Followers

Monday, January 14, 2013

நரை பிரச்னையில் உங்கள் இறப்பும் உள்ளது.


'உனக்குதான் வாரம் ஒரு தடவை தலைக்கு டை அடிக்கணும்னு கவலை. ஆனா இந்த மாமாவுக்கு எந்த பிரச்னையும் இல்லே. ஹாய்யா விட்டுடுவார். இல்லப்பா!'

-----------------------------------------------------

வயதான பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை, அனைவருக்கும் இன்று, ‘தலை’யாய பிரச்சனையாக இருப்பது முடி நரைத்தல். இள நரை பலரை பாடாய்ப் படுத்துகிறது. இதற்காக அந்த நரை முடியை கருப்பாக்கிக் காட்டுவதற்காக தினமும் பலர் சிரமப்படுவதைப் பார்க்கிறோம். இதற்காக நிறைய பொருளாதாரத்தையும் செலவு செய்ய நாம் தயங்குவதில்ல. அந்த பிராண்ட் நீண்ட நாள் நிலைத்திருக்கும். இந்த பிராண்ட் ஒரிஜினல் கலரைக் கொடுக்கும் என்று தேர்ந்தெடுத்து கலரை உபயோகப்படுத்துகிறோம்.


இது குறித்து ‘அலர்ஜி ஸ்பெஷலிஸ்ட்’ டாக்டர்கள் கூறுவதாவது:

‘டை பயன்படுத்துவதால்…அலர்ஜியில் ஆரம்பித்து ஹார்மோன் சமச்சீரின்மை, புற்றுநோய் வரை ஆபத்து நேரலாம்’ என்ற அதிர்ச்சி தகவலை கூறுகின்றனர். டை- ஐ தொடர்ந்து உபயோகிப்பதால், நம் தலைமுடிக்கு மட்டும் வினை புரிவதில்லை, உடலிலும் சென்று ரத்தத்திலும் அது கலக்கிறது. இரண்டு நாட்கள் வரை தங்கும் செமி டெம்பரரி டை; 15 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை நீடிக்கும் பெர்மனன்ட் டை என எல்லா டைகளுமே ரசாயன தயாரிப்பு என்பது தான் பிரச்சனையே!’

டைகளில் இருக்கும் பினலின்டயமின், அமோனியா, ஹைட்ரஜன் பெராக்சைடு போன்ற ரசாயனப் பொருட்கள், நம் ஹார்மோன்களை சரியாக செயல்படவிடாமல் தடுக்கின்றன. அலர்ஜி, எதிர்ப்பு சக்தி குறைதல்,கேன்சர், சிறுநீர்பை கேன்சர் என்று பல பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மீசைக்கு அடிக்கும்போது, சுவாசத்தின் வழியாக உள்ளே சென்று நுரையீரலை பாதிக்கக்கூடும் என்று சிலர் நினைக்கலாம்.ஆனால் அதற்கு வாய்ப்பில்லை. ஆனால் மீசைக்கு கீழ் இருக்கும் தோல் வழியாகவும் அது உடலில் ஊடுருவும்.

செம்பருத்தி, மருதாணி போன்ற இயற்கைப் பொருட்களை பயன்படுத்தி, நரையிலிருந்து தப்பிக்க முயற்சிக்கலாம்.

பிரபல புகைப்படக் கரைஞர் சித்ரா சுவாமிநாதன் கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்து போனார். அவருடைய இறப்புக்கு முக்கிய காரணமாக அவருடைய குடும்பத்தினர் சொல்வது … ஹேர் டை!

‘அப்பாவுக்கு 25 வருஷமா டை அடிக்கிற பழக்கம் இருந்தது. கொஞ்ச நாளுக்கு முன் அவருடைய உடல் நிலை மோசமானபோது, பரிசோதித்த டாக்டர்கள்… ‘நுரையீரல் பாதிப்படைஞ்சிருக்கு. இதற்கு இத்தனை நாளா இவர் பயன் படுத்திய டை தான் ஒரு முக்கிய காரணம்’, என்று சொன்னார்கள்!’ என்று சோகம் பொங்க சொல்கிறார் சித்ரா சுவாமிநாதனின் மகன் ஜான்சன்.

