பிரித்தானியாவில் பிறந்து தற்போது சவூதியில் வசித்து வரும் ஜிப்ரீல் மாசன் என்பவர் தான் இஸ்லாத்தின்பால் கவரப்பட்டதன் சுவாரஷ்யங்களை சவூதி அரேபிய தொலைக்காட்சி ஒன்றுடன் பகிர்ந்துக்கொண்டார்.
ஷேக் யூசுப் எஸ்டெஸ்: அஸ்ஸலாமு அலைக்கும். உங்களுடைய பெயரை தெரிந்து கொள்ளலாமா?
ஜிப்ரீல் மாசன்: எனது பெயர் ஜிப்ரீல் மாசன். இஸ்லாத்தை ஏற்றதும் எரிக் மாசன் என்ற பெயரை ஜிப்ரீல் மாசன் என மாற்றிக் கொண்டேன்
ஷேக் யூசுப் எஸ்டெஸ்:நீங்கள் பிரித்தானிய மொழி உச்சரிப்பினை கொண்டிருக்கிறீர்கள். எனினும் சில அரபு வார்த்தைகளை பேசுகிறீர்கள். அத்துடன் அரபுப் பெயரைக் கொண்டிருக்கிறீர்கள். இது எப்படி?
ஜிப்ரீல் மாசன்: நன்று, நான் எனது இளமைக் காலத்தில் நைஜீரியாவில் வசித்தேன். எனது தாய் ஒரு இத்தாலிய கத்தோலிக்கர். தந்தை பிரித்தானிய புரொடொஸ்டண்ட். அவர்களுக்கு 4 குழந்தைகள். அக் குழந்தைகளில் நானும் ஒருவன்.நான் சிறுவனாக இருக்கும்போது எனது தந்தை பல வருடங்கள் நைஜீரியாவில் அரசியலில் ஈடுபட்டார். அப்போது நான் எமது பெற்றோருடன் அங்கேயே இருந்தேன்.
எனது தந்தையின் அதிகமான நண்பர்கள் முஸ்லிம்கள். அங்கு வேலை பார்ப்பவர்கள் அநேகமானோர் முஸ்லிம்கள். எனது தந்தை ‘‘முஸ்லிம்கள் நல்லவர்கள். அவர்களை நம்பலாம்’’ என அடிக்கடி கூறுவார். அதனைத்தான் நானும் கூறுகிறேன்.
ஷேக் யூசுப் எஸ்டெஸ்: ஆனால் நீங்கள் சொல்வதற்கு எதிராகவே இன்று ஊடகங்கள் சொல்கின்றன. முஸ்லிம்கள் கெட்டவர்கள். நீங்கள் அவர்களை நம்பாதீர்கள் என அவை கூறுகின்றன. ஆனால் உங்களின் தந்தை முஸ்லிம்கள் நல்லவர்கள். அவர்களை தாராளமாக நம்பலாம் என்கிறார். குழப்பமாக இல்லையா?
ஜிப்ரீல் மாசன்: நடைமுறையில் பெரும்பாலான முஸ்லிம்கள் நல்லவர்கள். நல்ல மக்கள். எனது மகன் சவூதி அரேபியாவிலேயே பிறந்தார். அவன் தற்போது இங்கிலாந்து பல்கலைக்கழகமொன்றில் கல்வி கற்கின்றான். அங்கு எனது மகன் சவூதி நண்பர்களுடன் உதைபந்து விளையாடும் ஒரு புகைப்படத்தையேனும் அவர்கள் வெளியிட்டதில்லை. எனினும் அவன் தனது சவூதி நண்பர்களுடன் சண்டையிடும் காட்சிகளை மட்டும் வெளியிடுகின்றனர்.
இஸ்லாம் தொடர்பிலும் ஊடகங்கள் இதனையே செய்கின்றன. முஸ்லிம்களில் நல்லவர்கள் இருப்பதைப் போன்று தவறு செய்தவர்களும் இருக்கின்றனர். எனினும் நடைமுறையில் பெரும்பாலானவர்கள் நல்லவர்களே. எங்களுக்கு வேண்டியதும் நல்லவர்களே.
ஷேக் யூசுப் எஸ்டெஸ்: நீங்கள் இஸ்லாத்தைத் தழுவி எவ்வளவு காலம் ஆகின்றது?
ஜிப்ரீல் மாசன்: நான் இஸ்லாத்தைத் தழுவி இப்போது 5 அல்லது 6 வருடங்கள் ஆகின்றன. ஆனால் நான் நைஜீரியாவில் சிறுவனாக இருக்கும் போதே குர்ஆனைப் பெற்றுக் கொண்டேன். ஒருபோதும் அதனை விட்டு விட்டு பயணிக்கக் கூடமாட்டேன்.
ஷேக் யூசுப் எஸ்டெஸ்: நீண்ட நாட்கள் சிந்தித்ததன் பின்னரா முஸ்லிமாக மாறும் முடிவை எடுத்தீர்கள் ?
