மலாலா யூசுஃப் குணமாகி பெற்றோருடன் உள்ளார்!
பாகிஸ்தானின் மலாலா யூசுஃப் தீவிரவாதிகளால் சுடப்பட்டு ஆபத்தான நிலையில் மருததுவ மனையில் அனுமதிக்கப்பட்டது நாம் அறிந்ததே! மேல் சிகிச்சைக்காக அவரை இங்கிலாந்து அனுப்பியது பாகிஸ்தான் அரசு. தீவிர சிகிச்சைக்குப் பிறகு முழு உடல் நலத்துடன் அருகில் உள்ள பெற்றோரின் இருப்பிடத்துக்கு நேற்று சென்றுள்ளார். இன்னும் மேலதிக சர்ஜரிகள் பாக்கி உள்ளதால் நான்கு வாரத்துக்கு பிறகு முழு உடல் நலத்தோடு பாகிஸ்தான் திரும்புவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் டேவ் ரோஸர் சொலலும் போது 'தற்போது மலாலா யூசுஃப் மிகச் சிறந்த முன்னேற்றத்தைப் பெற்றுள்ளார். அவரது பெற்றோரோடும், சகோதரர்களோடும் சில நாட்கள் இருந்தால் நல்லது என்று நாங்கள் தீர்மானித்ததால் அவரை தற்போது மருத்துவ மனையிலிருந்து வெளியாக்கியுள்ளோம். இன்னும் சில வாரங்களில் சிறிய சிகிச்சைக்காக திரும்பவும் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவார்' என்றார்.
பாகிஸ்தான் மட்டுமல்ல உலகம் முழுவதும் இந்த சிறுமி நலம் பெற்று திரும்ப வர வேண்டும் என்று பிரார்த்தித்தோம். உலக மக்களின் பிரார்த்தனை வீணாகவில்லை. பழையபடி மலாலா யூசுஃப் தனது பணிகளை செய்ய வேண்டும். எந்த கருத்துகளாக இருந்தாலும் அது குர்ஆனுக்கு மாற்றமில்லாத வகையில் தனது கருத்து இருக்குமாறு இந்த சிறுமி பார்த்துக் கொள்ள வேண்டும். பெண் உரிமை என்று அளவு கடந்து சுதந்திரம் கொடுக்கப்பட்டதால் இந்தியாவிலும், மேற்குலக நாடுகளிலும் பெண்களின் நிலை எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை அறியாதவரல்ல மலாலா யூசுஃப். எனவே சமயோஜிதமாக நடந்து கொள்ள அவரது பெற்றோரும் அவருக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.
http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentid=20130105148200
தாலிபான்கள் தங்களின் நடவடிக்கைகளில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். இல்லை என்றால் சமூகத்தால் ஒதுக்கப்படுவர். ஆனால் பல கொடூரங்களை தாலிபான்கள் பெயரில் நிகழ்த்துவது நேட்டோ படைகள்தான் என்று தாலிபான்கள் கூறுகின்றனர். உண்மை என்ன என்பதை நம்மால் அறிய முடியவில்லை.
-------------------------------------------------
பிலிப்பைனில் தொடர் துப்பாக்கி சூடு!
மணிலா- நேற்று வீடு வீடாக புகுந்து எட்டு பேரை கொன்றிருக்கிறான் ஒரு கயவன். இதில் பிரசவத்துக்காக காத்திருந்த ஒரு பெண்ணும் இறந்துள்ளது பெரும் சோகம்.
ரொனால்ட் பேயி என்ற இந்த கயவனை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். முனிசிபல் தேர்தலில் தோல்வியுற்ற இவன் தனது மனைவியோடும் பிரச்னை பண்ணியுள்ளான். பிறகு வீட்டிலிருந்து வெளியேறி அளவுக்கதிகமாக மது அருந்தியுள்ளான். மது அருந்திய வெறி அவனை மிருகமாக்கியுள்ளது. தற்போது இதனால் எட்டு பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். பலத்த காயம் அடைந்த 11 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுவினால் வரும் கேட்டினைப் பாரீர். நமது அரசோ மது வருமானத்தைப் பெருக்க அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்புகிறதாம். ஒரு சிறந்த அரசு செய்யக் கூடிய காரியமா இது?
