'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Tuesday, August 20, 2013
சகோதரர் அப்துல்லாஹ் (Alias பெரியார்தாசன்) மறைவு!
சிறந்த ஒரு சிந்தனை வாதியை இழந்து நிற்கிறோம். என்னுடைய அலுவலகத்துக்கு பின்னால் உள்ள ரப்வா அழைப்பு வழிகாட்டல் மையத்தில்தான் பெரியார் தாசன் அப்துல்லாவாக மாறினார். அன்றிலிருந்து தனது பயணத்தில் எந்த தொய்வையும் கொடுக்காமல் அழைப்பு பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். இஸ்லாமியர்கள் தமுமுக, டிஎன்டிஜே, முஸ்லிம் லீக், என்று பல வாறாக பிரிந்து கிடப்பதை எண்ணி மிகுந்த வருத்தத்துடன் ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருந்தார். 'முஸ்லிம்களாகிய நம்மைச் சுற்றி எவ்வளவு பெரிய ஆபத்தான சதி வலை பிண்ணப்படுகிறது என்று விளங்காமல் நமக்குள் கருத்து முரண்பாடுகளால் பிளவுண்டு இருக்கிறோம். இதில் மார்க்க அறிஞர்கள் மிகுந்த கவனம் எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னால் தனது உடலை தானமாக தருவதாக எழுதி கொடுத்துள்ளார். இஸ்லாத்துக்கு மாறியவுடன் எழுதி கொடுத்ததை திரும்பப் பெற்றிருக்க வேண்டும். நாமும் அவருக்கு இது பற்றிய செய்தியை அவருக்கு தெரிவிக்க வில்லை. தற்போது அவருக்காக மக்கா மஸ்ஜிதில் தொழுகை மாத்திரமே நடத்த முடிந்தது. உடலை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய முடியவில்லை. இனிமேலாவது புதிதாக இஸ்லாத்தை ஏற்பவர்களுக்கு பெயர் மாற்றம், போன்ற வற்றை செய்து தரும் இயக்கங்கள் அவரது இறப்புக்கு பிறகு அவரது உடலை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யும் உரிமையையும் வாங்கித் தர முயற்சிக்க வேண்டும். ஏனெனில் குடும்பத்தார் இதில் தலையிடும் சாத்தியக் கூறுகள் அதிகம் இருப்பதால் நாம் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். இது நமக்கு ஒரு படிப்பினை.
பெரியார் தாசன் அப்துல்லாவாக மாறியதை தமிழ் உலகம் அனைத்துமே அறியும். ஆனால் நமது ஊடகங்கள் தின மலர், தினமணி,விடுதலை, தினகரன் போன்ற அனைத்து பத்திரிக்கைகளும் பெரியார்தாசன் என்றே குறிப்பிட்டு தங்கள் அரிப்பை இதிலும் தீர்த்துக் கொள்கின்றனர். தனது பெயர் அப்துல்லா என்று மாற்றி இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டதை இந்த தமிழ் உலகமே அறியும். ஆனால் நமது தமிழ் ஊடகங்களுக்கு மாத்திரம் இந்த விபரம் தெரியவில்லையாம். :-) தின மலரும், தினமணியும் அப்படித்தான் இருப்பார்கள் இது தெரிந்த விடயம். ஆனால் பகுத்தறிவாளர் என்று கூறிக் கொள்ளும் வீரமணியும் இந்த காரியத்தை செய்யலாமோ என்று நாட்டு மக்கள் கேட்க மாட்டார்களா?
சகோதரர் அப்துல்லாவுக்கு இஸ்லாமியர்களால் மெக்கா மஸ்ஜிதில் தொழுகை நடத்தப் படுகிறது.
சவுதி அழைப்பு வழிகாட்டல் மையத்தில் புதிதாக இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்கள் உம்ரா செய்வது எப்படி என்பதை கற்றுக் கொள்கிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
அப்துல்லாஹ் அவர்களின் ஜனாஸா விஷயம் இந்த அளவுக்கு பிரச்சினை ஆக காரணமே அவர் தவ்ஹீத் ஜமாஅத்துடன்
எவ்வித தொடர்பிலும் இல்லாதது தான்.
