தமிழகத்தில் தொடரும் 'இந்து இயக்கத்தவரின்' கொலைகள்!
தற்போது தமிழகத்தில் பரவலாக பேசப்படும் ஒரு செய்தியாக 'இந்து தீவிரவாத' அமைப்புகளின் உறுப்பினர்கள் கொல்லப்படுவதை முன்னிலைப்படுத்துவதைப் பார்க்கிறோம். நிலத் தகராறு, பெண் தகராறு, பணத் தகராறு, குடி போதையில நிகழும் தகராறுகள், காதல் தகராறுகள், என்று தினமும் பத்திரிக்கைகளில் நாம் கொலைளை பார்த்து வருகிறோம். ஆனால் கொல்லப்படுபவர் இந்து தீவிரவாத இயக்கங்களோடு தொடர்புடையவராக இருந்தால் அதற்கு மத சாயம் பூசப்பட்டு அப்பாவி முஸ்லிம்களை கைது செய்யும் விநோத காட்சிகள் தற்போது நடந்து வருகிறது.
தற்போது நாடாளுமன்ற தேர்தலும் நெருங்கி வருகிறது. எத்தனை முறை முயற்சித்தாலும் தமிழகத்திலும் கேரளாவிலும் பாஜக காலூன்ற முடியவில்லை. இந்த முறை எப்படியும் இரண்டு மூன்று சீட்டுகளாகவது பெற்று விட வேண்டும் என்று ஆலாய் பறக்கிறது பாஜக. அதற்கு இந்துக்களை எப்படி ஒன்றாக்குவது? சாதிகளாலும், மொழிகளாலும் பிரிந்து கிடக்கும் அவர்களை முஸ்லிம்களின் பெயரைச் சொல்லி ஒன்றாக்க முயற்ச்சிக்கிறார்கள். ஆனால் இவை அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகவே முடியும் என்பதை பாவம் ஏனோ உணருவதில்லை. சகோதர இந்து மக்களின் பெரும் பான்மையோர் 'இந்து தீவிரவாத' அமைப்புகளைப் பற்றிய சரியான புரிதலிலேயே உள்ளனர். இந்த கொலைகளெல்லாம் யாரால் நடத்தப்படுகிறது? என்ன காரணத்துக்காக நடத்தப்படுகிறது? என்பதை பெரும்பாலான இந்துக்கள் அறிந்தே வைத்துள்ளனர்.
தற்போதய ஜெயலலிதா அரசும் 'எடுத்தேன் கவிழ்த்தேன்' என்று ஃபைலை க்ளோஸ் செய்யாமல் முக்கிய குற்றவாளிகளை, உண்மை குற்றவாளிகளை கைது செய்வதில் முனைப்பு காட்டுவது வரவேற்கத் தக்கது. இந்த நிலை தொடர்ந்தாலே இது போன்ற அரசியல் லாபங்களுக்காக செய்யப்படும் கொலைகள் குறைய வாய்ப்புள்ளது. ஆனால் இந்து இயக்கங்களின் அழுத்தத்தால் பெயருக்கு சில முஸ்லிம்களை கைது பழைய படலமும் ஆங்காகங்கே தொடரத்தான் செய்கிறது.
அடுத்து இஸ்லாத்தை வளர்க்க இது போன்ற கொலைகளை ஜிஹாதிகள் செய்வதாக தமிழ் இந்து தளத்தில் பார்த்தேன். இஸ்லாத்தை இது போன்ற கொலைகளை செய்து வளர்க்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடவில்லை. அது முஸ்லிம்களுக்கு தேவையும் இல்லை. இந்து மதத்தில் உள்ள சாதிப் பிடிப்பை தினமும் அனுபவிக்கும் பலர் அதில் இருந்து விடுதலையாக தாங்களாகவே முன் வந்து இஸ்லாத்தை ஏற்பதுதான் தினமும் நடந்து வருகிறது. மதம் மாறிய அன்பர்களைக் கேட்டாலே மிக அழகாக சொல்வர்.
