Followers

Tuesday, January 22, 2013

குற்றவியல் தண்டனைகள் சில விளக்கங்கள்!

குற்றவியல் தண்டனைகள் சில விளக்கங்கள்!

தற்போது ரிசானாவின் தண்டனையை காரணமாக வைத்து இணையத்திலும் பத்திரிக்கை உலகிலும் பலரும் இஸ்லாமிய சட்டங்கள் பிற்போக்கு தனமானவை என்ற வாத்த்தை வலிந்து வைத்துக் கொண்டிருக்கின்றனர். ரிசானாவின் மேல் இவர்களுக்குத்தான் பாசமும் அன்பும் உள்ளது போலவும் முஸ்லிம்கள் மரக்கட்டைகளைப் போன்று உணர்ச்சியற்று போய் விட்டார்கள் என்றும் எழுதாத பதிவர்கள் இல்லை. இதே மூதூரைச் சார்ந்த 150 க்கும் மேற்பட்ட சிறுவர்களை, பெண்களை, வயதானவர்களை சகட்டு மேனிக்கு சுட்டும் வெட்டியும் அதுவும் இறைவனைத் தொழக் கூடிய பள்ளியிலேயே நிறைவேற்றினார்களே! அப்போது இந்த கோவிகண்ணன்களும் சார்வாகன்களும் இக்பால் செல்வன்களும் பொங்கி எழவில்லை. பிரபாகரனுக்கு எதிராகவோ பொட்டு அம்மனை கண்டித்தே ஒரு துரும்பைக் கூட இவர்கள் அசைக்கவில்லை. ஏனெனில் போனது முஸ்லிம்களின் உயிர்கள் அல்லவா? அப்பொழுது இதே நியாயத்தோடு கண்டித்து பதிவு எழுதியிருந்தால் ரிசானாவைப் பற்றியும் கேட்க உரிமையிருப்பதாக எண்ணலாம்.

இவர்களுக்கெல்லாம் ரிசானாவின் மீது உள்ள பாசத்தை விட இஸ்லாமிய சட்டங்களை எள்ளி நகையாட இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தப் பார்க்கிறார்கள். விமர்சனங்களை வைப்பதை நாம் குறை காணவில்லை. அது எப்படிப்பட்ட விமரிசனமாக இருக்க வேண்டும்? தவறு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எவரும் முரண்பட போவதில்லை. அது இஸ்லாமிய சட்டமாக இருந்தாலும், உலக சட்டங்களாக இருந்தாலும் தண்டனை முறைகளில் மாற்றங்கள் இருக்கலாமே யொழிய குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. இங்கு ரிசானா விஷயத்தில் தண்டனையை நிறைவேற்ற எடுத்துக் கொண்ட வழி முறைகள், மருத்துவ அறிக்கைகள், வழக்காடு மன்றத்தின் செயல்பாடுகள் இவற்றில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை நாம் வாதத்தில் வைக்கலாம். அது நியாயமானதே. ஆனால் கொலைக்கு கொலை, கண்ணணுக்கு கண் என்ற இந்த சட்டமே காட்டு மிராண்டி தனமானது என்ற வாதத்தை வைப்பவர்களுக்கு சில விளக்கங்களை சொல்கிறேன்.

சவுதி அரேபியாவைப் பொருத்த வரை தொழில்கள் அனைத்தும் வெளி நாட்டவர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. கடை வேண்டுமானால் சவுதிகளின் பெயர்களில் இருக்கலாம். மாதம் 300 ரியாலோ 500 ரியாலோ சவுதிகளுக்கு கொடுத்து விட்டு முழு தொழில்களையும் கவனிப்பது இந்திய, பாகிஸ்தானிய, பங்களாதேசத்துக் காரர்கள் தான். குறிப்பிட்ட ஒரு சில நிறுவனங்கள்தான் சவுதிகளின் நேரடி பார்வையில் இருக்கும்.

தற்போது நான் அலுவலக வேலையில் இருக்கிறேன். 10 வருடங்களுக்கு முன்பாக ஒரு ஃபர்னிசர் ஷோ ரூமில் சேல்ஸ் மேனாக இருந்தேன். தினமும் நடக்கும் அனைத்து வியாபார பணமும் என்னிடமே இருக்கும். ஒரு நாளுக்கு 20000 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரம் சில நேரம் 50000 ஆயிரம் ரியால்(7 லட்சம் ரூபாய்) கூட எனது பேண்ட் பாக்கெட்டில் இருக்கும். தொழுகை நேரங்களில் கடை பூட்டப்படும் ஆகையால் பணத்தை கடையில் வைக்க வேண்டாம் என்று எனது ஓனர் சொல்லியிருப்பதால் பணம் என்னிடமே இருக்கும். பல வருடங்கள் வேலை செய்தும் ஒரு முறை கூட எனக்கு திருடர்களிடமிருந்து எந்த பிரச்னையும் வந்ததில்லை. மறுநாள் இந்த பணத்தை பேங்கில் செலுத்தி விடுவேன். இந்த அளவு பாதுகாப்போடு நான் வேலை செய்ததற்கான காரணமே சவுதி நாட்டின் சட்டங்கள் தான்.

எனக்கு மட்டும் அல்ல இந்த பிரச்னை. சவுதியில் முழுவதும் கடைகளில் நிற்பவர்கள் அதிகம் நம்மவர்களே! கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்ற சட்டம் இருப்பதால் தான் வெளிநாட்டவர்களால் இந்த அளவு நிம்மதியாக தொழில் செய்ய முடிகிறது. இந்த சட்டத்தை நீக்கினால் அதனால் பாதிக்கப்படுவதும் இந்திய பாகிஸ்தானிய மக்களே. ஏனெனில் ஆப்ரிக்கர்களின் கை வரிசை நிறைந்த நாடு இது. கொஞ்சம் சட்டத்தை தளர்த்தினால் கடைகளில் புகுந்து துப்பாக்கியை காட்டி கொள்ளையடிக்கும் சம்பவம் வெகு இலகுவாக நடக்கும். இந்த அளவு சட்டம் இருக்கும் போதே அங்கொன்றும் இங்கொன்றுமாக தவறுகள் நடந்து வருகிறது. எனவே நமது நாட்டைப் போலவே எல்லா நாட்டு சூழ்நிலைகளும் இருந்து விடும் என்று எண்ணக் கூடாது.

மைனர் பெண்ணுக்கு தண்டனை அளிக்கலாமா? என்றும் கூறுகின்றனர். இஸ்லாம் 18 வயதை நிர்ணயிக்கவில்லை. ஒரு ஆணும் பெண்ணும் குழந்தை பெறும் பக்குவத்தை அடைந்து விட்டாலே அவர் மேஜராகி விடுகிறார். மும்பை பெண் கற்பழிப்பில் ஈடுபட்ட ஒருவன் 18 வயதுக்கு குறைவானவனே! அவனையும் தூக்கில் இட வேண்டும் என்று பலர் இன்றும் கூறி வருவதைப் பார்ககிறோம். ஆனால் ரிசானா விஷயத்தில் மாறுபட்ட கொள்கையை வைப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

ரிசானாவை மன்னரே மன்னித்து அவரது அதிகாரத்தை பிரயோகித்து வெளியாக்கியிருக்கலாமே என்று பலர் கூறுகின்றனர். இதற்கு உதாரணமாக மன்னர் குடும்பத்திலேயே நடந்த ஒரு நிகழ்வை பார்ப்போம்.

