நாங்கள் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறோமே எங்களைப் பார்த்தா சகிப்புத் தன்மை இல்லாதவர்கள் என்கிறீர்கள்?

//எண்ணெய் வற்றினால், இங்கே மத்வாதிகளின் தொந்தி வற்றினால் எல்லாம் நின்று பழைய மாதிரி அப்துல் சம்து,லத்தீப் காலம் போல் திரவிடம் பேசி அமைதியாகி விடுவார்கள். //

அடுத்து இது சார்வாகனின் பிதற்றல். லத்தீப், சமது காலங்களில் முஸ்லிம்களிடம் கல்வியறிவு இல்லை. ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை. வீட்டுக்கு ஒரு பட்டதாரி வருடந்தோறும் வந்து கொண்டிருக்கிறார். சொத்தை விற்றாவது குழந்தைகளை படிக்க வைக்கும் மனப்பாங்கு முஸ்லிம்களிடம் தற்போது உள்ளது. இனியும் திராவிடம் பேசியோ, நோன்பு கஞ்சி குடிததோ, மணி மண்டபம் கட்டியோ, மீலாது மேடைகளில் வீர வசனம் பேசியோ இஸ்லாமியர்களின் ஓட்டை வாங்க முடியாது.

மேலும் எண்ணெய் வளம் இருக்கும் வரைதான் இந்த வஹாபிய எழுச்சிகளெல்லாம். எண்ணெய் தீர்ந்து விட்டால் வஹாபியமும் படுத்து விடுமாம். சார்வாகனுக்கு வரலாறு தெரியவில்லை என்பதால் நாம் அவர் மேல் கோபம் கொள்ள முடியாது. இஸ்லாமிய வரலாறு மிக எழுச்சியாக இருந்த காலமெல்லாம் முஸ்லிம்கள் வறுமையில் இருந்த காலங்களே! இரண்டு பேரிச்சை மழங்களை தின்றும், காய்ந்த இலைகளை கசக்கி தண்ணீரில் நனைத்து குடித்தும் வாழ்ந்த காலங்களில் இஸ்லாம் எழுச்சியோடு இருந்தது. என்று அரபு நாடுகளில் பெட்ரோல் வந்து பணம் புழங்க ஆரம்பித்ததோ அன்று இஸ்லாம் தனது எழுச்சியை சிறிது இழக்க ஆரம்பித்தது. சார்வாகன் சொல்வது போல் அரபு நாடுகளில் பெட்ரோல் தீர்ந்தால் தவ்ஹீது (வஹாபி) இயக்கம் முன்னை விட மிக வீரியமாக தனது செயல்பாடுகளை உலகமெங்கும் கொண்டு வரும்.

யாருக்குமே கையில் பணம் இருந்தால் வம்பு தும்புக்கு போகாமல் தனது சொத்துக்களை காக்கவே முயற்சிப்பர். அதுதான் இன்று உலக ரௌடி அமெரிக்காவுக்கு கேட்பதை கொடுக்கும கட்டாயத்துக்கு சில நாடுகள் தள்ளப்படுகின்றன.

அடுத்து இஸ்லாமிய ஆட்சியை அமைப்பதுதான் நமது குறிக்கோள் என்று பொய்யான பரப்புரையை பலர் பரப்பி வருகின்றனர். இஸ்லாமிய ஆட்சி அமைப்பது என்பது ஒரு முஸ்லிமுக்கு இடப்பட்ட கட்டளை அல்ல. ஐந்து முக்கிய கடமைகளில் இஸ்லாமிய ஆட்சி அமைப்பதும் வராது. இஸ்லாமிய ஆட்சி அமைக்கப் போகிறோம் என்று பிரித்துக் கொண்டு போன பாகிஸ்தானின் இன்றைய நிலையை நாமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். குர்ஆனோ, ஹதீதுதுகளோ இவ்வாறு ஆட்சி அமைக்கச் சொல்லி முஸ்லிம்களுக்கு கட்டளையும் இட வில்லை. யதார்த்தத்தில் பெரும்பான்மை முஸ்லிம்கள் உள்ள நாடுகளை விட சிறுபான்மையாக உள்ள நாடுகளில்தான் முஸ்லிம்கள் தங்களின் கடமைகளை சரிவர செய்து வருவதைப் பார்க்கிறோம். எனவே இஸ்லாமிய ஆட்சி அமைக்கப் போகிறோம் என்ற பீதி தேவையில்லாத ஒன்று.

//மிதவாதிகள் எப்போதுமே இவ்வாறான கடும்போக்கு கட்சிகளிடம் இருந்து விலகி நிற்பதே சாலச் சிறந்தது. இல்லை என்றால் மூளைச் சலவை செய்தும், போலி வாக்குறுதிகளைக் கொடுத்தும் பயன்களை அனுபவித்து விட்டு இயலாக் கட்டத்தில் நட்டாற்றில் அதோகதியாக விட்டுவிட்டு மறைந்துவிடுவார்கள். இன்றையக் காலக்கட்டத்தில் தமிழக முஸ்லிம்களுக்குத் தேவை தொலைநோக்கு சிந்தனையும், சமத்துவம், ஜனநாயகம் மீது நம்பிக்கைக் கொண்ட காயிதே மில்லத் போன்ற ஒப்பற்ற தலைவர்கள் தான். //

'ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்'. அது போல் முஸ்லிம்களின் அரசியல் எதிர் காலத்துக்கு இக்பால் செல்வன் ஆலோசனை வழங்குகிறார். அதிலும் தவ்ஹீத் ஜமாத், தமுமுக போன்ற கட்சிகளில் சில ஆயிரம் பேர்தான் ஆதரவாளர்கள் என்று கூறுவதை இவரது சகாக்களான ராஜ நடராஜனோ, சார்வாகனோ கூட ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஒரு சிறிய போராட்டத்துக்குக் கூட எந்த ஆரவாரமும் இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடி விடுவதை நமது நாட்டு உளவுத் துறை நன்கு அறியும். கனடாவில் உட்கார்ந்து கொண்டு பொஃபேக்களில் தனது பைங்கிளிக்காக காத்துக் கொண்டிருக்கும் இக்பால் செல்வனுக்கு தெரிய வாய்ப்பில்லை அல்லவா! :-)

முஸலிம்கள் படிக்க ஆரம்பித்து விட்டார்கள், சிறந்த அரசியல் தலைமைகளை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள், கல்வி வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு பெற்று முன்னேறி வருகிறார்கள், சமீப காலமாக இந்து முஸ்லிம் ஒற்றுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் இன விடுதலை அடைய பெரியாரின் வழி காட்டுதலான இஸ்லாத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். ஆதிக்க சாதிகளக்கு பொருக்குமா? இந்துத்வாவுக்கு பொருக்குமா!

எனவே சார்வாகன் என்ற பெயரிலும், இக்பால் செல்வன் என்ற பெயரிலும், நச்சுப் பாம்புகள் படமெடுத்து வருகிறது. விஷப் பல்லை எந்த ரீதியில் பிடுங்கி சமூகத்தில் அமைதியை கொண்டு வருவது என்பது முஸ்லிம்களுக்கும் இந்து நடுநிலையாளர்களுக்கும் நன்றாகவே தெரியும். நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள் அதை கச்சிதமாக செய்தும் முடிப்பர்.

விஸ்வரூபம் போராட்டத்துக்கு பிறகாவது நமது சென்சார் துறை சற்று விழித்துக் கொண்டு இது போன்ற பிரச்னைக்குரிய படங்களை வெளியிடுவதை தடை செய்ய முன்வர வேண்டும். இஸ்லாமியரகளை எதை சொன்னாலும் பொருத்துக் கொண்டு செல்வார்கள் என்ற காலம் மலையேறி விட்டது. இடைக்காலத் தடை இந்த படத்துக்கு வந்துள்ளது அறிந்து மகிழ்ச்சி. ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கி விட்டு தனது படத்தை கமல் வெளியிட்டுக் கொள்ளட்டும். அமெரிக்காவை புகழ்ந்தும் முஸ்லிம்களை இகழ்ந்தும் பட்ம் எடுத்தால் ஆஸ்கார் உடனே கிடைத்து விடும் என்று இந்த உலக நாயகனுக்கு யாரோ சொல்லியிருப்பார்கள் போல. அதான் இந்த அம்பி அவசப்பட்டுடுத்து.

'முற்போக்கு பேசும் வைதீகன் மிக ஆபத்தானவன்' என்று முன்பு பெரியார் சொன்னது தற்போது ஞாபகத்தில் வருகிறது.

அவதூறுகளை படமாக எடுத்தால் ஆஸ்கார் வராது அம்பி! படம் நஷ்டமாயிடுத்தே என்று ஆஸ்துமாதான் வரும்! :-) இனி பார்த்து சூதனமா நடந்துக்கோ...வர்ட்டா...

டிஸ்கி: சில வேலைகள் காரணமாக இரண்டு நாள் இணையத்தின் பக்கம் வரமுடியவில்லை. உடன் போனிலும், மெயிலும் பல நாடுகளிலிருந்து 'என்ன ஆச்சு பாய்! உடம்பு சரியில்லையா' என்று அன்போடு நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி! நலமுடன் உள்ளேன். எல்லாப் புகழும் இறைவனுக்கே!
30 comments:

Anonymous said...