அடுத்து தஞ்சையிலும் நாகை மாவட்டங்களிலும் அக்ரஹாரங்கள் எல்லாம் இஸ்லாமிய தெருக்களாக மாறுவதாகவும் இதை தடுக்க வேண்டும் என்றும் அங்கு பலர் பின்னூட்டம் இட்டிருந்தனர். அரசு செலவில் இலவசமாக படித்து விட்டு டாலருக்கும் பவுண்டுக்கும் ஆசைப்பட்டு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்ததால் கிராமத்தில் உள்ள அம்பிகளின் வீடுகளை நல்ல விலை கொடுத்து முஸ்லிம்கள் வாங்குகின்றனர். இதற்கு ஏன் இததனை கூப்பாடு? அக்ரஹாரத்தில் இதுவரை உள்ளே வர தலித்களை அனுமதிக்காமல் இருந்தனர. முஸ்லிம்கள் பல இடங்களை வாங்கியவுடன் தற்போது தலித்கள் மிக சுதந்திரமாக அக்ரஹாரத்துக்குள் வலம் வருகின்றனர். இது வரவேற்கத்தக்க மாற்றம் அல்லவா! சமூக ஆர்வலர்கள் இந்த மாற்றத்தை கண்டு ஆச்சரியமடைகின்றனர். இது மேலும் தொடர வேண்டும். இந்த முறையிலாவது தீண்டாமை ஒழிய வேண்டும் என்பதே அவர்களின் ஆதங்கம்.
----------------------------------------------
சமீபத்தில் நடந்த பாஜக பிரமுகர் கொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்டவர்களின் பத்திரிக்கை செய்தியை இனி பார்ப்போம்.
சேலம் பா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கில் பெண் உட்பட மூன்றுபேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் முருகன் (வயது 45). இவர் கன்னங்குறிச்சி 6–வது வார்டு கிளை கழக தலைவராக இருந்து வந்தார்.மேலும் இவர் அதே ஊரில் கறிக்கடையும் நடத்தி வந்தார்.
இந்த கொலை குறித்து வீராணம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து இந்த கொலை தொடர்பாக கன்னங்குறிச்சியை சேர்ந்த அங்காயி, ராஜா, செல்வராஜ் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
முருகனுக்கு கன்னங்குறிச்சி புதுஏரிப்பகுதியில் நிலம் உள்ளது. இந்த நிலம் தொடர்பாக இவருக்கும், உறவினர்கள் சிலருக்கும் ஏற்கனவே தகராறு இருந்து வந்துள்ளது. எனவே இந்தக் கொலை நிலத் தகராறு காரணமாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
--------------------------------------------
ஆடிட்டர் ரமேஷ் கொலையில் கூலிப்படை ஈடுபட்டு இருப்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். இக்கொலை வழக்கு சம்பந்தமாக சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த பிரபல ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர்.இது குறித்து தனிப்படை போலீஸ் உயரதிகாரி கூறுகையில், Ôஇந்த கொலை வழக்கு சம்பந்தமாக அன்னதானப்பட்டியை சேர்ந்த பிரபல ரவுடி முரளியை (27) தேடி வருகிறோம். அவர் சேலம் பகுதியில் கூலிப்படையை வைத்து நடத்தி வருவதும் தெரியவந்துள்ளது என்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அன்னதானப்பட்டியை சேர்ந்த சண்முகம் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை உட்பட முரளி மீது ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ளன.
(நன்றி தினகரன்)
இன்றைய சூழலில் தற்போது முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன? பெரும்பான்மையான இந்து நண்பர்கள் நம்மோடு நட்போடு இருக்கவே விரும்புகின்றனர். எனவே இந்துத்வாவாதிகள் பரப்பும் அவதூறுகளை தக்க சான்றுகளோடு இந்து மக்களிடம் நாம் கொண்டு செல்ல வேண்டும். நம்மிடம் ஊடக வசதி அந்த அளவு இல்லை. எனவே தனி நபர்களாக ஒவ்வொரு கிராமங்களிலும் நகர்களிலும் நமக்கு பழக்கமான இந்துக்களிடம் இந்துத்வா வாதிகளின் தீவிரவாத செயல்களை முடிந்தமட்டும் அம்பலப்படுத்த வேண்டும். முஸ்லிம்களின் மேல் உள்ள கசப்பை நமது அன்பினால் களைய வேண்டும். இதுவே தற்போது நம்முன் உள்ள முக்கியமான பணி.