-------------------------------------------------
பழம் பெரும் இந்தி திரைப்பட நடிகர் திலீப் குமார் (வயது 90) உம்ரா செய்வதற்காக ஜெத்தா வந்துள்ளார். திலிப்குமாரும் அவரது மனைவி சாய்ரா பானுவும், ஆசிப்பும், அவரது மருத்துவரும் மற்றும் சில உறவினர்களும் இறை கட்டளையை பூர்த்தி செய்யும் முகமாக ஜெததா வந்துள்ளனர்.
'இறைவன் கொடுதத இந்த பெரும் பாக்கியமான உம்ரா செய்யும் கடமையை இனிதே நிறைவேற்ற எனக்காகவும் எனது குடும்பத்துக்காகவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்' என்று பத்திரிக்கையாளர்களிடம் திலீப் குமார் (யூசுஃப்) வேண்டுகோள் வைத்தார்.
திலிப் குமார் உம்ரா கடமையை நிறைவேற்ற சனிக்கிழமை (05-01-2012) மெக்கா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
9 comments:
//"மலாலா யூசுஃப் குணமாகி பெற்றோருடன் உள்ளார்!"//
இதுல கூட தாலிபானை சப்போட் பண்ணி பேசியிருக்கீங்களே. உங்களுக்கு மறை கழண்டுடுச்சா?
ததஜவினரே வசை பாடாமல் பதில் சொல்லுங்கள்!
அன்பார்ந்த சகோதரர்களே! உங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியது அநியாயம்தான் இதற்கு அனைத்து முஸ்லிம்களும் அணி திரள வேண்டும் என்பது நியாயம் தான்! ஆனாலும் நாம் கேட்பது இதுதான் !
இதே போல் மற்ற இயக்கத்தினர் பாதிக்கப்பட்டபோது நீங்கள் வர மறுப்பதேன்?
மற்ற முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் இது போன்று போராடுவீர்களா?
இதைக் கேட்டால் நாங்கள் உங்களை அழைக்கவில்லை! நாங்கள் மக்களை அழைக்கிறோம் என்கிறீர்களே மக்களிலே இயக்க வாதிகள் அடங்க்குவார்களா இல்லையா?
இயக்கங்கள் வேண்டாம் அதில் உள்ள மக்கள் வேண்டும் என்றால் ஆடு பகை குட்டி உறவா?
அனைத்து முஸ்லிம்களும் கலந்து கொள்ள வேண்டும் என அழைக்கின்றீர்கள் ! முஸ்லிம்கள் என்றால் யார் ? அதன் வரைவிலக்கணம் என்ன? அதற்குள் மற்ற அமைப்பினர் அடங்குவார்களா இல்லையா?
மண்ணடி கூட்டத்தில் பேசிய பி.ஜே 'எதிரி அமைப்புகள் கூட கண்டனம் தெரிவித்தனர் ஏன் எனில் இது சமுதாயப் பிரச்னை' என்றாரே? சமுதாயப் பிரச்சனையில் மற்ற அமைப்புகளோடு சேர்ந்து போராடுவதில் என்ன இடர்ப்பாடு?
மற்ற அமைபினரோடு சேர்ந்து போராடுவது கொள்கையற்ற கூட்டு என்கிறீர்களே ? குரான் ஹதிஸ் அல்லாத மற்ற மக்களை அழைப்பது கொள்கையற்ற கூட்டு இல்லையா ?
சமுதாயத்திற்கு நன்மை பயக்குமானால் கொள்கையற்ற , கொள்ளையடிக்கும் அரசியல் கட்சிகளோடு கூட்டணி சேரும் போது சமுதாய நன்மைக்காக முஸ்லிம் அமைப்பினருடன் இணைவதில் என்ன தவறு?
தடியடிக்கு சிறை நிரப்பும் போராட்டம் என்றால் பல்லாண்டு சிறையில் வாடும் மக்களுக்கு போராடாமல் இருப்பதற்கு காரணம் என்ன?
மரணத்தோடு போராடும் அபுதாகிருக்காக ஒரு அறிக்கை விடுவதில் என்ன சிரமம் ?
உங்கள் மீது தடியடி நடத்தியது சமுதாயப் பிரச்னை என்றால் சமுதாயத்திற்காக சிறை சென்று பல்லாண்டுகளாக தங்களின் குடும்பத்தை, இளமையை, சுகத்தை ,சொந்தத்தை ,ஏன் உயிரையும் இழந்து கொண்டிருக்கிறார்களே ! அது இந்த சமுதாயத்தின் பிரச்னை இல்லையா?
