'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Monday, January 07, 2013
தலைவனும் தொண்டனும் - கார்ட்டூன்!
'என்னா தலைவரே! அரசியல்வாதியா இருந்து சேர்த்த லஞ்ச பணத்தை எல்லாம் ஜிம்முல வந்த கரைக்கீராரா! நல்லா இருக்குதுபா நியாயம்!'
---------------------------------------------
புதிய எழுத்தாளர்கள் பலர் இணைந்து தொகுத்திருக்கும் 'எதிர்க் குரல்' என்ற புத்தகம் விரைவில் வரவிருக்கிறது. பல அரிய தகவல்களைத் தாங்கி இந்த புத்தகம் வருகிறது. நீங்களும் படியுங்கள். மற்றவர்களுக்கும் புத்தகத்தை அறிமுகப்படுத்துங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 21ஆம் தேதிவரை மதுரை மாவட்டத்திற்குள் நுழையக்கூடாது என அம்மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா உத்தரவு பிறப்பித்திருக்கிறார். சமூக நல்லிணக்கத்தைப் பேணும் பொருட்டு இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமும் இப்படியான ஒரு தடையாணை உத்திரவினைப் பிறப்பித்தது.
புதிதாக அனைத்து சமுதாயப் பாதுகாப்புப் பேரவை என்ற ஓர் அமைப்பினை உருவாக்கி, அதில் பல்வேறு சாதி அமைப்புக்களை ஒருங்கிணைத்து தலித் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டும், பிற சாதிப் பெண்களை தலித் இளைஞர்கள் ஏமாற்றித் திருமணம் செய்துகொள்வதைத் தடுக்கவேண்டும் என்பன போன்ற சர்ச்சைக்குரிய கோரிக்கைகளுக்கு ராமதாஸ் ஆதரவு திரட்டிவருகிறார்.
மதுரையில் கடந்த டிசம்பர் 21ஆம் நாள் கூடிய இந்த பேரவையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்ட மனுக்களை விசாரித்து அதன்பேரில் தற்போதைய தடை உத்திரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது
லதேகர் (ஜார்க்கண்ட்): ஜார்க்கண்ட் மாநிலத்தில், மாவோயிஸ்ட்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையான, சி.ஆர்.பி.எப்., வீரர்கள், 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது குறித்து, சி.ஆர்.பி.எப்., அதிகாரிகள் கூறியதாவது:லதேகர் மாவட்டம், அமாவ்திகர் கிராமப் பகுதியில், மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், அப்பகுதியில், சி.ஆர்.பி.எப்., வீரர்கள், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அந்த நேரத்தில், மாவோயிஸ்ட்களுக்கும், அவர்களுக்கும் இடையே, கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், சி.ஆர்.பி.எப்., வீரர்கள், 11 பேர் கொல்லப்பட்டனர்.இந்த ஆண்டில், மாவோயிஸ்ட்களுடன் நடந்த மிகப்பெரிய மோதல் இது. இதில், மாவோயிஸ்ட் தரப்பிலும் உயிர்பலி இருக்கலாம். இவ்வாறு, சி.ஆர்.பி.எப்., அதிகாரிகள் கூறினர். இந்த சம்பவத்தில் 14 அதிகாரிகள் காயமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
-dinamalar
காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை – சிறைநிரப்பும் போராட்டம் வாபஸ்!
செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, January 8, 2013, 12:01
தலைமைகழக செய்தி >> முக்கியச் செய்திகள்
முஸ்லிம்கள் மீது பொய் வழக்குப்போட்டும், நள்ளிரவில் முஸ்லிம்களின் வீடுகளுக்குள் புகுந்து தரைக்குறைவாக நடந்து கொண்டும், தட்டிக்கேட்ட முஸ்லிம்கள் மீது தடியடி நடத்தியும், அராஜகம் புரிந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 03.01.13அன்று சிறைநிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதிமொழியளித்ததால் 10.01.13க்கு போராட்டம் மாற்றப்பட்டது.
