Followers

Wednesday, August 07, 2013

நடிகர் சூர்யாவின் கடப்பா(ஆந்திரா) தர்ஹா வழிபாடு!பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!

குர்ஆன் 72:18ஹஜ்ரத் அலி அவர்கள் அபுல் ஹய்யாஜ் அல் அஸதியை நோக்கி ‘அறிந்து கொள்! நபிகள் நாயகம் என்னை எதற்காக அனுப்பினார்களோ அதற்காக நானும் உன்னை அனுப்புகின்றேன். எந்த ஒரு சிலுவையையும் தரைமட்டமாக்காமல் விட்டுவிடாதே, மற்றும் பூமியின் மட்டத்தை விட்டும் உயர்ந்திருக்கின்ற எந்த ஒரு கப்ரையும் சமப்படுத்தாமல் விட்டு விடாதே எனப்பணித்து அனுப்பினார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம்:1662)

“அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கப்ருகளை பூசுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள்.”
(அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்-1610)


‘இறைவா! எனது அடக்கத் தலத்தை வணக்கத்தலமாக ஆக்கி விடாதே என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.’
(அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூல்: முஸ்னத் அல் ஹுமைதி)


தர்ஹாக்கள் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்படுவதற்கு இஸ்லாம் கடுமையாக தடை விதிக்கிறது. கிறித்தவ பைபிளிலும் இதற்கு ஆதாரம் உண்டு.

அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.சங்கீதம் 115:3-8 (Psalms 115:3-8)


ஆனால் இந்த இஸ்லாமிய சட்ட திட்டங்களை குழி தோண்டி புதைத்து நடிகர் சூர்யாவும் தர்ஹாவில் முதல் மரியாதை கொடுக்கப்படுவதை பார்க்கிறோம. பணம் லட்சக் கணக்கில் நன்கொடையாக கொடுத்ததால் இந்த அளவு கவனிக்கப்படுகிறார்.

சூர்யா ஒரு மாற்று மதத்தவர். இஸ்லாத்தை பற்றி அவ்வளவாக தெரியாது. ஆனால் சூர்யாவை வழி நடத்தி செல்லும் அந்த மௌலவிகள் கூட்டத்திற்கு இது இஸ்லாத்துக்கு விரோதமானது என்று தெரியாதா? உழைக்காமல் உண்டு கொழுத்து உடம்பை வளர்த்து வைத்திருக்கும் அந்த மௌலவிகள், சாகிபு மார்களுக்கு இறைவனின் அச்சம் கொஞ்சம் கூட இல்லையா? மரணத்துக்கு பிறகு நாளை இறைவன் 'சூர்யா விளங்காமல் தர்ஹாவுக்கு வந்தால் அவர் கையில் குர்ஆனை கொடுத்து இஸ்லாத்தை போதிக்க வேண்டிய நீ இவ்வாறு பணத்தை வாங்கிக் கொண்டு முதல் மரியாதை கொடுக்கலாமா' என்று கேட்டால் என்ன பதிலை வைத்திருக்கிறார்கள் இந்த மௌலவிகள்?

கேவலம் இந்த உலகில் நாலு காசு சம்பாதிக்க உலகில் எத்தனையோ நல்ல வழிகள் இருக்க இவ்வாறு தர்ஹாக்களை கட்டி அதன் மூலம் வயிறு வளர்ப்பதற்கு இவர்கள் வெட்கப்பட வேண்டாமா? அந்த ஊரில் உள்ள விபரம் மறிந்த முஸ்லிம்களாவது இந்த சாயுபுமார்களுக்கு இஸ்லாத்தை விளங்க வைக்கக் கூடாதா? இறைவனின் கோபப் பார்வைக்கு பயந்து கொள்ளுங்கள் சாயுபுமார்களே! மௌலவிமார்களே!

7 comments:

Anonymous said...

ஷாலி says:
August 7, 2013 at 12:48 pm

திரு.பொன்.முத்துக்குமார் அவர்களே! தங்கள் கூறும் குறள் தரும் பொருளை நீங்கள் அறிவீர்களா?
“இவ்வுலகத்தில் இல்லறத்தை ஒழுகி மிகச்சிறப்போடு வாழ்கின்றவன்,இந்த உலகத்திலேயே வானுலகத்துத் தெய்வத்திற்கு நிகராகப் போற்றப்படுவார்.