நமது ஜமாஅத்தை பொறுத்தவரை ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுவிட்டால் முதலாவதாக அஃபிடவிட் போட்டு அரசாங்க ரீதியில் செய்ய வேண்டிய காரியத்தை செய்துவிடும். மேலும் சில சிக்கல் பின்னணி கொண்டவர் எனில் ஜனாஸா உட்பட அனைத்து விஷயங்களிலும் தக்க அறிவுரையும் செய்யும். இதற்கு உதாரணம் சகோ. ஃபைஸல் என்ற ஜெயசங்கர், அவர் தனது என்னை கவர்ந்த இஸ்லாம் உரையில் கூட தான் மரணித்து விட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதனை எழுதி வைத்துள்ளேன் என்று குறிப்பிடுவார். 2013ல் இஸ்லாத்தை ஏற்ற ஒரு சாதாரண நபருக்கே இத்துனை தெளிவை நமது ஜமாஅத் வழங்கியுள்ளது ஆனால் 2010ல் இஸ்லாத்தை ஏற்ற பிரபலமான ஒரு நபருக்கு இது போல் எந்த ஆலோசனையையும் வழங்காமல் அவரை வைத்து நிகழ்ச்சி மட்டுமே நடத்தி பிரபலமடைய முயற்சித்ததனை தவிர இந்த கூட்டம் சாதித்தது என்ன?
இவை மட்டும் அல்லாமல் அவரை நம்மை விட்டு வெகுதூரமாக்கியதன் விளைவு அவர் மீண்டும் நாத்திகத்தையே சுற்றி வரும் ஒரு சூழ்லும் ஏற்பட்டது. அவர் மதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளராகி பெரியாரின் திருவுருவ படத்தினை நெல்லை மதிமுக மாநாட்டில் திறந்து வைத்தார். அதனை இந்த விளம்பர கோஷ்டி எதுவுமே தட்டிக்கேட்கவில்லை.
அடுத்தது சகோ. அப்துல்லாஹ் அவர்களின் மனைவி இன்று வரை இஸ்லாத்தை ஏற்கவில்லை. நமது ஜமாஅத்துடன் அவர் தொடர்பில் இருந்திருப்பாரானால் அவரிடம் இதற்கும் தெளிவான அறிவுரை வழங்கப்பட்டிருக்கும். நம்பிக்கை கொள்ளாத எந்த பெண்ணும் நம்பிக்கை கொண்ட ஆணுக்கு மனைவியாக முடியாது என்ற மார்க்க விதி மூலம் அவரின் மனைவி இஸ்லாத்தை ஏற்றிருந்திருக்கலாம் அல்லது இவர் விவாகரத்து செய்திருந்திருக்கலாம். இந்த இரண்டில் ஏதாவது ஒன்று நடந்திருந்தால் கூட உடல் தானம் தவிர்க்கப்பட்டிருக்கும்.
அடுத்தது மார்க்க மஸாயில் விஷயங்களில் அவருக்கு எந்த தெளிவை இந்த விளம்பர கம்பெனி கோஷ்டிகள் வழங்க முன்வரவில்லை மாறாக அவரை வைத்து பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா என்ற தேவையற்ற ஆராய்ச்சியை செய்தது.
ஆக மொத்ததில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்புடனான தொடர்பை அவர் துண்டித்தது அவருக்கு பல விஷயங்களில் சறுகல் ஆக காரணம் என்பது தெளிவு. மேலும் நமது ஜமாஅத்தை விட்டால் இஸ்லாத்தை தூய வடிவில் சொல்லவும், கட்டிக்காக்கவும் எந்த நாதியுமே தமிழகத்தில் இல்லை என்பதும் இதன் மூலம் மற்றுமொருமுறை நிரூபணம் ஆகியுள்ளது. புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே.
-முஹம்மத் ஷேக்
பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களின் மரணத்தை ஒட்டி அவர் உடல் மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைப்பது என்ற அவரின் குடும்பத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், இஸ்லாமியர்களும் இஸ்லாமிய அமைப்புகளும் அதன் தலைவர்களும் நடந்து கொண்ட விதம், மிகுந்த மரியாதைக்குரியது.
‘எங்கள் தந்தை மருத்துவக் கல்லூரிக்கு தன் உடலை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டார்’ என்று அவரின் மகன்கள் வளவனும் சுரதாவும் கேட்டுக் கொண்டதை சந்தேகிக்கமால் முழுமையாக நம்பி,
‘குடும்பத்தின் உணர்வுக்கு மதிப்பளிக்கிறோம்’ என்று இஸ்லாமியர்கள் நடந்து கொண்ட விதமும் ‘எங்களுக்கு தொழுகை நடத்துவதற்கு மட்டுமாவது அனுமதி கொடுங்கள்’ என்று கேட்டுக் கொண்ட முறையும் ‘இஸ்லாமியர்களிடம் ஜனநாயகம் என்பதே துளியும் இல்லை’ என்று அவதூறு பேசுகிற இஸ்லாமிய எதிர்ப்பு அறிவாளிகளை அம்பலப்படுத்தியது.
