Followers

Tuesday, August 27, 2013

நரேந்திர மோடியும் நித்தியானந்த சுவாமிகளும்!

ஜாடிக்கு ஏத்த மூடி!

http://articles.timesofindia.indiatimes.com/2010-03-05/vadodara/28146699_1_narendra-modi-sardar-sarovar-narmada-nigam-invitation

இந்துத்வாவாதிகளால் வருங்கால பிரதமராக வர்ணிக்கப்படும் மோடியின் பல அவதாரங்களில் இதுவும் ஒன்று. நித்யானந்தாவிடமிருந்து கன்யா கேலவாணி என்ற குஜராத் மாநிலத்தின் திட்டங்களில் ஒன்றுக்கு மிகப் பெரும் தொகையை நன்கொடையாக பெற்றுள்ளார். நித்தியானந்த சுவாமிகளின் உண்மை முகம் சன் டிவி மூலமாக அகில உலகுக்கும் தெரியும். இப்படி மதத்தின் பெயரை பயன்படுத்தி பல இள மங்கைகளை நாசப்படுத்திய இன்றும் படுத்திக் கொண்டிருக்கிற ஒரு காமுகனிடமிருந்து பணத்தை பெற்றுக் கொள்ளும் நரேந்திர மோடியின் தராதரமும் தற்போது நமக்கு தெரிய வருகிறது.

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் தன்னைப் பற்றி சாதகமான செய்திகளை வெளியிட பல நிறுவனங்களின் உதவியை மோடி நாடியுள்ளதும் தெரிய வருகிறது. இதற்காக குஜராத் அரசின் பணமும் செலவழிக்கப்பட்டுள்ளது பத்திரிக்கைகள் வாயிலாக தெரிய வந்துள்ளது. எந்த வழியிலாவது பணத்தை சுருட்ட வேண்டும். எந்த வழியை பயன் படுத்தியாவது நாட்டின் பிரதமர் பதவியை பிடித்து விட வேண்டும் என்று ஆலாய் பறக்கிறார் மோடி. ஆனால் இந்துத்வா வாதிகளைத் தவிர வேறு யாரும் மோடியைப் பெரிதாக பொருட்படுத்துவதே இல்லை...

-------------------------------------------------------------

Narendra Modi Inaugrating the 'Sewa International' Design and Development Center.

Last piece of the puzzle. After Manoj Ladwa, Vikas Pota who are deeply associated with Sewa International, a RSS funding machine, we see Narendra Modi inaugrating a SEWA International center probably made from the charity money collected by Manoj, Vikas and their likes. Even Barry Gardiner has been seen at a Sewa International Lunch.

Modi's UK invite is of RSS, by RSS, for RSS.

http://www.truthofgujarat.com/uk-based-hindutva-lobbyists-manoj-ladwa-vikas-pota-driving-force-behind-modis-uk-invitation/

5 comments:

ஹுஸைனம்மா said...

ஆஹா.. என்ன பொருத்தம்.. என்ன பொருத்தம்..

UNMAIKAL said...

2002 கலவரத்தில் சேதமடைந்த மசூதிகள் சீரமைப்பு செலவை அரசே ஏற்க தயார் - மோடி

2002 கலவரத்தில் சேதமடைந்த மசூதிகள் சீரமைப்பு செலவை அரசே ஏற்க தயார் - மோடி

காந்தி நகர்: குஜராத்தில் 2002-ம் ஆண்டு கலவரத்தில் சேதமடைந்த மசூதிகளின் சீரமைப்புச் செலவை அரசே ஏற்கத் தயார் என்று முதல்வர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமான மசூதிகள் சூறையாடப்பட்டன.

சேதமடைந்த மசூதிகளை அரசு செலவில் பழுது பார்த்து, சீர்படுத்தி தர வேண்டும் என குஜராத் இஸ்லாமிய நிவாரண கமிட்டி வேண்டுகோள் விடுத்தது.

ஆனால் இந்த வேண்டுகோளை குஜராத் அரசு முதலில் நிராகரித்து விட்டது.