காவல்துறை உயர் அதிகாரிகள் வாக்களித்தபடி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன் மூலம் மேற்கண்ட அராஜகத்துக்கு தமிழக அரசோ, ஒட்டுமொத்த காவல்துறையோ காரணமில்லை என்பதை நிரூபித்துள்ளதால் 10.01.13 அன்று நடைபெற இருந்த சிறைநிரப்பும் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இப்படிக்கு,
மாநிலப் பொதுச் செயலாளர்
tntj
ஒரே வகையைச் சார்ந்த வெடிக்குண்டுகளை உபயோகித்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள்!
புதுடெல்லி:ஹிந்துத்துவா தீவிரவாத குழுக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்பை நிகழ்த்த ஒரே வகை குண்டுகளை பயன்படுத்தியுள்ளதாக தடவியல் சோதனை அறிக்கை கூறுகிறது.
2006 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் மலேகான், 2006 ஆம் ஆண்டு சம்ஜோதா எக்ஸ்பிரஸ், 2007-ஆம் ஆண்டு அஜ்மீர் தர்கா மற்றும் ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், 2008-ஆம் ஆண்டு குஜராத்தில் மொடாஸா ஆகிய குண்டுவெடிப்புகளில் உபயோகிக்கப்பட்ட குண்டுகள் ஒரே ரகத்தைச் சார்ந்தவை என்பது ஃபாரன்சிக்(தடவியல்) அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள பரிசோதனைக் கூடம் இது தொடர்பான ஆய்வை நடத்தியது. பரிசோதனை முடிவுகள் என்.ஐ.ஏவுக்கு கிடைத்துள்ளது.
வெடிக்குண்டு, குண்டுகளை தயாரிக்க பயன்படுத்திய தொழில்நுட்பம், வெடிக்குண்டு கண்டெய்னர், எல்க்ட்ரானிக் சர்க்யூட் உள்பட குண்டுவெடித்த முறையில் கூட ஒரே பாணி கையாளப்பட்டுள்ளதாக ஃபாரன்சிக் அறிக்கை கூறுகிறது. குண்டுவெடிப்பிற்கு ஆர்.டி.எக்ஸ் மற்றும் டி.என்.டி வெடிப்பொருட்கள் முக்கியமாக உபயோகிக்கப்பட்டுள்ளன.
மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ஆகிய குண்டுவெடிப்புகளில் ஒரே தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிவப்பு வயர்களில் இணைக்கப்பட்ட ஸ்க்ரூ செய்த பேட்டரிகள் எரிப்பொருளாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மொடாஸா குண்டுவெடிப்பிலும் இதே முறை கையாளப்பட்டுள்ளது. சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பிற்கு சிங்கிள் சிலிண்டர் மோட் உபயோகிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதர குண்டுவெடிப்புகளில் டபிள் சிலிண்டர் மோட் உபயோகிக்கப்பட்டுள்ளது. வெடிப்பொருட்களின் மீதான முத்திரை கூட ஒரேபோல உள்ளன.
சம்ஜோதா எக்ஸ்பிரஸில் ஓல்பாட் வாட்ச் குண்டை வெடிக்க வைக்க உபயோகிக்கப்பட்டது. 2006-ஆம் ஆண்டு மலேகானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பிலும் இதே முறை கையாளப்பட்டது. அதேவேளையில் மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா ஆகிய இடங்களில் நோக்கியா 6030 மாடல் மொபைல் ஃபோன் உதவியுடன் குண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டன.
2008 மலேகான், மொடாஸா, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புகளில் வெடித்த டெட்டனேட்டர்களின் சிதிலங்களில் ஐ.டி.எல் 21 manufactures என்று எழுதப்பட்டுள்ளது என்று தடவியல் சோதனையில் தெரியவந்துள்ளது. Source: Thoothuonline
Post a Comment