
தாய்மொழியை பிழையின்றி பேச எழுத நம்மில் பலருக்கு சிரமமாக இருப்பதை பார்க்கிறோம். ஆனால் பதினோரு வயதே நிரம்பிய ஃபேர்மேன் அஹமது கான் என்ற இந்த சிறுவன் ஐந்து மொழிகளை சரளமாக பேசுகிறான். ஆறாம் வகுப்பு படித்து வரும் இந்த சிறுவனின் தந்தை உர்து, ஹிந்தி, பார்சி, ஆங்கிலம் என்ற நான்கு மொழிகளில் கவிதைகளும், கட்டுரைகளும் எழுதி வருபவர். பெயர் கான் ஹஸ்னைன் ஆகிப் (புதிதாக இருக்கிறதோ...ஃபார்சி மொழியில் பெயர் வைத்துள்ளார் போல் இருக்கிறது) தந்தைக்கு மகன் தப்பாமல் பிறந்துள்ளான். தந்தையையே விஞ்சும் அளவுக்கு சிறு வயதிலேயே ஐந்து மொழிகளில் பாண்டித்தியம் பெருவது என்பது சாதாரண விஷயம் அல்ல. உர்து மீடியம் பள்ளியில் புஷாத்(மகாராஷ்டிரா) என்ற ஊரில் உள்ள பள்ளியில் இந்த சிறுவன் படித்து வருகிறான்.
பார்சி மொழி என்பது கிட்டத்தட்ட இந்தியாவில் செத்த மொழியாகவே ஆகி விட்டது. ஆனால் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவின் ஆட்சி மொழியாகவே இருந்துள்ளது. உருதுவை ஓரங்கட்டியது போல் பார்சியையும் திட்டமிட்டு நமது ஆட்சியாளர்கள் ஓரங்கட்டி விட்டனர். ஃபார்மனின் தந்தை கரீமா, ஹாஃபீஸ், குஷ்ரூ போன்ற பெர்ஷிய கவிஞர்களை இளம் வயதிலேயே அறிமுகப்படுத்தினார். கூட படிக்கும் மற்ற குழந்தைகள் வேடிக்கையிலும் விளையாட்டிலும் ஓய்வு நேரத்தைக் கழித்தபோது ஃபேர்மேன் அஹமது கான் மொழிகளை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டினான்.
தற்போது ஃபேர்மேனால் பெர்ஷிய கவிதைகளை அழகாக படித்து அதற்கு விளக்கங்களும் சொல்ல முடியும். அடுத்து மகாராஷ்ட்ராவின் தாய் மொழியான மராட்டியின் பக்கமும் இவனின் கவனம் திரும்பியது. ஹிந்தி மொழியில் ஓரளவு உர்துவின் தாக்கம் இருப்பதால் அதனையும் கற்பதில் எந்த சிரமமும் இல்லை. மராட்டி, ஹிந்தி, உர்து, ஆங்கிலம், பார்சி இந்த ஐந்து மொழிகளிலும் படிக்க, எழுத தற்போது மிகவும் தேர்ச்சி பெற்றுள்ளான் ஃபேர்மன் அஹமது கான்.
இது போல் மென் மேலும் வெற்றிகள் பெற்று இந்தியனின் பெருமையை உலகறியச் செய்ய நாமும் வாழ்த்துவோம்.
The Milli Gazette
Published Online: Jun 15, 2013
Print Issue: 16-31 May 2013
3 comments:
அருமையான தகவல்.நன்றி.அறிவாளிகளைப்பற்றி மட்டும் பேச வேண்டும். இதுநாள் வரை ஒருநாள் கூட திருக்குறளைப்பற்றி பேசவில்லையே ஏன்
அருமையான தகவல்.நன்றி.அறிவாளிகளைப்பற்றி மட்டும் பேச வேண்டும். இதுநாள் வரை ஒருநாள் கூட திருக்குறளைப்பற்றி பேசவில்லையே ஏன்
//அருமையான தகவல்.நன்றி.அறிவாளிகளைப்பற்றி மட்டும் பேச வேண்டும். இதுநாள் வரை ஒருநாள் கூட திருக்குறளைப்பற்றி பேசவில்லையே ஏன்//
முன்பு எனது பழைய பதிவுகளில் நிறைய திருக்குறளைப் பற்றி எழுதியுள்ளேனே! இந்த லிங்கில் சென்று படித்துப் பாருங்கள்.
http://suvanappiriyan.blogspot.com/2006/04/blog-post_114640324881468390.html
Post a Comment