25 ஆண்டுகளாக பேராசிரியர் அப்துல்லாஹ் குடும்பத்து நண்பன், இதை நேரிலிருந்து பார்த்தவன், இந்த பிரச்சினைக்கு இடையில் பயணித்தவன் என்கிற முறையில் இதை நான் பதிவு செய்கிறேன்.
அண்ணாசாலையில் அமைந்த மெக்கா மசூதியில் ஆயிரக்கணக்காணவர்கள் கூடி நடத்திய சிறப்பு தொழுகை மற்றும் இரங்கல் கூட்டத்தில், பேராசிரியர் அப்துல்லாஹ் குறித்து பேசியதும், அவருக்காகவும் அவரின் குடும்பத்தின் மன அமைதிக்காவும் அவர்கள், அல்லாவிடம் வேண்டிக் கொண்ட விதமும் எல்லையற்ற அன்பால் நிறைந்து வழிந்தது.
பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களுக்காக நடந்த அந்த தொழுகை அனுமதிக்கப்படாமல் இருந்திருந்தால், அங்கிருந்த இஸ்லாமியர்களின் மனம் எவ்வளவு புண்பட்டிருக்கும் என்பதை புரிந்து கொள்வதாக இருந்தது, அன்பால் நிறைந்த அந்த தொழுகை.
http://mathimaran.wordpress.com/2013/08/21/islam-670/#comment-11551
இஸ்லாமில் உடல்தானம் கூடாது என்று குரான் மூலம் ஆதாரம் ககாட்டுங்கள்
//இஸ்லாமில் உடல்தானம் கூடாது என்று குரான் மூலம் ஆதாரம் ககாட்டுங்கள்//
உடல் தானம் செய்யலாமா
உடலையும் உடலின் கண் கிட்னி போன்ற உறுப்புக்களையும் தானம் செய்ய இஸ்லாத்தில் அனுமதி உண்டா ரிஸ்வான் கண் கிட்னி போன்ற சில மனித உறுப்புக்களை பிற மனிதர்களுக்கு பொருத்தி மருத்துவம் செய்யும் முறை தற்காலத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நவீன முறைகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருக்கவில்லை. எனவே உலக விஷயத்தில் இது போன்ற முன்னேற்றங்கள் ஏற்பட்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இந்த முறை இருந்ததா? என்று கேட்கக் கூடாது. மாறாக இஸ்லாத்தின் சட்ட திட்டங்களுக்கு இவை எதிராக இருக்கின்றதா? என்று மட்டும் பார்க்க வேண்டும். நவீன முறைகள் இஸ்லாமியச் சட்ட விதிமுறைகளுக்கு எதிராக இல்லாவிட்டால் அவை அனுமதிக்கப்பட்டதாகி விடும். கண், கிட்னி, இரத்தம் போன்றவற்றை தானமாக கொடுத்து பிறரை வாழவைப்பதை தடை செய்யும் விதமாக குர்ஆன் ஹதீஸில் எந்த சான்றும் இடம் பெறவில்லை. மாறாக மனித உயிரை வாழச் செய்வது என்ற அடிப்படையில் இது ஒரு நல்லறமாகும். சிலர் சரியான மார்க்க அறிவு இல்லாமல் மனித உயிரைக் காக்கும் இது போன்ற உறுப்பு தானங்களை எதிர்த்து வருகின்றனர். இவர்களுக்கோ இவர்களின் உறவினர்களுக்கோ பிறருடைய உறுப்பைப் பொறுத்தினால் தான் வாழ முடியும் என்ற நிலை இருந்தால் அப்போது இவர்கள் உறுப்பு தானத்தை எதிர்க்க மாட்டார்கள். இந்த சூழ்நிலையில் அனைத்து மனிதனும் மன உறுத்தலின்றி இதை ஏற்றுக் கொள்வான். அதே நேரத்தில் உடல் முழுவதையும் தானம் செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை. ஏனெனில் உடல் தானம் என்பது கண் தானத்தைப் போன்றதல்ல. உடல் தானம் செய்யும் மனிதனின் உடலிலுள்ள பாகங்களை எடுத்து பிற மனிதர்களுக்குப் பொருத்துவதில்லை. மாறாக உடலின் ஒவ்வொரு பாகத்தையும் எடுத்து மருத்துவக் கல்வியின் பாடத்திற்காகவும் ஆய்வுக்காகவுமே பயன்படுத்தப் படுகின்றன. கண் தானத்தின் போது கண்ணோ மற்ற உறுப்புகளோ சிதைக்கப்படுவதில்லை. இறந்தவரின் கண்ணை எடுத்து அடுத்தவருக்குப் பொருத்தப்படுகின்றது. ஆனால் உடல் தானம் செய்தவரின் உறுப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக சிதைக்கப்படுகின்றன. இதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை. கொள்ளையடிப்பதையும் ஒருவரின் அங்கங்களை (உயிருடன் இருக்கும் போதோ அல்லது இறந்த பிறகோ) சிதைப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி), நூல் : புகாரி 2474, 5516 உடலைக் குளிப்பாட்டும் போது அவ்வுடலில் பல குறைபாடுகள் இருக்கலாம். உலகில் வாழும் போது அந்தக் குறைபாடுகளை அவர் மறைத்து வாழ்ந்திருக்கலாம். உடலைக் குளிப்பாட்டுபவர் அதைக் காண வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு காண்பவர் அந்தக் குறைபாடுகளை வெளியில் சொல்லாமல் மறைப்பது அவசியமாகும். 'ஒரு முஸ்லிமைக் குளிப்பாட்டுபவர் அவரிடம் உள்ள குறைகளை மறைத்தால் அவரை அல்லாஹ் நாற்பது தடவை மன்னிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ராஃபிவு (ரலி) நூல்கள்: பைஹகீ 3/395, ஹாகிம் 1/505, 1/516 தப்ரானி 1/315 இறந்த பின்னரும் ஒரு மனிதரின் வெட்கத்தலம் மறைத்து பாதுக்காக்கப்பட வேண்டும். ஆனால் உடல் தானம் செய்தால் அந்த உடலை மற்றவர்கள் அன்றாடம் நிர்வாணமாக்க் காணும் நிலை ஏற்படும். மருத்துவ படிப்புக்கு உடல் தேவைப்படும் என்ற காரணத்தால் இதை இஸ்லாம் அனுமதிக்காது. மனித உடல் போன்ற மாதிரிகளை வைத்து மருத்துவப் படிப்புக்கு பயன்படுத்த முடியும்.
Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/udal_dhanam_seyyalama/
Copyright © www.onlinepj.com
மருத்துவ படிப்பபில் இரண்டு முஸ்லீம்கள் பல தங்கப்பதக்கங்களைப் பெற்றிருக்கின்றார்கள். அவர்களைச் சற்று பேசச் சொல்லுங்களேன். முது முனைவர் பட்டம் ஒரு முஸ்லீம் கல்லீரல் வைத்திய நிபுணருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரையும் பேசச் சொல்லுங்களேன். உடல்தானம் பெறாமல் உண்மையான உடல்களை ஆய்வுக்கு உட்படுத்தாமல் மருத்துவப் படிப்பு முழுமையாகாது. இது படித்தவனுக்குத் தெரியம் .உம்மைப்போன்ற அரேபிய கோமாளிகளுக்கு புரியாது. சவுதியில் மருத்துவக் கல்லூரி உள்ளதா ? மனித உடலை வைத்து கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறதா ? முஸ்லீம்களின்உடல் பயன்படுத்தப்படுகிறதா ? காபீர்களின் உடல் பயன்படுத்தப்படுகிறதா ? கிணற்றுத்தவளையே கொஞ்சம் சொல்லு.
//உடல்தானம் பெறாமல் உண்மையான உடல்களை ஆய்வுக்கு உட்படுத்தாமல் மருத்துவப் படிப்பு முழுமையாகாது. இது படித்தவனுக்குத் தெரியம் .உம்மைப்போன்ற அரேபிய கோமாளிகளுக்கு புரியாது.//
ஹா..ஹா...நான் கோமாளியாகவே இருந்து விட்டுப் போகிறேன் அகில உலக அறிவாளியே!
உடலை இறந்த பிறகு எரித்து விடுபவர்களிடம் இதே வாதத்தை வைக்கலாமே! எரிந்து போவதற்கு பதில் மருத்துவ துறைக்கு பயன் படட்டும் என்று சொல்லிப் பாருங்களேன்.
ஒரு உடலை நிர்வாணமாக்கி பலருக்கும் அதன் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. அந்த உடலையும் அதன் உள் உறுப்புக்களையும் பிளாஸ்டிக்கினால் செய்வித்து பல இடங்களில் இன்றும் பாடங்கள் நடத்தப்படுகிறது. இப்படி ஒரு வசதி இருக்கும் போது அழுகிப் போகும் துர் நாற்றம் வீசும் ஒரு உடலை பதப்படுத்தி பாடம் நடத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது?
