Followers

Friday, January 18, 2013

மன அமைதி சிலருக்கு ஏன் கிடைப்பதில்லை?


----------------------------------------------------

//என்னவோ தெரியவில்லை வாழ்க்கையே வெறுமையாக தோன்றுகிறது, ஒவ்வொருநாளும் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் மனது என்னவோன்னு இருக்கிறது, ஒரு காரணமும் புரியவில்லை. எதையோ யோசித்துக்கொண்டு ரொம்ப தூரம் போகிறேன் அங்கு சென்றுதான் யோசிக்கிறேன் ஆமாம் இங்கு எதற்கு வந்தோம் காரணம் புரியாமல் திகைக்கிறேன். சிலநேரம் மனத வாழ்க்கையை நினைத்து சந்தோசபட்டாலும், பலநேரம் வெறுக்கிறேன். என்ன வாழ்க்கை இது என்று தோன்றுகிறது.

பல நண்பர்களிடம் இதை பகிர்ந்துள்ளேன் என்ன செய்வது என்றும் கேட்டேன். சிலர் சொன்னார்கள் விடாத வேலை, தூக்கம் குறைவு, இதனால் டென்சன் இருக்கலாம் நல்லா தூங்குங்க எல்லாம் சரியாகிடும் என்று சொன்னார்கள். ஒரு சிலர் இந்த வயதில் இப்படி தோன்றுவதனால்தான் எல்லோரும் "மது" அருந்துகிறார்கள், போதையில் எதையும் யோசிக்காமல் நிம்மதியாக தூங்கலாம், நிறைய பேர் அடிக்கடி "சிகரெட்" அடிக்கிறார்கள் எதனால் தெரியுமா? இப்படி பலவற்றை யோசித்து யோசித்து வரும் டென்சனால்தான் என்றார்.//

இவ்வாறு தனது பதிவில் சகோதரர் ஆகாஷ் தனது சிக்கல்களை சொல்லியிருந்தார். இந்த மன அழுத்தங்கள் ஏன் வருகிறது என்று கேட்டால் பலருக்கும் பதில் சொல்லத் தெரிவதில்லை. ஒரு ஆன்மீகவாதியாக நான் பார்க்கும் போது யாரெல்லாம் இறை நம்பிக்கை அதிகம் உள்ளவர்களாக உள்ளனரோ அவர்களுக்கு மனச்சிதைவு அதிகம் ஏற்படுவதிலலை. அவர்கள் அதிகம் தற்கொலைகளை நாடுவதும் இல்லை என்பேன். ஏனெனில் ஆன்மீக வாதிகள் எத்தகைய சோகம் வந்தாலும் அல்லது எத்தகைய இன்பம் வந்தாலும் அனைத்தையும் இறைவனின் மேல் பாரத்தை போட்டு விட்டு தங்களின் வேலைகளை பார்க்க சென்று விடுகின்றனர். அதாவது விதியின் மீது நம்பிக்கை வைக்கின்றனர்.

அப்படியே தாங்க முடியாத ஒரு சோகம் ஆட்டி வைத்தால் இறை தியானத்தில் தங்களது மனதை கொண்டு சென்றால் மிக இலகுவாக இந்த மனச்சிதைவிலிருந்து விடுபடலாம். இஸ்லாமியர்களில் ஐந்து வேளையும் பள்ளிக்கு சென்று தொழுகையில் ஈடுபடுவதால்தான் அவர்களிடம் தற்கொலைகளின் விகிதாச்சாரம் குறைவாக உள்ளதைப் பார்க்கிறோம். முஸ்லிம்களிலும் ஒரு சிலர் தற்கொலையை நாடினால் அதற்கு அவர்கள் இஸ்லாத்தை விட்டு தூரமாகியதே காரணமாக இருக்கும். அவர்களின் வாழ்வை நாம் ஆராய்ந்து பார்த்தால் இஸ்லாத்தை விட்டு தூரமானவர்களாக இருப்பர்.

மனச்சிதைவு ஏற்பட்டு தற்கொலைகளை நாடுவோரின் புள்ளி விபரங்களை இனி பார்ப்போம்.
அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிபரம் ஒன்றை தேசிய குற்றப்பிரிவு அமைப்பு (என்சிஆர்பி) வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும், ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பதுதான் அந்த அதிர்ச்சியளிக்கும் புள்ளி விபரம்.