இந்தக் கேள்விகள் சமுதாயம் உங்களை நோக்கி வைக்கும் கேள்விகள் பதில் சொல்வதை விட்டு விட்டு மீண்டும் வசை பாடினால், கேள்வியை விட்டு விட்டு கேள்வி கேட்டவன் மேல் பாய்ந்தால், உங்களின் நிலைப்பாடு குறித்து ஆதரவாளர்களுக்கு கூட ஐயம் எழுந்து விடும்.ஆகையால் நேர்மையுடன் பதில் சொல்லுங்கள்! கண்ணியத்துடன் பதில் சொல்வீர்கள் என எதிர் பார்க்கிறோம்.கோபப்பட்டால் உங்களிடம் பதில் இல்லை என அர்த்தம்.
//இதுல கூட தாலிபானை சப்போட் பண்ணி பேசியிருக்கீங்களே. உங்களுக்கு மறை கழண்டுடுச்சா? //
மறை எனக்கு கழறவில்லை ஜெய்சங்கர். கழன்றது உங்களுக்குத்தான். இந்த பதிவிலிலேயே தாலிபான்கள் செய்யும் அடாவடிகளை கண்டித்திருக்கிறேன். இதற்கு முன்னும் பல முறை இவர்களை கண்டிதது தனி பதிவே எழுதியுள்ளேன்.
முல்லா உமர் தனது பெருநாள் செய்தியில் 'எங்களின் பெயரை பயன் படுத்தி அமெரிக்க பிரிட்டானிய படைகள் பல செயல்களை எங்கள் நாட்டில் அரங்கேற்றி வருகிறது. எங்கள் பெயரால் புரியும் வன்செயல்களை உலக மக்கள் நாங்கள் செய்ததாக நம்ப வேண்டாம்' என்று அறிக்கை விட்டிருந்தாரே. அது பற்றி ஒரு பதிவே போட்டுள்ளேனே. தாலிபான்களிடம் ஊடக வசதி இல்லாததால் அமெரிக்கா எதைச் சொல்கிறதோ அதைத்தான் நாமும் நம்பிக் கொண்டிருக்கிறோம். உண்மை நிகழ்வு இதுவரை யாருக்கும் தெரியாது.
//அன்பார்ந்த சகோதரர்களே! உங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியது அநியாயம்தான் இதற்கு அனைத்து முஸ்லிம்களும் அணி திரள வேண்டும் என்பது நியாயம் தான்! ஆனாலும் நாம் கேட்பது இதுதான் !//
பின்னூட்டம் இடம் மாறி வந்து விட்டதோ!
சுவனப்பிரியன் நான் உங்களை குற்றம் சொல்லவில்லை. ஆனால் நீங்கள் எதற்கு எடுத்தாலும் இந்துத்வா, யூதர்களை திட்டுவது கொஞ்சம் எரிச்சலாக இருக்கிறது
வேலூர்: மொபைல் போனில் படம் பிடித்து மிரட்டல் விடுத்ததால், தீக்குளித்த மாணவி, சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.வேலூர் மாவட்டம், ஆற்காடு அடுத்த திமிரியைச் சேர்ந்த மாணவி ஈஸ்வரி, 17, (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியை சேர்ந்த மாணவர் சரத்குமார், மொபைலில் ஈஸ்வரியை படம் பிடித்து, காதலிக்கச் சொல்லி மிரட்டினார். இதற்கு, சரத்குமாரின் நண்பர் ஏழுமலை துணை போனார். மனமுடைந்த மாணவி ஈஸ்வரி, கடந்த, 3ம் தேதி மாலை, உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். ஆபத்தான நிலையில், வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், இன்று (ஜன.,5) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில், திமிரி போலீஸார் ஏற்கனவே சரத்குமார், ஏழுமலையை கைது செய்தனர். மேலும் ஆறு பேரை தேடி வருகின்றனர்.
Dinamalar
05-01-2012
Mr. Dheen's questions are reasonable. Why not TNTJ or its supporters answer them?
பெண்களை இறுக்கி அணைக்கும் 'பிரமிடு சாமியார்'....