டை (Dye) என்ற வார்த்தையின் உச்சரிப்பு, இறப்பு (Die) என்பதையும் குறிப்பதால், ‘கலரிங்’ (colouring) என்ற சொல்லுக்கு தற்போது உலகம் மாறிவிட்டது. இயற்கை முறையில் தயாரிக்கும் ‘ஹென்னா’ என்று சொல்லப்படும் செம்பருத்தி, மருதாணி போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் டை-யைத் தவிர்த்து வேறு எதைப் பயன்படுத்தினாலும் அது நம் முடிக்கு மட்டுமல்ல, உடலுக்கும் கேடு விளைவிக்கும் என்பதை நாம் புரிந்து கொண்டு, நரையை அதன் அழகுடன் ஏற்றுக்கொள்ள பழகிக் கொள்வோம்.

---------------------------------------------------

'நான் இந்த தலையை ரொம்பவும் விரும்புறேன். ஏன்னா இந்த காடு ஒரு நாள் பச்சை கலரா மாறுது. மறுநாள் சிகப்பு கலரா மாறுது. தினம் ஒரு கலராக இந்த ஆள் மாத்திக்கிட்டு இருக்கான். நீ எங்கிருந்து வந்தே'

'இவன் மனைவிக்கிட்டேயிருந்து இன்னைக்குதான் இந்த காட்டுக்கு வந்தேன். அந்த பொம்பளை ஏதேதோ ரசாயனம் கலந்த கருப்பு டை அடிக்கிறா. எனக்கு மயக்கமே வருதுப்பா... அதான் ஓடியாந்துட்டேன்.'

------------------------------------------------

நபித் தோழர் ஜாபிர் அவர்கள் கூறினார்கள்:

'மக்கா வெற்றி நாளில் நபித் தோழர் அபூபக்கர் அவர்களின் தந்தை அபூ குஹாஃபா அவர்கள் நபியவர்களிடம் கொண்டு வரப்பட்டார். அவரது தலை முடியும் தாடியும் தும்பைப் பூவைப் பொல வெள்ளை வெளேர் என்று இருந்தது.

அப்போது நபியவர்கள் 'இந்த வெள்ளை நிறத்தை ஏதேனும் சாயம் கொண்டு மாற்றுங்கள். கறுப்பு நிறத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள்.' என்று கூறினார்கள்.

ஆதார நூல் முஸ்லிம்: 4270


இன்றைய நவீன உலகம் தற்போது ரசாயனம் கலக்கப்பட்ட கருப்பு டைகளை உபயோகப்படுத்துவதை தவிர்த்து வருகிறது. அதற்கு மாற்றாக மருதாணியையும், செம்பருத்தியையும் உபயோகிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் நம்மவர்களில் பலர் இந்த ரசாயன கலவையில் உள்ள ஆபத்தை உணராது கருப்பு கலரை விரும்பி அடிக்கின்றனர். இதன் கேட்டை முகமது நபி உணர்ந்ததாலோ என்னவோ கருப்பு டை அடிக்க தடை விதித்துள்ளார்கள். ஆண்களானாலும் பெண்களானாலும் ரசாயனம் கலந்த கருப்பு டைகளை தவிர்த்து இயற்கையில் கிடைக்கும் மருதாணியையும், செம்பருத்தியையும் கொண்டு வெள்ளை முடிகளை சற்று அழகாக்கிக் கொள்வோம்.

இதன் மூலம் ரசாயன டை(dye) அடித்து டை(die) ஆவதை தவிர்ப்போம். :-)

15 comments:

சுவனப் பிரியன் said...

திரு சார்வாகன்!

