Followers

Tuesday, January 08, 2013

இளையராஜா உதிர்த்த சமீபத்திய முத்துக்கள்




இளையராஜா உதிர்த்த சமீபத்திய முத்துக்கள்(உளரல்கள்)!

சமீப காலமாக இளையராஜா மேடையேறினால் ஏதாவது சர்ச்சைக்கிடமான பேச்சுக்களையே பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சமீபத்தில் பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழாவுக்கு கௌரவ விருந்தினராக வந்திருந்தார். அதில் அவர் பேசிய சில முத்துக்களை பார்ப்போம்.

"வருஷா வருஷம் யாருக்காவது விருது கொடுத்தே ஆவது என்று முடிவு பண்ணி விட்டீர்கள். ஏற்கெனவே நீ முடிவு பண்ணி வைத்து விட்டு கொடுக்கும் விருது யாருக்கு தேவை? நான் டெல்லி தேசிய விருதைப் பற்றி சொல்கிறேன்"

இதற்கு முன்னால் இளையராஜாவுக்கு தேசிய அவார்டு கொடுக்கவில்லையா? தற்போதய காலத்துக்கு தக்கவாறு பல புதிய இசையமைப்பாளர்கள் வந்தால் அவர்களையும் தேர்ந்தெடுப்பதுதானே நியாயமாக இருக்கும்? திறமையானவர்கள் வருடத்துக்கு வருடம் மாறுபடத்தானே செய்வார்கள். இதற்கு ஏன் இளையராஜா இந்த அளவு கோபப்பட வேண்டும்?


'சார் நீதானே என் பொன் வசந்தம் பாடல்களெல்லாம் சூப்பரா இருக்கு'

"அத சொல்றதுக்கு உனக்கு என்ன தகுதியிருக்கிறது. இசையைப் பற்றி ஏதாவது உனக்குத் தெரியுமா? இதற்கு முன்னால் இது போன்ற இசைகளை தரம் பிரித்து கேட்ட அனுபவம் உண்டா? என்று நான் கேட்க மாட்டேனா?"



அடப் பாவமே! இசை நல்லா இருக்கு என்று சொன்ன உங்கள் ரசிகருக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா? இது போன்ற இசை அமைப்பாளர்களை எல்லாம் கடவுள் நிலைக்கு உயர்த்தி தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்களே அவர்களுக்கு இதுவும் வேண்டும்...இன்னமும் வேண்டும். அந்த ரசிகர்களுக்கு இது போன்ற அவமானகரமான பதிலைக் கொடுப்பதுதான் ஒரு இசையமைப்பாளருக்கு அழகா?

இந்த விழாவில் ஒரு கவிஞருக்கு பரிசு கொடுக்க இவரை அழைத்துள்ளனர். இவரைப் பார்த்து விருது வாங்க வந்தவர் 'நீரோ ஒரு இசையமைப்பாளர். நான் ஒரு கவிஞன். கவிதைகளைப் பற்றி என்ன அதிகம் உங்களுக்கு தெரிந்து விட்டது என்று நினைத்து எனக்கு பரிசு கொடுக்க வந்து விட்டீர்கள்?' என்று அவர் கேட்டால் இளையராஜாவின் மனது எந்த அளவு சங்கடப்படும். இதை இவர் உணர வேண்டாமா? ஒரு ரசிகனுக்கு சாஸ்திரிய சங்கீதங்கள் அனைத்தும் தெரிந்திருந்தால்தான் ஒரு இசையைப் பற்றி கருத்து சொல்ல முடியுமா? என்ன சொல்ல வருகிறார் இவர்?

'இசை எதில் இல்லை? பேசும் பேச்சில் இல்லையா? சிரிப்பில் இல்லையா? நாம் கோவிலுக்கு சாமி கும்பிடப் போனால் மனது ஒரு நிலையில் இருக்கிறதா? அலை பாய்கிறதல்லவா? அதே நேரம் ஒரு ஐந்து நிமிடம் 'ஜனனி ஜனனி' போன்ற பாடல்களை மெய் மறந்து கேட்டால் மனது ஒரு நிலைக்கு வருகிறதல்லவா?'