ஜிப்ரீல் மாசன்: எனக்கு இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. யாருக்காகவும் நான் இதை செய்யவில்லை. எனக்கும் இறைவனுக்குமாகவுமே நான் இதைச் செய்தேன். நான் இஸ்லாத்தை ஏற்கும்போது எனக்கு வேறு தெரிவு என்பது சாத்தியமற்றது.
வணக்கத்துக்குத் தகுதியானவன் இறைவன் ஒருவனே. அவன் அல்லாஹ் ஒருவனே. முஹம்மது நபியவர்கள் அவனின் தூதர். இதுவே நான் இஸ்லாத்தை ஏற்கக் காரணம்.
ஷேக் யூசுப் எஸ்டெஸ்: சரி. நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட போது உங்கள் மனோநிலை எப்படி இருந்தது? மக்கள் உங்களை துரோகியாக பார்த்தார்களா?
ஜிப்ரீல் மாசன்: சிலர் இதனை நம்பவில்லை. இஸ்லாமே வாழ்க்கைக்கு சரியான பாதை என்பதை விளங்கியதால்தான் அதனை ஏற்றுக் கொண்டேன்.
எரிக் நீ எப்படி முஸ்லிம் ஆனாய்? நீ அரைக்கால் சட்டை அணிகிறாய். உன் சிகை அலங்காரம் அலங்கோலமாய் உள்ளது. நீ ஆங்கில கலாசார பழக்க வழக்கங்களை பின்பற்றும் ஒரு ஆடம்பரப் பிரியன் என்றெல்லாம் சிலர் என்னை விமர்சித்தனர்.
ஆனால் முஸ்லிம்கள் நல்லவர்கள். அவர்கள் அனைவரையும் தொப்பி அணிந்து குண்டெறிபவர்களாக சித்தரிக்காதீர்கள். அவர்கள் அப்படிபட்டவர்கள் அல்ல என்று நான் கூறுவேன்.
ஷேக் யூசுப் எஸ்டெஸ்: நீங்கள் குண்டு தொடர்பில் கூறியதால் இன்னொரு வினாவை உங்களிடம் தொடுக்கிறேன். சிலர் இஸ்லாம் தீவிரவாதத்தின் ஒரு பகுதி என்று கூறுகின்றனர். நீங்கள் இதில் உடன்படுகின்றீர்களா? அல்லது இதனை மறுக்கின்றீர்களா?
ஜிப்ரீல் மாசன்: நிச்சயமாக. எல்லா மதத்தவர்களும் அப்படி சொல்கின்றனர். நீங்கள் அதை நிறுத்த முடியாது. சிந்தனைகள் அனைத்தும் ஒரே மாதிரி இருக்காது. எங்களில் நல்ல முஸ்லிம்கள் கெட்டவர்கள் என இரு வகையினர் இருக்கலாம். கத்தோலிக்கர்களிலும் நல்லவர்கள் கெட்டவர்கள் இருக்கின்றார்கள்.
ஷேக் யூசுப் எஸ்டெஸ்: அப்படியானால் குண்டு எறிபவர்கள் அனைவரும் காட்டு மிராண்டிகள் அல்லது கெட்டவர்கள் என்கின்றீர்களா?
ஜிப்ரீல் மாசன்: அப்பாவிகள் மீது குண்டு எறிபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் கெட்டவர்கள் என்றே நான் சொல்கிறேன். அதனை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. இஸ்லாமியர்கள் கொலைகாரர்கள் அல்ல. கலந்துரையாடல் புரிந்துணர்வுடன் வழிகாட்டும் மார்க்கமே இஸ்லாம்.
ஷேக் யூசுப் எஸ்டெஸ்: சரி. உங்களிடம் இன்னுமொரு வினா? நீங்கள் இஸ்லாத்தை ஏற்று 5 வருடங்களாகிறது. இப்போது சவூதியின் ஜித்தாவில் இருக்கிறீர்கள். அங்கிருந்து மக்காவுக்கு செல்வதொன்றும் கஷ்டமல்ல. ஹஜ் கடமையை நிறைவேற்றியுள்ளீர்களா?
ஜிப்ரீல் மாசன்: இதுவரையில்லை. நான் அடுத்த வருடம் ஜித்தா தஃவா மத்திய நிலையத்தின் வழிகாட்டலின் பேரில் எனது ஐரோப்பிய நண்பர்களுடன் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றவுள்ளேன். அமெரிக்கர் ஜேர்மனியர் பிரான்சியர் இத்தாலியர் பிரித்தானியர் என அனைவரும் வித்தியாசமின்றி நாங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுவோம்.
நான் இரு முறை உம்றா செய்திருக்கிறேன். ரமழானில் 27 ஆம் நாளில் அதனை நான் செய்திருக்கிறேன். நான் மதீனாவின் மஸ்ஜிதுல் நபவிக்கும் விஜயம் செய்துள்ளேன்.