//1.சவுதி பெண்களை இந்தியர்கள் மணமுடிக்க அந்நாட்டு சட்டத்தின் படி அனுமதி உண்டா? ஆம்/இல்லை
ஆம் எனில் தரவு சுட்டி!!!//

Under the law, the marriage must be in line with Islamic rules and the couple must be free of any serious diseases, should not be drug addicts and the age gap between them must not exceed 25 years.
After a lengthy debate on Monday, the Shura council, the Gulf Kingdom’s appointed parliament, ratified the law which gave Saudis the right to have spouses from the other members of the Gulf Cooperation Council.
Official data showed Saudi Arabia had around 1.8 million unmarried national women above 30 years old and that their number could exceed four million in the next four years. Officials attributed the problem to the fact that many Saudi men prefer foreign wives despite the existing curbs due to the high wedding expenses and dowries demanded by national spouses.
சவுதி பெண்கள் மஹர் பிரச்னைகளால் தங்கி விடக் கூடாது என்பதற்காக சில கட்டுப்பாடுகளை அரசு வைத்துள்ளது. இஸ்லாம் மற்ற நாட்டு ஆண்களையும் பெண்களையும் மணப்பதற்கு எந்த தடையையும் விதிக்கவில்லை.
http://www.emirates247.com/news/region/saudi-law-approves-marriage-with-foreigners-2011-06-28-1.404884

//2. அப்படி மணமுடிக்கும் ஆண்களுக்கு,பிறக்கும் குழந்தைகளுக்கு சவுதி குடியுரிமை கிட்டுமா?
ஆம்/இல்லை
ஆம் எனில் தரவு சுட்டி!!!//

Al-Jasser said the amendment to Article 7 states that in light of the information provided by a male applicant, his application shall be evaluated by a committee formed by the Directorate of Naturalization branch of the Ministry of Civil Affairs through five elements: If his residence in the Kingdom is permanent at the age of majority (becoming an adult), he gets one point; if he has an academic certificate not less than that of a secondary level, he gets one point; if the father of the mother and her grandfather from her father’s side were Saudis, he gets six points; if only her father is a Saudi, he gets two points, and if an applicant has one Saudi brother or sister, or more, he gets two points.
If an applicant gets at least seven points, the committee recommends that his application be considered, otherwise his application shall be reserved.
If a female applicant gets 17 points, the committee recommends that her application be considered, otherwise her application shall be reserved.
http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentID=20120115115592

//3. சவுதி பெண்களை மிஸ்யார் வகைத் திருமணம் பிற நாட்டவர் செய்ய அனுமதிக்கப் படுகிறார்களா?
ஆம்/இல்லை
ஆம் எனில் தரவு சுட்டி!!!//

மிஸ்யார் திருமணம் ஷியாக்கள் ஆங்காங்கு செய்து வருகின்றனர். இது ஈரானில் அதிகம். சவுதியில் உள்ள சில ஷியாக்களும் செய்து வருகின்றனர். போர்க்காலங்களில் இது அனுமதிக்கப்பட்டது. தற்போது அதற்கு அவசியம் இல்லை என்பது சில அறிஞர்களின் கருத்து. பெரும்பான்மையான முஸ்லிம்களை இந்த வகை திருமணங்களை செய்வதில்லை.அஸ்மா said...

சலாம் சகோ.

டை பற்றி டாக்டர்கள் அவ்வப்போது எச்சரித்துக் கொண்டிருந்தாலும் அநேக‌ மக்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை. குறிப்பாக வேலைக்கு செல்பவர்கள்!

படங்களோடு நீங்கள் கூறிய விதம் அருமையா இருக்கு சகோ :)

ஆஷா பர்வீன் said...

'நான் இந்த தலையை ரொம்பவும் விரும்புறேன். ஏன்னா இந்த காடு ஒரு நாள் பச்சை கலரா மாறுது. மறுநாள் சிகப்பு கலரா மாறுது. தினம் ஒரு கலராக இந்த ஆள் மாத்திக்கிட்டு இருக்கான். நீ எங்கிருந்து வந்தே'

'இவன் மனைவிக்கிட்டேயிருந்து இன்னைக்குதான் இந்த காட்டுக்கு வந்தேன். அந்த பொம்பளை ஏதேதோ ரசாயனம் கலந்த கருப்பு டை அடிக்கிறா. எனக்கு மயக்கமே வருதுப்பா... அதான் ஓடியாந்துட்டேன்.'//:) arumai

UNMAIKAL said...