குடும்பப் பிரச்னை காரணமாக 24.3, தீராத நோயால் 19.6, வறுமையால் 1.7, காதல் விவகாரத்தால் 3.4, போதை பழக்கவழக்கங்களால் 2.7, வரதட்சணையால் 2.4, கடன் தொல்லையால் 2.2… என்ற சதவிகிதத்தில் தங்கள் உயிரை மாய்த்துள்ளனர்.

மாநிலங்கள் அளவில் ஒப்பிடும்போது மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 16 ஆயிரத்து 492 பேரும், தமிழகத்தில் 15 ஆயிரத்து 963 பேரும், மகாராஷ்டிராவில் 15 ஆயிரத்து 947 பேரும், ஆந்திராவில் 15 ஆயிரத்து 77 பேரும், கர்நாடகாவில் 12 ஆயிரத்து 622 பேரும் கடந்த 2011ம் ஆண்டில் தற்கொலை செய்துள்ளனர். நாட்டின் மொத்த தற்கொலை எண்ணிக்கையில் இந்த ஐந்து மாநிலங்களின் சதவிகிதம் மட்டும் 56.2. இதர 43.8 சதவிகித தற்கொலைகள் மற்ற 23 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் நடந்துள்ளதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது.


பரீட்சையில் தோல்வி, கடன் பிரச்சனைக்காக 6.5 சதவீதமும், குடும்பப் பிரச்னைக்காக 60சதவீதம் பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தொழில் மற்றும் வியாபாரத்தில் நஷ்டம்ஆகியவற்றால் 28 சதவீதம் பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சென்ற 2009ஆம் ஆண்டில் இதே போன்ற காரணங்களுக்காக 701 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.. இது குறித்து திண்டுக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொன்.சிவானந்தம், “தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது" என்றார்.

யூனியன் பிரதேசங்களை பொறுத்தவரை, தில்லியில் அதிகபட்சமாக ஆயிரத்து 716 பேரும், புதுச்சேரியில் 557 பேரும் உயிரிழந்துள்ளனர். 7 யூனியன் பிரதேசத்தின் மொத்த தற்கொலை, நாட்டின் மொத்த எண்ணிக்கையில் 1.7 சதவிகிதம்.

//காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வஜ்ரவேலு. இவரது மகன் பாலாஜி. இவர் பிளஸ் 1 படித்து வந்தார் . இன்று மாலை பாலாஜி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் . இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.//

இது நேற்று வந்த பத்திரிக்கை செய்தி. உயிரின் மதிப்பை உணராத மாணவன்.

உளவியல் வல்லுனர் சிகமன் ஃப்ராய்ட் மனிதன் தற்கொலையின் பக்கம் உந்தப்படுவதற்கான நியாயத்தை உளவியல் அடிப்படையில் பின்வருமாறு விளக்குகிறார்:

“பொதுப்படையாக மனித உள்ளத்தில் வாழ வேண்டும் என்ற ஆசையும், சாக வேண்டும் என்ற ஆசையும் அடிப்படை உணர்ச்சிகளாகத் தேங்கியுள்ளன. இவை மனிதனை எதிரெதிர்த் திசைகளில் இழுத்துக்கொண்டும், ஒன்றின் மீது ஒன்று ஆதிக்கம் செலுத்திக்கொண்டும் உள்ளன. ஏதேனுமொரு காரணத்திற்காக சாக வேண்டும் என்ற எண்ணம் வாழ வேண்டும் என்ற விருப்பத்தை மிகைத்து வெற்றி கொள்ளுமாயின் வாழ வேண்டும் என்ற அதீத விருப்பு குறைந்து பின்தள்ளப்பட்டு பயனற்றுப் போகும். எனவே சாவது தான் சிறந்த தீர்வு என்ற முடிவுக்கு மனிதன் வருகிறான்.”

சமூகவியல் ஆய்வாளர் எமைல் துர்ஹம் என்பவர் தற்கொலை செய்வதற்கு சமூகச் சூழ்நிலைகளும் உணர்வுகளும் கூட காரணமாகின்றன என்கிறார். தற்கொலைகளை இவர் 3 வகைப்படுத்துகிறார்:

1. தன்னலம் கருதிய அல்லது தன்முனைப்புத் தற்கொலை (Egoistic Suicide): காதல் தோல்வி, திருமண உறவில் பிரச்சனை, கடன் தொல்லை, மன அழுத்தம் போன்ற தனிநபர் தொடர்பான பிரச்சனைகள் இதில் அடங்கும்.