2002 காலப்பகுதியில் சவுதி அரேபியா ரியாத் பிரதேசத்தில் இளவரசர் நாயிப் பின் சவூத் (15 வயது ) தனது சமவயதுடைய ஒரு நண்பரைக் கொலை செய்தபோது இளவரசருக்கு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது. சுமார் ஒன்றரை வருடங்கள் அரச குடும்பம் கொலை செய்யப்பட்டவரின் பெற்றோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இறுதிவரை அவர்கள் மன்னிக்க முன்வராதபோது இளவரசர் நாயிபுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்காக உரிய இடத்திற்கு அழைத்துச்சென்று, தண்டனை நிறைவேற்றுவதற்காக தயாரான வேளை கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் அமீர் நாயிப் அல்குர்ஆனை முழுக்க மனனம் செய்வதாக வாக்களித்தால் தாம் அவரை மன்னிப்பதாகக் கூறினர். அதன்படி கடைசி நிமிடத்தில் அவரது தண்டனை நிறுத்தப்பட்டது.

ஒரு சவுதி குடும்பம் விபச்சாரம் செய்தபோது மரண தண்டனை அளித்த சவூதியில் அந்நிய நாட்டவர்கள் என்பதற்காக குற்றங்களில் சலுகை காட்டப்படுவது இல்லை. மற்ற விஷயங்களில் சொந்த நாட்டவர்களுக்கு சலுகை அளித்தாலும், கொலைக் குற்றத்தில் எல்லாம் சலுகை காட்டமாட்டார்கள். இது போன்று பல நிகழ்வுகள் சவுதியில் இடம்பெற்றுள்ளன.

இவை சவுதியின் நீதித்துறையின் சுதந்திரமான நிலையையே எடுத்துக்காட்டுகின்றன.

மன்னரின் குடும்பத்தினருக்கே இந்த நிலை என்றால் நம்மைப் போன்ற வெளி நாட்டு பிரஜைகளின் நிலையைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. சட்டத்தை திருத்தினால் என்ன என்ற ஒரு வாதமும் வைக்கப்படுகிறது. இந்த குர்ஆனின் சட்டமானது இறைவனால் அருளப்பட்டதாக இஸ்லாமியர்கள் நம்புகின்றனர். இதை திருத்துவதற்கு மனிதர்கள் எவருக்கும் உரிமை கிடையாது. உலக முடிவு நாள் வரை இந்த சட்டங்கள் யார் எதிர்த்தாலும் மாற்றப்படாமலேயே இருந்து வரும். ஒரு உயிர் போனாலும் அதனால் பல உயிர்கள் பாதுகாக்கப்டுகிறது என்பதாலேயே இந்த சட்டத்தை மனித குலத்துக்கு அளித்ததாக இறைவன் குர்ஆனிலே கூறுகிறான். எனவே சட்டத்தை அமுல்படுததுவதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதனை சரிகாணுவோம். இறைவனின் சட்டத்தில் எந்த மாற்றமும் செய்ய இடம் தர மாட்டோம் என்று உறுதி கொள்வோம்.

மக்ஸூமி குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடியபோது தண்டனையிலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக நபித் தோழர் உசாமா அவர்கள் நபி அவர்களிடம் பரிந்து பேசினார்கள். அப்போது நபி அவர்கள், "உங்களுக்கு முன்னால் வாழ்ந்த மக்கள் தாழ்ந்தவர்களின் மீது தண்டனையை நிறைவேற்றுவார்கள். உயர்ந்தவர்களை விட்டு விடுவார்கள். எனவே தான் அவர்கள் அழிந்துபோயினர். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! என் புதல்வி ஃபாத்திமாவே இந்தக் குற்றத்தைச் செய்திருந்தாலும் அவரின் கையையும் நான் துண்டித்திருப்பேன்'' என்றார்கள்.

அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 6787

19 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்,
பொறுமையான அழகிய விளக்கம்.

நாம் என்னதான் இப்படி சொன்னாலும்.............


/////////////////////////////
#எனது ரத்த பந்தத்தை எவனாவது கொன்று விட்டால்........

எனது சார்பாக வழக்கை நோக்கி, மன்னிப்புக்கு அருகதை அற்ற- மனித நேயமற்ற- கொலைவெறி பிடித்த அக்கொடிய மிருகத்துக்கு மரண தண்டனை தரப்படல் வேண்டும்..!

#யாரோ யாரையோ கொலை செய்து விட்டால்......

செத்தவன் திரும்ப வரவா போறான்..?பாவம் அந்த கொலை செய்தவன். அவன் சார்பாக வழக்கை நோக்கி அந்த குற்றவாளிக்கு- குடும்பஸ்தனுக்கு அதிகபட்சமாக மன்னிப்பு அளிக்க வேண்டாமா நாம்..? கொலைக்கு மரண தண்டனை தீர்வாகுமா..?
மனித நேயம் வேண்டாமா நமக்கு..?
காட்டுமிராண்டிகளா நாம்..?

#ஆக மொத்தம் குற்றங்கள் குறைய வேண்டும். ஆனால், ஒருக்காலும் கடும் தண்டனைகள் தரப்படக்கூடாது..!


இப்படிக்கு.........................
தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தும்...
பின் நவீனத்துவ முற்போக்கு சிந்தை கொண்ட...
எழுத்தில் எப்போதும் மனித உரிமை பேணும்...
இலக்கியவாத அறிவுப்புரட்சி ஜீவிகள் சங்கம்..!
///////////////////////////////


...........இப்படி தமக்கும் பிறருக்கும் இரட்டை அளவுகோல் சொல்லிக்கொண்டு இருக்கும் சிந்தனை வீரியமற்ற மனிதர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

இதையும் நாம் கடந்து செல்வோம்.

Unknown said...

சலாம் சகோ.சுவனப்பிரியன் !

இந்த பதிவை முன்பே உங்களிடம் எதிர்பார்த்தேன்..! இதை போல் உண்மையை விளங்க வைக்க நாம் நம் கடமையை சரியாக செய்வோம்..இறைவன் நாடுபவர் அறிவுபெருவர்..மாறானவர் தனது பாட்டத்தில் தானே பாம் வைத்து கொள்வர்..இந்த மனித குல மாணிக்கங்களின்(!) பெயர்களில் பதிவு போட்டு அவர்களை விளம்பரம் செய்ய வேண்டாமே..!

ஒவ்வொரு நேரமும் இஸ்லாமியர்கள் எதிர்ப்புகளை சந்தித்து தானே வந்துள்ளனர்...நமக்கு மட்டும் அது இல்லைனா நல்லா இருக்காது அல்லவா..? இவங்களும் இல்லைனா நமக்கு விளக்கம் தேடும் ஆர்வம் குறைந்து விடும் தானே..இதை போல ஆட்கள் இருந்து கொண்டேதான் இருப்பார்கள் நமக்கு விளக்கங்களும் கிடைத்து கொண்டே இருக்கும்...ஈமானும் அதிகமாகும்..அதனால் அந்த மும்மூர்த்திகளுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றியை என்றும் பரிசளிப்போம்.!!!

(சகாபாக்கள் உடலால் ஜிஹாத் செய்தார்கள்..உங்களை போன்றோர் அறிவின் மூலம் ஜிஹாத் செய்கிறீர்கள்.. இன்னும் மென்மேலும் உண்மைக்கு வலு சேர்க்கும் பதிவை தந்து சும்மா ..அடிச்சி ஆடி சுவர்க்கத்தை அடைவோம்..!இன்ஷா அல்லாஹ் !)

நன்றி !!!

UNMAIKAL said...

PART 1. இலங்கை ரிசானாவிற்கு மரணதண்டனை :
அறிவு ஜீவிகளின் இரட்டை முகங்கள்


குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக இலங்கையைச் சேர்ந்த ரிஸானா என்பவருக்கு சவூதி நீதி மன்றம் மரண தண்டனை அளித்துள்ளது.

இது இந்தியாவில் உள்ள சில எழுத்தாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

ஆனால் இவர்களின் விமர்சனத்திலிருந்து இவர்களுக்கு நிலையான கொள்கையும், தெளிவான பார்வையும் , பொது அறிவும் இல்லை என்பது தெரிகிறது.