இது அடுத்த காமெடி. 'ஜனனி ஜனனி' பாட்டை கேட்கும் உங்கள் ரசிகன், அடுத்த ஐந்து நிமிடத்தில் 'வாடி என் கப்பங் கிழங்கே' என்ற பாடலைக் கேட்பானே. இன்னும் சில நிமிடங்களில் 'நிலா காயுது...நேரம் நல்ல நேரம்' என்ற பாடலையும் அதன் இடையில் வரும் முக்கல் முனகல் வரிகளையும் கேட்பானே. இந்த அழகில் அங்கு பக்தி வருமா! அல்லது விரசம் வருமா?

அடுத்து கோவிலுக்கு சாமி கும்பிட செல்பவர்களை இதைவிட மோசமான வார்த்தைகளில் ஒருவர் கேவலப்படுத்திவிட முடியாது. இனி தமிழர்கள் யாவரும் இளையராஜாவின் பாடல்களைக் கேட்டுக் கொண்டே இறை வழிபாடு செய்ய வேண்டுமாம். கோவிலுக்கு செல்வதெல்லாம் வெத்து வேலை என்கிறார் இவர். இதற்கு இந்து மத ஆர்வலர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

'தாயின் அன்பை விட, தகப்பனின் அன்பை விட், குழந்தைகளின் அன்பை விட இவர்களிடமிருந்தெல்லாம் கிடைக்காத நிம்மதி இசையில் உங்களுக்கு கிடைக்கும்.'

பெற்றோரின் பாசத்தை விட இசை இவருக்கு முக்கியமாகப் போய் விட்டது. இவருக்கு இசை சோறு போடுவதால் அந்த இசையை தலையில் தூக்கி வைத்து கொண்டாடட்டும். அதற்காக மற்றவர்களின் விலை மதிக்க முடியாத பாசப் பிணைப்புகளை கொச்சைப் படுத்த வேண்டாம்.

---------------------------------------------------

'சாருநிவேதா தனது 'கனவுகளின் நடனம்' புத்தகத்தில் தங்களை கடுமையாக விமரிசித்து உள்ளாரே! பார்த்தீர்களா?'
-குமுதம் வாசகர்

இளையராஜா: எனது பெயரை பயன்படுத்தி எத்தனையோ பேர் தங்களுடைய கடைகளுக்கு பெயர் வைக்கின்றனர். 'நானும் ராஜாவும்' என்று கூட எஸ்பிபி கச்சேரி பண்ணினான்.

என்பெயரை வைத்து ஒரு எழுத்தாளர் பிரபலமாக நினைக்கிறார். நடந்து விட்டுப் போகட்டுமே...தன்னை பிரபல்யப் படுத்திக் கொள்ள எத்தனையோ வழி...அதில் இதுவும் ஒன்று. என்னைப் பற்றி எழுதினால் எல்லோரும் படிப்பார்கள் என்ற எண்ணமும் இருக்கலாம்.


சாருநிவேதா வை விடைப்பது போல் இடையில் எஸ்பிபி யையும் ஒரு பிடி பிடித்துள்ளார். இளையராஜா பெயரை போட்டுத்தான் தனது கச்சேரியை நடத்தும் நிலையில் பாலு உள்ளார் என்பது சற்று மிகைப்படுத்தலே. இதற்கு எஸ்பிபி தான் பதில் சொல்ல வேண்டும்.

--------------------------------------------------

நான் படிக்கும் காலங்களில் மூன்றாம் பிறை, சலங்கை ஒலி, மூடுபனி, அழகே உன்னை ஆராதரிக்கிறேன், என்று பல ஹிட் பாடல்களை கொடுத்தவர். இன்றும் அந்த பாடல்கள் பல வீடுகளில் ஒலித்துக் கொண்டே உள்ளன. ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட காலம் இருக்கிறது. முன்பு எம்எஸ்வியின் ராஜ்ஜியம், அடுத்த 20 ஆண்டுகள் இளையராஜாவின் ராஜ்ஜியம் தற்போது ரஹ்மானின் ராஜ்ஜியம் இன்னும் சில ஆண்டுகள் போனால் வேறொருவர் வரப் போகிறார். எனவே அதிகம் தெரிந்தவன் என்ற அகங்காரத்தை தூர வைத்து விட்டு சாதாரண சராசரி மனிதனாக வலம் வாருங்கள். அதுதான் உங்களின் வயதுக்கும், திறமைக்கும் ஏற்றதாக இருக்கும்.