------------------------------------------
inneram.com
நாடாளுமன்றத் தாக்குதல், 26/11 மும்பைத் தாக்குதல் பின்னணியில் அரசா? - அதிர்ச்சித் தகவல்!
புது டெல்லி : இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் தொடர்பாக சிபிஐ மற்றும் ஐபி-க்கு இடையே நடைபெறும் மோதலில் புதிய திருப்பமாக நாடாளுமன்ற தாக்குதல் மற்றும் மும்பை 26/11 தாக்குதல் ஆகியவற்றை இந்திய அரசே நடத்தியது என்று சிபிஐ அதிகாரி தெரிவித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் அரசின் வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த உள்துறை அமைச்சகத்தின் செயலர் மணி, இந்திய நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் மும்பையில் நடத்தப்பட்ட 26/11 தாக்குதலும் இந்திய அரசாலேயே திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்று இஷ்ரத் ஜஹான் வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சிறப்பு புலனாய்வு அதிகாரி சதீஷ் வர்மா கூறியதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான சட்டங்களை எதிர்ப்பின்றி கொண்டு வரவே மத்திய அரசு இத்தகைய தாக்குதல்களை நிறைவேற்றியதாக சதீஷ் வர்மா கூறியதாக மணி கூறியுள்ளார். நாடாளுமன்ற தாக்குதல் நடைபெற்ற (13.12.2001)ஒரு சில தினங்களிலேயே பொடா சட்டமும் மும்பை தாக்குதல் (26.11.2008) நடைபெற்ற உடன் சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டமும் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் இஷ்ரத் ஜஹானுடன் கொல்லப்பட்ட மூவரும் லஷ்கர் தீவிரவாதிகள் எனும் ஐபி-யின் அறிக்கை பொய்யானது என்று சதீஷ் சர்மா கருதியதாகவும் மணி கூறினார். இஷ்ரத் ஜஹான் என்கவுண்டர் தொடர்பாக உள்துறை தயாரித்த அறிக்கையானது சர்ச்சைக்குரிய ஐபி அதிகாரி ராஜேந்தர் குமார் என்பவரால் தயாரிக்கப்பட்டது என்று சர்மா கருதியதாகவும் மணி தன் உயர் அதிகாரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கு தொடர்பாக ஐபி அதிகாரி ராஜேந்தர் குமாருக்கு எதிராக சிபிஐ வழக்கு தொடர முடிவானதும், உள்துறை அமைச்சகத்தின் தலையீட்டால் அம்முயற்சி நிறுத்தப்பட்டது கவனிக்கத்தக்கது. குஜராத் மாநிலத்தைச் சார்ந்த ஐபிஎஸ் கேடர் அதிகாரியான சதீஷ் வர்மா சிபிஐ சிறப்பு புலனாய்வு குழுவிலிருந்து நீக்கப்பட்டு ஜுனுகாத் காவலர் பயிற்சிக் கல்லூரியின் முதல்வராக தற்போது இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
---------------------------------------------------------------------
முடிவாக தீவிரவாதம் அது எங்கிருந்து வந்தாலும் எந்த மதத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் ஒரு நேர்மையான முஸ்லிம் தீவிரவாதத்துக்கு துணை போக மாட்டான். தவறுதலாக நம்முடைய ஒரு சில சகோதரர்கள் தவறாக யாராலாவது வழி நடத்தப்பட்டிருந்தால் அவர்களை திருத்த முயற்சிக்க வேண்டும். திருந்தாதவர்களாக தோன்றும் பட்சத்தில் அவர்களை சட்டத்தின் பிடியில் நாமே கொண்டு செல்ல வேண்டும். இஸ்லாமும் அதைத்தான் விரும்புகிறது.