//சவுதியில் மருத்துவக் கல்லூரி உள்ளதா ? மனித உடலை வைத்து கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறதா ? முஸ்லீம்களின்உடல் பயன்படுத்தப்படுகிறதா ? காபீர்களின் உடல் பயன்படுத்தப்படுகிறதா ? கிணற்றுத்தவளையே கொஞ்சம் சொல்லு. //
கிணற்றுத் தவளையே! இந்த லிங்கில் சென்று பார். சவுதி அரேபியா மருத்துவ துறையில் எந்த அளவு முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என்று.
http://en.wikipedia.org/wiki/Health_care_in_Saudi_Arabia
இது இவ்வாறு இருக்க நமது பாரத மண்ணில் இறந்த உடல்களை சாமியார்கள் பக்தி என்ற பெயரில் எப்படி ருசித்து சாப்பிடுகிறார்கள் என்பதை கிணற்றுத் தவளையே கொஞ்சம் அறிவை உபயோகித்து யோசித்துப் பார்.
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=n0ila1nrey0
தடைசெய்யப்பட்ட இந்த முறையில் படித்து வருபவர்களிடம் மருத்துவம் செய்யாமல் பிற மருத்துவமுறைகளில் மட்டும் மருத்துவம் செய்ய எத்தனை இறைநம்பிக்கையாளர்கள் தயார்?
ஸலாம் சகோ.சுவனப்பிரியன்.
//சிறந்த ஒரு சிந்தனை வாதியை இழந்து நிற்கிறோம்.//---ஆம்..! தமது வாழ்வியலுக்கான சரியான சிறந்த உண்மை வழிகாட்டி எது என்று பல இடங்களுக்கு தேடி அலைந்து இறுதியாக இஸ்லாம்தான் அது என்று தெளிந்து தெர்ந்தெடுத்துக்கொண்டவர் சகோ.அப்துல்லாஹ். தான் பெற்ற இன்பத்தை பெருக இவ்வையகம் என்று பலரிடம் சென்று சேர்க்க உழைத்தார். சிறந்த மனிதர்.
அடுத்து...
//இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னால் தனது உடலை தானமாக தருவதாக எழுதி கொடுத்துள்ளார். இஸ்லாத்துக்கு மாறியவுடன் எழுதி கொடுத்ததை திரும்பப் பெற்றிருக்க வேண்டும். நாமும் அவருக்கு இது பற்றிய செய்தியை அவருக்கு தெரிவிக்க வில்லை. தற்போது அவருக்காக மக்கா மஸ்ஜிதில் தொழுகை மாத்திரமே நடத்த முடிந்தது. உடலை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய முடியவில்லை.//
---உண்மைதான்..!
நம் நாட்டில் அநாதை பிணங்கள் அவ்வப்போது அரசு மருத்துவமனை மார்ச்சுவரியில் கிடைக்கிறது. மருத்துவ கல்லூரிகளுக்கு உடல்களுக்கு டிமாண்ட் என்று இதுவரை ஏற்பட்டதில்லை. So.... Dr. Abdullaah க்கு தன் உடலை தானமாக தந்துதான் மாணவர்கள் கல்வி கற்க வேண்டிய நிர்பந்தம் இல்லை என்பதை உண்மை நிலை..! எனவே, அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டிருப்பதையே நான் விரும்புகிறேன்.
அதே நேரம்...
ஆன்லைன் பிஜே பத்வாவில் நான் மாறுபடுகிறேன்.
//ஆனால் உடல் தானம் செய்தால் அந்த உடலை மற்றவர்கள் அன்றாடம் நிர்வாணமாக்க் காணும் நிலை ஏற்படும். மருத்துவ படிப்புக்கு உடல் தேவைப்படும் என்ற காரணத்தால் இதை இஸ்லாம் அனுமதிக்காது. மனித உடல் போன்ற மாதிரிகளை வைத்து மருத்துவப் படிப்புக்கு பயன்படுத்த முடியும்//
-------அதில் எனக்கு இக்கருத்தில் ஏற்பு இல்லை.
மருத்துவம் என்ற அடிப்படையில் உடல் பகுதிகளை நிர்வாணமாக பார்ப்பது மார்க்கத்தில் கூடும் / பார்க்க கூடாத பகுதிகளையும் சிகிச்சைக்காக பார்ப்பது கூடும் என்று உலகில் பெரும்பாலான அறிஞர்கள் பத்வா தந்துள்ளனர்.