அதை விடுத்து சற்று வித்தியாசமாக பேசப் போகிறேன் என்று மேடைகளில் உளரல்களை அரங்கேற்ற வேண்டாம் என்று இசை ஞானியிடம் கேட்டுக் கொள்கிறோம். இது போன்ற பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு எதையாவது பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் கோரிக்கை வைக்கிறோம்.

15 comments:

Seeni said...

athusari...

Unknown said...

இந்த பதிவின் மூலம் என்ன சொல்ல வர்ரீங்க சகோ.சுவனப்பிரியன்...

உங்களுக்கு இளையராஜாவை விட ரஹ்மான் பிடிக்கும் என்றா???

UNMAIKAL said...

சிங்கப்பூர் சபாநாயகராக

இந்தியப் பெண் ஹலிமா யாகூப் நியமனம்!


புதன், 09 ஜனவரி 2013 00:12 செய்திகள் - உலக செய்திகள்


சிங்கப்பூர் சபாநாயகராக இந்தியப் பெண் நியமனம்!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் பாராளுமண்ற சபாநாயகராக திருமதி ஹலிமா யாகூப் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தற்போது சமூகம் மற்றும் குடும்ப வளர்ச்சி துணை அமைச்சராக இருக்கும் திருமதி ஹலிமா யாகூப், இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்.

அடுத்த வாரம் கூட இருக்கும் பாராளுமண்றத்தில் திருமதி ஹலிமா யாகுப் முறையாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.

சட்டதுறையில் நிபுணத்துவம் பெற்ற திருமதி ஹலிமா, அரசியலுக்கு வரும் முன், சிங்கப்பூரின் முக்கிய தொழிற் சங்கமான என்டியூசியில் துணை பொதுச் செயலராகப் பணியாற்றி வந்தார்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக தொழிற்சங்க அமைப்பில் பணி செய்த ஹலிமா, உலக தொழிலாளர் அமைப்பின் உறுப்பினராகவும் சில காலம் பணியாற்றியுள்ளார்.

நடமாடும் தொழிலாளர் அகராதி எனப் பெயர்பெற்ற திருமதி ஹலிமா, கடந்த 8 ஆண்டுகளாகப் பாராளுமண்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார்.

சென்ற மாதம், முன்னைய சபாநாயகர் மைக்கேல் பால்மர், தகாத உறவு காரணமாக பதவி விலகினார்.

அதனைத் தொடர்ந்து காலியான சபாநாயகர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கும் திருமதி ஹலிமா சிங்கப்பூரின் முதல் பெண் சபாநாயகர் ஆவார்.


SOURCE: www.inneram.com

UNMAIKAL said...

பெண்கள் என்ன பிரியாணி பொட்டலமா? - மஞ்சை வசந்தன்

அண்மைக் காலத்தில் அளவுக்கு அதிகமாக பாலியல் வன் கொடுமைகள் பெண்கள்மீது நடத்தப்படுகின்றன.

இந்த செய்தி அல்லது செய்திகள் இல்லாமல் ஒரு நாளும் கழியாது என்கின்ற அவலம், சட்டம், ஒழுங்கு சீர்கேடு தமிழகத்தில்.

துய்த்து முடித்ததும் ஒடி மறைந்த நிலைமாறி, உயிருடன் இருந்தால் தான் அடையாளம் காட்டுவாள் என்று முடிவெடுத்து, வன்புணர்ச்சி முடிந்ததும் கொன்று போட்டு விட்டு தப்பும் செயல்முறை இப்போது நடைமுறையாகி விட்டது.

தஞ்சை மாவட்டம் பெருமகளூரைச் சேர்ந்த, புதுக்கோட்டைக் கல்லூரியில் முதலாண்டு படித்த மாணவி வனிதா தன்னைக் காதலிக்க மறுத்தாள் என்பதற்காக, அவள் எதிர் வீட்டுக்காரனான பாலிடெக்னிக் மூன்றாமாண்டு மாணவன் கண்ணதாசன் அவளைக் கழுத்தை இறுக்கிக் கொலை செய்து விட்டு அவள் முகத்தில் ஆசிடை ஊற்றி தன் வெறியை வெளிப்படுத்தியவன், தானும் தற்கொலை செய்து கொண்டான்.