தனக்குத்தானே முரண்படுவதுதான் பொய் என்பதன் அளவுகோல்.
இது நமது நாட்டுஅறிவு ஜீவிகளிடம் அதிகம் காணப்படுகிறது.

டெல்லி மாணவி கற்பழித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று இவர்கள் புலம்பினார்கள்.

சட்டமும் நீதி மன்றமும் முடிவெடுக்கவேண்டிய விஷயத்தில் மக்களைத் தூண்டிவிட்டு அரசாங்கம் தூக்குத் தண்டைனை விதிக்க வேண்டும் என்று பேச வைத்தார்கள்.

போகக்கூடாத நேரத்தில் ஆண் நண்பருடன் நள்ளிரவில் உல்லாசமாக சுற்றிய பெண்ணாக இருந்தாலும் அவருக்கு ஏற்பட்ட அநீதிக்காக இவர்கள் குரல் கொடுத்தார்கள்.

பருவ வயது அடைந்த ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதற்காக மரண தண்டனை அளிக்க வேண்டும் என்பது இவர்களது கொள்கையாக இருந்தால், இவர்களுக்கு சிந்திக்கும் திறனும் மூளையும் மனசாட்சியும் இருந்தால் இலங்கைப் பெண் விஷயமாக எந்த நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும்?

ஒரு குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக ரிஸானாவுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மாணவி கொல்லப்பட்டதற்கு மரணதண்டனை நியாயம் என்றால், அதைவிட ஆயிரம் மடங்கு நியாயம் நியாயம் குழந்தை கொல்லப்பட்ட வழக்கில் உள்ளது.

குழந்தையின் உயிர், உயிர் இல்லையா?

சிறுமிக்கு தண்டனையா என்றும் இவர்கள் இப்போது கேள்வி எழுப்புகின்றனர்.

ஆனால் டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் மைனர் பையனுக்கும், தூக்குத் தண்டனை கொடுக்கவேண்டும் என்றும், மைனர் வயதை 14ஆகக் குறைக்க வேண்டும் என்றும் இவர்கள்தான் கூப்பாடு போட்டார்கள்.

அதிகமான மாநில அரசுகளும் இதைக் கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளன.

இவர்கள் இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் மைனர் என்பதன் அளவுகோலைக் கண்டுபிடித்துள்ளார்கள்.

ஆனால் பருவ வயதை அடைவதுதான் மேஜர் வயது என்று இஸ்லாம் அன்றே கூறிவிட்டது.

சவூதியில் அதுதான் சட்டமாக உள்ளதால் 17வயதுப் பெண் அந்தச் சட்டப்படி மேஜர் என்பதால் மைனர் என்ற அடிப்படையில் கருணை கோர முடியாது.

டெல்லி மாணவி பிரச்சினையில் மைனரை மேஜர் ஆக்கப்பார்க்கிறார்கள்.

சவூதி விஷயத்தில் மேஜரை மைனர் ஆக்க முயல்கிறார்கள்.

இவர்களது சிந்திக்கும் திறனில் கோளாறு இருக்கிறது என்பதற்கு இதுவும் சான்றாக உள்ளது.

இந்தியக் குழந்தையாக அது இல்லாததால், அதன் விபரீதம் இவர்களுக்கு விளங்கவில்லையா?

மிருக புத்திரன்களாக இருக்கும் எழுத்தாளர்கள், ஜோசப் பாபா பையன்கள் மற்றும் விகடக்கச்சேரி நடத்தும் கோமாளிகள் தங்களின் குழந்தைகள் கொல்லப்பட்டிருந்தால், இதே நியாயத்தை இவர்கள் பேசுவார்களா?

பறி கொடுத்தவர்களின் நிலையில் இருந்தும், பாதிக்கப்பட்டவர்களின் நிலையில் இருந்தும் இதைப்பார்ப்பதுதான் சரியான பார்வையாகும்.

அனைவருக்கும் சமநீதி என்பதுதான் நீதி செலுத்துதலில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயமாகும்.
டெல்லி மாணவிக்கு ஒரு நீதியும், சவூதி குழந்தைக்கு வேறு நீதியும் கேட்பது அனைவருக்கும் சமநீதி என்ற அடிப்படைக்கு எதிரானதாகும்.

அடுத்ததாக இதை தர்க்க ரீதியாக நியாயப்படுத்த அந்தப் பெண்ணானவர் குழந்தையைக் கொல்லவில்லை என்று வேறு கதை அளந்து கொண்டுள்ளனர்.

ஒருவர் குற்றவாளியா இல்லையா என்பததை பேனா பிடித்தவர்கள் முடிவு செய்ய இயலாது.
எந்த நாட்டில் குற்றம் நடக்கிறதோ அந்த நாட்டின் நட்டமும் நீதிமன்றமும்தான் அதை முடிவு செய்ய இயலும்.

CONTINUED ...

suvanappiriyan said...

சலாம் சகோ முஹம்மது ஆஷிக்!

//..........இப்படி தமக்கும் பிறருக்கும் இரட்டை அளவுகோல் சொல்லிக்கொண்டு இருக்கும் சிந்தனை வீரியமற்ற மனிதர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

இதையும் நாம் கடந்து செல்வோம்.//

ஒரே மாதிரியான சம்பவங்களில் இரு வேறு நிலைகளை எடுத்துக் கொண்டு தங்களை அறிவு ஜீவிகள் என்று வேறு அழைத்துக் கொள்கிறார்கள். இதை பல தளங்களில் நாம் காணக் கூடியதாக இருக்கிறது. நீங்கள் சொல்வது போல் இதையும் கடந்து செல்வோம்.

UNMAIKAL said...

PART 2. இலங்கை ரிசானாவிற்கு மரணதண்டனை :

அறிவு ஜீவிகளின் இரட்டை முகங்கள்


குழந்தை கொல்லப்பட்டபோது சாட்சிகளாகவோ அல்லது உடலைப் பரிசோதித்த மருத்துவர்களாகவோ இவர்கள் இருக்கவில்லை.

விசாரணை அதிகாரிகளாகவும் இருக்கவில்லை.

மேலும் வழக்கை விசாரித்த நீதிபதிகளாகவோ அல்லது நீதி மன்ற சாட்சிகளாகவோ இருக்கவில்லை.

இது குறித்து முடிவு செய்யவேண்டிய ஆவணமும், ஆதாரமும், அறிவும் இவர்களிடம் இல்லாதபோது அந்தப் பெண் அப்பாவி என்று தீர்ப்பு எழுதுவதுதான் அறிவுடையவர்களின் செயலா?

லஞ்சம் ஊழலுக்கு இடமில்லாமல், நியாயமாக விசாரிக்கும் ஒரு நாட்டில் அந்த நாட்டுச் சட்டப்படி குற்றம் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தால், அதுதான் குற்றவாளி என்பதற்கான ஆதாரம்.

அஜ்மல் கசாப் அப்பாவி, அவனைத் தூக்கில் போட்டது அநியாயம் என்று சவூதி அறிவு ஜீவிகள் எழுதினால், இவர்கள் அந்த அதிகாரத்தை சவூதி அறிவு ஜீவிகளுக்கு வழங்குவார்களா?

கோவை குண்டு வெடிப்பு அரசாங்கமே நடத்தியது, அதில் கைது செய்யப்பட்ட அனைவரும் அப்பாவிகள் என்று இவர்களைப்போல் கற்பனை செய்து எழுதினால், அதை மிருகபுத்திரன்களும் விகடக் கோமாளிப் பையன்களும் ஏற்றுக் கொள்வார்களா?