ஷேக் யூசுப் எஸ்டெஸ்: எங்களுக்கு ஏதாவது கூற விரும்புகிறீர்களா?
ஜிப்ரீல் மாசன்: நல்லவர்களாக வாழ வேண்டும். குர் ஆனை தினமும் ஓதுங்கள். அதனை வாழ்க்கையில் எடுத்து நடவுங்கள். என்னை இங்கு எவரும் முஸ்லிமாவதற்கு அழுத்தம் கொடுக்கவில்லை. இது எனது விருப்பம். தெரிவு அவர்களைப் பொறுத்தது. நல்லவர்களாக மாறுவதற்கு பிரார்த்தனை செய்யுங்கள் அவ்வளவுதான்.
பேட்டி எடுக்கும் சகோ யூசுஃபை சில ஆண்டுகளுக்கு முன்பு ரியாத் தாஃவா அலுவலகத்தில் சந்தித்து கை குலுக்கி உரையாடியுள்ளேன். இவரும் முன்னால் கிறித்தவ பாதிரியாக அமெரிக்காவில் வேலை பார்த்து வந்தவர். இஸ்லாத்தினை ஆராய்ந்து இவரும் முஸ்லிமானார். இஸ்லாம் சம்பந்தமான இவரது சொற்பொழிவுகளை கேட்டுக் கொண்டே இருக்கலாம். அந்த அளவு நகைச்சுவை உணர்வோடு பேசும் திறன் உள்ளவர். நேரம் இருப்பின் இவரின் சொற்பொழிவுகளைக் கேட்டுப் பாருங்கள்.
17 comments:
// முஸ்லிம்களில் நல்லவர்கள் இருப்பதைப் போன்று தவறு செய்தவர்களும் இருக்கின்றனர். எனினும் நடைமுறையில் பெரும்பாலானவர்கள் நல்லவர்களே. எங்களுக்கு வேண்டியதும் நல்லவர்களே. //
எல்லா மதத்திலும், இனத்திலும் நல்லவர்களும் உண்டு, தீயவர்களும் உண்டு. தீயவர்களை வைத்து ஒரு இனத்தையோ மதத்தையோ தவறாக பேசுபவர்கள் நிச்சயம் அறிவிளீகளே...
இஸ்லாத்தில் தவறு செய்பவர்களை உதாரணம் காட்டி இஸ்லாமியர்களே கெட்டவர்கள் என்று ஒரு முட்டாள் சொன்னால்.. அந்த முட்டாளிடம் சொல்லுங்கள்..
அப்படி பார்த்தால், மனிதனிலும் கொலை செய்பவர்கள் இருக்கிறார்கள்.. மனிதர்கள் அனைவரும் காட்டுமிராண்டிகள் என்று சொல்லிவிடுவோமா??
முஸ்லிம்களை கொன்று குவித்த மகாராஷ்டிர போலீஸ் : 5 பேர் பலி; ஊசலாடும் உயிர்கள் "100" Monday, 07 January 2013 02:56 maruppu மீடியா - மறுப்பு செய்திகள்
Jan7, மகாராஷ்டிர மாநிலம் மாலேகானிலிருந்து 45 கி.மீ. தூரத்தில் உள்ள "துலியா" நகரத்தில், நேற்று மாலை (06/01) முஸ்லிம்களை நோக்கி போலீஸ் கண்மூடித்தனமாக "துப்பாக்கிச்சூடு" நடத்தியதில் 5 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
நூற்றுகணக்கான முஸ்லிம்கள் "குண்டடி" பட்டு உயிருக்கு போராடி வருகின்றனர்.
இறந்தவர்களில் இம்ரான் அலி கமர் அலி (20) ஹாஷிம் ஷேக் நசீர் (25) சவூத் அஹ்மத் (20) ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
முஹம்மத் இம்ரான், முஹம்மத் ஹசன், ஷாஹித் அப்துர்ரஷீத், ஃபஹீம், சலீம் அஹ்மத், ஜமீல் அஹ்மத், கலீல் அஹ்மத், முஹ்ஸின் முஷ்தாக், முஹம்மத் தில்ஷாத், முஹம்மத் ஷஃபான், முஹம்மத் ஹாரூன், அய்யூப், முஹம்மத் ரிஸ்வான், அப்துல் பாஸித், முஹம்மத் தாவூத், சயீத் அஹ்மத், ஷம்சுல்லுஹா உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமான முஸ்லிம்களின் உயிர்கள் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.
போலீசின் துப்பாக்கிச்சூட்டுக்கு முன்பு "காவி பயங்கரவாதிகள்" முஸ்லிம் முஹல்லாக்களில் புகுந்து வீடுகளை சூறையாடினர்.
இக்ரா கம்ப்யூட்டர்ஸ் என்ற நிறுவனத்துக்குள் புகுந்து கொள்ளையடித்தனர்.
வீடுகளுக்கு தீவைத்தனர்.
தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்க முயன்றபோதும், ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக தடுத்து நிறுத்தினர்.