வடவள்ளியைச் சேர்ந்த ஸ்ருதியை காளப்பட்டியைச் சேர்ந்த அசீமும்; கோவையைச் சர்ந்த எம்.சி.ஏ. பட்டதாரி ரம்யாவை அவரின் மாமன் மகன் மதனும்; திருவொற்றியூர் கார்த்திகாவை அவர் வீட்டு மாடியில் தங்கியிருந்த இராஜரத்தினமும், கூத்தா நல்லூரைச் சேர்ந்த வினோதினியை அதே ஊரைச் சேர்ந்த பிரகாஷும், கோவையைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு அபிநயாவை பக்கத்து வீட்டு வேணுகோபாலும்; காரைக்கால் கணினி பொறியாளர் வினோதினியை, அதேவூர் கட்டடத் தொழிலாளி சுரேஷும் கழுத்தறுத்தும் கத்தியால் குத்தியும் கொலை செய்துள்ளனர்.

தூத்துக்குடி அருகே எட்டு வயது சிறுமி வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளாள்.

ஏழு வயது சிறுமி பாலுறவு வன் கொடுமைக்குப்பின் கொலை செய்து வயல்வெளியில் எறியப்பட்டுள்ளாள்.

ஒரு பெண் பிறப்பதே போராட்டத்திற்குப் பின் நிகழுவது.

காரணம் கருவிலே பெண்ணென்று தெரிந்ததும் கலைக்கப்படுகிறாள்.

அதையும் மீறயே அவள் பிறக்கிறாள்.

பிறந்த பின் பெண்ணென்று தெரிந்ததும் கள்ளிப்பாலோ, கழுத்தைத் திருகியோ கொல்லப்படுகிறாள்.

இத்தனை தடைகளையும், சோதனைகளையும், அழிப்பு முயற்சிகளையும் தாண்டியே பெண் உலகில் வளர, வாழ அரிதாய் வாய்ப்புக் கிடைக்கிறது.


ஒரு பிள்ளையை 10 ஆண்டு, 15 ஆண்டு, 20 ஆண்டு என்று வளர்க்க, பேண (பாதுகாக்க) பெற்றோரும், மற்றோரும் படும் இன்னல்கள் ஏராளம்.

அதிலும் முதல் இரண்டாண்டுகள், வயிற்றுப் போக்கு, சளி, ஜுரம் என்று அடுத்தடுத்து குழந்தை நோயால் பாதிக்கப்படும்போது பெற்றோர் மருத்துவ மனைக்கும், வீட்டிற்கும் அலைவதும், காத்திருப்பதும், மன உளைச்சல் அடைவதும் கொஞ்ச நஞ்சமல்ல.

அப்படி யெல்லாம் இன்னல் ஏற்று, கண் விழித்து, பணம் செலவிட்டு ஒரு பெண் பிள்ளையை வளர்த்தெடுக்க என்ன பாடுபடுகிறார்கள் என்பது பிள்ளையை வளர்த்து காக்கும் பெற்றோருக்குத் தான் நன்கு தெரியும்.

ஒரு பெண் தன் எதிர்காலத்திற்கு எத்தனை கனவு காண்கிறாள்!

பெற்றோர் எவ்வளவு ஆசைப்படுவர்!

அத்தனையும் ஒரு நொடியில் அழிக்க யார் இவர்களுக்கு உரிமை தந்தது?

10ஆம் வகுப்பில் 480 மதிப்பெண் பெற்று +2வில் மருத்துவப் படிப்பிற்கு தன்னைத் தயார் செய்த 16 வயது பாண்டிப் பெண்ணை கடத்திச் சென்று அறையில் அடைத்து, மாறி மாறி வன்புணர்ச்சி செய்து அவள் வாழ்வைச் சிதைக்கிறார்கள் என்றால், அவர்களையெல்லாம் இனி சமுதாயத்தாலே தண்டிக்கப்படுவர்.

அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தால் அதுதான் நடக்கும்.

அந்தப் பெண்ணின் வாழ்வு வழியில் போகின்றவனால் சிதைக்கப்பட்டால் இது என்ன சமுதாயம், நாடு?


அப்படியிருக்க, அய்ந்து நிமிட இன்பத்திற்கு ஒரு பெண்ணை வதைத்து, சின்னாபின்னமாக்கி, சீர் அழித்து, இறுதியில் அவளைக் கொன்று, சாலையோரம் தூக்கியெறிந்து விட்டுப் போவது என்றால், அவள் என்ன பிரியாணி பொட்டலமா?