உலகெங்கிலும் தீயினால் பாதிக்கப்பட்ட உயிருள்ள உடலை முழு நிர்வாணமாக்கித்தான் மருந்திட வேண்டும்.
அவ்வளவு ஏன்...
சவூதியிலேயே... ஆண் கைனகாலாஜி டாக்டர்கள் கற்பம் சோதிக்கின்றனர். மார்பக கேன்சர் check பண்ணுகிறார்கள். சுகப்பிரசவம் கூட செய்கிறார்கள்.
அப்போது அது ஒரு மருத்துவ கல்லூரியில் நடந்தால்... ஆண் மாணவர்கள் நோட்ஸ் எடுக்க பலர் உடன் இருப்பார்களே..?
என்னதான் பிளாஸ்டிக்கில் செய்து படித்தாலும்... அந்த பிளாஸ்டிக் மாடலை செய்ய ஒரு நிர்வாண உடலை பெறத்தானே வேண்டும்..? பிளாஸ்டிக் மாடலில் ஆபரேஷன் கற்று அறிவது நிஜமான உறுப்பில் கற்று அறிவதற்கு சமமாகாது.
எனவே, மருத்துவம் என்று வரும்போது எப்படி உயிருள்ள உடலை நிர்வாணமாக பார்க்கலாம் என்று பத்வாக்கள் வந்தனவோ...
அதேபோல...
கல்வி என்று வரும்போதும் இறந்த உடலை நிர்வாணமாக பார்ப்பது கூடும் என்ற பத்வாவும் விரைவில் ஒரு மெடிகல் காலேஜில் படித்த இஸ்லாமிய ஆலிம் , மெடிகல் காலேஜ் வைத்து நடத்தும் இஸ்லாமிய உலமா இன்ஷாஅல்லாஹ் விரைவில் தருவார்.
டோன்ட் ஒர்ரி...!
//தடைசெய்யப்பட்ட இந்த முறையில் படித்து வருபவர்களிடம் மருத்துவம் செய்யாமல் பிற மருத்துவமுறைகளில் மட்டும் மருத்துவம் செய்ய எத்தனை இறைநம்பிக்கையாளர்கள் தயார்?//
-----அனானியின் இந்த கேள்வியில் நியாயம் உள்ளது..!
"உறுப்புதானம் சரி ; உடல்தானம் தவறு" என்றுதான் சொல்கிறார் சகோ. மவுலவி பீஜே.
உறுப்பு தானத்துக்கு எதிராக இன்றைய உலகில் ஏகப்பட்ட பத்வாக்கள் உண்டு.
இரத்த தானம், கன் தானம், கிட்னி தானம் என்று பலவற்றையும் எதிர்த்தார்கள். பின்னர், அதெல்லாம் அவசியம் என்ற அறிவு வந்தபிறகு...
////சிலர் சரியான மார்க்க அறிவு இல்லாமல் மனித உயிரைக் காக்கும் இது போன்ற உறுப்பு தானங்களை எதிர்த்து வருகின்றனர். இவர்களுக்கோ இவர்களின் உறவினர்களுக்கோ பிறருடைய உறுப்பைப் பொறுத்தினால் தான் வாழ முடியும் என்ற நிலை இருந்தால் அப்போது இவர்கள் உறுப்பு தானத்தை எதிர்க்க மாட்டார்கள். இந்த சூழ்நிலையில் அனைத்து மனிதனும் மன உறுத்தலின்றி இதை ஏற்றுக் கொள்வான்./////
என்று பத்வா தருகிறார்கள்..!
ஆகவே, மவுலவி சகோ.பீஜே, மருத்துவம் படித்து விட்டு... ஒரு மருத்துவ கல்லூரி நடத்தினால்... உடல் தானத்தையும் இதே வாதம் வைத்து இன்ஷாஅல்லாஹ் நிச்சயமாக 'கல்விக்காக' என்ற வகையில் அவர் சரி என்பார்..!
செயல்கள் யாவும் எண்ணத்தின் அடிப்படையிலேயே..! நல்ல எண்ணம் நோக்கம் இருந்தால்.. ஹராம் என்று சொல்லப்படாத செயல்கள் யாவும் சரியே..! நிர்பந்தம் இருந்தால் ஹராம் ஹலாலாகி விடும்..!