4 comments:
சென்னை, ஜூலை 16- இஸ்லாமியர்களை நாய்க்கு ஒப் பிட்டுக் கூறிய நரேந்திரமோடி மன்னிப்புக் கோர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தை கட்சி யின் தலைவர் தொல்.திருமா வளவன் அறிக்கை விடுத் துள்ளார். அறிக்கை வருமாறு:
சிலநாட்களுக்கு முன் ராய்ட் டர் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த நரேந்திர மோடி இஸ்லா மியர்களை நாய்களுடன் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். 2002ஆம் ஆண்டு மோடி முதல் வராக இருந்தபோது குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரம் குறித்து பேட்டியில் கேள்வி எழுப்பியுள் ளனர். அந்தக் கலவரத்துக்காக நீங்கள் வருத்தப்படுகிறீர்களா? என அந்த நிருபர் கேட்டபோது யா ராவது காரை ஓட்டிக்கொண்டு போகிறார்கள். நாம் பின் இருக் கையில் அமர்ந்திருக்கிறோம். அப் போதுகூட கார் சக்கரத்தின் கீழே நாய்க்குட்டி ஒன்று ஓடிவந்து அடிபட்டு செத்துப் போனால் அது வருத்தம் அளிக்குமா இல் லையா? வருத்தம் தரும். என்று அவர் பதில் அளித்திருக்கிறார். குஜ ராத்தில் நடத்தப்பட்டது இஸ் லாமியர்களுக்கு எதிரான திட்ட மிட்ட இனப்படுகொலை என்ப தைப் பல் வேறு மனித உரிமை அமைப்புகளும் தெளிவுபடுத்தி யுள்ளன. அதற்குக் காரணமான வர் அன்றைக்கு அந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடிதான் என்பதை உலகம் அறியும். அங்கு நடத்தப்பட்ட போலி என்கவுண்ட் டரில் இஷ்ரத் ஜஹான் என்ற பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இப் போது தான் சி.பி.அய் குற்றப்பத் திரிகை தாக்கல் செய்திருக்கிறது. அந்த வழக்கில் மோடியும் குற்றவாளியாக சேர்க்கப் படலாம் என சொல்லப் படுகிறது. அவரது கரத்தில் ரத்தக் கறை படிந்திருப் பதால்தான் அமெரிக்கா அவரைத் தனது நாட்டுக்குள் அனு மதிக்க வில்லை. தற்போது ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் தலையீட்டால் பா.ஜ.க வின் பிரதமர் வேட்பாள ராக மோடி முன் நிறுத்தப் படுகிறார். வளர்ச்சி, முன்னேற்றம் என மாய்மாலம் பேசி வந்த மோடி இப்போது வெளிப் படையாகத் தனது இந்துத்துவா முகத்தைக் காட்ட ஆரம்பித் திருக்கிறார். அதன் ஒரு அங்கம் தான் இஸ்லா மியர்களை இழிவு படுத்தும் இந்த நேர்காணல். இத்தகையவர் பிரதமராக வந்தால் இந்த நாட்டில் மதக் கலவரங் கள்தான் நடக்கும். குஜராத் மாடலை இந்தியா முழு மைக்கும் பரிசோதித்துப் பார்க்க சங்கப் பரிவாரங்கள் தயாராகி விட்டன என்பதைத்தான் மோடியின் நேர் காணல் காட்டுகிறது. இதை ஜனநாயக சக்திகள் அனுமதிக்கக் கூடாது. இஸ்லாமியர்களை இனப் படுகொலை செய்ததோடல்லா மல் அவர்களை நாயுடன் ஒப் பிட்டுப் பேசி இழிவுபடுத்தியிருக் கும் நரேந்திர மோடி தனது பேச்சுக்குப் பகிரங்கமாக மன் னிப்புக் கோரவேண்டும். அல்லது அவர் மீது மத்திய அரசு சட்டப் படி நடவடிக்கை எடுக்க வேண் டும் என விடுதலைச் சிறுத்தை கள் கட்சி சார்பில் வலியுறுத்து கிறேன் என்று குறிப்பிட்ட எழுச்சித் தமிழர் திருமாவளவன் அறிக் கையில் கூறினார்.
http://www.viduthalai.in/headline/64089-2013-07-16-12-51-00.html
கண்ணூர், ஆக.7- கோயிலில் பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளை எடுக்கவேண்டும் என்ற பழைய பழக்கவழக்கத்தை இன்றும் வலி யுறுத்தும் இழிவை எதிர்த்து கோயில் பெண் ஊழி யர்கள் இருவர் போர்க்கொடி உயர்த்தி யுள்ளனர்.