முஸ்லிம்களை எந்த நேரத்திலும் - எந்த இடத்திலும் வெட்டலாம் :

கர்ஜித்த "கமலானந்தா" "கண்துடைப்பு" கைது!

.Tuesday, 15 January 2013 02:01 MARUPPU மீடியா - மறுப்பு செய்திகள்

Jan15, முஸ்லிம்களை கண்ட இடத்தில் கண்டந்துண்டமாக வெட்டி வீழ்த்த வேண்டும், முஸ்லிம்களின் மீது எந்த இடத்திலும் - எந்த நேரத்திலும் ஹிந்துக்கள் தாக்குதல் நடத்தலாம், என பேசிய "சுவாமி கமலானந்தா" கைது செய்யப்பட்டு ஜெயிலுக்கு அனுப்பப்பட்டான்.

முஸ்லிம்களுக்கு எதிராக "ஹிந்துத்துவ தீவிரவாதிகள்" இப்படி பேசுவது, சர்வசாதாரணமாக அன்றாட நிகழ்ச்சியாக நடந்துவந்தாலும்,

கடந்த வாரம் முஸ்லிம் தலைவர் "அக்பருத்தீன் உவைசி"யை கைது செய்ததற்கு "பரிவர்த்தனை" அடிப்படையில் "கண்துடைப்பு" நாடகம் தான் "கமலானந்தா" கைது.


சார்மினாரை ஆக்கிரமித்து கோவில் கட்டியே தீருவோம், என கடந்த 2 மாதங்களாக ஹைதராபாத்தை கலவர பூமியாக்கிய "பிரவீன் தொகாடியா" உள்ளிட்ட எவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஹிந்துத்துவ சக்திகளை எதிர்த்து பேசியதற்காக, அதுவும் ஒரே ஒரு கூட்டத்தில் பேசிய "எம்.ஐ.எம்" கட்சியின் அக்பருத்தீன் உவைசியை கைது செய்து - போலீஸ் காவலில் எடுத்து சித்திரவதை செய்து வருகிறது, காங்கிரஸ் அரசும் காவல் துறையும்.


இந்நிலையில், கடந்த திங்களன்று (07/01) வி.ஹெச்.பி. ஏற்பாடு செய்திருந்த ஹைதராபாத் கூட்டத்தில் பேசிய "ஹிந்து தேவாலய பரிரக்ஷ்ண சமிதி"யின் தலைவன் "சுவாமி கமலானந்தா" என்பவன்,

இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் பாகிஸ்தானின் ஏஜெண்டுகள் எனவும், முஸ்லிம்களை கண்ட இடத்தில் கண்டந்துண்டமாக ஹிந்துக்கள் வெட்டி வீழ்த்த வேண்டும் எனவும் பேசினான்.

இதுகுறித்த புகார்கள், 3 காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டன.

அதை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு, கர்னூல் மாவட்டத்தின் ஸ்ரீசைலத்தில் "கமலானந்தா" கைது செய்யப்பட்டு 14 நாள் காவலில் வைக்கப்பட்டான்.


இந்த வழக்கை சிறப்பு புலானாய்வுப்பிரிவு (எஸ்.ஐ.டி) போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

THANKS TO : http://www.maruppu.in/all-medias/43-maruppu-news/744--qq-

ஹுஸைனம்மா said...

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி இறப்புக்கும் அவர் வெகுகாலம் பயன்படுத்திய தலைச்சாயமும் ஒரு முக்கியக் காரணி என்று விகடன் கூறியது.

சுவனப் பிரியன் said...

சலாம் சகோ அஸ்மா!

//டை பற்றி டாக்டர்கள் அவ்வப்போது எச்சரித்துக் கொண்டிருந்தாலும் அநேக‌ மக்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை. குறிப்பாக வேலைக்கு செல்பவர்கள்!