அவரது விஸ்வரூபம் என்ற திரைப்படத்திற்கு, இஸ்லாமிய சகோதரர்களையும், அவர்களது உணர்வுகளை சங்கடப்படுத்துவதுமான காட்சிகள் இருப்பதாகக் கூறி, ஆங்காங்கு இஸ்லாமிய சகோ தரர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது சம்பந்தமாக நமது அன்பான வேண்டுகோள்:

இரு சாராரும் சந்தித்து தங்களது உணர்வுகளை ஒருவருக்கொருவர் பரிமாறி, புரிந்துகொண்டு, நட்புறவும், பல்வேறு சமூகத்தவர்கள், கலைஞர்களுக் கிடையே நல்லிணக்கமும் ஏற்படும்படிச் செய்வது தான் சரியானதாக இருக்க முடியும்.
அடிப்படையில் நண்பர் கமலஹாசன் அவர்கள் ஒரு முற்போக்குச் சிந்தனையாளர்; யார்மீதும் வெறுப்பு கொள்பவர் அல்லர்.
எனவே, அவரது திரைப்படத்தில் தெரிந்தோ, தெரியாமலோ, புரிந்தோ, புரியாமலோ இடம்பெற் றுள்ளதாக குற்றச்சாற்று கூறப்படும் நிலையில், இஸ்லாமிய சகோதரர்கள் மட்டுமல்ல, அவர் ஈடு பட்டுள்ள கலைத்துறை, திரையரங்க உரிமை யாளர்கள் அனைவரது நல்லெண்ணத்தையும், பேராதரவினையும் பெறவேண்டியவர். இன்று அவர் விடுத்துள்ள உருக்க மான அறிக்கைபற்றியும் இஸ்லாமிய சகோதரர்கள் சிந்திக்கவேண்டும்.
பேசித் தீர்வு காண முடியாத பிரச்சினையாக இது ஆகக்கூடாது.
பல கோடி ரூபாய் முதலீடு என்பதைவிட முக்கியம், பல தரப்பு மக்களின் ஆதரவு என்ற முதலீடும் முக்கியம்.

எனவே, இஸ்லாமிய சகோதரர்கள் உடனே உணர்ச்சிவயப்பட்டு, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடாமல், பிரச்சினையை ஒருவருக்கொருவர் பேசித் தீர்ப்ப தோடு, சமூகத்திலும், சட்டம் ஒழுங்குப் பிரச் சினைக்கு இடமின்றி நடந்துகொள்வதே அவசர அவசியம்!

இரு தரப்பினருக்கும் நமது அன்பு வேண்டு கோள் இது.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

நாகூர் மீரான் said...

சலாம் சகோ.சுவனப்பிரியன் !

நெத்தியடி போஸ்ட் ....அமெர்க்க காரனின் காலை கமல் கழுவி குடிக்கிறார்..அதனால் தான் லாஸ் எஞ்சலில் இந்த படத்தை திரையிட போயிள்ளார்..ஏன் இதற்க்கு முன் எத்தனையோ படங்கள் நடித்தாரே மன்மதன் அம்பு போன்ற உலக படத்தையெல்லாம் போட்டு காட்டாமல் இதை காட்டுவதிலேயே இவரின் அடிமை குணம் வெளிப்படுகிறது...இதை பற்றிய ஒரு அருமையான பதிவை சகோ.ஆசிக் அஹ்மத் உதவியுடன் படித்தேன்....அதை இங்கே பகிர்கிறேன்.

நாகூர் மீரான் said...

*********************

நேற்றுதான் ‘விஸ்வரூபம்’ பார்த்துவிட்டு வந்தேன். கொஞ்சம் மண்டைக் குடைச்சல். ஆப்கான் தீவிரவாதம் குறித்து ஹாலிவுட்டில் நிறையப் படங்களை எடுத்துவிட்டார்கள். அவை ஒரு சார்பானவை. உலக போலிஸாகத் தன்னை நம்பும் அமெரிக்கா தன்னைத்தானே பரிசுத்த பூமியாக காட்டிக்கொண்டு , உலகத் தீவிரவாதிகளாக இஸ்லாமியர்களைக் காட்டுவதும் அவர்களை ஒடுக்க போரிடுவதுமாக குவிந்துள்ள காட்சிகள் அநேகம். அமெரிக்கா ஒரு சார்பாக காட்சிகளை அமைப்பதில் ஒன்றும் ஆச்சரியமல்ல.

தாலிபான்கள் உருவானதில் அமெரிக்காவில் அரசியல் லாபம் குறித்தோ , அமெரிக்காவின் தீவிரமான பெட்ரோல் திருட்டு குறித்தோ எவ்வித விமர்சனமும் இல்லாமல், இஸ்லாமியன் என்பவன் தீவிரவாதி என்ற பிம்பத்தை உலகம் முழுக்கவும் மக்கள் மனதில் ஏற்றி வைக்க அமெரிக்க இயக்குனர்கள் படாத பாடு பட்டுக்கொண்டிருப்பதில் ஒரு அரசியல் லாபம் இருக்கலாம். ஆனால், இந்தியாவில் உட்கார்ந்துகொண்டு இட்டிலி தோசை திண்ணும் உனக்கு ஏன் அத்தகைய ஒருதலை பட்ச பார்வை என்பதைத்தான் கமலை நோக்கி நாம் கேட்க வேண்டியுள்ளது.

அவர் ஊரில் தலித் மக்களுக்கு நடக்கும் கொடுமை குறித்து கேள்வி எழுப்ப அவருக்கு வக்கில்லை. அவர் மொழி பேசும் தமிழீல மக்களுக்கு இராணுவமும் புலிகளும் மாறி மாறி செய்த கொடுமைகளை விமர்சிக்கத் துப்பில்லை. அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கார் விருதை பெற இப்படியா அவன் மூத்திரத்தைக் கமல் குடிக்க வேண்டும். கடைசியாக ஒரு ஆங்கிலப் படம் இயக்கவும் வாய்ப்பும் கிடைத்துவிட்டது. எப்படியோ எதிரிக்கு எதிரி நண்பர்களாகிவிட்டீர்கள்.

அடிமைகள் எப்போதுமே நல்லப் பெயர் எடுக்க கூடுதலாக ஏதாவது செய்ய நினைப்பார்கள். கூடுதல் விசுவாசம் காட்ட நினைப்பார்கள். அவ்வகையில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகக் காட்டும் அதே வேலையில் அமெரிக்கர்களுக்கு அவர் கொடுக்கும் நற்சான்றிதழ்தான் அடிமை குணத்தின் உச்சம். ஒரு காட்சியில் அமெரிக்க இராணுவம் ஹெலிகப்டரில் இருந்தபடி தாலிபான் படையினரைச் சுடும். அதில் ஒரு குண்டு ஒரு பெண்ணின் மீது பட்டுவிட அமெரிக்க இராணுவ வீரன் மனம் நொந்து வருந்துவான். தாலிபான் படைக்கு பயிற்சியாளராக வரும் கமல், வீட்டில் இருக்கும் படை தலைவனின் மனைவியையும் குழந்தையையும் காப்பாற்ற வேண்டும் என்பான். அதற்கு தாலிபான் தலைவன் சொல்வானே ஒரு பதில்… “அமெரிக்கர்கள் குழந்தைகளையும் பெண்களையும் கொல்ல மாட்டார்கள். எனவே அவர்கள் வீட்டிலேயே இருக்கட்டும்.”

அதே சமயத்தில் இஸ்லாமியர்கள் எவ்வளவு கொடூர மனம் படைத்தவர்கள் எனக்காட்ட வேண்டாமா? நேட்டோ (NATO) படையினர் இருப்பதாகச் சொல்லப்பட்ட இடங்களை தாலிபானியர்கள் தாக்குகின்றனர். அதில் அவர்கள் மக்களே முற்றாக அழிகின்றனர். “இந்தப் பாவமெல்லாம் அமெரிக்கர்களுக்குதான்” என்கிறான் தலைவன். நாகரீக, மனித மாண்பின் உச்சத்தில் அமெரிக்கனும் அநாகரீக, பிற்போக்கின் அடிபாதாளத்தில் ஆப்கான் மக்களும் இருக்கின்றனர் என உளர கமல் 100 கோடி செலவு செய்திருக்க வேண்டாம். தங்க கூடம் என்றால் மலம் என்ன மணக்கவா செய்யும்.

http://vallinam.com.my/navin/?p=1223#more-1223

நன்றி !!!

UNMAIKAL said...

ஒரு கொள்கை அடிப்படையில் வாழும் ஏராளமான இஸ்லாமியர்கள் வாழும் மண் இது,

இங்கு வெளி வரும் படங்களில் இஸ்லாமியர்களை எப்படி சித்திரிக்கின்றனர் என சின்ன குழந்தைகளுக்கு கூட தெரியும் .

அதைப்பற்றியும் நான் சொல்ல வரவில்லை.

அமைதியாக இருந்த இஸ்லாமியர்கள் முதல் முறையாக விஸ்வரூபம் எடுத்து , ஜன நாயக ரீதியில் கமல் படத்துக்கு எதிர்ப்பை காட்டினார்கள் .

இத்தனை நாள் சும்மா இருந்தவர்கள் வீறு கொண்டு எழுவதை பலரால் தாங்கி கொள்ள முடியவில்லை.