இவர்களுக்கு கொஞ்சமும் மூளை இல்லை, மனசாட்சியும் இல்லை,

உலக அறிவும் இல்லை, சட்ட அறிவும் இல்லை என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

பெண் என்பதால் மரண தண்டனை கூடாது என்று இவர்கள் நினைத்தால் இப்போதும் இவர்கள் அறிவற்றவர்கள் என்றுதான் நிரூபித்துள்ளார்கள்.

ஆணும் பெண்ணும் சமம் என்று எழுதிவிட்டு குற்றம் செய்வதில் மட்டும் சமம் இல்லை என்று இவர்களது மூளை தீர்ப்பளிக்கிறது என்றால் இது மனநோயில்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்?

சவூதியில் வசிக்கும் ஒரு இந்தியக் குழந்தையை, இந்தியப் பெண் கொலை செய்தாலும், சவூதியில் இப்படித்தான் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கும்.

அப்போது இவர்கள் குழந்தையின் பக்கம் பேசியிருப்பார்களா அல்லது கொலை செய்தவர் பக்கம் பேசி இருப்பார்களா?

நாட்டு மக்கள் அனைவரும் குழந்தையின் பக்கம்தான். நின்றிருப்பார்கள்.

அதை எதிர்த்து இவர்கள் வாய் திறந்தால் அடித்து உதைக்கப்படடு இருப்பார்கள்.

கோவையில் சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் இவர்கள் பேசிய நியாயம் இப்போது காணாமல் போனது ஏன்?

மரண தண்டனை பெற்ற பெண் இந்து மதத்தவராக இருந்திருந்தால், இந்து என்பதற்காக மரண தண்டனை கொடுத்துவிட்டார்கள் என்று கதையை மாற்றி எழுதியிருப்பார்கள்.

நல்ல வேலை கொலை செய்த பெண்ணும் முஸ்லிமாக இருந்ததால் இந்தக் கதையை இவர்கள் எழுத முடியவில்லை.

கொலை செய்த பெண் இந்தியாவைச் சேர்ந்தவராக இருந்திருந்தால், இந்தியர்கள் என்ன கிள்ளுக்கீரையா என்று இந்த கூறு கெட்ட அறிவு ஜீவிகள் புலம்பித் தள்ளியிருப்பார்கள்.

நல்ல வேளை அப்பெண் இலங்கை வாசியாக அமைந்துவிட்டார்.

மன்னரின் குடும்பப் பெண் விபச்சாரம் செய்தபோது மரண தண்டனை அளித்த சவூதியில் அந்நிய நாட்டவர்கள் என்பதற்காக குற்றங்களில் சலுகை காட்டப்படுவது இல்லை.

மற்ற விஷயங்களில் சொந்த நாட்டவர்களுக்கு சலுகை அளித்தாலும், கொலைக் குற்றத்தில் எல்லாம் சலுகை காட்டமாட்டார்கள்.

இந்தியக் குழந்தையை சவுதிக்காரன் கொன்று, அந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இதே தீர்ப்புத்தான் வழங்கப்பட்டிருக்கும்.

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் விமர்சிப்பதுதான் இவர்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது.

மக்களை தூண்டிவிடக்கூடிய பிரச்சினை வராதவரை நடுநிலை வேஷம் போடுவார்கள்.

எதில் மக்களைத் தூண்டி விட முடியுமோ அதுபோன்ற பிரச்சினைகள் கிடைத்தால், இஸ்லாத்தை விமர்சிப்பதற்கு பயன்படுத்திக் கொள்வார்கள்.

அறிவு ஜீவிகளின் இந்த இரட்டை முகம் மீண்டும் ஒரு முறை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


வெளியீடு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

http://onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/ilangai-rezaana-marana-thandanai/

suvanappiriyan said...

சலாம் சகோ நாகூர் மீரான்!

//(சகாபாக்கள் உடலால் ஜிஹாத் செய்தார்கள்..உங்களை போன்றோர் அறிவின் மூலம் ஜிஹாத் செய்கிறீர்கள்.. இன்னும் மென்மேலும் உண்மைக்கு வலு சேர்க்கும் பதிவை தந்து சும்மா ..அடிச்சி ஆடி சுவர்க்கத்தை அடைவோம்..!இன்ஷா அல்லாஹ் !)//

நல் அமல்களை செய்து நாட்டுக்கும் வீட்டுக்கும், உலகுக்கும் சிறந்த முன் மாதிரிகளாகத் திகழும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் இறைவன் அருள்வானாக!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

அஞ்சா சிங்கம் said...

அது சரி படி அளக்கிற எசமானை யாராவது திட்டினால் கோவம் வரத்தான் செய்யும் .
///தொழுகை நேரங்களில் கடை பூட்டப்படும் ஆகையால் பணத்தை கடையில் வைக்க வேண்டாம் என்று எனது ஓனர் சொல்லியிருப்பதால் பணம் என்னிடமே இருக்கும்.//
ஏன் கடையில் வைத்தால் திருட்டு போய்விடுமா ..
பூட்டின கடையை விட உங்க டவுசர் ரொம்ப பாதுகாப்புன்னு முதலாளி நம்புறார் .
பாவம் உங்க முதலாளி ஆச்சே அப்படிதான் யோசிப்பார் .

Anonymous said...


Hindu extremists planned to target Justice Sachar

Rahul Tripathi Posted online: Sun Jan 20 2013, 02:06 hrs

New Delhi : Alleged Samjhauta Express train bomber Rajendra Choudhary has claimed that Hindu right-wing extremists planned to target former Delhi high court chief justice Rajinder Sachar in October 2006.

The committee headed by Justice Sachar was to submit its report on the socio-economic conditions of Muslims before Prime Minister Manmohan Singh in November 2006 and the terror group, headed by slain RSS pracharak Sunil Joshi, was angry over the setting up of the panel.

The NIA is learnt to have informed the Delhi Police to step up Justice Sachar’s security following Choudhary’s “revelations”. Justice Sachar, however, told The Sunday Express that he was yet to be provided any security. He also said that during the compilation of his report, he had travelled to various states and these had offered him security. “But I refused.”

According to sources in the National Investigation Agency (NIA), Choudhary revealed during interrogation that they had had carried out a recce in New Delhi for an attack on Justice Sachar in early 2006. However, the plan was reportedly dropped due to heightened security in New Delhi and as other members of the group such as Ramji Kalsangra and Sandeep Dange, wanted in connection with the Samjhauta and Malegaon blasts, pointed out that the Sachar panel had six more members.

“They did not have enough manpower to coordinate attacks on all seven members,” a senior official said. Having executed the Malegaon blasts in September 2006 that year, they were also on the run.

“Joshi is learnt to have directed Choudhary and (alleged Mecca Masjid bomber) Lokesh Sharma to keep a low profile. Choudhary also revealed that after the accidental explosion in Nanded in 2006 at the house of an RSS activist, the group had come under the scanner of central agencies,” the official added.

The same group of extremists are alleged to have been also behind the attack on Delhi University professor S A R Geelani in Delhi’s Vasant Vihar in February 2005. Geelani was an accused in the 2001 Parliament attack but had been acquitted. A team of Delhi Police has questioned Choudhary in connection with the attack on Geelani.

Meanwhile, an NIA team has brought Balveer, an accused in the Sunil Joshi murder, to New Delhi from Indore. Balveer will be confronted with Choudhary, Dhan Singh and Manohar Singh, said officials.

The Sachar committee had been commissioned in March 2005 to prepare a report on the prevailing social, economic and educational conditions of Muslims in India. In its report submitted on November 17, 2006, and tabled in Parliament 13 days later, the panel had highlighted that the community fared poorly on most parameters.

--
Regards,
Abdul Jabbar

UNMAIKAL said...

PART 1. சிறுவனுக்கு தண்டனை வழங்கலாமா?

இஸ்லாம் கூறும் தீர்வு தான் இறுதியான தீர்வு


இதுதான் தற்போது நமது நாட்டில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியுள்ள பரபரப்பான செய்தி. ஆம்!