கலவரத்துக்கு 3 காரணங்கள் கூறப்படுகின்றது:
1.மதியம் 2.30 மணியளவில் பாகிஸ்தானுக்கு எதிராக "இந்திய கிரிக்கெட் அணி" 167 ரன்னுக்கு "ஆல்-அவுட்" ஆனதைத்தொடர்ந்து, முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
(விடுமுறை நாளான நேற்று, உள்ளூர் இளைஞர்கள் "கிரிக்கெட் ஆட்டத்தில் மோதல்" என்றும் சொல்லப்படுகிறது)
2.முஸ்லிம் ஆட்டோ டிரைவரை தாக்கியது தொடர்பாக கேள்வி கேட்டபோது, கலவரக்கும்பல் முஸ்லிம்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
3.முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் "சங்க பரிவாரங்கள்" வைத்திருந்த "மத-துவேஷ பேனரை கிழித்தது" தொடர்பில் கலவரம் நடத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
வேதனை என்னவென்றால், 2.45 முதல் தொடர்ச்சியாக 3மணி நேரம் நடத்தப்பட்ட கல்வீச்சில் காயங்கள் ஏற்பட்டதே தவிர உயிரழப்புக்கள் இல்லை.
கலவரத்தை கட்டுப்படுத்துகிறோம் பேர்வழிகள் என்று சொல்லிக்கொண்டு களத்தில் இறங்கிய காவி சிந்தனை கொண்ட போலீஸ், முஸ்லிம்களை குறிவைத்து சுட்டுக்கொன்றது.
இதனால், துலியா நகரத்தின் மச்லி பஜார், வலிபுரா, தாஷாபுரா, மவ்லவி கஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள், உறைந்துபோய் வீடுகளில் முடங்கிப்போய் உள்ளனர்.
வழக்கம் போல் போலீஸ், முஸ்லிம் வீடுகளின் கதவுகளை உடைத்து "நல்லிரவுக்கைது" கச்சேரிகளையும் அரங்கேற்றியது.
பெண்களுக்கு வீட்டிற்குள்ளும் பாதுகாப்பில்லை.
கணவன் அல்லது உறவினர்களால் கொடுமைக்கு ஆளாகும் டெல்லி பெண்கள்!...
ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்
Posted by: Mayura Akilan Published: Monday, January 7, 2013, 9:14 [IST]
டெல்லி: கணவன் அல்லது அவனுடைய உறவினர்களால் டெல்லியில் பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர் என்று ஓர் அதிர்ச்சி புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ளது.
அடித்து துன்புறுத்துதல், பாலியல் ரீதியான துன்புறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கொடுமைகள் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படுகின்றன.
அங்கு கடந்த 2011ம் ஆண்டு மட்டும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றிய புகார்கள் 1500 வரை பதிவாகியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய குற்ற பதிவு துறையினர் வெளியிட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது.
கணவனுக்கு அடங்கி நடப்பதும் லட்சுமண ரேகையை தாண்டாமல் இருப்பதும்தான் பெண்களுக்கு பாதுகாப்பு என்கின்றனர் சில தலைவர்கள்.
ஆனால் அப்படி இருந்தாலும் கூட கணவனாலும், அவனுடைய உறவினர்காளாலும் துன்புறுத்தலுக்கு ஆளாகி பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர் தலைநகரப் பெண்கள்.
வீட்டுப் பொருளாதார சூழ்நிலைக்காக வெளியே வேலைக்கு சென்று பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் பெண்கள் ஒருபுறம் இருக்கையில் வீட்டிற்குள்ளே இல்லத்தரசிகளாக வலம் வரும் பெண்கள் அடி, உதை மற்றும் பாலியல் ரீதியான வன்கொடுமைக்கும் ஆளாகிவரும் அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி பெண்களுக்கு பாதிப்பு அதிகம்
தேசிய குற்ற பதிவு துறையினர் வெளியிட்ட தகவலில், கடந்த 2011ம் ஆண்டு டெல்லி மாநகரில் குடும்ப உறுப்பினர்களால் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை 1,498 ஆக உள்ளது.
இது முந்தைய ஆண்டுகளை விட அதிகம் 2010ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 1,273 பதிவாகியுள்ளது. அதுவே 2009ம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 1,177 ஆகவும் இருந்துள்ளது.
ஹைதராபாத் 2 ம் இடம்
இந்தியாவில் வளர்ச்சியடைந்த நகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் பதிவாகியுள்ளன. ஹைதராபாத்தில் ஜனவரி-டிசம்பர் வரையிலான 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 1,355 வழக்குகள் பதிவாகியுள்ளன.
மும்பை, சென்னையில் குறைவு
டெல்லி, ஹைதராபாத் தவிர பிற மெட்ரோ நகரங்களான கொல்கத்தாவில் 557 வழக்குகளும், பெங்களூரில் 458 வழக்குகளும் பதிவாகியுள்ளன. அதேசமயம் மும்பையிலும்,சென்னையிலும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை வழக்குகள் 229 மட்டுமே பதிவாகியுள்ளன.