பேருந்தில் போகும் போதே பிரியாணி பொட்டலத்தை அவிழ்த்து ஒரு வேளை ருசிக்கு சாப்பிட்டு விட்டு, இலையைச் சுருட்டி சாலை ஓரம் வீசியெறிந்து விட்டுச் செல்வது போல், பெண்ணைப் புணர்ந்து தூக்கியெறிந்தால் அது எத்தகு கொடுமை, அயோக்கியத்தனம், அநியாயம்?

டில்லியில் அதுதானே நடந்தது?

ஒருவேளை உணவுக்குப் பின் எச்சில் இலையை வீசி எறிவதுபோலத்தானே எறிந்து விட்டுச் சென்றனர் பேருந்திலிருந்து.

பிரியாணி சாப்பிடுகின்றவனாவது நிதானமாக சுவைத்து, மென்று, மென்று அனுபவிப்பான்.

வன்கொடுமை முறையில், பயம், பதற்றம், அவசரம், இயந்திரத்தனம் என்று இயங்கி முடிப்பவன் என்ன இன்பத்தைக் காண முடியும்?

வன்புணர்ச்சி முடிந்ததும் நிறைவு வருமா?

குற்ற உணர்ச்சியும், கொடுமை புரிந்த தவிப்பும், தப்பித்தால் போதும் என்ற விரைவும் தானே மிஞ்சும்?

ச்... சீ... சீ... இப்படியும் ஒரு வேட்கையா?

நடுத் தெரு நாய்கூட காரித்துப்புமே!

கயவர்கள், தன் சகோதரியை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்கட்டும்!

த்தூ.... தோன்றலின் தோன்றாமை நன்று!

மனிதன் என்று வெளியில் வராதீர்கள்!

UNMAIKAL said...

சிங்கப்பூர் சபாநாயகராக இந்தியப் வம்சாவழி பெண் திருமதி ஹலிமா யாகூப் நியமனம்!

புதன், 09 ஜனவரி 2013 00:12 செய்திகள் - உலக செய்திகள்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் பாராளுமண்ற சபாநாயகராக திருமதி ஹலிமா யாகூப் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தற்போது சமூகம் மற்றும் குடும்ப வளர்ச்சி துணை அமைச்சராக இருக்கும் திருமதி ஹலிமா யாகூப், இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்.

அடுத்த வாரம் கூட இருக்கும் பாராளுமண்றத்தில் திருமதி ஹலிமா யாகுப் முறையாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.

சட்டதுறையில் நிபுணத்துவம் பெற்ற திருமதி ஹலிமா, அரசியலுக்கு வரும் முன், சிங்கப்பூரின் முக்கிய தொழிற் சங்கமான என்டியூசியில் துணை பொதுச் செயலராகப் பணியாற்றி வந்தார்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக தொழிற்சங்க அமைப்பில் பணி செய்த ஹலிமா, உலக தொழிலாளர் அமைப்பின் உறுப்பினராகவும் சில காலம் பணியாற்றியுள்ளார்.

நடமாடும் தொழிலாளர் அகராதி எனப் பெயர்பெற்ற திருமதி ஹலிமா, கடந்த 8 ஆண்டுகளாகப் பாராளுமண்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார்.

சென்ற மாதம், முன்னைய சபாநாயகர் மைக்கேல் பால்மர், தகாத உறவு காரணமாக பதவி விலகினார்.

அதனைத் தொடர்ந்து காலியான சபாநாயகர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கும் திருமதி ஹலிமா சிங்கப்பூரின் முதல் பெண் சபாநாயகர் ஆவார்.


SOURCE www.inneram.com

UNMAIKAL said...

நாங்கள் தவறு செய்யவில்லை...

வழக்கை எதிர்கொள்வோம்:

பாலியல் குற்றவாளிகள்


டெல்லி: எந்த தவறும் செய்யவில்லை என்று டெல்லி மாணவி பாலியல் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகள் 3 பேர் கூறியுள்ளனர்.