டெல்லியில் ஓடும் பேருந்தில் வைத்து மருத்துவக் கல்லூரி மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஈடுபட்ட 6 காமக்கொடூரர்கள் குறித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டிய காவல்துறை 5 பேர் மீது மட்டும்தான் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

6வது நபராக உள்ள குற்றவாளிக்கு 17வயதுதான் ஆகியுள்ளது என்பதால் அவன் சிறுவன் என்ற அந்தஸ்தில் இருப்பதாகவும்,

சிறுவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சட்டத்தில் இடமில்லை என்றும், அவனை சிறைக்கு அனுப்புவதற்கும் சட்டத்தில் இடமில்லை என்றும்,

வாயில் விரல் வைத்தால் கூட கடிக்கத் தெரியாத அந்த பச்சிளம் குழந்தையை(?) சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு படிக்க அனுப்ப வேண்டும் என்றும் சட்டம் இருப்பதால்,

அவனை பாலர் பள்ளிக்குத்தான் அனுப்ப வேண்டும் என்றும் சட்டம் பேசி வருகின்றனர்.

அந்த பச்சிளம் குழந்தைக்கு(?) தண்டனை வழங்கலாமா? கூடாதா? என்ற கேள்விதான் தற்போது நமது நாட்டில் முக்கியமான விவாதமாக நடந்து வருகின்றது.

கற்பழித்து காமக் கொடூரச்செயல் செய்த சிறுவன்(?) 5மாதத்தில் விடுதலையாம்:

டெல்லியில் ஓடும் பஸ்சில் பிசியோதெரப்பி மாணவியை மிகக் கொடூரமாக தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரில் 17வயது நிரம்பிய சிறுவன்(?) என்று சொல்லப்படக்கூடியவன்தான் மாணவியை மிகவும் மோசமாக தாக்கியவன் மற்றும் இரண்டு முறை பலாத்காரம் செய்தவன் என்றும் போலீஸார் கூறுகிறார்கள்.

இவனால்தான் அப்பெண் படுகாயமடைந்தார், பின்னர் உயிரிழந்தார்.

ஆனால் இவனுக்கு 17 வயதுதான் ஆகிறது என்பதால் இவனை மற்ற கோர்ட்டுகளில் விசாரிப்பது போல விசாரிக்க முடியாது.

மாறாக, சிறார் நீதிமன்றத்தில்தான் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த முடியும்.

மேலும் இவனை சிறையிலும் அடைக்க முடியாது.

சிறார் சீர்திருத்தப் பள்ளியில்தான் சேர்க்க முடியும்.

மேலும், இந்த சிறுவன் பெரும் தண்டனையிலிருந்து எளிதாக தப்பி விடும் அளவுக்கு சட்டம் இவனுக்குச் சாதகமாக உள்ளது

குற்றம் இழைத்தபோது இந்த சிறுவனுக்கு வயது 17 என்பதால் இவனுக்கு கடும் தண்டனை கிடைக்காது.

இந்த குற்றச்சாட்டு உண்மையாகுமேயானால் அதிகபட்சம் 3 வருடம்தான் அவனுக்கு தண்டனை கிடைக்கும்.

3 வருட தண்டனையைக் கூட இவன் சிறையில் கழிக்க முடியாது.

மாறாக சிறார் சீர்திருத்தப் பள்ளியில்தான் சேர்ப்பார்கள். அங்கு தண்டனை கிடையாது, மாறாக போதனைதான் தருவார்கள். -

இவனுக்கு 18 வயதாக இன்னும் சில மாதங்களே உள்ளன.

இவனுக்கு இன்னும் 5 மாதத்தில் 18 வயது பூர்த்தியாகிவிடும்.

18 வயதை எட்டி விட்டால் யாரையும் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் வைக்க முடியாது.

விடுவித்து விட வேண்டும். –

அப்படி விடுவிக்கப்பட்ட பின்னர் இவனை சிறைக்கு மாற்றலாமா என்றால் அதுவும் முடியாது.

காரணம், சிறார் குற்ற சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவரை வழக்கமான சிறைக்கு மாற்ற முடியாது, மாற்றக் கூடாது.

அது சட்டவிரோதமாகும்.

பாலியல் பலாத்காரத்திலும், கடும் தாக்குதலிலும் ஈடுபட்டு மாணவியின் உயிர் போகக் காரணமான இந்த சிறுவன்(?) தற்போது பெரிய அளவிலான தண்டனை எதிலும் சிக்காமல் தப்பி விடும் வாய்ப்புகளே அதிகம் இருப்பதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்

முட்டிய பின்பு குனியும் அவலம்

பாலியல் வன்கொடுமை புரிந்ததில் முதல் ஆளாக தண்டிக்கப்பட வேண்டிய ஒரு கொடூரனுக்கு 5 மாதங்களில் விடுதலையளிக்கக்கூடிய அளவிற்கு சட்டத்தில் ஓட்டை இருப்பதை நினைத்து தற்போது அனைத்து தரப்பு மக்களும், அதிகாரிகளும் கைகளைப் பிசைந்து கொண்டு நிற்கின்றனர்.

மேற்கண்ட அவல நிலைக்கு காரணம் 18வயது யாருக்கு பூர்த்தியாகின்றதோ அவர்கள்தான் பெரியவர்கள் என்றும், 18 வயது பூர்த்தியாகதவர்கள் அனைவரும் குழந்தைகள் என்றும் நமது நாட்டில் அற்புதமான(?) சட்டத்தை இயற்றி வைத்துள்ளனர்.

CONTINUED …..

UNMAIKAL said...

PART 2. சிறுவனுக்கு தண்டனை வழங்கலாமா?

இஸ்லாம் கூறும் தீர்வு தான் இறுதியான தீர்வு


ஒரு பெண்ணை கொடூரமானமுறையில் கற்பழித்து நாசக்கேடாக்கி, கொலை செய்த ஒருவன் சிறுவனா அல்லது பெரியவனா என்று இவர்கள் ஆய்வு செய்து கொண்டுள்ளார்களாம்.

அவன் சிறுவன்தானா என்பதை உறுதி செய்ய அவனுக்கு எலும்பு சோதனை செய்யப் போகின்றார்களாம்.

சோதிக்கப்பட வேண்டியது எலும்பா? மூளையா?:

ஒரு பெண்ணை கற்பழித்து காமக்கொடூர செயலை செய்தவனை 18வயது பூர்த்தியாகாத ஒரே காரணத்திற்காக சிறுவன் என்று சொல்வார்களேயானால் சோதனை செய்யப்பட வேண்டியது அவனது எலும்புகள் அல்ல; இவர்களது மூளைதான்.

இவர்களுக்கு மூளை என்ற ஒன்று உள்ளதா என்று இவர்களை சோதித்துப் பார்க்க வேண்டியதுதான் காலத்தின் கட்டாயம் என்பதும் தற்போது நமக்கு தெரிய வருகின்றது.

இந்த அளவுக்கு காமவெறியாட்டம் ஆடிய ஒருவனை சிறுவன் என்று சொல்வது எப்படி? இது சரியா? என்று அனைவரது உள்ளமும் உறுத்தியிருப்பதால்தான் தற்போது இந்த சட்டம் தவறான சட்டம் என்பதை மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் உணரத்துவங்கியுள்ளன.

உள்துறை அமைச்சர் தலைமையில் கூட்டப்பட்ட கூட்டம்

18 வயது நிறைவடையாதவர்கள் குற்றம் செய்தால் மைனர் என்ற காரணம் கூறி தப்பிவிடுகின்றனர்.