2010ம் ஆண்டில் வழக்குகள்
பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தொடர்பாக கடந்த 2010ம் ஆண்டு ஹைதராபாத்தில் 1,420 வழக்குகளும், கொல்கத்தாவில் 400 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
பெங்களூரில் 398 வழக்குகளும், மும்பையில் 312 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
அதேசமயம் சென்னையில் 125 வழக்குகள் மட்டுமே போலீசாரால் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
2009ல் வழக்கு விபரம்
அதேபோல் கடந்த 2009ம் ஆண்டில் ஹைதராபாத்தில் 1,383 வழக்குகள் அதிகபட்சமாக பதிவாகி உள்ளன. அதேபோல், மும்பையில் 434 வழக்குகளும் கொல்கத்தாவில் 411 வழக்குகளும் பதிவாகியுள்ளன. அதேசமயம் பெங்களூரில் 367 வழக்குகளும் சென்னையில் 154 வழக்குகளும் பதிவாகியுள்ளன என்று அந்த கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டிற்குள்ளும் பாதுகாப்பில்லை
வீட்டைவிட்டு வெளியே சென்றால்தான் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறப்படும் நிலையில் வீட்டிற்குள்ளேயே அடங்கி ஒடுங்கி இருந்து அடுப்பங்கரையில் வேகும் பெண்களுக்கும் குடும்பத்தினரால் கொடுமை நிகழ்த்தப்படுகிறது.
பிற மாநிலப் பெண்கள் தைரியமாக கணவர் மற்றும் உறவினர்களுக்கு எதிராக புகார் கொடுக்க முன் வருகின்றனர்.
ஆனால் தமிழ்நாட்டுப் பெண்கள் அதையும் அனுசரித்துக்கொண்டுதான் வாழ்க்கை நடத்துகின்றனர்.
அதனால்தான் தமிழ்நாட்டில் அதிக அளவில் இதுபோன்ற புகார்கள் பதிவு செய்யப்படுவதில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
SOURCE: http://tamil.oneindia.in/news/2013/01/07/india-rise-cases-cruelty-husbands-against-women-in-delhi-167479.html#slidemore-slideshow-1
காந்தியைக் கொன்றவர்கள் எங்களுக்கு நாட்டை நேசிக்கக் கற்றுத்தர தேவையில்லை: எம்.பி. ஒவைசி
Posted by: Siva Published: Monday, January 7, 2013, 12:20 [IST]
ஹைதராபாத்: மதக் கலவரத்துக்கு இந்து சமுதாயத்தை தூண்டிவிடும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஸ்வ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஹைதராபாத் எம்.பி.யும், மஜ்லிஸ் இ இத்திஹத்துல் முஸ்லிமீன் கட்சி தலைவருமான அசாதுத்தீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தில் உள்ள நிர்மல் நகரில் கடந்த மாதம் 24ம் தேதி நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மஜ்லிஸ் இ இத்திஹத்துல் முஸ்லிமீன் எம்.எல்.ஏ. அக்பருத்தீன் ஒவைசி மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரது சகோதரர் ஹைதராபாத் எம்.பி.யும், மஜ்லிஸ் இ இத்திஹத்துல் முஸ்லிமீன் கட்சி தலைவருமான அசாதுத்தீன் ஒவைசி ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள டண்டூரில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல.
எங்கள் எதிரிகள் காங்கிரஸும், பாஜகவும் தான்.
இது என் நாடு. என் நாட்டை நான் நேசிக்கிறேன்.
எனது தாய்நாட்டை நேசிப்பது எப்படி என்று காந்தியைக் கொன்றவர்கள்,
பாபர் மசூதியை இடித்தவர்கள்,
குஜராத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களைக் கொன்றவர்களிடம் இருந்து பாடம் கற்க வேண்டிய அவசியம் இல்லை.
காங்கிரஸுக்கு நாங்கள் அளித்த ஆதரவை வாபஸ் பெற்றதால் ஆந்திர அரசு வேண்டும் என்றே எனது சகோதரர் மீது வழக்குகள் போடுகிறது.
ஆனால் இந்திய சட்டங்கள் மற்றும் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது.
அக்பருத்தீன் சட்டத்தில் இருந்து ஓடிவிட மாட்டார்.
இந்து சமுதாயத்தை தூண்டிவிடும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஸ்வ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.
Read more at: http://tamil.oneindia.in/news/2013/01/07/india-ban-rss-vhp-asaduddin-owaisi-167506.html
.
.
CLICK TO>>>>முஸ்லீம்ஸ் ஏமாத்திடுவாங்க <<<< READ
.
.