அவர்களின் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர் எம்.எல். சர்மா இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 16ம் தேதி இரவு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

5பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது மூடப்பட்ட நீதிமன்றத்திற்குள் வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் ராம் சிங், அவரது சகோதரர் முகேஷ் சிங், அக்சய் தாக்கூர் ஆகிய 3 பேரும், தாங்கள் தவறு செய்யவில்லை என்றும், வழக்கை எதிர்கொள்ளப் போவதாகவும், வழக்கறிஞரிடம் கூறியுள்ளனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்சிங், முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்சய் தாக்கூர் ஆகிய 5 பேரும் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கு விசாரணையை ரகசியமாக நடத்த நீதிபதி நம்ரிதா அகர்வால் உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/01/09/india-3-accused-plead-not-guilty-delhi-gang-rape-case-lawyer-167641.html

Unknown said...

இளையராஜா ஒரு இசை ஞானி. ரஹ்மான் மாதிரி கீ போர்டு பிளேயர் கிடையாது சுவனம்

suvanappiriyan said...

சகோ ஆஷா அமீர்!

//இந்த பதிவின் மூலம் என்ன சொல்ல வர்ரீங்க சகோ.சுவனப்பிரியன்...

உங்களுக்கு இளையராஜாவை விட ரஹ்மான் பிடிக்கும் என்றா???//

சினிமா என்ற வெகுஜன ஊடகத்துறை இன்று சீரழிந்து விட்டது. இதில் இளையராஜாவோ, ரஹ்மானோ எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். மேடையில் அவையடக்கத்துடன் எப்படி பேச வேண்டும் என்பதை இளையராஜா இன்னும் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே இந்த பதிவின் மூலம் சொல்ல வந்தேன்.

suvanappiriyan said...

சகோ சீனி!

//athusari...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

//சிங்கப்பூர் சபாநாயகராக இந்தியப் வம்சாவழி பெண் திருமதி ஹலிமா யாகூப் நியமனம்!//

வருகைக்கும் அருமையான செய்திகளை பகிர்ந்தமைக்கும் நன்றி!

suvanappiriyan said...

ஜெய்சங்கர்!

//இளையராஜா ஒரு இசை ஞானி. ரஹ்மான் மாதிரி கீ போர்டு பிளேயர் கிடையாது சுவனம்//

இருந்து விட்டு போகட்டுமே! அதனாலென்ன இப்போ?

கோவிலுக்கு செல்வதைப் பற்றி அவர் சொன்ன கருத்துக்கு உங்களின் பதில் என்ன? :-)

UNMAIKAL said...

காக்கி உடையில் காவிமனம் படைத்த காவலர்கள்!

அப்பாவி முஸ்லிம்களை சுட்டுக் கொலைச் செய்த கொடூரம்!


9 Jan 2013 Dhule police fire

மும்பை:மஹராஷ்ட்ரா மாநிலம் துலேயில் சில தினங்களுக்கு முன்பு நிகழ்ந்த கலவரத்தில் முஸ்லிம் இளைஞர்கள் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட ரகளையை தொடர்ந்து போலீசாரை தாக்கினார்கள் என பொய்யாக குற்றம் சாட்டி இச்சம்பவத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லாத அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை போலீஸ் தேடி பிடித்து சுட்டுக் கொலைச் செய்த கொடூரம் துலேயில் நிகழ்ந்துள்ளது.

மும்பையில் இருந்து 324 கி.மீ தொலைவில் உள்ள துலேயில் மச்சி பஜாரில் வைத்து ஐந்து முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

முட்டையை விற்பனைச் செய்வதற்காக வந்த அஸீம் ஷேக்(24), காய்கறி வாங்க வந்த இளைஞரான மார்க்க அறிஞர் ஆஸிஃப் அப்துல் ஹலீம்(வயது 30), 12-வது வகுப்பு பயிலும் ரிஸ்வான் ரஈஸ் பட்டேல்(வயது 17), எலக்ட்ரீசியன் இம்ரான் அலி கமருத்தீன்(வயது20) ஆகியோர் மரணமடைந்துள்ளனர்.

இரு பிரிவினர் இடையே நிகழ்ந்த மோதலில் போலீசார் மீது தாக்குதல் நடந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால், போலீஸார் முஸ்லிம்களை மட்டுமே தேடிப் பிடித்து சுட்டுக் கொலைச் செய்துள்ளனர்.

இரு பிரிவினர் இடையே நிகழ்ந்த மோதலின்போது போலீஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்றால், ஏன் இச்சம்பவத்தில் எவ்வித தொடர்பும் இல்லாத மார்க்கெட்டில் பல்வேறு தேவைகளுக்காக வந்த அப்பாவி முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தவேண்டும் என்ற கேள்விக்கு போலீசாரிடம் பதில் இல்லை.