இந்த பிரச்சனைக்கு எப்படி தீர்வு காண்பது என்பது குறித்தும், பெண்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை மற்றும் அதிகபட்ச தண்டனை ஆகியவை குறித்தும் ஆலோசனை செய்வதற்காக கடந்த ஜனவரி 4அன்று உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தலைமையில் அனைத்து மாநில டி.ஜி.பிக்கள் மற்றும் தலைமைச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது

18வயது பூர்த்தியானால்தான் மேஜர்; அதற்கு கீழுள்ளவர்கள் சிறுகுழந்தைகள் என்ற சட்டம் கிறுக்குத்தனமான சட்டம் என்பதை அனைத்து டி.ஜி.பி.க்களும், அனைத்து மாநில தலைமைச் செயலர்களும் ஒப்புக் கொண்டனர்.

எனவே இனிமேல் 16 வயதானாலே மேஜராக கருதி குற்ற வழக்கில் தண்டனை அளிக்க வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனை அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளும் ஒருமித்த கருத்தோடு ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இவ்வளவு பிரச்சனைகள் வந்த பிறகு நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து இப்போது மைனர் வயதை குறைப்பதுதான் இதற்கான தீர்வு என்று முடிவு எட்டப்பட்டுள்ளது.

ஆனால் இவர்கள் தற்போது எடுத்துள்ள இந்த முடிவு சரியானது தானா என்று நாம் ஆய்வு செய்வோமேயானால் அதிலும் இவர்கள் தவறிழைக்கத்தான் செய்கின்றார்கள்.

மைனர் வயதை 16ஆக குறைத்தாலும் 15 வயது பையன் இந்த சேட்டையை செய்யமாட்டான் என்பதற்கு என்ன உத்தரவாதம்?.

தமிழகத்தில் தன்னிடம் ட்யூசன் படிக்க வந்த15வயதே நிரம்பிய ஒரு மாணவனை குமுதா என்றஆசிரியை உல்லாசம் அனுபவிக்க டெல்லிக்குஅழைத்துச் சென்று போலீசாரிடத்தில் கையும்களவுமாக பிடிபட்ட சம்பவங்கள் இவர்களுக்குத்தெரியுமா? தெரியாதா?.

ஆசிரியையோடுவிபச்சாரம் செய்து உல்லாசம் அனுபவித்த அந்த மாணவனையும் சிறுகுழந்தை என்று சொல்லப் போகின்றார்களா?

அதுபோல ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம்கோமட்டி பள்ளியைச் சேர்ந்த ரம்யா என்ற ஆசிரியை அதே பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவன்நாகேஷ் என்ற 15 வயதே ஆன மாணவனைக் காதலித்து அவனைக் கூட்டிக் கொண்டு வீட்டை விட்டுவெளியேறி கல்யாணமும் செய்து கொண்டசம்பவத்தால் ஆந்திரா மாநிலமே பரபரப்பானதுஇவர்களுக்குத் தெரியாதா?

அல்லது இவர்கள்இந்தியா அல்லாத வேறு நாட்டில்வசிக்கின்றார்களா?

இதைவிட மோசமாக அமெரிக்காவில் அமன்டாசோடலோ என்ற 36 வயது நிரம்பிய ஆசிரியைடெக்ஸாஸில் உள்ள பெஸ்கார் கன்ட்ரி பகுதியில்உள்ள பள்ளியில் படித்த 14 வயது மாணவன்ஒருவனுடன் உறவு வைத்ததன் விளைவாக கர்ப்பமானகாரணத்தால் கைது செய்யப்பட்டு தற்போதுசிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்தை இவர்கள்பத்திரிக்கைகளில் படிக்கவில்லையா?

அல்லது இவர்கள் பூமி அல்லாத வேறு கிரகத்தில்வசிக்கின்றார்களா?

continued ....

suvanappiriyan said...

திரு அஞ்சா சிங்கம்!

//ஏன் கடையில் வைத்தால் திருட்டு போய்விடுமா ..
பூட்டின கடையை விட உங்க டவுசர் ரொம்ப பாதுகாப்புன்னு முதலாளி நம்புறார் .
பாவம் உங்க முதலாளி ஆச்சே அப்படிதான் யோசிப்பார் .//

தொழுகை நேரத்தில் எல்லோரும் தொழுகைக்கு சென்று விடுவர். கடைகள் அனைத்தும் சிறிய துணி கொண்டு மூடப்பட்டிருக்கும். முழுவதும் அடைப்பதில்லை. இதை பயன்படுத்திக் கொண்டு சில திருடர்கள் கடையின் உள்ளே புகுந்து பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பல இடங்களில் நடந்ததாலேயே இப்படி ஒரு ஏற்பாடு.

UNMAIKAL said...

PART 3. சிறுவனுக்கு தண்டனை வழங்கலாமா?

இஸ்லாம் கூறும் தீர்வு தான் இறுதியான தீர்வு


ஆண்களின் நிலை இதுவென்றால் பெண்களின்நிலையை சொல்லவே வேண்டாம்.

இராமநாதபுரத்தில் பள்ளிக்கூடத்தில் பிள்ளைபெற்ற 8ஆம் வகுப்பு மாணவி. ஆசிரியர்கள்அதிர்ச்சி

என்று நாள்தோறும் வெளியாகும் இதுபோன்ற செய்திகள் இவர்களது கண்களில்படவில்லையா?

ஆக, இந்தப் பிரச்சனைக்கு மைனர் வயதை 16ஆகக்குறைத்து எந்தப் புண்ணியமும் இல்லை.

மாறாக மைனர் யார்? மேஜர் யார்? என்பதற்கான சரியானஅளவுகோலை இவர்கள் கையில் எடுத்துசட்டமியற்றினால் தான் இந்தப் பிரச்சனைக்கு சரியான நிரந்தரத்தீர்வு கிடைக்கும்.

இந்தவிஷயத்திலும் வல்ல இறைவன் வழங்கிய இஸ்லாமியமார்க்கம் நமக்கு அழகான வழிகாட்டுதலைகூறுகிறது

இஸ்லாம் சொல்லக்கூடிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் பூப்பெய்து பருவ வயதை அடைந்த 15, 16 வயது பெண்களுக்கு முஸ்லிம்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் அடிப்படையில் திருமண ஏற்பாடுகளைச் செய்த போது, அநியாயக்கார அதிகாரிகள் சிறுகுழந்தைக்கு ஏன் திருமணம் முடித்து வைக்கின்றீர்கள் என்று முஸ்லிம்களின் விஷயத்தில் மூக்கை நுழைத்து அடாவடி செய்தனர்.

சிறுகுழந்தை எப்படி பூப்பெய்யும்?

சிறுகுழந்தைக்கு எப்படி குழந்தை பிறக்கும்? என்றசாதாரண அறிவுகூட இல்லாமல் இவர்கள் நடந்தனர்.

ஆனால் தற்போது 16 வயதில் கற்பழிப்பு செய்தவன் எப்படி சிறுகுழந்தையாக இருக்க முடியும் என்று இவர்களே கேள்வியெழுப்புகின்றனர்.

அத்தகைய நிலையை வல்ல ரஹ்மான் அவர்களுக்கு இப்போது ஏற்படுத்தியுள்ளான்.

இந்திய அரசியல் சாசன சட்டத்தையும் மதிக்காமல், முஸ்லிம்களது திருமணத்தில் மூக்கை நுழைத்து ஆட்டம்போட்ட இவர்களை மேஜராகும் வயது வரம்பை குறைக்க வேண்டும் என்று வல்ல இறைவன் அவர்களது வாயாலேயே சொல்ல வைத்துள்ளான்

பருவ வயதை அடைவதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்:

மைனர் வயது என்பது, 16 அல்லது 15 வயது என்று ஏதாவது சட்டதிட்டங்களைப்போட்டு அதில் குழம்பிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் இஸ்லாம் சொல்லக்கூடிய வழிமுறைகளை இவர்கள் கடைபிடிப்பார்களேயானால் எந்த குழப்பமும் வராது

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்கள் பருவமடைந்து விட்டார்களா? என்பதைத்தான் நாம் கவனிக்க வேண்டுமே ஒழிய வயது ஒரு பிரச்சனை இல்லை என்பதுதான் இஸ்லாம் சொல்லக்கூடிய அழகான தீர்வு.

