Followers

Saturday, August 31, 2013

திறந்த வெளி விசாரணை தேவையா?ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தற்போது மூன்று தமிழர்களுக்கு தூக்கு தண்டனை கொடுப்பதைப் பற்றிய விவாதம் இந்த காணொளியில் காணக் கிடைக்கிறது. இந்த மூவரும் உண்மையிலேயே ராஜீவ் கொலையில் பங்கெடுத்திருந்தால் தூக்கில் இடப்பட வேண்டியவர்களே என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ராஜீவோடு சேர்ந்து 15 பேருக்கு மேல் இந்த குண்டு வெடிப்பில் இறந்துள்ளார்கள்.

இந்த விவாதத்தில் திரு சுப வீர பாண்டியன் ஒரு அழகிய கருத்தை வைக்கிறார். அதாவது ராஜீவ் கொலை வழக்கில் அனைத்து விசாரணையில் உள் அரங்கிலேயே வைத்து ஏன் செய்கிறீர்கள்? திறந்த வெளியில் வைத்து விசாரித்து அந்த விசாரணையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் காவல் துறை தவறு செய்தால் அதை மக்கள் கண்டு கொள்வார்கள். அடித்து துன்புறுத்தி வலுக்கட்டாயமாக குற்றத்தை ஒப்புக் கொள்ள வைக்கும் நிலைமை மாறுமே என்கிறார்.

மிகச் சரியான கருத்து. இந்த முறையை பின் பற்றி அனைத்து குற்றவாளிகளையும் விசாரணை கைதிகளையும் விசாரித்தால் ஆளும் வர்க்கத்தில் உள்ள பல கருப்பு ஆடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வரலாம். ஆனால் ஆளும் வர்க்கம் இதற்கு சம்மதிக்காது. விசாரணைக்கு குந்தகம் ஏற்படும் என்ற ஒற்றை பதிலே இவர்களிடமிருந்து வரும்.

பொது அரங்கில் வைத்து விசாரித்து அதை ஒளிப்பதிவும் செய்து அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் சம்பந்தப்பட்ட கேஸ் விஷயமாக மேலும் பல தகவல்கள், பல உண்மைகள் பொது மக்களிடமிருந்து வர வாய்ப்புள்ளது. இது நடைபெறும் வழக்கு சரியான திசையில் செல்ல உகந்ததாக இருக்கும். அந்த குற்றவாளியை இயக்கியவர்கள் யார் என்பதும் பொது மக்கள் மூலமாகவே காவல் துறைக்கு தெரிய வரும்.

தற்போது என்ன நடக்கிறது?

சமீபத்தில் 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற அமைப்பின் நிறுவனர் என்ற பெயரில் யாசின் பட்கல் என்ற இளைஞனை அதுவும் நேபாளில் வைத்து கைது செய்துள்ளது காவல் துறை. இந்த கைது பற்றி யாசினின் தந்தை சொல்வதைப் பார்ப்போம்.

யாசின் 1983-ம் ஆண்டு பத்கல் கிராமத்தில் பிறந்து அங்கேயே 10-ம் வகுப்பு வரை படித்தான். ஆனால் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லை. இதையடுத்து கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் துபாய் சென்ற யாசின் திரும்பி வரும்போது, 2007-ம் ஆண்டு திடீரென்று காணாமல் போய்விட்டான். இதுக்குறித்து துபாய் போலீஸிடம் முறையிட்டோம். நாங்களும் யாஸினை கண்டுபிடிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டோம் ஆனால் பயன் இல்லை.

அதன் பிறகு யாசின் தான் புனே குண்டுவெடிப்பை நிகழ்த்தினான் என்றும் அவன் இந்திய முஜாஹிதீனின் நிறுவனர்களில் ஒருவன் எனவும் உளவுத்துறை கதைகளை பரப்பி வந்தது.’
என அவர் தெரிவித்துள்ளார்.

இனி அடுத்து ஒரு செய்தி வந்துள்ளது. அதையும் பார்ப்போம்...