தீண்டாமையும், பார்ப்பனர் ஆதிக்கமும் இன் னமும் சில குறிப்பிட்ட கோயில்களில் கடைப் பிடிக்கப்படுவது பற்றிய கடுமையான கருத்து வேறு பாடுகளும், விவாதமும் புதிய உச்சத்தை அடைந் துள்ளன. செருகுண்ணு அன்னபூர்ணேஸ்வரி கோயி லில் பணியாற்றும் இரண்டு பெண் ஊழியர்கள் சடங்குகளின்போது பார்ப்பனர்கள் விருந்து உண்ட எச்சில் இலைகளை எடுக்க மறுத்து போர்க் கொடி தூக்கியுள்ளனர்.
பார்ப்பனர்கள் உணவு உண்டபின்னர், அவர் களது எச்சில் இலைகளை இதுவரை கோயில் பார்ப்பனரல்லாத பெண் ஊழியர்களே எடுப்பது நீண்ட நாட்களாக நிலவி வரும் வழக்கமாகும். ஆனால் இக் கோயிலில் உணவு அருந்தியபிறகு உணவு அருந்தியவர்களே எச்சில் இலையை எடுக்க வேண்டும் என்று அந்தக் கோயிலில் பணியாற்றும் பார்ப்பனரல்லாத பெண் ஊழியர்கள் கோரி யுள்ளனர்.
பி.வி. கமலாட்சி மடரஸ்யார் மற்றும் ஏ.வி. வசந்தகுமாரி என்ற கோயிலின், இரண்டு பார்ப் பனரல்லாத பெண் ஊழியர்கள் மலபார் தேவசம் பணியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில், இதுபற்றி தொடர்ந்து கோயில் அதிகாரிகளிடம் நாங்கள் தெரிவித்து வந்த கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்காக ஆகிப் பயனற்றுப் போன காரணத்தால், இனியும் இந்தப் பழக்கத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டு கடைப்பிடிக்கப் போவதில்லை என்றும் அதற்கு எதிராகப் போராட இருப்பதாகவும் தெரிவித் துள்ளனர். இப்பிரச்சினையைப் பற்றி சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.வி. சீனிவாசன் பேசுகையில், தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வந்த காலத்தில் தோன்றிய இந்தப் பழக்கவழக்கங்கள் மாற்றம் பெற வேண்டும் என்பதால், இப்பிரச்சினையை நாங்கள் மிகமிக முக்கியமானதாகக் கருதுவதால், பார்ப் பனர்கள் உணவு அருந்திய இலைகளை அவர்கள் எடுக்காமல், பார்ப்பனரல்லாத ஊழியர்கள்தான் எடுக்கவேண்டும் என்ற இதுபோன்ற பழைய பழக்கவழக்கங்களுக்கு எதிராக மாநிலம் தழுவிய அளவில் பிரச்சாரத்தையும், போராட்டத்தையும் தொடங்க உள்ளோம் என்று கூறியுள்ளார்.
தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது
பணியாளர்கள் மட்டுமல்லாமல், பல கோயில் களில் பக்தர்களுக்கிடையேயும் வேறுபாடுகள் காட்டப்படுகின்றன. தலிப் பறம்பா ராஜராஜேஸ் வர கோயிலில் பார்ப்பனர் அல்லாதபக்தர்களுக்கு எதிராக தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக பல அறிக்கைகள் தெரிவித்துள்ளன என்றும் அவர் கூறினார்.
பார்ப்பனர் அல்லாதவர்கள் உள்ளிட்ட அனைத் துப் பக்தர்களும், கோயிலுக்கு அளிக்கும் காணிக் கைப் பணம், சடங்குகள், சம்பிரதாயங்கள் என்ற பெயரில் பார்ப்பனர்களின் ஆதாயத்துக்காக மட்டுமே செலவிடப்படுவதை இனியும் ஏற்றுக் கொள்ள முடியாது. பார்ப்பனரல்லாத மக்களை கோயிலுக்குள் நுழைய அனுமதிக்காத கோயில்கள் இன்றும் கூட உள்ளன, இது மாறவேண்டும். இதற்கு மற்றொரு கோயில் நுழைவுப் போராட்டத்தைத் தான் நடத்த வேண்டியிருக்கிறது என்று அவர் கூறினார்.