// உடல் தானம் செய்தவரின் உறுப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக சிதைக்கப்படுகின்றன. இதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.//----என்று ஆன்லைன் பீஜே பத்வாவில் உள்ளது.
அந்த ஹதீஸ் சும்மா எந்த நல்ல நோக்கமும் இன்றி வீம்புக்காக செய்வதையே தடுக்கிறது. அதைக்கொண்டு வந்து கல்வியில் பொறுத்த முடியாது. பொருத்துவது தவறு..!
ஏனெனில்... உடலை சிதைப்பதற்காக மருத்துவ கல்லூரிக்கு உடல் தானம் தரப்படவில்லை. நோக்கம் அது அல்ல. மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கல்வி கற்கவே தானமாக தரப்பட்டுள்ளது. அதுதான் நோக்கமாக உள்ளது. அட்லீஸ்ட் ஒரு செட் மாணவர்களுக்கு ஒரு உடலாவது தேவை. நம் நாட்டில் அதற்கு பஞ்சமே இல்லை.
அங்கே குத்தி கிழிப்பது நோக்கமல்ல. அதன் மூலம் மாணவர்கள் கற்பதே நோக்கம். சரியாக தெளிவாக கற்று... சிகிச்சை வல்லுனர்களாகி மக்களை காப்பதே நோக்கம்.
எப்படி, ஆபரேஷன் தியேட்டரில் அங்கத்தை குத்தி கிழிப்பது நோக்கம் இல்லையோ, சிகிச்சையே நோக்கமோ... அது போல. ஆபரேஷனில் உடல் உறுப்பை குத்தி கிழிப்பதை ஏற்கவே செய்கிறோம்.
அதேபோல, எப்படி மார்ச்சுவரியில் அங்கத்தை குத்தி கிழிப்பது நோக்கம் இல்லையோ, இறப்பு எப்படி நடந்தது... காரணம் என்ன... கொலையா, இயற்கை மரணமா... என்று கண்டறிதல் மட்டுமே நோக்கமோ... அது போல. போஸ்ட் மார்த்டத்தில் உடலை உறுப்பை குத்தி கிழிக்க ஒப்புக்கொள்கிறோம்.
இன்னும் சொல்லப்போனால்... விரோதியால் ஒரு முஸ்லிம் கொலை செய்யப்பட்டு இருப்பாரோ என்ற டவுட் இருந்தால்... கொலையாளி பிடிக்கப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் முஸ்லிமின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய் என்று அரசிடம் போராடுகிறோம்.
எத்தனையோ உறுப்புகளை (ஓவரி, கர்பப்பை, பித்தப்பை, அப்பெண்டிக்ஸ்... )பிரச்சினை கொடுக்கும் என்றால் அதை உடலில் இருந்து நீக்குகிறார்கள். இதை சரிகான்கிறோம்.
எண்ணங்களின் அடிப்படையிலேயே செயல்கள் யாவும் அமையும். நல்ல எண்ணத்தில் தேவையின் டிமாண்டின் நிமித்தம் உறுப்பு & உடல் தானம் தந்தால் இஸ்லாத்தில் குற்றம் இல்லை; தடையும் இல்லை என்பதே எனது புரிதல்..!
நண்பரே
உங்களை இத்தனை நாள் கவனிக்காததுக்கு மன்னிக்கவும். அடிக்கடி வர இயலவில்லை. இனிமேல் வருவேன்
தோழரே நைஜீரியாவில் உலகம் தட்டை என்று போகோஹாராம் ஏன் கொலை செய்கிறது. அதுக்கு உங்க தீர்வு என்ன?
வாங்க ஜெய்சங்கர்! நலமா?
//தோழரே நைஜீரியாவில் உலகம் தட்டை என்று போகோஹாராம் ஏன் கொலை செய்கிறது. அதுக்கு உங்க தீர்வு என்ன? //
குர்ஆனில் எந்த இடத்தில் உலகம் தட்டை என்று சொல்லப்பட்டுள்ளது? சுட்டிக் காட்டினால் நானும் தெரிந்து கொள்வேன்.