இந்திய உளவுத்துறையால் கைது செய்ததாக கூறப்படும் யாஸீன் பட்கல் என்ற நபர் உண்மையில் யாஸீன் பட்கல் அல்ல என்று அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இதுக்குறித்து வழக்கறிஞர் எம்.எஸ்.கான் கூறியதாவது; ‘யாஸீன் பட்கல் என்று கைது செய்யப்பட்ட நபர் முஹம்மது அஹ்மத் சித்திபாபா ஆவார். இந்தியாவால் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள 12 நபர்களில் ஒருவராக இண்டலிஜன்ஸ் அதிகாரிகள் இவரை குறிப்பிடுவது தவறாகும். இவர் தாம் யாஸீன் என்பதை நிரூபிக்கவேண்டிய பொறுப்பு புலனாய்வு ஏஜன்சிகளுக்கு உண்டு. கைது செய்யப்பட்டவர் யாஸீன் என்பதை நிரூபிக்க அவர்களின் வசம் ஆதாரம் எதுவுமில்லை.’ என குறிப்பிட்டார்.

அஹ்மத் சித்தி பாபாவை யாஸீன் பட்கல் என்று பெயர் மாற்றியது இண்டலிஜன்ஸ் ஏஜன்சிகள் என்று அவரது உறவினரும், பெங்களூரைச் சார்ந்த வழக்கறிஞருமான அக்மல் ரஸ்வி நேற்று முன் தினம் குற்றம் சாட்டியிருந்தார்.

10-வது வகுப்பு கூட வெற்றிப் பெறாத முஹம்மது அஹ்மத் சித்திபாபாவை, பொறியியல் பட்டதாரியாக மாற்றியது மற்றும் 1983-ஆம் ஆண்டு பிறந்த அஹ்மதை 1973-ஆம் ஆண்டு பிறந்தார் என்று உளவுத்துறையும், ஊடகங்களும் கூறுவது குறித்து அக்மல் ரஸ்வி விமர்சித்திருந்தார்.

-http://newindia.tv/tn/india/141-crime/1800-2013-08-31-03-09-02


இதில் உளவுத் துறை எந்த அளவு தனது கைவரிசையைக் காட்டியுள்ளது என்பது தெரியும். ஓய்வு பெற்ற முன்னால் சுப்ரீம் கோர்ட் நீதிபதி திரு மார்க்கண்டேய காட்ஜூ 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற அமைப்பே உளவுத் துறை உருவாக்கிய ஒன்று என்று சில மாதங்களுக்கு முன்பு உண்மையை போட்டு உடைத்தார். தற்போது உளவுத் துறையால் உருவாக்கிய இந்தியன் முஜாஹிதீன் அமைப்புக்கு ஒரு நிறுவனரையும் நமது உளவுத் துறையே ஏற்படுததியுள்ளது. இந்த விசாரணை மட்டும் பொது மக்கள் முன்னிலையில் திறந்த வெளியில் நடைபெறுமானால் கண்டிப்பாக உளவுத் துறையின் கருப்பு ஆடுகளின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வரும். ஆனால் ஆளும் வர்க்கத்தோடு கை கோர்த்து செயல்படும் உளவுத் துறையை மாட்டி விட ஆளும் வர்க்கமும் மசியாது. ஏனெனில் நாட்டில் நிர்வாகத்தில் அதிருப்தி ஏற்படும் போதெல்லாம் மக்களின் கவனத்தை திசை திருப்ப இவர்களுக்கு உளவுத் துறை பல வகைகளில் உதவி வருகிறது.

நாட்டின் நாணய மதிப்பு அதள பாதாளத்துக்கு செல்கிறது. அரசால் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. மக்களின் கொந்தளிப்பு ஒரு பக்கம். திடீரென்று ஒருநாள் 'இந்தியன் முஜாஹிதீன்' நிறுவனர் கைது' என்ற செய்தி தலைப்புகளில் வரவே அனைவரும் நாட்டின் பண வீக்கத்தை மறந்து விட்டோம். எல்லோரும் யாசின் பட்கலைப் பற்றியே தற்போது பேசிக் கொண்டிருக்கிறோம். இது தான் நமது அரசாங்கங்கள் செய்து வரும் ராஜதந்திரங்கள். முன்பு பிஜேபி ஆட்சியில் இதே போன்று அரசை நோக்கி மக்களின் கோபம் திரும்பிய போது என்றோ சரண்டரான அப்சல் குருவை வைத்து நாடாளு மன்ற தாக்குதல் நாடகம் நடத்தப்பட்டது. அன்றும் இதே போல் அனைத்தையும் மறந்து அப்சல் குருவைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தோம். இது தொடர்கதை....

இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமானால் ராணுவ ரகசியங்களை தவிர்த்து மற்ற அனைத்து வழக்குகளையும் பொது அரங்கில் வைத்து விசாரிக்க வேண்டும். அன்றுதான் அப்சல் குரு, அஜ்மல் கசாப், யாசின் பட்கல் போன்ற உயிர்கள் அநியாயமாக பறிக்கப்படுவது நிற்கும். இவர்கள் போய் சேர்ந்து விட்டார்கள். ஆனால் இந்த அநியாயங்களை அரங்கேற்றியவர்கள் அரசு சம்பளத்தை வாங்கிக் கொண்டு ராஜ நடை நடந்து நம் கண் முன்னேயே வருகிறார்கள்.

இதுதான் இந்திய ஜனநாயகம்.....

3 comments:

Anonymous said...

New Delhi (AsiaNews/Agencies) - This morning, India's National Investigation Agency (NIA) arrested Arup Brahmachari, a Hindu priest, for his involvement in the attack on 7 July against Bodh Gaya's Mahabodhi temple, a Buddhist religious complex in the state of Bihar.

After weeks of investigation, the federal anti-terrorism agency tracked down the guru, who went on the run after the attack. During this period, the NIA questioned several suspects, including temple officials.

On 7 July, nine blasts hit the temple complex at Bodh Gaya, home of the Bodhi tree under which, according to Buddhist tradition, Siddhartha Gautama attained enlightenment. Two monks were injured in the attack, one from Myanmar.

Initially, Indian authorities believed the attack to be the work of Muslims due to ethnic-religious tensions in Myanmar between the Buddhist majority and the Muslim minority.

Currently, about 500 Burmese monks are studying in India, 200 in Bodh Gaya alone.

http://www.asianews.it/news-en/Hindu-guru-arrested-for-Bodh-Gaya-attack-28744.html

Dr.Anburaj said...

அன்றுதான் அப்சல் குரு, அஜ்மல் கசாப், யாசின் பட்கல் போன்ற உயிர்கள் அநியாயமாக பறிக்கப்படுவது நிற்கும். இவர்கள் போய் சேர்ந்து விட்டார்கள். ஆனால் இந்த அநியாயங்களை அரங்கேற்றியவர்கள் அரசு சம்பளத்தை வாங்கிக் கொண்டு ராஜ நடை நடந்து நம் கண் முன்னேயே வருகிறார்கள்.

அஜ்மல் கசாப்,பற்றி உமக்கு என்ன அக்கறை. காபீர்களை முற்றிலும் அழிக்காமல் விட்டுவிட்டானே என்ற வருதத்தமா ?ஏன்அஜ்மல் கசாப் க்கு பாரத ரத்னா விருது அளிக்க பரிந்துரை செய்யலாமே ?

சுவனப் பிரியன் said...

//அஜ்மல் கசாப்,பற்றி உமக்கு என்ன அக்கறை. காபீர்களை முற்றிலும் அழிக்காமல் விட்டுவிட்டானே என்ற வருதத்தமா ?ஏன்அஜ்மல் கசாப் க்கு பாரத ரத்னா விருது அளிக்க பரிந்துரை செய்யலாமே ? //

அஜ்மல் கசாப் குற்றவாளி என்றால் தாராளமாக தூக்கிலிடட்டும்.

விடை தெரியாத கேள்விகள் :-

1) 3 ஆண்டுகளாக காவல்துறை விசாரணை மேற்கொண்டதே.... அவனையும், அவனது கூலிப்படை தீவிரவாதிகளையும் இந்தியாவிற்குள் கொண்டு வந்தது யார்..........?

2) கடல் வழியாக வந்தார்கள் என்று கூறும் காவல்துறை கடல் பகுதிகளை பாதுகாக்க இந்தியாவில் கடற்படையே இல்லையா.......?