அதாவது துறவறம் மேற்கொண்டவர் பெறும் மேம்பாடுகளைக்காட்டிலும்,இல்லறத்தை அதன் இயல்புகளோடு, சிறப்பொடு ஒழுகி வாழ்பவர் வான் உறைத் தெய்வம் போல் போற்றும்படி மதிக்கப்படுவார்.என்கிறார் வள்ளுவர்.

Message –இதுதான் “முறையான இல்வாழ்வைச் சிறப்பாக மேற்கொண்டவர்,அனைவராலும் தெய்வம் போல் போற்றப்படுவர்.

திரு.பொன்.முத்துக்குமார் அவர்களே! இந்தக்குறள் உங்களுக்கும் எனக்கும் சொல்லப்பட்டது. மனைவி மக்களோடு சிறப்பான இல்வாழ்க்கை நடத்தினால், அதன் பெறுமதி காவி கட்டிய துறவறம் பூண்ட சாயிபாபாவை விட சிறப்பான அந்தஸ்து கிடைக்கும் என்பதே.இன்னும் எளிமையாக புரிந்து கொள்ள ,இந்தப் பாடலைக் கேளுங்கள்.

“மனிதன் என்பவன் தெய்வமாகலாம்,-வாரி வாரி
வழங்கும்போது வள்ளலாகலாம்
வாழை போல தன்னை தந்து தியாகியாகலாம்,
உருகி ஓடும் மெழுகைப்போல ஒளியைக்கூட்டலாம்.
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்!…..”

சிறந்த பண்புள்ள மனிதன் தெய்வத்தின் பண்பை பெறுகிறான்.ஆனால் அவன் தெய்வமல்ல மனிதனில் புனிதன் மகாத்மா.எதுவும் தேவைப்படாதவன் இறைவன்!.தேவை உள்ளவைகள் படைப்பினங்கள். இரண்டும் சமமாக முடியாது.

AL Mumin said...

ஷாகுல் ஹமீத் .- புதுகை

இது போன்ற சில நபர்களால் தான் இஸ்லாம் பெயர் கெடுகிறது .


உண்மை கூறீ இஸ்லாத்தின் பக்கம் அழைபதை விட்டுடு அவர்க்லோடு சேர்ந்து கொண்டு கூத்தடிப்பது கண்டிகதக்கது . அல்லாவுக்கு இணை வைபவர்களை முஸ்லிம் என்று கூறமுடியாது

AL Mumin said...

Shakul Hameed - puduvi

Unmai koori islathin pakkam alipathi

vitutu ippadi avarkalodu serthukondu

kothadipathu kandika thakathu .

allah vuku ini vaipavargal muslim aaga irukamudiyathu !

Anonymous said...

ungala thiruthavae mudiyathu...

neenga mattum thaniya oru naadu vaangitu poi anga unga muslim ku mattum kovil kattikonga..


This is India and it is a secular country. If you want your shariat rules, go to pakistan or some other arab countries.

Do u have guts to allow this comment??

சுவனப் பிரியன் said...

//This is India and it is a secular country. If you want your shariat rules, go to pakistan or some other arab countries. //

ஒவ்வொரு மதத்தவரும் தத்தமது வழிபாட்டு உரிமைகளையும் சட்டங்களையும் கொடுப்பதற்கு பெயர்தான் மதசார்பற்ற நாடு. வேறு யாரையும் ஷரீயா சட்டத்தை பின் பற்றுங்கள் என்று சொல்லவில்லை. எங்களுக்கு உரிய ஷரியா சட்டத்தை விளங்காமல் சிலர் செய்யும் கூத்துக்களைதான் நான் கண்டிக்கிறேன்.

அடுத்து மண்ணின் மைந்தனாக இந்நாட்டு முஸ்லிம்களை வேறு நாட்டுக்கு செல்லச் சொல்ல எனது நாட்டில் எவருக்கும் உரிமையில்லை என்பதையும் சொல்லி வைக்கிறேன். ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு கைபர் கணவாய் வழியாக வந்து இன்று இந்நாட்டில் கூடாரம் அடிததுள்ளவர்களைப் பார்த்து இந்த கேள்வியை நீங்கள் கேட்டிருக்க வேண்டும்.

ராவணன் said...

அண்ணாச்சி ஒங்களுக்கு என்ன பிரச்சனை? அவங்களுக்கு வேற குரான் இருக்கு.

அவர்களை இஸ்லாமியர்கள் இல்லை என்று சொல்ல உங்களைபோன்ற தீவிரவாத கும்பலுக்கு உரிமை இல்லை.

ராவணன் said...

அண்ணாச்சி அடுத்த குண்டு எங்க அண்ணாச்சி?