இதனையடுத்து, சேதமடைந்த 535 மசூதிகளை அரசு செலவில் சரிபடுத்தி தரும்படி உத்தரவிட வேண்டும் எனறு அந்த கமிட்டி குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கில், கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்த நீதிமன்றம், 'மசூதிகளுக்கு ஏற்பட்ட சேதங்களை சரி செய்வதற்கு ஆகும் செலவை குஜராத் அரசு வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டது.

மக்களையும், மக்களின் சொத்துகளையும் பாதுகாக்க தவறியதற்காக நீதிமன்றம் அரசுக்கு கண்டனமும் தெரிவித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து குஜராத் அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.


இந்த முறையீட்டின் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.

அப்போது, குஜராத் மாநில அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் துஷார் மேத்தா, 'மாநில அரசின் சார்பில் மசூதிகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணம் அளிப்பது தொடர்பான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி அந்த திட்டம் என்ன? என்பதை கோர்ட்டுக்கும், குஜராத் இஸ்லாமிய நிவாரண கமிட்டிக்கும் மாநில அரசு தெரிவிக்கும்' என கூறினார்.

இந்த அறிவிப்பு தொடர்பாக கருத்து கூறிய அந்த கமிட்டியின் தலைவர் ஷகில் அகமத், 'அரசு என்ன திட்டத்தை அறிவிக்கிறது என்பதை தெரிந்துக்கொள்வதற்காக பொறுத்திருப்போம்.

ஆனால் எப்படியிருந்தாலும் இந்த முயற்சி, மோடி மீதான கறையைத் துடைத்துக் கொள்ளவதற்காகவே என்பதில் சந்தேகமில்லை,' என்றார்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/08/28/india-narendra-modi-govt-agrees-pay-repair-of-riots-damaged-mosques-182207.html

சுவனப் பிரியன் said...

சகோ ஹூசைனம்மா!

//ஆஹா.. என்ன பொருத்தம்.. என்ன பொருத்தம்.. //

நரேந்திர மோடி தனக்கு தலைவணங்கும் காலமும் வரும் என்று நித்தியானந்தாவே நினைத்திருக்க மாட்டார். இனம் இனத்தோடு சேருகிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

சுவனப் பிரியன் said...

சகோ உண்மைகள்!

//அப்போது, குஜராத் மாநில அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் துஷார் மேத்தா, 'மாநில அரசின் சார்பில் மசூதிகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணம் அளிப்பது தொடர்பான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி அந்த திட்டம் என்ன? என்பதை கோர்ட்டுக்கும், குஜராத் இஸ்லாமிய நிவாரண கமிட்டிக்கும் மாநில அரசு தெரிவிக்கும்' என கூறினார். //

காலம் கடந்தாவது அழிக்கப்பட்ட மசூதிகளில் மீண்டும் தொழுகைகள் நடைபெறட்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில்
முக்கிய குற்றவாளி கைது...!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


1993ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு வழக்கில்
முக்கிய குற்றவாளியான மனோஜ் குமார் எனும்
பவைர்லால் குப்தா கண்ணூரில்
கைது செய்யப்பட்டுள்ளார்.


கண்ணூரில் இவர் வந்திருப்பதாகப்
போலீசாருக்கு இரகசியத் தகவல்
வந்ததை அடுத்து காவல்துறையினர்
இவரைக் கைது செய்தனர்.


மும்பை கிரேட்டர் நீதிமன்றத்தில்
1/93 எனும் வாரண்டு இவர் மீது உண்டு.


சிபிஐயின் சிறப்புப் படை இன்ஸ்பெக்டர்
கே. எஸ். பிரசாத் என்பவர்தான்
இந்த வழக்கை விசாரித்து வருகிறார்.


குப்தா அவ்வப்போது கண்ணூருக்கு வந்துபோவதாக
ஏற்கனவே சிபிஐ-க்குத் தகவல் கிடைத்திருந்தது.

குப்தா கைது செய்யப்பட்டுள்ள விவரம்
சிபிஐ-க்குத் தெரிவித்திருப்பதாக
கண்ணூர் காவல்துறை கூறியுள்ளது.