நான் முன்பே சொன்னது போல , நாத்திகவாதம் , ரசவாதம் , இருத்தலியம் , அந்த கட்சி , இந்த கட்சி , பல்வேறு இயக்கங்கள் , பல்வேறு மதங்கள் என பல முகமூடிகள் இருந்தாலும் ,

அதற்கு பின் இருப்பதே இந்துத்துவ ஃபாசிசம்தான்.

இந்த பிரச்சினையில் எல்லா முகமூடிகளும் கிழிந்து போய் , ஃபாசிசம் வெளிப்பட்டது.

ஆளாளுக்கு இஸ்லாமியர்களுக்கு அட்வைஸ் சொல்ல கிளம்பி விட்டார்கள்.

இஸ்லாமியராக பிறந்து , இஸ்லாமுக்கு எதிராக கருத்து சொன்னால் முற்போக்கு முத்திரையும் , ஊடக வெளிச்சமும் கிடைக்கும் என கணக்கிட்டு , இஸ்லாமியர்கள் சிலரும்கூட இந்த அட்வைஸ் ஜோதியில் கலந்தது தனிக்கதை.

இஸ்லாமியர்களின் நியாயமான உணர்வுகளுக்கு எதிராக இவர்கள் சொல்லும் கருத்துகளில் இருக்கும் அபத்தங்களை பார்க்கலாம்.

கருத்து:
• ஒரு படம் சென்சாரில் அனுமதி பெற்ற பிறகு அதை எதிர்ப்பது தவறு.

• சென்சார் உறுப்பினர்கள் பலவற்றையும் யோசித்துதான் ஓகே சொல்வார்கள் .

• அதன் பின் எதிர்ப்பது தவறு. இது கருத்து சுதந்திரக்கு எதிரானது .


சென்சார் என்பதைத்தாண்டி , வெகுஜன உணர்வுகளின் அடிப்படையில் எதிர்ப்புகள் ஏற்கப்பட்டுள்ளன.

1. ரஜினியின் பாபா படத்தில் ஒரு பாடலின் வரிகள் , எதிர்ப்பு காரணமாக மாற்றப்பட்டது.

2. விஜய் நடித்த கீதை என்ற படத்தின் பெயர் எதிர்ப்பு காரணமாக மாற்றப்பட்டது.

3. கமல் நடித்த சண்டியர் படத்தின் பெயர் , எதிர்ப்பு காரணமாக மாற்றப்பட்டது.

4. எதிர்ப்பு காரணமாக டேம் 999 படம் தடை செய்யப்பட்டது.
சொல்லிக்கொண்டே போகலாம்.

யாராவது ஒரு தரப்பை ஒரு படம் புண்படுத்தினால் , அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்பது தமிழ் நாட்டில் ஏற்கனவே இருக்கும் நிலைதான்.

அந்த எதிர்ப்பின்போதெல்லாம் கருத்து சுதந்திரன் பற்றி பேசாமக் சும்மா இருந்து விட்டு , இஸ்லாமியர்கள் குரல் கொடுக்கும்போது மட்டும் அட்வைஸ் கொடுப்பது கேலிகூத்து.


கருத்து:
• இஸ்லாமியர்களுக்கு சகிப்பு தன்மை குறைவு. அதனால்தான் எதிர்க்கிறார்கள்.

• இந்துக்களை கிண்டல் செய்து படம் எடுத்தால் அவர்கள் இவ்வளவு எதிர்ப்பு காட்ட மாட்டார்கள்.

யாராக இருந்தாலும் எதிர்ப்பு காட்டத்தான் செய்வார்கள் என்பதைத்தான் ஏற்கனவே பார்த்து விட்டோமே..

இன்னொன்றும் பார்க்க வேண்டும் .

கமல் தான் சார்ந்த பிராமண இனத்தையோ, இந்து மதத்தையோ விமர்சித்து படம் எடுத்தால் , அவ்வளவு எதிர்ப்பு இருக்காது .

சம்பந்தம் இல்லாமல் இன்னொரு இனத்தையோ , மதத்தையோ சீண்டுவதுதான் பிரச்சினை.


கருத்து:

• எங்கள் மதத்தை சார்ந்தவனை வில்லனாக காட்டகூடாது என எல்லா மதத்தினரும் கேட்க ஆரம்பித்தால் , எப்படி படம் எடுப்பது.....

ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தவனை வில்லனாக காட்டுவது தவறல்ல.

ஆனால் குறிப்பிட்ட மதம்தான் வன்முறைக்கு காரணம் என காட்டுவது தவறு.


கருத்து:
• இஸ்லாமியர்கள் இவ்வளவு தீவிரமாக எதிர்ப்பதே தீவிரவாதம்தானே..

கட்சிக்கொடி கட்டிய காரில் வந்து பல தவறுகள் செய்கிறார்கள்.

அந்த கட்சிக்கொடியுடன் படம் எடுக்க முடியுமா?

சில ஜாதிக்கட்சியினர் வன் முறையில் ஈடுபடுகிறார்கள்.

அந்த கட்சி தலைவர்களின் படத்துடன் வன்முறையாளர்கள் நடமாடுவது போல எடுக்க முடியுமா?

அதை எல்லாம் யாரும் காட்டுவதில்லை.

ஆனால் நடப்பதைத்தானே காட்டுகிறேன் என நேரடியாக இஸ்லாமிய அடையாளத்துடன் எதிர்மறை காட்சிகளை காட்டுவதால்தான் அவர்கள் எதிர்க்க வேண்டி இருக்கிறது.

இதே போன்ற நிலை , ஓர் அரசியல் கட்சிக்கோ , ஜாதி அமைப்புகளோ ஏற்பட்டு இருந்தால் , அவர்கள் எதிர்ப்பு இதை விட பல மடங்கு அதிகமாக இருந்து இருக்கும்.


கருத்து:
• ஒரு சினிமா வெளி வரும் முன்பே சிறப்பு காட்சி கேட்டு , இப்படி ரகளை செய்வது சரியா?

இப்படிப்பட்ட சிறப்பு காட்சிகளுக்கு ஏராளமான முன் உதாரணங்கள் உள்ளன.

மணி ரத்தினம் எடுத்த பம்பாய் படம் , பால் தாக்கரேவுக்கு காட்டப்பட்ட பின் தான் அங்கு ரிலீஸ் ஆனது ,

பாபா படம் சர்ச்சையில் சிக்கியபோது , தன் படத்தில் யாரையும் புண்படுத்தவில்லை என்றும் ,

வேண்டுமானாலும் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்து , தவறுகள் இருப்பின் திருத்திக்கொள்வதாகவும் ரஜினி சொன்னார்.

இப்படி ஆயிரம் முன் உதாரணங்கள் உள்ளன.

எனவே இஸ்லாமியர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை வழங்கப்படவில்லை


Thanks to source:http://www.pichaikaaran.com/2013/01/blog-post_25.html

UNMAIKAL said...

ரஜினி: விஸ்வரூபத்தை சரி செய்து வெளியிட வேண்டுகோள்.

விஸ்வரூபம் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க கலை போர்வையில் விஷத்தை விதைக்கும் ஊடக தீவிரவாதம் என்பதை ரஜினியும் உணர்கிறார்

மேலும் படிக்க‌ >>>>> ரஜினி : விஸ்வரூபத்தை சரி செய்து வெளியிட வேண்டுகோள்

.

UNMAIKAL said...

நச்சுப் பாம்புகள் சார்வாகன் என்ற பெயரிலும், இக்பால் செல்வன் என்ற பெயரிலும் இணைய தளங்களில் உட்டாலக்கடி வேலைகள் செய்து படமெடுத்து வருகிறது.

விஷப் பல்லை எந்த ரீதியில் பிடுங்குவது என்பது முஸ்லிம்களுக்கும் இந்து நடுநிலையாளர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

தனக்கு தேவையானவனை சொறிந்து விடுவதற்கும், பிடிக்காதவனை அடித்துப் பார்ப்பதற்கும் விமர்சனம் என்பதை கையில் எடுத்துக் கொண்டு தடித்தனம் செய்பவர்கள் சுற்றித் திரிகிறார்கள்.

தங்களின் கிறுக்கல்களை பிரசுரம் செய்வது மட்டுமே தமது வாழ்வின் குறிக்கோள் என்று திரியும் இந்தப் போலிகள் ஊற்றிக் கொடுப்பதில் ஆரம்பித்து கூட்டிக் கொடுப்பது வரை எந்த Extreme க்கும் போகும் சூழல்தான் இருக்கிறது.

பொல்லாதது சொல்லித் திரியும் நோய்க்கூறுகளும் இவர்கள்தான்.

“புழுத்த நாய் கூட இவர்கள் எழுதுவதன் குறுக்காக போகாவிட்டாலும்” கூட இந்தத் தடியர்கள் தம்மை அடுத்த இணைய இலக்கிய பிதாமகன்கள் என்று நினைத்துக் கொள்ளும் காமெடியை சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்த போலிகளுக்கு பின்னால் இருக்கும் குண்டாஸ் வேறொரு ரகம்.

கையில் இணையத்தை வைத்துக் கொண்டு சுள்ளான்களை தூண்டிவிட்டு ‘என்ஜாய்’ செய்து கொண்டிருக்கிறார்கள்.