என்றாலும் இத்தகைய தீண்டாமை உணர்வு கொண்ட பழைய பழக்கவழக்கங்களைப் பல கோயில்கள் கைவிட்டுவிட்டன என்பதையும் அவர் ஒப்புக் கொள்கிறார். பார்ப்பனர்களுக்கு மட்டும் தனியாக விருந்தளிக்கும் பழக்கம் கரியவல்லூர் அருகே உள்ள சிறீநாராயணபுரம் கோயிலில் கைவிடப்பட்டுவிட்டதாக அவர் கூறுகிறார்.
38 கோயில்களுக்குப் பொறுப்பாக இருக்கும் சிரக்கல் கோவிலகம் தேவசம் குழுவின் நிர்வாக அதிகாரியான கே.எம். அரவிந்தாட்சன் என்பவர், செருகுண்ணு அன்னபூர்ணேஸ்வரி கோயில் விவ காரம் பற்றி முறையான புகார் மனு எதுவும் இன்ன மும் எனக்கு கிடைக்கவில்லை. சங்கத்திடம் ஒரு புகாரை அவர்கள் அளித்திருப்பதாக நான் கேள்விப் பட்டேன். கோயில் நிர்வாக அறங்காவல் குழுவைக் கலந்து ஆலோசித்த பின்னர் முறையான நடவடிக் கையை நான் நிச்சயமாக எடுப்பேன் என்று அவர் கூறினார்.
இருண்ட காலத்திற்குச் செல்லுவதா?
காலம் கடந்து போன பழைய பழக்கவழக்கங் களைவிடாமல் கடைப்பிடிப்பது குழந்தைத்தன மானதாகும். இப்போதெல்லாம் சமூகம் பெருமள வுக்கு மாற்றம் பெற்றுள்ளது என்று கரியவல்லூர் சிவன் கோயில் தலைமை அர்ச்சகர் சி. நாராயணன் நம்பூதிரி கூறுகிறார். பார்ப்பனர்கள் உணவு அருந்திய பிறகு அவர்கள் உண்ட எச்சில் இலைகளை தாழ்த் தப்பட்ட மக்கள் எடுக்கும் பழக்கம் முன்பு பழங் காலத்தில் இருந்து வந்துள்ளது. இத்தகைய பழக்க வழக்கங்களை இப்போதும் தொடர்ந்து கடைப் பிடிப்பது கேலிக்குரியதாகும். எங்கள் கோயிலில் இத்தகைய பழக்கவழக்கங்கள் கடைப்பிடிப்பதை நாங்கள் அனுமதிப்பதில்லை; மாறி வரும் காலத் திற்கேற்ப நாமும் மாறாவிட்டால், நாம் திரும்பவும் இருண்ட காலத்திற்கே திரும்பிச் செல்லத்தான் நேரிடும் என்று அவர் கூறுகிறார்.
http://www.viduthalai.in/headline/65226-2013-08-07-09-03-52.html
தமிழகத்தில் நடக்கும் பாஜக பிரமுகர்கள்
கொலைகளுக்கு உரிய சரியான காரணத்தை காவல் துறை
கண்டு பிடித்துள்ளது . ஆனாலும் பாஜக விற்கு
இதில் திருப்த்தி இல்லை . காரணம்
சம்மந்தமே இல்லாத ஒரு முஸ்லிம்மை கைது செய்ய வேண்டும் .
சகோதரத்துவதுடன் வாழும் நம் தமிழத்தில் மத கலவரங்களை
தூண்டி விட வேண்டும் என எதிர்பார்கிறது . அதற்காக விச வேர்களை ஊன்ற
பார்க்கிறது . பாவம் அது இங்கு நடக்காது .
இருப்பினும் எனது அருமை கிரீஸ்தவ , இந்து சமுதாய சகோதரர்களே !
இந்த விச வேர்களை நம் மண்ணில் வராமல் தடுக்க நாம்
அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக செயல் படுவோம்
நம் தமிழகக்த்தை அமைதி பூங்காவவே இருக்க செய்வோம் !!!
சகோ மூமின்!
//நம் தமிழகக்த்தை அமைதி பூங்காவவே இருக்க செய்வோம் !!!//
உங்கள் எண்ணம் பலிக்கட்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
Post a Comment