வி.ஐ.பிக்கள் கலக்கம்!!
CLICK >>>> SEE PICTURE HERE<<<<
மெகபூப் நகர்: தமிழ்நாட்டில் சாமியார்கள் மீது சர்ச்சைகள் எழுவது வாடிக்கையாகி வந்த நிலையில் தற்போது ஆந்திராவின் பிரபல சாமியார் ஒருவர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது.
தன்னிடம் வரும் பெண்களை கட்டி பிடித்தும், இறுக்கி அணைத்தும் சில்மிஷம் செய்ததாகவும் அந்த சாமியார் மீது கூறப்படும் புகார்களை விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது
பிம்மரிஷி சுபாஷ் பத்திரி என்ற சாமியார் மெகபூப் நகர் மாவட்டம் படுதால் கிராமத்தில் மகேஸ்வரா மகா பிரமிடு என்ற பெயரில் தியான மண்டபம் ஒன்றை நடத்தி வருகிறார்.
136 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஆசிரமத்தின் மையப்பகுதியில் பிரமிடு போல் பிரமாண்ட கட்டிடம் அமைக்கப்பட்டு உள்ளது.
அதில் 40 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தியானம் செய்யலாம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு பெரிய அளவில் தியானம் பயிற்சி நடந்தது.
இந்தியா மட்டும் அல்லாமல் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
தினம் ஒரு லட்சம் பேர் இந்த தியான பயிற்சியில் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சி முகாமில் தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் பிரபல நடிகர் நடிகைகளும் பங்கேற்றார்கள்.
அன்றைய தினம் இதில் கலந்து கொண்ட பெண்களை சாமியார் சுபாஷ் பத்ரி கட்டிப்பிடித்து ஆசி வழங்கினார்.
அத்துடன் அங்கு பல பெண்களிடம் அவர் சில்மிஷமும் செய்தார்.
சில பெண்களை பின் பக்கமும் தட்டினார்.
இதனை ரகசியமாக படம் பிடித்த ஒருவர், தெலுங்கு, "டிவி' சேனல்களிடம் அந்த காட்சிகளை கொடுத்து ஒளிபரப்ப செய்து விட்டார்.
அந்த காட்சிகள் தெலுங்கு சேனல்கள் பலவற்றிலும் நேற்று முன்தினம் ஒளிபரப்பானது.
இதனால் ஆந்திராவில் பெரும் கொந்தளிப்பை ஏற்பட்டு விட்டது.
ஆவேசமடைந்த பெண்கள் அமைப்பினர் ஆசிரமம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து சாமியாரை சந்தித்து விளக்கம் கேட்டு அதை ஒளிபரப்புவதற்காக இரண்டு தனியார் தொலைக்காட்சி நிருபர்கள் ஆசிரமத்துக்கு சென்றனர்.
அவர்களை ஆசிரம ஊழியர்கள் அடித்து விரட்டினார்கள்.
நிருபர்கள் வந்த வேனையும் நொறுக்கினார்கள்.
இதுகுறித்து டி.வி. சேனல் நிறுவனத்தினர் போலீசில் புகார் செய்தனர்.
தங்களை தாக்கியதாக ஆசிரம சுபாஷ் பத்ரி சுவாமி, நிர்வாகி விஜய பாஸ்கர ரெட்டி உள்பட 6 பேர் மீது புகார் செய்து உள்ளனர்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விவகாரம் விசுவரூபம் எடுத்ததை முன்னிட்டு சுபாஷ் பத்ரி தப்பி ஓடிவிட்டார்.
அவர் பெங்களூர் சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதனால், தியான மாநாட்டில் பங்கேற்ற நடிகர் நடிகைகளும், அரசியல்வாதிகள், அதிகாரிகளும் கலக்கம் அடைந்துள்ளனர்.
இன்றைய கால கட்டத்தில் சாமியார் என்றாலே சர்ச்சை என்றாகிவிட்டது.
Read more at: http://tamil.oneindia.in/news/2013/01/04/india-pyramid-guru-goes-undergorund-167329.html
//அது குர்ஆனுக்கு மாற்றமில்லாத வகையில் தனது கருத்து இருக்குமாறு இந்த சிறுமி பார்த்துக் கொள்ள வேண்டும் //
சரியாக சொன்னிர்கள்
Post a Comment