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்கள் பருவமடைந்து விட்டார்களேயானால் அவர்கள் மேஜர் என்றும், பருவமடையாவிட்டால் மைனர் என்றும் அழகான கோட்டை இஸ்லாம் போட்டுக்காட்டுகின்றது.

அந்த அடிப்படையில் நாம் சட்டங்களை வகுத்தால் சிறுகுழந்தை கற்பழிக்குமா? அவன் குழந்தையா?

அவனுக்கு எலும்பு மஜ்ஜையில் சோதனை செய்ய வேண்டுமா? என்ற குழப்பமெல்லாம் வராது.

மாறாக அவன் பருவமடைந்திருந்தால் அவனுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.

பருவமடையாத சிறுவனால் இது போன்ற சேட்டைகளை செய்ய இயலாது எனும்போது அதுவே அந்தப் பிரச்சனையில் தீர்வு காண எளிய வழியாக அமைந்துவிடும்.

எனவே மத்திய அரசு ஆழமாக யோசித்து, முழுமையாக ஆய்வு செய்து இஸ்லாம் சொல்லக்கூடிய இந்த சட்டத்தின் அடிப்படையில் சட்டமியற்றுமேயானால், இதுபோன்ற குழப்பங்கள் தவிர்க்கப்படும்.

இந்தப் பிரச்சனைக்கும் இஸ்லாம் கூறும் தீர்வின் பக்கம்தான் மக்கள் வரவேண்டியுள்ளது.

இஸ்லாம் கூறும் தீர்வுதான் இறுதியான தீர்வு என்பதையும், அதுதான் சரியான உறுதியான தீர்வு என்பதையும் மக்கள் சன்னஞ்சன்னமாக விளங்கி வருகின்றார்கள்.

காரணம் என்னவென்றால் இது இறைவனுடைய மார்க்கம் என்பதால், படைத்த இறைவனுக்குத்தான் தெரியும் மனிதன் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு சரியானதாக இருக்கும் என்பது.

இந்த நிகழ்வுகளும் இஸ்லாம் இறைவனின் மார்க்கம்தான் என்பதை உண்மைப்படுத்துகின்றன.


http://onlinepj.com/islathai_unmaipatuthum_natunatapukal/islam-kurum-therve-iruthiyanathu/

அஞ்சா சிங்கம் said...

சுவனப் பிரியன் ///தொழுகை நேரத்தில் எல்லோரும் தொழுகைக்கு சென்று விடுவர். கடைகள் அனைத்தும் சிறிய துணி கொண்டு மூடப்பட்டிருக்கும். முழுவதும் அடைப்பதில்லை. இதை பயன்படுத்திக் கொண்டு சில திருடர்கள் கடையின் உள்ளே புகுந்து பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பல இடங்களில் நடந்ததாலேயே இப்படி ஒரு ஏற்பாடு.///

நீங்க எழுதுன கட்டுரையை நீங்களே ஒரு முறை படித்து பாருங்கள் .
சவ்தி தண்டனைக்கு பயந்து அங்கே திருட்டு நடப்பதில்லை வாயை திறந்து கொண்டு ரோட்டில் படுத்தால் பொதும் . பாலாரும் தேனாறும் ஸ்ட்ரெய்ட்டா வாயிக்குள்ளயே போயிடும்ன்னு நீங்கதான் பிரசாரம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க .
உங்களின் விசுவாசத்தை பார்த்து சவ்தி அரசர் உங்களுக்கு ஏதாவது லம்ம்ப்பா செய்வாரு .

UNMAIKAL said...

விஸ்வரூபம் திரைப்படம் தமிழகத்தில் எங்கும் ஓடாது!

“விஸ்வரூபம் திரைப்படத்தை ஓடவிட மாட்டோம்”

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு


செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, January 22, 2013, 13:23

நடிகர் கமலஹாசன் விஸ்வரூபம் என்ற திரைப்படத்தைத் தயாரித்து அதை ஜனவரி 25 அன்று வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார்.

அந்தப்படத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும், இஸ்லாம் மதத்தையும் இழிவுபடுத்தி காட்சிகள் அமைந்துள்ளதாக செய்திகள் வந்தன.

இதைத் தொடர்ந்து நேற்று (21.01.2013) அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களுக்கு கமலஹாஸன் விஸ்வரூபம் திரைப்படத்தைப் போட்டுக் காட்டியுள்ளார்.

அந்தப்படத்தைப் பார்த்த அனைத்து முஸ்லிம் தலைவர்களும் இந்திய வரலாற்றில் இதுபோல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் ஒரு படம் வெளியாகவே இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

எனவே இந்தப்படத்தை வெளியிட்டால் மாபெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் மத்திய அரசும் மாநில அரசும் இப்படத்திற்கு முற்றாகத் தடை விதிக்க வேண்டும்

அவ்வாறின்றி இப்படம் வெளியாகுமேயானால்,அப்படம் தமிழகத்தில் எந்தத் தியேட்டரிலும் வெளியிட விடமாட்டோம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அவசர நிர்வாகக் குழு கூடி முடிவெடுத்துள்ளது

இப்படிக்கு
ஆர்.ரஹ்மத்துல்லாஹ்
(பொதுச் செயலாளர்)
SOURCE: http://www.tntj.net/128024.html


விஸ்வரூபத்தை தடை செய்யவேண்டும் -

இஸ்லாமிய கூட்டமைப்பு; திரையிட விடமாட்டோம் : TNTJ அறிவிப்பு


Tuesday, 22 January 2013 10:18 maruppu மீடியா - மறுப்பு செய்திகள்

Jan22, விஸ்வரூபம் படம் வெளியிடுவதற்கு முன் இஸ்லாமிய தலைவர்களிடம் திரையிட்டுக் காட்டப்படும், என்று கமலஹாசன் உறுதியளித்ததன் பேரில், நேற்று (21/01) திரையிட்டுக் காட்டப்பட்டது.

படத்தில், முஸ்லிம்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில், பல்வேறு காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

திருமறைக் "குர்ஆன்" தீவிரவாதத்தை போதிக்கும் நூலாகவும்,

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் மிக மோசமாக கொச்சைப்படுத்தும் விதத்திலும் படத்தில் பல்வேறு காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

எனவே, விஸ்வரூபம் படத்தை "தடை" செய்யவேண்டும், என்று அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

தமிழக அரசு, இப்படத்தை உடனே "தடை" செய்யவேண்டும், என்ற கோரிக்கையோடு சென்னை "கமிஷனர்" மற்றும் "உள்துறை செயலாளர்" ஆகியோரை சந்திக்க உள்ளனர்.

TNTJ பொதுச் செயலாளர், ரஹ்மத்துல்லாஹ் விடுத்துள்ள அறிக்கையில்:

விஸ்வரூபம் படத்தைப் பார்த்த அனைத்து முஸ்லிம் தலைவர்களும் "இந்திய வரலாற்றில் இதுபோல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் ஒரு படம் வெளியாகவே இல்லை" என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

எனவே இந்தப்படத்தை வெளியிட்டால் மாபெரும் "சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும்" என்பதால், மத்திய அரசும் மாநில அரசும் இப்படத்திற்கு முற்றாகத் "தடை" விதிக்க வேண்டும்
விஸ்வரூபம் வெளியாகுமேயானால்,

அப்படம் தமிழகத்தில் எந்தத் தியேட்டரிலும் வெளியிட விடமாட்டோம், என்று "தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்" அவசர நிர்வாகக் குழு கூடி முடிவெடுத்துள்ளதாக, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SOURCE: http://www.maruppu.in/all-medias/43-maruppu-news/758--tntj-

Anonymous said...