தாம் இருப்பதால்தான் இந்த உலகமே சுழல்கிறது என்ற நம்பிக்கையுடைய காமெடி பீஸூகள்.

ஒரு விமர்சனத்தைக் கூட எதிர்கொள்ள முடியாமல் குதிக்கிறான் என்ற அஸ்திரத்தை கையில் எடுப்பார்கள்.

எடுத்துவிட்டு போகட்டும்.

இவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியப்போவதில்லை- இருந்தாலும் சொல்லிவிடலாம்.

உண்மைகளை அறிந்தவர்களுக்கு உண்மைகளை மனப்பூர்வமாகத் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த உட்டாலக்கடி வேலைகள் எல்லாம் ***ருக்குச் சமானம்.

நாகூர் மீரான் said...

சார்வாகனின் சில்லறைத்தனம் :

சகோ.சுவனப்பிரியன் ,சார்வகனை ஒரு பொருட்டாய் கருதுவதை நேற்றுடன் முடித்து விட்டேன்...காரணம் முதுகெலும்பு இல்லாமல் சாமுராய் எனும் பெயரில் வினவு தளத்தில் வந்து கமெண்ட் சில்லரைதனமாய் போட்டதை பாருங்கள் !

-----------------------------------

samurai
January 25, 2013 at 4:06 pm
Permalink 4
நல்ல பதிவு,
பி.ஜே ஒரு __________ என்பது பெரும்பானமை முஸ்லிமக்ளுக்கு தெரிந்து இருந்தாலும் ,தவுகீத குண்டர் படை கொடு சமூக விலக்கம் ஆகும் சூழல் உள்ளதால் அஞ்சியே வாழ்கின்ற்னர்.கட்டைப் பஞ்சாயத்தும் அதிகம்!!

மதவாதிகளுக்கு சிந்திக்கும் சொந்த மதத்தினரே முதல் எதிரி என்பது பி.ஜே யின் பொறுக்கித் தனமான கருத்தில் தெரிகிறது. இந்த் ஆள் சொல்லும் குரான்,ஹதிது கேட்ட பின்னால் நாலு பேரு.

சவுதியில் இருந்து நிறைய கிடைக்கும் போல் இல்லவிட்டால் குறைந்த காலத்தில் அரசியல்வாதியை விட அதிக வளர்ச்சி.

அடாவடிபேச்சில் ஒரு ஊனமுற்ற சொந்த மத சகோத்ரனை மதிக்க தெரியாத்வனுக்கு ஆன்மீகம் ஒரு கேடா!!
//I read your article and went to the link of PJ letter .But i dont find any words as you highlighted.//
திருடன் மாத்தி இருப்பான்!!

//Then the letter written by PJ seems to be very logic. The postmortem report mentioned that the child was killed which all of you including manushyaputiran in his article in nakkheeran did not highlight.//
நீங்கதான் தவுகீது ஆளு. போஸ்ட்மார்டம் குறித்து இன்னும் கொஞ்சம் த்கவல் சுட்டி கொடுங்க வஹாபி அண்ணே!

//As PJ demanded you can go for public deabte and then truth will come out
even those who read PJ letter will understand the truth//

பி.ஜே வின் குப்ரா மேட்டருக்கு முதலில் நேருக்கு நேர் விவாதம் செய்யுங்கள் அய்யா!!

----------------------------------

samurai
January 26, 2013 at 1:11 am
Permalink 42
இப்பதிவில் விவாதிக்கும் பி.ஜேவின் அல்லக்கைகளே

இறந்த குழந்தையின் போஸ்ட் மார்ட்டம் உங்களிடம் இருக்கிறதா ஆமாம் /இல்லை என சொல்ல வேண்டும்.

போஸ்மார்டம் அறிக்கை இருந்தால் அல்லக்கைக்கள் பதிவிடுங்கள் இல்லையேல் ___ மூடுங்கள்!!! இதில் என்னத்தை விவாதிப்பது ?
போஸ்ட் மார்ட்ம் இல்லாம்லே தீர்ப்புக் கொடுத்ஹான் சவுதி இதை படிங்க முட்டாள்களே!!
http://www.asiantribune.com/news/2011/06/16/rizana-nafeek-sentence-death-without-postmortem-report

**
பி.ஜே ஏமாற்றுக் காரான் ஆனால் சவுதி உண்மையான ஷரியா பின்பற்றுகிறது ஏனும் அடிப்படைவாதிகளே

சவுதிக்காரன் இபின் சவுத் அமெரிக்கவின் பிரதிநிதி என்பதை ஏற்கிறீர்களா இல்லையா? ஆம்/இல்லை

***

இந்த இரண்டிலும் இல்லாத சுன்னத் ஜமாத், இதர பிற முஸ்லிம் ஆட்களே
ஷரியாவில் உள்ள பலவகைகளில் எது சரி?

இப்போது ஷரியா உலகில் எந்த நாட்டில் மிக சரியாக அமல் படுத்தப்படுகிறது?

எல்லாரும் சேர்ந்து கூச்சல் போட்டல் சவுதி அடிமை பீ.சே தப்பிச்சுடுவான்! ஆகவே பொறுமை!

------------------------------

இவரெல்லாம் ஒரு மனிதர்..!

UNMAIKAL said...

ரஜினிகாந்த் அவர்களுக்கு தமுமுக தலைவர் கடிதம்
Friday, 25 January 2013

இஸ்லாமியர்களின் நண்பராக விளங்கும் திரு. ரஜினிகாந்த் அவர்கள், தனது ஆருயிர் நண்பர் திரு. கமலஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்டிருக்கும் தடையை கவனத்தில் கொண்டு, இஸ்லாமிய சமூகத்திற்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியிருக்கிறார்.

விஸ்வரூபம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்தின் அறிக்கையை தொடர்ந்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயி, ரஜினிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில்,
அன்புச் சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்கள் பண்பட்ட மனிதர், ஆன்மீகவாதி. யாரையும் காயப்படுத்தும்படி பேசாதவர்.

அவரது திரைப்படங்களில் கூட எந்த ஒரு தனி மனிதரையும் சமூகத்தையும் தாக்கி வசனமோ காட்சிகளோ இடம்பெறாது.

1998ஆம் ஆண்டு கோவை மாநகரில் தொடர் குண்டுகள் வெடித்து தமிழகமே பதற்றமாக இருந்த சமயத்தில், சீனாவில் சுற்றுப்பயணத்தில் இருந்த திரு. ரஜினிகாந்த் அவர்கள் பாதியிலேயே சென்னைக்குத் திரும்பி வந்தார்.

"எனது அருமை இஸ்லாமிய சகோதரர்கள் இந்தப் பாதக செயலை செய்திருக்க மாட்டார்கள்' என்று கூறி தமிழகத்தை சூழ்ந்திருந்த பதற்றம் தணிய காரணமாக இருந்தார்.

அன்று அவரது ஆதரவான குரல், முஸ்லிம்களுக்கு, வெந்த புண்ணில் மருந்திடுவதாக அமைந்தது.

இன்றும் அதை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறோம்.

நண்பர் திரு. கமலஹாசன் அவர்களும் முஸ்லிம் சமூகத்தின் மீது நட்பும் சகோதர வாஞ்சையும் கொண்டவர் தான் என்பதை நாங்கள் அறிவோம்.

அவர், முற்போக்கு சிந்தனைக் கொண்டவர்.

பிறரது உணர்வுகளைப் புரிந்து கொள்பவர்.

1992ல் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து நண்பர் திரு. கமலஹாசன் அவர்கள், பிரதமர் நரசிம்மராவை நேரில் சந்தித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்தார் என்பதையும் நாங்கள் மறக்கவில்லை.

இப்போதும் நாங்கள் கமலஹாசனை எதிரியாகக் கருதவில்லை.

அவர் எடுத்திருக்கும் திரைப்படம் ஏற்படுத்தப் போகும் பாதிப்பைக் கருத்தில் கொண்டுதான் எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம்.

நாங்கள் விஸ்வரூபம் திரைப்படம் விஷயத்தில் பொறுமைக் காத்தோம்.

மூன்று மாதங்களுக்கு முன்னரே திரைப்படத்தை காண்பிக்கும்படி கேட்டுக் கொண்டோம்.

அவர் காலம் தாழ்த்திக் கொண்டே வந்தார்.

திரையிட வெகு சமீபமாகத்தான் படத்தைப் போட்டுக் காண்பித்தார்.

படத்தில் அவர் சித்தரித்திருக்கும் காட்சிகள் எங்களைக் கவலையுறச் செய்தது.

உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் விரும்பத்தகாத செயல்கள் காரணமாக முஸ்லிம்களாகிய நாங்கள் ஏற்கனவே மனவேதனை அடைந்திருக்கிறோம்.

காயம் பட்டிருக்கும் எங்களை ஒரு நண்பராக இருந்துகொண்டு திரு.கமலஹாசன் அவர்களும் இப்படியானதொரு திரைப்படத்தை எடுத்திருப்பது தான் எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.

நமது நாட்டில் சினிமாவின் மூலமாக புகழ்பெறும் ஒருவர் முதலமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆகமுடியும் என்றால்,
அதே சினிமாவைக் கொண்டு ஒரு சமூகத்தைக் குற்றவாளியாக சித்தரிக்கவும் முடியும்.