சலாம் சகோ சுவனப்பிரியன்,
//அவன் தற்போது இங்கிலாந்து பல்கலைக்கழகமொன்றில் கல்வி கற்கின்றான். அங்கு எனது மகன் சவூதி நண்பர்களுடன் உதைபந்து விளையாடும் ஒரு புகைப்படத்தையேனும் அவர்கள் வெளியிட்டதில்லை. எனினும் அவன் தனது சவூதி நண்பர்களுடன் சண்டையிடும் காட்சிகளை மட்டும் வெளியிடுகின்றனர்.
இஸ்லாம் தொடர்பிலும் ஊடகங்கள் இதனையே செய்கின்றன. முஸ்லிம்களில் நல்லவர்கள் இருப்பதைப் போன்று தவறு செய்தவர்களும் இருக்கின்றனர்.//
மாஷா அல்லாஹ் அருமையான ஆக்கம்.ஊடகங்களின் கயமைத்தனத்தை அருமையான உதாரணம் மூலம் விளக்கம் கொடுத்திருக்கிறார் சகோதரர் ஜிப்ரீல் மாசன்.
முஸ்லிம்களை கொன்று குவித்த மகாராஷ்டிர போலீஸ் :
5 பேர் பலி; ஊசலாடும் உயிர்கள் "100"
Monday, 07 January 2013 02:56 maruppu மீடியா - மறுப்பு செய்திகள்
Jan7, மகாராஷ்டிர மாநிலம் மாலேகானிலிருந்து 45 கி.மீ. தூரத்தில் உள்ள "துலியா" நகரத்தில், நேற்று மாலை (06/01) முஸ்லிம்களை நோக்கி போலீஸ் கண்மூடித்தனமாக "துப்பாக்கிச்சூடு" நடத்தியதில் 5 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
நூற்றுகணக்கான முஸ்லிம்கள் "குண்டடி" பட்டு உயிருக்கு போராடி வருகின்றனர்.
இறந்தவர்களில் இம்ரான் அலி கமர் அலி (20) ஹாஷிம் ஷேக் நசீர் (25) சவூத் அஹ்மத் (20) ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
முஹம்மத் இம்ரான், முஹம்மத் ஹசன், ஷாஹித் அப்துர்ரஷீத், ஃபஹீம், சலீம் அஹ்மத், ஜமீல் அஹ்மத், கலீல் அஹ்மத், முஹ்ஸின் முஷ்தாக், முஹம்மத் தில்ஷாத், முஹம்மத் ஷஃபான், முஹம்மத் ஹாரூன், அய்யூப், முஹம்மத் ரிஸ்வான், அப்துல் பாஸித், முஹம்மத் தாவூத், சயீத் அஹ்மத், ஷம்சுல்லுஹா உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமான முஸ்லிம்களின் உயிர்கள் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.
போலீசின் துப்பாக்கிச்சூட்டுக்கு முன்பு "காவி பயங்கரவாதிகள்" முஸ்லிம் முஹல்லாக்களில் புகுந்து வீடுகளை சூறையாடினர்.
இக்ரா கம்ப்யூட்டர்ஸ் என்ற நிறுவனத்துக்குள் புகுந்து கொள்ளையடித்தனர்.
வீடுகளுக்கு தீவைத்தனர்.
தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்க முயன்றபோதும், ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக தடுத்து நிறுத்தினர்.
கலவரத்துக்கு 3 காரணங்கள் கூறப்படுகின்றது:
1.மதியம் 2.30 மணியளவில் பாகிஸ்தானுக்கு எதிராக "இந்திய கிரிக்கெட் அணி" 167 ரன்னுக்கு "ஆல்-அவுட்" ஆனதைத்தொடர்ந்து, முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
(விடுமுறை நாளான நேற்று, உள்ளூர் இளைஞர்கள் "கிரிக்கெட் ஆட்டத்தில் மோதல்" என்றும் சொல்லப்படுகிறது)
2.முஸ்லிம் ஆட்டோ டிரைவரை தாக்கியது தொடர்பாக கேள்வி கேட்டபோது, கலவரக்கும்பல் முஸ்லிம்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
3.முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் "சங்க பரிவாரங்கள்" வைத்திருந்த "மத-துவேஷ பேனரை கிழித்தது" தொடர்பில் கலவரம் நடத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
வேதனை என்னவென்றால், 2.45 முதல் தொடர்ச்சியாக 3மணி நேரம் நடத்தப்பட்ட கல்வீச்சில் காயங்கள் ஏற்பட்டதே தவிர உயிரழப்புக்கள் இல்லை.
கலவரத்தை கட்டுப்படுத்துகிறோம் பேர்வழிகள் என்று சொல்லிக்கொண்டு களத்தில் இறங்கிய காவி சிந்தனை கொண்ட போலீஸ், முஸ்லிம்களை குறிவைத்து சுட்டுக்கொன்றது.
இதனால், துலியா நகரத்தின் மச்லி பஜார், வலிபுரா, தாஷாபுரா, மவ்லவி கஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள், உறைந்துபோய் வீடுகளில் முடங்கிப்போய் உள்ளனர்.