காவி தீவிரவாதம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறிய கருத்துக்கு அடுக்கடுக்கான நிகழ்வுகள் உண்டே. அப்படிக் கூறியதற்காக அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று பி.ஜே.பி. கூறுவது பொருட்படுத்தப்பட வேண்டிய ஒன்றல்ல என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:
ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவா அமைப்புகள் இந்து பயங்கரவாதத்தினை முன்னிறுத்தி நடத்துவதாகவும், அதற்காக பயிற்சிகள் அளிப்பதாகவும் உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அவர்கள் கூறியிருப்பதை எதிர்த்து பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் வானத்திற்கும் பூமிக்குமாக குதித்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்; அதற்கு அவர் மன்னிப்புக் கோர வேண்டும்; இல்லையேல் 24ஆம் தேதி கிளர்ச்சி, கண்டன ஆர்ப்பாட்டம் செய்வோம்; ஷிண்டே பதவி விலக வேண்டும் என்றும் உடனே ஆர்ப்பரித்துள்ளனர்!
அவர் ஏதோ ஆதாரமில்லாமல் பேசியதைப் போல ஊடகங்கள் உயர்ஜாதி, பார்ப்பன, ஹிந்துத்வாவாதிகளின் ஆயுதங்களாக இருப்பதால், இதற்காக ஓங்காரக் கூச்சல் இடுகின்றனர்!
இதோ ஆதாரங்கள் - பதில் கூறட்டும் பார்க்கலாம்!
தங்களை சுத்த சுயம் பிரகாசிகளாகக் காட்டிக் கொள்ளும் இந்த வீராதி வீரர்கள், நமது சில கேள்விகளுக்கு விடை கூறட்டும்!

1. மாலேகான் குண்டுவெடிப்பில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் எல்லாம் லேபிளை மாற்றிக் கொண்ட ஹிந்துத்துவா வாதிகள் அல்லாமல் வேறு யார்?
இந்திய இராணுவத்தில் ஊடுருவி, அங்குள்ள RDX என்ற சக்தி வாய்ந்த வெடி மருந்து, பொருள்களைக் கடத்தி, பயிற்சி தந்து பிறகு சிக்கிக் கொண்டு, சிறைவாசம் அனுபவிப்பதோடு, காவி அணிந்த சந்நியாசி வேடம் தரித்து தாங்கள் செய்த வன்முறைகளை - இஸ்லாமியர்கள் மீது பழி போட்டவர்கள் இவர்களைத் தவிர வேறு யார்?

2. அண்மையில் வெளியான செய்தியில் இவர்களின் முக்கிய புள்ளியான ஒருவர்தான் (உயர்ஜாதி பார்ப்பனர் அவர்) குஜராத் சம்ஜுத்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ வைத்து கொளுத்தியது (கோத்ரா ரயில் எரிப்பு) அய்தராபாத் குண்டு வெடிப்பு ஆகிய எல்லாவற்றுக்கும் சூத்திரதாரிகளாக இருந்தனர் என்ற செய்தி சென்ற வாரம் வரவேயில்லையா? (டைம்ஸ் ஆஃப் இந்தியா 13.1.2013).
புலன் விசாரணை செய்த ஆய்வு நிறுவனம் இச்செய்தியை வெளியிட்டு ஏடுகளில் வெளி வந்துள்ளதே!

3.பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளின் பட்டியலில் இவர்கள் அமைப்பினர் சம்பந்தப்பட்டுள்ளார்களா - இல்லையா?

மாண்புமிகு ஷிண்டே அவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர் உள்துறை அமைச்சராக இருப்பது என்பது பார்ப்பன உயர் ஜாதி வர்க்கத்திற்கு உறுத்தலாகத் தானே இருக்கும்; அதற்காகத்தான் இந்தப் பதவி விலகல் கூச்சல் போலும்!
ஷிண்டேவின் கருத்துகண்டு இப்படிக் கூறுவது எதைக் காட்டுகிறது? நடுநிலையாளர்கள் ஆழ்ந்து சிந்திக்கட்டும்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
22.1.2013

http://viduthalaidaily.blogspot.com/2013/01/blog-post_120.html

Anonymous said...

புதுடில்லி: இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கையில் ஆர். எஸ்.எஸ்., அமைப்பினருக்கும் தொடர்பு இருப்பதாக உள்துறை செயலர் ஆர். கே., சிங் கூறியுள்ளார். இது தொடர்பான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது என்றார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=631508

Unknown said...

annan suvanapriyanidan oru kealvi thambiya annanaa endru theriyavillai irunthaalum athai viduthu kealviyai parpom rizaana eNDREA intha pen antha kolai seithathaka koorappadum pothu 17vayathu irunthataka solkirarkal athavum savuthiku vanthu 8 naatkalil intha kolai nadanthaullathu antha 17vayathu pennukku antha sirukulanthaiyai kolla eanna avasiyam vanthathu eandru yositharkala athuvum kolaai nadanthathaka sollapadum nearatthai aduthu oru manineram kalithea thaai vanthu parthullar appdiyendral kolaai nadanthathai thaai parkkavillai pin eappadi parkkatha oru visyathai kolai eandru koorinarkal athai eappadi savuthi neethi thurai ankeekaritthau theerpu vazankiyathu antha kolaikkana Kaaranam pattri yen yarum peasa villai 17vayathu kulanthai 4maatha kulanthaiyai kolla kaaranam thaan eanna ..?ithu oru vipatthu ithai kolaiyaa ka sittharitthu oru kolai seithu vittarkal ithu thaan uanmai ithu ean karuthu uankal karutthai eathir parkkum nanpan Kannan......

Unknown said...

uankal pathikai eathir parthu kaathirujiren mr suvanm

suvanappiriyan said...

திரு கண்ணன்!

தனது பதினேழு வயதிலேயே மொழி தெரியாத கலாசாரம் புதிதாக உள்ள ஒரு நாட்டிற்கு அவரது குடும்பத்தவரால் அனுப்பப்படுகிறார். அதிலும் சவுதியில் வீட்டு வேலை செய்யும் பெண்கள் வீட்டை விட்டு வெளியில் எங்கும் செல்ல இயலாது;. ஓடி ஆடி குதூகலிக்க வேண்டிய வயதில் தனது வாழ்வு இவ்வாறு நான்கு சுவற்றுக்குள் அடைபட்டு விட்டதே என்ற மன சிதைவு ஏற்பட்டிருக்கலாம். அந்த கோபம் குழந்தையின் மீது திரும்பியிருக்கலாம்.

சில சவுதி பெண்கள் மிக கடினமான வேலைகளை கொடுத்து துன்புறுத்தியிருக்கலாம். தனது எஜமானியின் மீதுள்ள கோபத்தை அந்த குழந்தையிடம் காட்டியிருக்கலாம்.

கழுத்து நெறிக்கப்பட்டு குழந்தை இறந்ததாக மருத்துவ அறிக்கையும் கூறுகிறது. அந்த குழந்தையோடு ரிசானா மட்டுமே இருந்துள்ளார். கொலை நடந்த அன்று காவல் நிலையத்தில் குழந்தையை தானே கொன்றதாக போலீசார் முன்னிலையில் ஒத்துக் கொண்டு கையொப்பமும் இட்டுள்ளார்.

மன்னிக்க வேண்டிய அந்த பெற்றோர்கள் ரிசானாவை மன்னிக்கவில்லை. எனவே தான் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றும் சூழல் ஏற்பட்டது.

அவரை மிரட்டி கையெழுத்து வாங்கியது உண்மையாக இருந்தால் இறைவனிடம் அதற்கான தண்டனையை மறு உலகில் பெற்றுக் கொள்வார்கள்.