2. நியம மறு தற்கொலை (Anomic Suicide): இயற்கைப் பேரிடர்கள், பொருளாதார நெருக்கடி, புலம் பெயர்வு, அகதி வாழ்வு, போர், கலவரம், இனப்படுகொலை போன்ற சமூகத்தில் ஏற்படும் எதிர்பாரா இடர்களால் வாழ்க்கை சீர்குலைவதைக் கண்டு கலங்கி செய்துகொள்ளும் தற்கொலைகள் இதில் அடங்கும்.

3. உன்னத அல்லது பொதுநலத் தற்கொலை (Altruistic Suicide): இனம், தேசம், கலாச்சாரத்திற்காகச் செய்யப்படும் தற்கொலைகள். ஆனால் இவை அரிதாகவே நிகழ்கின்றன.

----------------------------------------------

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பேச்சு

கடன்சுமை தாளாமல் விவசாயி கள் தற்கொலை செய்து கொள்வது நம்நாட்டில் தொடர்கதையாகி விட்டது. சென்ற வாரம் கூட விதர்பா பகுதியில் 30 விவசாயிகள் கடன் கொடுமையைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர்.

இது குறித்து ஒரு விழாவில் கருத்து கூறிய பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், இஸ்லாமிய வங்கி முறையால் மட்டுமே இத்தகையத் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்த முடியும் என்று ஆணித்தரமாக எடுத்துரைத்துள்ளார்.

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்குக் காரணம், கடனை செலுத்த முடியாமை அல்ல, அந்தக் கடனுக்கு விதிக்கப்படும் கொடுமை யான வட்டியைக் கட்டமுடியாமையே.

விவசாயிகள் மட்டுமின்றி, ஏழை எளிய மக்கள் கந்து வட்டிக் கொடுமை யின் காரணமாக, குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிற செய்தி கள் அடிக்கடி நெஞ்சைச் சுடுகின்றன.

வட்டியில்லாத கடனை வழங்கும் இஸ்லாமிய வங்கிமுறையே, இந்தக் கொடுமைகளுக்கு ஒரே தீர்வு என சென்னையில் நடைபெற்ற ‘கருணா ரத்னா’ விருதுகள் வழங்கும் விழாவில் எம்.எஸ்.சுவாமி நாதன் பேசியுள்ளார்.

நபித் தோழர் அனஸ் அறிவித்தார்: "நபி அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி அவர்கள் 'அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன பெரும் பாவங்களாகும்" என்று கூறினார்கள். [நூல்;புஹாரி எண் 2653 ]

உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளதீர்கள் ! -அல் குர்ஆன்(2:195)

உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள் ! அல்லாஹ் உங்கள் மீது மிக கருணை உள்ளவனாக இருக்கிறான்!-அல் குர்ஆன் (4:29)

இறைவன் கொடுத்த இந்த சிறந்த உயிரை நாமாக போக்கிக் கொள்ள நமக்கு உரிமையில்லை. எந்த சிக்கல் வந்தாலும் அதனை இறைவனின் மேல் பாரத்தைப் போட்டு விட்டு மனதை லேசாக்குவோம். மனச்சிதைவிலிருந்து நம்மை காத்துக் கொள்வோம்.

6 comments:

நாகூர் மீரான் said...

சலாம் சகோ.சுவனப்பிரியன் !

வாழ்க்கைக்கு தேவையான பதிவு...இப்பதிவுக்கு வலுசேர்க்கும் ஒரு நிகழ்வை இப்போது சொல்ல நினைக்கிறேன்..!

எல்லாமே முடிந்து விட்டது இனி ஒன்றும் செய்ய முடியாது என்ற சிந்தனையையும், நமக்கு கிடைத்து விட்டது என்று மார்தட்டும் சிந்தனையையும் தவிடு பொடியாக்கிய ஒரு அனுபவம் ..!

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடைபெறும் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு எனது சகோதரியையும் அழைத்து இருந்தனர்..அப்போது ஒரு இடத்திற்கு ஒருவர் என்ற வீதம் அழைத்தனர்..சரி இனி போஸ்டிங் தான் என்று நினைத்த வேளையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு ஒரு இடத்துக்கு இருவர் என்ற வீதம் அழைத்தனர்..அப்போது முதலில் சில மதிப்பெண் குறைந்து இருந்த பலர் கோதாவில் வாய்ப்பு பெற்றனர்..!