வழக்கம் போல் போலீஸ், முஸ்லிம் வீடுகளின் கதவுகளை உடைத்து "நல்லிரவுக்கைது" கச்சேரிகளையும் அரங்கேற்றியது.
http://www.maruppu.in/all-medias/43-maruppu-news/729--5-q100q
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு ஈரான் உதவிகரம்!
7 Jan 2013 Iran's aid to Rohingya Muslims reaches Myanmar
டெஹ்ரான்:மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு உதவிபுரியும் நோக்கில் நிவாரணப் பொருட்களுடன் கப்பல் மியான்மர் சென்றடைந்துள்ளது.
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் குறித்து உலக அமைப்புகள் (துருக்கியை தவிர) மெளனம் சாதிக்கும் வேளையில் ஈரான் உதவி கரம் நீட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உணவு, போர்வை உள்ளிட்ட 30 டன் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாக ஈரான் ரெட் க்ரஸண்ட் சொசைட்டியின் துயர் துடைப்பு அமைப்பின் தலைவர் மஹ்மூத் முஸாஃபர் தெரிவித்தார்.
மியான்மருக்கு சென்று அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் பணிக்கு தலைமை வகிக்க போவதாகவும்,
அப்பகுதியில் முஸ்லிம்களின் நிலைமைக் குறித்து மதிப்பீடுச் செய்யப்படும் என்றும் முஸாஃபர் தெரிவித்தார்.
மியான்மரில் ராக்கேன் மாநிலத்தில் துயர் துடைப்பு முகாம்களை நிறுவுவது குறித்து ஈரான் குழு ஆராயும்.
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு மருத்துவ உதவியும் அளிக்கப்படும் என்று முஸாஃபர் தெரிவித்துள்ளார்.
எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு மியான்மர் அரசு குடியுரிமை வழங்காமல் இருந்து வருகிறது.
மேலும் மியான்மர் அரசு ரோஹிங்கியா முஸ்லிம்களை பாரபட்சமாக நடத்தி வருகிறது.
போலீஸ் ஆதரவுடன் முஸ்லிம்கள் மீது கொடூரமான தாக்குதல்கள் நடக்கின்றன.
அண்மையில் நடந்த தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் பிறந்த மண்ணில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.
முன்னர் துருக்கி பிரதமர் எர்துகானின் மனைவியும்,
வெளியுறவுத்துறை அமைச்சரும் நிவாரணப்பொருட்களுடன் சென்று மியான்மர் முஸ்லிம்களுக்கு உதவி அளித்தனர்.
SOURCE:http://www.thoothuonline.com/irans-aid-to-rohingya-muslims-reaches-myanmar/
அற்புதமான பேட்டி ! அருமையான தமிழாக்கம்..!! ஜசாக்கல்லாஹ் சகோ.சுவனப்பிரியன் ,
பொறாமைப்படுவது இரண்டு இடங்களில் மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருந்தாலும் இத்தகைய மனிதர்களை காணும்போது பொறாமைப்படுவது எம்மால் தவிர்க்க இயலவில்லை.. ஹராமிலே பிறந்து வளர்ந்து அதன் சுவை அறிந்தவர்கள் எப்படி தனக்கு ஒரு தடையை ஏற்படுத்தும் இஸ்லாமை விரும்புகின்றனர் இன்னும் அதற்காக தாம் சுவைத்த இன்பங்களை வெறுக்கின்றனர் என்பது இன்றுவரை எனக்கு ஆச்சர்யமே !!! நிச்சயம் ...இது அல்லாஹ்வின் பெரும் கிருபையே !! நிலையான ஒரு மகிழ்ச்சியை பெற்றுக்கொண்டார்..அல்லாஹ் அவர் மீது மென்மேலும் அருள் புரிவானாக ! இன்னும் நம் மீதும் அதிகமாக அருள் புரிவானாக !! ..ஆமின்.!
அப்பறம் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும் சகோ.ஒரு கேள்வியை கேட்க மறந்து விட்டார் போலும்..அது என்னன்னா ! ஜார்ஜ் பெர்னாட்சவை விட சிந்தனையில் மேலான நமது எதிர் தாவா சகொக்களின் பதிவை நீங்கள் படிக்கவில்லையா..? அவர்களும் விடாமல் மாரடித்து கொண்டிருக்கின்றனரே.. ??
இதுக்கு அவர் என்ன சொல்லியிருப்பார். ஹீ..ஹீ..ஹீ..
//எரிக் நீ எப்படி முஸ்லிம் ஆனாய்? நீ அரைக்கால் சட்டை அணிகிறாய். உன் சிகை அலங்காரம் அலங்கோலமாய் உள்ளது. நீ ஆங்கில கலாசார பழக்க வழக்கங்களை பின்பற்றும் ஒரு ஆடம்பரப் பிரியன்/// அப்ப முஸ்லிம்கள் இது போல் எல்லாம் செய்யமாட்டார்கள் என்று சரியாகத்தான் புரிந்துள்ளார்கள் :)
வருகை புரிந்து கருத்தைப் பதிந்த சகோதர சகொதரிகள் சிராஜ், முஹம்மத், உண்மைகள், தீன் , நாகூர் மீரான், என்றென்றும் பதினாறு ஆகிய அனைவருக்கும் நன்றி.