படங்களோடு நீங்கள் கூறிய விதம் அருமையா இருக்கு சகோ :)//

இதில் நமது உடல் நலன் மிகவும் பாதிக்கப்படுவதால் மருதாணி போன்றவற்றைக் கொண்டு அழககுபடுத்திக் கொள்வோம் என்ற எண்ணம் வர வேண்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

சுவனப் பிரியன் said...

சகோ ஆஷா ஃபர்வீன்!

//நான் இந்த தலையை ரொம்பவும் விரும்புறேன். ஏன்னா இந்த காடு ஒரு நாள் பச்சை கலரா மாறுது. மறுநாள் சிகப்பு கலரா மாறுது. தினம் ஒரு கலராக இந்த ஆள் மாத்திக்கிட்டு இருக்கான். நீ எங்கிருந்து வந்தே'

'இவன் மனைவிக்கிட்டேயிருந்து இன்னைக்குதான் இந்த காட்டுக்கு வந்தேன். அந்த பொம்பளை ஏதேதோ ரசாயனம் கலந்த கருப்பு டை அடிக்கிறா. எனக்கு மயக்கமே வருதுப்பா... அதான் ஓடியாந்துட்டேன்.'//:) arumai//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

சுவனப் பிரியன் said...

சகோ உண்மைகள்!

//அதை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு, கர்னூல் மாவட்டத்தின் ஸ்ரீசைலத்தில் "கமலானந்தா" கைது செய்யப்பட்டு 14 நாள் காவலில் வைக்கப்பட்டான்.//

இந்த பிரச்னைக்கு மூல காரணியான பிரவீன் தெகோடியா இன்று வரை கைதாகாமல் இருப்பது சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டும் தான் என்று மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது

சுவனப் பிரியன் said...

சகோ ஹூசைனம்மா!

//முன்னாள் அமைச்சர் வீரபாண்டி இறப்புக்கும் அவர் வெகுகாலம் பயன்படுத்திய தலைச்சாயமும் ஒரு முக்கியக் காரணி என்று விகடன் கூறியது.//

எனக்கு இது புதிய செய்தி.

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

Yasmin Riazdheen said...

யூஸ்புல் பகிர்வு.. ஜசக்கல்லாஹ் ஹைரன்...

இந்த இடத்தில் எனக்கு இந்த ஹதீஸ் தான் நினைவுக்கு வருகிறது...

‎''நரைமுடிகளைப் பிடுங்காதீர்கள்,ஏனென்றால் கியாமத் நாளன்று இது பிரகாசத்திற்கு காரணமாகும்,எவர் இஸ்லாத்தில் இருக்கின்ற நிலையில் வயோதிகமடைகிராறோ,(ஒரு முஸ்லிமுடைய ஒரு முடி நரைத்துவிட்டால்),அதன் காரணமாக அவருக்கு ஒரு நன்மை எழுதப்படுகிறது.ஒரு பாவம் மன்னிக்கப்படுகிறது.ஒரு பதவி உயர்த்தப்படுகிறது’’.

#இப்னு ஹிப்பான் -253

சுவனப் பிரியன் said...

சகோ யாஸ்மின் ரியாஸ்தீன்!

//''நரைமுடிகளைப் பிடுங்காதீர்கள்,ஏனென்றால் கியாமத் நாளன்று இது பிரகாசத்திற்கு காரணமாகும்,எவர் இஸ்லாத்தில் இருக்கின்ற நிலையில் வயோதிகமடைகிராறோ,(ஒரு முஸ்லிமுடைய ஒரு முடி நரைத்துவிட்டால்),அதன் காரணமாக அவருக்கு ஒரு நன்மை எழுதப்படுகிறது.ஒரு பாவம் மன்னிக்கப்படுகிறது.ஒரு பதவி உயர்த்தப்படுகிறது’’.

#இப்னு ஹிப்பான் -253//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

சுவனப் பிரியன் said...