இதை ஏன் திரு. கமலஹாசன் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் எங்கள் வருத்தம்.

இதனை சகோதரர் ரஜினிகாந்த் அவர்கள் பரிசீலிக்க வேண்டும்.

விஸ்வரூபம் படம் குறித்த திரு. ரஜினிகாந்த் அவர்களின் ஆலோசனைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்,

(ஜே.எஸ்.ரிபாயீ)
தலைவர், தமுமுக

mohamed said...

சலாம் சகோ சுவனப்பிரியன்,
மாஷா அல்லாஹ் அருமையான ஆக்கம்.தெளிவான பதில்கள் சகோ.இந்த போராட்டத்தின் மூலம் இனிமேல் நம் தமிழகத்தில் படம் எடுப்பவன் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து படம் எடுப்பதை பற்றி யோசிப்பான்.

dheen said...

கூத்தாடி கமல் 100 கோடி செலவில மட்டுமே படம் எடுக்கிறான்.
ஆனால் 100 ஆயிரம் கோடி மக்கள் மனதில் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று விதைக்கிறான்.
பணம் எளிதாக கிடைத்துவிடும் ஆனால் மனதில் விதைத்ததை அளிக்கமுடியாது.

UNMAIKAL said...

கடைசி நேரத்தில் பத்ம விருதுப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட கமல் பெயர்... விஸ்வரூபம் சர்ச்சை காரணம்?

Posted by: Shankar Published: Saturday, January 26, 2013, 16:22 [IST]


டெல்லி: மத்திய அரசின் உயரிய விருதான பத்பூஷனுக்கு பரிந்துரைக்கப்பட்ட கமல்ஹாஸனின் பெயர் கடைசி நேரத்தில் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகவும்,
விஸ்வரூபம் சர்ச்சைதான் இதற்குக் காரணம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசு நேற்று பத்ம விருதுகளை அறிவித்தது.

விருது பெறுவோர் பட்டியலில் தமிழகத்திலிருந்து கமலுக்கு பத்மபூஷன் பரிந்துரைக்கப்பட்டிருந்ததாம்.

ஆனால் கமல் மீதான தற்போதைய பிரச்சினைகள் மத்திய அரசு அதிகாரிகளை கடைசி நேரத்தில் யோசிக்க வைத்துள்ளன. விஸ்வரூபம் படத்துக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளன.

இதையடுத்து தமிழகத்தில் இப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

வேறு சில மாநிலங்களிலும் தடை செய்யப்பட்டு உள்ளது.

இந்த சூழ்நிலையில் கமலுக்கு பத்மபூஷன் விருது வழங்குவது பொருத்தமாக இருக்காது என்று கருதி விருது பெறுவோர் பெயர்களை அறிவிப்பதற்கு முந்தைய நாள் பட்டியலில் இருந்து கமல் பெயரை கடைசி நேரத்தில் நீக்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read more at: http://tamil.oneindia.in/movies/heroes/2013/01/kamal-s-name-removed-from-padma-award-168638.html

UNMAIKAL said...

கமல்ஹாசன் கருத்துக்கு தமுமுக வன்மையாக கண்டனம்
Saturday, 26 January 2013 11:01

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜே.எஸ். ரிபாயி வெளியிடும் கண்டன அறிக்கை:

விஸ்வரூபம் படம் தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து கமல்ஹாசன் ஏதேதோ கூறுகிறார்.

முதலில் கலாச்சார பயங்கரவாத்தை எதிர்கொள்வேன் என்றார்.

இப்போது முதுகில் குத்திவிட்டார்கள் என்கிறார்,

தேசப்பக்தி உள்ள முஸ்லிம்கள் எதிர்க்க மாட்டார்கள் என்கிறார்.

முஸ்லிம்களை கொச்சைப் படுத்த கமல் எடுத்திருக்கும் விஸ்வரூபம் படப் பிரச்சனை கருத்து தீவிரவாதமாகவே பார்கிறோம்.

படத்தை பார்க்க காலத்தை நீட்டித்தார்.

படத்தை இறுதிவரை பார்த்தப் பின் அதிர்ச்சி அடைந்ததால் அவருடன் மேலும் ஏதும் பேசாமல் கிளம்பினோம்.

அவர் மீது எங்களுக்கு இருந்த நம்பிக்கையை படம் தகர்த்து விட்டது.

இந்தப் படத்தில் எந்த மாச்சரியங்களும் இடம் பெறாது என்றும், கமலுடன் நடந்த முதல் இரண்டு சந்திப்புகளின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருக்காது என்ற நம்பிக்கையும் எங்களுக்கு ஏற்பட்டது.

ஆனால் அவருடைய அலுவலகத்தில் இந்த படத்தை நாங்கள் பார்த்த போது அங்குலம் அங்குலமாக படம் முழுவதும் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு விரோதமாகவும் அனைத்து காட்சிகளும், கதாபாத்திரங்களும் ஒரு வெறுப்பு பிரச்சாரமாகவே அமைந்திருந்தது

இதன் காரணமாகதான் இப்படத்தை தடை செய்ய தமிழக அரசிடம் கோரினோம்.

படத்தை பார்த்த பின்னர் நாங்கள் படத்திற்கு கமலிடம் நற்சான்றிதழ் எதுவும் தரவில்லை

தேசப்பற்று இருக்கின்ற காரணத்தால் தான், நாட்டில் ஏதும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துவிடக் கூடாது என்ற அக்கறையில் தான் களத்தில் இறங்கினோம்.
எனவே கமல்ஹாசன் அவர்களின் கருத்தை தமுமுக வன்மையாக கண்டிக்கிறது.


இவண்,
(ஜே.எஸ்.ரிபாயீ)

SOURCE: TMMK

jaisankar jaganathan said...

உங்க அல்லாவும் குரானும் ஏன் கமலைப்பாத்து பயப்படுறீங்க?

Anonymous said...

* சிறுமி மலாலா இஸ்லாம் மதவெறியர்களால் சுடப்பட்டப்போது, உங்கள் மதம் களங்கப்படவில்லையா ??

* ஆயிரமாயிரம் மக்களை கொன்று பெண்களின் கற்பை கொடூரமாக சூறையாடிய இடிஅமினுக்கு அடைக்கலம் கொடுத்த ஒரே நாடு சவூதி அரேபியாதான். அப்பொழுது உங்கள் மதம் களங்கப்படவில்லையா ??
...
* தாலிபான்கள் மற்றும் அல்கொய்தாக்கள் ஆங்காங்கே நடத்திவரும் தாக்குதல்களால் அப்பாவி மக்களும் குழந்தைகளும் தினந்தினம் கொல்லப்படுகிறார்களே இது உங்கள் மதத்திற்கு களங்கமில்லையா ??

* தலாக் விவாகரத்து முறை,சிறுவயது திருமணம்,பெண்கள் விளையாட்டுக்களில் கலந்துக்கொள்ளத் தடை,உடம்பு முழுக்க பர்தா அணிய வைத்தல்,குற்றம் சரியாக விசாரிக்கப் படாமலேயே மரணத் தண்டனை மற்றும் உறுப்புகளை அறுத்தல் போன்ற பிற்போக்குத்தனமான கொடுமைகள் இஸ்லாம் மதவாதிகளால் பரப்பப்பட்டு உங்கள் மதத்தில் அடிமைத்தனம் நிலவுகிறதே இவற்றால் உங்கள் மதம் களங்கப்படவில்லையா ??

* படிக்கவேண்டிய வயதில் மதவாதிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு சிறுவர்களும் இளைஞர்களும் கையில் ஆயுதம் ஏந்துகிறார்கள்.மேலும் பலப்பல கொடுமைகள் இஸ்லாம் மதத்தில் நடந்து வருகின்றன.இதற்கெல்லாம் குரல் கொடுக்காத நீங்கள் விஸ்வரூபம் படம் வந்தால் களங்கப்பட்டு விடுவோம் என்று மூடத்தனமாக சிந்திப்பது ஏனோ ??

நியாயமாகப் பார்த்தால் கமல்ஹாசன் முஸ்லிம் அமைப்புகளுக்கு படத்தை போட்டுக் காட்டியதே தவறு.இதுப்போன்ற செயல்கள் தான் மதவாதிகளை ஊக்கப்படுத்துவதாக அமையும்.தமிழக அரசு படத்தை பார்க்காமலேயே முஸ்லிம் அமைப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விஸ்வரூபம் படத்தை தடை செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.கமல் என்ற கலைஞன் கோடி கோடியாக சம்பாதித்து ஹைதராபாத்,பெங்களூரு,மும்பை போன்ற எல்லா இடங்களிலும் பங்களாவும் மண்ணுமா வாங்கி சொத்து சேர்க்காமல் தான் சம்பாதித்ததை சினிமாவிலேயே போடும் உன்னத கலைஞன்.கமல்ஹாசனுக்கு தற்போது கடன் சுமையோடு மன உளைச்சலும் தான் அதிகம்.மதவாதிகளை ஊக்குவிக்கும் விதமாக தடை விதித்து இனிவரும் படங்களை எதிர்க்க துவக்கப்புள்ளி வைத்துள்ளது அரசு.விஸ்வரூபம் படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும்.

UNMAIKAL said...