எல்லாம் முடிந்து போஸ்டிங்கிற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்கையில் சம்பந்தமே இல்லாமல் ஆக கடைசியில் இருந்த சிலர் தேர்வு பெற்றிருந்தது எனக்கு வியப்பாக இருந்தது..அவர்கள் நினைத்து கூட பார்த்து இருப்பார்களா என்று தெரியவில்லை..எப்படி நடந்தது என்றால் முன்னால் உள்ள சிலரின் கல்வி தகுதி போதிய அடிப்படையில் இல்லை என்று பின்னால் உள்ளவர்களை தேர்வு செய்திருக்கின்றனர்..சுபஹானல்லாஹ் .!!! .

மொத்தம் இந்த இழுபறி ஒரு ஆறு மாத காலம் இருக்கும்..இன்று காலையில் தான் முடிவை வெளியிட்டனர்..எனக்கு தெரிந்த ஒரு ஆசிரியை (முதலில் தேர்வானவர் ) பள்ளியில் எல்லோரிடமும் சொல்லிவிட்டார்களாம் ..ஆனால் அவருக்கு கிடைக்கவில்லை..நினைத்து பார்க்காத சிலருக்கு கிடைத்திருக்கிறது ..

இதனால் நான் அறிந்து கொண்டது எல்லாம் முடிந்து விட்டது என்று எதுவும் கிடையாது..அது நல்லதாயினும் கெட்டதாயினும்..சரியே.!

டிஸ்கி :எனது சகோதரி வெற்றி பெற்று விட்டார். அல்ஹம்துலில்லாஹ் !!!

நன்றி !!!

jaisankar jaganathan said...

தற்கொலை வெடிகுண்டு தீவிரவாதிகளூக்கு ஒரு எச்சரிக்கை போட்டிருக்கலாம் சுவனம். இஸ்லாமிய மதத்துக்கு ஒரு சவாலா இருக்கும்

சுவனப் பிரியன் said...

சலாம் சகோ நாகூர் மீரான்!

//இதனால் நான் அறிந்து கொண்டது எல்லாம் முடிந்து விட்டது என்று எதுவும் கிடையாது..அது நல்லதாயினும் கெட்டதாயினும்..சரியே.!

டிஸ்கி :எனது சகோதரி வெற்றி பெற்று விட்டார். அல்ஹம்துலில்லாஹ் !!!//

இன்பமோ துன்பமோ எது வந்தாலும் அதிக உணர்ச்சி வசப்படாமல் ஒரு நிதானத்தை கடைபி டித்து இறைவன் மேல் பாரத்தை போட்டு விடுபவர்களின் வாழ்வு கவலையற்று இருக்கும்.

உங்கள் சகோதரிக்கு வேலை கிடைத்தது அறிந்து மகிழ்ச்சி. அல்ஹம்துலில்லாஹ்! பார்ட்டி எப்போ! :-)

சுவனப் பிரியன் said...

//தற்கொலை வெடிகுண்டு தீவிரவாதிகளூக்கு ஒரு எச்சரிக்கை போட்டிருக்கலாம் சுவனம்.//

தற்கொலை செய்வது மகாபாவம் என்கிறது இஸ்லாம். அந்த இஸ்லாத்தின் பெயரால் எவராவது தற்கொலை குண்டுதாரியாக மாறினால் அதனால் அவருக்கு எந்த பிரயோசனும் இல்லை. அரசின் மீது தனிப்பட்டவர் மீது வெறுப்பு இருந்தால் சட்டத்தின் மூலமும் போராட்டங்களின் மூலமுமே நம்முடைய எதிர்ப்பை காட்ட வேண்டும். ஒரு சிலர் முன்பு தவறாக பல நாடுகளில் வழி காட்டப்பட்டனர். அவர்களுக்கு முறையான இஸ்லாத்தை விளங்கப்படுத்த வேண்டும்.

ராவணன் said...

குண்டு வைப்பதை குலத்தொழிலாக செய்யும் ஒங்க ஆட்களிடம் சொல்லுங்க அண்ணாச்சி.

ராவணன் said...

நம்ம ஒரே இறைவன் முனியாண்டிசாமியால் ஒங்களுக்கு மன அமைதி நல்லா இருக்கும்.

…எதுக்கும் அந்த குண்டு வைக்கும் கும்பலி
…டமிருந்து கொஞ்சம் விலகியே இருங்கள்.