//அமெரிக்காவின் சுயநலம்,சவுதி அரேபியாவின் மத மூர்க்க காட்டுமிராண்டித்தனம்,அறிவுக்கண் அவிந்து போன சவுதியின் சட்டங்களுக்கு ஜே போடும் பதிவுலக காட்டான்கள்!//

'இந்தியாவின் சுயநலம். பார்ப்பனர்களின் மத மூர்க்க காட்டுமிராண்டித் தனம்: அறிவுக்கண் அவிந்து போன மனுதர்ம சட்டங்களுக்கு இன்னும் ஜே போட்டுக் கொண்டிருக்கும் ஒரு சில காட்டுமிராண்டிக் கூட்டம்'

என்று கூட நானும் எழுதலாம். ஒரு குற்றவாளிக்கு கொடுக்கும் தண்டனையை பொது மக்கள் மத்தியில் நிறைவேற்றப் படுவதே அதை பார்க்கும் யாரும் அந்த குற்றத்தை இனி ஒரு தரம் செய்து விடக் கூடாது என்பதற்காகத்தான்.

இங்கு அந்த இலங்கைப் பெண்ணுக்கு அனுதாபம் காட்டுவதை விட இஸ்லாமிய சட்டத்தை எள்ளி நகையாட இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தப் பார்க்கிறது ஒரு கூறு கெட்ட கூட்டம்.

எல்லோரும் மதங்களை உதறினாலும் இந்த மார்க்க பந்துக்களின் இஸ்லாமிய பிடிப்பு நாளுக்கு நாள் இருகிக் கொண்டல்லவா செல்கிறது என்ற வயிற்றெரிச்சலும் பின்னூட்டங்களில் தெரிகிறது.

அந்த பெண் குற்றவாளியா இல்லையா என்பதை அந்த பெண்ணும் இறைவனுமே உண்மையை அறிவர். இந்த அளவு வறுமைக்கு காரணமாக்கிய சமூகம்தான் முதல் குற்றவாளி. பொருளாதார வசதி இருந்திருந்தால் இது போன்று ஒரு பாலைவனத்தில் தனது உயிரை விட அந்த அபலைப் பெண்ணுக்கு எந்த அவசியமும் வந்திருக்காது. மருத்துவரின் அறிக்கையும், தானே கொலை செய்தேன் என்று கையொப்பமிட்துமே அந்த பெண்ணுக்கு அவரது முடிவை கொண்டு வந்து விட்டுள்ளது. மிரட்டி வாங்கப்பட்டடிருந்தால் அதன் தண்டனையை சமபந்தப்பட்டவர்கள் இறைவனிடம் பெற்றுக் கொள்வார்கள். அந்த பெண்ணின் பெற்றோர்களும் பொருந்திக் கொண்டார்கள். மன்னரும் மன்னிக்கச் சொல்லி எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் அந்த பெற்றோர் மன்னிக்கவில்லை எனும் போது வேறு என்ன வழி?

ராஜநடராஜனோ, வவ்வாலோ, வேகநரியோ, சார்வாகனோ, இக்பால் செல்வனோ போடும் கூச்சல்களை புறம் தள்ளி விட்டு வழக்கம் போல் தெளிந்த நீரோடையாக இஸ்லாம் தனது பயணத்தை இன்னும் வீரியத்தோடு தொடர்ந்து கொண்டுதானிருக்கும்.

எனது நாட்டின் வர்ணாசிரம கேட்டை நீக்கும் தகுதி ஒரே மார்க்கமாகிய இஸ்லாத்திற்கே உண்டு. அது உங்களைப் போன்றவர்கள் வெறுத்தாலும் நடப்பதை தடுக்க முடியாது.

UNMAIKAL said...