தேவையெனில் உச்சநீதிமன்றத்துக்கும் போவோம்... - முஸ்லிம் அமைப்புகள் அறிவிப்பு

சென்னை: கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படம் எக்காரணத்தைக் கொண்டும் வெளியாகக் கூடாது. தேவைப்பட்டால் இதற்காக உச்சநீதிமன்றத்துக்கும் செல்லத் தயாராக உள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் கூட்டாக அறிவித்துள்ளன.

விஸ்வரூபம் படத்தின் மீதான தடையை நீக்குவதா இல்லையா என்பது குறித்து நாளை மறுநாள் சென்னை உயர்நீதிமன்றம் அறிவிக்கவிருக்கிறது.

இதற்காக உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று விஸ்வரூபம் படத்தை சென்னையில் பார்த்தனர்.

இதற்கிடையே, விஸ்வரூபம் படத்தின் மீதான தடை ஒருவேளை நீக்கப்பட்டால், அதே நாளில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இஸ்லாமிய அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

24 அமைப்புகளும் கூட்டாக உச்ச நீதிமன்றத்தை அணுகப் போவதாக அறிவித்துள்ளனர்.

விஸ்வரூபம் படத்தை ஏற்கெனவே ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் திரையிட முடியாத சூழல் உள்ளது. கேரளாவில் இந்தப் படம் வெளியான இரண்டு நாளில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

எனவே பிற மாநிலங்களிலும் இந்தப் படத்துக்கு தடை கோர முஸ்லிம் அமைப்புகள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/01/islamic-organisations-decide-approach-supreme-court-168642.html

Nasar said...

அஸ்ஸலாம் அலைக்கும் சகோ....
சில வருடங்களுக்கு முன்பு ஏதோ ஒரு படம் [படம் பெயர் நினைவில்லை..சினிமா நமக்கு ரொம்ப தூரம்]
அதுல AR ரஹ்மானின் தங்கை 'மலமல மல்லே மல மருதமல' குத்து பாட்டு பாடியிருப்பார் அதற்கு நடிகை மும்தாஜ் டான்ஸ் ...இந்த பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்தான் இந்து முன்னணி இராமகோபாலன் , காரணம் பழனி மருதமலையை குத்து பாட்டு போல ஒரு முஸ்லிம் பெண் பாடியதாலும் , முஸ்லிம் பெண் மும்தாஜ் குத்து டான்ஸ் ஆடியதாலுமே .....ஒரு பாட்டுக்கே இவ்வளவுனா , ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்தை வீணாக கமல் சீண்டியதை சும்மா பார்த்துக்கொண்டு இருக்கமுடியுமா ????
தடைக்கு பிறகு படம் வந்தாலும் எதிர்பார்த்த வசூல் கிட்டாது ...இப்பவே குவைத்தில் DVD கிடைப்பதாக உறுதியான தகவல் ..
இனி கமல் மட்டுமல்ல வேற யாரும் இம்மாதிரியான படமெடுக்க கனவிலும் யோசிக்க மாட்டாங்க .....பாவம் கமல், வசூலில் பலத்த அடி
வாங்கியிருக்கிறார்

viyasan said...

இந்தியாவின் அர‌சிய‌ல‌மைப்பில் உறுதிப்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌ பேச்சு, க‌ருத்துச் சுத‌ந்திர‌த்துக்கு முஸ்லீம்க‌ள் ச‌வால் விடுகிறார்க‌ள். இனிமேல் முல்லாக்க‌ளின் ஆத‌ர‌வில்லாம‌ல் எந்த‌ப்ப‌ட‌மும் இந்தியாவில் வெளிவ‌ர‌முடியாது போலிருக்கிற‌து.

Nasar said...

இந்திய இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு காரணம், இந்திய இந்து தீவிரவாதம். சர்வதேசிய இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு பொறுப்பு, அமெரிக்க அரசின் தீவிரவாதம்.
இந்திய இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்து, உன்னை போல் ஒருவன் என்று படம் எடுத்தபோது, இந்திய இந்து தீவிரவாதம் பற்றி வாய் திறக்கவில்லை ரங்கராஜ நம்பி.
நன்றி வே . மதிமாறன்

Anonymous said...

இதற்கு தான் உங்களால் முடியம், படத்தை நிறுத்த. உங்கள் கூட்டதவரின் எந்த கேடு கெட்ட செயல்களையும் நிறுத்த முடியாது. வரவர தமிழ் நாட்டில் முட்டாள் கூட்டத்தின் அட்டூளியம் அதிகம் ஆகி விட்டது. கமல் என்ன இல்லாததையா எடுத்து விட்டார். உண்மையை எதிர்கொள்ள துப்பில்லை என்றால் இப்படி தான் இருக்கும். படம் வெளிவந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று அரசை மிரட்டும் அளவுக்கு இந்த பீடைகளின் ஆட்டம் எல்லை மீறி போய்கொண்டு இருக்கிறது. தன்னை திருத்தி கொள்ள துப்பில்லாத கழிசடைகள் நல்ல பிள்ளை வேஷம் போட்டு திரிவது கேலி கூத்து. இனி சினிமா படம் எடுப்பவர்கள் இவர்களுக்கு போட்டு காட்டிதான் ரிலீஸ் செய்ய வேண்டும் போல் இருக்கிறது. என்னவோ இவர்கள் எல்லாம் தீவிரவாதம் செய்ததே இல்லை போலவும் புதிதாக இவர்களை தீவிரவாதிகள் என்று சொல்வது போலவும் ஓவராக துள்ளி கொண்டு இருக்கிறார்கள். தன்னை முஸ்லிம் என்றும் மதத்துக்காக போராடுகிறேன் என்றும் சொல்லிகொண்டு தீவிரவாதம் செய்பவனை முஸ்லிம் தீவிரவாதி என்று தான் சொல்லமுடியும், தாலிபான்களை இந்து தீவிரவாதிகள் என்று சொல்லலாமா? தீவிரவாதியை தீவிரவாதி என்று சொன்னால் முட்டாள் கூட்டத்திற்கு ஏன் கோபம் வரவேண்டும். உங்களுக்கு கோபம் வருகிறது , அதை தடை செய்ய சொல்கிறீர்கள் என்றால் அந்த கூட்டத்தில் நீங்களும் ஒருவர் தான். தீவிரவாதம் செய்பவன் மட்டுமல்ல, அதை ஆதரிப்பவனும் தீவிரவாதிதான்.

ஒசாமா பின்லேடன் செய்ததற்காக சென்னையில் தொழுகை நடத்திய கூட்டம் தானே நீங்கள், உங்கள் யோக்கியதை இப்போது தான் உலகிற்கு தெரிய வருகிறது
விஸ்வரூபம் விவகாரத்தில் ஓவர் துள்ளாட்டம் எல்லாருக்கும் எரிச்சலை தான் தருகிறது.

சுவனப் பிரியன் said...

திரு வியாசன்!

//இந்தியாவின் அர‌சிய‌ல‌மைப்பில் உறுதிப்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌ பேச்சு, க‌ருத்துச் சுத‌ந்திர‌த்துக்கு முஸ்லீம்க‌ள் ச‌வால் விடுகிறார்க‌ள். இனிமேல் முல்லாக்க‌ளின் ஆத‌ர‌வில்லாம‌ல் எந்த‌ப்ப‌ட‌மும் இந்தியாவில் வெளிவ‌ர‌முடியாது போலிருக்கிற‌து.//

இதற்கு முன்னால் எத்தனையோ படங்கள் இஸ்லாமியர்களை சம்பந்தப்படுத்தி வந்துள்ளதே! அப்போது யாராவது எதிர்ப்பு தெரிவித்தார்களா? இதற்கு மட்டும் ஏன் இந்த எதிர்ப்பு என்பதை பட்ம் பார்த்தவர்கள் விளக்கியிருக்கிறார்கள். படித்து தெளிவு பெறுங்கள்.

சினிமாதானே என்று அலட்சியமாக ஒதுக்க முடியாது. தொடர்ந்து இது போல் திட்டமிட்டு பரப்பப்படும் செய்திகளால் ஒரு சமூகமே குற்றபரம்பரையாக எடுத்துக் காட்டப்படுகிறதே இது நியாயமா?

சுவனப் பிரியன் said...

சலாம் சகோ நாகூர் மீரான்!

//நெத்தியடி போஸ்ட் ....அமெர்க்க காரனின் காலை கமல் கழுவி குடிக்கிறார்..அதனால் தான் லாஸ் எஞ்சலில் இந்த படத்தை திரையிட போயிள்ளார்..ஏன் இதற்க்கு முன் எத்தனையோ படங்கள் நடித்தாரே மன்மதன் அம்பு போன்ற உலக படத்தையெல்லாம் போட்டு காட்டாமல் இதை காட்டுவதிலேயே இவரின் அடிமை குணம் வெளிப்படுகிறது...இதை பற்றிய ஒரு அருமையான பதிவை சகோ.ஆசிக் அஹ்மத் உதவியுடன் படித்தேன்....அதை இங்கே பகிர்கிறேன். //

ஹாலிவுட்டுக்கு செல்ல வேண்டும்: ஆஸ்காரை அள்ள வேண்டும் என்ற ஆசை ஒரு மனிதனை எந்த அளவு இழுத்துச் செல்லும் என்பதற்கு கமல் ஒரு சிறந்த உதாரணம்.