ஐயா, அண்ணன் சாரி காக்கா சுவனப்பிரிணன் அவர்களே எனது கடிதமே சரியானது எனபலர தங்களுக்கு ஓங்கி உரைத்து விட்டனர். இன்றும் கிணற்றுத்தவளைபோல் முட்டாள்தனமாக தானும்உளறி முஸ்லீம் சமூகத்தையம் பாழாக்கி வாழாதே. பெரியார்தாசன் தன் உடலை மருத்துவ படிப்பிற்கு அளித்தது அவன் இந்துவாக வாழ்ந்துப் பெற்ற வாசுதேச குடும்பம் என்ற உயர்ந்த தத்துவம் ” இந்துத்துவம் ” அவர் இரத்தத்தில் ஒடியதால்தான். இந்த தியாக பத்தி அரேபியத்துவ வாதிகளுக்கு ஒருநாளும் வராது.வரவே வராது. அதுதான் இவ்வளவு சர்ச்சை. முஸ்லீம் பெண்கள் எல்லோருக்கும் வரும் அனைத்து வியாதிகளுக்கெல்லாம் பெண் மருத்துவர்கள் தான் சிசிட்சை அளிக்கிறார்களாக்கும். ஏராளமாக மருத்துவமனனகளில் அறுவைச்சிசிட்சை ஆண் மருத்துவர்களே ? நாறிப்போகும் உடலை புதைத்தால்என்ன ? எரித்தால் என்ன ? நிலங்களின் விலை போகிற போக்கில் சாக்களா சொன்னதுபோல் அனைவரும் பிணத்தை எரிக்கத்தான் வேண்டும் என்ற சட்டம் இந்தியாவில் விரைவில் வர வேண்டும். பொது நன்மைக்கு முன்னாள் இந்து விடம் இருக்கும் உயர் பண்பு ஒரு அரேபிய வாதியிடம் இல்லை என்பதே உமது கருத்துககள் நீருபிக்கினறது. வாழ்க இந்துமதம்.
//ஐயா, அண்ணன் சாரி காக்கா சுவனப்பிரிணன் அவர்களே எனது கடிதமே சரியானது எனபலர தங்களுக்கு ஓங்கி உரைத்து விட்டனர். //
ஹி...ஹி....இதனை உமது உண்மையான பெயரான சசிகுமார் என்ற பெயரிலேயே இத்தகைய கருத்தை தெரிவித்திருக்கலாமே!
உடலை எரிப்பதால் சுற்றுப் புற சூழல் கெடுகிறது. உடலை புதைப்பதால் மண்ணுக்கு உரமாகிறது. சுற்றுப்புற சூழலும் பாதுகாக்கப்படுகிறது. நரேந்திர மோடிக்கு காவடி தூக்கும் உம்மைப் போன்ற இந்துத்வா வாதிகளுக்கு இது புரியப் போவதில்லை. அதைப் பற்றி நாம் கவலைப்பட போவதும் இல்லை. :-)
மருத்துவ பட்டம் பெற்ற முஸ்லீம்களைச் பேசச் சொல்லுங்களேன் என்றேனே? என்ன ஆச்சு ? எப்படியோ முஸ்லிம் என்ற ஒரு மக்கள் கூட்டத்தை முட்டாள்களாக்கிவிட வேண்டும். கிணற்றுதவளைகளாக மாற்றி விட வேண்டும் என்ற உங்களின் திட்டம்பலிக்காது. முஸ்லீம்கள் யாரும் மருத்துவம் படிக்கக் கூடாது.ஆபரேசன் செய்யக் 4டாது என்ற சொல்ல உமக்கு முட்டாள்தனம் உள்ளதா ?
மருத்துவ பட்டம் பெற்ற முஸ்லீம்களைச் பேசச் சொல்லுங்களேன் என்றேனே? என்ன ஆச்சு ? எப்படியோ முஸ்லிம் என்ற ஒரு மக்கள் கூட்டத்தை முட்டாள்களாக்கிவிட வேண்டும். கிணற்றுதவளைகளாக மாற்றி விட வேண்டும் என்ற உங்களின் திட்டம்பலிக்காது. முஸ்லீம்கள் யாரும் மருத்துவம் படிக்கக் கூடாது.ஆபரேசன் செய்யக் 4டாது என்ற சொல்ல உமக்கு முட்டாள்தனம் உள்ளதா ?
மருத்துவ பட்டம் பெற்ற முஸ்லீம்களைச் பேசச் சொல்லுங்களேன் என்றேனே? என்ன ஆச்சு ? எப்படியோ முஸ்லிம் என்ற ஒரு மக்கள் கூட்டத்தை முட்டாள்களாக்கிவிட வேண்டும். கிணற்றுதவளைகளாக மாற்றி விட வேண்டும் என்ற உங்களின் திட்டம்பலிக்காது. முஸ்லீம்கள் யாரும் மருத்துவம் படிக்கக் கூடாது.ஆபரேசன் செய்யக் 4டாது என்ற சொல்ல உமக்கு முட்டாள்தனம் உள்ளதா ?
Post a Comment