கொலை, பாலியல் வன்முறைகளில் 33,000 மைனர் குற்றவாளிகள்: அதிர்ச்சி ரிப்போர்ட்

Posted by: Mayura Akilan Published: Tuesday, January 15, 2013, 11:08 [IST]


டெல்லி: இந்தியாவில் 2011ம் ஆண்டு மட்டும் 18 வயதை பூர்த்தியடையாத 33000 மைனர் குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது

ஒரு புள்ளிவிபரம். ஒருவன் 18 வயதை பூர்த்தியடையாதவன் என்ற காரணத்தினாலேயே தான் செய்த குற்றத்தில் இருந்து தப்பிவிடுகிறான்.

கொலையோ, கொள்ளையோ, பாலியல் வன்முறையோ இப்போது பதினாறு வயது முதல் 18 வயதிற்குட்பட்டோர்தான் அதிகம் ஈடுபடுகின்றனர்.

ஆடம்பர செலவுகளுக்காகவும், போதைக்காகவும் பணத்தை கொள்ளையடிக்கின்றனர்.

அதேபோல் காம இச்சையை தீர்த்துக்கொள்ள பள்ளிப் பருவத்தில் இருந்தே பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்.

மைனர் குற்றவாளிகள் இன்றைக்கு பெருகிவருகின்றனர்.

இதனால் குற்றச்செயல்களுக்கு தண்டனை தருவதற்காக மேஜர் வயதை 18ல் இருந்து 16ஆக குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கு அனைத்து மாநிலங்களும் ஒப்புதல் அளித்துள்ளன.

மைனர் குற்றவாளிகள் அதிகம் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு புள்ளி விவரத்தில்,

"'மைனர்கள் எனப்படும் சிறார்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவது சமீப காலமாகவே மிகவும் அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும், 2011ல் மட்டும் 16லிருந்து 18 வயதுக்குட்பட்ட 33 ஆயிரம் சிறுவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பாலியல் வழக்குகள் அதிகம் இவற்றில் பெரும்பாலானவை கொலை மற்றும் பாலியல் பலாத்கார வழக்குகள்தான் அதிகம்.

நாடுமுழுவதும் 1,419, பாலியல் பலாத்கார வழக்குகள் மைனர் குற்றவாளிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தான் இது போன்ற சிறார்கள் மீது அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று மத்திய அரசின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 ஆண்டுகளில் அதிகம் கடந்த 2000 ம் ஆண்டு 198 பாலியல் வழக்குகள் மைனர் குற்றவாளிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது கடந்த 12 ஆண்டுகளில் பல மடங்காக அதிகரித்துள்ளது.

மைனர் என்பதால் மட்டுமே ஒருவன் செய்த தவறுகளில் இருந்து தப்பிவிடக்கூடாது என்பதற்காகவே இப்போது தண்டனைகளையும், அதற்கேற்ப சட்டங்களையும் கடுமையாக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.


தூக்கில் போடுங்கள்

டெல்லி மாணவி பலாத்கார வழக்கில் தொடர்புடைய இளம் குற்றவாளிதான் கொடூரமாக மாணவியை தாக்கியுள்ளான்.
எனவே இளம் வயதிலேயே கொடூரச் செயல் புரிந்த அவனை தூக்கில் போட வேண்டும். அவன் மீது கருணை காட்டக்கூடாது" என்று ஆவேசப்பட்டுள்ளார் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார்.


http://tamil.oneindia.in/news/2013/01/15/india-rapes-minors-five-fold-since-2000-167953.html#slidemore-slideshow-1

Anonymous said...

இந்தோனேசியாவின் பாலித் தீவைச்ச சேர்ந்த முன்னாள் இந்து பிராமணர், அந்த சமயத்தை விட்டு இஸ்லாத்தில் நுழைந்து, பின்னர் இஸ்லாமிய அறிஞராகி, இந்து சமயத்தின் கருத்துக்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டிப் பிரச்சாரம் செய்து வருகிறார். இதோ ஆதாரம்:

http://www.renungan.indah.web.id/2012/04/lebih-dari-200-dalil-dari-kitab-wedha.html?m=1

- பாஹிம்

ASP TOYS said...

இந்த ஹதீஸ்
அரபு மூலம் பதிவிடுங்கள் சகோ