//சகோ.சுவனப்பிரியன் ,சார்வகனை ஒரு பொருட்டாய் கருதுவதை நேற்றுடன் முடித்து விட்டேன்...காரணம் முதுகெலும்பு இல்லாமல் சாமுராய் எனும் பெயரில் வினவு தளத்தில் வந்து கமெண்ட் சில்லரைதனமாய் போட்டதை பாருங்கள் !//

அவரை சரியாக புரிந்து கொண்டதால்தான் அவர் தளத்துக்கு செல்வதையும் குறைத்துக் கொண்டேன். அவர் வைக்கும் கேள்விகளுக்கு நமது தளததில் பதிலை கொடுத்து விட்டு நமது வேலையை பார்ப்போம். அதுவே சரியான வழி.

சுவனப் பிரியன் said...

சகோ உண்மைகள்!

//கடைசி நேரத்தில் பத்ம விருதுப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட கமல் பெயர்... விஸ்வரூபம் சர்ச்சை காரணம்?

Posted by: Shankar Published: Saturday, January 26, 2013, 16:22 [IST]


டெல்லி: மத்திய அரசின் உயரிய விருதான பத்பூஷனுக்கு பரிந்துரைக்கப்பட்ட கமல்ஹாஸனின் பெயர் கடைசி நேரத்தில் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகவும்,
விஸ்வரூபம் சர்ச்சைதான் இதற்குக் காரணம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. //

பல அரிய தகவல்களை பின்னூட்டமாக அளித்தமைக்கு நன்றி!

சுவனப் பிரியன் said...

சலாம் சகோ நாசர்!

//தடைக்கு பிறகு படம் வந்தாலும் எதிர்பார்த்த வசூல் கிட்டாது ...இப்பவே குவைத்தில் DVD கிடைப்பதாக உறுதியான தகவல் ..
இனி கமல் மட்டுமல்ல வேற யாரும் இம்மாதிரியான படமெடுக்க கனவிலும் யோசிக்க மாட்டாங்க .....பாவம் கமல், வசூலில் பலத்த அடி
வாங்கியிருக்கிறார் //

அவருக்கு நஷ்டத்தை உண்டாக்குவது நமது நோக்கம் இல்லை. என்றாலும் இனி வருங்காலத்தில் இது போன்ற நச்சுக் கருத்துக்களை திணிப்பது சினிமா வட்டாரத்தில் குறையும். ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கி விட்டு தாராளமாக படத்தை வெளியிடட்டும். ஆஸ்காருக்கும் போகட்டும்.

சுவனப் பிரியன் said...

ஜெய்சங்கர்!

//உங்க அல்லாவும் குரானும் ஏன் கமலைப்பாத்து பயப்படுறீங்க?//

"முற்போக்கு பேசும் வைதீகன் மிக ஆபத்தானவன்" என்று முன்பு பெரியார் சொன்னது தற்போது ஞாபகத்தில் வருகிறது.

சுவனப் பிரியன் said...

சலாம் சகோ முஹம்மத்!

//சலாம் சகோ சுவனப்பிரியன்,
மாஷா அல்லாஹ் அருமையான ஆக்கம்.தெளிவான பதில்கள் சகோ.இந்த போராட்டத்தின் மூலம் இனிமேல் நம் தமிழகத்தில் படம் எடுப்பவன் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து படம் எடுப்பதை பற்றி யோசிப்பான்.//

எப்படி படம் எடுத்தாலும் முஸ்லிம்கள் எதுவும் செய்ய முhட்டார்கள் என்று இனி எவரும் நினைக்க மாட்டார். அது ஒன்றே இந்த பிரச்னையில் கிடைத்த வெற்றி.

சுவனப் பிரியன் said...

சகோ தீன்!

//கூத்தாடி கமல் 100 கோடி செலவில மட்டுமே படம் எடுக்கிறான்.
ஆனால் 100 ஆயிரம் கோடி மக்கள் மனதில் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று விதைக்கிறான்.
பணம் எளிதாக கிடைத்துவிடும் ஆனால் மனதில் விதைத்ததை அளிக்கமுடியாது.//

சரியாக சொன்னீர்கள்.

viyasan said...

சும்மா கிட‌ந்த‌ ச‌ங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்ப‌து போல், வெறும் பொழுதுபோக்கு Thriller திரைப்ப‌ட‌த்துக்கு தேவையில்லாத‌ விள‌ம்ப‌ர‌த்தைக் கொடுத்து த‌மிழ்நாட்டில் அர‌பும‌யமாக்க‌லும், தீவிர‌வாத‌ இஸ்லாமிய‌ வ‌ஹாபியிச‌மும், த‌லிபானிச‌மும் வெகுவேக‌மாக‌ வ‌ள‌ர்ந்து வ‌ருகிற‌தென்ப‌தை முழு இந்தியாவுக்கு ம‌ட்டும‌ல்ல‌, உல‌க‌ம் முழுவ‌த‌ற்கும் காட்டியிருக்கிறார்க‌ள் த‌மிழ்நாட்டு முஸ்லீம்க‌ள். த‌மிழ்நாட்டு இஸ்லாமிய‌ இய‌க்க‌ங்க‌ள் சென்னையிலுள்ள‌ அமெரிக்க‌ தூத‌ர‌க‌த்தை முற்றுகையிட்ட‌ போது அதை முறையாக‌த் த‌டுக்காத‌தால் வ‌ந்த‌ வினைதான் இது.

விஸ்வ‌ரூப‌ம் திரைப்ப‌ட‌த்துக்கு எதிர்ப்பு - த‌மிழ்நாட்டில் வ‌ள‌ர்ந்து வ‌ரும் த‌லிபானிச‌த்தின் வெளிப்பாடு?

http://viyaasan.blogspot.ca/

Anonymous said...

கேள்வி : சகோதரர் முருகன் சிதம்பரம்

கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக, விஸ்வரூபம் திரைப்படத்தைத் தடை செய்யக் கோருவது நியாயமா ? முஸ்லிம்களுக்கு ஏன் சகிப்புத்தன்மை இல்லை.....???

பதில் :

கருத்துச் சுதந்திரம் எதுவரை ? யாருக்கு..? இந்த விஷயத்தில் இந்தியர்களான நாம் இரட்டை நிலைப்பாட்டைக் கைக்கொள்கிறோம்.

இந்தியாவில் சமீப காலமாக, ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராகக் கீழ்த்தரமாக் எதையும் செய்யலாம் எதையும் எழுதலாம் பேசலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளதை இணையதள வாசகர்கள் நன்கறிவர். தமக்கு எதிராகப் பரப்பப்படும் கீழ்த்தரமான அவதூறுகளுக்கு அவர்கள் மறுப்புச் சொன்னால் கருத்துச் சுதந்திரம் போச்சே எனக் கூப்பாடு போடுகிறார்கள்.

முஸ்லிம்களுக்குச் சகிப்புத் தன்மை இல்லை, ஒரு திரைப்படத் தயாரிப்பாளருக்குக் கருத்துச் சுதந்திரம் கிடையாதா என வினா எழுப்பும் நாம், நம் முதுகைப் பார்ப்பதில்லை. மிக அண்மையில் நாம்தானே டாம்999 திரைப்படத்துக்கு எதிராகப் போராடி அப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிட முடியாமல் செய்தோம். வாட்டர் திரைப்படத்துக்கு ஏன் எதிர்ப்புத் தெரிவித்தோம் ? சகிப்புத் தன்மையோ கருத்துச் சுதந்திரமோ நமக்குப் பொருந்தாது அல்லவா ?

டாவின்சி கோட், தி லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் க்ரைஸ்ட் போன்றவற்றுக்கும் எதிராகப் போராட்டம் நடந்ததே ? ஓவியர் உசேன் இந்து தெய்வங்களை இழிவு செய்து விட்டார் என்று சொல்லி அவரது ஆர்ட் காலரியைச் சிதைத்தது சகிப்புத் தன்மையாலா அல்லது கருத்துச் சுதந்திரத்தை மதிப்பதாலா ?

இந்தி நடிகர் ஃபெரோஸ்கான் திப்புசுல்தானின் வாள் என்ற தொலைக்காட்சித் தொடரை எடுத்து வெளியிட்ட போது, அதற்கு எத்தனை இடையூறுகள் ? நம் நாட்டின் ஒரு பகுதியை ஆண்ட மன்னனின் வரலாற்றைச் சொல்லக்கூட விடாமல் இடையூறு செய்து கருத்துச் சுதந்திரத்துக்கு மதிப்புக் கொடுத்தவர்கள், பிறருக்குக் கருத்துச் சுதந்திரம் பற்றி அறிவுரை கூறுகிறார்கள்.

Anonymous said...

ரஸ்ஸல் எழுதி வெளியான அலசலில் இருந்து ஒரு பகுதி கீழே:--

தனது காவிச்சாயம் கலையாமல் காத்துக் கொள்ளும் பால்தாக்கரேயும் சிவசேனாவும் கருத்துச் சுதந்திரம் என்பது தங்களுக்கு மட்டுமே சொந்தம், யாரைப்பற்றியும் எதையும் பேசலாம், எழுதலாம் என்ற கொள்கையுடன் செயல்பட்டு வருவதை அவர்களது பேச்சுக்களும் எழுத்துக்களும் நிரூபித்து வந்துள்ளன! ஆனால் பால்தாக்கரேய்க்கோ சிவசேனாவுக்கோ எதிராக யாராவது பேசினாலோ எழுதினாலோ, கருத்துச் சுதந்திரம், ஊடக உரிமை என்பவையெல்லாம் மறந்துவிடும் சிவசேனிகர் பேசியவர், எழுதியவர் மீது கடும் தாக்குதலைத் தொடுப்பர்.!