ஹாஃபிஸ் ஆஸிஃப் அப்துல் ஹலீம் என்ற இளம் மார்க்க அறிஞரை எவ்வித காரணமுமின்றி போலீஸ் கலவரத்தில் ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டி சுட்டுக் கொலைச் செய்துள்ளது.

துணை தாசில்தாரான அப்துல் ஹலீம் அன்சாரியின் மகன் தாம் ஆஸிஃப். மூத்த அதிகாரிகளோ, சக ஊழியர்களோ தனக்கு ஆறுதல் கூறக் கூட வரவில்லை என்று அப்துல் ஹலீம் கூறுகிறார்.

“33 ஆண்டுகளாக அரசுக்காக உழைத்துள்ளேன். இத்தகைய பாரபட்சமான அரசுக்காக இனி சேவை செய்யமாட்டேன்” என்று அப்துல் ஹலீம் சபதம் செய்கிறார்.

போலீஸாருக்கு பயந்து ஓடி தப்ப முயன்ற 12-ஆம் வகுப்பு பயிலும் ரிஸ்வான் ரஈஸ் பட்டேலின் முதுகில் இரண்டு தடவை போலீஸ் துப்பாக்கியில் இருந்து வெளியான தோட்டா துளைத்துள்ளது.

மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு முட்டைகளை விற்பனைச் செய்ய வந்த அஸீம் ஷேக் கலவரத்தில் ஈடுபட்டார் என்பது போலீஸின் விசித்திரமான கண்டுபிடிப்பாகும்.

2008-ஆம் ஆண்டும் துலேயில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது.

ஒரு வாரம் நீண்ட கலவரத்தில் போலீஸ் முஸ்லிம்கள் மீது இவ்வளவு கொடூரமாக தாக்குதல் நடத்தவில்லை.

அன்று ஒரு வாரத்தில் சாதிக்க முடியாதவற்றை இன்று ஒரு நாளில் சாதித்துவிட்டார்கள் என்று சமூக ஆர்வலரான ஆஸிஃப் பட்டேல் கூறுகிறார்.

இதனிடையே கடுமையாக காயமுற்ற யூனுஸ் அப்பாஸிற்கு மருத்துவமனையில் சிகிட்சை மறுக்கப்பட்டுள்ளது.

கழுத்தில் வெட்டுப்பட்ட அப்பாஸ் கவலைக்கிடமாக இருந்த போதிலும் பொது வார்டில் 12 மணிநேரம் கிடத்தியிருந்தனர் என்று அவரது சகோதரர் முக்தார் ஷா குற்றம் சாட்டுகிறார். திங்கள் கிழமை அன்று தான் அப்பாஸ் இண்டன்சிவ் கேர் யூனிட்டிற்கு மாற்றப்பட்டார்.

ஆனால், துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்த போலீஸ் முயற்சிகளை துவக்கியுள்ளது.

மாநகராட்சி தேர்தலுக்கு முன்னோடியாக அக்டோபர் மாதம் சில முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நடத்திய உணர்ச்சியை தூண்டும் உரைகள் தாம் கலவரத்திற்கு காரணம் என்று போலீஸ் கூறுகிறது.

கலவரத்தில் காயமடைந்த 200 பேரில் பாதிக்கும் மேற்பட்டோர் போலீசார் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

துலேயில் உள்ள முஸ்லிம்களிடம், போலீஸ் முஸ்லிம்களுக்கு கொடுமை இழைக்கிறது என்றும், வாய்ப்புக் கிடைத்தால் போலீசார் மீது தாக்குதல் நடத்தவேண்டும் என்று சில முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பேசிய உரைகள் கிடைத்துள்ளதாகவும், இதுக் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் டி.ஜி.பி ஜீவ் தயாள் கூறுகிறார்.

சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ அபூ ஆஸ்மியின் உரையும் இதில் அடங்கும் என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆனால், நிரபராதிகளான முஸ்லிம்கள் பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

அவர்களை விடுதலைச் செய்து குற்றவாளிகளான போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று துலேயில் தான் உரை நிகழ்த்தியதாக அபூ ஆஸ்மி ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இது துலேயில் மட்டுமல்ல, வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் பேசியுள்ளேன் என்று ஆஸ்மி மேலும் கூறியுள்ளார்.