நான் இந்து தான்.
என் தந்தை பாரதிய ஜனதா உறுப்பினர்.
எனக்கு பல இஸ்லாம் நண்பர்கள் உண்டு.
ஆனால் நானும் சில வருடங்களுக்கு முன்பு வரை 'இஸ்லாமியர்கள் என்றாலே மோசமானவர்கள்' என்ற எண்ணத்தில்தான் இருந்தேன்.
பின்னர்தான் உண்மையை உணர்ந்தேன்.
என்னால் முடிந்தவரையில் பிறருக்கும் உணர வைப்பேன்.- guru nathan
CLICK TO >>>> தீவிரவாதிகள் முஸ்லீம்கள் அல்ல! - guru nathan. <<<<< READ.
.
.
//'முஸ்லிம்கள் நல்லவர்கள் அவர்களை நம்பலாம்'//
எப்படி எல்லாம் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டியிருக்கு
//எப்படி எல்லாம் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டியிருக்கு //
உங்களைப் போன்ற இந்துத்வாவாதிகள் கடந்த 60 வருடங்களாக முஸ்லிம்கள் மேல் பல அபாண்டங்களையும் நெஞ்சறிந்து ஊடகங்களில் ஏற்றி வந்தீர்கள். ஊடகத்துறை முழுவதும் உங்கள் கட்டுப் பாட்டில் இருந்ததால் இது சாத்தியமானது. இணையம் என்ற பெருங்கடல் இன்று எல்லோர் வீட்டையும் ஆக்கிரமித்திருப்பதால் தற்காலங்களில் உங்களால் அதுபோன்ற பொய்களை அரங்கேற்ற முடியவில்லை. தினமலர் ஏதாவது பொய்களை பரப்பினால் அடுத்த நிமிடமே இணையத்தில் அதன் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏற்றப்படும்.
எனவே இனி உங்களின் பொய்கள் சபையேறாது.
ஏற்கெனவே ஏற்றிய பொய்களை இது போன்ற நல்ல உள்ளங்களின் பேட்டியை கொண்டு சரி செய்கிறோம். அது கூட பொறுக்கவில்லையோ?
கேள்வி: உலகக் கோப்பை கபடிப் போட்டி யில் பாகிஸ்தானை வீழ்த்தி, இந்தியா மூன் றாவது முறையாகச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளதே?
பதில்: ரொம்ப மகிழ்ச்சி. இதுபோல எப் படியாவது கஷ்டப்பட்டு பெண்கள் போட்டியில் பல்லாங்குழி ஆட்டத் தைச் சேர்த்து விட்டோ மேயானால், அதிலும்கூட இந்தியாதான் முதலிடத் தில் வரும்; சேம்பியன் பட்டத்தைப் பெறும். நாம் மீண்டும் சந்தோஷப்பட் டுக் கொள்ளலாம். (துக்ளக் 9.1.2013 பக்கம் 29)
பாவம், ஒரு பக்கம் முகமது நல்லவர் நல்லவர் என்று நிருபிக்க வேண்டியிருக்கிறது, இன்னொரு பக்கம் முஸ்லிம்கள் நல்லவர்கள் என்று நிருபிக்க வேண்டியது இருக்கிறது , என்னதான் செய்வார்கள் மும்மீன்கள்.
காய்கறி கடையில் சொத்தை காய்கறிகளை நல்லதாக காட்ட கழுவி தண்ணீர் தெளித்து, பளபளப்பாக வைத்திருப்பார்கள் அது போல இருக்கிறது. இந்த நல்லவங்க பேட்டி. என்னதான் பூசி மெழுகி வைத்தாலும் சொத்தை காய்கறி தெரியாமலா போகும்
//காய்கறி கடையில் சொத்தை காய்கறிகளை நல்லதாக காட்ட கழுவி தண்ணீர் தெளித்து, பளபளப்பாக வைத்திருப்பார்கள் அது போல இருக்கிறது. இந்த நல்லவங்க பேட்டி. என்னதான் பூசி மெழுகி வைத்தாலும் சொத்தை காய்கறி தெரியாமலா போகும்//
சொத்தை காய்கறிகள் எது என்பதை சாது பிரக்யாசிங், ஜெனரல் புரோகித், அசீமானந்தா பொன்றவர்களின் கைது நிரூபிக்கப்பட்டுள்ளதே. அதனை நிரூபித்த ஹேமந்த் கர்கரேயையும் வஞ்சகத்தால் கொன்று விட்டீர்கள்.
பார்ப்போம். இன்னும் எத்தனை நாள் உங்கள் அராஜகங்களை நடத்தி வருவீர்கள் என்று. எதற்குமே ஒரு முடிவு உண்டு.
Post a Comment