மகாராஷ்டிர மாநில அரசு, பாபாசாகிப் அம்பேத்கரின் நூல்களை வெளியிடும் திட்டத்தில், Riddles in Hinduism எனும் அம்பேத்கரின் ஆக்கத்தை வெளியிட்டது. உடனே சிவசேனா களத்தில் இறங்கியது. அம்பேத்கரின் நூல் இந்து மதத்தையும் இந்துக் கடவுளரையும் அவமதிப்பதாகக் கூறி, உடனே அந்நூலைத் தடை செய்யுமாறு பெரும் கண்டனப் பேரணியை நடத்திய சிவசேனா, அம்பேத்கரையும் தலித்களையும் இழிவுபடுத்திப் பேசிக் கருத்துச் சுதந்திரத்துக்கு மரியாதை (!) செலுத்தியது..

தனக்கு எதிரான விமர்சனங்களையோ கருத்துகளையோ பொறுத்துக் கொள்ளாத சிவசேனா, மம்ரிக் மற்றும் சாம்னா இதழ்கள் மூலம் பத்திரிகையாளார்கள் மீது எழுத்துத் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தாலும் நேரடியாக அவர்களைத் தாக்குவதற்கும் தயங்கியதில்லை.

மும்பையின் வாங்கடே ஸ்டேடியத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட இருந்த கிரிக்கெட் திடலை சிவசேனாக் குரங்குப்படை குழிகளைத் தோண்டிச் சேதப்படுத்தியது. இதைக் கண்டித்து கடுமையான தலையங்கம் எழுதிய மகாநகர் எனும் மராத்தி மொழி இதழின் அலுவலகத்தைத் தாக்கியது சிவசேனா! பத்திரிகையின் கருத்துச் சுதந்திரத்தின் மீதான அராஜகத் தாக்குதலைக் கண்டித்துப் பத்திரிகையாளர்கள் நடத்திய ஊர்வலத்தில் சிவசைனிகர் கல்வீச்சு நடத்தியும் இரண்டு பெண்கள் உட்பட மூவரைக் கடுமையாகத் தாக்கியும் பத்திரிகையாளர்களைக் காயப்படுத்தினர். அவர்களுள் மணிமாலா என்ற ஒரு பெண் பத்திரிகையாளாரின் தலையில் இரும்புத் தடியால் அடித்து அவரது மண்டை ஓட்டைச் சிதைத்தனர். சிவசேனாவின் ரவுடித்தனத்தைத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கண்டித்த பெண் பத்திரிகையாளர் ஒருவரைப் பற்றித் தன் பத்திரிகையில் மிக இழிவாகவும் கீழ்த்தரமாகவும் எழுதியதோடு மட்டுமின்றிப் பெண் பத்திரிகையாளர்கள் அனைவரும் விபச்சாரிகள் என்று தலையங்கமும் தீட்டி மகிழ்ந்தது சிவசேனா.

இரண்டாண்டுகளுக்குப் பின் மீண்டும் மகாநகர் இதழ் ஆசிரியரைத் தாக்கினர் சிவசைனிகர். அடுத்த ஆறு மாதத்திற்குள் பால்தாக்கரேயின் நேரடிக் கண்காணிப்பில் பத்திரிகையாளர்கள் பன்னிருவர் தாக்கப்பட்டனர். தொடர்ந்து மராத்தி மொழியில் அதிகமாக விற்பனையாகும் பத்திரிகையான லோக்மத் இதழின் அலுவலகத்தையும் சிவசேனாவினர் சூறையாடிக் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாத்தனர்.

நான் ஓர் இந்தியன் என்று சொல்லும் சுதந்திரத்தைக்கூட மறுக்கும் கேவலமான பிறவி பால்தாக்கரே! கிரிக்கெட் வீரர் சச்சின், நான் ஓர் இந்தியன், மும்பை அனைவருக்கும் சொந்தமானது என்று கருத்துக் கூறியதற்காக மராத்தியர்களின் மனம் என்னும் பிட்சில் சச்சின் ரன் அவுட் ஆகிவிட்டார் என்றும் அவர் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும், அரசியல் விளையாட்டில் அவர் ஈடுபடுவது சரியில்லை என்றும் பால்தாக்கரே சாம்னா இதழில் தலையங்கத்தில் சச்சினைச் சாடிக் கடுமையாக எழுதியிருந்தார்.

தனி நபர் தம் வாழ்க்கைத் துணையைத் தேடும் விஷயத்தில் கூட பிறரின் உரிமையை விமர்சிப்பது இன்னும் கேவலமானது! இந்தியாவின் டென்னிஸ் தாரகை சானியா மிர்ஸா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை மணம் செய்து கொண்டதற்குக் கூட எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டம் நடத்தினர் சிவசைனிகர்.

பாட்டன் பால்தாக்கரேயைப் போலவே கருத்துச் சுதந்திரத்தை அனுமதிக்காதவர் ஆதித்ய தாக்கரே! அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர் ஜேம்ஸ் லாயின் (James W. Laine) என்பவர் எழுதிய Shivaji: Hindu King in Islamic India என்ற நூலைத் தீயிட்டுக் கொளுத்தச் சொன்ன தாத்தா பால்தாக்கரேவின் வழியில், ரோஹிந்தன் மிஸ்த்ரி (Rohinton Mistry) எழுதிய Such a Long Journy எனும் நாவலை சிவசேனாவின் மாணவர் பிரிவான பாரதீய வித்யார்த்தி சேனா மூலம் எரித்தார் ஆதித்யதாக்கரே!

Anonymous said...

continue....

(ரோஹிந்தனின் அதிர்ஸ்டம், அவர் கனடாவில் இருக்கிறார், இங்கே இருந்திருப்பார் எனில் அவரையும் கொளுத்தியிருப்போம் என்று பாரதீய வித்யார்த்தி சேனாவின் அங்கமான ஒருவன் டி.வி. கேமிராவின் முன் தைரியமாகச் சொன்னான்) மும்பைப் பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து ரோஹிந்தன் மிஸ்த்ரியின் நாவலை அகற்றும் படி, இருபத்து நான்கு மணி நேரக் காலக்கெடு கொடுத்து ஆதித்ய தாக்கரே நடத்திய அதிரடிப் போராட்டமும் அதற்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பணிந்ததும் ஆதித்யாவைச் சிவசேனாவின் இளைஞர் அணியின் தலைவர் பொறுப்புக்குப் பால்தாக்கரே நியமித்ததன் பின்னணியாக இருக்கலாம்.


இதேபோல் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இவ்வாண்டுப் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டிருந்த நோன்பு எனும் கதைக்கு எதிர்ப்பு எழுந்தது. ஆண்டாள் பற்றிக் கதாசிரியர் செல்வராஜ் கற்பனை செய்து எழுதியிருந்தது இந்துக்களின் மனதைப் புண்படுத்தி விட்டதாக எதிர்ப்பு எழுந்தது, போராட்டங்களும் நடந்தன.

தி.மு.க.வில் யாருக்குச் செல்வாக்கு அதிகம் என்ற கருத்துக் கணிப்பை வெளியிட்ட தி.மு.க. சார்பான பத்திரிகை அலுவலகத்தைத் தாக்கி மூன்று அப்பாவிகளை எரித்துக் கொன்று கருத்துச் சுதந்திரத்தைப் பேணிய கட்சியும், ப்ளஸன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் தம் தலைவிக்கு எதிராக நீதிபதி தீர்ப்பு வழங்கியதற்காக மூன்று அப்பாவி மாணவிகளை எரித்துக் கொன்று நீதிச் சுதந்திரத்தைப் பேணிய கட்சியும் மாறி மாறி ஆளும் தமிழ்நாட்டு மக்களாகிய நாம் கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசலாமா ?

இவ்வாறு கருத்துச் சுதந்திரத்துக்கு நாம் மதிப்பளிக்கும் போது மற்றவர்களைப் பற்றிக் குறை கூற நமக்கு உரிமை இல்லை.

கருத்துச் சுதந்திரத்துக்கு வக்காலத்து வாங்கும் காவி கூட்டம் அவர்களை பற்றி நாம் விமர்சிக்க அனுமதிக்கிறதா என்பதை கொஞ்சம் யோசிக்க வேண்டியதாக இருக்கிறது,

நம்முடைய இந்த பதில் சகோதரர் சுரேஷ் குமார் அவர்களுக்கு நிறைவை தரும் என்ற நிம்மதியுடன் கூப்பாடு போட்ட பாரதிராஜா, ரமேஷ் கண்ணா, விக்ரமன், பார்த்திபன், அஜித் உள்ளிட்ட அரிதாரம் பூசிய கூட்டத்திற்கும் ராமதாஸ், தா.பாண்டியன், இல.கணேசன் உள்ளிட்ட அரசியல் மேதைகளுக்கும் இந்த பதில் சென்றடையும் என்று மனநிறைவோடு முடிக்கிறேன்