3) காவல்துறையின் இரகசிய பிரிவு அதிகாரிகள் யாருக்கும் தெரியாமல் தூக்கிலிட்டார்கள் என்று கூறும் போது இன்றைய தினம் கருத்து தெரிவித்த சோ அவர்கள் இது ஒன்றும் புதிய செய்தி இல்லையே என கூறியுள்ளார்,

புதிய செய்தி இல்லையென்றால் தீவிரவாதி அஜ்மல் கசாபை இன்றைய தினம் தூக்கிலிடப்போகிறார்கள் என்ற இரகசியம் "சோ" வுக்கு எப்படி தெரிந்தது..........?

4) 3 ஆண்டுகளாக 30 கோடி ரூபாய் செலவு செய்து விசாரணை செய்து வந்த அஜ்மல் கசாபை அதே மும்பை நகரத்தின் முக்கிய புள்ளியான பால்தாக்கரே மரணித்து 3 நாட்களில் தூக்கிலிடும் மர்மம் என்ன...............?

5) பால்தாக்கரே உயிருடன் இருக்கும் வரை அஜ்மல் கசாப் உண்மையை வெளியில் சொல்ல மாட்டான், பால்தாக்கரே மரணத்திற்கு பிறகு உண்மையை உளறிவிடுவானோ என்ற அச்சத்தின் காரணமாக அதிரடியாக தூக்கிலிட்டதன் மர்மம் என்ன...........?

6) அந்த தாக்குதலின் போது முக்கிய அதிகாரியும், காவி பயங்கரவாதிகளின் உண்மை முகத்தை வெளிக்காட்டியவருமான மகாராஷ்டிரா மாநில தீவிரவாத தடுப்பு பிரிவின் தலைவர் ஹேமந்த் கர்கரே அவர்களை கொலை செய்துள்ளார்கள், அப்படிப்பட்ட உயரிய, நேர்மையான அதிகாரியை கொலை செய்தும் அது சம்பந்தமாக எந்த வித துப்பும் கிடைக்கவில்லை என்றால்.....

அந்த அதிகாரி மும்பைக்கு தேவையில்லை.... அவரை விட்டு வைத்தால் நம்முடைய உண்மை முகத்தை வெளிக்காட்டிவிடுவார் என்ற நெருக்கடியின் காரணமாக ஒருவரை கொன்றால் கொலை, பலரை கொள்ளும் போது சேர்த்து ஹேமந்த் கர்கறேவை கொலை செய்தால் அந்த ஆவணங்களை இலகுவாக மூடிவிடலாம் என்ற எண்ணத்தின் அடிப்படியில் திட்டமிட்டு நடத்திய மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதலின் பின்னணியில் உள்ள பிரபல தாதா யார்.........?

7) ஹேமந்த் கர்கரே மரணித்து சில மாதங்கள் கழித்து அவரது மனைவிக்கு நரேந்திர மோடி அன்பளிப்பு தொகையாக 2 கோடி ருபாய் கொடுக்கும் போது அதை வாங்க மறுத்ததன் பின்னணி என்ன..........?

8) ஹேமந்த் கர்கரே அவர்கள் மரணிப்பதற்கும் ஒரு வாரத்திற்கும் பிறகு இந்தியாவை அச்சுறுத்தும் காவி பயங்கரவாதம் எனும் தலைப்பில் இந்துத்துவ காவி பயங்கரவாதிகளின் உண்மைகளை முக்கிய புள்ளிகளை வைத்து புத்தகம் வெளியிட முடிவு செய்து வைத்திருந்தார்,

அந்த புத்தகம் வெளியிடக்கூடாது அவ்வாறு புத்தகத்தை வெளியிட்டால் யாருக்கு ஆபத்து உள்ளதோ அவர்கள் தான் ஹேமந்த் கர்கரேயை திட்டம் தீட்டி கொலை செய்துள்ளார்கள், மேலும் அனைத்து உண்மைகளும் ஹேமந்த் கர்கரே அவர்களின் மனைவிக்கு தெரிந்திருப்பதால் நரேந்திர மோடி கொடுத்த 2 கோடி ரூபாயையும் முகத்திற்கு நேராகவே வாங்க மறுத்துள்ளதாக மக்கள் சந்தேகிக்கின்றனர்.

ஆக பல உணமைகள் அஜ்மல் கசாபின் தூக்கோடு மடிந்து விட்டது.