இதனிடையே, போலீஸ் வீடுகள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காயமடைந்து சிகிட்சைப் பெற்று வரும் ஃபாஹின் அக்தர் முஹம்மது கூறியுள்ளார்.

SOURCE:http://www.thoothuonline.com/

Anonymous said...

ராய்ப்பூர்: "கிரக நிலைகள் பாதகமாக இருப்பதால் தான், நாட்டில், கற்பழிப்பு சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன,'' என, சத்தீஸ்கர் மாநில உள்துறை அமைச்சர், நான்கிராம் கன்வர் கூறியுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கரில், ராமன் சிங் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் உள்துறை அமைச்சராக, பா.ஜ.,வைச் சேர்ந்த, நான்கிராம் கன்வர், பதவி வகிக்கிறார். சமீப காலமாக, நாட்டில், கற்பழிப்பு சம்பவங்கள் அதிகம் நடப்பது குறித்து, அவர் கூறியதாவது: நம் நாட்டில், தற்போது கிரக நிலை சரியில்லை. கிரகங்கள் அனைத்தும், பாதகமான நிலையில் உள்ளன. இதனால் தான், கற்பழிப்பு போன்ற துயர சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன; இந்த பிரச்னைக்கு நம்மால், தீர்வு காண முடியாது. ஜோதிடர்கள் தான், கிரக நிலைகளை கணித்து, இது போன்ற பிரச்னைகளுக்கு, எப்படி தீர்வு காண வேண்டும் என்பதை கூற வேண்டும். இவ்வாறு கன்வர் கூறினார்.

காங்., கடும் கண்டனம்...
அவருடைய இந்த கருத்துக்கு, காங்கிரஸ் கட்சி, கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சத்தீஸ்கர் மாநில காங்., தலைவர், நந்த குமார் படேல் கூறியதாவது: சத்தீஸ்கர் மாநில அரசால் நடத்தப்பட்டு வரும் பள்ளியில் படிக்கும், பழங்குடியின மாணவியை, சிலர், பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு, மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும். இது போன்ற சம்பவங்களை தடுக்க தவறிய, மாநில அரசை, கலைக்க வேண்டும் என, கவர்னரிடம் மனு கொடுத்தோம். எங்களின் நடவடிக்கைகளை கிண்டலடிக்கும் வகையில், உள்துறை அமைச்சர், இவ்வாறு கூறியுள்ளார். அவரின் பேச்சு, சிறு பிள்ளைத் தனமாகவும், எரிச்சலூட்டும் வகையிலும் உள்ளது. இவ்வாறு நந்த குமார் படேல் கூறினார். முதல்வர் ராமன் சிங் கூறுகையில், ""உள்துறை அமைச்சர் கூறியதற்கு, நான் என்ன பதில் அளிக்க முடியும்,'' என்றார்.

-Dina Malar
09-01-2013

ஷர்புதீன் said...

இளையராஜாவை பற்றிய விசயத்தில... அவரது இசைக்கு மிக பெரிய MAHA ரசிகன் ., மற்ற விசயங்களில் உங்களை போன்ற மனநிலையைத்தான் கொண்டுள்ளேன்.

ராஜாவை விட்டு பிரிந்த எந்த பிரபலங்களும் , அவர்களாக பிரியவில்லை என்பதும் - அவரது நட்பு வட்டாரத்தில் இன்னும் நீடித்த` அந்த நட்புக்கு காரணம் இவரில்லை என்பதும் சமீப காலங்களில் புரிகிறது. நான் நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நபர்களில் இளையராஜாவும் ஒருவர் ஆனால் இப்போது அவரது இசை மட்டும் போதும் என்று தோன்றி பல நாட்களாச்சு. எனக்கும் அவரது இசை மட்டுமே போதும் என்று தோன்றியதற்கு அவரேதான் காரணம்!

ராஜாவுக்கு அவர் நம்பும் கடவுள் அவருக்கு இசையை மட்டும்தான் பரிசளித்திருக்கிறான் போலும்!

suvanappiriyan said...

சகோ ஷர்புதீன்!

//ராஜாவுக்கு அவர் நம்பும் கடவுள் அவருக்கு இசையை மட்டும்தான் பரிசளித்திருக்கிறான் போலும்!//

சரியான வார்த்தை.

எங்கே ரொமப நாளா இணையத்தின் பக்கமே காணோம்.